வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-44
212
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இன்றைய எபிசோடு 44… வாசித்து மகிழுங்கள்.
அர்ஜூன் நேராக அவனது வீட்டிற்கு சென்று குளித்து விட்டு கையில் லேப்டாப்பையும், பைக் சாவியையும் எடுத்து வெளியே வந்து ஓரிடத்திற்கு சென்றான். அங்கே அவனது அம்மாவும், செகரட்டரி அங்கிளும் இருந்தனர். அவர்களருகே வந்து திமிறாக கால் மீது கால் போட்டு அமர்ந்தான். அவனது அம்மா ஏதும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கிள் ஒப்பந்தம் ரெடியா? கேட்டான். அவர் அவனது அம்மாவை பார்க்க, அந்த ஒப்பந்த பேப்பரை எடுத்து மேலே போட்டார் அவரும் திமிறாக அவனை முறைத்துக் கொண்டு.அதனை எடுத்து பார்த்து விட்டு ஓ.கே என்று கையெழுத்திடான்.
அங்கிள் பணம்? என்று கேட்டான்.
அவனது போனில் ஒலி வந்தததை கவனித்து அதை பார்த்து விட்டு, ம்ம்..என் வேலை முடிந்தது கிளம்புகிறேன் என்று எழுந்தான். இதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா,
நில்லுடா..எதற்காக இப்பொழுது புதிதாக கம்பெனி? அவர் கேட்டார்.
என்னங்க அங்கிள் தெரியாதது போல் கேட்கிறார்கள்? என்னுடைய ஏஞ்சலுக்காக.அவளை பார்த்தீர்கள் தானே! ஆனால் அவள் விசயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றான்.
ஏஞ்சலாம்..ஏஞ்சல் ..மண்ணாங்கட்டி என்று சத்தம் போட்டார்.
ம்ம்ம்..இதற்கு தான் உங்களிடம் பேச விருப்பமிருக்கவே மாட்டிங்குது. மேகாவிற்காக செய்தால் பாராட்டுவீர்கள் தானே! ஸ்ரீ அம்மா அப்பாவிற்கு நடந்தது தெரியுமா?அவர்கள் இறந்து விட்டார்கள் என்றான்.
ம்..தெரியும். விபத்தில் இருவரும் இறந்தது எங்களது பிஸினஸ் உலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததே!
அவர்கள் இறந்தது தெரியும்? அவர்கள் எங்கு இருந்திருக்கிறார்கள் என்று தெரியும்? ஆனால் என்னிடம் மறைத்து விட்டீர்கள்.அப்படி தானே!
ம்ம்..ஆமாம். நான் மறைத்தேன் தான்.மறைக்கவில்லை என்றால் அவள் பின்னே சென்றிருப்பாயே! இப்பொழுது போல் என்றார்.
அவன் சீற்றத்துடன்,அவர்கள் அமர்ந்திருந்த மேசையை தட்ட, அதுவும் ஆட்டம் கண்டது.
உங்களுக்கு புரியவில்லைம்மா. நல்லது தான். நீங்கள் இப்படியே இருங்கள் என்று விட்டு,அவளை பார்த்து பேசுகிறேன் என்று எதையும் பேசாதீர்கள். அவளுக்கு நம் யாரையும் தெரியவில்லை. அனைத்தையும் மறந்து விட்டாள். எனக்கு அவளுக்கு உதவ வேண்டும்.
எதற்கு உதவ வேண்டும்? என்கிறாய். அடுத்தவர் வீட்டிலிருந்தால் அவளுக்கு பிரச்சனை வர தான் செய்யும். வெளியே வந்து தனியே வாழ வேண்டியது தானே!அவள் தான் சமாளிக்க வேண்டும். இது கூட முடியாதா? உன் ஏஞ்சலால்.
அவனுக்கு கோபம் தலைக்கேறியது.அவள் உங்களுடைய தோழியின் பொண்ணு தானே! இப்படி பேசுகிறீர்கள்?சங்கரி ஆன்ட்டி உங்களை மன்னிக்கவே மாட்டார் என்றான்.
அவளுக்கு என்னை பற்றி தெரியும்.அதனால் தனியே வாழ்வது சரி தான் என்று கூறுவாள்.
அட..ச்சே..இன்னும் உங்களுடனே அவளை ஒத்து பார்க்கிறீர்களே! விடுங்கள். உங்களிடம் பேசி எந்த பிரயோசனமே இல்லை. நான் தனியே உங்களிடம் பேச வேண்டும் அங்கிள் என்றான் திரும்பியவாறு.
