ஹாய்…ப்ரெண்ட்ஸ்….
இதோ உங்களுக்கான எபிசோடு 15
கல்லூரி முடிந்து அனைவரும் வகுப்பறை விட்டு வர, பொண்ணொருத்தி யாசுவிடம் வந்து, ஒரு பெண் உன்னை தேடுகிறாள். அந்த பொண்ணு நம்முடைய கல்லூரி இல்லை.
யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்தாள். நித்தியும் நண்பர்களும் அங்கே வர,அனைவரும் கல்லூரிக்கு முன்னே வந்தனர்.
மேகா அழுதது போல் நின்று கொண்டிருந்தாள்.யாசுவை பார்த்ததும், அவன் இன்று கல்லூரிக்கு வரவேயில்லை. போனையும் எடுக்க மாட்டிகிறான் பதறினாள்.
அர்ச்சுவா? நித்தி கேட்டாள்.
அவள் கண்ணில் நீர் வடிந்தது. விடுமுறை எடுத்திருப்பான் பயப்படாதே! யாசு கூற,
இல்லை. அவன் விடுமுறை எடுத்தால் போனையாவது எடுத்திருப்பான். இன்று நாங்கள் போன் போட்டும் எடுக்கவில்லை. நந்து வெளியே பைக்கில் நின்று கொண்டிருந்தான்.
நிவாஸ், ஸ்ரீ அங்கே வந்தனர். ஸ்ரீயை பார்த்து மேகா முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்களிடம் கேட்டு விட்டு நிவாஸ், கண்டிப்பாக அவருக்கு ஏதும் இருக்காது உறுதியாக கூற,
நீ எப்படி உறுதியாக கூறுகிறாய்? அகில் கேட்டான்.
நாங்கள் தான் நேற்று சந்தித்தோமே!…
அவனுக்கு பக்கென்றது. அகில் ஸ்ரீயை பார்த்தான்.
ஆமாம் ஸ்ரீ, நீ எதற்காக அவன் மீது நேற்று கோபப்பட்டாய்? யாசு ஸ்ரீ அருகே வர, அவள் பயந்து பின் சென்றாள். அகில் வருவதற்குள் கைரவ் அவள் முன் வந்தான்.
அய்யோ இவன் வேற….நிவாஸ் அவனை விலக்கி விட்டு, சீனியர் நாம் முதலில் அர்ச்சு வீட்டிற்கு சென்று பார்ப்பது தான் சரி.
என்ன, அவளை காப்பாற்ற பார்க்கிறாயா? யாசு கேட்க
நேற்று ஏன் கோபப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை என்று ஸ்ரீ அழுதாள்.அனைவரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
ஸ்ரீ நேற்று நினைத்ததை நினைவிற்கு கொண்டு வர, அவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது.
ஏய் நடிக்காதே! யாசு கூற, நிவாசும் அகிலும் வேகமாக அவளருகே வந்து, தலை வலிக்கிறதா? வினவ, அவள் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
மீண்டும் யாசு அவளை திட்ட, சீனியர் அவள் நடிக்கவில்லை. உண்மையாகவே அவளுக்கு பிரச்சனை உள்ளது கூற நித்தியும் வர, கைரவ் காரை எடுத்து வந்தான். நீங்கள் உங்களது நண்பனை பாருங்கள். நான் இவளை பார்த்துக் கொள்கிறேன் நிவாஸ் கோபமாக கூறினான்.
நித்தியும், அகிலும் அமைதியாக இருக்க, காரில் நிவாஸ் மட்டும் ஏறிக் கொண்டான். நான் கூறும் மருத்துவமனைக்கு வேகமாக செல்லுங்கள். அவர்கள் சென்றனர். மற்றவர்கள் அர்ச்சு வீட்டிற்கு சென்றனர்.
அபியிடம் அவனது வீட்டின் பாஸ்வேர்டை ஏற்கனவே கூறி இருப்பான். உள்ளே அனைவரும் சென்றனர். அர்ச்சு போன் ஹாலில் இருக்க, அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
மேகா அவனை எழுப்ப, பயந்து அர்ச்சு வேகமாக எழுந்தான்.
