ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 59..

என்ன நடந்தது மேம்?அர்ஜூன் கேட்டான்.

இதயா நீ இங்கே இரு என்று தனியே அவளை விட்டு  கொஞ்சம் தள்ளி நின்ற பசங்களிடம் இன்பா கூறினாள்.

சாரா? இப்படியெல்லாம் நடந்து கொண்டார் தருண் கேட்டான்.

இப்பொழுது என்னவெல்லாம் நடக்கிறது? உனக்கு தெரியாதா என்ன?

டேய் அர்ஜூன், அவர் எனக்கும் வகுப்பு எடுக்கிறார். பொண்ணுங்களை அந்த மாதிரி பார்த்தது போல் தெரியவில்லையே என்றான்.

இன்பா அவனை முறைத்தபடி என்னையும், என் தங்கையையும் என்ன நினைத்தாய்? சீறினாள்.

மேம், நான் உங்களை ஏதுக் சொல்லவில்லை.அவர் மற்ற பெண்களிடம் நல்லபடியாக தான் நடந்து கொள்கிறார் என்று கூறுகிறேன்.

அப்படியென்றால் எங்களை மட்டுமா? ஏன்? எதற்கு?

அதற்கான பதில் சைலேஷ் சாரை பார்த்தால் தெரிந்து விடும்.

அர்ஜூன் அவனிடம் கூறாமல் ஏதும் செய்ய முடியாதா?

அவர் உங்கள் நண்பன் தானே!

ஆம்.ஆனால் அவன் இப்பொழுது கல்லூரி பொறுப்பில் தானே இருக்கிறான். எனக்காக ஏற்கனவே முன் வந்து பிரச்சனையாகி விட்டது.அதனால்…

தனியே சமாளிக்கலாம் என்று கூறுகிறீர்களா? கேட்டான்.

இன்பா தலையசைத்தாள்.

சரி.இதயாவுடனே இருங்கள்.நான் வருகிறேன்.தருண் நீ எல்லாவற்றையும் எடுத்து வைத்திருக்கிறாய் தானே!

எஸ் டா. நீ சொன்னவுடன் உன் வீட்டிற்கு வந்து விடுவேன்.ஆனால் அகில் மட்டும் என் வழிக்கு வரக் கூடாது.அது கஷ்டமென்று நினைக்கிறேன் என்று சிரித்தான்.

அர்ஜூன் என்று அவனது கழுத்தை பிடித்து தருண் விளையாட,இதயாவும் இன்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆதேஷ் இருவரையும் முறைத்தபடி நின்றான்.

தருண் அவனை பார்த்து, உனக்கு வேற ப்ரெண்ட்ஸ் இல்லையா? கேட்டான்.

பசங்க இல்லை.இரண்டுமே பொண்ணுங்க தாரிகாவும் துகிராவும் என்றான்.

ஓ..கெர்ல் ப்ரெண்ட்ஸா? தருண் கேலி செய்தான்.

போதும்டா.நீங்க இங்கேயே இவர்களுடன் இருங்கள்.நான் வருகிறேன் என்று அர்ஜூன் கிளம்பினான்.

ஆதேஷும் தருணும் இன்பா அருகே வந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தனர். ஆதேஷ் போனை எடுத்து,

துகி எங்கே இருக்கிறாய்? உன் பக்கத்தில் தான் என்று கையில் போனுடன் அமர்ந்தாள்.

நீ வீட்டிற்கு செல்லவில்லையா? கேட்டான் ஆதேஷ்.

யார் என்னை வீட்டிற்கு அழைத்து செல்வது?

டிரைவர் அங்கிள் இருக்கார்ல.இல்லை நீ தான் வரணும்..பிடிவாதமாக.

தருண் போனை எடுத்து,என்னம்மா செய்கிறீர்கள்? கேட்டான்.மதியம் மருந்து சாப்பிட்டீர்களா?கேட்டான்.

சாப்பிட்டேன் பா..என்றார்.

போனை அம்மாவிடமிருந்து வாங்கிய தருண் தங்கை புவனா.

அண்ணா..ஏன்டா இன்றைக்கு லேட்?

கொஞ்சம் வேலையா இருக்கேன் புவி என்றான்.

ஆமா, அர்ஜூன் அண்ணாவை தான் பார்த்திருப்பாயே! எங்களை மறந்து விட்டாயா?

என் செல்ல புவியை மறப்பேனா? கொஞ்சலாக கேட்டான்.

சரி..சரி..என்றாள்.

வாயாடி தானே கூறினாள்.

அண்ணா! ஏன்னா நீங்களுமா? கேட்டாள் ஜானு.

