ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 89

ஆதேஷ் அருகே வந்த அர்ஜூன், நீ ஜானு அருகே மட்டும் இரு போதும் என்றான்.ஆதேஷ் அவளிடம் சென்றான்.

அவளை கொஞ்சம் விடு. அவளிடம் நான் பேச வேண்டும் பிரதீப் கூற, துகியை கையை பின்னே வளைத்தபடி பிடித்தனர்.

ஏம்மா..நீ சொன்ன அந்த நாதாரி யாரு? பிரதீப் கேட்டான். அவளை பிடித்து வைத்திருப்பவனை பார்த்தாள் அவள்.

ஓ..சாரு தான் அந்த நாதாரியா?

தீனா, இது போல் நடந்து கொண்டால் நம் ஊரில் என்ன தண்டனை? பிரதீப் வினவ,

வேறென்ன? என்ற தீனா.அவன் இனி எந்த பொண்ணுடனும் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்றவாறு கேமரா ஏதும் உள்ளதா? பார்த்து விட்டு, அவனது முதுகுக்கு பின்னிருந்த

துப்பாக்கியை எடுத்து அவனுடைய அந்தரங்க உறுப்பிலே சுட்டான். துகிரா சத்தத்தில் பயந்து மயங்கினாள். அவளருகே சென்று பிரதீப் அவளை தூக்கி வந்து ஆதேஷிடம் விட்டான். மற்றவர்கள் பயத்தில் அதிர்ந்து இறுகி போனார்கள்.

வேறு யாருக்கு அந்த எண்ணம் உள்ளது? தீனா உறுமினான்.

இல்லை..என்று அவர்கள் ஓட, மறித்து நின்றனர் அர்ஜூனும் கவினும்.

அண்ணா நீங்க விடுங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்று கவின் கூற, இல்லை என்று தலையசைத்த மற்றவர்களும் அவர்களை துவைத்து அனுப்பினர். சீக்கிரம் இருவரையும் ஹாஸ்பிட்டல் அழைத்து செல்லுங்கள்.பின் எங்கள் யார் விசயத்திலும் நீங்கள் தலையிடக் கூடாது.இனி அந்த பொண்ணு பக்கத்திலே கூட யாரும் வரக் கூடாது.வந்தால் அவன் கதி தான் உங்களுக்கும் தரமாக மிரட்டி அனுப்பினான் பிரதீப். அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.

அண்ணா இருவரும் சேர்ந்து சண்டை போட்டதை பார்த்து கண்கலங்க பிரதீப்பிடம், அண்ணா இதே போல் இரண்டு பேரும் சேர்ந்து இருங்களேன் என்றாள். அவளை முறைத்து விட்டு பிரதீப் ஏற, தீனா ஜூப்பை எடுக்க, விழித்த துகியோ இருவரையும் பார்த்து திகைத்து நின்றாள்.

வர போகிறாயா? இல்லையா? பிரதீப் கேட்க,அவள் எங்களுடன் வரட்டும் என்று ஆதேஷ் துகியை அழைத்துக் கொண்டான். அனைவரும் மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினர்.

அங்கே சென்று இறங்கவும் ஆதேஷ் துகியை அணைத்துக் கொண்டு, நான் பயந்தே விட்டேன்.என் உயிரே போனது.இத்தனை நாட்களாய் அவனுடைய நண்பர்களையுமா சமாளித்து வந்தாய்? முதலிலே சொல்லி இருக்கலாம்ல?

அவனை விலக்கிய துகிரா அவனை முறைத்தபடி,உங்கிட்ட சொன்னா என்னடா செய்வ?

நான்..என்றவன் கலங்கி நின்றான். அர்ஜூன் அவனிடம், உனக்கு அவனை பற்றி தெரிந்தும் ஏதுமே செய்யவில்லையா? யாரிடமாவது உதவியாவது கேட்டிருக்கலாமே! என்று திட்டினான்.

அண்ணா என்று அழ ஆரம்பித்தான். எனக்கு உங்களை போலெல்லாம் சண்டை போடத் தெரியாது. அதுக்கு காரணமே என்னோட டாட் என்றான்.

