அத்தியாயம் 3

ஏன்டா, என்ன தான் பிரச்சனை? அர்ச்சு கேட்க, கவின் நடந்தவற்றை கூறினான்.

இதில் பிரச்சனை ஏதும் தெரியவில்லையே? அபி கேட்டான்.

இருக்கிறது. நிவாஸ் கூறினானே! என்னை தவிர ஸ்ரீக்கு யாருமில்லை என்றது தான் அதிகம் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக பாதுகாவலர் என்று யாராவது இருப்பார்கள்.எனக்கு சந்தேகமாக தான் உள்ளது. அவளும் முற்றிலும் மாறுபட்டு தெரிகிறாள். எனக்கு அவளது கண்கள் அவளது வாழ்வில் ஏதோ பிரச்சனை இருப்பதை தெளிவாக உணர்த்தியது அகில் கூறினான்.

முதலில் ஸ்ரீயின் உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றான் அர்ச்சு.

நம்முடைய கல்லூரி பிரசிடன்டுக்கு நம் யாசு மீது விருப்பமுள்ளது. அவளை வைத்து இதை அறிந்து கொள்ளலாம் தானே! அகில் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறினான்.

அவளிடம் நீயே கேட்டு பார் என்று அபினவ் அகிலிடம் சொல்ல, அவன் தயங்கிக் கொண்டே சரி என்றான்.

போன் செய்து ஸ்ரீயின் தற்பொழுதைய விவரங்கள் பிரசிடன்ட் மூலமாக அறிந்து கூறுகிறாயா? அகில் கேட்டவுடன் யாசு சரி என்றாள். அகிலிற்கு அப்பாடா… என்றிருந்தது.

மதிய வேளையின் போது பிரசிடன்ட்டை தேடி, அவனை தற்செயலாக சந்திப்பது போல பேச ஆரம்பித்தாள்.

அவன் அவளை பார்த்தவுடன், யாசு எப்படி இருக்கிறாய்? உன்னை பார்க்கவே முடியவில்லை?

என்னால் முடியவில்லை. விடுதியில் ஒரே சாப்பாட்டையே போட்டுக் கொல்கிறார்கள். என் நாக்கு செத்து போச்சு…அவள் வருத்தத்துடன் கூறினாள்.

அதற்காகவா வருந்துகிறாய்? உனக்கு என்ன வேண்டுமோ சாப்பிட்டுக் கொள். அவன் கூறிய மறு நொடியே நிறைய சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் கண்ணை விரித்தபடியே, இவ்வளவு பசிக்கிறதா உனக்கு?

அய்யோ கண்ணு வைக்காதே! என்னால் சாப்பிட முடியாமல் போய் விடும்.எனக்கு நீ இன்னொரு உதவியும் செய்கிறாயா?

என்ன உதவியா? இன்னும் பசிக்கிறதா? சாப்பாடு வர வைக்க வேண்டுமா? பயந்த படி கேட்க,அவள் சிரித்து விட்டு, எனக்கு இதுவே போதும் என்றாள். தப்பித்தோம் சாமி…… என்று மனதினுள் அவன் நினைத்தான்.

வேறென்ன உதவி வேண்டும்? அவன் கேட்க, அது வந்து….தயங்குவது போல் பாவனை செய்ய,நமக்குள் என்ன தயக்கம்? உனக்காக எதையும் செய்வேன் என்றான்.

அந்த பொண்ணு ஸ்ரீயை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. முதல் நாளே பிரபலமாகி விட்டாளே!அதனால் தான் தெரிந்து கொள்ள கேட்டேன் என்றாள்.

அவனும் சரி என்றான். பின் மாலையில் ஆய்வகம் பக்கம் வந்து விடு. நான் சேகரித்து விட்டு கூறுகிறேன் என்றான்.உடனே போனை எடுத்து அகிலிற்கு செய்தியை அனுப்பி விட்டு சாப்பிட, அவன் அவளேயே ரசித்துக் கொண்டிருந்தான்.