சும்மா தான் ஜானும்மா என்றான்.

என்னம்மா ஹிட்லர், என்ன சொல்றாரு?

உங்க அருமை தங்கையை நான் கெடுக்கிறேனாம்.என்னால் தான் அவள் வாய் பேசுகிறாளாம்.தாங்க முடியவில்லை.

ஹா.ஹா..சிரித்தான்.

அண்ணா எப்படி இருக்காங்க? தரூண் கேட்டான்.

அண்ணா..உங்க காலேஜ்ல நல்ல பொண்ணா யாரையாவது பாருங்க.அவருக்கு கட்டி வைச்சுடலாம் என்றாள் ஜானு.

மேம் இதை கேளுங்களேன் என்று தருண் இன்பா அருகே வந்து அவர்களது மனநிலையை மாற்ற முயன்றான். ஸ்பீக்கரில் போட்டான்.

அண்ணா,பொண்ணு அழகாக இருக்கணும். படிச்சிருக்கணும். அண்ணாவை நல்லா பாத்துக்கணும். என்னையும் அண்ணாவையும் பிரிக்க நினைக்கக்கூடாது அடிக்கிக் கொண்டிருக்க,ஆதேஷ், துகிரா சட்டென நிமிர்ந்தனர்.

வேகமாக எழுந்த ஆதேஷ் தரூணிடம் போனை பிடுங்கி,

ஏய், ராட்ச்சசி..காலையிலே என்னோட அம்மா கிட்ட என்ன பேசின?உன்னை பத்தியே பேசி கொல்றாங்க.

ஹேய் திருட்டுப்பையா, நல்லா இருக்கிறாயா?சொல்லவே இல்லை.

அண்ணா,உங்களுக்கு அவனை தெரியுமா?

அப்படி கூறாதே! என்று தான் கூறினேன்ல ஆதேஷ் தொடங்க,

கோபப்படாதேடா, ஆன்ட்டிக்காக உன்னை விடுறேன் ஜானு கூறினாள்.

ஏன்டி என்னோட ஆன்ட்டிக்கு போன் போட்ட? துகிரா ஜானுவிடம் சண்டைக்கு செல்ல,

எங்கிட்ட வேண்டாம்டி. ஆன்ட்டி தான் தினமும் பேசணும்னு சொன்னாங்க. நான் அப்படிதான்டி பேசுவேன். நீ என்னடி செய்வ? ஜானுவும் கத்தினாள்.

உன்னோட அண்ணா..எங்கடி? அவர் கிட்ட நான் பேசிக்கிறேன்.அவர் தான் இனி நீ தொந்தரவு செய்ய மாட்டாய் என்று கூறினார்.

நான் ஆன்ட்டியை தொந்தரவு செய்வதாக இருந்தால் அவர்கள் கூறட்டும் என்றாள் திமிறாக ஜானு..

ஏய் ஜானு? துகிரா கத்த, ஏய்..என்று யோசித்த ஜானு, ஆமா உன்னோட பேரு என்ன? க்யூட்டாக கேட்டாள்.

பெயரா? துகிரா என்று சாந்தமானாள்.ஆதேஷ் தலையில் அடித்துக் கொண்டான்.இதயா சிரித்து விட்டாள்.

இன்பா ஜானுவிடம், என்ன ஜானு? ஆதேஷ்,துகிரா கூட சண்டை போடாமல் கஷ்டமா இருக்கு போல என்றாள் குறும்பாக.

உங்களுடைய வாய்ச கேட்டது போல் இருக்கே கேட்டாள் ஜானு.

நன்றாக நினைவு வைத்திருக்கிறாயே?என்ற இன்பா நினைவு படுத்தினாள்.

ம்ம்ம்..நீங்களா? ஓ.கே எல்லாரும் இங்கே இருக்கிறீர்கள்? என்னோட மாமா எங்கே? கேட்டாள்.

மாமாவா? ஓய் கொன்னுடுவேன் என்று புவனா ஜானுவிடம் கையசைத்து விட்டு போனை வாங்கி, அபி அண்ணா இருந்தா..அண்ணா கொடுத்துறாத ப்ளீஸ்டா..அண்ணா கெஞ்சினாள் புவனா.

அவன் இங்கே இல்லை என்று விட்டு உங்க எல்லாருக்கும் எப்படி ஜானுவை தெரியும்? கேட்டான்.அன்று சந்தித்தோம் என்றாள் இன்பா.

அண்ணா..நேரமாகிறது ஆரம்பிக்கலாமா? வீடியோ கால் வா அண்ணா என்றாள் புவனா.

