ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

இனிய இரவு வணக்கம்.

இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 64..

அக்கா..வாங்க உள்ளே போகலாம் பாப்பா தேடப் போறாள் என்று ஸ்ரீ கூற, இவகிட்ட இதுக்கு மேல என்னத்தை பேச என்று அக்கா நினைத்துக் கொண்டே எழுந்தார்.அகிலும் அர்ஜூனும் அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

அர்ஜூன்..என்று ஓடி வந்து அவளை மேகா அணைத்தாள். நந்து அவர்கள் அருகே வர, பாடல் போட்டு அனுவுடன் ஆடிக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் நின்றனர்.

அவள் அர்ச்சுவை அணைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அனு..அர்ச்சுவிடம் ஓடி வந்தாள்.

அர்ஜூன் என்று அனு கையை தூக்க, அர்ச்சு மேகாவை விலக்கி விட்டு அனுவை தூக்கினான்.வினிதாவுடன் வந்த ஸ்ரீ அர்ச்சுவை மேகா அணைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே நின்றாள்.

வினிதா ஸ்ரீயை திரும்பி பார்த்து அழைத்து வந்தார்.ஸ்ரீ நேராக நித்தி யாசு அருகே சென்றாள்.

அவர்கள் மேகாவை பார்த்து,இவளும் அர்ச்சு மாதிரி பணக்கார பொண்ணு தான் போல.

நித்தி, அவளுக்கு அர்ச்சு மீது கண்ணிருப்பதாக தெரிகிறது யாசு கூற, அங்கே பாருங்க..அவள் அனுவை முறைத்துக் கொண்டிருக்கிறாள் என்றான் கவின். தாரிகா அவனது கையில் கிள்ள,ஆவென்று கத்தினான். அனைவரும் அவனை பார்க்க,ஒன்றுமில்லை.எறும்பு கடித்து விட்டது என்றான்.

தாரிகா அவனை முறைத்துக் கொண்டே, அவளது கண்ணாலே ஸ்ரீயை காட்ட,கவின்,நித்தி,யாசு திரும்பி பார்த்து அசடு வழிந்தனர் ஸ்ரீயை பார்த்து.

அவள் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் பேசியது மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அமைதியாக அமர்ந்தாள் ஸ்ரீ.

என்ன ஸ்ரீ? ஏதும் பிரச்சனையா? அமைதியாக இருக்கிறாய்? அபி கேட்டான்.

இல்லை சீனியர்.எனக்கு அம்மா நினைவு வந்துவிட்டது என்றாள்.எல்லாரும் அமைதியானார்கள்.

அனு ஸ்ரீயை பார்த்து, ஏஞ்சல் என்று அழைக்க,அர்ஜூன் அவளை பார்த்தான். பின் அனுவை இறக்கி விட,அவள் நேராக ஸ்ரீயிடம் ஓட..அவளை தூக்கி அவளுடன் பேசினாள்.

நாம..ஆடலாமா? ஸ்ரீயிடம் கேட்டாள் அனு பாப்பா. அவள் மற்றவர்களை பார்க்க,அவர்கள் ஓ.கே என்று விரல் உயர்த்த, எழுந்து கலகலப்புடன் எஞ்சாய் செய்தனர்.ஸ்ரீயும் அவர்களுடன் கலந்து கொண்டாள்.

அர்ச்சு நந்து மேகாவிடன், ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டான். இவள் தான்…என்று நந்து கூற, அவன் தான் என்று மேகா கூற, இருவரும் முறைத்துக் கொண்டனர்.

மேகா ஸ்ரீயை பார்த்து விட்டு வினிதா அக்காவிடம், பிறந்தநாள் உங்க பொண்ணுக்கா? இல்லை..இவளுக்கா? கேட்டாள்.

மற்றவர்கள் ஆட்டத்தில் மும்பரமாக இருக்க, இதை கேட்ட கவனித்த தாரிகாவும் நிவாஸும் அங்கே வந்தனர்.அக்கா பதில் கூறுவதற்கு முன்னே..

தாரிகா, அவள் ஆடையிலோ,மனதிலோ குறை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் உங்களது ஆடை தான் மிகவும் குறைவாக உள்ளது என்றாள் ஏளனமாக.

உனக்கு எவ்வளவு திமிறு? என்று அவளை அடிக்க கையை ஓங்கினாள் மேகா.

