வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-46
175
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இன்றைய எபிசோடில் குட்டி அர்ஜூன், குட்டி ஸ்ரீயின் முதல் சந்திப்பை கண்டு மகிழுங்கள்.நாளையும் தொடரும் பழைய நினைவுகள் கண் முன்..
இதோ இன்றைய எபிசோடு 46..
என்ன தான் நடக்குது? ஸ்ரீ அர்ச்சுவுடன் நன்றாக பேசிகிறாளே! அபி தாரிகாவை பார்த்தான்.
எனக்கே வித்தியாசமா தான் இருக்கு.அவளோட ஆன்ட்டி உங்களிடம் பேசியதை கொஞ்சம் மாற்றி அவளிடம் கூறினான்.அவன் தொடங்கவுள்ள கம்பெனி பற்றியும் அவளிடம் கூறினான்.முதலில் அவள் பயந்தாலும் அவளை பேசியே சமாதானப்படுத்தி ஒத்துக் கொள்ள வைத்து விட்டான். பின் அர்ச்சுவின் அம்மாவிற்காக இருவரும் சண்டை போட்டனர்.பின் அவளே அவனை சமாதனப்படுத்தினாள் என்று அவர்கள் இருவரும் நடந்து கொண்டதையும் கூறினாள்.
ஆமாம்.அவன் அம்மாவிற்காக அவனிடம் எப்படி கோப்பட்டாள் தெரியுமா? அவனும் கோப்பட்டான்.
அவளுக்காக தான் அவன் அம்மாவிடமும் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஸ்ரீக்கு புரியவில்லை யாசு கூறியபடி பெருமூச்சு விட்டாள்.
ஏன் அப்படி கூறுகிறீர்கள்?அர்ச்சு அண்ணா அம்மாவிற்கு ஸ்ரீயை பிடிக்காதா?
ம்ம்ம்.எங்கள் ஊரில் அவள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும்.அவனது பாட்டிக்கு கூட பிடிக்கும்.ஆனால் அர்ச்சு அம்மாவிற்கு மட்டும் தான் அவளை பிடிக்காது .
ஏன் பிடிக்காது?
பசங்களுடன் தான் சுற்றுவாளாம்.அவளை பற்றிய தவறான எண்ணங்கள் அவருக்கு. அவளுக்கு தவறு யார் செய்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டாள். அடித்து விடுவாள். நிறைய பசங்க அடி வாங்கி இருக்காங்க. எங்கள் பள்ளியில் இருக்கும் பெண்களும் ஸ்ரீயை மிகவும் ரசிப்பார்கள். அப்பொழுது அவளுக்கு தைரியம் ரொம்ப அதிகம்.யாசு பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீ முகத்தை சுளித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.
என்ன ஸ்ரீ? அர்ச்சு..என்று அபி அவனை பற்றி பேச.. வேண்டாம் சீனியர்.
அவனை பற்றி பேசாதீங்க.நான் ரொம்ப கோபமா இருக்கேன்.அவன் ஒரு பைத்தியம்.அவன் ஒரு இடியட்.அவன் ஒரு ராட்ச்சசன்.அவன் ஒரு முட்டாள். கத்திக் கொண்டே போனாள்.
போதும்மா.பிள்ளையை திட்டிக் கிட்டே இருக்காதம்மா என்று அம்மா எல்லாருக்கும் காபியை கொடுத்து விட்டு அவளருகே வந்து காபியை நீட்ட, எனக்கு வேண்டாம்.அவன் என்னை பால் தான் அருந்த வேண்டும் என்றான். நான் செய்து கொள்கிறேன்ம்மா.நீங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக உட்காருங்கள் என்றாள்.
ஸ்ரீ..நீ இப்ப என்ன சொன்ன? யாசு கேட்டாள்.
நான் என்ன சொன்னேன்?
அவன் மீதும் கோபமும் இருக்குமாம்.அவன் சொன்னதை கேட்டகவும் செய்வாளாம் அம்மா புன்னகையுடன் கூறினார்.
நீ எப்பொழுது ஸ்ரீ, அர்ச்சு சொல்றத கேட்க ஆரம்பிச்ச கேட்டான் அகில் முறைப்புடன்.
அவன் எனக்காக தானே கூறினான்.அதனால் தான் கேட்கிறேன் என்றாள்.
ஓ..அப்படியா? உன்னிடம் உன்னுடைய ஆன்ட்டி எங்களிடம் பேசியதை கூறி விட்டான் போல..
பயம் இருந்தது.இப்பொழுது கொஞ்சம் தான். அந்த ஆன்ட்டி பெரிய பிராடு.அவள் கூறிய படி நான் நடந்து கொண்டாலும் பிரச்சனை கொடுக்க தான் செய்வாள்.அதான் கொஞ்சமாவது தைரியமாக இருக்க முயற்சி செய்கிறேன்.
