அத்தியாயம் 2
அகிலும் நண்பர்களும் ஸ்ரீயை சோகமாக பார்த்து விட்டு கிளம்பலாம் என்று திரும்ப, கைரவ் பெரிய பூங்கொத்துடன் உள்ளே வந்தான்.அவனை பார்த்தவுடன் ஸ்ரீ பயப்பட,நிவாஸ் அவனை பார்வையாலே அலசினான்.
கவின் அவனிடம், நீ எதற்காக இங்கே வந்தாய் கைரவ்? என்றவுடன் நிவாஸிற்கு புரிந்தது. அவன் கோபமாக கைரவ் அருகே வர அகில் அங்கே வந்து, கைரவை வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.
நீ அவளிடம் தள்ளியே இரு.உன்னால் தான் அவளுக்கு பிரச்சனை அகில் பேச,
ஓ அப்படியா? அதை சொல்ல நீ யாரு? கைரவ் கேட்க,
நிவாஸ் அகில் பக்கம் வந்து,சீனியர் எங்களுடைய தோழன். அவர் கூறுவது சரிதான். நீ அவளிடமிருந்து விலகியே இரு மிரட்டுவது போல எச்சரிக்கை விடுத்தான். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
நீ யாருடா? கைரவ் கேட்க,அவளது தம்பிடா…என்றான் நிவாஸ்.
அட,…மச்சான்னு சொல்லு….கூற,
மச்சானா? யாருக்கு யார் மச்சான்? ஓடி போய் விடு. இல்லை உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது மிரட்டும் தொனியில் பேச,…..
நீ கோபமாக இருக்கிறாய்.நாம் அப்புறம் பேசலாம்.. ஸ்ரீயிடம் நான் சென்று வருகிறேன் டியர் என்று அறையினுள் எட்டி பார்த்துக் கூற, அவள் திரும்பிக் கொண்டாள். நிவாஸ் கோபமாக அவனருகே வர, அபினவ் கைரவை வெளியே இழுத்து விட்டான். அவன் அனைவரையும் முறைத்து விட்டு சென்றான். மற்றவர்கள் ஸ்ரீ,நிவாஸிடம் கூறி விட்டு அங்கிருந்து அகல,நிவாஸ் அங்கிருந்த கைக்குட்டையை எடுத்து வர,அனைவரும் சோகமாக சென்றனர்.
கவின் அகிலிடம், நீ வருத்தப்படாதே! என்று அவனை அணைக்க அவ்வளவு நேரம் தேக்கி வைத்திருந்த அழுகை வெளியே வர, அவள் என்னை பார்த்து, யார்? என்று கேட்டு விட்டாள். அவள் நம் அனைவரையும் மறந்து விட்டாள் குழந்தை போல் அழ,கவின் கண்ணிலும் நீர் சொட்ட, அதை கட்டுப்படுத்திக் கொண்டு அகிலை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். இவர்களை பார்த்தபடியே நிவாஸ் கைக்குட்டையை வைத்துக் கொண்டு ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.
அகிலும், அவனுடைய நண்பர்களும் கல்லூரி சென்றனர். கலகலப்புடன் பேசும் நண்பர்கள் அமைதியாக தனித்தனியே இருப்பதை கண்டு கல்லூரியில் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.அகிலும், அவனுடைய நண்பர்களும் இசைக்குழுவில் உள்ளனர்.அவர்களுக்கு கல்லூரியில் நிறைய விசிறிகள் உள்ளனர்.அனைவரும் அமைதியாக ஸ்ரீயை பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அந்த வழியாக கைரவ் வந்து அவர்களை பார்த்து விட்டு,
என்னடா இது? இந்த இசை பட்டாளம் அமைதியாக இருக்கிறது.அந்த ஸ்ரீயை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளை எனக்கு சொந்தமாக்காமல் விட மாட்டேன்.
அகில் கோபமாக அவனருகே வர, யாசு அவனை தடுத்து விட்டு அமைதியாக இரு.அவன் வேண்டுமென்றே நம்மை கோபப்படுத்தப் பார்க்கிறான்.
அவன் மேலும், அவள் மீது நான் விழும் போது இருந்ததே, அடடே அதை நினைக்கும் போதே இதமாக உள்ளது. அவளது தொடுகை அருமை….இதுவரை இப்படி ஒரு உடலமைப்பை நான் பார்த்ததே இல்லை.ஜிவ்வென்று இருக்கிறது என்று முகபாவனையை காட்ட அகில் பொறுமை தாளாது அவனை அடிக்க வர, நித்தி கைரவை பளாரென்று அறைந்து விட்டாள்.
கைரவ் கோபமாக நித்தியை அடிக்க வந்தான். கவின் தடுத்து அவனை அடிக்க, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவனை அடிக்க,கைரவிற்கு பலமாக அடி விழுந்தது. இது விரைவிலே கல்லூரி முதல்வரை எட்டியது. அவர்களை கல்லூரி முதல்வர் அழைத்து விசாரித்தார். அவனை பற்றி தெரிந்தும், எதற்காக அவனிடம் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? அகில்,கவின், அபினவை திட்டி விட்டு இரண்டு நாட்கள் சஸ்பன்சன் என்று ஒரு காகிதத்தை நீட்டினார்.
சார், அவன் ஒரு பெண்ணை பற்றி தவறாக எங்களிடமே வந்து பேசுகிறான்.சும்மா விட முடியுமா சார்? கோபமாக பேசினார்கள்.
