ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான எபிசோடு 50..
டேய்,யாருடா அந்த குட்டிப் பொண்ணு? அபி கேட்டான். திரும்பிய அர்ஜூன் முன் நின்றது தருண். அவனை பார்த்தவுடன்,அவனை அணைத்து மீண்டும் அழுதான் அர்ஜூன்.
கொஞ்ச நேரம் அமைதியாக தான் இருங்களேன்.அவனே கூறுவான் என்றான் தருண். அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு இருக்கையில் அமர்ந்தான்.
அனைவரும் அவனருகே வர, கையை தூக்கி அவர்களை நிறுத்தியவன் தண்ணீர் அருந்தி விட்டு,நான் கல்லூரி முதல் வருடம் படிக்கும் போது ஒரு மீட்டிங் என்று அம்மா அங்கே என்னை வர வைத்தார். அவ்வப்போது விருப்பமில்லாமலும் செல்ல தான் செய்வேன்.யாரிடமும் பேசவே மாட்டேன்.அங்கு பெரிய ஆட்களையும் பார்த்திருக்கிறேன்.
அந்த மீட்டிங் நடந்த இடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம்.அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. அங்கு தான் அனுவை பார்த்தேன்.ஒரு பெண்ணின் அழும் சத்தம்.என்னிடம் பேசினார்களே அந்த அக்கா. அவருடைய கணவரை தான் சுட்டிருந்தனர். அவர் கதறி கொண்டே யாராவது அவரை காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டிருந்தார். அவருடைய கணவனது கண்கள் அனுவையே பார்த்துக் கொண்டிருந்தது தவிப்புடன்.
அத்தனை பேரும் சிலை போல் நின்றார்களே தவிர, யாரும் உதவ முன் வரவில்லை. என் அம்மாவும் மற்றவர்கள் போல் நின்று கொண்டிருந்தார். உதவலாம் என்று முன் வந்த என்னையும் பிடித்துக் கொண்டார்கள் அம்மாவின் ஆட்கள்.அவர்களை சமாளித்து அக்கா அருகே செல்வதற்குள் அவரது கணவர் இறந்து விட்டார்.எனக்கு என்ன செய்தென்று தெரியவில்லை.
அனு,அவரிடம் அப்பா எனக்கு பொம்மை வாங்க போலாம் என்று எழுப்பினாள்.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.அப்பொழுது கூட யாரும் அவர்கள் அருகே கூட வரவில்லை.அவர்களுடைய ஆட்கள் வந்தனர். கம்பெனியை பற்றி அழுது கொண்டவரிடம் பேசினார்கள்.
என்ன மனுசங்க நீங்க எல்லாரும்? அவர்களை திட்டி விட்டு,நான் உதவி செய்தேன்.அந்த பாப்பாவிற்கு அவர் இறந்தது கூட புரியவில்லை.அவள் கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டிருந்தாள்.எல்லாம் முடிந்தவுடன் கம்பெனி பொறுப்புக்காக,சண்டை போட்டனர் அவர்களது உறவினர்கள்.
நானே பார்த்துக் கொள்கிறேன் என்றார் அந்த அக்கா.
உன்னால் எப்படி முடியும்? அனுவை யார் பார்ப்பார்கள்? என்று கேட்டனர். அதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று ஒரு வயதான பெண்ணை வைத்தார்கள். அவர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள்.கம்பெனி விசயமாக ஆட்கள் வீட்டிற்கு வருவதும்,மிரட்டுவதுமாக இருந்தார்கள். அதனால் தினமும் அங்கே சென்று விடுவேன். என்னை பார்த்தவுடன் அவர்கள் வர மாட்டார்கள்.அதுவும் அம்மாவிற்கு தெரிந்து அவர்களை திட்டுவார்கள்.ஆனால் அக்கா அதை பெரியதாக எடுக்கவில்லை பாப்பாவிற்காக.
அவளுக்கும் எனக்கும் நன்றாகவே பொருந்தி விட்டது.நான் சொன்னால் கேட்பாள்.அதனால் என்று கண்கலங்கியவன், அவளை நான் தான் பார்த்துக் கொள்ள போகிறேன்.
அதற்காக நீ எதுக்கு டா? நித்தி கேட்டாள்.
அந்த அக்கா இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவார்கள் என்று தொண்டை அடிக்க கண்ணீருடன்.அவர்களுக்கு கல்லீரல் சேதமடைந்தது. முன்பே பார்த்திருந்தால் குணப்படுத்தி இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் உடல் உபாதையை கவனிக்காமல் சாதாரணமாக விட்டு விட்டார்கள்.நான் ஒரு நம்பிக்கையில் தான் இருந்தேன் அவர்களுக்கு ஏதும் ஆகாது என்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தான்.
