ஹாய்…ப்ரெண்ட்ஸ்..

எல்லாருக்கும் என் இனிய இரவு வணக்கம்…

உங்களுக்கான இன்றைய எபிசோடு 32

நண்பர்கள் அனைவரும் தாரிகா அம்மாவை பார்க்க சென்றனர். அம்மாவிற்கு தலையிலும் கையிலும் அடிபட்டு மருந்திடப்பட்டிருந்தது.அவர்களிடம் சென்று அனைவரும் நலம் விசாரித்தனர்.

இப்பொழுது பரவாயில்லை என்று கூறிய படி அர்ச்சுவை அழைத்து, உனக்கு எப்படி உள்ளது? என்று கேட்டார்.

லேசான வலி தான்மா….எனக்கு ஒன்றுமில்லை.நீங்கள் எதற்கு தனியாக அங்கே சென்றீர்கள்?

அவனோட டார்ச்சர் தாங்க முடியல…. பொண்ணை வைச்சுகிட்டு அந்த ஆளோட எத்தனை நாள் போராடுரது…அதான் எப்படியாவது பேசி சமாளிக்க நினைத்தேன். அந்த சுமதி சரியான ராங்கி டா…என்னால் சமாளிக்க முடியல…அவரும் அவர்கள் பக்கம் இருக்கிறார்…அவர் தான் கோபத்தில் என்று…..கண்கலங்கிய படி சமாளித்தார்.

அர்ச்சு அம்மா பக்கம் அமர்ந்து, இனி பிரச்சனை வராது. அந்த சுமதி…குமாரன் கிட்ட மட்டும் கவனமாக இருக்கணும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

அவர்…அவரை நான் ஏதும் செய்யல…இனி தான் பார்க்கணும். அவருக்கு என்ன பணம் தானம்மா…அதை சரி செய்ய ஏதாவது வழி செய்கிறேன்.

பணம் ஏதும் கொடுத்து விடாதே!

அம்மா…..என்னோட திட்டமே வேற…அவரே மாறிடுவார்..என்றான்.

அப்படியா! ரொம்ப நல்லதுயா. அவருக்கு நான் இரண்டாவது தாரம்…அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணிடம் பணம் இல்லாத காரணத்தால் அவரை விடுத்து…என்னை திருமணம் செய்தார். என் அப்பா நடத்திய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அதனால் நிறைய பணம் பறி போனது.பணம் இல்லாத காரணத்தால் என் கணவர் எங்களை விட்டு சென்று விட்டார். அப்பொழுது தாரி….என் கருவில் இருந்தாள். பெரியவள் ஐந்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாள்….நான் வேலை செய்து இருவரையும் என் அம்மா வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டேன்.

ஆறு வருடங்கள் பெற்றோருடன் இருந்ததால் பெரியதாக ஏதும் தெரியவில்லை. என் அப்பா எங்களை நினைத்து வருத்தப்பட்டு உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டார்.ஒரு நாள் அவரும் இறந்து விட்டார். அப்பாவையே நினைத்து நினைத்து அம்மாவும் அவருடன் சென்று விட்டார். பின் தான் நாங்கள் தனியானோம். நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.காலை எட்டு மணிக்கு கிளம்பினால் இரவு பதினோறு மணிக்கு தான் வருவேன். யாழு அப்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். தாரி இரண்டாம் வகுப்பு  படித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு நேரம் வேலை செய்தும் பணம் போதவில்லை. அந்நிலையில் யாழு தான் தாரிக்கு எல்லாமுமாய் ஆனாள். என்னால் என் குழந்தைகளை கூட பார்த்துக் கொள்ள முடியவில்லை கண்ணீர் மல்க கூறினார்.தாரிகாவும் கண்கலங்க நின்று கொண்டிருந்தாள்.

அம்மா….கவலைப்படாதீர்கள்…இனி நான் எப்பொழுதும் உங்களுடன் இருப்பேன் என்று தாரிகாவை கண்ணாலே அழைத்தான். அம்மா கையை பிடித்துக் கொண்டு அவளை ஒரு பக்கமாக அணைத்துக் கொண்டு….அவன் நம் தாரு பக்கம் வர கூட முடியாது…பாருங்கள் என்றான்.

