வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-38
260
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 38..
வீட்டில் தாத்தா அவரது அறையில் படுத்திருக்க,நித்தி அவரது கையை பிடித்தவாறு அவரது பெட்டில் தலையை சாய்த்தவாறு அவளது மைனா குஞ்சு வாய் திறந்து க்யூட்டாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை ரசித்தவாறு கதவில் சாய்ந்து நின்றவனிடம்,
அவன் அவளை தூக்க, தாத்தாவின் கையை இறுக பிடித்திருந்தாள். அவர் அவளது கையை எடுத்து விட்டு,தங்கமான பொண்ணுடா….என்றார்.
அவன் முகமலர்ச்சியுடன், அவளை அவனது அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டு….குளித்து தயாராகி மருத்துவமனை வந்தான். மணி ஆறானது.மருத்துவர் எட்டு மணிக்கு தான் வருவார் என்றார்கள்.
கைரவ், அர்ச்சு, சைலேஷ், நிவாஸ் காபி அருந்திக் கொண்டிருக்க,ஸ்ரீ சத்தம் கேட்டது. அவள் நிவாஸை அழைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் தான் கைரவ் அறையிலிருந்தனர்.ஸ்ரீ அவளது போனை எடுத்து நிவாசிற்கு போன் செய்தாள். அவன் ஸ்ரீ அறையிலே போனை வைத்து சென்றான்.பின் யோசித்தவள் அர்ச்சுவிற்கு போன் செய்தாள்.
அவன் போனில் ஸ்ரீ நம்பரை கண்டவுடன் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம் நிலையுணர்ந்தவனாக…..போனை எடுத்தான்.
ஹலோ…அர்ஜூன்…என்றவுடன் அவன் சுற்றியுள்ளவர்களை மறந்தான்.
ஸ்ரீ…அவன் பேச கேட்ட நிவாஸ் தான் போனை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தான்.
எனக்கு பசிப்பது போல் உள்ளது? எனக்கு ஏதாவது வாங்கி தருகிறாயா? நீ இங்கே தானே இருக்கிறாய்? நிவாசை காணவில்லை என்றாள்.
அவன் என்னுடன் தான் இருக்கிறான்.இதோ வாங்கி வருகிறேன்..என்று எழுந்தான்.நிவாசும் எழ,நான் நிவாசிடம் கொடுத்து விடவா? கேட்டான்.
நீ வாங்கினால் நீயே கொண்டு வா…என்றாள். நீ அவளது அறைக்கு செல்.நான் பால் வாங்கி வருகிறேன்.இந்நிலையில் டீ, காபி வேண்டாம் அர்ச்சு வாங்க சென்றான். சைலேஷ் இதை பார்த்து, இன்னும் நீ அவளை காதலிக்கிறாயா? கைரவிடம் கேட்டான்.
இல்லண்ணா.அவளுக்கு நல்ல தோழனாக இருப்பேன் என்றான்.
எங்கடா போன…? எனக்கு பயமா இருந்தது. போனையும் நீ எடுக்கல…தேம்பினாள்.
அர்ச்சுவிடம் பயத்தை மறைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அவள் புலம்ப,
நீ மறைத்தாயா? அவன் உன் குரலிலே கண்டறிந்து விட்டான்.அதனால் தான் முதலில் என்னை அனுப்பி வைத்திருக்கிறான். இப்பொழுது தான் புரிகிறது? என்னை எதற்காக காபி கூட குடிக்க விடாமல் கிளம்ப சொன்னான் என்று?…ம்ம்…ஹீ ஸ் வெரி க்ளவர் என்றான் நிவாஸ். அர்ச்சு உள்ளே வந்து நிவாசிடம் வாங்கியவற்றை கொடுத்து, உனக்கு எப்படி உள்ளது ஸ்ரீ? கேட்டான்.
