ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இன்றைய எபிசோடு 58..
இன்பா அபியை பார்த்து மறைந்தவள் என்ன பேசுகிறான்? என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
என்னடி பண்றாங்க மேம்?ஒருத்தி கேட்க, ஒட்டு கேக்குறாங்கடி என்றாள் மற்றொருத்தி.
ஹலோ அப்பத்தா..
மாமா..என்றது அபியிக்கு மறுகுரல்.
ஏய்,அப்பத்தாட்ட போனை கொடு என்றான்.
என்ன மாமா? எத்தனை தடவை போன் செய்வது? நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?
துளசி..வேண்டாம். போனை அப்பத்தாவிடம் கொடு.
இன்று என்ன நாளென்று கூட மறந்துட்டீங்களா? சிணுங்கினாள் அபியின் மற்றொரு முறப்பொண்ணு துளசி.
இன்றா? என்ன நாள்? எனக்கு நினைவில்லையே? என்றான்.
சரி மாமா.தீனா அண்ணா கூட உங்க இடத்திற்கு வாரேன் என்றாள்.
ஏய், என்னடி பேசுற? கடுப்பாக்காதே.சாயங்காலம் எனக்கு பர்த்டே பார்ட்டிக்கு போகணும் என்றான்.
ஹாம்ம்ம்..அழ ஆரம்பித்தாள் துளசி.
எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்குற?
இன்னிக்கு என்னோட பர்த்டே. நீ தான் போனை எடுக்க மாட்டியே! அதான் அப்பத்தா போன்ல செய்றேன்.
மறந்துட்டேனே! என்றான் தலையில் கை வைத்தவாறு.இன்பா அவனருகே வந்து போன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.
ஏன் மாமா,உனக்கு விஸ் பண்ண கூட மறந்து போச்சுல அவள் அழுதாள்.
மேம் குடுங்க,இன்பாவிடம் போனை வாங்க அவளருகே அபி வந்தான். அதற்குள் மற்ற பொண்ணுங்க அந்த இடத்தை முற்றுகையிட,அவன் நீங்க எல்லாரும் என்ன செய்றீங்க? கேட்டான்.
அபி,இவங்க எல்லாரும் உன்னோட விசிறிகளாம் என்றாள் இன்பா.
யார் அது மாமா? பொண்ணுங்க சத்தமா இருக்கே என்றாள் துளசி.
அந்த பொண்ணுங்கள ஒருத்தி,ஆமாடியோவ்..உன்னோட மாமாவை சுத்தி பத்து பொண்ணுங்க இருக்கோம். நான் உன் மாமாவின் தோள் மீது கையை போட்டு தான் நிற்கிறேன் என்று கையை அபி மீது போட, இன்பா அவளை முறைத்தாள்.
ஓ.கே மேம் என்று கையை எடுத்தாள்.
மாமா..என்ன மாமா சொல்றாங்க?
ஒன்றுமில்லைமா.நீ கவலைப்படாதே உன்னோட மாமாவை யாரும் ஏதும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் இன்பா.தருண் தலையில் கை வைத்து நின்றான்.
நீங்க யாரு?துளசி கேட்டாள்.
ஜானு வாய்ஸ் போல உன்னோட வாய்சும் ஸ்வீட்டா இருக்கே என்றாள் இன்பா.
ஜானுவா?அவளை உங்களுக்கு தெரியுமா?
ம்ம்..தெரியுமே என்று இன்பா பேசுவதற்குள் அபி வேகமாக இன்பா வாயை அடைத்தான்.
சொல்லாதீங்க என்று அவன் இன்பாவிடம் மெதுவாக கூறி விட்டு கையை எடுக்க, அனைத்து பெண்களும் அபியை முறைத்தனர்.
உனக்கு என்ன நான் வரணும். அவ்வளவு தானே! இந்த வாரம் ஊருக்கு வருவேன்.அப்போ உனக்கான கிப்ட் வாங்கித் தாரேன்.என்னோட விஸ் இதோ என்று ஹாப்பி பர்த்டே..இன்றைய பிரின்சஸ்..போதுமா?
