ஹாய்..ப்ரெண்ட்ஸ் ….

முதலாவதாக மன்னியுங்கள்.என்னுடைய போன் பிரச்சனை ஏற்பட்டதால் இரண்டு நாட்களாக எபிசோடு போட முடியவில்லை. இன்றும் நாளையும் இரண்டு எபிசோடுகளாக பார்க்கலாம்.

தாமதமான மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்கான எபிசோடு 16

அர்ச்சு உள்ளே சென்றான். ஸ்ரீ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.நீ என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா? ஸ்ரீ கேட்டாள்.

ஏன் என்னிடம் மட்டும் பேச தயக்கம் காட்டுகிறாய்?

இல்லையே……..

எனக்கு நன்றாக தெரிகிறது.

அது வந்து……பயமாக உள்ளது.

பயமா? உனக்காக?

ஏன் எனக்கு பயமெல்லாம் இருக்க கூடாதா?

சும்மா தான் கூறினேன்.

வேறு ஏதாவது கூற வேண்டுமா? அர்ச்சுவிடம் ஸ்ரீ கேட்க,அவன் சிரித்துக் கொண்டே இல்லை என்றான்.

எதற்கு சிரிக்கிறாய்?

அதுவா நீ என்னிடம் பேசுவதால் சிரித்தேன்.

என்ன? அவள் கேட்க,

நேற்று தான் கோபப்பட்டாய்? இப்பொழுது நன்றாக பேசுகிறாய்…

உங்களது குக்கூ நான் இல்லை. எனக்கு திருமணம் ஜிதினுடன் தான். தெரியும் தானே? அவள் கூற,அவன் மனது கஷ்டப்பட்டாலும் ஸ்ரீயிடம், நன்றாக தெரியும் என்று ஒரு சாக்லெட்டை அவளருகே வைத்து விட்டு நீ ஏதும் பேச வேண்டாம். எனக்கு புரிகிறது என்று வெளியே செல்லும் போது முகம் சோகமானது.

நிவாஸ் உள்ளே சென்றான். ஸ்ரீ முகம் வித்தியாசமாக தெரிந்தது அவனுக்கு.

அவர்களிடம் என்ன பேசினாய்?

என்னுடைய திருமணத்தை பற்றி மூவரிடம் கூறினேன் அவள் கூற, நிவாஸ் அவளை திட்டி விட்டு வெளியே வந்தான்.கைரவ், அகில் வருத்தமாக இருந்தனர். ஆனால் அர்ச்சு சாதாரணமாக இருப்பதை பார்த்து நிவாஸ் குழப்பமானான்.

ஜிதின் அவன் அம்மா கயல் விழியுடன் வந்தான். நண்பர்களை பார்த்து அவனது அம்மா அருகே வந்து,

அபியை பார்த்து அம்மா, அப்பா நன்றாக இருக்கிறார்களா? கேட்டார்.

அவன் விழித்துக் கொண்டிருக்க,ஜிதினும் அவனது அம்மாவை ஆச்சர்யமாக பார்த்தான்.

நித்தி அருகே வந்து, நல்லா இருக்கியாம்மா?

அவளும் விழித்தாள்.

யாசுவை பார்த்து, என்ன குட்டி பாப்பா நன்றாக வளர்ந்து விட்டாய்?அவள் உறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அகிலிடம் வந்து, மகனே எப்படி இருக்கிறாய்? உன் அம்மாவை பார்த்துக் கொள் கூற,அவனுக்கு அவள் மிரட்டுவது தெளிவாக புரிந்தது.

நீங்கள் என் அம்மாவிற்கு யார்? அகில் கேட்டான்.

உன் அம்மாவிடம் கேள்.

அர்ச்சுவை பார்த்து, நீ தவறு செய்து விட்டாய். அன்று நீ ஒரு மணி நேரம் காத்திருந்தால், உன்னுடைய அங்கிளை பார்த்திருப்பாய்? இனி நீ நினைத்தாலும் பார்க்க முடியாது.அய்யோ பாவம் அவன் உன்னை பார்த்தான். உன் அருகே வர எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா?