எங்களால் உனக்கு சிரமம் தானே!

அதெல்லாம் இல்லைம்மா…நீ என் மகன் என்று அன்று நீங்கள் தானே கூறினீர்கள்? அன்றே நான் உங்களுள் ஒருவனாகி விட்டேன்.

சரிப்பா…..என்றார்.

அர்ச்சு… நீ நினைத்தது உனக்கு குடும்பம் கிடைத்து விட்டது போல…..யாசு கேலி செய்ய….

அது என்ன அர்ச்சு….? அவனுக்கு தான் அர்ஜூன் என்று பெயர் அழகாக உள்ளதே! அம்மா கேட்டார்.

அம்மா…..அது சார்ட் நேம்….என்றாள் தாரிகா…

அர்ஜூன் தான் நல்லா இருக்கு….என்னடா கண்ணா?

ஆமாம்மா…என்றான்.

அம்மா…..எனக்கு இந்த சீனியர் தான் உதவினார். அவருக்கு அடி பட்டு விட்டது… இவருடைய தம்பி தான் என்று சைலேஷை காண்பித்து தாரிகா கைரவை அறிமுகப்படுத்தினாள்.

தேங்க்ஸ் தம்பி….என்றார். அதனால் என்னம்மா….உதவி தானே?

அம்மா அவனை பார்த்து புன்னகை புரிய,….சீனியர்….அழைத்துக் கொண்டு…தாரிகா கைரவ் அருகே வந்து ஒரு கோக் பாட்டிலை கொடுக்க, கைரவ் கவினை பார்த்துக் கொண்டே,

எனக்கு பிடித்ததை தெரிந்து கொண்டு…எனக்காக வாங்கினாயா? சோ…ஸ்வீட்….அவளது கன்னத்தை கிள்ளி விட்டு, கவினை பார்த்தான். கவின் இறுக்கமாக நின்று கொண்டிருந்தான் இருவரையும் பார்த்தவாறு, தாரிகா அம்மாவும் அவனது இறுக்கத்தை கவனித்தார்.

கவின் போன் ஒலித்தது. அவன் அதை நிராகரித்தான். மறுபடியும் போன் அழைக்கவே…எடுத்து பேசு என்றார் அம்மா.அனைவரும் அவனை பார்த்தனர்.

ஹலோ…சார்…வாரேன் சார்…கொஞ்சநேரம் தாருங்களேன்…சார்.

நீ இப்பவே வர வேண்டும் என்றார் அந்த பக்கம் இருந்தவர்.

ம்ம்ம்,…..வாரேன் பதினைந்து நிமிடத்தில் இருப்பேன் என்றவன் போனை துண்டித்து விட்டு, எனக்கு ஒரு வேலை உள்ளது ஆன்ட்டி…..நான் கிளம்புகிறேன்.உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு, அகிலிடம்….ஸ்ரீயை பார்த்துக் கொள்…கூறி விட்டு அர்ச்சுவை பார்த்து தலையசைத்தான். பின் தாரிகாவை பார்த்தவன் கைரவை முறைத்து விட்டு, அவன் வெளியே செல்ல….

நீ கவலைப்படாமல் போ….நான் எல்லாரையும் பார்த்துக் கொள்கிறேன் கைரவ் தாரிகாவை பார்த்து கூறினான்.

டேய்…சும்மா இருடா….என்று அர்ச்சு கைரவிடம் கூறி விட்டு கவினிடம் சென்றான்.வா செல்லலாம்….இருவரும் கிளம்ப, அம்மா முகத்தில் புன்னகை அரும்பியது…அகில்,நண்பர்கள், சைலேஷ் அனைவரும் கைரவை முறைத்தனர்..

