ஹாய்..ப்ரெண்ட்ஸ்
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 94.
அழுது கொண்டிருந்த புவனா,அழுகையை நிறுத்தி ஜானுவை அணைத்து, நீ வருத்தப்படாத ஜானு. நீ தீவிரமா தேடு. அவருக்கென ஒரு பொண்ணு கிடப்பா.அப்புறம் உன் அண்ணாவோட வாழ்க்கை மாறும்.
கண்ணை துடைத்து விட்டு,நான் பார்த்துட்டேன் என்றாள்.
பார்த்துட்டியா? யாரு? யாரு? என்று பரபரத்தாள் புவனா.
இத்தனை வருஷமா அண்ணா இவ்வளவு அழகா மனசு விட்டு சிரிச்சு பார்த்ததே இல்லை. ஆனால் இன்று மனசால சிரிச்சான் துகிராவால்.
துகிராவா? அதிர்ந்தான் தீனா.
இன்னும் உறுதியா நினைக்கல? ஜஸ்ட் யோசிச்சு வச்சிருக்கேன்.
ஆனா ஜானு,அவங்க நம்மை விட ஒரு வயசு தான் மூத்தவங்க புவனா கூறினான்.
சோ வாட்.வயது வித்தியாசமெல்லாம் பெரிய விசயமே இல்ல.அன்பா பாத்துக்கிடா போதாதா? கேட்டாள் ஜானு.
ம்ம்..நீ சொல்றது சரி தான்.காதலுக்கு வயது வித்தியாசம் முக்கியமில்லை. பாசம் போதும் என்று ஜானுவை பார்த்து புன்னகைத்து விட்டு புவனா தீனாவை பார்த்தாள்.அவன் முகம் வாடி இருந்தது.அவள் ஜானுவை இடித்து விட்டு, தீனாவை பார்த்தாள்.ஜானுவும் அவனை பார்த்தாள். இரண்டு பேரும் சண்டை போட்டாலும் தீனாவிற்கு துகியை பிடித்து விட்டதோ என்று தோன்றியது ஜானு புவிக்கு.
நாம் கிளம்பலாமா? என்று புவனா கேட்க, தீனா எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான்.அவர்களை ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றான். அவ்விடத்தை பார்த்த புவனா உள்ளே வர தயங்கி, சார் இங்கே வேண்டாம். ஏதாவது சிறிய கடை போதும்.
நான் வாங்கித் தாரேன். வா..என்று அழைத்தான்.
நோ சார்.நான் வரல.ஜானு நீ போயிட்டு வா என்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவளை கூப்பிடு என்று சைகை செய்தான் ஜானுவிடம். அவனருகே வந்து நீ தான் வாங்கி தரப் போகிறாய்? நீயே கூப்பிடு என்றாள். புவனா தருண் போனை வாங்கி வந்திருப்பாள்.அவனது போனை ஆன் செய்து அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு வாங்க தான் வந்தோம். நீ வாங்கிக்கோ.. சீக்கிரம் கிளம்பணும் என்றான்.
சார். மத்த பொண்ணுங்க மாதிரி அடுத்தவங்க பணத்தை யூஸ் பண்ண எனக்கு பிடிக்காது.நான் கொஞ்சம் தான் வைத்திருக்கிறேன். அதில் மட்டும் வாங்கிக்கிறேன் சார்.நீங்க ஜானுவிற்கு வாங்கிக் கொடுத்திட்டு வாங்க.
என்னுடன் வந்த எந்த பொண்ணும் இந்த மாதிரி பணம் வேண்டாம் என்று கூறியதில்லையே. ஒன்றுக்கு பத்தாக தானே வாங்குவார்கள் என்று நினைத்தான்.
சரி.உன் பணத்திலே வாங்கிக்கோ வா.