அர்ச்சு கோபமாக அவரை பார்க்க, கோபப்படாதே! நீ எதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டு தேடினாய்? உன் அம்மாவிடம் உதவி கேட்டால் சீக்கிரம் கண்டறிந்திருக்கலாமே!

அட,நான் மறந்து விட்டேன். இவளை உன் அம்மாவிற்கு பிடிக்காது தானே! கிண்டலாக கூற, அர்ச்சுவிற்கு கோபம் அதிகமானது.

என்ன சொல்கிறீர்கள்? அகில் அவளருகே வர, அர்ச்சு அவன் முன் வந்து, வேண்டாம் என்று தலையசைத்தான்.

இருவரும் பார்க்க, அவள் இவர்கள் தோளில் கையை போட்டுக் கொண்டு, அவர்களது தலை இடையில் அவளது தலையை நுழைத்து,

நீங்கள் அவளை கண்டறிய தாமதமாக்கி விட்டீர்கள்! இனி அவள் எனக்கு கை பொம்மையாகி விடுவாள்.அவள் ஏற்கனவே நிறைய இழந்து விட்டாள். இன்னும் கொஞ்சம் தான் அவளது வாழ்க்கை நரகமாக போகிறது. முடிந்தால் அவளை காப்பாற்றுங்கள்.முடியாது…இருந்தும் முயற்சி செய்யுங்கள் என்று அவர்களது காதருகே பேச, அகில் கோபமாக கையை ஓங்க அர்ச்சு கண் சைகையிலே தடுத்தான்.

கயல் முன் செல்ல,ஆன்ட்டி….சத்தமாக கூப்பிட்டு, அர்ச்சு அழகான குறுஞ்சிரிப்பை உதிர்த்து விட்டு அகிலை முன் கொண்டு வந்து அவன் தோளில் கை போட்டுக் கொண்டு, இதுவரை நாங்கள் இருவரும் சேர்ந்தால் என்ன செய்வோம் என்று யாரும் பார்த்ததில்லை. இனி நீங்கள் பார்க்கலாம் அர்ச்சு கெத்தாக பேசினான். அவள் பிரச்சனைக்கு நீங்கள் காரணமாக இருப்பீர்களோ! என்ற ஐயம் இருந்தது.இப்பொழுது உறுதியாகி விட்டது.

அகிலும் அவன் தோளில் கை போட்டுக் கொண்டு, நீ நினைக்கும் எதையும் நாங்கள் நடக்க விட மாட்டோம். நாங்கள் அல்ல…….நீங்கள் முடிந்தால் எங்களை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

அவர் கோபமாக இருவரையும் முறைக்க, அவர்கள் கயலை பார்த்து சிரித்தனர். அனைவரும் உறைந்து போய் இருவரையும் பார்த்தனர்.

அட, ரெண்டு பேரும் என்னமா பேசுறானுக…பெரிய ஆளுங்களே இவளை பார்த்தால் பயப்படுவார்கள்.ஸ்ரீயை காப்பாற்ற இவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டியது தான் நிவாஸ் பார்த்துக் கொண்டிருக்க, கயலோ நிவாசை பார்த்துக் கொண்டே சென்றார். ஸ்ரீ அறைக்குள் நுழைந்தார்.அவர் பேசி விட்டு வெளியே வர, அர்ச்சு அகில் போனிற்கு வீடியோ ஒன்று வந்தது.

எடுத்து பாருங்கள் என்றவாறு கயல் அருகே வந்தார். கைரவை அவர் பார்க்க, அவனும் வீடியோவை பார்த்தான்.

ஸ்ரீ அம்மா, அப்பாவை கொலை செய்த காட்சி பதிவாகி இருந்தது.அதில் ஸ்ரீ கையிலும் அடிபட்டு இரத்தத்துடன் அம்மா,அப்பாவை பிடித்து அழுத காட்சி இருந்தது. இரும்பு கம்பியை வைத்து அடித்து கொல்வதை போலவும், கயல் ஏதோ பேசுவது போலவும் இருந்தது. சத்தமில்லாமல் இருந்தது.

