வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-76
188
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 76.
நண்பர்கள் சென்ற பின் சத்தம் கொடுக்காமல் அர்ஜூன் ஸ்ரீ அறையை வேகமாக தட்டினான். அவள் வருத்தமுடன் போனில் அர்ஜூன் மற்றும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தவாறு படுத்திருப்பாள்.அவள் அறையில் நுழைந்த போது கமலி பேசியதை நினைத்து அழுதிருப்பாள். அது யாருக்கும் தெரியாமலிருக்க, குளித்து வந்து தான் புகைப்படத்தை பார்த்தவாறு படுத்திருப்பாள்.
வாரேன் என்று எழுந்து வந்து கதவை திறந்தாள் ஸ்ரீ. அர்ஜூன் உள்ளே வந்து கதவை சாத்தினான்.
அர்ஜூன்..என்ன பண்ற? எல்லாரும் என்ன நினைப்பாங்க? என்று கதவருகே வந்தாள். அவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு, அவளுக்கு சாப்பிட கொடுத்தான்.யாருமே வீட்டில் இல்லை என்றான்.
தள்ளி போடா..என்று அவனை விலக்கி விட்டு, சாப்பிட வெளியே நகர, அவளை பிடித்து நிறுத்தி அவனது கைக்குள் அவளை வைத்துக் கொண்டு அவளது கண்களையே பார்த்தான்.
விடு அர்ஜூன்..என்று அவள் மீண்டும் வெளியே வர முயல, நீ இங்கேயே சாப்பிடு என்று அமர வைத்து, அவள் சாப்பிடுவதை பார்த்தான்.
நீ இப்படி பார்த்தால் நான் எப்படி சாப்பிடுவேன்?
தெரியுதுல.எனக்கும் கொடு என்று வாயை திறந்தான். பதில் ஏதும் கூறாமல் அவளும் கொடுத்தாள். சாப்பிட்டு விட்டு, நீ கிளம்பு என்றாள்.
கிளம்பவா நான் வந்தேன்? கேட்டான்
அப்புறம் என்ன?
நேற்று இரவு அக்கா வீட்டில் உன்னை அனுவுடன் அறையில் நெருக்கமாக பார்த்தவுடன், உன்னுடன் அவளுடன் அப்படியே சேர்ந்து வாழ வேண்டும் போல உள்ளது. உனக்கு தான் நாங்கள் யார் என்று தான் தெரிந்து விட்டதுல.உன்னை எத்தனை வருடங்களாக காதலிக்கிறேன். எனக்கு நீ வேண்டும் ஸ்ரீ என்று காதலை கூறினான் அர்ஜூன்.
அவள் அதிர்ந்து அவனை பார்த்தாலும் அதே பழைய நிலையில் தான் இருக்கிறேன் அர்ஜூன். நான் என் காதலை கூறினால் நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு தெரியும்.என்னாலும் முடியவில்லை. நான் முன்னே காதலை சொல்ல வந்தேன். ஆனால் உன் அம்மாவால் தடைபட்டு விட்டது. என் மனசு முழுவதும் நீ மட்டும் தான் இருக்க.ஆனால் உன் காதலை நான் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை மனதில் நினைத்தவாறு அவனை பார்த்தாள்.
அவள் அமைதியாக இருப்பதை கண்ட அர்ஜூன் ஸ்ரீக்கு முத்தம் கொடுக்க வந்தான்.
அவள் மனதை கல்லாக்கிக் கொண்டு, அவளது உணர்வுகளை கட்டுபடுத்தியவள் நான் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள் அர்ஜூன். என்னால் உன்னை காதலிக்கவோ, கல்யாணம் செய்யவோ முடியாது. என் வாழ்வு ஜிதினோடு தான்.
