Hi friends காதலா? சாபமா? கதையைப் படித்தவர்களுக்கு தெரியும் காதலா? சாபமா? எவ்வளவு twist நிறைந்த கதை என்று. அமெரிக்காவில் தொலைந்து போன பூபதி பாண்டியனை 10 அத்தியாயங்களுக்குள் தேடி கண்டுபிடித்து விடலாம் என்று பார்த்தேன். இல்லை 20, 25 அத்தியாயங்களுக்கு நீண்ட நாவலாக வேண்டுமென்று கேட்டு விட்டீர்கள்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. வெற்றிமாறனை womanizerராக காட்ட வேண்டிய நிலை. வெற்றிமாறன் fans மன்னித்துக் கொள்ளுங்கள்.

“உங்க பேர் என்ன சொன்னீங்க?”

“அலர்விழி மங்கை”

“யார் மேல கேஸ் ஃபைல் பண்ணனும்னு சொன்னீங்க? கார்த்திகேயன் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் கேட்டான்.

“டி.எஸ்.பி மணிமாறன் மேல. {வெற்றிமாறன்} என்ன காதலிச்சு கைவிட்டுட்டு வேறொரு பொண்ணு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறார்”  கண்களில் சோகத்தை தேக்கியவாறு கூறினாள் அவள்.

கார்த்திகேயன் அறிந்த வரையில் மணிமாறன் நேர்மையானவன். குற்றம் புரிவோரை நீதியால் தண்டிக்க முடியாவிட்டால், அவனது பாணியில் தண்டனை கொடுப்பவன் நிச்சயமாக அவன் இவ்வாறான ஒரு தவறை செய்திருக்க வாய்ப்பே இல்லை. அவன் மேல் பழி சொல்ல இந்தப் பெண் கிளம்பி வந்து விட்டதாகவே எண்ணி அவளை நன்றாக ஆராய்ந்தான்.

சுடிதார் தான் அணிந்திருந்தாள். வயது முப்பதுக்குள் இருக்கும். கண்கள் இரண்டும் கருவளையம் சூழ்ந்து, முகமும் பொலிவிழந்து. அழுது அழுது மூக்கின் நுனியும் சிவந்து தான் இருந்தது. அவள் நடிப்பது போலும் தெரியவில்லை. நடிப்பதாக இருந்தால் கை தேர்ந்த நடிகையாக தான் இருக்க முடியும்.

மணிமாறன் அவன் நண்பன். அவன் பக்கம் நியாயத்தை கேளாமல் இந்த வழக்கை அவனால் எடுக்கவே முடியாது. அதனால் அவன் மணிமாறனை அழைத்துப் பேசலாம் என்று உள்ளறைக்குள் நுழைய அவன் பின்னால் வந்திருந்தாள் கயல்விழி.

“என்ன பிரண்டுக்கு சப்போர்ட் பண்ணி பேச போறியா? நீ பிரெண்டுக்கு சப்போர்ட் பண்ணா நான் இந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுவேன்” என்றாள் அவள்.

“ஏய் இருடி முதல்ல அவன் கிட்ட பேசலாம். அவன் என்ன சொல்றான்னு கேட்கலாம்” என்ற கார்த்திகேயன் மணிமாறனை அழைத்து முடிந்த அளவு அவசரமாக வருமாறு விஷயத்தை கூறினான்.

தன் மீது ஒருத்தி பழி சொல்கிறாளே தன்னுடைய ரங்கலேர் ஜீப்பில் பறந்து வந்திருந்தான் மணிமாறன்.

வண்டியை இயக்கியது என்னவோ வெற்றிமாறன் தான். ஓட்டி வந்ததும் வெற்றிமாறன் தான். ஆனால் அலர்விழி மங்கை என்ற பெயர் மட்டும் அவனுக்குள் ஏதோ ஒரு மாயம் செய்தது. மனம் தடுமாறியது. “மணி” என்று கிறக்கமாக அவனை அவளது குரல் அழைத்தது போல் மயங்கியது. அவளைப் பார்த்த உடன் “மங்கா” என்று ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டு முத்த மழை பொழியலானான்.

“ஏண்டி இப்படி இளைத்து போய் இருக்க? சும்மா கும்முன்னு கொழு கொழுன்னு இருப்பியே, என்ன ஆச்சு உனக்கு” அங்கே நின்றிருந்த கார்த்திகேயனையும் பொருட்படுத்தாது, கயல்விழியையும் கண்டு கொள்ளாது அவளை இறுக்கிக் கொண்டவன் அவள் வயிற்றில் கை வைத்து அழுத்தினான்.