சாயங்காலம் அவன் கூறிய இடத்திற்கு வந்து யாசுவிற்காக காத்திருக்க, அவள் வேகமாக ஓடி வந்தாள்.

ஏன் இப்படி ஓடி வருகிறாய்?

அய்யோ! என்னுடைய மேக் அப் முழுவதும் போய் விட்டதா? என்று ஒரு குட்டி கண்ணாடியை எடுத்து பார்த்து சரி செய்து விட்டு, அந்த அரக்கியால் தான் நேரமாகி விட்டது என்று அவளுடைய மேடமை திட்டினாள்.

அவர்கள் என்ன செய்தார்கள்?அவன் கேட்க,அதை விடு… என்ன! அவளை பற்றி கிடைத்ததா? என்று யாசு கேட்க, போனை காண்பித்தான்.

போனில் நீ அனுப்பி இருக்கலாம். நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்க தேவையில்லை என்று யாசு பட்டென கூற, அவன் முகம் வாட,அவள் அவனை கண்டு கொள்ளலாமல் வந்த வேலையை முடித்து விட்டு, நன்றி கூட சொல்லாமல் ஓடி விட்டாள்.

எனக்கு முன்பே தெரியும் காரணத்திற்காக மட்டும் தான் அழைத்தாய் என்று…… இருந்தும் உன்னை பார்க்கும் ஆசை தான் மனதில் நினைத்தவாறு வருத்தத்துடன் சென்றான் அவன்.

நித்தியையும், யாசுவையும் அர்ச்சுவின் வீட்டிற்கு அழைத்து சென்றான் அகில். அவர்கள் அவனை பார்த்தவுடன் அவனது கையில் ஓங்கி குத்து விட்டனர் இருவரும்.

அய்யோ! என்று கத்தினான் அர்ச்சு.

எப்படி இருக்கிறாய்? ஏன்டா, அனைவரது நம்பரையும் அழித்து விட்டாய். உன்னுடைய நம்பரையும் மாற்றி விட்டாய் நித்தி கேட்க, அர்ச்சு அமைதியாகவே இருந்தான். அவள் எனக்கு புரிகிறது என்று பேச ஆரம்பிக்க, யாசு என்ன கிடைத்ததா? கேட்டு அர்ச்சு பேச்சை மாற்றினான்.

யாசுவின் கையில் இருந்த போனை வாங்கி அகில் பார்க்க,அனைவரும் அவனை சூழ்ந்து போனை பார்த்தனர்.ஸ்ரீ அம்மா, அப்பா இறந்த பின் அவளது அத்தை கயல்விழி தான் பொறுப்பேற்றுள்ளார்.

கயல்விழியா? கேள்விப்படாத பெயராக உள்ளதே! அபினவ் கூற,

இந்த பெயரை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன் அகில் கூறினான்.

உனக்கு தெரியுமா? யாசு கேட்க,

அமைதியாக இருங்கள் நண்பர்களிடம் கூறி விட்டு யோசித்தான் அகில்.

போனை கையில் எடுத்து, அம்மா…. கயல்விழி என்று யாரையாவது தெரியுமா? என்று கேட்டான்.

கயல்விழியா?….அதிர்ச்சி கலந்த பயத்துடன் பேசாமல் இருந்தார்.

நீங்களும் அப்பாவும் இந்த பெயரை கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்றான் அவனது அம்மாவிடம்.

அவளை பார்த்தாயா? அவளுக்கு உன்னை அடையாளம் தெரிந்ததா? பதட்டத்துடன் பேச,…..

அம்மா…அதெல்லாம் ஒன்றுமில்லை.திடீரென்று நினைவு வந்தது. அதனால் தான் கேட்டேன். வேறொன்றும் இல்லை என்று அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு போனை வைத்தான் அகில்.

