ஹாய்..ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இன்றைய எபிசோடு…34
நான் ஹாஸ்டல் கிளம்புகிறேன் அபி கைரவிடம் சொல்லி விட்டு தாரிகா அம்மாவை பார்க்க சென்றான். பின் வெளியே வந்தவன் மீண்டும் இன்பா முன் வந்து, ஜானுவிடம் பேச வைத்ததற்கு தேங்க்ஸ் என்றும் நான் உங்களை காயப்படுத்தியதற்கு சாரி என்றும் சொல்லி கிளம்பினான்.
நான் வரவா? சந்துரூ கேட்டான். வேண்டாம் அண்ணா…என்றான்.
அண்ணாவா?……ஆவென்று அபியை பார்த்தனர். சந்துரூ வேகமாக ஓடி வந்து, நான் சொன்னதை கொஞ்சம் யோசித்து பார் என்றான். அவனை பார்த்த அபி தலையை அழுந்த கோதி சரி என்பது போல் செய்ய, சந்துரூ மகிழ்ந்தான்.
உங்க நம்பர் என்று அபி சந்துரூவிடம் போனை நீட்டினான். நம்ம பையன் நன்றாகவே நிரூபிக்கிறான் முணங்கினான் அகில் அர்ச்சு காதருகே வந்து.
ஆதேஷ் சோர்வாக இருப்பதை தாரிகா கேலி செய்து கொண்டிருக்க,சந்துரூவும் அவனருகே வந்து அமர்ந்தான். தாரிகா கோபத்துடன் அங்கிருந்து செல்ல, அவளை மறித்து நின்றாள் இன்பா.
நிஜமாகவே அவன் என் அக்காவை ஏதும் செய்யவில்லை என்றாள்.ஏதாவது சாட்சி உள்ளதா? தாரிகா கேட்டாள்.
இன்பா அமைதியாக, இருக்கு…..என்னிடம் இருக்கு…..சிசிடிவி புட்டேஜ் என்றான் சந்துரூ.
கிடைத்து விட்டதா? அப்பாடா? என்றாள் இன்பா.நீங்க ஆன்ட்டியை பார்த்தீங்களா?ஆதேஷ் சந்துரூவிடம் கேட்டான்.
பேச பயமாக உள்ளது. என்னோட யாழுவுடன் சேர்ந்து அவர்கள் முன் நிற்க வேண்டும் என்று அன்றே நாங்கள் நினைத்தோம்..ஆனால் அது நடக்காமலே போனது.இப்பொழுது எப்படி பேசுவது? என்று தெரியவில்லை.
நீங்கள் கவலைப்படாதீர்கள்….நான் ஆன்ட்டியிடம் பேசி விட்டு கூறுகிறேன்…நீங்கள் உள்ளே வாருங்கள் என்றான்.
சாத்தியமா இது?…..சந்துரூ தயங்கினான்.
நானும் உதவுகிறேன் என் அக்காவிற்காக என்றாள் தாரிகா.சந்துரூ அவளை பிரமித்து பார்த்தான்.
ஆதேஷுடன் உள்ளே சென்றால் தாரிகா…நித்தியால் இருக்க முடியவில்லை. அவள் ஆதேஷுடன் சென்றது.கொஞ்ச நேரத்தில் தாரிகா சந்துரூவை அழைத்தாள்.
நடந்ததை கேட்டு, புட்டேஜ் பார்த்து சந்துரூ மீது தவறில்லை என்று புரிந்து கொண்டனர் தாரிகாவும் அவளது அம்மாவும். அவன் சந்தோசத்தில் ஆதேஷை கட்டிக் கொண்டான்.தேங்க்ஸ்டா….என்றான்.
நீ இப்பொழுது வேற எந்த பொண்ணையாவது…? அம்மா கேட்க,சட்டென்று இல்லை அத்தை என்றான்.
அம்மா வேகமாக எழுந்து அமர்ந்தார். அத்தையா?….
ஆமாம் அத்தை தான். அவள் எனக்கு மனைவி என்றால் நீங்கள் எனக்கு அத்தை தானே!..