தேங்க்ஸ் மாமா என்றாள் மகிழ்ச்சியாக. ஜானுவை பற்றி யார் பேசினாங்க? அவங்க கிட்ட பேசணும் என்றான்.
உனக்கு தேவையானதை கொடுத்துட்டேன்.விடு என்றான் அபி.
முடியாது மாமா என்றாள்.
அவங்க என் ப்ரெண்டோட மேம்.பேசுறியா?
மேம்மா? என்றவள் போனை துண்டித்தாள்.
அபி அவள் போனை வைத்து விட்டாள் என்று இன்பா கேட்டாள்.
அவளுக்கு சின்ன வயசிலிருந்தே டீச்சர்னா பயம். அதான் வைச்சுட்டா.
அப்படினா, நீ பேசும் போதே மேம்னு சொல்லிருந்தா அப்பவே போனை வைத்திருப்பாளே!என்றாள் ஒருத்தி.
அது எப்படி என்னால் முடியும்? நான் அவர்களுக்கு ஆசையை வளர்க்க கூடாது என்று நான் நினைப்பேனே தவிர,அவளும் எங்களுடைய குடும்பம்.அவளை கஷ்டப்படுத்த முடியாது.எனக்கு நாலு முறப்பொண்ணுங்க.
நான் விஸ் பண்ணதுனால.அவ ஹாப்பியா இருப்பா.இல்லைன்னா..எனக்கு அத்தை, மாமா, அண்ணா,எல்லாரும் போன் செய்து பேச சொல்லுவாங்க. பர்த்டே அன்று மட்டும் தான் பேசுவேன் என்று சமாளித்து சென்றான் அபி.
இன்பா அவனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
பெண்கள் கிளம்ப,ஆதேஷ் இன்பா அருகே வந்து, மேம்..வகுப்பிற்கு நேரமாகி விட்டது என்றான். தருண் இன்பாவை சிரித்தவாறு பார்த்தான்.
வாங்க போகலாம் என்றாள்.
தாரிகாவும் நிவாசும் கேண்டின் சென்றிருக்க, அங்கே வந்த அகில் தாரிகாவிடம் கவினை கேட்டான். அவர் உங்களுடன் இல்லையா? என்று போனை எடுத்தாள்.எங்கேஜுடு என்று வந்தது.
எங்கே போனான் அவன்? அகில் சிந்திக்க, நான் இங்கே தான் இருக்கிறேன் என்று கையில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தாரிகா அருகே வந்தான்.
சீனியர் எனக்கு? நிவாஸ் கேட்டான்.
போய் வாங்குடா என்றான் அவன்.
எதுக்கு சீனியர்? நான் வாங்கிக் கொள்வேன்ல.உங்களுக்கு இன்னும் வலி இருக்கா? கேட்டாள். அவள் தோளில் கையை கவின் போட்டபடி எல்லாமே ஓ.கே தான் என்றான்.
அய்யோ, யாராவது ஏதாவது சொல்ல போறாங்க? தாரிகா அவன் கையை எடுத்து விட கோபித்துக் கொண்டான் கவின்.
சீனியர் ப்ளீஸ் என்றாள்.
அவன் பேசாமலே இருக்க அவள் மனதில் குமாரன் பேசியது நினைவிற்கு வந்து வாட்டியது.அவள் அதை பற்றி சிந்தித்தவாறு இருந்தாள். அகில் அவளை பார்த்து, கவினிடம் அவளை பார் என்று காட்டினான்.
கவின் தாரிகாவை பிடித்து அவன் பக்கம் திருப்பினான். அவனை பார்த்தவுடன் அவளது கண்கள் நீரால் நிறைந்தது..
எதற்கு அழுகிறாய்? நீ என்னை சமாதானப்படுத்துவாய் என்று நினைத்தால் நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.
நிவாஸ் கவினை பார்த்து தலையசைத்தான். அவளே அவனை கட்டிக் கொண்டு அழுகையை தொடர்ந்தாள். அவளை தன் பக்கம் பார்க்க வைத்தவன்.என்னவென்று சொல்லு?என்று கேட்டான்.
