ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான  இன்றைய எபிசோடு 88.

இன்பா இதயாவை சமாதானப்படுத்தி அமர வைத்தாள். மற்றவர்களுக்கு சாப்பாட்டை கொடுத்தாள் இன்பா. ஆதேஷும்,துகியும் சாப்பிட்டு வந்திருக்க, அர்ஜூன் உணவை மறுத்தான். இதயா அவனருகே வந்து, அவனது காதில் இனி தான் உனக்கு பிரச்சனை. ஸ்ரீயை சமாளிக்கணும். அவள் நிலையில் உள்ள பெண்ணை சமாளிப்பது மிகவும் கடினம் என்று முணுமுணுத்தாள்.

இதயா கையை பிடித்த அர்ஜூன் அவளை இழுக்க,

அர்ஜூன் அவளை என்ன செய்ற? இன்பா பதறினாள்.

அவளிடம் பேசணும் என்று அவளை மீண்டும் இழுத்தான்.

விடுடா.நானே வருகிறேன் என்று அவளும் கிளம்பினாள். ஆதேஷ் இருவரையும் முறைத்தவாறு இருந்தான்.

ஒரு வேளை அவளிடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்? அர்ஜூன் இதயாவிடம் கேட்க, செத்து போயிடுவேன் என்றாள்.

என்ன இப்படி பேசுற? அர்ஜூன் மனதில் பயம் தொற்றியது.

ஒரு பொண்ணுக்கு உயிரை விட பெரியதென்றால் மானம் தான். அவள் வீடியோ மட்டும் வெளியே சென்றால் மறு நொடியே உயிரை விட்டு விடுவாள் கூறிக் கொண்டே அழுதாள்.

பயமுறுத்தாதே இதயா?

இல்லை அர்ஜூன். கண்டிப்பாக இது தான் நடக்கும் இப்பொழுதே நன்றாக சாப்பிட்டுக் கொள்.

இல்லை. என்னோட ஸ்ரீ அப்படி செய்ய மாட்டாள் பைத்தியம் போல் தலையை பிடித்து அர்ஜூன் சொன்னதையே மறுபடியும் சொல்வதை பார்த்து, இதயா அர்ஜூனை அறைந்தாள். வெளியே வந்த புவனா இதை பார்த்து அதிர்ந்தாள்.

இதயா கோபமாக, உன்னோட ஸ்ரீயா? அவள் கஷ்டப்படும் போது எங்கே தான் போய் தொலைந்தீர்கள்? சினத்துடன் கத்தினாள்.

அர்ஜூன் அவள் நிலை மிகவும் மோசமானது நீ அவள் பக்கமே இரு. உன் அருகே பெரியவர் யாராவது இருந்தால் நல்லது. இந்த விசயம் வெளியே சென்றால் கண்டிப்பாக அவள் இருக்க மாட்டாள். உனக்கு புரியுதா?

நீ திணறினால் அவளை யார் சரி செய்வது? எனக்கு புரியுது? அவளுடனான உன்னுடைய காதல் ஆழமானது பேசிய இதயா யோசனையோடு

அவள் உன் காதலை ஏற்கவில்லை தானே? என்று மனதினுள் அன்று நடந்ததை ஓட விட்டாள். ஸ்ரீயின் கலங்கிய விழிகள், அர்ஜூனின் சந்தோசம் என்று கண்ணை மூடியவள், ஸ்ரீக்கு அர்ஜூனை தான் பிடிக்கும். அவளும் அவனை காதலிக்கிறாள். நிதர்சனத்தை உணர்ந்தவள் அர்ஜூன் அருகே இருந்தால் மிகவும் வேதனைப்படுவாளே! என்று எண்ணினாள்.

அர்ஜூன் நீ நிதானமாகவும் பொறுமையுடனும் அவளை கையாள வேண்டும். அவளை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவளது வாழ்விற்கான பிடிப்பு அவளுக்கு வேண்டும் என்று இதயா கூறி விட்டு உள்ளே சென்று தருண் அறைக்குள் நுழைந்து, என் போன் என்று பதட்டமாக தேடினாள்.

என்ன? ஏதும் பிரச்சனையா?

பிரச்சனை இல்லை. ஒரு விசயம் என்று போனை எடுத்து தாரிகாவிற்கு போன் செய்து, நான் இதயா பேசுகிறேன். நான் கேட்பதற்கு உண்மையை மட்டும் சொல்லு?