மனைவியா? திருமணம் செய்து கொண்டீர்களா? அம்மா கேட்க, இல்லையே…..என்றான்.
அப்புறம் மனைவி என்று கூறினீர்களே! நாளை காலை ஒன்பது மணிக்கு அவளது போனிற்கு அழைப்பு விடுக்கிறேன். அவள் என்ன பதிந்து வைத்திருக்கிறாள் என்று பாருங்கள்.
என்ன பதிஞ்சி வைச்சிருக்கா? ஹப்பி என்று தான் வைத்திருப்பாள். நாளை பாருங்கள் என்றான்.
அம்மா கண்ணில் நீர் மல்க, நீங்க அழுதா அவளுக்கு பிடிக்காது. நீங்க அழவே கூடாது..என்றான்.
நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்?
நான் வக்கீல் அத்தை என்றான். அம்மா சிரித்து விட்டார்.
என்னம்மா சிரிக்கிறீங்க? தாரிகா கேட்டாள்.
இல்லைம்மா…அவள் யாரிடமும் சரியாக பேசவே மாட்டாள்.அவரு வக்கீல். எப்படி பேசி இருப்பார்கள்?என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது.
அவனும் சிறு புன்னகை கலந்த கண்ணீருடன், அவள் வேலை செய்த கம்பெனி ஆட்களுக்காக தான் வேலை செய்தேன். அதில் நல்ல பழக்கமாயிற்று…ஆனால் எனக்கு யாழுவை இன்பாவுடன் கல்லூரியில் படிக்கும் போதே தெரியும்.அவளும் பார்த்திருக்கிறாள்.அப்பொழுது பேசி பழக்கமில்லை.நான் சட்ட கல்லூரி என்பதால் எப்பையாவது தான் எங்கள் நண்பர்களை பார்க்க வருவேன்.அவளையும் பார்ப்பேன்.அப்பொழுதே….. அவளது அமைதியான தோற்றம் தான் எனக்கு முதலில் பிடித்து போனது. பின் அவள் என்னை முழுதாக ஆட்கொண்டு விட்டாள் கண்ணில் நீரை தேக்கியபடி….அவன் காதலை தாரிகா அம்மா புரிந்து கொண்டார்.
உங்களிடம் இப்படி பேசுவது அநாகரிகம் தான். ஆனால் சொல்ல தோன்றியது. சொல்லிட்டேன் என்றான்.அம்மா அவனது கையை அழுந்த பற்றி,…நன்றி…என்றார்.
கண்டிப்பா என்னோட பொண்ணு உன்னுடன் இருந்த போது சந்தோசமா இருந்திருப்பா…அம்மா கூறியவுடன் அவன் கண்ணில் நீர் வழிந்தோடியது.
ஆனால் அவள்….அத்தை என்றவன்…நான் வருகிறேன் என்று வெளியே வந்தான். இன்பா ஆர்வமுடன் அவனை பார்த்தாள். அவன் கண்ணீரோட வருவதை பார்த்து அதிர்ந்து….என்னடா…? அம்மா…திட்டினாங்களா? கேட்டாள்.
எனக்கு யாழு வேணும்….இன்பா….அழுதான். சைலேஷ் அவனை தாங்கினான்.
என்னடா…சின்ன பிள்ளை மாதிரி..அழுகிறாய்?
எனக்கு யாழு வேணும்டா…..மீண்டும் அழுதான். அனைவரும் அவனை சூழ்ந்து ஆறுதலாக தோள் மீது கை வைத்தார்கள்.கொஞ்சம் அமைதியானான். ஆனால் அப்பொழுதும் சைலுவை கட்டிக் கொண்டு தான் இருந்தான்.
சந்துரூ அருகே இன்பாவும் சைலேஷும் இருக்க, நான் மருத்துவரை பார்த்து வருகிறேன் அர்ச்சு..கிளம்பினான்.அகில், யாசு, நித்தி ஸ்ரீ அறைக்கு செல்ல நிவாசும் ஜிதினும் வந்தனர்.