நான் வைத்திருக்கும் பணத்தில் இங்கே வாங்க முடியாது சார். அங்கே வந்த ஜானு,மணியை பார்த்தாயா? இப்பொழுது பள்ளியில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
தருண் போனிற்கு அழைப்பு வந்தது. புவி எடுத்து பேசினாள். அவள் முகம் மலர்ந்தது.
ம்ம்..சொல்லு. நான் காரணமெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மாலை வந்து பார்க்கிறேன் என்றாள்.
அண்ணா நம்பர், உன்னிடம் எப்படி? நான் அண்ணாவை பார்க்க வந்தது உனக்கு எப்படி தெரியும்?
ஜானு போனை வாங்கி, யாரு? கேட்டாள்.
ஏ குட்டி பேயே,புவி கிட்ட கொடு.
துருவா,.உனக்கு எப்படி தருண் அண்ணா நம்பர் கிடச்சது? துருவன் அகிலில் உடன்பிறப்பு.
நீங்க சாருடன் கிளம்பியதை பார்த்தேன். போலீஸ் ஸ்டேசன் போனேன். அவங்க பேசியதை கேட்டேன்.
அவ கிட்ட கொடு.
முடியாதே! ஜானு அவனுக்கு விளையாட்டு காட்ட, விளையாத ஜானு. அவ கஷ்டத்துல இருப்பா. போனை கொடுக்க போறாயா? இல்லையா?
சரி.கத்தாதே கொடுக்கிறேன் என்று தகரடப்பா கத்துறான்டி புவி.
இரண்டு பேரும் ஆரம்பிச்சுட்டீங்களா? என்று புவனா புன்னகையுடன், போனை வாங்கி சொல்லுடா.
அவன் தருணை பற்றி கேட்க, அண்ணா இப்பொழுது ஓ.கே தான். ஆனால் என்று அவனுக்கு அடிபட்டதை கண்ணீருடன் கூறினாள். தீனா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அம்மாவுக்கு தெரியாம வந்திருக்கேன். நீ போனா ஏதும் சொல்லிடாதடா?
நீ ஓ.கே வா? என்று அவன் கேட்டான்.
நான்..என்று சிந்தித்து ஓ.கே தான் என்றாள்.
நானும் வரவா? அவன் கேட்டான்.
நீயா? என்று சிறு புன்னகையுடன். நோ..நீ எப்படி வருவ? வேண்டாம்.
நீ சொல்லு. நான் வந்துடுவேன்.
வேண்டாம்டா.நான் மாலையே வந்திடுவேன்.
வரவான்னா கேக்குறான்? என்று ஜானு போனை பிடுங்கி,
ஏ..தகர டப்பா, என்னோட மாமாவுக்கு உடம்பு சரியில்லை. கூட்டிட்டி போடான்னு சொன்னேன். முடியாதுன்னு சொல்லிட்டு அவளுக்காக மட்டும் வாரேன்னு சொல்லுற?
அவன் வேற, நீ வேற குட்டி பேயே?
ம்ம்..இன்னும் ட்ரை பண்ணு. இதெல்லாம் பத்தாது என்று கிண்டலடித்தாள்.
புவனா போனை வாங்கி ஈவ்னிங் பார்ப்போம். சீக்கிரம் பள்ளிக்கு கிளம்பு.நேரமாகிறது என்று அணைத்து விட்டாள்.
ஏன்டி,அவனை அலைய விடுற? ஜானு கேட்டாள்.
நானா அவளை அலைய சொன்னேன்.ஜானு அவன் நமக்கு ப்ரெண்டு மட்டும் தான். அவனிடம் தெளிவா சொல்லிட்டேன். அதற்கு மேல் என்ன செய்றது? எனக்கு நீ எப்படியோ அது போல் தான் அவனும். அவன் தான் கேட்கவே மாட்டிக்கிறான்.
அவனுக்கென்ன? நீ ஓ.கே சொல்லலாம்.