என்ன? அமைதியாக தாரிகா கேட்டாள்.

ஸ்ரீ அர்ஜூனை தானே காதலிக்கிறாள்? போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

எனக்கு தெரியாது என்று அவள் கூற, நீ பொய் சொல்ற? அன்று உன் வீட்டில் ஸ்ரீயின் நடவடிக்கை மட்டுமல்ல,நீயும் சரியில்லை. உண்மையை சொல்கிறாயா? அர்ஜூனிடம் சொல்லவா? மிரட்டினாள் இதயா.

ப்ளீஸ் அவனிடம் எதையும் சொல்லாதே! ஆமாம் ஸ்ரீ அர்ஜூனை மட்டும் தான் காதலிக்கிறாள்.

அப்படியென்றால் ஏன் அர்ஜூன் காதலை சொன்ன போது புறக்கணித்தாள்?

அதை மட்டும் கேட்காதே! தாரிகா மண்றாடினாள்.

நீ சொல்ல வேண்டாம். நான் அர்ஜூனிடம் ஸ்ரீயை பற்றி சொன்னால் போதும். அவனே கண்டறிந்து விடுவான்.

சொல்லாதே தாரிகா பதறினாள்.

சொல்லப்போறியா? நான் அவனிடம் சொல்லவா?

சொல்கிறேன் என்று கமலியை பேசியதை கூற, தருண் அதிர்ந்து அவன் அம்மாவா? இப்படி பேசினாங்க?கேட்டான்.

தருண் சீனியர் நீங்களுமா?

ப்ளீஸ், அண்ணாவிடம் எதையும் சொல்லாதீங்க?

இது சரின்னு உனக்கு தோணுதா?

அவங்க ஸ்ரீயை பேசிய அன்று அவள் நிலையை யோசித்து பாருங்கள். அவன் அம்மா இவ்வாறு பேச, அவளால் எப்படி அவன் காதலை ஏற்றுக் கொள்ள முடியும். நீ காதலிக்கும் ஒருவனின் அம்மாவோ சொந்தங்களோ இப்படி பேசினால் உன்னால் அவனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

இதயா தருணை பார்த்து, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சீனியர், ஸ்ரீ முதலில் அவளுக்காக ஐந்து கோடி அம்மாவிடம் வாங்கியதையே ஏற்றுக் கொள்ளவில்லை. அர்ஜூன் தான் பேசியே அவளை சம்மதிக்க வைத்தான்.இப்பொழுது அவளை பற்றி தவறாக பேசுபவரின் குடும்பத்தில் எப்படி அவளால் இருக்க முடியும்?கொஞ்சம் அவள் பக்கமிருந்து பாருங்கள்.

சரி. நாங்கள் யாரிடமும் கூற மாட்டோம்.போனை அணைத்த இதயா சோர்வாக அவனருகே அமர்ந்தாள்.புவனா உள்ளே வந்தாள்.

நீங்க தான் அந்த தாவணி வாங்கிக் கொடுத்தீர்களா? கேட்டாள் இதயாவிடம்.

அவள் தருணை பார்க்க, அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

உனக்காக வாங்க வேண்டிய பணத்தில் தான் ஒரு அவசரத்தில் ஆடை எனக்கு வாங்கிக் கொடுத்தான். அதனால் உனக்கு வாங்கி தந்தேன்.

மேடம், பணத்திற்கு என்ன செய்தீர்கள்? முறைத்தவாறு தருண் கேட்க, என்னோட பாக்கெட் மணியும், அக்கா அம்மாவிடம் இருந்து அவங்களுக்கு தெரியாமல் கொஞ்ச கொஞ்சமாக எடுத்தேன் அசடு வழிந்தவாறு இருவரையும் பார்க்க, தருண் அவளை முறைத்தான்.ஆனால் புவனாவிற்கோ சிரிப்பு வந்தது.

நான் வாரேன் என்ற இதயா கையை பிடித்தாள் புவனா.இருவரும் அவளை பயத்துடன் நோக்க, நீங்க போனா? அவனுக்கு யார் சாப்பாடு கொடுப்பது? புன்னகையுடன் கேட்டுக் கொண்டே, அர்ஜூனிடம் நீங்கள் பேசியதை கேட்டேன்.அக்கா ரொம்ப கஷ்டப்படுவது போல் தான் நடந்துள்ளதோ? இதயா காதருகே வினவ, அவள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, ஆம் என்று தலையசைத்தாள்.