விக்கித்து நின்றாள் அலர்விழி. அவள் மேல் கோபம் கொண்டு அவன் வேறொருத்தி மணந்தான் என்று அவள் எண்ணியிருக்க, அவள் காதலனும் அவளை மறக்காமல், அவர்களுக்குள் நடந்த எதையுமே மறக்காமல், அவளை பார்த்த நொடி அவள் பிரிந்த சென்ற வேதனையை அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான்.

இவன் திருமணம் செய்த அந்தப் பெண் யார்? இவன் அவளை திருமணம் செய்தது உண்மைதானே. தான் விசாரித்ததும் உண்மைதானே என்று அலர்விழியின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இப்ப என்ன சொல்லுற என்னும் விதமாக கயல்விழி கார்த்திகேயனை முறைத்துக் கொண்டு இருக்க, வெற்றிமாறனின் அலைபேசி அடித்தது. அழைத்தது ஷாலினி.

அவன் மனைவியின் அழைப்பை பார்த்ததும் உடல் இறுகி நின்றவன் அலர்விழியை தன்னிடம் இருந்து பிரித்து “யார் நீ?” என்று கடுமையாக கேட்டவாறே தள்ளி விட்டான்.

அவன் தள்ளிவிட்ட வேகத்தில் தடுமாறி விழப்போனவளை ஓடிவந்து தாங்கிப் பிடித்திருந்தாள் கயல்விழி. அவள் கார்த்திகேயனை முறைக்கவும் தவறவில்லை.

மலர்விழி மணிமாறனை வேண்டாம் என்று விட்டுச் சென்றதால் தான் அவன் கடுமை காட்டுகிறான் என்று எண்ணி “மணி எனக்கு எதுவும் வேண்டாம் மணி. ப்ளீஸ் நுவலிய காப்பாத்து நுவலிய காப்பாத்து” என்று கை கூப்பியவாறே கெஞ்சினாள்.

“நுவலி… யார்” என்பது போல் யோசித்தவன் நான் மணிமாறன் இல்ல வெற்றிமாறன் என்றான்.

வெற்றிமாறனுக்கும் மணிமாறனுக்கும் நடந்த விபத்துதில் மணிமாறன் இறந்து அவனுடைய மூளையின் ஒரு பகுதி வெற்றிமாறனுக்கு பூபதி பாண்டியன் பொருத்தினார் என்பது ஒரு சிலருக்கு தான் தெரியும். உலகத்திற்காக மணிமாறனாக வாழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் நண்பனான கார்த்திகேயனிடம் இதைப்பற்றி கூறியிருக்கவில்லை.

இந்தப் பெண் நடிப்பதாக எண்ணினால் தனது நண்பனே நடிக்கிறானே என்று கார்த்திகேயன் அவனை முறைக்க, கயல்விழி கணவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அலர்விழி மங்கை தன் இரட்டையான மணிமாறனின் காதலி என்று புரிந்து கொண்டவன் அவளிடம் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க, வெற்றிமாறன் என்று சொல்லிவிட்டான். ஆனால் அவன் வந்தவுடன் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டதெல்லாம் அவனை ஆட்கொண்டிருக்கும் மணிமாறனின் மூளை பகுதி அல்லவா. அதை அவளிடம் அவன் எவ்வாறு விளக்கப் போகிறான்? அவன் சொல்வதை கார்த்திகேயனும் கயல்விழியும் நம்புவார்களா என்று தெரியவில்லை. இதில் அலர்விழி மங்கை அவனை நம்புவாளா?

அலர்விழியின் கண்களில் கசிந்துருகும் காதலை பார்த்து மணிமாறன் உயிர்த்தெழுந்து அவளை காதல் செய்வான். வெற்றிமாறன் மணிமாறனாக மாறும் பொழுதெல்லாம் ஷாலினி எவ்வாறு துடிப்பாளோ? இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு வெற்றிமாறனின் நிலை என்னவாகுமோ? காதலா? சாபமா? Part 2 இல் சந்திக்கலாம்

இந்தக் கதையை எழுத இன்னும் நிறைய யோசிக்க வேண்டி இருக்கு. ஒழுங்கான lead கிடைக்கவில்லை என்றால் வேறொரு கதையோடு வருவேன்.

Tc

bye