உனக்கு அப்பா இருக்காங்களா? அதிர்ச்சியுடன் அர்ஜூன் கேட்டான்.

ஆம் என்று கண்ணீருடன்,மாமும் டாடும் பிஸினஸிற்காக தான் திருமணம் செய்தார்கள் அவர்களது பெற்றோர்களின் கட்டாயத்தால். டாட் பிஸினஸ்மேன் என்று நினைத்து தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர் ரௌடி. வேரொருவருக்கு பதில் மாம்மை பார்த்து பிடித்து திருமணத்தை நிறுத்த மணமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். மாம்மிற்கு டாடை பற்றி தெரிய வந்த போது தான் மாம் கருவுற்றிருந்தார். அவர் மீது கோபம் வெறுப்பு அனைத்தும் வெளிவர இருவரும் பிரிந்து விட்டனர்.

அவர் சீனாவில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அம்மாவிற்கு அவரால் சண்டை என்றாலே பிடிக்காது போயிற்று. அதனால் நான் ஆசைப்பட்டும் எதையும் கற்க முடியவில்லை. சும்மா பசங்களுடன் சண்டை போட்டாலே என்னிடம் பேச கூட மாட்டார்.

இருங்க. ஏய் மாம்மிற்கு உன்னை பற்றி எல்லாமே தெரியுமே? நீ அவங்களிடம் எதையும் மறைக்க மாட்டேல?ஆதேஷ் துகிராவை பார்த்தான்.

அவள் பதில் கூறாமலிருந்தாள்.துகி என்று அழைத்தான்.

அம்மாவிற்கு எல்லாமே தெரியும் என்று அவள் கையிலிருந்த பர்ஸை பிரித்தாள். அதில் மற்றவர்களை தாக்கும் சிறு சிறு பொருட்களை காண்பித்து, அம்மா தான் கொடுத்தாங்க என்றாள். அவங்களும் வைத்திருப்பார்கள் என்று அவன் முன் தலைகவிழ்ந்து நின்றாள்.

ஆதேஷ் கோபமாக, இரண்டு பேரும் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? என்னை பார்த்தா எப்படி தெரியுது? செங்கணலோடு அவளது கையை பிடித்து இழுக்க, அர்ஜூன் வழி மறித்தான். ஆதேஷ் அவனை முறைத்துக் கொண்டு,

அண்ணா! வழி விடுங்க..என்னை மேலும் கோபப்படுத்தாதீங்க. நான் இப்பொழுதே மாம்மிடம் பேசணும்.

தாரளமா பேசு. ஆனால் இப்பொழுது வேண்டாம். கோபத்தில் வார்த்தையை உதிர்த்து விட்டால் அள்ள முடியாது.

வார்த்தையா? என்னை சிறு வயதிலிருந்து எப்படி வளர்த்தார்கள் தெரியுமா? எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள் தெரியுமா?கோழை என்று. எல்லாமே அம்மாவிற்காக மட்டும் தான் பொறுத்துக் கொண்டேன். அதை விட அம்மாவை பற்றி கூட எப்படி பேசுனாங்க தெரியுமா? அப்பொழுதும் பல்லை கடித்துக் கொண்டு அவர்கள் சொன்னதை கேட்க வேண்டும் என்று அமைதியாக தான் இருந்தேன்.அதெல்லாம் வேஸ்ட் அண்ணா. அவங்க கஷ்டத்து இருந்த மாதிரி கூட காட்டியதில்லை.

அம்மாவையும் தொந்தரவு செய்திருக்கிறார்கள்? அதனால் தான் இது போன்ற பொருட்களை வைத்திருக்கிறார்கள் கலங்கியவன், வழியை விடுங்கள்.நான் கேட்க வேண்டும் என்றான்.

என்ன கேட்கப் போகிறாய்? யாரு தொந்தரவு செய்தாங்கன்னு என்றோ நடந்ததை கேட்டு வதைக்கப் போகிறாயா? பிரதீப் கேட்டான்.

