வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-33
298
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்..
இன்றைய எபிசோடு ஃபன்னாக இருக்கும்…எஞ்சாய்…
இதோ உங்களுக்கான எபிசோடு 33
சந்துரூ கூறியது போல் இன்பா அபி மீது பயங்கர சீற்றத்துடன் இருந்தாள். மருத்துவமனை உள்ளே சென்றவள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.அவளை தாண்டி சந்துரூ செல்ல, தயக்கத்துடன் அவளருகே வந்தான் அபி.
ஓ.கே மேம்.என் தவறுக்கு பதிலாக இருக்கட்டும் அவன் கூறினான். அவனது சட்டையை பிடித்து இழுத்து, என்னை பத்தி பேச நீ யார்? அப்படி பேசுற?….என்னை பார்த்தால் உனக்கு எப்படிடா…தெரியுது? என்று ஆதங்கத்துடன் கத்தினாள். பசங்க அங்கே வந்து,
மேம்….மேம்…என்று இன்பாவையும், அபியையும் நகர்த்தினர். அவன் எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்த அகில் நண்பர்களுக்கு நன்றாக புரிந்தது தவறு அபி மீது என்று….ஆனால் அவன் தான் யார் வழிக்கும் செல்ல மாட்டானே! யாசு அவனருகே வந்தாள்.
அவங்க எனக்கு தரும் தண்டனையை ஏற்றுக் கொள்வேன் அபி கூறினான்.
இன்னு…என்ன இது? சைலேஷ் கேட்க, சந்துரூ அவனை தடுத்தான்.
சார்.என் மீது தான் தவறு. அவங்க என்னை திட்டுவதில் தவறில்லை என்றான் அபி. இன்பா அவனை முறைத்து விட்டு,தவறு செய்த பின் வருந்தி எந்த பயனும் இல்லை என்று விட்டு தாரிகா அம்மா அறைக்குள் சென்றாள்.
அம்மா…….அவர்களை கட்டிக் கொண்டு… நீங்கள் என்னை நம்புவீர்கள் தானே! கேட்டாள் இன்பா.
என்ன விசயம்மா….. யாரும் ஏதும் கூறினார்களா? அவள் மெளனம் சாதித்தாள். தாரிகாவிடமும் கூறவில்லை.
நான் தவறான பொண்ணு இல்லை தானம்மா…?
என்னம்மா இப்படி கேக்குற? நீ தங்கமான பொண்ணு தாம்மா….இவர்கள் பேசுவதை வைத்து நடந்தது புரிந்தது மற்றவர்களுக்கு.
நித்தி கொஞ்சம் சும்மா இரேன்…என்று அர்ச்சு அபி அருகே வந்து, சரி செய்ய வலி உள்ளது. மனதில் பட்டதை அவர்களிடம் கூறி விடு….என்றான். அவனை தனியே ஓரிடத்திற்கு அழைத்து சென்றனர் அகில்,அர்ச்சு. அங்கே சந்துரூ வந்தான்.
என்ன சொல்றது?
போச்சுடா……தம்பி எனக்கு புரிஞ்சது….உங்களுக்கு புரியலையா? சந்துரூ கேட்டான்.
என்னது? என்றான் அபி பாவமாக…
இன்னுமா புரியல……
அகில் அபியின் காதருகே வந்து, “காதல்” என்றான்.
பதறிய வண்ணம் அதெல்லாம் இல்லை என்றான் அபி.
சரி…..நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் கூறு? சந்துரூ ஆரம்பித்தான்.
இன்பாவை பார்த்தால் என்ன தோன்றுகிறது?
அழகா இருக்காங்க….அறிவா பேசுறாங்க…சில நேரம் தைரியமாகவும், சில நேரம் குழந்தை தனமாகவும், மற்றுமொறு நேரம் பயந்த படியும் இருக்காங்க….அவங்க கோபம் கூட அழகாக இருக்கு….என்று அவனது இதலில் புன்னகை அரும்பியது. மற்றவர்களை நன்றாக சமாதானப்படுத்துறாங்க…தெளிவா இருக்காங்க….அவன் சொல்ல,
அகில்,சந்துரூ,அர்ச்சு ஒருவரை பார்த்து ஒருவர் சிரிக்க……என்னடா..? கேட்டான் அபி.
சிக்கிட்ட டா…..அர்ச்சு புன்னகையுடன்.
என்னுடன் பார்த்த போது எதற்காக அவளிடம் அப்படி கேட்டாய்?
எனக்கு கோபம் வந்தது என்றான் பட்டென.
எதற்கு கோபம்?
தெரியவில்லையே! என்றான் அபி.