எல்லாரும் இங்கே என்ன செய்கிறீர்கள்?
மேகா அவனை அடித்தாள். ஏன்டா போன் செய்தால் எடுக்க மாட்டாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவள் கத்த,நந்துவும் அவனை பயங்கரமாக திட்டினான்.
விடுப்பு எடுத்தால் எப்பொழுதும் போல் பேச வேண்டியது தானே! நந்து அர்ச்சுவை அடிக்க வர, அர்ச்சு அவனை தடுத்து விட்டு,
எனக்கு உடல் சரியில்லை. தூங்க மாத்திரை போட்டேன். அதனால் போன் சத்தமே கேட்கவில்லை என்று அவன் விளக்கம் தந்தான்.
அகிலும் நண்பர்களும் அவனை முறைக்க, அகிலுக்கு ஸ்ரீ நினைவு எழவே, நான் கிளம்புகிறேன் கூறினான்.
எங்கே ஸ்ரீயை பார்க்க தானே ! யாசு கேட்டாள்.
ஏய் மெண்டல், அவள் முதலில் நன்றாக இருப்பாளா? என்று தெரியவில்லை. அவளுக்கு ஏதோ ஆகி விடுமோ என்று தான் சந்திக்க செல்கிறேன்.
அவள் என்ன சாகவா போகிறாள்? யாசு கேட்க, அர்ச்சு யாசுவை முறைத்தான்.
ஆமாம். அவள் பழைய நினைவு வேண்டும் என்று அவள் அதிகமாக யோசித்தால் அவளது தலையில் உள்ள இரத்த குழாய் வெடித்து செத்து விடுவாள் கண்ணீருடன் கத்தினான் அகில்.
அர்ச்சு அவனது சட்டையை பிடித்து, என்னடா சொல்கிறாய்?
முதலில் அவளை ஸ்ரீயிடம் ஒழுங்காக நடந்து கொள்ள சொல் அகிலும் கத்தினான்.பின் நிவாஸ் கூறிய அனைத்தையும் கூறி விட்டு, அவளது தலைவலி சாதாரணமானது அல்ல.
ஸ்ரீ நம்முடைய சிறு வயது தோழி என்று தெரிந்து விட்டதா?கவின் கேட்க
ஆம், நிவாசிற்கு மட்டும். நேற்று என்ன தான் நடந்தது?அகில் கேட்க, அர்ச்சுவுடன் பேசியதை தவிர அனைத்தையும் கூறினர்.
நீ ஏதும் செய்யாமல் எதற்காக உன் மீது கோபப்பட்டிருப்பாள்?
அதை விடுங்கள். அவளை பார்க்க செல்வோம் அர்ச்சு கூற, நிவாஸ்….நித்தி யோசிக்க, அவனை சமாளித்துக் கொள்ளலாம் அர்ச்சு செல்ல,
மேகா அவனை பிடித்துக் கொண்டு, உனக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது? உரிமையாக பேச, அனைவரும் அர்ச்சுவை அதிர்ந்து தான் பார்த்தனர்.
அர்ச்சு எந்த பெண்ணையும் அருகே விட மாட்டான்.ஆனால் இந்த பெண் கையை பிடிக்கும் அளவிற்கு நெருக்கமோ சிந்தித்தனர்.அதை புரிந்து கொண்டு, அவள் என்னுடைய தோழி நித்தி யாசுவை போல் அவன் கூறியவுடன்,மேகா முகம் சுருங்கியது.
யாசு தன்னால் தான் ஸ்ரீக்கு இப்படி ஆகி விட்டதோ? மனதினுள் வருந்தினாள்.
நந்துவுடன் செல் என்று மேகாவை அவனுடன் அனுப்பி விட்டு, நிவாசிற்கு போன் செய்தனர்.அவன் எடுக்கவே இல்லை.
கைரவ் மருத்துவமனையில் காரை நிறுத்த,நீங்களும் கிளம்புங்கள். உதவிக்கு நன்றி என அவன் கூறி விட்டு ஸ்ரீயை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். கைரவ் போக மனமில்லாது அங்கேயே இருந்தான். உள்ளே மருத்துவர் மயக்கத்திலிருந்த ஸ்ரீக்கு ஊசியை போட்டு தூங்க வைத்தார். இன்னொரு ஊசியை போட்டு விட்டு அவள் எழுந்து விட்டால் இந்த ஊசியால் தலைவலி சரியாகி விடும்.