அவர் கமலியை பார்க்க,அவர் தலையசைத்தவுடன் இருவரும் தள்ளி சென்றனர். எனக்கு ஒருவரை கடத்த வேண்டும் என்றான்
என்ன தம்பி சொல்றீங்க? அவன் தாரிகாவின் அப்பா மோகனை பற்றி கூறி அவருக்கு பணம் தானே பிடிக்கும். அவரை சுற்றி பணம் இருக்க வேண்டும். கடத்திய இடத்தில் மற்றவர்களின் பேச்சு அவருக்கு கேட்க வேண்டும்.ஆனால் அவர் அங்கே இருக்கும் தடயம் கூட தெரியக்கூடாது. சாப்பாடு, தண்ணீர் எதுவும் கூடாது.பணம் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு ஜன்னல் மட்டும் போதும். அதுவும் உயரத்தில் இருக்க வேண்டும்.அவனுக்கு எட்டாத உயரத்தில் இரண்டு நாட்கள் பூட்டியே இருக்க வேண்டும்.சிசிடிவி புட்டேஜ் சுற்றி வைத்து என்னுடைய லேப்பில் கனெக்ட் செய்ய வேண்டும். அவன் கூறி முடிக்க, வேண்டாம் தம்பி. அவன் செத்து விடாமல்..
அதெல்லாம் ஒன்றும் ஆகாது.அவரு என்னுடைய அஞ்சு அம்மாவின் கணவர்.அவனை உயிரோடு தான் வைத்திருப்பேன்.இல்லை தம்பி, அவர் ஏதோ சொல்ல வந்தார்.
அவரை தடுத்து, அவன் நல்லவன் தான். அவனுக்கு பிடித்தது பணம் தானே ! அதே பணத்தை வைத்தே அவனை திருத்த முயலுவோம் என்றான்.
அவர் சரி என்று விட்டு கிளம்பி அர்ஜூன் அம்மாவிடம் கூற, அவர் சிரித்து விட்டு..அவன் கூறுவது சரி தான் என்று அவரும் ஏற்றுக் கொண்டார்.
அர்ஜூன் முகம் கடுத்தவாறு தாரிகா வீட்டிற்கு வெளியே சூவை கழற்றிக் கொண்டிருந்தான். அவனருகே வந்த ஸ்ரீ அவனை கட்டிக் கொண்டு,
ஹே..நிவி உன்னை பிடித்து விட்டேன் கத்தினாள்.அவள் கண்கள் கட்டப்பட்டு இருந்தது.அவன் ஸ்தம்பித்து அப்படியே அசையாது நின்றான். பின் அவள் இதழ்களில் அவன் பார்வை மேய..
ஹேய், ஸ்ரீ நான் இங்கே இருக்கிறேன் என்று எட்டி பார்த்து, அர்ச்சு என்றான். பின்னே சத்தம் கேட்கவே,அர்ச்சுவா..என்று நிமிர்ந்தவள்.அவனை விலக்கி பின்னே சென்றாள். சோபாவில் கால் தட்டி அவள் விழ,
ஹே..என்று அர்ச்சு அவளது கையை பிடித்து நிறுத்தினான் கையை விடாது. அவள் அசையாது நின்றாள்.பின் அவனே அவளது கண்கட்டை அவிழ்த்தான். இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, கரடியாய் நுழைந்தான் நிவாஸ்.
அர்ச்சுவை பார்த்து, ஹலோ..அவளது கையை விடுகிறீர்களா? கேட்டான். இருவரும் நிலைக்கு வந்தனர்.என்ன செய்கிறீர்கள்?என்று கேட்டுக் கொண்டே அம்மாவை தேடினான்.அவர் அசடு வழிந்து கொண்டே வெளியே வந்தார்.
நாங்கள் மூவரும் விளையாண்டு கொண்டிருந்தோம் என்றான். அம்மா..நீங்களுமா? கேட்டான் சுரத்தை இல்லாமல்.
ஏதும் பிரச்சனையா அர்ச்சு? அவர் அருகே வந்தார். அவன் அவர்களை உட்கார வைத்து படுத்துக் கொண்டான்.
சொல்லுடா?
என்னதுன்னு சொல்ல?என்றான் விரக்தியாக.
ஏன்டா ஒரு மாதிரியா பேசுற?
நான் ஏன்மா உங்க வயித்துல பிறக்கல.மனம் உடைந்தது போல் பேசினான்.
அவனை எழ வைத்து, உன் அம்மாவை பார்த்தாயா?
அவன் மௌனமாக தரையை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தான். என்ன சொன்னாங்க?
அவன் கண்ணில் நீர் வழிந்தோடியது. அவங்க என்னை புரிந்து கொள்ளவே மாட்டிகிறாங்க.ரொம்ப கஷ்டமா இருக்கு.