அனுவிற்கு என் நிலை வரும் என்று நினைத்து கூட பாரவில்லை.
ஆனால் அவளை என்னை போல் தனியே இருக்க விட மாட்டேன் என்று கண்ணை துடைத்து விட்டு, முடிவெடுத்தவன் போல் எழுந்து, அவர்கள் மறைந்தவுடன் அவளை நான் தான் வளர்க்க போகிறேன் என்றான் அர்ஜூன்.
அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.என்னடா பேசுற? உன் எதிர்காலம்? இன்பா கேட்டாள்.
பின் தாரிகாவின் அம்மா அவனருகே வந்து, உனக்கு என்ன அந்த பொண்ணை பார்த்துக் கொள்ள தானே ஆள் தேவை. நான் பார்த்துக் கொள்கிறேன்.உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே அர்ஜூன் என்றார்.
இல்லைம்மா. எதிர்காலம்..என்று விரக்தியுடன் அனைவரையும் பார்த்தான்.கடைசியில் அவன் பார்வை ஸ்ரீ மீது பட்டு மீண்டது.
என்னாலும் இதற்கு மேல் தனியே இருக்க முடியாது.எனக்கும் யாராவது வேண்டும்மா என்றான்.ஸ்ரீ கண்கலங்க அவனை பார்த்தாள்.
என்னடா பேசுற? உனக்கு நாங்கள் இருக்கிறோம்டா.குட்டிப் பொண்ணை கவனிக்க உன்னால் முடியாதுடா? அந்த பாப்பாவிற்கு வயது எத்தனை இருக்கும்? கேட்டார் அம்மா.
அனுவின் வயது மூன்றரை. அவள் ப்ளே ஸ்கூல் போய்க் கொண்டிருக்கிறாள் என்றான்.
அவ்வளவு சின்ன பொண்ணா? அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடணும்.குளிக்க வைக்க வேண்டும்.பாத்ரூம் கூட செல்ல தெரியாது. அவளை தூங்க வைக்க வேண்டும்.அவள் பக்கத்திலே யாராவது இருக்கணும்.எல்லாமே செய்யணும். உன்னால் முடியாது.நீ கம்பெனி வேற ஆரம்பித்து இருக்கிறாய் என்றார்.
அவன் பேசுவதற்குள், ஸ்ரீ அவர்கள் முன் வந்து அம்மா சின்ன பொண்ணுன்னு சொல்றான்ல.அவனுடன் பழகியதால் நம்முடன் பழக கஷ்டமா இருக்கும். அதனால் அவனுடனே பாப்பா இருக்கட்டும்.
அவன் கூறுவது சரி தான்.அதுவும் பெண் பிள்ளை.அவன் வேலையாக இருக்கும் நேரம் நாம் பார்த்துக் கொள்வோம். தனியே விட வேண்டாம்மா.என் போல் அவளும் அடுத்தவர்களிடம் கஷ்டப்படுவதை விட அவனுடனே இருக்கட்டும்.அவனால் முடியவில்லை என்றால் நாம் செய்வோம் என்றாள்.இதற்கு ஒத்துக் கொண்டால்,அந்த பொண்ணு அர்ஜூனுடன் இருக்கட்டும் என்று அவனை பார்த்தாள்.
ஸ்ரீ கூறுவது சரி.நானும் உதவுவேன் நித்தி முன் வர,மற்றவர்களும் வந்தனர். அனைவரும் மாறி மாறி பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டனர்.
அர்ஜூன் அனைவரையும் பார்த்து உதட்டசைவில் நன்றி நவிழ்ந்து மண்டியிட்டு கை கூப்பினான்.
ஏன்டா பைத்தியம் மாதிரி நடந்து கொள்கிறாய்? நீ கஷ்டப்படும் போது, நாங்கள் எப்படிடா சும்மா இருப்போம் அகிலும் பேச அர்ச்சு அவனை கட்டிக் கொண்டான். தேங்க்ஸ்டா மச்சான்..என்றான். எல்லாரும் அவர்களை மகிழ்வுடன் பார்த்தனர்.
முதலில் நம் பிரச்சனையை சீக்கிரமே முடித்தாக வேண்டும் என்றான் அர்ஜூன்.அபி,உன் மாமாற்கு போன் செய்து அவர்கள் சென்று விட்டார்களா? என்று விசாரி.அவன் பேசி விட்டு அவர்கள் சென்று விட்டார்கள் என்றான்.
யாரும் இனி தனியே சுற்றாதீர்கள்.எந்த கம்பெனி முன்னும் நாம் பிராஜெக்ட்டுக்காக நிற்க கூடாது.அவர்கள் நம்மை தேடும் படி செய்ய வேண்டும்.அபி முதல் வேலை உனக்கும்,மாமாவிற்கும் தான்.பிராடெக்டை முடிவு செய்து தயாரிக்க வேண்டும்.நம் ஊரிலே அண்ணாவுடன் யாருக்கும் தெரியாத புது நபரை சேர்க்க வேண்டும்.அவரை முதலாளி போல் காண்பிக்க வேண்டும்.நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்று இன்பாவை அர்ஜூன் பார்த்தான்.