அவன் கோபமாக, அவளை சுவற்றில் தள்ளியவன். கோவிலில் உன் நெற்றியில் விழுந்த குங்குமம் என் கையிலிருந்தது. அப்பொழுதே என் மனதை மாற்றி உன்னை அகிலுக்கே விட்டு கொடுக்க முடியாது என்று முடிவெடுத்து விட்டேன்.ஜிதின் எனக்கு போட்டியாக இருக்க முடியாது என்றான். நீ எனக்கு மட்டும் தான் புரியுதா? கோபப்பட்டான். ஸ்ரீ ஒரு நிமிடம் பயந்து விட்டால் அர்ஜூன் செய்கையில்.
இல்ல அர்ஜூன்.நான் முடிவெடுத்து விட்டேன். நான் ஜிதினை மட்டும் தான் கல்யாணம் செய்து கொள்வேன் எந்நிலையிலும்.
ஓ..அப்படியா? மேடம் முடிவெடுத்திட்டீங்களா?என்று அவளை தூக்கி கட்டிலில் போட்டு, அவள் மீது படர்ந்தான்.
அர்ஜூன்..விடு..அர்ஜூன் ப்ளீஸ் என்றாள்.சினத்துடன் அவளை பார்த்தவன் கண்களில் கண்ணீருடன் அவளது இதழ்களில் ஆக்ரோசமாக முத்தமிட தொடங்கினான். பின் அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து முத்தமிட்டான். அவள் கண்ணில் நீர் நிற்காமல் வரவே, அவளை விடுத்து எழுந்து, என்னை என்ன செய்ய வைச்சுட்ட? கத்தினான். இனி எவனுடனும் போ..ஆனால் உனக்கு நான் மட்டும் தான் நினைவிருப்பேன் என்றான்.
சீற்றத்துடன் எழுந்த ஸ்ரீ, அர்ஜூனை அடித்துக் கொண்டு, என்னடா சொன்ன? என்னடா சொன்ன? எவனுடனும் போவா? என்று அவனது அம்மா போலே கூறி விட்டானே! என்று அழுதாள். அவனும் அழுது கொண்டு அங்கேயே உட்கார்ந்தான் தலையை பிடித்துக் கொண்டு.
உனக்கு என்னடா நான் தான வேண்டும்? என்று ஸ்ரீ அர்ஜூனை அணைத்து விடுவித்து, அவளது ஆடையை களைந்தாள். அதற்குள் அவன் தடுத்து,
என்னடி பண்ற? கன்னத்தில் அறைந்து விட்டு, உன்னுடைய உடம்பு வேணும்னா? நான் என்றோ அடைந்திருப்பேன். இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. என் காதலை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டேல என்று கத்தினான்.
ஸ்ரீ கண்ணீருடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் போட்ட சத்தத்தில் நித்தி, யாசு உள்ளே வந்து அவனை பார்த்து திகைத்தனர். கவினும் தாரிகாவும் அப்பொழுது தான் உள்ளே வந்தனர்.
அர்ஜூன் கண்கள் சிவந்து வியர்த்து நின்றிருந்தான். அவன் நிற்க முடியாமல் தடுமாறினான்.
அர்ச்சு? என்னடா ஆச்சு? ஸ்ரீ என்று அவளையும் பார்த்தனர்.
தாரிகா ஸ்ரீ அருகே செல்ல,அர்ஜூன் கோபமாக வெளியே சென்றான். ஸ்ரீ நிதானமில்லாது அறை கதவை பூட்ட, தாரிகா கவினிடம் அர்ஜூனை பாருங்க சீனியர் சொன்னவுடன் அவனும் வெளியே கிளம்பினான். நித்தி, யாசு ஸ்ரீயை அழைத்தனர்.
சீனியர்,கொஞ்ச நேரம் அவளிடம் நான் பேசி வருகிறேன் சத்தம் கொடுக்க, ஏதும் புரியாத நிலையில் இருவரும் அமர்ந்தனர்.
அர்ஜூன் வண்டியை எடுத்து எங்கோ கிளம்ப, கவினும் பின் தொடர்ந்தான்.
ஸ்ரீ தாரிகாவை அணைத்துக் கொண்டு, என்னால் முடியவில்லை தாரி. மனசு ரொம்ப வலிக்குது. என்னோட அர்ஜூனை தெரிந்தே காயப்படுத்தும் நிலை வந்து விட்டதே! கதறி கதறி அழுதாள்.