ஏதோ தவறாக உள்ளது போல் தெரிகிறது? அம்மா அந்த பெயரை கேட்டவுடன் பயப்படுகிறார்கள்,பதட்டமாகிறார்கள். அவர்களிடம் ஏதும் கேட்க முடியாது. நாமே கண்டறிய வேண்டும்.

அது எப்படி முடியும்? ஸ்ரீ நம்மை பார்த்தாலே பேச மாட்டிகிறாள் கவின் கேட்க

நிவாஸ்…. இருவரும் ஒரே வீட்டில் தானே இருக்கிறார்கள். அவனுக்கு கண்டிப்பாக தெரியும். அவனை முதலில் நண்பனாக்கி தெரிந்து கொள்ள வேண்டியது தான். ஸ்ரீயையும் நம்முடன் நெருக்கமாக ஆக்க வேண்டும்.அவள் நம்மிடம் எல்லாவற்றையும் கூறும் படி செய்ய வேண்டும் என்று அகில் கூறினான்.

இல்லை. அவ்வாறு செய்து அவளுக்கு உண்மை தெரிந்தால் அனைத்தும் கெட்டு விடும் அர்ச்சு கூறினான். ஆனால் அகிலோ கேட்கவே இல்லை.

சரி,….நீங்கள் உங்கள் வழியில் முயற்சி செய்யுங்கள். நான் என் வழியில் செல்கிறேன் அர்ச்சு கூற, நித்தியும் யாசுவும் என்ன செய்வது? யோசித்தனர்.

அபினவ் அகிலிடம், அர்ச்சு கூறுவது சரி தான். அவளுக்கு தெரிந்தால் தவறாக எண்ணிக் கொள்வாள் கூற, நீயும் அவன் பக்கம் என்றால் செல்…..அகில் கோபமாக கூறினான்.

நாங்கள் யார் பக்கமும் இல்லை. நான் பழைய படி அவளுடைய தோழியாகவே விரும்புகிறேன் என்று ஓரிடத்தில் நித்தி அமர, மற்றவர்களும் அவள் பக்கம் சென்றனர். நானும் அது தான் சரி என்று நினைக்கிறேன் அர்ச்சுவும் நித்தி அருகே வந்தான்.அனைவரும் அகிலை பார்த்தனர்.

சரி சரி.அவளை பற்றி நாமே கண்டறிவோம். நிவாஸை பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டான். பின் நம் குக்கூ நம்முடன் படிக்கும் போதே என்னுடைய அம்மா, அப்பா இந்த கயல்விழி என்றவர் ஏதோ பிரச்சனை செய்வதாக பேசிக் கொண்டிருந்தனர்.அன்று நடந்த பிரச்சனையில் அவளை சென்னை அழைத்து வர ஸ்ரீ அம்மாவிற்கு விருப்பமில்லை. அவளது அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதுவரை அவர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வளவு காதலித்தனர்.

எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். அவளது வீட்டிற்கு மட்டும் வேண்டாம் என்று ஸ்ரீயை அந்த நிலையில் வைத்துக் கொண்டு கூறினார்கள்.இதை வைத்து பார்க்கும் போது அந்த கயல்விழி நல்லவராக தெரியவில்லை என்று தோன்றுகிறது என்று அகில் கூறினான்.

அவன் கூறியதை பற்றி அனைவரும் சிந்தித்தபடி இருந்தனர்.ஒரு வேளை அவளது அத்தைக்கு பயந்து கூட அவள் நம்மை யாரென்று தெரியாது என்கிறாலோ அபி கேட்க…

இருக்கலாம் என்று யோசித்தபடி அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, அர்ச்சு மட்டும் ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினான்.

யாசு அவனை பார்த்து, அர்ச்சு….அர்ச்சு….அர்ச்சு…..அழைத்துக் கொண்டிருக்க,அவனோ கவனிக்காமல் இருக்க,அனைவரது கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

அபினவ் அவனை உலுக்க, அவன் நிலைக்கு வந்தவனாய்….இருக்கலாம். ஆனால் அவளது குணம் மொத்தமும் தலைகீழாக மாறி இருக்கிறாள் என்கிறீர்கள். அது தான் நம்ப முடியவில்லை.