ஓய்..யாரு மேல கையை வைக்கிற? கவின் அவளை தடுத்தான். தாரிகா அர்ஜூனை முறைத்தாள்.

மேகா சும்மா இரு என்றான் அர்ஜூன்.அவள் அர்ஜூன் சொன்னதை கண்டுகொள்ளவே இல்லை.

என்ன லவ்வா? மேகா கவினிடம் கேட்டு விட்டு, உன்னோட ஆளை சும்மா இருக்க சொல்லு என்றாள்.அனைவரும் அங்கே வந்தனர்.

நான் உன்னை என்ன செய்தேன்? கேட்டதற்கு பதில் கூறினேன். அதற்கெல்லாம் கையை ஓங்குகிறாய்? நான் உண்மையை தானே சொன்னேன்.

வாட்? நீ மறுபடியும் என்னை கோபப்படுத்துகிறாய்? மேகா கூற,

நானா? கிண்டலாக தாரிகா கேட்டாள்.

சினத்துடன் மேகா, தாரிகாவை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிக்க, தடுக்க வந்த ஸ்ரீ மீது அடிபட்டது.

அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு, தாரிகாவை அழைக்க அவள் துள்ளிக் கொண்டு, என்னோட ஸ்ரீயையே அடித்து விட்டாயா? அவள் கத்தினாள்.

ஸ்ரீ உதவிக்காக கவினை பார்க்க, தாரிகாவை இழுத்துக் கொண்டு நித்தியை பார்த்த படி உள்ளே சென்றனர்.

அகில் மேகா அருகே வந்து, நீ உன்னோட வேலையை மட்டும் பார்த்தால் நல்லது.அவள் எந்த ஆடை அணிந்திருந்தால் உனக்கென்ன? அடுத்த முறை சொல்ல மாட்டேன் என்று மிரட்டி விட்டு அர்ஜூனை பார்த்தான்.

அர்ஜூன் மேகாவை முறைத்துக் கொண்டிருந்தான். அனைவரும் உள்ளே செல்ல,

வினிதா அக்கா மேகாவிடம் வந்து, அவள் இன்று தான் இது போல் ஆடை அணிந்தாள். இன்று கூட நாங்கள் தான் கட்டாயப்படுத்தி அணிய வைத்தோம். இனி ஆசைப்பட்டாலும் அணிய மாட்டாள். நீ கவலைப்பட தேவையில்லை என்று விட்டு அக்காவும் அர்ஜூனை முறைத்து விட்டு,

வா..அனு சாப்பிட போகலாம் என்று குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்ப,

அம்மா,ஏஞ்சல் என்றாள் பாப்பா.

வா..அவளை பார்த்து விட்டு செல்லலாம் என்று அவர்களும் உள்ளே சென்றனர்.

நிவாஸ் அர்ஜூன் அருகே வந்து, உனக்காக தான் எல்லாரும் பேசியதோட விட்டுடாங்க.ஆனால் அவ என்னோட அக்கா என்று அர்ஜூனிடம் பேசிக் கொண்டே, மேகாவை அடித்து விட்டான்.

நிவாஸ்..என்று அர்ச்சு அவனருகே வர, ஓ…சாருக்கு வலிக்குதா? ஏளனமாக கேட்டு விட்டு, அவளுக்கும் வலித்திருக்கும் என்றான்.

இல்லை நிவாஸ் என்று அர்ஜூன் பேச,ம்ம்..எதுவும் இல்லை தான் என்றான்.

நிவாஸ்..அர்ச்சு அழைக்க,அவனும் உள்ளே சென்று விட்டான்.அபி மேகாவை முறைத்துக் கொண்டே சென்றான்.

தாரிகாவை சமாதானப்படுத்த கவினும் மற்றவர்களும் முயற்சி செய்ய,அவள் கேட்கவே இல்லை.

என்ன திமிரு அவளுக்கு?பணக்காரவங்களே இப்படி தான். ஆனால் அர்ஜூன் பார்த்தீங்களா? என்று தாரிகா கோபப்பட,

தாரி ஏன் இப்படி டென்சன் ஆகுற? ஸ்ரீ கேட்டாள்.

அவள் பேசியதை கூற, நித்தியும் கோபத்துடன் எழ,

என்னன்னு தெரியாமல அவளை அடிச்ச? நிவாஸிடம் அபி கேட்டான்.

தெரிஞ்சு தான் அடிச்சேன்.

என்ன அடிச்சானா? ஸ்ரீ நிவாஸை திட்ட ஆரம்பித்தான்.