எனக்கு தெரியும் ஸ்ரீ?அம்மா சொன்னாங்க? நீ உண்மையாவே அண்ணாவை காதலிக்கிறாயா? கேட்டாள்.
அம்மா சொன்னாங்களா? ஸ்ரீ கேட்டாள்.
ஆம். அவங்க கிட்ட அர்ஜூன் அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. ஆனா அவங்களையும் மிரட்டி தான் அனுப்பி இருக்காங்க. இதில் அவன் என்னுடைய இரத்த சம்பந்தமுள்ள அண்ணன் வேறு.
தாரி,நீ என்னுடன் பேசமாக இருக்க மாட்டேல ஸ்ரீ கேட்டாள்.
எனக்கு நீ தான் முக்கியம். அர்ஜூனை விடப் போகிறாயா? உன்னுடைய காதல்? கேட்டாள் தாரிகா.
என்னுடைய காதல் என் மனதினுள் தான் இருக்கும் என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சொன்னாள். அவனுடைய காதலை அவமானப்படுத்தி விட்டேன். தெரிந்து தான் செய்தேன். கொஞ்ச நாட்கள் தான். நான் உண்மையாகவே ஜிதினை மணக்கவா? வேண்டாமா? யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களை பற்றி கமலி ஆன்ட்டிக்கு தெரிந்தால் என்ன பண்ணுவாங்களோ! ஸ்ரீ கூற,
தெரியும் ஸ்ரீ. அவங்களுக்கு என்னுடைய அம்மாவை பற்றி தெரிந்து தான் அர்ஜூனை இங்கே வர, போக விட்டுருக்காங்க என்றாள் தாரிகா.
என்ன சொல்ற?
அவன் எங்களுடன் இப்பொழுதைக்கு இருப்பது பிரச்சனை இல்லையாம்.மருத்துவமனைக்கு வந்து அப்பாவை பார்த்து விட்டு, நீ இனி உன்னுடைய குடும்பத்துடன் இருந்து அவர்களை பார்த்துக் கொண்டு, திருந்தி வாழப் பார் என்றார்கள்.
நல்லது தாரி. நீங்க எல்லாரும் கடைசி வரை அவனுடன் இருங்க என்றாள்.
நீ என்ன சொல்ல வர?
நான் சொல்வது யாருக்கும் தெரியக் கூடாது. நான் கொஞ்ச நாட்கள் உங்களுடன் இருப்பேன்.கடைசியாக என் கல்யாணத்தை வைத்து அவளை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சிக்க போகிறேன். இல்லையெனில் என் சாவு நிச்சயம் தான். இந்நிலையில் அர்ஜூனுக்கு ஓ.கே சொல்லி, அவன் ஆசையை வளர்த்து பாதியில் விட்டு செல்வது நன்றாக இராது.ஒரு வேலை அவளிடமிருந்து தப்பினாலும் அர்ஜூன் அருகே வரப் போறதில்லை. அவனுடைய அம்மா சொன்னது போல் வெளிநாடு செல்வது என்று நினைக்கிறேன்.நினைத்து தான் வைத்திருக்கிறேன். முடிவெடுக்கவில்லை என்றாள் ஸ்ரீ. எனக்கு அர்ஜூன் மேல் உள்ள காதல் கூட யாருக்கும் தெரியக்கூடாது என்று தாரிகாவிடம் சத்தியம் வாங்கினாள்.
ஓ.கே ஸ்ரீ. ஆனால் ஒரு முறை நன்றாக யோசித்து முடிவெடு. அவன் உன் மீது அதீத காதலுடன் உள்ளான்.இது போன்ற காதலெல்லாம் இனி கிடைப்பது அரிது.