அவன் கூறியது தான் பயமாக உள்ளது என்றாள் தாரிகா.
யார் கூறியது?
குமாரன்.அவன் உங்களை..என்று பேச முடியாமல் தவித்தாள். அங்கிருந்தவர்கள் அவளை பார்க்க கவின் அவளை அணைத்து, நான் உன் அருகிலே இருக்கிறேனே? யாரும் என்னை ஏதும் செய்ய முடியாது.வீணாக பயந்து நேரத்தை வீணாக்காதே!
நான் இந்த வருடம் பாதியிலே சென்று விடுவேன்.அதுவரை தான் ஒன்றாக இருக்க முடியும். அப்புறம் மாலையோ இல்லை இரவோ தான் பார்த்து பேச முடியும் என்று அவன் சொல்ல,அவளுக்கு மீண்டும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
ப்ளீஸ்,அழாதேம்மா என்று அவளது கண்ணீரை துடைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். இதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை பற்றி பேச தொடங்கினர்.
கவின் அவளை தோளோடு அணைத்து,இப்பொழுது நன்றாக போட்டோஸ் எடுங்கள் என்று சொல்ல, அவள் அவனை இடித்தாள். இருவரும் சிரித்தவாறு அனைத்தும் கல்லூரிக்குழுவில் பகிரப்பட்டது.நண்பர்கள் ஆனந்தமுடன் அவர்களை பார்த்தனர். தாரிகாவும் கவினும் குமாரனிடம் சிக்கி தவிக்கப்போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலிருந்தது பாவமே.
அர்ஜூனிற்கு ஸ்ரீ நினைவாகவே இருந்தது.அவன் வகுப்பை கவனிக்கவில்லை.இன்பா அதை பார்த்து,வகுப்பு முடிந்து வந்தவுடன்,
அர்ஜூனிற்கு என்ன ஆச்சு? அவனருகே வந்தாள். ஆதேஷ் புரியாது விழிக்கவே இன்று உன் அண்ணன் வகுப்பை கவனிக்கவே இல்லை.கனவுலகில் யாருடனோ டூயட் ஆடியது போல் தெரிகிறதே! என்று கேட்டாள்.
அண்ணா? ஆதேஷ் அவனை பார்த்தான்.மேம்,அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அசடு வழிந்தான் அர்ஜூன்.
ம்ம் என்றவள்.ஈவ்னிங் ஏதோ பர்த்டே பார்ட்டி போல இன்பா கேட்டாள்.
உங்களுக்கு எப்படி தெரியும் மேம்?அபி அவன் மாமா பொண்ணு கிட்ட பேசினான். கேட்டோம் என்றாள்.
ஜானுவா? கேட்டான்.இல்லை,ஏதோ பெயர் சொன்னானே! சிந்தித்தாள் இன்பா.
துளசி என்றான் ஆதேஷ் வருத்தமுடன்.உனக்கு என்னடா? அவள் கேட்க,
அண்ணா, என்னை தனியே விட்டு விட்டார் என்றான். அவன் உன்னை மட்டுமா விட்டான் என்று தருண் அங்கே வந்தான்.
டேய், கொஞ்சம் பிரச்சனை முடியட்டும்டா.எல்லாரும் சேர்ந்து எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
மேம்..இதயா வீட்டிற்கு தனியே செல்வாளா?என்று கேட்டான் அர்ஜூன்.
என்ன அர்ஜூன்.உனக்கு அவள் மீது அக்கறை?
மேம் கொஞ்சமாவது சீரியசா பேசுங்க.அந்த சார் செய்வது சரியில்லை சினத்துடன் அவன் அவளை பார்த்தான்.
விட்டால் அடித்து விடுவாய் போல..என்றாள் இன்பா கிண்டலாக.
மேம் முறைத்தான் அவன்.
சரிடா.டென்சன் ஆகாதடா.அவள் தனியே தான் செல்வாள் பேருந்தில்.
எனக்கு வேற இன்று ஒரு வேலை உள்ளது.அர்ஜூன் இருவரையும் பார்த்தான்.