அதெல்லாம் சரியாகிடும் டா..என்றார்.
எப்ப..மா..பத்து வருசத்துக்கும் மேல ஆகுதுமா.ரெண்டு பேரும் நன்றாக பேசியே! இன்னும் எத்தனை நாளும்மா?ஆதங்கத்துடன் கேட்டான்.
அதற்கான நேரம் வரும் என்றவர்..நீ படுத்திரு வந்து விடுகிறேன் என்றவுடன் சோபாவில் படுத்திருந்தான் கண்ணை மூடியவாறு.ஸ்ரீயும் நிவாசும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,உங்களுக்கு வேற வேலை இல்லையா? என் மூஞ்சில என்ன இருக்கு?கோபமாக பேசினான்.
நிவாஸ் எழுந்து ஸ்ரீயை அழைக்க, போடா..அவள் அஸ்கி வாய்சில் பேச, போடி..என்றான் நிவாஸ்.
ஓய்..என்னடா திமிறா? போடின்னு சொல்ற?கொன்னுடுவேன் ராஸ்கல்..என்றாள் சத்தமாக, அர்ச்சு விழித்து அவளை பார்த்து விட்டு கண்ணை மூடினான். அவள் நாக்கை கடித்து கொண்டாள்.பத்தே நிமிடத்தில் மீண்டும் எழுந்தான்.
ஸ்ரீ சமையற்கட்டினுள் பஜ்ஜி செய்து கொண்டிருக்க,நிவாஸ் வாயில் வைத்த படி அவனும் வெளியே வந்தான். அர்ஜூன் லேப்பில் மூழ்கியிருப்பதை பார்த்து, எழுந்திட்டியா அர்ச்சு என்று வேண்டுமென்றே அவனருகே பஜ்ஜியை நீட்டி விட்டு,அவன் வாயில் வைத்தான்.
அர்ச்சு அவனை முறைத்து விட்டு, அம்மா..டீ என்றான். சத்தமில்லாமல் இருக்க, அம்மா..என்று எழுந்து சமையற்கட்டிற்கு வந்தான். ஸ்ரீ டீ போட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மா..எங்கே? அவளிடம் கேட்டுக் கொண்டே சூடான பஜ்ஜியை எடுத்து வாயில் வைத்து, ஆ…என்று சத்தமிட்டு விட்டு, இவ்வளவு சூடா இருக்கு..கூறும் போதே, அவனருகே வந்து அவனது தாடையை பிடித்து ஊதி விட்டாள். அவள் அவனை பார்க்க, இன்னும் வலிக்கிறதா? என்று தண்ணீர் குழாயில் அவளது துப்பட்டாவை நனைத்து அவனது உதட்டி வைத்தாள். பின் தான் அவனை கவனித்தாள்.அவன் காதல் பார்வையில் அவளும் தடுமாறினாள்.
எங்கேடா அவனை? என்று நிவாசிடம் கேட்டுக் கொண்டு தாரிகா உள்ளே வந்தாள்.இருவரும் வெளியே வந்து அவளை பார்த்தனர்.அம்மா அவரது அறையிலிருந்து வெளியே வந்தார்.
ஏன்டி..வரும் போதே கத்திக் கொண்டே வருகிறாய்?
அம்மா கேட்டார்.
உன் பிள்ளை செய்த வேலைக்கு பாராட்டு மழையா கொடுப்பாங்க? மீண்டும் கத்தினாள்.அர்ச்சு சோபாவில் அமர, ஸ்ரீ அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தாள்.
அம்மா, நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
அறையில் தான்பா. துணி மடித்துக் கொண்டிருந்தேன்.
நான் இங்கே கத்துவது உங்கள் காதில் கேட்கவில்லையா?தாரிகா கோபத்துடன் பேசினாள்.
ஸ்ரீ எனக்கு தண்ணீர் வேண்டும் எடுத்து வா என்றாள் தாரிகா.
அதெல்லாம் அவள் எடுத்துக் கொள்வாள்.நீ வா என்றவுடன்.. ஸ்ரீ அவனருகே வந்தாள்.
தாரி நீ பதட்டப்படாதே! நான் கூற தான் போகிறேன்.தாரிகா பயந்தவாறு அமர்ந்திருந்தான்.
ஸ்ரீ,நான் ஏற்கனவே கூறியது போல் தைரியமாக இருக்க போகிறாயா? இல்லை.உன் ஆன்ட்டி கயலுக்கு பயப்படப் போகிறாயா? நீயே முடிவு செய்து கொள்.
ஆன்ட்டியா? கேட்டாள்.