எனக்கு தெரியும். உன்னால் வேறொரு ஆணுடன் அவளை பார்க்க முடியவில்லை. அதனால் தான் உனக்கு கோபம் வந்தது. அவளை பற்றி பேசும் போது உன் முகத்தில் இருந்த சந்தோசம், இதழ்களில் தவழ்ந்தோடிய நகைப்பும் கண்டிப்பாக நீ அவளை காதலிக்கிறாய் சந்துரூ கூறினான்.
ஏற்கனவே டென்சன்.அவளும் எதையாவது பேசி என்னை டென்சன் ஆக்கி விடுவாள்.
போனை எடுக்கலைன்னா…..அகில் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது போன் அழைத்தது.
டேய்… எனக்கு கால் பண்ணியிருக்கா என்றவுடன் எடுக்காதேடா…என்றான் அபி.
போடா..என போனை எடுத்தான்.அண்ணா! மாமா என்ன பண்றாங்க? போனை எடுக்கவே மாட்டிகிறாங்க……எதுவும் பிரச்சனையா? வேண்டாம் என்று அபி சைகை செய்ய, இதோ பக்கத்தில் தான் இருக்கிறான் என்று அபி கையில் போனை திணித்தான்.
ஜானு…நீ நாளைக்கு கால் பண்ணிறியா?
மாமா….உங்க கிட்ட பேசாம எப்படி மாமா போனை வைப்பேன்.
மாமா..சாப்பிட்டீங்களா? மாமா இன்றைக்கு தரணி என்று ஒரு பெண்ணை பற்றி அவள் பேச…
போதும் ஜானு வாயை மூடுரியா? தேவையில்லாம என்னிடம் ஏதும் பேசாதே! எனக்கு போன் போடாதே! கத்தி விட்டு போனை வைத்தான்.
ஏன்டா?….தலையில் அடித்துக் கொண்டான் அகில்.
அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. வெளியே வாடா அபி….நித்தி சத்தமிட்டாள்.
அனைவரும் வெளியே வந்தனர். ஜானுவிடம் என்னடா பேசின? அவள் அழுகிறாள் டா….என்றாள்.
இதற்கு தான் ஒழுங்கா பேசு என்று கூறினேன் அகில் கூறினான்.
நீ பிரதீப் மாமாவிற்கு போன் செய்து அவளை பார்த்துக் கொள்ள சொல் அவன் கூற, யாசு அவளது போனை காண்பிக்க,
அவளிடம் பேசும் அளவிற்கு நான் சரியாக இல்லை. நீங்களே ஏதாவது பேசி சமாளியுங்கள்….அவன் கூறினான். அனைவரும் பின் நகர்ந்தனர். எங்களால் முடியாது என்று சொல்ல…..இன்பா வெளியே வந்தாள்.
அந்த பொண்ணு பெயர் ஜான்வி…..அபியின் முறைப்பொண்ணு. அவளுக்கு அபின்னா..உயிர்…தினமும் அவனை பார்க்கணும்…..இல்லையென்றால் பேசணும் இல்லேன்னா…சாப்பிட கூட மாட்டாள் என்றாள் நித்தி.
சட்டென யாசு போனுக்கு வீடியோ கால் வர,பேசேன் டா….கெஞ்சினாள்.
ஆதேஷ்…எதிரே வந்து கொண்டிருந்தான்.அவனை பார்த்த நித்தி, யாசு போனை எடுத்து ஆதேஷ் பக்கம் ஓடினாள்.அவன் தாரிகா அம்மாவை பார்க்க பதறி வந்திருந்தான்.
ஆன்ட்டி…எங்கே? நித்தியிடம் வினவினான்.
அவங்களுக்கு இப்பொழுது பரவாயில்லை.எனக்கு ஒரு உதவி செய்து விட்டு அவங்களை பார்க்க செல் என்று அவன் வழியை மறித்தாள்.
உதவியா?
ஆம்…..இந்த போனில் ஒரு பொண்ணு பேசுவாள். அவளிடம் எதையாவது கூறி போனை அணைத்து விடு. நாங்கள் உன் அருகே இருப்பதாக காட்டிக் கொள்ளாதே! தயவு செய்து….. அவள் கையை கூப்பினாள்.
யார் அந்த பொண்ணு?
எதுவும் கூறாமல் போனை அவனது கையில் கொடுத்து விட்டு ஓடி சென்று சைலேஷ் அருகே நின்று கொண்டாள்.
போனை எடுத்தான் ஆதேஷ். அழகான மயக்கும் கருவிழிகள். இரட்டை சடை….முழுவதும் பூ சுற்றி இருந்தது. காதோரம் அழகான புதுமாடல் ஜிமிக்கி,……. ஊதா மஞ்சள் கலந்த பாவடை தாவணி, விழிகள் நீரால் நிறைந்திருக்க, நீங்க…யாரு? என்னோட மாமா எங்க? அழுதவாறு கேட்டாள் ஜானு.