சைலேஷிடம் தான் கேட்க வேண்டும் என்றாள்.ஓ.கே அதை நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.இந்த வார முடிவுக்குள் பிராடெக் பற்றிய சாம்பிள் எனக்கு வேண்டும் அபி. தயார் செய்யுங்கள் என்றான். சாம்பிளை பார்த்து விட்டு நான் மேம் உங்களிடம் தருவேன். நீங்கள் அதை பற்றிய அனைத்து கோப்புகளையும் அபியுடன் சேர்ந்து தயார் செய்ய வேண்டும்.அதை வைத்து ஆட்களை வர வைக்க,விளம்பரம் தயார் செய்து இன்வெஸ்டரை கவர் செய்யணும்.சேல் பண்ணணும்.அவனது திட்டம் முழுவதையும் கூறி முடித்தான்.அனைவரும் கை தட்டினர்.
அர்ஜூன் சூப்பர்டா..பாராட்டினாள் இன்பா.
அதெல்லாம் சரிடா. கம்பெனி நேம் முடிவெடுத்து விட்டாயா?
ம்ம் என்றவன் “டீ.ஏ நண்பா குரூப்ஸ்”என்றான்.பெரூமூச்சு விட்டாள் நித்தி.
அகில் பேசும் முன் தருண், நீ அந்த குட்டிப் பொண்ணோட அம்மாவிடம் ஏதோ போலீஸ், வக்கீல் என்று பேசியது போல் இருந்தது? கேட்டான்.
அவங்க கணவரை கொன்றவனை கண்டறியவே முடியவில்லை.போலீஸ் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன்.ஒரு வருடமாகி விட்டது. வக்கீலும் சரியாக கண்டு கொள்ளவே மாட்டிக்கிறாங்க.அதையும் பார்க்கணும் என்றான்.
எதற்குடா இந்த தேவையில்லாத வேலை?யாசு கேட்டாள்.
எதும்மா தேவையில்லாதது.நமக்கு நடந்தால் தான் அதன் வலி புரியும்.அந்த அக்கா வாழ்க்கை முடிவதற்குள் அவர்கள் பிரச்சனையும்,நம் பிரச்சனையும் முடித்து விட்டால் தான் சரியாக இருக்கும் அனுவை கவனிக்க. எத்தனை பேர் அங்கே இருந்தார்கள் தெரியுமா? ஒருவர் கூற சாட்சிக்கு வர மாட்டிக்கிறாங்க.என்னோட சாட்சியையும் எடுக்க மாட்டிக்கிறாங்க.வேற ஆதாரம் தான் கண்டறியணும்.அதற்கு அந்த போலீசுடன் பேச வேண்டும்.
சரிடா. அதையும் பார்த்து விடலாம். நான் இருக்கிறேன் என்றான் தருண்.
நாங்களெல்லாம் இல்லையா? நித்தி கூறினாள்.
இதில் யாரும் ஏதும் செய்ய வேண்டாம்.நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீயை அர்ஜூன் பார்த்து, நீ தனியே எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றான்.
அவள் தலையை ஆட்டினாள்.அர்ஜூன் போன் ஒலித்தது. சைலேஷ் அழைப்பதை பார்த்தவன்.இவர் இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறார்?ஏதோ மீட்டிங் உள்ளது என்று தானே கூறினார் யோசனையோடு எடுத்தான்.
சார் என்றான்.
அர்ஜூன் எல்லாரும் எங்கே இருக்கிறீர்கள்? பதட்டமாக கேட்டான் சைலேஷ்.
தாரிகா வீட்ல தான் இருக்கோம்.
எதுவும் பிரச்சனையா சார்?
ம்ம் அதிகமில்லை.கவினிற்கு விபத்து என்றான்.
வாட்? அதிர்ந்து எழுந்தான்.
கவினுக்கா? என்ன ஆச்சு? இப்பொழுது எப்படி இருக்கான்?என்று அர்ச்சு பதறுவதை பார்த்து அனைவரும் எழுந்தனர்.
நித்தி அவனது போனை பிடுங்கி ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.