அவங்க மகனை பாதுகாக்க தான் இப்படி செய்திருக்கிறார்கள். அப்பா இல்லாமல் தன் மகனை பற்றி யாரும் ஏதும் கூறி அவன் மனதை நோகடித்து விடுவார்களோ? என்ற பயத்தில் கூட செய்திருக்கலாமே! தீனா கூற,

அவங்க செய்ததை நியாயப்படுத்துறீங்களா? கேட்டான் இருவரையும் முறைத்தபடி.

தீனா அவனது தோளில் கையை போட்டு, உன் அம்மாவை அப்பா ஏமாற்றியதை தாங்க முடியாமல் இருந்திருக்கலாம்.ஏன்?அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத காரணம் அவங்க உன்னோட அப்பாவை காதலித்து கூட இருக்கலாம்.

காதலா? என்று ஆதேஷ் இறங்கினான்.

உன்னோட அம்மாவை பற்றி நல்லா தெரிஞ்சுக்கோ. நல்லவற்றிற்கு சண்டை போடுவதும் தவறில்லை என்று புரிய வைத்தால் சரியாகி விடும் தீனா அறிவுரை கூறினான்.

தலையசைத்தவன் தீனா கையை எடுத்து விட்டு,நீங்க கன் வைத்திருக்கிறீர்கள்? கேள்வியுடன் நோக்கினான்.

நான் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஏலகிரி தீனா சக்கரவர்த்தி என்று மீசையை முறுக்கி விட்டான்.

என்னது போலீசா? என்று பல எட்டுகள் நகர்ந்து நின்றான் ஆதேஷ். அவனை பார்த்து தீனா சிரித்தவாறு துகிரா அருகே வர,அவளோ அவளது விழிகளை உருட்டி உருட்டி திண்டாடினாள்.

அய்யய்யோ, இது தெரியாமல் நான் எப்படி பேசிட்டேன்? மனதினுள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

தீனா அவளிடம், நல்லாவே தைரியமா மேனேஜ் பண்ணியிருக்க.சின்ன பொண்ணா இருந்தாலும் சரியா பண்ண. ஆனால் பைத்தியம் மாதிரி எல்லாரையும் பதற வைச்சுட்ட.

என்ன ரொம்ப அமைதியா இருக்க? அவளை உற்று பார்த்து, பேசு.. அப்போ ஏதோ சொன்னீங்களே?

அவள் பேச நினைக்கிறாள்.பேச முடியவில்லை. காற்று தான் வருகிறது.நா..நா..நான் என்று அவள் திணற, அவளை பார்த்து புன்னகையுடன் இவ்வளவு தான் உன் தைரியமா? கேட்டான்.

கண்களை மூடி திறந்தவள் சாரி சார் என்றாள் தயக்கமுடன். அவன் அவளது கண்களை பார்த்துக் கொண்டு, பவர்ஃபுல் ஐஸ் முணுமுணுத்தான்.

என்னது சார்?

ஒன்றுமில்லை என்று பிரதீப்பை பார்த்து கண்சிமிட்டினான்.

பிரதீப் பல்லை கடித்துக் கொண்டு அவனை முறைத்தான்.

புவி, அண்ணா எப்படி இருக்கிறான்? தீனா அவளிடம் திரும்பினான்.

இருக்கான் சார்.

ஏம்மா இவ்வளவு சலிப்பு?

ஒன்றுமில்லை சார். அவள் தயங்கிக் கொண்டு, சார்.. அம்மா..என்று கேட்டாள்.

நீ வீட்டிற்கு செல்லும் வரை அவங்கள முத்தம்மா பார்த்துக் கொள்வாங்க என்று அறை கதவை திறந்து உள்ளே சென்றான்.

என்னடா இரண்டு பேரும் ஆரம்பிச்சுட்டீங்களா? தருண் அப்பா கேட்டார்.

அவன் தான்பா என்றார். ஜானு பிரதீப்பிடம் மெதுவாக, உனக்கு துகிராவை பிடிச்சிருக்கா அண்ணா?