அவனுக்கு ஒன்றுமில்லை. எனக்கு தான் விருப்பமில்லை. என்னுடைய நிலை தெரிந்தும் இப்படி பேசுகிறாய்?
எதற்கெடுத்தாலும் இப்படியே சொல்லி கிட்டு இரு. இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். ஓ..அவனுக்கு இவளை பிடிக்குமா? யோசித்தான் தீனா.
அப்பொழுது ஒருவன் கத்தியுடன் தீனாவை நோக்கி வருவதை இரு பெண்களும் பார்த்தனர். அவன் அருகே வந்து கொண்டிருக்க, அவர்கள் பேச்சு நின்றது.
அண்ணா என்று ஜானு கத்தினாள்.புவி அவனருகே ஓடி வந்து, அவனை தள்ளி விட்டு அவளும் கீழே விழுந்தாள். அவன் அவளை பார்த்து, தாக்க வந்தவனை பார்த்தான். அவன் கையில் புவனா பயத்துடன் இருக்க, கத்தி அவள் கழுத்தில் இருந்தது.
என்ன சார் நீங்க? நாங்க தான் சொன்னோம்ல. எங்க பெரியய்யா விசயத்தில தலையிடாதீங்கன்னு. நீங்க கேட்கவே இல்லை.இனி நடக்க போவதற்கு நாங்க பொறுப்பல்ல.. என்றான் கத்தியை வைத்திருந்தவன்.
அவர்களை சுற்றி அவனுடைய ஆட்கள் இருக்க, ஜானுவையும் பிடித்தனர்.
ஏய்,..யாரு மேல கைய வச்சிருக்கீங்க? அவங்க இந்த தீனா குடும்பத்து பொண்ணுங்கடா..ஒழுங்கா அவங்கள விட்டுருங்க இல்ல உசுரோட போக மாட்டீங்க கர்ஜித்தான்.
நாங்க உயிரோட போக மாட்டோமா? இல்லை புவனா கழுத்திலிருந்த கத்தியை அழுத்தினான்.
ஹேய்..நோ..நோ..என்று பதறினான் தீனா.உனக்கு என்ன நான் தான வேண்டும்? அவங்கள விட்டுடு என்றான்.
இங்க பாருங்கடா, சார் கெஞ்சுறார் என்று கேலியுடன் கூறினான்.
டேய்..பொட்ட பசங்களா? நேரா என்னோட அண்ணாகிட்ட மோத பயந்து பிளாக்மெயில் பண்றீங்க? நீங்களாம் ஆம்பளைங்களா? ஜானு கத்தினாள்.
புவிக்கு அவன் சொன்ன, என் குடும்பத்து பொண்ணுங்க தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
அந்நேரம் அங்கே வந்த தீனாவின் ஸ்டேசன் ஆட்கள் புவனா, ஜானுவை பிடித்து வைத்திருந்தவர்களை அடித்து விட்டு, அவர்களை தள்ளி அழைத்து சென்றார்கள்.
அவர்களை பார்த்து தீனா நமட்டு சிரிப்புடன்,
அட..டேய்..என்னை என்னன்னு நினைச்சீங்க? என்று புவி கழுத்தில் கத்தியை வைத்திருந்தவன் அருகே வந்து,இந்த கை தானே கத்தியை அவள் கழுத்தில் வைத்தது என்று பல்லை கடித்துக் கொண்டு, அவன் கையை ஓங்கி அடித்து உடைத்தான்.அவன் ஆவென்று கத்திக் கொண்டே கீழே விழுந்தான். ஜானுவை பிடித்திருந்தவன் கையை முறுக்கி பின்னே வைத்துக் கொண்டு, அவளை என்னோட அண்ணா பொத்தி பொத்தி பார்த்துகிட்டான். உனக்கு எவ்வளவு தைரியும் இருந்தா அவளது கையை அழுத்தி பிடித்து சிவக்க வைத்திருப்பாய் என்று சொன்ன பின் தான் ஜானுவும் புவியும் அவள் கையை பார்த்தனர்.