அண்ணா,நீ சாப்பிடு. நான் அப்புறம் வருகிறேன் அவனிடம் கண்ணடித்து, இதயா கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு சென்றாள் புவனா. இதயா அதிர, அவளுக்கு உன்னை பிடித்து விட்டதாம் எப்படி சொல்லி விட்டு செல்கிறாள் என்று பெருமூச்சுடன்.

ம்ம். எனக்கு தான் யாரும் அப்படி சொல்ல மாட்டிக்கிறாங்க என்றான் குறும்புடன் மெதுவாக. அவள் முகம் சிவக்க, அதை பார்த்து அழகாக இருக்கு. இங்கே வா என்று அவளை கட்டிலிலே அமர்த்தி அவளை காதலித்துக் கொண்டே சாப்பிட்டான்.

துகிரா எண்ணிற்கு அழைப்பு வந்தது.ஆதேஷ் அவளது போனை வைத்திருந்தான். அனைவர் கவனமும் அவன் மீது விழ, துகிரா அவனை பயத்துடன் பார்த்தாள்.

ஆதேஷ் அவளை பார்த்து விட்டு போனை வைக்க மீண்டும் அழைத்தது. அவள் பயந்தாலும் ஆதேஷிற்கும் தன்னால் பிரச்சனை வந்து விடுமோ என்று அவனிடம் போனை பறித்து பேசினாள்.

வாரேன் என்று எல்லாரையும் பார்த்து விட்டு, ஆதேஷிடம் வந்து ஆன்ட்டியை பார்த்துக் கொள் என்று அவனை அணைத்து விடுவித்து வேகமாக ஓடினாள்.

துகி நில்லு, நீ என்ன சொன்ன? நீ தனியே போகாதே? அவள் பக்கம் சென்றான்.

நோ ஜில்லா..என் அருகே வராதே என்று அங்கிருந்த  கண்ணாடியால பொருள் ஒன்றை எடுத்து உடைத்து அவளது கழுத்திலே வைத்தாள். அனைவரும் திகைத்து விழிக்க, அவளுக்கு பின்னே இருந்த அறையிலிருந்து கவின் அவளை பிடிக்க அவள் கையிலிருந்ததை நழுவ விட்டாள்.

கவினையும் தள்ளி விட்டு அவள் ஓடிக் கொண்டே, யாரும் வராதீங்க.. சத்தமிட்டாள். அங்கிருந்த செவிலியர் அவள் காலை தட்டி விட கீழே விழுந்தாள்.

மறுபடியும் அவளுக்கு போன் வந்தது.அவள் எழுவதற்குள் அனைவரும் அவளிடம் வந்தனர்.

போனை கொடு என்று தீனா அவளருகே வந்தான்.

முடியாது என்று அவள் எழுந்து பின் செல்ல, அங்கே ஜானு நின்றிருந்தாள். அவளை தள்ளி விட்டு துகி ஓடலாம் என்று தள்ளி விட, ஜானு துகியையும் இழுத்து இருவரும் கீழே விழுந்தனர்.

வீடியோ கால் ஆனாக,.போனை மறைத்தாள் துகி.

ஜானு போனை பிடுங்க, நோ..ஜானு. நீ அவங்க கன்ணுல நீ பட வேண்டாம். அவளை அடித்து விட்டு வெளியே வர, அப்பொழுதும் ஜானு விடாமல் அவளது போனை வாங்க, அதில் பத்து பசங்களாவது இருப்பார்கள். அவர்கள் ஜானுவை பார்த்து,

ஹே..இங்க பாருடா. புதுசா இருக்காடா ஒரு பொண்ணு.

பட்டென போனை பிடுங்கிய துகி, ஜானுவை அறைந்தாள். அவங்க உன்னை பார்த்துட்டாங்க என்று அழுதாள். பிரதீப்பும், தீனாவும் துகியை முற்றுகையிட மற்றவரும் வந்து போனை கொடு என்றனர்.அவள் கொஞ்சமும் தயங்காது பிரதீப் மார்பில் கையை வைத்து அழுத்தத்துடன் தள்ள, அவன் நகரவேயில்லை.அவனது கை இடுக்கில் புகுந்து வெளியே ஓடி வந்தாள். அப்பொழுது அங்கே வந்த கருப்பு நிற கார் அவளை பிடித்து இழுத்து உள்ளே போட்டு சென்றது. ஆதேஷ் அழ ஆரம்பித்தான்.