மேம்.உங்களுக்கு பிரச்சனையில்லை என்றால் தருண் அவளை அழைத்து வீட்டில் விடச் சொல்லவா? கேட்டான்.
இன்பா.ம்ம்..ஓ.கே நான் முதலில் அம்மாவிடம் கூறி விடுகிறேன்.
தருண் உன்னால் முடியும் தானே! கேட்டான் அர்ஜூன்.
என்ன பிரச்சனைடா? அர்ஜூன் அனைத்தையும் சொன்னான்.
அவள் அதிகம் பயப்பட மாட்டாள் என்றாள் இன்பா.
அதான் பயந்து உங்களை அணைத்துக் கொண்டாளா? அர்ஜூன் கேட்டான்.
ஆமாம்..அவள் அவனது செய்கையில் பயந்து தான் விட்டாள். நம்மிடம் தான் வாய் அப்படி பேசுவாள் என்று தங்கையை பற்றி பேசினாள்.
அக்கா..என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பினார்கள்.இதயா முகம் வாடி இருந்தது.இன்பா கண்டவுடன் அறிந்து கொண்டாள் ஏதோ பிரச்சனை என்று..
என்னடி ஆச்சு? கேட்டாள்.அவள் இன்பாவை கட்டிக் கொண்டு அழுதாள்.
அங்கே காமினி என்ற ஆசிரியை வந்தார். அங்கிருந்த பசங்களை பார்த்து தயங்கியவர் இன்பாவை தனியே இழுக்க, அக்கா என்று கையை பிடித்து இதயாவும் உடன் வந்தாள்.
கிஷோர் உன் தங்கையை பிடித்து அவளை..அவளை..என்று தயங்கினார். அமைதியாக இருந்த இதயாவும் வெடித்து அழுதாள்.
அக்கா..நான் மாலை இடைவேளையின் பின் கேண்டீனில் வேலையை முடித்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்று வந்து கொண்டிருந்தேன்.
யாருமில்லா வகுப்பிலிருந்து யாரோ என்னை பிடித்து இழுத்தார்கள்.சார் தான்.
நான் கத்த முயன்ற போது,பிளாஸ்டரை வாயில் ஒட்டிவிட்டான்.என்னை நெருங்கி அணைத்து என்று உடலெங்கும் நடுங்கியது இதயாவிற்கு.நல்ல வேளையாக இந்த மேம் என் முணங்கல் சத்தம் கேட்டு எனக்கு உதவ வந்தார்கள். அங்கிருந்த சேரை வைத்து அவனை அடித்து விட்டு தனியே அழைத்து வந்தார்கள்.
ரொம்ப தேங்க்ஸ் மேம் என்றாள் இன்பா கண்கலங்கிக் கொண்டே. அவனிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றார். இன்பா இதயாவை அணைத்து ஒன்றுமில்லை என்று ஆறுதலளித்தவள் அவனை என்று முன் செல்ல, வேண்டாம்கா என்று அர்ஜூனிடம் சென்றாள் இதயா. இன்பாவும் அவள் பின்னே சென்றாள்.
இதயா வேகமாக அர்ச்சுவிடம் வந்தாலும் அவனை பார்த்து பேச முடியாமல் பார்த்துக் கொண்டே நின்றாள்.
என்ன பிரச்சனை என்று சரியாக கேட்டான் அர்ஜூன். அவள் பேச நினைக்கிறால் பேச முடியவில்லை.இதயா அழ..
மேம்.என்று இன்பாவை பார்த்தான். ஆதேஷ்.. தருணும்.. அவர்களை பார்க்க, இன்பா சினத்துடன் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்றாள் அர்ஜூனிடம்.
“பரந்த ஆகாய வானிலே
பளீரென்ற வெளிச்சமும்
இருளடர்ந்த கருமையும்
வாழ்விலே இடர்படும்
இன்பங்களும்
துன்பங்களுமாய்
துளிர் விடும் சுராய்.
மின்னி பிரகாசிக்க
ஏற்கஉளதே
நம் மானுடமே!”