நான் காலேஜ்ல இருக்கேனே பாப்பா.நான் அப்புறம் சொல்லி தாரேன் என்றான் தருண்.

நோ..நோ..அண்ணா.நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும். துளசி பர்த்டே அண்ணாவும் நானும் அவளை பார்க்க கோவிலுக்கு போவோம் ஜானு கூறினாள்.

ஓ.கே சம்ஸ் காட்டுங்க.நான் சொல்றதை எழுதுங்க.நான் விவரிக்கிறேன் என்றான்.

அவர்கள் கூற, அவன் போனை மரத்தில் மாட்டி விட்டு.மண்ணில் குச்சியை வைத்து..சம்ஸ் செய்து விவரித்தான்.

புவனா எழுத,அண்ணா..திரும்ப சொல்லுங்க என்றாள் ஜானு.

போதும் அண்ணா என்ற புவனா ஜானுவிடம்,

ஜானு உனக்கு எப்படியும் புரிய போவதில்லை. நீ என்னை பார்த்து காப்பி பண்ணிக்கோ.அப்புறம் நான் சொல்லித் தாரேன்.

ஏன்டி மானத்தை வாங்குகிறாய்? சும்மா இருடி என்று புவனாவிடம் கூறி விட்டு, அண்ணா நீங்க சொல்லுங்க என்றாள்.

அவர்கள் முடித்து போனை வைத்தனர்.அவன் நெட்டி முறித்தவாறு கையை தூக்க, கையிலிருந்த குச்சி பட்டு மரத்திலிருந்த தேன் கூடு கலைந்தது.இதை பார்த்து வேகமாக அனைவரும் எழுந்தனர்..

இதயா அவளது துப்பட்டாவை எடுத்து அவனை நோக்கி ஓடி வந்து இருவரது தலையிலும் அணைத்தவாறு போட்டுக் கொண்டு,வாடா..சீக்கிரம் ஓடு என்று கத்தினாள்.

என்னடி பண்ற? இன்பா ஓரடி எடுத்து வைக்க ,மேம். நோ..என்று இன்பாவை தடுத்து, துகிராவையும் அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்தான்.

டேய்,என் தங்கை டா..என்றாள் இன்பா.

ரெண்டு பேரும் இங்கேயே வந்து விடுவார்கள்.தருணிற்கு நடப்பது புரியாமல் இதயாவை பார்த்தான்.சீக்கிரம் வா தேனீ..என்றாள்.

தேனீயா? என்று அவன் அவனது சட்டையை கழற்றி அவளை மறைத்தவாறு போட்டு..அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் பசங்க,நீச்சல் பயிற்சியில் இருக்க, அங்கே வந்த தருண் பசங்களை மறைவான இடத்திற்கு செல்ல சொல்லி கத்திக் கொண்டே வந்தான்.

அங்கிருந்த கோச் என்னடா செஞ்சீங்க? சீக்கிரம் என்று உடை மாற்றும் அறைக்குள் மற்றவர்களை தள்ளி அவரும் மறைந்து கொண்டார்.

உனக்கு நீச்சல் தெரியுமா? கேட்டுக் கொண்டே குளத்திற்கு பக்கம் வந்தவுடன் இல்லை என்று அவள் கூறவும் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். தலையை வெளியே கொண்டு வராதே! மூச்சை கொஞ்ச நேரம் பிடித்து வைத்துக் கொள் என்றான்.

இருவரும் தண்ணீருக்குள் இருந்தனர்.அவள் முடியவில்லை என்று தலையசைத்து அவனது மார்பிலே ஒட்டிக் கொண்டாள்.

தண்ணீரிலிருந்து தலையை மெதுவாக வெளியே நீட்டி பார்த்தான்.தேனீ இல்லாமல் இருந்தது. அவள் மயங்கி இருந்தாள்.

அவளை அவன் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான். கோச்சும் பசங்களும் வந்தனர். தருண் இதயாவை படுக்க வைத்து வயிற்றை அழுத்த தண்ணீர் வாயிலிருந்து வந்தது. அவளது கன்னத்தை தட்டி எழுப்பினான். அவள் எழவில்லை. வாயோடு வாய் வைத்து தண்ணீரை எடுத்தான்.அவள் இறுமினாள்.பின் எழுந்து அமர்ந்தாள். அவளை சுற்றி பசங்களை பார்த்து, வேகமாக எழுந்தாள்.

கால் வழுக்கி மீண்டும் தண்ணீரில் விழ, தருண் கையை கொடுத்தான். அவள் அவனையும் சேர்த்து இழுக்க மறுபடியும் உள்ளே விழுந்தனர்.