பேசிக் கொண்டே அவன் இரு கையையும் முறுக்கி கையை நகர்த்த முடியாதவாறு செய்து விட்டான். அவன் கத்த,மற்றவர்களும் முன் வந்தனர்.அதிரடி வேங்கையாக மாறி வேட்டையாடினான் தீனா.
அவன் முடித்து விட்டு, அவர்களருகே வந்தான். அங்கிருந்தவர்கள் புவனாவை பள்ளி சீருடையில் பார்த்து, வீட்டை விட்டு ஓடி வந்துருச்சு போல இந்த பொண்ணு. தீனாவுடன் சேர்த்து பேசினார்கள். புவனா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, தலைகவிழ்ந்து கண்ணீர் சொட்ட அமர்ந்தவாறு ஜானுவிற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.
தீனா அவளை பார்த்து, நான் கூறியது போலவே முன்பே ஆடையை மாற்றி இருந்தால், இப்படி பேசி இருக்க மாட்டாங்கள.இல்ல நீ இதை தான் எதிர்பார்த்தாயா? கேட்டு விட்டான்.
எழுந்த புவனா, அவனருகே வந்து சட்டையை பிடித்து அனைவர் முன்னிலையிலும், நானா ஆடை மாற்ற வேண்டும் என்று உன்னுடன் வந்தேன்? என்னோட அண்ணா, அப்பா சொன்னதற்காக மட்டும் தான் வந்தேன். அதுவும் என்னோட ஜானுவின் அண்ணன் என்பதால் தான் வந்தேன். எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு என்னோட குடும்பம் மட்டும் தான் வேண்டும். அண்ணா முடியாமல் இருக்கான். அம்மாவுக்கு தெரிந்தால் அவங்களுக்கு என்ன ஆகுமோ? என்ற பயத்தில் நான் இருக்கேன்.உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க? கத்தி விட்டு அழுது கொண்டே ஓடினாள். நில்லு எங்க போற புவி? என்று ஜானுவும் அவள் பின்னே ஓடினாள்.அவன் அதிர்ந்து நின்றான்.
இதுவரை யாரும் இது போல் என்னிடம் பேசியதில்லை. பொண்ணுங்க கொஞ்சியும், குலைந்தும் தான் பேசி இருக்கிறார்கள். இந்தப் பொண்ணுக்கு என்னை பிடிக்கவில்லையா?
சார். அவங்க எங்க போறாங்கன்னு தெரியல? என்று அவனது ஆட்கள் அவனது எண்ணங்களை களைக்க, வாங்க தேடலாம் என்று தீனாவும் அவனுடைய ஆட்களும் அவர்களை தேடி வந்தனர்.
ஜானு புவனாவை பிடித்து, சாரி புவி. உனக்கு தான் அவனை பற்றி தெரியுமே? அவனை விடு.வா ஆடை மாற்றி விட்டு சீக்கிரம் செல்லலாம். புவனாவிற்குள்ளும் அது தான் சரி என்று பட்டது. இதற்கு மேலும் இந்த ஆடை மாற்றாமலிருந்தால் பிரச்சனையாகும் என்று அதே மாலுக்கு சென்றனர். இடையே தீனாவும் அவனது ஆட்களும் அவர்களை அழைக்க,ஜானு நின்று அவனை முறைத்து விட்டு புவனாவுடன் உள்ளே சென்றாள்.
அனைத்து ஆடைகளும் அதிக விலையில் இருக்க, ஒன்று மட்டும் குறைவான விலையில் இருந்தது. அதிலும் கொஞ்சம் குறைவான பணம் அவளுக்கு தேவைப்பட்டது. வெளியே இருந்த வண்டியில் அம்மாவிற்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றாள்.
ஜானு அவளை தடுத்து, இப்பொழுதைக்கு அவனிடம் வாங்கிக் கொள். பின் தந்து விடு என்றாள்.