நான் உன் ஆன்ட்டியின் அனைத்தையும் எடுக்க தான் பிஸினஸ் ஆரம்பிக்க போகிறேன். சாரி போகிறோம் என்றான்.
என்ன? என்று எழுந்தாள்.
பயப்படுகிறாயா? அவள் கையை பிடித்து அவனருகே உட்கார வைத்து,அவள் உன்னிடம் என்ன சொல்லி மிரட்டினாள் என்று எனக்கு தெரியாது.ஆனால் உன்னை மருத்துவமனையில் பார்க்க வந்தோமே அன்று உன்னை விட்டு விலக சொன்னாள் எங்கள் அனைவரிடமும்.
முடியாது என்றோமா? நித்தியின் அப்பாவை கூறி மிரட்டினாளா? நித்தி என்ன சும்மாவா?
என்ன மிரட்டுகிறாயா? என்று அவளை நன்றாக திட்டி விட்டாள்.
என்னவே மதிக்கலையா நீ? உன் ப்ரெண்ட,என்ன செய்கிறேன் பார் என்று கத்தினாள்.
உன்னால் அவளை ஏதும் செய்ய முடியாது.முடிந்தால் செய்து காட்டு என்று அகில் கூறினான்.
செய்கிறேன். உங்கள் அருகே இருந்து அவள் வேதனைப்படுவதை பார்க்க தான் போகிறீர்கள் என்றாள்.
அவள் எங்கள் அருகே சந்தோசமாக இருப்பதை நீ பார்க்க தான் போகிறாய். என்று கவின் கூறினான்.
என்னிடம் என் விளையாட்டை ஆரம்பித்து விட்டேன் என்று நேற்று இரவு மருத்துவமனையில் கூறி விட்டு சென்றாள் என்று கூறினான்
உன்னிடம் அவள் பேசியதை விடு.அது கண்டிப்பாக பொய் தான்.நீ என்ன செய்ய போகிறாய் ஸ்ரீ?கேட்டான் அர்ஜூன்.
அவள் தலையை பிடித்துக் கொண்டு,நான் என்ன செய்வது? அன்று கயல் ஸ்ரீயை இவர்களுடன் சேர்ந்து நினைவை கொண்டு வா..என்று தானே அனுப்பினாள். இவர்களிடம் இப்படி பேசி இருக்கிறாள்.அவளை இனி நம்பி பயனில்லை.எனக்குரியவர்களை காக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நிமிர்ந்தாள். அனைவரும் அவளை ஆர்வமுடன் பார்த்தனர்.நான் உங்கள் பக்கம் தான் என்றாள்.ஆனால் பிஸினஸ் தொடங்கினால்.. பணம் அதிகம் தேவைப்படும். என் அப்பா அம்மாவிடம் பேசியதை கேட்டிருக்கிறேன் என்றாள்.
ஆம் ஸ்ரீ. ஐந்து கோடி வாங்க போகிறான் அர்ச்சு என்றாள் தாரிகா.
இல்லை என்று தலையசைத்தவன்.நான் வாங்கி விட்டேன் என் அம்மாவிடம்..என்றான்.
அம்மாவிடமா? கேட்டாள்.
ஆனால்… இதற்காக தான் அம்மாவுடன் பிரச்சனையா? கேட்டாள்.
இல்லை ஸ்ரீ. எனக்கு பிடித்த எதுவும் அவர்களுக்கு பிடிக்காது. நான் என்ன செய்ய நினைத்தாலும் அவர்கள் எதிராக தான் இருப்பார்கள்.
நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? உன் முடிவு கூட தவறாக இருக்கலாமே! ஸ்ரீ கூறியவுடன், உன்னை நீயே கூறுகிறாயே என்று மனதினுள் நினைத்தவாறு வருந்தினான். அமைதியாக எழுந்து வெளியே சென்றான் அர்ஜூன்.
அவள் பயந்து அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.அர்ச்சு தவறாக கூறி விட்டேனா? சாரி..சாரி..என்று அவனது கையை பிடித்தாள்.
இல்லை.என்னால் உனக்கு புரிய வைக்க முடியாது..என்றான்.
இட்ஸ் ஓ.கே. நோ பிராபிளம் என்றாள்.தூரத்திலிருந்து பிரதீப்பும் ஜானுவும் ஸ்ரீயை பார்த்து புன்னகையுடன் நின்றனர்.
இங்கே நடந்தது உண்மையா? கனவா?
உண்மைதான்.கில்லாடி தான் அர்ச்சு என்று பாராட்டினான் நிவாஸ்.
ஆன்ட்டி பேசியதை வைத்தே ஸ்ரீயை மாற்றி விட்டானே! வியந்தான் அவன்.