அவள் என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கட்டும்.அதற்காக அடிப்பாயா? ஒரு பொண்ண எப்படி டா கையை ஓங்குவ? ஸ்ரீ அவனை அடிக்க வந்தாள். அனைவரும் ஸ்ரீயை தடுத்தனர்.

நிவாஸும் கோபமாக, வரவ..போறவல்லாம்..உன்னை அடிப்பா.என்னை வேடிக்கை பார்க்க சொல்றியா?கத்தினான்.

டேய், தெரியாம என் மேல பட்டுடுச்சுடா..அதற்கெல்லாம் அடிப்பாயா?

உன் மேல கைய வைச்சா.அது பொண்ணா இருந்தா என்ன? பையனா இருந்தா என்ன? என்னால சும்மா இருக்க முடியாது கோபமாக கூறி விட்டு வெளியே வந்தான்.

அர்ஜூன், மேகா, நந்து ஸ்ரீ பேசியதை கேட்டுக் கொண்டு இருந்திருப்பார்கள்.

நிவாஸ் என்று அர்ஜூன் அழைக்க,அவன் கண்டு கொள்ளாமல்  சென்றான். அவன் பின்னே மற்றவர்கள் வந்தனர்.ஸ்ரீ ஓடி வந்து நிவாஸை பிடித்து,

ஏன்டா சின்ன விசயத்துக்கு இவ்வளவு கோபப்படுற?

சின்ன விசயமென்று அவளே கூறி விட்டாலே உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை? திமிறாக மேகா கேட்க, அர்ஜூனும் அவளை அடித்தான்.

என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவன் மேகாவை திட்ட, அவள் நந்துவை பார்த்தாள். அவனும் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். மேகா அழ ஆரம்பித்தாள்.

ஸ்ரீ நண்பர்களை கவனிக்க,அர்ஜூனை அவர்கள் கோபத்துடன் பார்ப்பதை கண்டு,

ஆமாம்.எதற்கு அர்ஜூன் மீது எல்லாரும் கோபப்படுகிறீர்கள்? அவன் என்ன செய்தான்? என்று ஸ்ரீ கேட்டாள்.

அவனுடைய ப்ரெண்ட்டு தானே அந்த பொண்ணு.அடிக்கும் முன் தடுக்க வேண்டாமா? கவின் கேட்டான்.

அன்று உன் மீதிருந்த கோபத்தில் உன்னை பற்றி பேசியதற்கே..வரிந்து கட்டிக் கொண்டு முன் வந்தான். இன்று எங்கே போனான்? யாசு கேட்டாள்.

அது..ஸ்ரீ இழுத்தாள்.

ஸ்ரீ, இதற்கு பதில் உன்னால் மட்டுமல்ல அவனாலும் கூற முடியாது அபி கூறினான்.அர்ஜூன் தலைகவிழ்ந்து நின்றான்.

அதற்கு மேகா நீங்கள் எல்லாரும் அவனுக்கு ப்ரெண்ட்ஸ் மட்டும் தான். ஆனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்றாள் கண்ணை துடைத்துக் கொண்டு.

ஏய்,நீ என்ன பேசுற? அர்ஜூன் அவளது கழுத்தை பிடித்தான்.நந்து அமைதியாக நின்றான். ஸ்ரீயின் கண்கள் கலங்கியது.

வாவ்,கிரேட் மிஸ்டர் அர்ஜூன் என்று கை தட்டிக் கொண்டு அகில் அவனருகே வந்து, அர்ஜூனை அடித்து விட்டு,நீ டிராமா ப்ளே பண்ணிக்கிட்டு இருக்கியா? அவனது வயிற்றிலே குத்தினான்.

சீனியர் என்ற குரலுடன், ஸ்ரீ அர்ஜூனருகே வந்து அவனை மறித்து நின்றாள். பின் அர்ஜூன் பக்கம் திரும்பி..

அர்ஜூன், நீ ஓ.கே தானே? என்று கேட்டாள்.

அவன் அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை பார்த்தவாறு பதிலளிக்காமல் இருந்தான்.

ஸ்ரீ..வழி விடு என்றான் அகில்.

இல்லை.அவன் என்னவாது செய்யட்டும்.அதற்காக அடிப்பீர்களா?

என்ன பேசுற ஸ்ரீ? நித்தி அருகே வந்தாள். தாரிகாவும் அர்ச்சுவை உற்றுப்பார்த்தாள். ஆனால் அவனோ ஸ்ரீயை பார்த்தவாறு நின்றான்.