அனைவரும் அதை பார்த்து அழ, கைரவ் இந்த வீடியோவை வைத்து உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் சத்தமிட,

முடிந்ததை பார்த்துக் கொள். இது இன்னும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடும் என்று அவர் சிரிக்க,

அது எப்படி முடியும்? அகில் கேட்க

அழிய வாய்ப்புள்ளது. அதனுடைய உண்மையான வீடியோ அவர்களிடம் தான் இருக்கும். அதை வைத்து செய்யலாம் அபினவ் கூற,ஆமாம் என்று அர்ச்சு கூறினான்.

அகில் கோபமாக கயல் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு போய் விட, ஜிதின் அவனை பிடித்து தள்ள, நிவாஸ் அவனை பிடித்து, அமைதியாக இருங்கள் கூறினான்.

நிவாஸ் இவர்களை பற்றி உன் அக்காவிடம் கூற போகிறாயா என்ன?

நீங்கள் கூறாமல் இருந்தால் நல்லது தான்.

என்னோட சமத்து என்று அவனது கன்னத்தை பிடிக்க,

அழுது கொண்டிருந்த நித்தி, நீங்கள் எதற்காக இப்படியெல்லாம் செய்தீர்கள்? அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? கேட்க

நீ சின்ன பொண்ணாக நடந்து கொண்டால் உன்னுடைய அப்பாவிற்கு நல்லது.

என்ன மிரட்டுகிறீர்களா? எனக்கான நேரம் வரட்டும் அப்புறம் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று நித்தி கூறினாள்.

என்னவொறு நட்பு, அவளும் என்னிடம் இப்படி தான் பேசினாள்? நல்லவொறு மூளை இணைப்பு.பாவம் அவளால் இப்பொழுது இப்படி பேச முடியாது. நான் கூறுவதை தான் செய்ய வேண்டும்.நான் கூறினால் உங்களை விட்டு விலகி விடுவாள்.ஆனால் அவள் உங்களுடன் இருக்க வேண்டும். அவளது வலியை பக்கத்திலிருந்து நீங்களும் பாருங்கள் என்று அர்ச்சுவை பார்த்துக் கொண்டு,

என்ன அகி, பார்க்கிறாயா? அவளுக்கு உதவ உங்களால் முடியாது.

அவன் மீண்டும் கோபமாக, யாசு அவனருகே வந்து, அவனது கையை பிடித்து அமைதியாக்கினாள்.

கயல் கிளம்பிய பின் அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருந்தனர்..இங்கே என்ன தான் நடக்கிறது? கேட்டுக் கொண்டே நித்தியும் யாசுவும் அழுதனர். கைரவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அர்ச்சு என்ன நினைத்தானோ,நண்பர்களிடமிருந்து மெதுவாக விலகிய அர்ச்சு குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் வேகமாக வெளியே ஓடினான். நிவாசும் அவன் பின்னே ஓட, கயல் கார் முன் வந்து நின்றான் அர்ஜூன்.நிவாஸ் மறைந்து கொண்டான்.

நான் உங்கள் வீட்டின் முன் வந்த அன்று தான் அவர்களை கொன்றீர்களா?கண்கலங்கியவாறு.

நீ சென்ற ஒரு மணி நேரத்தில் அவர்களை கொன்று விட்டோம்.

அவர் உங்கள் அண்ணன் தானே!

அவன் எனக்கு செய்தது அப்படி.

உங்களுக்கு எப்படி எங்கள் அனைவர் பற்றியும் தெரியும்?

ஏன் தெரியாது? நீங்கள் இருந்த இடத்தில் என் ஆளை போட்டிருந்தேன். நீ கிடைக்காத காதலுக்காக அம்மாவிடம் சண்டை போட்டது கூட எனக்கு தெரியும். உன் காதல் இன்னும் மாறவில்லை. உன்னை போன்ற காதலன் எனக்கு இருந்தால் அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.எனக்கு அது அமையவில்லை. உன்னுடைய காதலை துச்சமாக நினைத்ததாலோ என்னவோ அவளுக்கு அனைத்தும் தவறாகவே நடக்கிறது. அன்றே அவள் உன் காதலை ஏற்றிருந்தால் நன்றாக இருந்திருப்பாள்.அதான் உன் காதல் தேவதை அவர் சிரித்துக் கொண்டு,

நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?அவளை பற்றி உனக்கு எல்லாம் தெரியுமென்று நினைக்கிறாயா? ஆனால் அவளுக்கு தேவையான ஒன்று மட்டும் உனக்கு தெரியாது. அது அவளுக்கும் எனக்கும் தான் தெரியும்.பாவம் அவளுக்கு அது கூட மறந்து விட்டது.அது அவளுக்கு இப்பொழுதும் கிடைக்காது.