ஏன்டா….சும்மாவே இருக்க மாட்டாயா?….நித்தி கோபமாக அவனருகே வர, சைலேஷ் அவளை தடுத்து…விடு…அவன் செய்வதும் நல்லதுக்கு தான்….தம்பியை புரிந்த அண்ணன்.

என்னவாது செய்யுங்கடா….அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

வெளியே வந்த கவினிடம் அர்ச்சு….எல்லாமே சரியாகிடும். உனக்கு அவளை பிடித்திருந்தால் சீக்கிரம் சொல்வது தான் நல்லது அர்ச்சு பேசிக் கொண்டிருக்கையில் அபி அவர்களருகே வந்து,

இந்த கைரவிற்கு வேற வேலையில்லை. நீ வருத்தப்படாதே டா…அவளது தோளில் கை போட்டுக் கொண்டே வந்து கவினை அனுப்பி வைத்தனர். அர்ச்சு அபியை பார்த்தான். நீ செல் நான் வருகிறேன்….அபி மருத்துவமனை விட்டு வெளியே வந்தான். இன்பா தோய்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

அவளருகே செல்ல நினைத்த போது வந்தான் சந்துரூ….அவனை பார்த்த அபி முகம் மாறியது.அவனை பார்த்தவுடன் இன்பா அவனை அணைத்துக் கொள்ள, சினம் ஏறியது அபிக்கு.

விறுவிறுவென அவர்கள் அருகே வந்த அபியை பார்த்து இருவரும் திகைத்தனர்.

உங்களுக்குள் ஏதும் உள்ளதா? நான் பார்க்கும் நேரமெல்லாம் கட்டிப் பிடித்து கொண்டிருக்கிறீர்கள். தாரிகா அக்காவிற்கு பின் நீங்களா? சீற்றத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசி விட்டான்.

என்னடா பேசுற?…சந்துரூவும் சீறினான். இன்பாவால் இப்படியொரு பேச்சை தாங்க முடியாமல் தடுமாறினாள்.

இன்பா…..என்று சந்துரூ அழைத்தான். அவள் கையை காட்டி வராதே! அபியை முறைத்தவள் வேகமாக நடந்தாள்.அப்புறம் தான் அபி அவளிடம் பேசியதை உணர்ந்தான்.

ஏன்டா….ஏற்கனவே ஏதோ பிரச்சனை போல் தெரிந்தது. நீ வேற….

ஏய்….நில்லு…சந்துரூ கத்தினான். திரும்பிய இன்பா, வராதே…….அழுது கொண்டே ஓடினாள்.சந்துரூ அவளை தொடர்ந்தான்.

வெளியே வந்த இன்பாவை இடிக்க கார் ஒன்று வந்தது. அவள் ஓரமாக தான் சென்று கொண்டிருப்பாள். பசங்க ஓடி வந்தனர்.

இன்பா……சந்துரூ அதிர்ந்து கத்தினான். அபி இடையே வந்து இன்பாவை பிடித்து இழுத்து காப்பாற்றினான்.இருவரும் கீழே விழுந்தனர்.அந்நேரம் அந்த கார் நின்றது. ஒருவன் தலையை நீட்டி பார்த்தான். அவனை பார்த்த அபி, இன்பாவை விலக்கி விட்டு வேகமாக அவன் பக்கம் ஓட ஆரம்பித்தான். அந்த கார் நகர்ந்தது.அபிக்கு எதிரே ஒருவன் ஸ்கேட்டிங் போர்டுடன் வர, அவனை நிறுத்தி, அவனிடம் அதை எடுத்துக் கொண்டு, அவன் ஒரு ஸ்டைலில் அழகாக ஸ்கேட் செய்து கொண்டு காரை பின் தொடர்ந்தான்.இன்பாவும், சந்துரூவும் அதிர்ந்து பார்த்தனர்.

டேய்,…வண்டியை எடு என்று இன்பா சொல்ல இருவரும் கிளம்பினர். அவர்கள் சென்று கொண்டிருந்த திசைக்கு எதிரே ஒரு இருக்கையில் அபி அமர்ந்திருந்தான்.