தெரியும் தாரி. அவன் போல் யாரும் காதலிக்க மாட்டார்கள். என்னால் அவனை விட்டு இருக்க முடியாது. என்ன நடக்குதுன்னு தான் பார்ப்போம் என்றவாறு நான் என்னுடைய அங்கிள் யார் என்பதை தெரிந்து கொண்டேன். அவரை காப்பாற்றும் வரை ஓய மாட்டேன். அவரும் எனக்கு அப்பா போல் தான் என்று மனதினுள் நினைத்தாள். யாரிடமும் அவரை பற்றி பேசுவது ஆபத்து. நான் தான் இதை சரி செய்ய வேண்டும்.
தாரி சீனியர் கிட்ட, அவன் காதலை கூறி நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறு. அவர்களுக்கே புரியும் அவன் செயல்.நான் தனியே இருக்க வேண்டும் என்றாள் ஸ்ரீ.
ஸ்ரீ அர்ஜூன் அம்மா பேசியதை எண்ணிக் கொண்டு உன்னையே வருத்திக் கொண்டிருக்காத.அப்புறம் அர்ஜூன்..அவள் வாயெடுக்க, ப்ளீஸ் தாரி என்னால் முடியல என்று ஸ்ரீ அழ, அவளை அணைத்து ஆறுதல் கூறி விட்டு வெளியே வந்து நித்தி, யாசுவிடம் கூறினாள்.
ஸ்ரீ யோசிக்கிறேன் என்றாவது ஸ்ரீ கூறி இருக்கலாமே! நித்தி கூற, தாரிகாவிற்கு அவன் அம்மா பேசியதை நினைத்து அமைதியாக இருந்தாள். யாசு அவளை சந்தேகத்துடன் பார்த்தாள்.
அர்ஜூன் யாருமில்லா காடர்ந்த ஹைவேயில் ஓரமாக நிறுத்தி விட்டு காட்டிற்குள் நடந்தான். கவினும் அர்ஜூன் வண்டியை பார்த்து, அவனும் நிறுத்தி விட்டு நடக்க இருட்டினுள் பயந்து கொண்டே சென்றான். வழி தெரியாமல் அர்ஜூன் என்று கத்த ஆரம்பித்தான்.
வேகமாக ஓடி வந்த அர்ஜூன் கவின் வாயை பொத்தி விட்டு, இது காடு.சிங்கம் புலியெல்லாம் இருக்கும்.இப்படி கத்துற? சும்மாவே அதுக்கு நம்முடைய இரத்த வாசமே காட்டிக் கொடுக்கும். நீ வேற..
அடப்பாவி, இந்த காட்டுக்குள்ள வந்து மாட்டி விட்டியேடா அர்ச்சு புலம்பினான் கவின்.
கவின்..ஓடு..என்று அர்ச்சு கவின் கையை பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான்.இருவரும் ஓடிக் கொண்டிருக்க வௌவால் சத்தம் வேறு.
உனக்காக வந்தால் நான் செத்திடுவேன் போலவே..புலம்பிக் கொண்டே கவின் ஓடினான்.
வாயை மூடிக் கொண்டு வாடா என்று தொடர்ந்து ஓடி ஒரு வழியாக வந்து சேர்ந்தனர் ஹைவே ரோட்டருகே. வண்டியை எடு..சீக்கிரம் என்று அவசரப்படுத்தினான் அர்ஜூன்.
பாவி பாவி என்று திட்டிக் கொண்டு கவினும் வண்டியை எடுத்து எப்படியோ வந்து சேர்ந்தனர்.ஹோட்டலும் எதிரே பாரும் இருந்தது.
வாடா..என்று கவினையும் இழுத்துக் கொண்டு பாருக்குள் நுழைந்தனர்.குடிக்க ஆரம்பித்தான் அர்ஜூன். மனதிலிருந்த அனைத்தும் வெளியே ஆரம்பித்தது. கவினும் குடித்தான். அர்ஜூன் சொல்ல ஆரம்பித்தான்.கோவிலில் நடந்தது, வினிதா அக்கா வீட்டில் நடந்தது முதல் இப்பொழுது நடந்தது வரை சொல்லி, என்னை மறுபடியும் வேண்டாம்னு சொல்லிட்டா டா என்று அழுதான் அர்ஜூன்.கவின் குடித்ததால் அவனுக்கு கேட்டதா? என்று தெரியவில்லை.