ம்ம்….என்று தலையசைத்தாள். அர்ச்சு போன் ஒலித்தது. எடுத்து ….சொல்லுங்க அங்கிள்….. என்றவாறு பாலை எடுத்து ஸ்ரீயிடம் கொடுத்தான்.அவள் அவனையே பார்க்க, என்ன என்று? புருவத்தை உயர்த்தினான். இல்லை என்று தலையசைத்தாள்.
அம்மாவிடம் பேச வேண்டும் என்றான் அர்ச்சு. ஓ…அவர்களுக்கு தான் நேரமிருக்காதே! போனில் கூட ஓ.கே தான் என்றான்.
இப்பொழுது பேசுகிறாயா? அவனது அம்மாவின் செகரட்டரி கேட்டார்.
ம்ம்…சரி…அங்கிள். நான் அம்மாவிடம் பேசுகிறேன்.ஆனால் நான் உங்களை பார்க்க வேண்டும் என்றான்.பின் இருவரும் அவனையே பார்ப்பதை கவனித்த அர்ச்சு, இருவரிடமும் போனை காட்டி வெளியே வந்தான். அவனுடைய வண்டி சாவியை சாப்பிட வாங்கி வந்த பொருட்களோடு வைத்திருந்தான்.அதை பார்த்து நிவாஸ் ஸ்ரீயிடம் கொடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தான். அர்ச்சு பேசுவதை கேட்டு அதிர்ந்து நின்றான் நிவாஸ்.
எப்படி இருக்கடா? அர்ச்சு அம்மா கேட்க, என் மீதென்ன உங்களுக்கு திடீர் அக்கறை?
என் மீது கோபம் குறையவில்லை போலும்..என்றார்.
நான் போன் செய்ததன் காரணம் பணம் தான். நான் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க உள்ளேன்.அதற்கு ஐந்து கோடி வேண்டும்…..கடனாக மட்டுமே…..மாதம் அசல் மட்டும் கட்டுகிறேன்…வட்டியை நீங்கள் கணக்கு போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.மொத்தமாக தந்து விடுவேன் நம்பிக்கை இருந்தால்…. தாருங்கள். எனக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து தொடங்க உள்ளேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது தெரியும் தானே! என்றான்.
நீ மேகாவை திருமணம் செய்ய ஒத்துக் கொள். நான் ஐந்து கோடி என்ன? ஐம்பது கோடி தருகிறேன்.
ம்ம்.நினைச்சேன்.அவள் என்னோட தோழி மட்டும் தான். என்னால் இந்த டீலை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் தான் திருப்பி தந்து விடுவேன் என்று கூறுகிறேனே! அது போதாதா?
முடியாது.உனக்கு அவள் தான் சரியாக இருப்பாள்.
மேகாவை பற்றி பேசியதால் தான் சுத்தமாக பேசால் இருந்தேன். நீங்கள் இப்படி பேசினால் அவளது ப்ரெண்ஷிப்பையும் கட் செய்து விடுவேன்.என்ன செய்வது? என்று நீங்களே முடிவடுங்கள்.போனை வைத்தான் கோபமாக.
அர்ச்சு …இந்த அளவு பெரிய இடத்து பையன் என்று நிவாஸ் எதிர்பார்க்கவில்லை. இவனும் மேகாவை பார்த்திருப்பானே ரெஸ்டாரண்டில் வைத்து…அதையும் யோசித்தான். மேகாவும் அர்ச்சுவும்….சிந்தித்தான்.
அர்ச்சு அவனை பார்த்து..என்ன செய்ற? என்று கேட்டான்.
நான்….நான்….என்று தயங்கியவன் சாவியை நீட்டினான்.
என்ன பேசியதை கேட்டாயா?
அதனால் என்ன? நிவாஸ் தயங்கினான்.
அர்ச்சு அவனை உற்று பார்த்தான். சரி…வா…போகலாம்.ஸ்ரீ தனியே இருப்பாள்.