அகில் ஸ்ரீயை விலக்கி அர்ச்சுவை அடிக்க வர தடுத்தான் கவின்.

கவின் வேண்டாம்.வழிவிடு..என்றான் அகில்.

முடியாது டா.எனக்கு அர்ஜூன் பற்றி நன்றாக தெரியும் என்றான் கவின். தாரிகா, நிவாஸிற்கும் அர்ச்சுவின் அறை நினைவிற்கு வரவே,அவர்களும் அவனை மறைத்து நின்றனர். நித்தி யாசுவிற்கு தான் ஏற்கனவே அர்ச்சுவின் காதலை பற்றி தெரியும் தானே! அவர்களும் சேர்ந்து அவனை மறைக்க அகிலுக்கு கோபம் அதிகமானது.அபி மட்டும் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தான்.

பின் அகில் அருகே வந்து, முதலில் அவனிடம் பேசி தெரிந்து கொள்.பின் பார்த்துக் கொள்ளலாம் என்றான் அபி.

அகில் நகர்ந்து நிற்க,அனைவரும் விலகினர்.அர்ஜூனிடம் கேட்டனர்.

அதற்கு பதில் நந்து கூறினான். திருமணம் இல்லை என்றால் தான் நட்பு என்று கூறி தான் மேகாவுடன் பழகினான் அர்ஜூன். அவளுக்கு முதலில் விருப்பமில்லை என்றாலும் பின் ஒத்துக் கொண்டாள்.அர்ஜூன் மேகாவை தோழியாக மட்டும் தான் பார்த்தான்.ஆனால் அவள் தான் காதலிக்கிறாள் அர்ஜூனை.

அர்ஜூன் சாரி டா. உனக்கு தெரியாம நாங்க உன்னை பாலோ பண்ணோம். அவ தனியாக வந்து ஏதாவது பிரச்சனை செய்து நம்ம ப்ரெண்ட்சிப் கெடக் கூடாதுன்னு தான் அவளுக்கு உதவினேன் நந்து கூற,

அர்ச்சு அவனது சட்டையை பிடித்து, ஏன்டா இப்படி பண்ண?

இதுனால இன்னும் என்னலாம் பிரச்சனை வரப் போகுதுன்னு தெரியல என்று தலையில் கையை வைத்தான்.

மேகா அர்ச்சு அருகே வந்தாள். அங்கேயே நில்லு. உனக்கு புரியலையா? உன்னோட பெற்றோர்கள் பற்றி தெரியும் தானே? என்று சிந்தித்தவன். என்னோட அம்மாவுக்கு தெரியும் தானே? கேட்டான்.அவள் அமைதியாக இருந்தாள்.

ஓ..இது பிளான் தானா? கேட்டான்.மௌனமாக இருந்த அவளை கணலாய் எறித்தவன் நந்துவிடம், இனி இவள் என் கண் முன் வரவே கூடாது என்றான் அர்ஜூன்.

அர்ஜூன்..ப்ளீஸ் என்று அழுது கொண்டே வந்தவளை நிறுத்தினான். ஆனால் அவள் அர்ஜூன் அருகே வந்து முத்தமிட வந்தாள். இதை பார்த்த ஸ்ரீ கண்ணில் நீர் வழிந்தது. நடப்பதை பார்த்த அனைவரும் ஸ்ரீயை கவனிக்கவில்லை.

” என்னென்று சொல்வது ஏதென்று சொல்வது

    காதலை அனுபவித்து பிரியாத வலி கூட

       எனக்குள் சுகமாகுதே!                 (2)

 தோழனாய் இருந்த நீ என்று காதலாய்

    நுழைந்தாயோ! மனம் வலிக்குதே!          (2)

 உன்னுள் தொலைந்தேனோ என் காதலே

          எதற்கென பிறந்தேனோ?

     கேளிக்கை கூத்தானதே என் வாழ்வே!       (2)

 காதலின் வலிதனை முதலாய் உணர்கிறேன்

        முற்றிலுமாய் நினைவிலந்தேன்

    வாழும் காலமே  உன்னுடனான உறவை

           என்னுள் புதைத்து வாழவே

               பிறந்ததேனோ?

        என் பிறப்பு உன்னுடையதாகவே

              உன் காதலை பெற

              யாது செய்வேனோ?”                   (2)