சாரிடா என்றவள் அவனை கட்டிக் கொண்டு பயமா இருக்குடா.பசங்களா இருக்காங்க என்றாள். அவன் அவளை தள்ளி இழுத்து சென்று முதலில் அவளை தூக்கி உட்கார வைத்து விட்டு,அவளை பார்த்து நானும் பையன் தான்மா என்றான்.

அவள் ஆடை நனைந்திருக்க அவள் கையை வைத்து மார்பகத்தை மறைத்தாள். அவன் வேகமாக திரும்பி அவளது துப்பட்டாவை கொடுத்தான். அவள் போட்ட பின் வெளியே வந்தான்.

நீ எழாதே!..நான் வருகிறேன் என்று வெளியே வந்த தருண்.அவனது கையை நீட்டினான். அவள் அவனது கையை பிடித்து மெதுவாக எழுந்து விழாமல் வந்து விட்டாள்.

அங்கிருந்த பசங்க இதயாவை பார்த்து,அந்த பொண்ணுடா..கேண்டின்ல.. தண்டனை கொடுத்தாங்கல அவள் தான்டா.

உனக்கென்ன பெரிய இவன்னு நினப்பா? சீனியர்ஸ் நாங்களே சும்மா இருக்கோம் என்று இதயா அருகே வந்தான் ஒருவன்.

இல்லை சீனியர். ப்ரெண்ட்ஸ்..என்று பேசிக் கொண்டே தருண் பின் ஒளிந்தாள்.

டேய் விடுடா, அதான் தண்டனை செய்து கொண்டிருக்கிறாளே! என்றான் மற்றொருவன்.

அதை எப்படிடா விடுறது? அவளுக்கு அது தெரியணுமே என்று தருணை  கடந்து வந்து இதயாவை பார்வையாலே வருடினான்.

வா..கிளம்பலாம் என்று தருண் இதயா கையை பிடித்தான்.

சீனியர் சொல்றேன்ல நில்லுடா என்று அவன் சத்தமிட,

சீனியர்.நீங்க சீனியர் மட்டும் தான்.அதுலயே இருங்க. அவளுக்கான தண்டனையை அவள் செய்து கொண்டு தான் இருக்கிறாள்.அதற்கு மேல் தண்டனை கொடுக்க,கல்லூரி நிர்வாகம் உள்ளது என்றான்.

உங்களுக்குள்ள என்னடா? நீ டேஸ்ட் பண்ணேல.நான் ஒரு முறை பண்ணிக்கிறேன் என்று சீனியர் முன் வர,அப்பொழுது தான் இதயா தன் உதட்டை தொட்டு பார்த்தாள்.அவன் அருகே வர, இதயா தருண் கையை இறுக்கமாக பற்றினாள்.

நான் அவளுக்கு முதலுதவி தான் செய்தேன்.தவறாக பேசாதீர்கள் என்றான்.

சரி,நானும் உதவுகிறேன் என்றான்.

அவங்க அக்கா அவளை தேடுவார்கள்.நாங்கள் செல்கிறோம் என்று நடந்தான்.

ஓ..அக்காவை வெளியே வைத்துக் கொண்டு,இங்கே இருவரும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?சரி.நான் அக்காவை சென்று பார்க்கிறேன் என்றான்.

தருண் முறைத்துக் கொண்டே அவனை திரும்பி பார்த்தான்.

என்னடா முறைக்கிறாய்? ஒன்று அவளை விட்டு செல் இல்லை வழி விடு.இவளது அக்கா ஒன்றும் சும்மா இல்லை.ரொம்பவே சூப்பரா இருப்பாங்க..

அவங்க மேம் டா என்றான் ஒருவன்.

யாராக இருந்தால் நமக்கென்ன?

தருண் கோபமாக அவனருகே வர,வா போயிடலாம். பிரச்சனை வேண்டாம் என்றாள் இதயா.

அவளது கையை விடுத்தவன்.அதனால் தான் நானும் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் என்று அவர்கள் பக்கம் வந்தான்.

டேய்,என்னடா செய்றீங்க? கோச் அங்கே வந்தார்.அவரை பார்த்து தருண்,

கோச்,உங்க பசங்க அதிகமா பேசுறாங்க? சொல்லி வையுங்கள் என்றவன் இதயா கையை பிடித்து நகர, உன்னை என்று சீனியர் தருண் அருகே வர, கோச் அவனை நிறுத்தி முதலில் போட்டிக்கு தயாராகுங்கள் திட்டினார்.