நீங்கள் வேண்டாம்.நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் நிவாஸ் அகல, நில்லு…என்றான் அர்ச்சு. அவனை திரும்பி பார்த்து விட்டு விறுவிறுவென ஸ்ரீ அறைக்குள் சென்றான்.
அர்ச்சு பின்னே சென்றான். வெளியே நின்று விட்டான்.
அர்ச்சு எங்கே? சென்று விட்டானா? ஸ்ரீ கேட்டாள்.
அவன் என்ன செய்தால் உனக்கென்ன?
ஏன்டா இப்படி பேசுற? அவன் நம்மை எப்படி பார்த்துக் கொண்டான்.நன்றாக தானே அவனிடம் பேசிக் கொண்டிருந்தாய்? திடீரென்று என்ன ஆச்சுடா உனக்கு?
நாம் இனி யாருடனும் பேச வேண்டாம். மற்றவர்களும் வேண்டாம்.ப்ளீஸ் இப்பொழுதாவது இங்கிருந்து சென்று விடு. என்னிடம் இருக்கும் பணம் போதும் நீ செல்ல….
நீ என்ன பேசுகிறாய்? நாம் எதற்கு செல்ல வேண்டும்? என்னால் முடியாது.எனக்கு நம்பிக்கை இப்பொழுது தான் வந்துள்ளது.
ஓ….வந்து விட்டதா? அதான் அவளுடைய திட்டத்திற்கு ஏற்றாற் போல் செயல் படுகிறாயா? ஆன்ட்டி சொல்லி தான் உன் நினைவுகளை கொண்டு வர இவர்களை பயன்படுத்தினாயா?
பயன்படுத்தினேனா? ஆன்ட்டி சொன்னதுக்காக இல்லை. என் மனதிற்கு சரி என்று பட்டதை செய்தேன்.
சரி.அகில் மீது…உன்னோட காதலுக்காக தான் விட்டு வர முடியலையோ! சீறினான் நிவாஸ்.
நிவி….நீயுமா?…என்றவள் எனக்கு இவர்களை பார்த்தால் எங்கோ பார்த்த உணர்வுகள் தோன்றுகிறது….இவர்களால் மட்டுமே நமக்கு உதவ முடியும்… தெளிவாக எனக்கு தோன்றுகிறது.
எனக்கு யாருமே வேண்டாம்.காதலும் வேண்டாம். என்னுடைய பெற்றோர்களை இழந்தது போல் இனி யாரையும் இழக்க முடியாது. என்னோட அங்கிள் அவர்களது பிடியில் இருக்கிறார்.முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் ஸ்ரீ..
எப்படியோ உண்மையை வர வழைத்து விட்டோம் என்று மகிழ்ந்தான் நிவாஸ். அர்ச்சுவும் உள்ளே வந்தான்.
நிவாஸ் அருகே வந்து…..நீ கூறிய அங்கிள் யார்?
அவள் நிமிர்ந்து அர்ச்சுவை பார்த்து திகைத்தாள். அவன் சாதாரணமாக நாற்காலியை எடுத்து அமர்ந்து அவளையே குறுகுறுவென்று பார்த்தான். இருவரையும் மாறி மாறி பார்த்தவள் வேகமாக எழுந்து பெட்டில் படுத்து… போர்வையால் அவளை மறைத்துக் கொண்டாள்.
கையை கட்டிக் கொண்டு எழுந்து நின்றான் அர்ஜூன். நிவாஸ் அவளது போர்வையை எடுத்து…உனக்கு அது தெரிகிறதா?
இல்லையே..ஹே….அந்த உருவம் கண்ணில் பட வில்லை…என்ன ஆச்சர்யம்?…என்றாள்.
ம்ம் கன்பார்ம்.நீங்கள் அவர்கள் வீட்டில் பயன்படுத்திய பொருள் தான் காரணம்.
