அத்தியாயம் 9
நித்தி ஸ்ரீயுடன் அறையினுள் யாசுவை நினைத்து அழுது கொண்டிருக்க,
சீனியர், நீங்கள் அமைதியாக இருங்கள் என கூறி கொண்டிருந்தாள். சைலேஷ் உள்ளே செல்ல கவின் அவனை உள்ளே விடாமல் மறைத்துக் கொண்டிருந்தான்.
அகில் கவினை பிடித்து, அவர் பேசி விட்டு தான் வரட்டும். நித்தி என்ன நினைக்கிறாள்? என்று அவரும் தெரிந்து கொள்ளட்டும் கூறினான். கவின் வருத்தமாக ஓரிடத்தில் அமர்ந்தான்.
சைலேஷ் உள்ளே சென்றவுடன், ஸ்ரீ வெளியே செல்ல எழ, நீ இரு ஸ்ரீ….நீங்கள் எதற்கு உள்ளே வந்தீர்கள்?
நான் உன்னிடம் பேச வேண்டும் என்று ஸ்ரீயை பார்த்தான்.
நீங்கள் பேசுங்கள். நான் வெளியே இருக்கிறேன் என்று அவள் வெளியேற,
போகாதே ஸ்ரீ….ஸ்ரீ….கத்தினாள் நித்தி.
அவன் கண்ணெடுக்காமல் அவளையே பார்க்க,அனைவர் முன்னும் தைரியமாக இருந்த நித்தி மனதில் பதட்டத்துடன் அவனை பார்த்து,
எதற்கு அப்படி பார்க்கிறீர்கள்?
அன்று குட்டி பொண்ணாக இருந்தாயே! சொல்ல,
யாரு…நானா குட்டி பொண்ணா? இல்லையே!
அவன் சிறு புன்னகையுடன் அவளை பார்க்க, நித்தி அவனிடம் பேசி விடாதே! மனதுள்ளே நினைத்துக் கொண்டு,
உங்களுக்கு என்ன வேண்டும்? நான் தான் நீங்கள் பேசியதை கேட்டேன் என்றேனே! இனி நீங்கள் என்னிடம் பேச ஏதும் இல்லை.கிளம்புங்கள் சார் என்றாள்.
அவன் அவளது கையை பிடிக்க, அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பயத்தில் கண்கள் படபடக்க, இருதயம் வேகமாக துடித்தது அவளுக்கு.
அவன் புரிந்து கொண்டு,…நீ என்னிடம் பேச காத்திருப்பேன்.எனக்கும் அவளுக்கும் அந்த ஒரு வாரத்திலே எல்லாமே முடிந்தது.
எனக்கு அவள் மீது இப்பொழுது எந்த உணர்வுகளும் இல்லை.என்னை மன்னித்து விடு…தெரியாமல் பேசி விட்டேன் கண் கலங்கினான். அவளுக்கு அவன் கண்ணில் நீர் தேங்கி இருப்பதை பார்த்ததும் மனம் கரைந்து விட்டது. வெளிக்காட்டாமல் அவள் இருந்தாள்.
எல்லாம் சரியாகி விடும். மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே! உன் தோழி உன் தோழனிடம் நன்றாக தான் பேசி சென்றிருக்கிறாள். உடம்பை பார்த்துக் கொள் என்று கூறி விட்டு அவன் எழ, நன்றி என்றாள்.
அவன் சிரித்துக் கொண்டே அவனது போன் நம்பரை கொடுத்து விட்டு, பேச நினைத்தால் போன் போடு என்று கூறி விட்டு புன்னகையுடன் வெளியே வந்தான்.
அவனை பார்த்தவுடன், என்னங்க சார், பேசினாளா? என்று அவர்கள் கேட்க, அவன் சிரித்துக் கொண்டே அவளை பார்த்துக் கொள்ளுங்கள் சொல்லி விட்டு கிளம்பினான்.