அவளை பார்த்துக் கொள் என்று ஜிதின் அகல,நிவாசும் அவர்களுடன் சேர்ந்து ஸ்ரீயை காண சென்றான்.அவர்கள் உள்ளே நுழைய….பெட்டில் அமர்ந்திருந்த ஸ்ரீ வேகமாக எழுந்தாள்.நிற்க முடியாமல் தடுமாற, அகில் அவளை பிடிக்கிறேன் என்று அவசரமாக அவளருகே சென்றான்.தரையில் அவளையும் இழுத்துக் கொண்டு விழ, அவளது கூந்தல் அவன் மீது படர்ந்து அவன் மீது விழுந்தாள். அவன் அவளை இறுக்கமாக பிடித்தவன் அவளது கூந்தல் மணத்தை நுகர, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அகில் பற்றிய நினைவு வந்தது…அவன் அவளது இதழ்களில் விடாது முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவள் கண்ணீர் வழிய, பட்டென…கதவு திறக்கப்பட்டது. அர்ச்சு அவர்களை பார்த்து உறைந்து நின்றான். அவன் கையில் வைத்திருந்த ஜூஸ் பாட்டில் கீழே விழுந்தது.
இறுக்கமான உடலுடன்…செந்நிற கண்ணோடு, முஷ்டிகள் இறுக பார்த்தவன்… கதவை சத்தமாக அறைந்து விட்டு விருட்டென வெளியே வந்தான். அசைந்தும் அசையாமலும் பொம்மை போல் மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.கதவு சத்தம் கேட்டு…நிலைக்கு வந்தவளாய்….அகிலை தள்ளி விட்டு…அழுதவாறு…
ஏன்டா இப்படி செய்தாய்?பைத்தியம் போல் கத்தினாள். அவன் முத்த உணர்வு கூட இல்லாது அகில் பற்றிய அந்த நினைவுகள் அவளை வலிக்க செய்தது.அந்த நினைவில் அகில் ஸ்ரீயிடம்….நீ இவ்வளவு கேவலமான பொண்ணா?ச்சீ…உனக்கு உடல் தான் வேண்டுமா?……இவனுடன் என்ன…..?உன்னை பார்க்கவே அருவருப்பாக உள்ளது…..பேச…நான் ஏதும் செய்யவில்லை அகில்….நம்பு…..ப்ளீஸ் அழுதாள்.இதனால் தான் ஸ்ரீக்கு கண்ணீர் வந்திருக்கும். இப்பொழுது…கதவு பக்கம் பார்த்தவள்…அர்ஜூன்… என்று எழுந்து, கதவை திறந்து வெளியே ஓடினாள்.
நிவாஸ் அகிலிடம்…..ஸ்ரீ ஜிதினை வெறுக்க காரணமே….இது போன்ற அவனுடைய செயலால் தான். நீங்களும் அவன் போல் நடந்து கொண்டீர்களே?…
அவளும் என்னுடன் அகில் பேச,….நித்தி அவனருகே வந்து, உன்னுடைய செய்கையில் முதலில் தடுக்க வந்தால்..நீ தான்….. அதற்கு பலனும் அவளிடம் இல்லை.அவள் தடுக்கவில்லை…அப்புறம் அவளது கண்ணீர் விருப்பமில்லாததை காட்டியது….நீ அவளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று விட்டு அங்கிருந்தவர்கள் வெளியே வந்தனர். அகிலும் வந்தான்.
அண்ணா…அண்ணா….ஆதேஷும் தாரிகாவும் அர்ச்சு அருகே வந்தனர்.சைலேஷ், இன்பா, சந்துரூ அவர்களை கவனிக்க, அர்ச்சு…..ஸ்ரீ சத்தம் போல் உணர்ந்த அர்ச்சு அசையாது நின்றான். ஸ்ரீ தான் மெதுவாக தள்ளாடிய படி…கண்கள் இருள, அர்ச்சு அருகே வந்து பின்னிருந்து அவனை அணைத்து நிற்க,அவனோ…கனவோவென்று…அமைதியாக இருந்தான்.பின் அவளது கை மீது அவன் கை வைத்து பார்த்து, அவள் பக்கம் கண்ணீரோடு திரும்பினான்.
அவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டிருக்க, அவர்கள் இருந்த…வராந்தாவின் இருபக்கம் திரும்பி விட்டு,கண்களை மூடியவாறு அர்ச்சு….அர்ச்சு…..அர்ச்சு…. அழைத்து பின் அப்பா…அப்பா….அவள் குரல் மலுங்க சாய்த்தாள் அர்ஜூன் மார்ப்பிலே….
அவன் அவளது கன்னத்தை தட்டினான். நிவாசை பார்த்தவன், என்னடா….இவ்வளவு வீக்கா இருக்கா….? அவன் திரும்பி அகிலை பார்த்தான். அனைவரும் அவளருகே வந்தனர்.சைலேஷ்…சந்தீப்…மருத்துவரை அழைக்க சென்றனர்.
அர்ஜூன் அகிலை பார்க்க, அவன் மௌனமாக இருந்தான். அர்ச்சுவே அவளை தூக்கி மறுபடியும் அவள் அறைக்கு வந்து படுக்க வைத்தான். அவர்கள் இருந்த நிலை அவனுக்கு நினைவெழவே…….அங்கே நிற்க முடியாமல் திரும்பினான். ஸ்ரீ அவனது கையை இறுக பற்றி இருந்தாள். அதை எடுத்து விட்டு…வெளியே வந்து அமர்ந்தான்.
பக்கத்திலே ஒரு குரல்…..அர்ஜூன் என்னப்பா?…. தாரிகா அம்மா உட்கார்ந்திருக்க, அம்மா…அவரது தோளில் சாய்ந்து கொண்டான். அவனுக்கு இருவரும் முத்தமிட்டது மட்டுமே வந்து வந்து அவனை பாதித்தது. எனக்கு ரொம்ப வலிக்கிறதே! இனி நான் என்ன செய்ய போகிறேன்? மனதினுள் குமுறினான் அர்ச்சு.
ஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்….அந்த பொண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றார். ரெஸ்ட் எடுக்கட்டும் பார்க்கலாம் என்று விட்டு வெளியே வந்த மருத்துவரை நிவாஸ் அணுகி, அவளது மனநல பரிசோதனை பற்றி கூறினான்.
சார், அவர் இங்கே வந்து பார்க்கலாமா சார்?….அவர் யோசித்து விட்டு ஸ்ரீ மருத்துவரின் நம்பரை வாங்கி அவரே போன் செய்து பேசி விட்டு, அவர் வந்து பார்ப்பார். நீ பயப்படாதே! உன் அக்காவிற்கு ஒன்றும் ஆகாது சிரித்துக் கொண்டே,….அவர் எனக்கு தெரிந்தவர் தான்….கூறி விட்டு…அகன்றார்.
அப்பாடா……என்று தலை சாய்த்து கண்ணை மூடினான் நிவாஸ். அர்ச்சு இவனை கவனித்துக் கொண்டு தான் இருந்திருப்பான். ஆனால் என்ன பேசினான் என்று மட்டும் தெரியாது.
அம்மா..நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள். மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு தூங்குங்கள் என்றான் அர்ஜூன்.
சற்றுநேரத்திலே ஸ்ரீயின் மருத்துவர் வந்தார். அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். வெளியே இருங்கள் என்றவர் நிவாசை மட்டும் அவருடன் நிறுத்தி வைத்துக் கொண்டார்.
அவளை பரிசோதித்தவர்…. அவளுக்கு ஏதோ நினைவு வந்திருக்கிறது. மேலும் நினைவுபடுத்த அவள் மூளையை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறாள். அவளுடனே இரு….நாளை வரை அவளருகே யாரையும் விடாதே. அவளை நீயே பார்த்துக் கொள்….அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கதவின் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர்….
அர்ச்சு….போன் என்று கையை காண்பித்தான் நிவாசிடம்.நிவாஸ் அவனை உள்ளே இழுத்து…அர்ஜூன் தான் அதிகமாகவே உதவியாக இருக்கிறான்…… என்றான். அவர் அவனை பார்த்தார். அவன் கண்கள் ஸ்ரீயை அளந்து கொண்டிருந்தது.