பொருட்களுக்கும்…..அதற்கும் என்ன சம்பந்தம்?
இருக்கும்..இரண்டு நாட்களாக அந்த வீட்டிற்கு நீ செல்லவில்லை. அதனால் தான் என்று நினைக்கிறேன்.அங்கே அன்று என்ன நடந்தது? அர்ச்சு கேட்டான்.
ஒன்றுமில்லை..
நீ சொல்ல வேண்டாம்..யாருக்கு தெரியும் நீ பயந்த விசயத்தில் அடுத்த முறை உன்னுடைய அங்கிள் கூட இருக்கலாம் என்று அர்ச்சு அவளை பயமுறுத்தினான்.
இல்லை..அவருக்கு ஏதும் ஆகக் கூடாது… பதறினாள்.
என்னால் கண்டிப்பாக உனக்கு உதவ முடியும்.நீ நடந்ததை மட்டும் கூறு…என்றான்.
அர்ச்சு…உனக்கு தெரியாது…அவர்கள் பற்றி….
இங்கே பாரு ஸ்ரீ. நீ எதற்கும் பயப்படாம டென்சன் ஆகாமல் கூறு. உன்னை சார்ந்த யாருக்கும் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
ஆன்ட்டி பற்றி கூறி விட்டாயா? ஸ்ரீ நிவாஸிடம் கேட்டாள்.
ம்ம்..என்றான் நிவாஸ். அவளுக்கு தெரிந்தால் என்ன ஆகும்?
நான் உங்களுடைய குக்கூ இல்லை. பின் எதற்காக உதவி செய்கிறீர்கள்? என்று தெரியாதது போல் கேட்டாள். அவளுக்கு அனைவர் நினைவும் திரும்ப வருவது …..இவர்கள் தன் நண்பர்கள் தான் என்று தெளிவாக புரிந்து விட்டது.ஆனால் யார் எப்படி? என்று தெரியவில்லை. நிவாசிடம் கூட கூறவில்லை.
நினைவு வந்தவுடன் அந்த கயலிடம் ஸ்ரீ கூற வேண்டுமே? அதனால் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாள்.
நீ எங்களது குக்கூ போல் இருக்கிறாய்.அதனால் தான் உதவுகிறோம் என்று ஸ்ரீயை உன்னிப்பாக கவனித்தான்.
அவன் பார்வையை புரிந்தவளாய்,அப்படியென்றால் எனக்கு உதவவில்லை.அந்த பொண்ணுக்கு தானே என்றாள்.
முழுதாக அவ்வாறு கூறி விட முடியாது என்று ஸ்ரீயை ஓரக்கண்ணால் அளந்தான்.
அவள் பல்லை கடித்துக் கொண்டு..சரி என்றாள் கோபமாக உள்ளது போன்ற பாவனையில். அவன் மனதினுள் சிரித்தவாறு அவளை பார்த்தான்.
ஏன் எங்களுடைய உதவி உனக்கு ஏதும் நினைவு வருகிறதோ?
உங்களை பற்றி எனக்கு என்ன நினைவு வரப் போகிறது?
சரி விடு. பிரச்சனையை கூறு என்றான்.
அன்று நடந்ததை நடுக்கத்தோடு கூறினாள்.கொலை செய்வார்கள் என்று தெரியும். இவ்வளவு கொடுரமாக இருக்கிறாளே!
உன்னோட அங்கிள் யார்?
எனக்கு தெரியாது.அவரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவரை பற்றி ஏதும் தெரியாது. அவர் என்னை காப்பாற்ற வந்து அவர் மாட்டிக் கொண்டார் அவளிடம்.