புவனா அவனை தவிர்த்தாள். ஆனால் தீனா அவளருகே வந்து அவளது கையில் பணத்தை திணித்து விட்டு, உன்னால் முடியும் போது தா என்று விட்டு தள்ளி நின்றான்.
அண்ணா, பசிக்குதுடா? ஜானு கூற, புவனா தடுமாறிய படி நின்றாள்.
அவள் முதலில் ஆடையை மாற்றட்டும் பின் சாப்பிடலாம் என்று போனுடன் அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தான்.
அவள் மாற்றி விட்டு வந்தாள். ஜானு அவளை பார்த்து, மீண்டும் அவளை உள்ளே இழுத்துச் சென்றாள்.
இந்த ஆடைக்கு இரட்டை சடை நன்றாக இராது என்று ஜானு அவளது முடியை அவிழ்த்து நேராக்கி போனிட்டைல் போட்டு விட்டாள். அவள் அழகான கேசம் ஆட, வெளியே வந்தாள் புவனா.
புதியதாக அவளை பார்ப்பதை போல் பார்த்தான் தீனா. அவள் கிளம்பலாமா? கேட்டாள் ஜானுவிடம்.
ப்ளீஸ்..ப்ளீஸ்.. புவி, ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள்.
நீ சாப்பிட்டு வா. நான் இங்கே இருக்கிறேன் என்றாள்.
ப்ளீஸ்..எனக்கு கம்பெனி கொடு ஜானு கூற, எனக்கு பசிக்கல ஜானு என்றாள்.
சரி..நானும் சாப்பிடலை என்றாள் ஜானு பாவமுடன்.
வா..சாப்பிடலாம் என்று புவனா கூற, தேங்க்ஸ் புவி என்று அவளை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். புவனாவும் புன்னகையுடன் ஜானுவை பார்த்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
சாப்பிட வந்த இடத்தில் பதார்த்தங்களை ஜானு அள்ளி குவிக்க, எதுக்குடி இவ்வளவு?
சாப்பிடும் போது தொந்தரவு செய்யாதடி புவியிடம் கூறிக் கொண்டே அவளுக்கும் எடுத்து வைத்தாள். ஆனால் புவிக்கு சாப்பாடு உள்ளே இறங்கவே இல்லை.அவளை பார்த்துக் கொண்டே பக்கத்து டேபிளில் இருந்து தீனா அவனுடைய ஆட்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சாப்பிடு புவி. அடுத்து எப்பொழுது இது போன்ற இடத்திற்கு வர நேரமிருக்கும். எக்ஸாம்ஸ் வந்து சாப்பிட கூட விடாது என்றாள்.
என்னால சாப்பிடவே முடியவில்லை என்றாள் புவனா கலங்கிய குரலில். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜானு சாப்பிடுவதை நிறுத்தி அவளருகே இருக்கையை நகர்த்தி போட்டு,
எனக்கு புரியுது புவி. நீ நல்லா சாப்பிடு.மாலை அம்மாவை பார்க்க போகணும். நீ தெம்பாக இருந்தால் தானே அனைத்தையும் கவனிக்க முடியும் ஆறுதலளித்து ஜானு புவனாவிற்கு ஊட்டி விட்டாள். அவள் அழுது கொண்டே சாப்பிட்டாள். பொண்ணுங்களும் குடும்பத்துக்காக இவ்வளவு ஏங்குவார்களா? என்று புவியை அதிசையித்து பார்த்தான் தீனா.
” எனக்குள் ஏதோ செய்கிறதே
உன்னை பாக்கும் போது
ஆயிரம் பெண்களை கண்டேனடி
உன்னை போல் ஒருத்தி
எனக்கு புதியவளே
புதிதாய் மணமாய் அழகாய்
இனிக்க பேசி
எனை மயக்குகிறாயே
மயங்குவேனா நான் உன்னிடம்?”