பிரதீப்பிடம் தான் சொன்னாலே.அவங்க அப்பா அவளுக்கென பார்த்தவனை பற்றி.வேகமாக அவரவர் வண்டியை எடுக்க சொன்னான். பிரதீப்புடன் தீனாவும் கிளம்ப நானும் வருவேன் என்று ஜானு பிடிவாதமாக அண்ணன்களுடன் ஏறினாள்.அர்ஜூனுடன் கவினும் ஆதேஷும் அந்த காரை பின் தொடர்ந்தனர்.

காரில் அந்த பசங்க கத்தும் சத்தத்தை கேட்டனர். இடையே புகுந்து ஜூப்பை நிறுத்தினான் தீனா.கார் சட்டென நின்றது அந்த பசங்க தெறித்து வெளியே வந்தனர். துகியின் தலையில் இருந்த கிளிப் ஒருவன் தொடையில் அழுந்தி இரத்ததுடன் இருந்தான். மற்றொருவனை காதில் கடித்து வைத்திருந்தாள். மற்றவர்களையும் அங்கங்கு தாக்கி இருந்தாள்.

வெளியே துகி வரவும், உனக்கு எவ்வளவு தைரியம்டி? ஒருவன் அவளது கன்னத்தில் அறைந்தான். மற்றொருவன் கொத்தாக முடியை பிடித்து இழுத்தான்.

ஆதேஷும் மற்றவர்களும் பதறி அவளருகே வந்தனர். ஒருவனது தொடையை கிழித்து வைத்திருந்தாலே அவன் துகி கழுத்தை நெறித்துக் கொண்டு, எங்களருகே யார் வந்தாலும் இவள் செத்து விடுவாள் என்று மிரட்டினான்.

அவளை விடுங்கடா. உங்களுக்கு வேண்டிய பொண்ணை அதற்கான இடத்தில் சென்று எடுத்துக்கங்கடா.துகியை விடுங்க கெஞ்சினாள்.

துகி இரும, அவளை விடுங்கடா. அவள் எனக்கு தங்கை மாதிரிடா என்று ஆதேஷ் கோபப்பட்டான். மற்றவர்கள் அவனையே பார்த்தனர்.

சரி இவளை விடுகிறோம் அந்த பொண்ணை என்னிடம் விட்டு செல்லுங்கள் ஜானுவை கை காட்டினான் அவர்களில் ஒருவன்.ஆதேஷ் ஜானுவை பார்த்து விட்டு முடியாது என்றவாறு பிரதீப்பை பார்த்தான். அவன் கையை முறுக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நிற்க, அதே போல் தீனாவும் அவர்களை கண்ணாலே எறித்துக் கொண்டிருந்தான்.

என்னடா கேட்டுக் கொண்டிருக்கிறாய்? போய் அவளை இழுத்து வாடா.

ஜானு பிரதீப் பின் மறைய, அவளருகே வந்து ஒருவன் அவளது கையை பிடிப்பதற்குள் அவன் மூச்சு நின்று கீழே சரிந்தான். இரு அண்ணங்களும் ஆளுக்கொரு அடி தான். அவன் கதை முடிந்தது. அதை பார்த்து பயந்தவர்கள், வாங்கடா போயிடலாம் என்று அழைத்தான்.

நாம பத்து பேர். இவங்க ஐந்து பேரை சமாளிக்க முடியாதா? கேட்டான்.

பிரதீப்பும் தீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, மற்றவர்களிடம் சைகை செய்தனர்.ஆதேஷ் புரியாமல் விழித்தான்.

             “ஆருயிரானவளே!

    நீ பிரிந்த துயரில் ஆழ்ந்தேன் முன்பு

    நீ தனியில்லாது காப்பேன் இனியாவது

    என்ன நடந்தாலும் நீ என் காதலி தானே

             விருப்புடன் மணப்பேன்

                 உனை நானே!

      அந்நாளுக்காக காத்திருப்பேன்

              உனக்காக மட்டுமே!”