ஏன்டா? நித்தி கேட்க,

அவளுக்கு அன்று நடந்ததில் அனைத்தையும் மறந்திருக்கலாம் இல்லையென்றால் நீங்கள் கூறியது போல நடிக்க கூட செய்யலாம். ஆனால் அவளது குணம் மாற வாய்ப்பில்லை. பாதிக்கக்கூடிய ஏதாவது ஒரு செயலால் மட்டுமே ஒருவர் தன் குணத்தினின்று மாறுபடுவார். அப்படி ஏதும் அவளுக்கு நடந்திருக்குமோ? அவள் மாறும் அளவிற்கு என்ன தான் நடந்திருக்கும்? அவன் பேச…..மற்றவர்கள் சிந்தித்தனர்.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவளை பிரிந்திருந்தது போதும். அவள் நீ கூறியது போல் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி, நிஜமாகவே நம்மை மறந்திருந்தாலும் சரி, அவளுக்கு பிரச்சனையாக யார் இருந்தாலும் அவளுக்கு உறுதுணையாக நாம் என்றும் இருக்க வேண்டும் என்றான் கவின்.

அனைவரும் சேர்ந்து கை மேல் கை வைத்து உறுதி எடுத்துக் கொண்டனர்.நித்தியும், யாசுவும் விடுதிக்கு கிளம்ப,அகில் அவர்களை விட்டு மீண்டும் அர்ச்சு வீட்டிற்கு வந்து, நண்பர்களிடம்,…

அம்மா பதட்டமாக இருந்தார்கள். அவர்களை சென்று பார்த்து வருகிறேன் என்று கிளம்பி ஊருக்கு சென்றான். அம்மாவை பார்த்தான். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே வந்தான். அகில் தம்பி துருவன், அவனை பார்த்து சற்று தூரமாக அவனை அழைத்து சென்று திட்ட ஆரம்பித்தான்.

அம்மாவிடம் யாரை பற்றி கேட்டாய்? அவர்கள் பயந்த படியே இருந்தனர். சாப்பிட கூட இல்லை. அவர்களை சமாதானப்படுத்தி உறங்க வைத்திருக்கிறேன்.

அவன் ஏதும் கூறாமலிருக்கவே, இனி அவர்களை பற்றி அம்மாவிடம் பேசாதே! என்று அமைதியானான். துருவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

யார் அந்த பொண்ணு? அவளுக்காக மூவரும் ஒருவனை இரத்தம் வரும் வரை அடித்திருக்கிறீர்கள் போல…. கிண்டல் செய்தான்.

அது ஒன்றுமில்லை. தவறாக தோன்றியது. உதவி செய்தோம். அவ்வளவுதான்…..

சரி. நீ உள்ளே செல் துருவன் கூற, நான் இப்பொழுதே கிளம்புகிறேன். நாளை ஒரு முக்கியமான வேலை உள்ளது அகில் கூற,

உனக்கென்ன வேலை? அவன் கேட்க,

என்னிடம் கேள்வி கணைகளை தொடுக்காமல்,நீ போய் உறங்கு. அம்மாவை நன்றாக கவனித்துக் கொள் கூறி விட்டு அவன் அழைப்பதை கூட கண்டு கொள்ளாமல் அங்கிருந்து அர்ச்சு வீட்டிற்கு சென்றான்.

