ஹாய்…ப்ரெண்ட்ஸ்…

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…

உங்களுக்கான இன்றைய எபிசோடு 29….இதோ…

வாசித்து மகிழுங்கள்…

மதிய வேளையின் போது நித்தி கவினிடம், உனக்கு என்னடா ஆச்சு காலையில்? நித்தியை அணைத்து தவறு செய்து விட்டோம் என்றான் அவன் கம்மிய குரலில். அவன் அணைத்ததை நித்தியிடம் பேச வந்த சைலேஷும்,அர்ச்சுவை பார்க்க வந்த தாரிகாவும் பார்த்து விட்டு, சைலேஷ் கோபமாக கவினை அடிக்க, தாரிகாவோ….கோபமுடன் அர்ச்சுவிடம் வந்து,

இந்தா அம்மா சாப்பாடு உனக்கு கொடுத்தார்கள் என்று டப்பென்று அர்ச்சு அருகே வைத்து விட்டு கண்கலங்கியவாறு சென்றாள்.

நித்தி பதறி, அவன் என்னிடம் சும்மா தான் சைலேஷிடம் கூறினாள்.

ஓ…..சும்மா கட்டிப் பிடித்தானா? நீயும் என்றவன் பல்லை கடித்துக் கொண்டு…கோபமாக அவன் விலகினான்.

அவனை இழுத்த நித்தி, நானும்….என்ன? சொல்லுங்கள் என்றாள் கோபமாக.

அகிலும் அபியும் அவர்களருகே வந்து, எல்லாரும் உங்களை தான் பார்க்கிறார்கள் சார். நீங்கள் இப்பொழுது செல்லுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நித்தி சைலேஷை முறைக்க, அவன் கோபமாக சென்றான்.

கவின் உதட்டில் இரத்தம் வழிய, அர்ச்சு தாரிகா பின் சிரித்துக் கொண்டே செல்ல,

போயிருடா…என்னை சரி செய்ய பார்க்காதே! போ…நீ போய் கொட்டிக்கோ என்றாள் கோபமாக தாரிகா. திடீரென உள்ளே வண்டியில் வந்தவன் தாரிகாவை தூக்கி வண்டியின் முன் உட்கார வைத்து,

ஹே….பேபி…..மாமாவுக்கு சாப்பாடு என்று அவளது இதழருகே உரச…

ச்சீ….என்னை விடுடா… அவனை அடிக்க, சரி சரி….என்றவன் அவளை கீழே இறக்கி விட்டு வண்டியை நிறுத்தினான்.

என் அத்தை மகளை, இந்த மாமனை பார்த்துக் கொள்ள எப்பொழுது வீட்டிற்கு வரப்போகிறாய்? அவளை வம்பிற்கு இழுத்து விட்டு,

“என் அத்தை என் வீட்டில்

 நீயோ கல்லூரியில்”

அம்மா அங்கே வா? பதறினாள் தாரிகா.அவள் போனை எடுக்க, அவளுக்கு சரியாக அழைத்தது போன்.

அம்மா….அம்மா….என்று பதறினாள்.

பாப்பா அம்மா மருத்துவமனையில் இருக்கிறார். உன் அப்பனும் அவனது தங்கையும் உன் அம்மாவின் தலையை பதம் பார்த்து விட்டனர்.

கண்ணீர் துளிகள் விழ, போனை வைத்தவள். என் அம்மாவை என்னடா செய்தீர்கள்? கத்தினாள்.

பேபி…அத்தை ஒத்து வர மாட்டிகிறார்கள்! நீ என் அருகே வர? வேறென்ன செய்வது?

ச்சே…என்றவள் அவனது சட்டையை பிடித்து என் அம்மாவிற்கு மட்டும் ஏதாவது இருக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் உன்னை.

யாருடா நீ? கவின் கேட்க,அர்ச்சுவும் கவினுடன் சேர்ந்து கொள்ள, நீங்கள் யாருடா என்னை கேள்வி கேட்க?

சைலேஷ் உள்ளே நுழைந்து, இங்கே பார். நீ எவனாக வேண்டுமானாலும் இரு.இது என்னுடைய கல்லூரி. வெளியே போடா என்று பிடித்து தள்ளினான் தாரிகாவின் அத்தை மகனான குமாரனை.அவன் முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.

ச்சே…முதலில் சில விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று முணங்கிக் கொண்டே அவனது அறைக்கு சென்றான் சைலேஷ். தாரிகா அழுவதை பார்த்து அவளருகே கவின் வர, கையை மேலே தூக்கி வேண்டாம் என்றவள் அர்ச்சுவை பார்த்தாள்.

அம்மாவிற்கு என்ன? அவன் கேட்க, அவள் கூறினாள்.வா செல்லலாம் என்று விடுப்பு கூறி விட்டு அர்ச்சுவுடன் தாரிகா செல்ல, அங்கிருந்த பெண்கள் அவளை பொறாமை கண்ணில் துளைத்தெடுத்தனர்.தாரிகா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.