அவளையா? கேள்வியுடன் புருவத்தை உயர்த்தினான்.

சின்னண்னா அவளிடம் பேசும் போது எதற்கு நீ பல்லை கடித்தாய்?

அவனை பத்தி தான் தெரியுமே? எல்லா பொண்ணுங்களிடமும் இப்படி தானே பேசுவான். அதான் என்று சமாளித்தான் ஜானுவை. பக்கத்தில் இருந்த ஆதேஷை மறந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க,அவன் ஜானுவை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்து ஜானு அசட்டு புன்னகை சிந்தி விட்டு, சும்மா சார் என்றாள்.

உள்ளே வந்த தீனாவை பார்த்து சார் என்று எழ முயன்றான் தருண். நீ ஓய்வெடு. அம்மாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

வலி அதிகமோ? என்று தலையில் கை வைக்க தீனா வர, வேண்டாம் சார் என்று தடுத்தாள் புவி. அவளை பார்த்து, நான் அவனை என்ன செய்ய போகிறேன்?

அதற்கில்லை சார். அவனுக்கு வலிக்கும் என்றாள்.

நீ இன்னும் ஆடையை மாற்றவில்லையா?

இருக்கட்டும் சார்.

நீ ஓய்வெடு.நான் புவிக்கு ஆடை வாங்கித் தருகிறேன் என்று தருணிடம் சொல்லி விட்டு, வா போகலாம் என்று அழைத்தான் தீனா.புவனா தருணை பார்த்தாள்.

வேண்டாம் சார். ஏற்கனவே உங்க வீட்டில் வேலை செய்பவரை அம்மாவிற்கு துணையாக விட்டு வந்திருக்கிறீர்கள். அதுவே பெரிய உதவி.

உதவியா? கேட்டுக் கொண்டே இருவரையும் பார்த்தான். தருண் தயக்கத்துடன் பார்க்க, புவனா கண்கள் படபடக்க பயத்துடன் பார்த்தாள்.

என்னை பார்த்து பயப்படுகிறீர்களா? இல்லை.. என்னை நம்பவில்லையா?

அப்படியில்லை சார் தயங்கினான் தருண்.

ஓ.கே ஜானு வந்தால் வருவாயா?

புவனா தருணை பார்த்தாள்.தலையசைத்து அப்பாவிடம் சொல்லி விட்டு போ என்றான். இருவரும் வெளியே வந்தனர்.

ஜானுவிடம் துகிரா, உண்மையாகவே அவர் போலீஸ் தானா? கேட்டாள்.

ஆமாம். எங்க ஊருக்கு வராயா? அவனுடைய மறுபக்கத்தையும் பார்க்கலாம் ஜானு கூறிக் கொண்டே பிரதீப்பை பார்த்தாள். அவன் அவளை மனதில் திட்டினாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

நான் என்னோட ஆன்ட்டி, ஜில்லாவை விட்டு எங்கையும் வர மாட்டேன். நான் எதற்கு வரணும்? அவனும் அவன் மூஞ்சியும். போலீஸ்னா பயந்திடுவோமா?

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே உன்னோட வாய் தந்தியடித்தது கேலியுடன் புன்னகைத்தாள் இன்பா.இதயாவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜானுவும் சிரித்தாள்.

அப்ப ஷாக்ல இருந்தேன். அதான் பேச முடியவில்லை. இப்ப வரச் சொல்லுங்க. நான் பயப்படவே மாட்டேன் அவள் கூற, அவளது செய்கையில் பிரதீப் முகம் பளபளத்தது.

புவனாவை அழைத்துக் கொண்டு தீனா வந்தான்.

இன்பா துகிராவிடம், இதோ சார் வந்திட்டார். இப்ப பேசும்மா என்று கூற, ஆதேஷ் அவளிடம் உன்னோட வாய் இருக்கே என்று திட்டினான்.

நீ இரு என்று புவனாவிடம் கூறி விட்டு, துகிரா அருகே வந்து கையை கட்டி அவளை பார்த்தவாறு நின்றான்.