மறுநாள் அனைவரும் கல்லூரி வந்து கொண்டிருக்க, ஸ்ரீயும் நிவாசும் உள்ளே நுழைய அனைவருடைய போனிற்கும் செய்தி ஒன்று வந்தது. அதை எடுத்து பார்த்தால், வந்த முதல் நாளே நம்முடைய இசைக்குழுவினரை அவள் பக்கம் இழுத்து விட்டாள். ஸ்ரீக்காக கைரவும் அவர்களும் சண்டையிட்டு கல்லூரி விட்டே சென்று விட்டனர் என்று அவர்கள் சண்டை போட்ட வீடியோவை கல்லூரி முகநூலில் ஸ்ரீயை பற்றி போட்டிருப்பதை கண்டு, அவளை பெண்கள் சூழ்ந்து நின்றனர்.

ச்சீ…ச்சீ….நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறாய்? ஒரு பெண் கூற,

கல்லூரியில் பிரபலமானவர்களை எப்படி உன் பக்கம் திருப்பினாய்? நீ கில்லாடி தாம் குலைந்த குரலில் மற்றொருத்தி கூற,

இவன் யார்? நிவாஸை பார்த்து, இவனும் இவளுடன் தான் இருக்கிறான் போல,… ஸ்ரீயை பற்றி அவதூறாக பேசிக் கொண்டே சென்றனர்.

பொறுமை இழந்த நிவாஸ்… இனி என் அக்காவை பற்றி யாராவது ஏதாவது பேசினால் உங்களை சும்மா விட மாட்டேன் கத்த, ஸ்ரீ அவனை கையமர்த்தி அமைதியாக நின்றாள்.நடப்பதை அறிந்த நித்தியும், யாசுவும் அங்கே வந்து அவர்களை தடுக்க, யாரும் கேட்கவே இல்லை.அவர்களை பேச விடாமல் மற்ற அனைவரும் வார்த்தைகளால் நோகடிக்க, இது சரிவராது என்று எண்ணி,வேகமாக கல்லூரி ரேடியோ நிலையத்திற்கு ஓடினாள். அவளுடைய மேடம் அவளை தடுக்கவே, அவர்களையும் கடந்து கீழே விழுந்து ஓடினாள் நித்தி. இதை அங்கே வந்த கோர்ட்டு போட்ட

ஒருவன் அவளையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் யாரையும் கவனிக்காது ரேடியோ நிலையத்திற்கு வந்து,ஒரு நம்பரை கூறி விட்டு,

மைக் செக்…மைக் செக்….அனைவரும் கேட்கிறதா? நான் தான் நித்தி என்று கூறவும் அமைதியானார்கள். யாரும் ஸ்ரீயை தொந்தரவு செய்யாதீர்கள்! அவள் எங்களது சிறு வயது தோழி தான். அவளை நீங்கள் காயப்படுத்தினால் நாங்களும் காயப்படுவோம். தயவு செய்து அவளை விடுங்கள் என்றவுடன் அவளை விட்டு தள்ளி நின்றனர். இதை பார்த்த ஸ்ரீக்கும் நிவாசிற்கும் ஒரே அதிர்ச்சி. எங்களை மன்னித்து விடுங்கள் என்று அவள் மீது கொட்டிய சாயத்தை துடைத்து விட்டாள் ஒரு பெண்.மீண்டும் நித்தி ஸ்ரீ அருகே வர,….

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பெண்  மட்டும் வேகமாக ஸ்ரீயை தள்ளி விட, அவளை நித்தியும் யாசுவும் ஒன்றாக ஓடி வந்து பிடித்தனர்.

யாசு அவர்களிடம்….உங்களுக்கெல்லாம் என்ன தான் பிரச்சனை? நாங்கள் அனைவரும் நண்பர்கள் தான். உங்களுக்கு இருப்பது போல் எங்களுக்கும் நண்பர்கள் இருக்க கூடாதா? ஏன் அவளை காயப்படுத்துகிறீர்கள்? அவள் யாரையும் எதுவும் செய்யவில்லை.அனைவரும் சென்று உங்கள் வேலையை கவனியுங்கள் என்று ஸ்ரீ கையை யாசு பிடிக்க, ஸ்ரீ கண்ணிலிருந்து கண்ணீர் தேங்கி நின்றது. அனைவரும் சென்றனர்.