திடீரென்று எப்படி இந்த தைரியம்? அகில் கேட்டவுடன் அர்ச்சு கண் முன் வந்தான் ஸ்ரீக்கு.
அர்ஜூன் சப்போர்ட் தான் எனக்கு தைரியம் வந்தது தயங்காமல் கூறினாள்.அகில் அவளை கூர்ந்து பார்த்தான்.
ஏன் சீனியர், அப்படி பார்க்கிறீகள்? நான் ஏதும் தவறாக கூறவில்லை.நீங்கள் என்னை அடித்ததற்கு சாரி கூட கேட்கவில்லை என்றாள் ஸ்ரீ.
நான் உன்னை அடிக்க வரவில்லை.நீயாக தான் வாங்கிக் கொண்டாய்.
நான் தடுக்க மட்டும் தான் வந்தேன்.ஆனால் நீங்கள்..சினத்துடன், உங்கள் கேள்விகளுக்கு இனி தான் பதிலளிக்க அவசியமில்லை என்று நகன்று அமர்ந்தாள்.
ஏன் தம்பி, எனக்கு ஒரு சந்தேகம்.இந்த பொண்ணு தைரியமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லை அதற்கு காரணம் அர்ஜூன் என்ற கோபமா? கேட்டார் தாரிகா அம்மா அஞ்சனா.
நீங்கள் இங்கே வந்து அர்ஜூனை பற்றி ஏதாவது பேசினால் நன்றாக இருக்காது.அவன் எனக்கு மகனாயிற்றே! என்றார்.
அம்மா..இவனுக..இரண்டு பேரும் இப்படி தான் என்றான் அபி.
இனி அவ்வாறு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாசுவை பார்த்தார்.மற்றவர்கள் கவினை முறைத்தனர்.
ஸ்ரீக்கு புரிகிறது. ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் எழுந்து சமையலறைக்குள் செல்ல, அம்மாவும் அவள் பின்னே சென்றார்கள்.தாரி இங்கே வா..என்று பஜ்ஜியை அனைவருக்கும் கொடுக்க சொன்னார்.
அர்ச்சு வீட்டிற்குள் மூவரும் நுழைய, கைரவ் சுற்றி பார்த்து விட்டு மிகவும் வனப்பு தான் என்றான்.அர்ஜூன் ஒரு சாவியை எடுத்து, அந்த அறைக்கு போய் குளி..நிவாஸிடம் கொடுத்து விட்டு,நீ இங்கே இரு என்று அவனது அறைக்கு சென்று குளித்து விட்டு வெளியே வந்தான். அவன் ஆடையை மாற்றி விட்டு அர்ச்சு கண்ணாடியில் அவனை பார்த்துக் கொண்டே,ஸ்ரீயுடன் நடந்ததை நினைத்து இதழ்களில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தான். உள்ளே அவனருகே ஒரு ஜீவன் இருப்பதை கூட உணராது நின்றிருந்தான் அர்ஜூன்.
அர்ச்சு குளித்து ஆடை மாற்றும் சமயத்தில் கைரவ் உள்ளே வந்து ஸ்ரீயின் அனைத்து போட்டாக்களையும் பார்த்து பிரமித்து நின்றான். அர்ஜூன் சிரிப்பதை பார்த்தவன்,என்னடா இதெல்லாம்? கேட்டான்.
ஹேய், நீ எதற்காக உள்ளே வந்தாய்?அவனை வெளியே இழுத்து சென்றான்.
ஏன்டா அவள் மீது இவ்வளவு பைத்தியமா உனக்கு?அர்ச்சு பதிலளிக்காமல் இருந்தான்.
அவளுடைய பிரச்சனை சரியானாலும் அவள் உன்னை ஏற்றுக் கொள்வாளா? என்பது சந்தேகம் தான். நீ என்னன்னா நீ அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கண்டிப்பா முடியாதுடா என்று கைரவ் வினோதமாக அர்ச்சுவை பார்த்தான்.
நிவாஸ் அங்கே வந்து உட்கார்ந்தான். இது வெறும் போட்டோஸ் டா. இதனுடன் கடைசி வரை இருக்க முடியாது டா என்றான்.
நீயும் பார்த்து விட்டாயா? நிவாஸ் கேட்டான்.
உனக்கு தெரிந்து ஏன் இப்படியே விட்டாய்? நிவாஸிடம் கைரவ் கேட்டான்.
என்னை என்ன செய்ய சொல்கிறாய்? மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்.ஏன் அவள் அர்ஜூனை ஓ.கே பண்ணிடுவாள்னு பயமா இருக்கா? என்ன?
அட..ச்சே.. நீ வேற,அவளுக்கு இனி தோழனாக மட்டுமே இருப்பேன் என்றுமே.
எப்படிடா? வாயை பிளந்தான் நிவாஸ்..