கவின் வேகமாக உள்ளே சென்று பார்த்தான். அவள் அவளது கையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்து கவின் முகம் சுருங்கியது.
வெளியே வந்த ஸ்ரீ நிவாஸ் அருகே உட்கார்ந்தாள்.பக்கத்தில் அர்ச்சு இருந்தான்.ஏதாவது சாப்பிட வைத்திருக்கிறாயா? ஸ்ரீ கேட்க, நிவாஸ் அவளை முறைத்தான். அவள் பாவம் போல் முகத்தை வைத்திருக்க, அர்ச்சு அவனிடமிருந்த ஒரு பெரிய சாக்லெட்டை நீட்டினான். அவள் யோசித்துக் கொண்டே நிவாஸை பார்க்க,
வேண்டாம் என்றான். அர்ச்சு ஸ்ரீ கையில் திணித்து விட்டு, நிவாசிடம் நானும் இவர்களுள் ஒருவன் தான் வாங்கினால் தவறில்லை என்றான்.
அதற்காக கூறவில்லை. அவள் சாக்லெட் சாப்பிட்டால் தன்னிலை மறந்து சாப்பிடுவாள் கூற,
அதனால் என்ன? சாப்பிடட்டும். இத்தனை பேர் இருக்கிறோம்.உங்களை பார்த்துக் கொள்ள மாட்டோமா?
நிவாஸ் புன்னகையுடன் அர்ச்சுவை பார்த்தான். ஸ்ரீ வாங்கியவுடனே பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். சில மணி நேரத்தில் நிவாஸ் போனை எடுக்க, அது அணைந்து விட்டது.
அர்ச்சுவிடம் மணி என்ன ஆயிற்று? கேட்க,ஆறாக போகிறது என்றான்.
அதற்குள் ஆறா? பதட்டமாக சாக்லெட்டை ஸ்ரீ கீழே போட, அர்ச்சு அதை பிடித்து அவளிடம் கொடுக்க,
வா கிளம்பலாம் என்று இருவரும் வேகமாக நித்தியிடம் சொல்லி விட்டு கிளம்ப, அர்ச்சு மறுபடியும் அழைத்து ஸ்ரீயிடம் கொடுக்க, நீயே வைத்துக் கொள் என்று ஓடினாள்.
அர்ச்சு அருகே அகில் வந்து, நீ முயற்சி செய்தாலும் தோற்று தான் போவாய்…என்று ஏளனமாக அர்ச்சுவை பார்த்தான்.அவன் கோபத்தோடு அவனை முறைக்க,சும்மா இரு அகில் என்று அபினவ் கூற, அர்ச்சு அங்கிருந்து வெளியே சென்றான்.
ஸ்ரீயும், நிவாசும் வேகமாக செல்ல, சைலேஷ் உள்ளே நுழைந்தான்.
அவர்களிடம் வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன் சைலேஷ் கூற,ஸ்ரீ யோசித்தாள். சிந்திக்கும் நேரமா இது? நிவாஸ் அவளை உள்ளே தள்ளி,அவனும் ஏறினான்.நித்தி அறையிலிருந்து அகிலும், கீழிருந்து அர்ச்சுவும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சைலேஷ் அவர்களிடம், இடத்தை கேட்டு தெரிந்து கொண்டு காரை ஓட்டினான். ஆமாம், நித்தி உங்களிடம் கேட்டதற்கு ஒத்துக் கொண்டீர்களா? சைலேஷ் கேட்க,
என்ன? நிவாஸ் கேட்டான்.
அவர்களுடைய நட்பில் கலந்து கொள்ள…
அதுவா….? இழுத்தான் நிவாஸ்
ஒத்துக் கொண்டேன் என்றாள் ஸ்ரீ. நிவாஸ் அவளை முறைக்க
சார், உங்களுக்கு குக்கூவை பற்றி ஏதாவது தெரியுமா? ஸ்ரீ கேட்க
நிவாசும் சொல்லுங்கள்.உங்களுக்கு தெரியும் தானே!