அறைக்கு சென்ற சைலேஷ் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்தான். சத்தம் கேட்டு உள்ளே தாத்தா வர, அமைதியானான்.அவனிடம் பேசிய பின் அவரும் சென்று விட்டார் இருந்தும் கோபம் குறையவே இல்லை சைலேஷிற்கு.

நித்தி சைலேஷை காண போர்டு ஆபிசிற்கு சென்றாள். அவளை பார்த்த சைலேஷ் தாத்தா அவளை உள்ளே அழைத்து வரச் சொல்லி அவரது பணியாளை பணித்தார்.

நித்தி உள்ளே சென்றவுடன், அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினாள்.

உன்னை எங்கோ பார்த்தது போல் உள்ளதே! சிந்தித்தவாறு பேசினார்.பின் நித்திக்கு தெரியாமல் சைலேஷிற்கு போன் செய்து அவனை கேட்க செய்தார்.

அவள் குறுநகை புரிந்து கொண்டே, பிரகாஷ் அண்ணா மேரேஜ் என்றாள்.

அட,…ஆமாம் என்று நன்றாக சிரித்துக் கொண்டு, உடல் நலமில்லாத பெரியவருக்கு உதவினீர்களே! அவர் உன்னுடைய அப்பாவா?

அவள் ஆம் என்று தலையசைத்து விட்டு, அவர் மருத்துவர். எங்களது ஊரில் தான் இருக்கிறார்.எனக்கு எல்லாமே அவர் தான்.

அம்மா?….தாத்தா கேட்டார்.

அவள் கண்கள் கலங்க பேச முடியாது தவித்தாள்.

விருப்பமில்லை என்றால் விடுமா என்றார்.

நான் சிறு வயதிலிருக்கும் போதே எங்களை விட்டு சென்று விட்டார். இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றவள் மெதுவாக தன்னை  நிதானப்படுத்தி கொண்டு, கண்ணை துடைத்து விட்டு, அப்பாவிற்கு என் மீதும் தொழில் மீதும் கொல்லை பிரியம். அவருக்கு முன் எந்த உயிர் துடிப்பதையும் காண முடியாது.அன்று நடந்ததை பார்த்திருப்பீர்களே!

ம்ம்….அன்றே எங்களை பற்றி தெரியுமா?

உங்களை அன்று தான் தெரியும்.ஆனால்…தயங்கிக் கொண்டு அவரை முன்பே தெரியும்.

எப்பொழுது?

அவள் சைலேஷை பார்த்து காதல் செய்தது. நந்தினியிடம் சுற்றியது அனைத்தையும் கூறி அவன் நித்தியை காயப்படுத்தியதை மட்டும் கூறாமல் மறைத்தாள்.

நீ கூறி இருக்கலாமே! முதலில் அவர் காதல் தான் என்னை தடுத்தது. ஆனால் இப்பொழுது….நிறுத்தினாள். சைலேஷ் கேட்டுக் கொண்டிருந்தவன்.

என்ன கூற போகிறாள் என்று கூர்ந்து கவனித்தான்.

இப்பொழுது……. என்று தாத்தாவும் ஆர்வமுடன் கவனித்தார்.

எந்நிலை வேறு.அவர் நிலை வேறு. ஆனாலும் என்னால் அவரை தவிர யாரையும் நினைக்க கூட முடியவில்லை என்று அவள் முடிப்பதற்குள்…..

எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றால் நீ என்ன செய்வாய்? தாத்தா கேட்டார்.

அவள் சட்டென அவரது காலில் விழுந்து விட்டாள்.

என்னமா செய்கிறாய்? கேட்க

நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டால் தான் நான் எழுவேன் என்றவுடன் சைலேஷிற்கு பயங்கர சிரிப்பு. வாயில் கையை வைத்துக் கொண்டு சிரித்தான்.

அவர் சிரித்துக் கொண்டு, முதலில் எழும்மா என்றவர் கைரவை கூட சைலு நன்றாக பார்த்துக் கொண்டான். சிறுவயதிலிருந்து சைலுவை கவனிக்க தான் யாருமே இல்லை.

என்ன தாத்தா! முதலிலே கூறி இருந்தால் ஓடி வந்திருப்பேனே! என்றாள் குறும்பாக. இருவரும் சிரிக்க, சைலேஷ் கேடி… என்று முணங்கினான்.

நீ சேட்டைகார பெண்ணாக இருப்பாய் போல! அவள் சிறு புன்னகை பூக்க,

அந்த திருமணத்தில் அவனை பார்த்தாயா?

அவள் அழகாக வெட்கத்துடன் சிரிக்க,உனக்கு அவன் மீது கோபம் வரவில்லையா?

இருக்கு தாத்தா. நான் ஒன்று கூறுகிறேன் அவரிடம் கூறக் கூடாது பிங்கி பிராமிஸ் கேட்க, அவரும் அவளது விரலில் கை வைத்தார் .அவரை பழிவாங்க திட்டம் கூட செய்தோம் என் தோழனுடன் என்றாள்.

அடப்பாவி…..என்று புலம்பினான் சைலேஷ்.

திட்டமா? ஆர்வத்துடன் கண்ணை விரித்தார்.