உனக்கு என்னடா ஆயிற்று?….இன்று நீ  சரியில்லை சந்துரூ கேட்டான். அபி அவனை முறைத்தபடி நின்றிருந்தான்.

கேட்கிறேன்ல…சொல்லு….அவன் அதட்டினான்.

நீ ஏன் என்னை அப்படி கேட்டாய்? என்னை பார்த்தால் அதுபோல் தான் தெரிகிறதா? எனக்கு அடுத்தவர் பொருள் பிடிக்காது. என்னுடையதை யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன். அவன் என்னுடைய தோழன்… சைலேஷும் அவ்வாறு தான்.நித்தி யாசு…..உனக்கு எப்படியோ….அது போல் தான் நாங்களும்..கேவலமாக பேசி விட்டாயே! என்று இன்பா அபியிடம் பேசினாள்.

தெரியவில்லை…எனக்கு தோன்றியது….

சரி…அதனால் உனக்கு என்ன கோபம்? சந்துரூ வினவினான்.

தெரியவில்லை. எதற்கு நான் கோபப்பட்டேன்? என்று புரியவில்லை.

அந்த கார் உள்ளே யார் இருந்தார்கள்?

அன்று இவர்களை விரட்டினானே!அவன் தான்.

அவனா? இருவரும் திகைத்தனர்.

ம்ம்….மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை மாட்டட்டும். அவனை கவனித்துக் கொள்கிறேன்.

அவன் கொலை செய்ய வந்திருக்க மாட்டான். அவனுக்கு தேவை இன்பா தான். ஆனால் கொல்ல….முயற்சி செய்தானே?

நான் கேட்டதற்கு பதில்…..இன்பா அபியை பார்த்தாள்.அவனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.

அவன் விசயத்தில் நீ தலையிடாதே! கோபத்துடன் கூறி விட்டு விருட்டென கிளம்பினாள் இன்பா.

சந்துரூ அபியிடம்,…..அவளுக்கு யார் மீதாவது கோபம் வந்தால் அவ்வளவு தான்.எறிந்து எறிந்து விழுவாள். மாட்டுன…போ….என்றான் சந்துரூ. அவள் நிறைய பசங்களுடன் பழகி இருக்கிறாள். காதல் மட்டும் இதுவரை யார் மீதும் வந்ததேயில்லை. எங்களுடைய நண்பர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு பையன் இருந்தான். அவன் பெயர் கேரி……அவன் அவள் பின்னே தான் சுற்றினான். காதலையும் கூறினான். அதற்கு அவள்..நட்பு வேறு……காதல் வேறு…..தத்துவம் பொழிந்தாள். அவ்வளவு தான் அவன்…. பேசாதேம்மா… உனக்கு விருப்பம் வந்தால் கூறு….ஓடி விட்டான். ஆனாலும் அவளை விடவில்லை.

கடைசி வரை உறுதியாக இருந்து விட்டாள். எக்சாம்ஸ் முடிந்து எல்லாரும் மீட் பண்ணினோம். அவனை மட்டும் காணோம். சொல்லாமல் “யூ எஸ்” சென்று விட்டான். அவன் மீதும் சரி கோபமாக தான் இருக்கிறாள். அவனும் தோழனல்லவா….இனி பேசும் முன் கவனித்து பேசு.

என்னால் முடிந்தால் உதவுவேன்.ஆனால் நீ சொன்னது தவறு…இதில் உதவ முடியாது. எனக்கு என் யாழு தவிர யாரையும் நினைக்க கூட முடியாது. ரொம்ப தப்பா பேசிட்ட தம்பி என்று அபி தோளை தட்டி விட்டு சென்றான் சந்துரூ.

        “போராடி போராடி களைத்தேன்

                என் கண்மணியே!

          உழைத்து உழைத்து திரட்டினேன்

                என் கண்மணியே!

          தேய்ந்து தேய்ந்து முத்தெடுத்தேன்

                 என் கண்மணியே!

              இருந்தும் நீ எனை விட்டு

                     பிரிந்ததேனோ

                   என் கண்மணியே!”