இல்லை. எனக்கு எப்படி தெரியும்? நித்திக்கு என் மீதுள்ள காதலே இப்பொழுது தான் தெரியும்.
உங்களுக்கு அவர்களை பிடித்திருக்கிறதா?
ம்ம்ம்…எனக்கும் பிடித்து விட்டது. அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பொறுத்திருந்து பேசிக் கொள்ளலாம் என்று தான் விட்டு விட்டேன்.
இங்கேயே நிறுத்துங்கள் ஸ்ரீ அவனை நிறுத்தினாள்.
நான் உங்கள் வீட்டிற்கு வரக்கூடாதா?
அதெல்லாம் ஒன்றுமில்லை. அவனுக்கு நான் யாரிடமும் பேசினால் பிடிக்காது. ரொம்ப பொறாமைப்படுவான் ஸ்ரீ நடிக்க, நிவாஸ் அவளை மெச்சியவாறு பார்த்துக் கொண்டே கீழிறங்கினாள்.
இருவரும் சைலேஷிற்கு நன்றி கூற, அவன் அங்கிருந்து சென்றான். அவர்களும் நடக்க ஆரம்பித்தனர்.
மருத்துவமனையில் அர்ச்சு, ஸ்ரீ கொடுத்த மீதி சாக்லெட்டை ஒரு மெலிதான குச்சியை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.
ஸ்ரீயும் ,நிவாசும் வீட்டினுள் நுழைய அவளுடைய அத்தை கயல்விழியும், ஜிதினும் பேசிக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்தவுடன்,..
நில்லுங்கள்…..என்றான் ஜிதின்.
இருவரும் அவனை பார்க்க,இங்கே வாருங்கள். ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுற்றி விட்டு வருகிறீர்கள்? அவன் வினவினான்.ஸ்ரீ நடந்ததை கூறினாள்.
அவர்களுக்கும் உனக்கும் என்ன உள்ளது? அவன் சத்தமிட…
அவள் பயந்து கொண்டே, என்னுடைய நண்பர்கள்…என்றாள்.
என்ன? புதிதாக நண்பர்கள் எல்லாம்…. கயல்விழி கேட்க…
நன்றாக பேசினார்கள்….ஸ்ரீ கூற, நிவாஸ் அவர்களை பார்த்து முறைத்த வண்ணம் நின்றான்.
கயல்விழி தன் கையிலிருந்த போட்டோக்களை ஜிதினிடம் கொடுக்க, அதை பார்த்து அவன் தூக்கி எறிந்து விட்டு, என்ன இது?..அவனுடன் உனக்கென்ன வேலை? ஜிதின் கத்தினான்.
அவள் பயத்துடன் அவனை பார்த்து பதில் கூறாமல் இருந்தாள். அவளை இழுத்து கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான் ஜிதின். வெளியே நிவாஸ் கோபமாக கதவை படபடவென தட்டிக் கொண்டு “அவளை விடு” என்று பதறினான். கயல்விழி அதை ரசித்தவாறு இருந்தாள்.
ஜிதின் அவளை கட்டிலில் தள்ளி, அகிலை கட்டிக் கொண்டிருந்தாயே! வா என்னுடனும் என்று அவனது சட்டையை கழற்றிக் கொண்டு…நான் உன்னை அதிகமாகவே காதலிக்கிறேன். நாமும் கட்டிக் கொள்ளலாம் என்று அவளை
இறுக்கி அணைக்க, அவனை தள்ளி விட்டு, அவளது பையின் முன் பக்கத்தை திறந்து….சிறிய கத்தியை எடுத்து ஸ்ரீ அவனிடம்,…
என் அருகே வராதே! கத்தியை காட்ட, அவன் பயப்படாமல் மீண்டும் அவளருகே வந்தான். அவள் கத்தி கீழே விழுந்து கூரான முனை திரும்பி இருக்க, ஸ்ரீ யோசிக்காது காலை அதன் மீது வைத்து விட்டு ஆ….ஆ….ஆவென்று கத்தினாள்.