கவினுக்கு நீட்டிற்கு தேவையான புத்தகங்கள் வாங்க,அவனை அழைத்துக் கொண்டு “புக் ஸ்டால்” சென்றோம். எனக்கு கம்பெனி சம்பந்தப்பட்டு சில ஆட்களை சந்திக்க வேண்டும் என்று கூறியதால் அவனது பைக்கை எடுத்து வந்திருந்தான்.நாங்கள் வாங்கி விட்டு கிளம்பினோம். அவன் பைக்கை எடுத்து கொஞ்ச தூரம் கூட செல்லவில்லை.அதற்குள் யாரோ வேண்டுமென்றே செய்தது போல் இருந்தது. இடையே ஒரு கார் வந்ததால் கவினிற்கு கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறினான்.
அண்ணா! உனக்கு ஏதுமில்லையே கைரவ் கேட்டான்.
நீ அங்கே என்னடா செய்ற? சைலேஷ் வினவ, அதை விடுங்கள்.அடி பலமில்லையே! உங்களுக்கு ஒன்றுமில்லையே நித்தி கேட்டாள்.
நீ இன்னும் விடுதிக்கு செல்லவில்லையா?
இல்லை..நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்றாள் பதட்டமுடன்.தாரிகா கண்கலங்க நின்றாள். அவளது அம்மாவும் அவளை கவனிக்க தான் செய்தார்கள்.
எனக்கு ஒன்றுமில்லை.அவனுக்கு லேசான காயம் தான் மருத்துவரிடம் காண்பித்து விட்டோம்.மேலான காயம் தான் என்றார்கள். ஆயின்மெண்ட் தான் கொடுத்திருக்கிறார்கள் வேரொன்றுமில்லை.
கவின் சைலேஷிடம் வந்து, சார் என்ன செய்கிறீகள்? என்று போனை துண்டித்தான். இந்நேரம் யாரும் நம்மை பார்க்க வருவது சரியாக இருக்காது என்றான்.
யாரும் வர மாட்டார்கள் என்றான் சைலேஷ்.
ஓ..அப்படியா? இப்பொழுது போன் வரும் பாருங்கள்.எங்கே இருக்கிறீர்கள் என்று அனைவரும் கேட்பார்கள்.பாருங்கள்.
கவின் கூறியது போலவே சைலேஷிற்கு போன் வந்தது.அவர்களும் அவ்வாறே கேட்க, கவின் அகிலிற்கு வீடியோ கால் போட்டான்.அனைவரும் அவனிடம் வந்தனர்.அனைவரின் பதட்டத்தை பார்த்து, அவனது காயத்தை காட்டினான்..பலமாக ஏதுமில்லை. யாரும் பயப்பட வேண்டாம் என்றான். தாரிகா கண்கள் கசிய, அவளது அம்மா அகிலிடம் போனை வாங்கி, அர்ஜூன் அங்கே வருவான் இடத்தை சொல்லுங்கள்.வீட்டிற்கு உடனே வா என்றார்.
தயக்கத்துடன் ஆன்ட்டி, இன்னும் என்னுடைய வேலை முடியவில்லை. நாளை வருகிறேன் என்றான்.
அப்படி என்ன வேலை முக்கியம்? என்று திட்டினார்.
ஆன்ட்டி, அக்காவின் திருமணம் என்றான். நித்தி இடையே வந்து,பிரதீப் அண்ணாவிடம் வாங்கிக் கொள்.பின் மொத்தமாக வேலை செய்து அடைத்துக் கொள் என்றாள்.
ஆமாம்.நான் இப்பொழுதே அங்கே வருவேன். தயாராக இரு அர்ஜூன் கூறினான்.
டேய்,இன்னும் ஒரு வாரம் தான்டா உள்ளது திருமணத்திற்கு என்றான்.
ஒன்றும் பிரச்சனையில்லை.ஏற்பாடுகளை என் மாமாவே அனைத்தையும் செய்து விடுவார்.நான் இந்த வார விடுமுறையின் போது மாமாவை சந்திக்க செல்வேன். கூறி விடுகிறேன் அபி கூறினான்.
நோ டா மச்சான்.நானும் வருகிறேன்.அகல்யாவையும் பார்க்கணும் அவளுக்கு தேவையானதை வாங்கி தர வேண்டும். அப்படியே அண்ணாவிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்றான்.
சரி.சொல்லு,எந்த மருத்துவமனை? கேட்டான் அபி..
சைலேஷ் முன் வந்து, அவனை நானே அழைத்து வருகிறேன் என்றான்.
இருவரும் ராசியாகி விட்டீர்கள் போல..யாசு கேட்க, இருவரும் சிரித்துக் கொண்டனர்.
ஆன்ட்டி நான் வருகிறேன் என்று தாரிகா அம்மாவிடம் கவின் கூறி விட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
” இந்நாடு.. செந்நாடு.. தன்னாடு..
வழுவிழந்து பணமோகம்
பிறந்த நாடாயிற்றே!
அதர்மம் தலை தூக்கி
தனக்குரியவரையே
வேட்டையாடும் காலமாயிற்றே!
இதில் நாம்
என்ன விதி விலக்கோ?”