பொறாமை படுத்த கவினுடன் நெருக்கமாக இருப்பதை போல் காட்ட நினைத்தோம். அவனும் ஒத்துக் கொண்டான்.ஆனால் என்னவென்று தெரியவில்லை என் நண்பர்கள் யாரும் சரியில்லை. எப்பொழுதும் நான் கூப்பிட்ட மறுநிமிடம் என் முன் நிற்பவன் கவின். நான் அழைப்பது போல் கவனியாமல் சென்றான் .பின் அவனிடம் கேட்ட போது கண் கலங்கியவன், நாம் அனைவரும் தவறு செய்து விட்டோம் என்று என்னை கட்டிக் கொண்டான்.

அதை பார்த்து இவருக்கு கோபம் வந்து அவனை அடித்து விட்டார்.இதற்கே கோபப்படுகிறார். என் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினால் கொன்று விடுவார் போலவே…சிரித்தாள்.

தவறா?..

என்னவென்று கேட்டால் சொல்லவே மாட்டிகிறான். அவன் மட்டுமில்லை என்று அவள் யோசனை தாரிகா,நிவாஸ் பக்கம் திரும்பியது.

உன்னோட பெயர் என்னம்மா? அவர் கேட்டவுடன் நித்யஸ்ரீ…என்றவள் அமைதியானாள்.

என்னம்மா அமைதியாகி விட்டாய்?

ஒன்றுமில்லை என்றவள். அவர் இன்னும் கோபமாக இருப்பாரா?

நீ எங்களது வீட்டிற்கும், என் சைலுவிற்கும் சரியான பெண் தான் என்றார்.

அவள் அவனது யோசனையில், அதுவும் சரி தான் என்று உளறினாள்.

தாத்தா சிரித்து விட்டு, நித்தும்மா….அவள் பக்கம் மேசையை தட்டியவர். என் பெயரனுக்கு நீ சரியானவள் என்றவுடன்,

நீங்கள் என்ன கூறினீர்கள்? என்னை….என்று அவள் இழுக்க, அவர் ஆம் என்றார். அவள் கண்கலங்கிக் கொண்டே அவரிடம் வந்து மறுபடியும் காலில் விழ,

போதும்மா..எழுந்திரு…எத்தனை முறை…என்றார்.

நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல வேண்டும் என்றாள்.

நீ எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?

அதுவந்து….இழுத்தாள். இதில் உன் தவறு இல்லை. உன் திட்டம் தான்…அவர் சிரித்தார். அவள் அசடு வழிந்தாள்.

நீ எப்படி இவ்வளவு சாதாரணமாக பழகுகிறாய்? என்னிடம் பேச பயம் இல்லையா? தாத்தா கேட்டார்.

எங்களது கிராமத்து பழக்கம். அனைவரும் முறை கூறி நெருக்கமாகவே பழகி, அதே போல் தான் பயமில்லாது பேசினேன். தவறாக ஏதும் பேசி விட்டேனா?

இல்லைமா என்றார்.சைலேஷ் கதவை திறந்து உள்ளே வந்தான். இவள் செய்ததை அவனது தாத்தா அறையிலிருந்த கேமராவில் பார்த்துக் கொண்டிருப்பான் போல் . மலர்ந்த முகத்துடன் அவனை பார்த்தாலும் நித்தி தாத்தாவின் பின் மறைந்து நின்றாள்.

ஓய், இங்கே வா? தன் விரலசைத்து அவளை அழைத்தான் சைலேஷ். அவள் எட்டி பார்த்து விட்டு, தாத்தா எனக்கு உதவுகிறீர்களா?அவரிடம் பேச்சு கொடுங்கள். நான் வெளியே ஓடி விடுகிறேன் அஸ்கி வாய்சில் அவள் பேச,

அவனை பார்த்தாயா? அவன் தீர்க்கமான முடிவோடு வந்ததை போல் தெரிகிறது அவரும் அவளை போல் பேசினார். இருவரும் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அறியாத நேரத்தில் அவளருகே வந்தவன். அவளை இழுத்து அவனது அறைக்கு அழைத்து சென்றான்.

அவள் பேச வாயெடுப்பதற்குள் அவனது இதழ் கொண்டு அவள் இதழை மூடினான்.பின் அவளை விடுவித்து, “ஐ லவ் யூ” என்று விட்டு கவின் அருகே சென்றாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்றான்.

நானும் “ஐ லவ் யூ” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டு நிற்காமல் ஓடியவள் நேராக தாத்தாவிடம் சொல்லி விட்டு கிளம்ப திரும்பினாள்.

நித்தும்மா……நீ தினமும் தாத்தாவை பார்க்க வருவாய் தானே! கேட்டார்.

ம்ம்….கண்டிப்பாக என்று விட்டு வெளியே ஓடினாள். அவள் மனதோ துள்ளிக் குதியாட்டம் போட்டது.அவளது இதழை கொய்த தன் இதழ்களை தொட்டு பார்த்து வெட்கி சிவந்தான் அந்த மாயக்கண்ணன்.