இரத்ததை பார்த்தவுடன் ஜிதின் பதறி, உனக்கு ஒன்றுமில்லை……… ஒன்றுமில்லை….. என்று உள்ளிருந்து முதலுதவி பெட்டியை எடுத்து மருந்து போட்டு கட்டி விட்டு, மருத்துவரை வர சொல்லி, கதவை திறக்க நிவாஸ் உள்ளே வந்தவுடன் ஜிதினை நன்றாக அடித்து விட்டு ஸ்ரீ அருகே வந்து நானே அவளை பார்த்துக் கொள்கிறேன் என்று நிவாஸ் அவனை வெளியே விரட்ட, ஸ்ரீ படுத்த படியே மயங்கினாள். கட்டையும் தாண்டி இரத்தம் வந்தது.
மருத்துவர் வந்து கயல்விழியை முறைத்து விட்டு, இரத்தம் வெளியேறியதனால் தான் மயக்கம். வேறொன்றும் இல்லை என்று சரியான முறையில் சிகிச்சை முடித்து நிவாசிடம் பேசி விட்டு, கயல்விழியிடம் வந்து, அனைத்திற்கும் நீ மொத்தமாக அனுபவிப்பாய் என்று கூறி விட்டு சென்றார்.அவன் ஸ்ரீ அருகே சென்று அவளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது கையில் ஏதோ இருப்பதை பார்த்து, கையை பிரித்து பார்த்தால் அகிலும் ஸ்ரீயும் இருப்பது போல் ஒரு போட்டோவை வைத்திருந்தாள். இவளுக்கு உண்மையாகவே அகிலை பிடித்திருக்கிறதா?இது நல்லதல்லவே சிந்தித்தபடி இருந்தான்.
சிறிது நேரத்தில் ஸ்ரீ கண் விழித்து அருகே நிவாசை பார்த்தவுடன் அழ ஆரம்பித்தாள்.என்னால் முடியவில்லைடா….செத்து விடலாம் போல் உள்ளது என்று அவள் மேலும் அழ, வெளியே இருந்து அதை ஜிதின் கேட்டு வருத்தமடைந்து, என்னை மன்னித்து விடு என்று மனதினுள் கேட்டுக் கொண்டான்.
உன் அருகே இருந்தும் உதவிக்கு வர முடியவில்லை.உனக்கு வலிக்கிறதா? நிவாஸ் வருந்தினான். ஸ்ரீ மனதினுள், இந்த வலியை விட ஜிதின் என் அருகே வரும் போது நெருப்பே என்னை எறிப்பதை போல் உணர்கிறேன். அவள் ஏதும் பேசாமல் அழுதாள்.
இது என்ன? போட்டோவை காண்பிக்க, அவள் வருத்தமடைந்தாள். உனக்கு அகில் சீனியரை பிடித்திருக்கிறதா?
ஆம் என்று தலையசைத்தாள் நிவாசை பார்த்து கலங்கியவாறு.
நடக்காது என்று தெரிந்தும் ஏன் வீணாக ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாய்? தெரியும் தானே உனக்கு! அவருக்கு அவருடைய சிறு வயது தோழியை பிடிக்கும் என்று….
தெரியும்…என்றாள். பின் உன்னிடம் சில விசயங்களை மறைத்து விட்டேன். அவரையும், அவருடைய நண்பர்களையும் பார்த்தவுடனே ஏதோ நிழலுருவம் தெரிகிறது.ஆனால் என்னவென்று தெளிவாக தெரியவில்லை. எனக்கு ஒரு உதவி செய்வாயா?
நான் ஒரு முறை பழைய நினைவுகளை கொண்டு வர மன நல மருத்துவரை அணுகினோமே! அவரிடம் அழைத்து செல்வாயா?
கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்.முதலில் ஓய்வெடு என்று கூறி விட்டு முகம் கழுவி விட்டு அவளருகே வந்து அமர்ந்தான்.