ஏன் இப்படி கூறுகிறீர்கள்?
நான் உன்னிடம் கூறியது உனக்கு நினைவில்லையா? அவர் கேட்டவுடன் நிவாஸ் அழ ஆரம்பித்தான்.
ஸ்ரீ கொஞ்ச நேரத்தில் கண் விழித்தாள். நிவாஸ் பதறிக் கொண்டு ஸ்ரீயை பார்த்து, உனக்கு இன்னும் தலைவலிக்கிறதா?
அவள் சிறு புன்னகையுடன், இல்லை என்றாள். மருத்துவரிடம் கூறினான் நிவாஸ். அவர் கருவி ஒன்றை பயன்படுத்தி அவளிடம் பேசினார்.
அவர் என்ன கேட்டாலும் ஸ்ரீயிடம் பதில் வரவில்லை. மீண்டும் முயற்சி செய்தார்.
அவள் மெதுவாக பேசினாள். நிவாசும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் இன்று என்னை திட்டி விட்டான். எனக்கு அழுகைல்லாம் வருகிறது. அம்மா, அப்பாவால் கூட நான் அழுததே இல்லை. அவன் என்னை கஷ்டப்படுத்துகிறான். அவனுக்கு ஏன் அது புரியவில்லை?என் காதலை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. அவனுக்கு அவளை தான் பிடித்திருக்கிறது.அவனுக்கு என் மீது அக்கறை இல்லாதது போல் தான் தெரிகிறது. அவனுக்கு அவளை தான் பிடித்திருக்கிறது. என்னை அல்ல. அவனை விட்டு விலகுவது தான் சரியாக இருக்கும் என்று கூறி விட்டு ஸ்ரீ அமைதியானாள்.
யார் அது? மருத்துவர் மேலும் வினவ,அவள் பதில் கூறாமல் தூங்கினாள். அவளை வேறொரு அறைக்கு மாற்றினர்.
நிவாஸ் மருத்துவரிடம் பேசினான்.அவளுக்கு முழுவதும் நினைவில் வரவில்லை. அவளை பாதித்த விசயத்தை மட்டும் கூறுகிறாள். அவளது உடம்பு பலவீனமாக இருந்தாலும் அவளது மனம் தற்பொழுது ஏதோ காரணத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த காரணத்தை கண்டறிந்து அதில் அவள் முழுமையாக ஈடுபட்டால், உடலும் சரியாகும், மனதும் சரியாகும். அந்த நினைவுகள் கூட…..அவளை சரி செய்ய வாய்ப்புள்ளது.
வாரம் ஒருமுறை வந்து விட்டு செல்லுங்கள். ஏதேனும் நினைவு வருகிறதா? என்று பார்ப்போம் .இப்பொழுது எட்டு மணி போல் உணவை கொடுத்து விட்டு கூறுங்கள். ஒரு மருந்தை செலுத்துவோம். அது அவளது உடலை சீராக்கும். தலை வலி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும்.பின் ஒரு மணி நேரத்தில் நீங்கள் கிளம்பலாம்.
தாங்க்யூ அங்கிள் அவன் வெளியே வந்து போனை பார்த்தால் அகில், அர்ச்சு, நித்தி,யாசு,கவின், அபி அனைவரும் போன் செய்திருப்பார்கள். ஸ்ரீயிடம் கூறிவிட்டு வெளியே வந்தால் கைரவ் அவன் முன் வந்தான்.
நீங்கள் செல்லவில்லையா?
அவள் எப்படி இருக்கிறாள்? ம்ம்ம்…சாதாரண தலைவலி தான் கூறி விட்டு, அவளை பாருங்கள் நிவாஸ் கூறவும். கைரவிற்கு ஒரே சந்தோசம். ஸ்ரீயை பார்க்க அவன் சென்றான்.