ஏ…பொண்ணு….எதற்கு அழுகிறாய்? உன்னோட மாமா யாரு? அவன் வினவ,.
ஏன்டா என்னோட மாமாவை பற்றி தெரியாம யாசு அக்கா போனை எப்படிடா நீ எடுத்த? திருடனா நீ? அவள் அழுகை நின்று, சண்டைகாரியானாள்.
ஏம்மா…எனக்கு இது தேவை தான்….நான்….நான்…. திருடனா? எனக்கு திருட வேண்டிய அவசியமே இல்லை. என்னிடம் நிறைய பணம் உள்ளது.
அப்படின்னா…ஏன்டா இந்த புழப்பு புழைக்கணும்?அவள் மீண்டும் ஊசியிறக்க,ஆதேஷிற்கு சுள்ளென ஏறியது.
உன்னோட மாமா யாரு? கேட்டான் பல்லை கடித்தவாறு…..
அபி மாமா…..என்றவுடன் அபியை பார்த்தான். அவன் முகம் சரியில்லாததை பார்த்து தெளிவான ஆதேஷ்…..எனக்கு உன்னோட மாமாவை நல்லா தெரியும்….ஆனால் உன்னை அவரிடம் பேச விட மாட்டேன். அவனும் அவளுடன் மல்லுக்கு நின்றான்.
டேய்…உன்னை நான் சும்மா விட மாட்டேன்டா…திருட்டு பயலே..
யாரை பாத்து என்ன பேசுற? கொன்றுவேன் பார்த்துக்கோ….
கொல்வடா….கொல்வ…அதுவரை என் கை என்ன புளியங்கா பறிச்சுக்கிட்டு இருக்குமா?
வாட் புளியங்கா?…அவன் சீறினான்.
தாரிகா வெளியே வர……ஆதேஷை பார்த்து அவனிடம் வந்தாள்.
அவன் இவ்வாறு பேசி அவள் பார்த்திருக்கவே மாட்டாள். யார் கிட்ட டா இப்படி பேசுற? நெற்றியை தேய்த்துக் கொண்டு வந்தாள்.
போடா….. டோமர் தலையா? அவள் கூற, தாரிகா விழுந்து விழுந்து சிரித்தாள். யார்டா அது? போனை காட்டு….போனை அவள் பக்கம் திருப்பினாள்.
மாமா….மாமா……என்று அவள் இதழ் துடிக்க அழுவதை பார்த்த ஆதேஷ் செய்வதறியாது நின்றான். தாரிகா ஓர் அடி எடுத்து வைக்க, அவன் மெதுவாக அபியை கவனிக்க சொன்னான்.
என்ன நினைத்தாலோ! இன்பா அவர்கள் அருகே வந்து போனை வாங்க அனைவரும் திகைத்தனர். ஜானு பேசிய அனைத்தையும் கேட்டிருப்பாள்.
எதற்குமா….அழுற? உன்னோட மாமா நல்லா தான் இருக்கான் என்றாள். ஜானுவும் இன்பாவிடம் பேச, பேசிக் கொண்டே நேராக அபி முன் வந்து முதல்ல அவளிடம் பேசு…..என்று போனை அவனது கையில் கொடுத்து விட்டு சென்றாள்.
அபி முகம் வாடி இருப்பதை பார்த்து ஜானு,….என்ன ஆச்சு மாமா? ஏதும் பிரச்சனையா மாமா? உடல் சரியில்லையா மாமா? சொல்லு மாமா….கேட்டுக் கொண்டே போனாள்.
ஜானு…நான் நாளைக்கு பேசுகிறேனே! எனக்கு ரொம்ப சோர்வா இருக்குடா…… என்றான்.
வேற எதுவும் இல்லை தானே மாமா?
இல்லம்மா….சரி மாமா. சாப்பிட்டு விட்டு நல்லா தூங்குங்க மாமா….அவள் கூற,”ஹாவ் எ நைஸ் டே” அபி கூறினான்.
மாமா நான் பேசியதை நீங்க கேட்கவே இல்லையா?
இல்லைடா…எனக்கு சோர்வா இருக்கு. போனை வைச்சுடுறேன்….அவன் கூற, மாமா ஒரு நிமிடம் வைக்காதீங்க…..அந்த திருட்டு பையன்…அங்கே தானே இருக்கான். அவனை காட்டுங்களேன்.
டேய்…நான் என் மாமாவை பார்த்துட்டேன்…..அதனால நான் நாளைக்கு வரல….உன்னை ஒருநாள் பார்த்துக்கிறேன் டா…பாரு…..என்றாள் ஜானு.
நீ வா,….உன்னை என்ன செய்றேன்னு பாரு…அந்தரத்துல கட்டி தொங்க விடுறேன் இருவரும் சண்டையை ஆரம்பிக்க,அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.