அவளுக்கு ஒன்றுமில்லை. நாளை வரை யாரும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்.அவளுக்கு அதிகமான ஓய்வு தேவை என்றார் அவர். அவன் அவரிடம் மெதுவாக தலையசையத்து… அவளுக்கு பழைய நினைவால் உயிருக்கு ஆபத்து என்றும் நிவாஸ் கூறினான்.
அவர் நிவாசை பார்த்தார். இவர்களில் சிலருக்கு ஸ்ரீ நிலைக்கு காரணமானவர்களை நன்றாக தெரியும். ஆன்ட்டி…இவர்களிடம் நேராகவே சவால் விடுத்துள்ளார்…என்றவுடன்….நீங்கள் நினைப்பது போல் அவள் சாதாரண ஆள் இல்லை. என் பசங்களுக்காக தான் அமைதியாக இருக்கிறேன் இல்லையென்றால் என்னால் இயன்ற வரை இவர்களுக்கு உதவி இருப்பேன். பாவம் அந்த பொண்ணு…ஸ்ரீயை பார்த்தார்.
அங்கிள், இவர் தான் ஸ்ரீயை சிறு வயதிலிருந்து காதலித்து கொண்டிருப்பவர்….. நிவாஸ் கூற, சட்டென…நிமிர்ந்து அவர் அர்ச்சுவை பார்த்து, என்ன நடந்தாலும் அவளை விடாமல் இருந்தால் சரி தான். ஆனால் நடந்தது…சாதாரண விசயமில்லை. உண்மை தெரிந்தால் அவள் வாழ்க்கையையே வெறுத்து விடுவாள் முடிந்தால் உதவியாவது செய்யுங்கள். இந்த பொண்ணு நிலைமை யாருக்கும் வந்திருக்க கூடாது.
சீக்கிரமாக அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்று விடுங்கள்….. கண்டிப்பாக இந்த பொண்ணு தாங்க மாட்டா..
அங்கிள் என்ன சொல்றீங்க?
என்னால் இது மட்டும் தான் சொல்ல முடியும். அவளுக்கு தெரியாமல் நிறைய நடந்திருக்கிறது. உண்மை தெரிந்து,விட்டு மட்டும் போயிடாதீங்க…தம்பி…அர்ச்சு தோளை தட்டியவர் ,ஊசி போட்டு விட்டு அகன்றார் அவர்.சென்றவர் உள்ளே வந்து முதலில் ஸ்ரீ உங்களிடம் மறைப்பதை கண்டறியுங்கள்.அதை வைத்து தான் மற்றவற்றை கண்டறிய முடியும்…..என்றார்.
இவர்….நம்பிக்கையானவர் தானா?
இவரும்,சந்துரூ சாரும் மட்டும் தான் எங்களது நம்பிக்கைக்குரியவர்கள்.
சந்துரூ சாரா?…
ஆம் அவர் எங்களது குடும்ப கம்பெனி வக்கீல். முதலில் அவர் அப்பா தான் இருந்தார். அவர் இறந்த பின் தான் இவர் வந்தார். எங்கள் மீது அக்கறையுடன் இருப்பார்.
வா….வெளியே செல்லலாம் என்று இருவரும் வெளியேறினர்.
தாரிகா அம்மா, ஸ்ரீயை பார்க்க கேட்டார். பார்த்தவுடன் வந்து விடுங்கள் என்றான் நிவாஸ்.
அவர் உள்ளே சென்று….நாளை ஒரு நாள் தான்….நம் வீட்டிற்கு வந்து விடுவாய் அவளது நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தார்.
“கையறு நிலையாய்
நிற்க வைத்தாயடி!
உன் இதழ் கண்டு
எனை வெறுமையாக்கினாயடி!
என் காதல் அன்று போல்
இன்றும் உயிரற்று போனதே!
காலம் கடந்தாலும்
என் காதல் தனி ஆனதே!”