ஜிதினிற்கு நிவாஸ் போன் போட, அவனது அம்மாவும் பக்கத்தில் இருக்க, இருவரும் நிவாஸ் பேசுவதை கவனித்தனர்.நிவாஸ் அவர்களிடமும், தலைவலியில் ஸ்ரீ மயங்கியதாக கூற, இருவரும் வருகிறோம் என்றவுடன் டென்சன் ஆனான் நிவாஸ். போனை வைத்து விட்டு திரும்பினான்.மற்ற அனைவரும் அங்கே வந்தனர்.
யாசு தான் முதலில் நிவாசிடம் வந்து அவளுக்கு ஒன்றுமில்லை தானே? எங்கே அவள்? ஸ்ரீயை தேட,
யாசுவை வில்லியாக நினைத்தால் இப்படி ஒரு அக்கறையா? யோசித்தான்.
எதற்காக வந்தீர்கள்? ஆன்ட்டி வேற வருகிறார்கள் நிவாஸ் பதட்டமாக,
நீ எதற்காக பதறுகிறாய்? அர்ச்சு அவனிடம் பேசிக் கொண்டு உள்ளே வந்தான்.அர்ச்சுவை பார்த்ததும், உங்களுக்கு ஒன்றுமில்லையே அவன் கேட்க,
எனக்கு என்ன? நன்றாக இருக்கிறேன் அவன் கூற, இருவரும் நன்றாக பேசுவதை பார்த்து அகிலுக்கு பொறாமையாக இருந்தது.
ஸ்ரீ இருக்கும் அறைக்குள் வந்தனர்.கைரவுடன் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தாள். அனைவரையும் பார்த்த கைரவ் ஸ்ரீயிடம் கூறி விட்டு வெளியே சென்று அமர்ந்தான். ஸ்ரீயை பார்த்து, யாசு மன்னிப்பு கேட்டாள்.
நான் எதுவும் நினைக்கவில்லை சீனியர் என்று அகிலையும் அர்ச்சுவையும் பார்த்தாள். அகிலை பார்த்து புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, அர்ச்சுவை பார்த்தாள். அவன் அவளது கண்ணையே பார்க்க,அவள் வேகமாக நான் தனியே பேச வேண்டும் என்று கூற, அர்ச்சு அப்படியே நின்றான். அகில் சீனியர் உங்களிடம் பேச வேண்டும் என்றாள்.
அர்ச்சுவிற்கு கஷ்டமாக இருந்தது. வெளியே வந்தான். அனைவரும் அவனை பார்த்தனர். நித்தி அவனை அழைக்க, நான் தனியே இருக்க வேண்டும் கண்கலங்கியவன், மருத்துவமனை விட்டு வெளியே வந்து, ஏன் என்னிடம் மட்டும் ஏதும் பேச மாட்டேன் என்கிறாய்? நான் என்ன செய்தேன்? அவனுள் புலம்பிக் கொண்டிருந்தான்.கைரவ் அருகே தான் இருந்தான். நீ தான் அர்ச்சுவா?
அர்ச்சு அவனை பார்த்து விட்டு அகல,நானும் அவளை காதலிக்கிறேன் என்று கைரவ் கூற,அவன் அலட்டிக் கொள்ளாமல் அருகே அமர்ந்தான். வேறேதுவும் கூற வேண்டுமா?
அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கூறு?கைரவ் கேட்க,
அர்ச்சு கண்கலங்க, அவளுக்கு ஒருவனை பிடிக்கும். இப்பொழுது கூட அவனை தான் கூற…அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வர, அதை துடைத்து விட்டு சாரி என்று எழுந்து சென்றான்.
யாருடா இவன்? கைரவ் யோசித்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அகில் வெளியே வந்தான். அர்ச்சுவும் உள்ளே நுழைந்தான். அகில் அவனருகே வந்து, போ….நீ பேசு…கூறினான்.
நானா? அர்ச்சு கேட்டான்.
அகில் ஓரிடத்தில் அமர, அபி அவனருகே வந்து, ஸ்ரீ என்ன பேசினாள்? ஆர்வமாக கேட்டான்.சும்மா தான்டா என்று வருத்தமடைந்தான்.