நானும் அவரிடம் அவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் கேட்டு ஓய்ந்து விட்டேன். வாயை திறக்கவே மாட்டேங்கிறார்…
அவர் வேறு ஏதாவது கூறுவாரா?அர்ச்சு வினவ,
ம்ம்ம்…சொல்வார்….உனக்கு உதவ கண்டிப்பாக ஒருவன் வருவான் என்பார்.அவன் எனக்குரியவன் என்பார்.ஜிதினை பற்றி கூறினேன்.அவனை திருமணம் மட்டும் செய்து விடாதே! என்றார்.
ஆமாம்.இருக்கிறவங்கல….வைச்சே சமாளிக்க முடியல. இன்னொருவன் வேறயா? ஸ்ரீ புலம்பினாள்.
என்ன? இருவரும் ஒருவாறு கேட்க,நான் ஒன்றுமே சொல்லவில்லையே என்றாள்.
நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். கயலை எதிர்ந்து நிற்க வேண்டும் அர்ச்சு சொல்ல..
உனக்கு பைத்தியமா?
என்னோட அங்கிள்…என்றாள்.
அவளுக்கு எதிராக சாட்சி சேகரிக்க வேண்டும். நீயும் நிவாசும் மறுபடியும் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
அந்த வீட்டிற்காக?
அதற்கு நான் செத்து விடலாம்.
ஓ.கே விடு..உங்க ஆன்ட்டி நினைத்தது போல் நீ இப்படி வீக்காகவே இரு..இது தான் அவளுக்கு நல்லது. நீ எதற்கு உன் அங்கிளை காப்பாற்ற வேண்டும்? அவர் வீட்டினுள் நன்றாக கஷ்டப்படட்டும். நீ வெளியே இப்படியே இரு.அவள் காரியம் நன்றாகவே நடக்கும் என்றான் அர்ச்சு.
சற்று நேரம் யோசித்த ஸ்ரீ…ம்ம்… போகிறோம்.இனி முழுவதுமா? பாவம் போல் அவள் கேட்டாள்.
அர்ச்சு சிரித்த படி…நான் கூறும் ஒரு நாள் போதும் என்றான்.
ஒரு நாளா?
ம்ம்…ஒரு நாள் தான் நீ….நிவாசை பார்த்து, நீ நாளை முதல் எப்பொழுதும் போல் அங்கேயே இருந்து கண்காணித்து நடப்பதை கூறு.அவள் அசைவு ஒவ்வொன்றும் தெரிய வேண்டும்.
ஒவ்வொன்றுமா? ரொம்ப கஷ்டம்.ம்மாவே நாங்கள் சாப்பாடு கூட தனியே எங்களது அறையில் வைத்து தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.நான் எங்கே அவளை வேவு பார்ப்பது? சந்தேகம் வந்து விடாது.
ம்ம்…வரும் தான். உனக்கு துணையாக ஜிதினை வைத்துக் கொள் என்றான் அர்ச்சு.
அவனா? நானா? ஸ்ரீயை பார்த்தான் அவள் தோளை குலுக்கினாள் திண்பண்டங்களை கொறித்தபடி…
இருவரும் தயாராகுங்கள்.நான் கல்லூரி கிளம்புகிறேன் என்றான்.
அர்ச்சு…நில்லு என்று மெதுவாக அவனருகே வந்த ஸ்ரீ.அவனது கட்டு போட்ட தலையை காட்டி,உனக்கு வலி இல்லையா?
வலியா? என்று சிரித்தவன் அவளது தாடையை உயர்த்தி அவளது கொறித்து கொண்டிருக்கும் இதழ்களை பார்த்தவாறு, எனக்கு வலிக்கவில்லை என்று விட்டு நிவாசை பார்த்து வெறுப்பேற்றினான்.
அதை அவளை தொடாமலே கூறி இருக்கலாமே என்று முறைத்தான் நிவாஸ்.
அர்ச்சு புன்னகையுடன் அவனை பார்க்க, பேசியதை மறந்து விட்டாயா? சைகை செய்தான் நிவாஸ். அர்ச்சு புன்னகையுடன் அவனது அறைக்கு கிளம்பினான்.