எதுவாக இருந்தாலும் அவள் ஆசைப்பட்டது கிடைக்கும் அவன் கூற, சிரித்துக் கொண்டே அவர் சென்று விட்டார். அர்ச்சு அங்கேயே இருந்து கதறிக் கொண்டிருந்தான்.

அவன் ஆகாயத்தை நோக்கி,நீங்கள் என்னிடம் கூறி இருக்கலாமே! நான் கேட்டதற்கு கூட பதில் கூறாமல் மொத்தமாக அவளை விட்டு சென்று விட்டீர்களே! அகிலிடமாவது கூறி இருக்கலாமே! அவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று நடுரோட்டில் நின்று சபதம் எடுத்தான்.நிவாஸ் அங்கிருந்து சென்றான்.

கொஞ்ச நேரத்தில் அர்ச்சு மருத்துவமனைக்கு வந்தான். அகில் அவர்களிடம் ஸ்ரீயுடம் இதை பற்றி ஏதும் பேச வேண்டாம்.அமைதியாக சாதாரணமாக இருங்கள்.நம்மை பற்றி அவளுக்கு தெரிய வேண்டாம்.

அந்த பொம்பளைக்கு எப்படி நம்மை பற்றி தெரியும்?நித்தி கேட்க

அர்ச்சு அவர்களிடம் வந்து, இதை பற்றி இங்கே ஏதும் பேச வேண்டாம்.அகில் கூறியது போல் தான் இருக்க வேண்டும். அர்ச்சு அகிலிடம் வந்து, உனக்கு என் மீது ஏதாவது கோபம் என்றால் என்னை அடித்து விடு.இனி நாம் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது கூறினான்.

அடி எல்லாம் வேண்டாம். அவர்கள் என்ன கூறினார்கள்? என்று விளக்க வேண்டும் என்றான்.முதலில் அவள் வீட்டிற்கு செல்லட்டும். நாம் நாளை பேசுவோம். விடுதிக்கு செல்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்  என்று அர்ச்சு கைரவ், நிவாசை பார்த்தான். இம்முறை அகில் ஏதும் கூறாமல் வெளியே வந்தான்.

ஸ்ரீயை எப்படி விட்டு வருகிறாய்? கவின் கேட்டான்

அவள் திருமணத்தில் தெளிவாக இருக்கிறாள். இப்பொழுதைக்கு அவள் யாரையும் காதலிக்க மாட்டாள். நான் தான் தவறாக எண்ணிக் கொண்டேன் அகில் கூறினான்.

அவளை விட போகிறாயா?

நான் அப்படி கூறவே இல்லையே! முதலில் அவளது பிரச்சனை முடியட்டும். நாம் விடுதியில் இருப்பதால் அவளை சரியாக பார்த்துக் கொள்ள முடியாது. அர்ச்சுவும் நிவாசும் அவளுக்கு உதவட்டும். அந்த ஆன்ட்டி பேசியதை வைத்து பார்த்தால் ஸ்ரீ பிரச்சனை பெரியது தான். அம்மா,அப்பா மீதே கை வைத்திருக்கிறார்கள்.எனக்கு சரியாக படவில்லை. அவளுக்கு பாதுகாப்பு தான் அவசியம்.அதை யார் கொடுத்தால் என்ன?அவனும் நம் நண்பன் தானே! அனைவரும் அவனையே பார்த்தனர்.

          “எங்கள் வாழ்வை மாற்றிய நண்பியே

              உயிரை தந்தேனும் காப்போம்

                        உம்முயிரை….

                 போற்றிய நம் நட்பு

             மீண்டு நீயாகி இருக்கிறாய்

           துயரை இனிமையாக்குவோம்

         அனைத்தும் எம் நண்பிக்காகவே”