அவள் தான் கூறினால்,தோழியாக நினைத்து பழகினால் தான் பேசுவேன் என்றாள்.அதனால் தான் எனக்கும் அவள் பிரச்சனையில் இருந்து வெளியே வந்தால் போதும் என்று அவளருகே இருக்க முடிவு செய்துள்ளேன்.
அர்ஜூன் அவனை நம்பாமல் பார்த்தான்.உண்மை தான்டா என்றான் கைரவ்.
எனக்கு அவளுடைய இந்த போட்டோஸ் போதும்டா அர்ச்சு கூற, பைத்தியமாடா நீ. கண்டிப்பாக முடியாது..அவளை பார்க்கும் போது உனக்கு எதுவும் தோன்றவில்லையா?
தோன்றுகிறது தான்.ஆனால் கொஞ்ச நாட்கள். இந்த பிரச்சனை முடியும் வரை தான். பின் அவளை விட்டு தொலைவில் சென்று விடுவேன் அவளது நினைவுகளே போதுமானது எனக்கு.
இது நிதர்சனமில்லை அர்ஜூன் என்றான் கோபமாக.உன் எதிர்காலம் பற்றி யோசி என்றான்.
என்ன டா எதிர்காலம்?அவளுடனான என் முதல் சந்திப்பு எனக்கு உயிரை தந்தது.எங்கள் கிராமத்திற்கு அப்பொழுது தான் போனேன்.பாட்டியுடன் ஒரு நாள் முழுவதும் முடிந்தது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றேன்.அங்கே சில பசங்க, என்னிடம் வம்பு செய்து கொண்டிருந்தனர். கிராமம் அப்பொழுதுதான் எனக்கு புதியது.அவர்கள் பேசுவது பிடிக்காமல் அவர்களிடம் நகன்று சென்றேன். அவர்களில் ஒருவன் என்னை உதைத்ததில் கீழே விழுந்து இரத்தம் வந்தது. எழுந்து நின்றேன் மீண்டும் அடித்தனர்.
என்னடா செய்றீங்க? என்றொரு சத்தத்துடன் ஸ்ரீ வந்து நின்றாள். க்யூட்டா சப்பியா அழகா இருப்பாள்.அவளை பார்த்து,வாங்கடா..போய்டலாம்..ஒருவன் கூற, அனைவரும் ஓடினார்கள். அவள் அவர்களை துரத்தி பிடித்து செம்ம மாத்து மாத்துனா.அவனுகள என்னிடம் சாரி கூறச் செய்தாள்.அவர்கள் கிளம்பும் முன்,
ஹே, இவன் இனி ப்ரண்டுடா என்று என் தோள் மீது கையை போட்டுக் கொண்டு, இனி அவனிடம் வருவீங்க? மாஸ் காட்டினாள்.
அக்கா, உங்க ப்ரெண்டா என்ன தம்பி சொல்லியிருக்கலாம்ல என்றான் ஒருவன்.
ஏய், இங்க வாடா..என்று ஒருவனை அழைத்து, நீங்க அவனை அடிச்சதுக்கு இந்த அடி பத்தாதே! என்றாள்.
அக்கா,என்னை விடுங்க என்றான் நடுக்கத்துடன்.
சரி,விடுறேன் என்று அவனது சட்டை பாக்கெட்டை தொட்டு, தா..என்று கையை நீட்டி அவனிடம் கேட்டாள்.
அவன் சாக்லேட்டுகளை அவளிடம் தந்தான்.அவனுக்கு கொடு என்றாள்.நான் வேண்டாம் என்றேன்.வைச்சுக்கோடா குட்டிப் பையா என்றாள்.அவர்கள் சென்றனர்.
பாரு எப்படி இரத்தம் வருது? என்று அவனை குழாய் பக்கம் அழைத்து சென்று அவனது காயத்தை தண்ணீரால் சுத்தப்படுத்தி..வா..என்று கையை பிடித்து ஒரு ஆசிரியரிடம் அழைத்து சென்றாள். அவள் அங்கே இருந்த ஆசிரியர்களிடம் நன்றாக பேசினாள்.அவர்களை சிரிக்கவும் வைத்தாள். அங்கிருந்த ஒரு சாருக்கு மட்டும் ஸ்ரீயின் அடாவடித்தனம் பிடிக்காது.திட்டிக் கொண்டே இருப்பார் போல்.அன்றும் திட்ட, நீ சீக்கிரம் வகுப்பிற்கு செல் என்று ஓடி விட்டாள். அப்பொழுதில் இருந்தே அவளையே கவனித்துக் கொண்டிருப்பேன்.அகில், நித்தி, யாசு, அபி, கவின் அனைவரும் அவளுடன் தான் இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கொள்ள எனக்கு ஆசை.ஆனால் அப்பொழுதே அகிலுக்கு என்னை பிடிக்கவில்லை.