யோவ்..நீ இல்ல நீங்க அடச்சே எப்படி கூப்பிடுறது? வாயில் கையை வைத்து சிந்தித்த துகிரா,

போலீஸ்காரா? நான் ஒன்னும் பயப்படல. திடீரென போலீஸ்னு சொன்னதுனால பேச முடியல.எனக்கு உன்னை பார்த்து பயமெல்லாம் இல்லை என்று ஆதேஷை பார்த்தாள்.

அப்படியா? என்று அவளை நெருங்க துகிரா அவன் முன் வந்து என்னவே பயமுறுத்தப் பாக்குறியா? கேட்க அவனே அதிர்ந்து பின் வந்தான். அவன் கால் இடற, அவன் துகிராவை பிடிக்க, அவள் அவனை தள்ளி விட, தீனா புவி அருகே விழ, புவனா அவனை பிடித்தாள்.துகிரா பிரதீப் மார்பிலே முட்டி நின்று அவனை பார்த்தாள். அவன் அசையாது நின்றான்.

நீங்க ரொம்ப ஸ்ராங் போல, உங்களது உடம்பு தானா? கல்லா? என்று அவனது மார்பிலே தட்டிப் பார்த்தாள். அங்கிருந்த நிலை மறந்து அவர்களை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.

நீ வாயை மூடிக்கிட்டு இருக்கவே மாட்டாயா? அவனிடம் போய் எதுக்கு வாய கொடுக்குற?பிரதீப் கோபப்பட்டான்.

நான் வாயை கொடுக்கவில்லையே? துகிரா பேச, இதயா இதழ்களிலும் புன்னகை அரும்பியது.

புவியை பார்த்துக் கொண்டிருந்த தீனா, ரொம்ப தேங்க்ஸ்மா. என் மானத்தை காப்பாற்றி விட்டாய்?

சார், கொஞ்சம் எழுந்தீங்கனா நல்லா இருக்கும் என்றாள் புவனா. அவளது அப்பா பதறி வந்தார்.

அய்யோ,இவள் கூட விட மாட்டாளா? இப்படி பல்பு வாங்கிட்டோமே? எழுந்து அவரை பார்த்து விட்டு துகிராவை முறைத்தான்.

அப்பொழுதும் அவன் முன் வந்து, கொஞ்சலாக சாரி சார் என்றாள் துகிரா.

ஆதேஷ் அவளை தரதரவென இழுத்து ஓரிடத்தில் உட்கார வைத்து, வாயில கை வை இல்ல உன்ன கொன்னுடுவேன் என்று மிரட்டினான். அவள் அவ்வாறே உட்கார, தருண் அப்பா முகம் கூட மெலிதான புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது. பின் அப்பாவிடமும் ஜானுவிடமும் கூற, அவள் பிரதீப்பை பார்த்தாள். அவன் தலையசைக்க ஜானுவும் கிளம்பினாள்.

துகிராவை பார்த்து, இவளை பழி வாங்கணும். எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிட்டாலே என்று முணுமுணுத்தான். அவன் முணுமுணுப்பு புவனாவிற்கு கேட்டது. அவள் நிமிர்ந்து தீனாவை பார்க்க, அவளை பார்த்து உனக்கு கேட்டு விட்டதா என்ன? கேட்டான்.

அவள் ஆம் என்றாள்.

இந்த பொண்ணு கிட்ட இருந்து தொலைவிலே இருப்பது தான் நல்லது என்று அவன் வாய் விட்டு மெதுவாக கூறினான்.

சார், நீங்க பேசுவது இப்பொழுதும் கேட்கிறது என்றாள் புவனா.

அவன் அவளிடம் யாரிடமும் எதையும் கூறாதே! என்று குனிந்து ஜானு கிட்ட சொல்லிடாதே!

புவனா புன்னகையுடன் சரிங்க சார்.

வாங்க கிளம்பலாம் என்று இருவரையும் தன்னுடைய ஜூப்பில் ஏற்றிக் கொண்டான்.