இருந்து தான் ஆக வேண்டும். நித்தியை மட்டும் விட்டு விடுகிறேன்.நீங்கள் கிளம்புங்கள். உங்களுடைய வீட்டிற்கும் செய்தியை சொல்லி வர சொல்கிறோம்.அவர்களும் வந்து விடுவார்கள் என்று கல்லூரி முதல்வர் கூற,
வீட்டிற்கும் கூறி விடுவீர்களா? ரொம்ப நல்லது அபினவ் நினைத்துக் கொண்டே, மூவரும் வெளியே வந்தனர்.
கைரவின் அல்லகைகள்..என்னடா, கிளம்பி விட்டீர்களா? ஹா… ஹா….என்று சிரித்தனர். கவின் அவர்களை கோபத்துடன் முறைக்க, மற்றவர்கள் அவனை அமைதிப்படுத்தி அவனை விடுதிக்கு அழைத்து சென்றனர்.பின் நித்தி,யாசுவை பார்த்து, இரண்டு நாட்கள் நாங்கள் கல்லூரி வர முடியாது. நீங்கள் தான் ஸ்ரீயை பார்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் கைரவால் பிரச்சனை என்றால் உடனே போன் செய்து விடுங்கள் என்று அகில் கூறி விட்டு,அவனது அறை நண்பர்களிடமும் நித்தி, யாசுவிற்கு பிரச்சனை என்றால் எனக்கு கூறுங்கள்.நான் என்னுடைய குக்கூவை கண்டு விட்டேன்.இதனால் தான் தற்பொழுது அந்த கனவு வந்திருக்கும் போல என்றான்.
ஓ… அந்த கனவு பெண்ணால் தான் இவ்வளவுமா? சுதீப் கேட்டான்.
அதெல்லாம் இல்லைடா என்று மழுப்பிக் கொண்டே அங்கிருந்து வெளியே வர,கவினும் அபினவும் அகிலுடன் சேர்ந்து வெளியேற, அவர்களுடைய அம்மாக்களும் கல்லூரி முதல்வரை சந்தித்து விட்டு,வெளியே வந்து மகன்களுடன் பேசினார்கள்.
என்னடா, புதிதாக உள்ளது. ஒரு பெண்ணுக்காக கல்லூரி முதல் நாளே சஸ்பெண்டா? அபினவ் அம்மா சிரிக்க,
எதற்காக சிரிக்கிறாய்? இவர்கள் என்ன ஒழுக்கமானவர்கள் என்றா பெயரெடுத்திருக்கிறார்கள் அகில் அம்மா கோபப்பட,
இந்த வயதில் இதெல்லாம் சாதாரணம் என்று கவின் அம்மாவும் கூற,இருந்தும் அகில் அம்மா கோபமாகவே இருந்தார்.
அட விடேன்…என்று அபினவ் அம்மா கூறி விட்டு,ஆமாம் அந்த பொண்ணு அழகாக இருப்பாளா? அவள் பெயர் என்ன? யாரோட ஆள் டா? என்று கேட்க,
மூவரும் கோரசாக,…அம்மா….அதெல்லாம் இல்லை கூறினார்கள்.
ஓ….அப்படியா? அதனால் தான் பெரிய இடத்து பிள்ளை என்று கூற பார்க்காமல், அவனை இரத்தம் வரும் வரை அடித்தீர்களா?
நீங்கள் கற்று கொடுத்ததை தான் செய்தோம் கவின் கூற,
நாங்கள் என்ன இரத்தம் வரும் வரை அடிக்கவா கற்றுக் கொடுத்தோம்? அபினவ் அம்மா கேட்க,.
சரி,விடுங்கள். இனி இவ்வாறு நடந்து கொண்டால் எங்களிடமும் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் அகில் அம்மா கூறி விட்டு, அகிலின் பையை வாங்க,..
இல்லைம்மா….நாங்கள் ஊருக்கு வரவில்லை. இரண்டு நாட்கள் தானே! நண்பனுடைய வீட்டில் தங்கிக் கொள்வோம் என்று கூற, அவனது அம்மா அவனை முறைத்தார்.
அந்நேரம் விருட்டென ஒருவன் பைக்கை அவர்கள் முன் நிறுத்த,கவின் அம்மாவோ எடுபட்ட பயலே…யாருடா நீ? இப்படியா வருவாய்? என்று கத்த, அவன் தலை கவசத்தை கழற்ற,
அர்ச்சு….நீயா? நீ உன் அம்மாவுடன் வெளி நாட்டிற்கு செல்லவில்லையா? ஆர்வமுடனும் சந்தோசமாகவும் அகில் அம்மா அவனருகே வந்தார்.
அர்ஜூன்.அகன்ற நெற்றி,கூரான விழிகள்,எடுப்பான் நாசி, மாதுளை நிற இதழ்கள்,அனைவரையும் கவரும் முக அமைப்பு. பணக்காரன் என்றாலும் சாதாரணமாக இருப்பான்.
அம்மா….என்று அவனும் அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்று விட்டு, இல்லைம்மா. நான் அங்கிருந்து வந்ததிலிருந்து இங்கே தான் தனியொரு வீட்டில் வசிக்கிறேன்.
நீயும் இவர்களுடைய கல்லூரியில் தான் படிக்கிறாயா? கவின் அம்மா கேட்க,
இல்லை…இல்லை….என்று கவினிடமிருந்து பதில் வரவே,மூன்று அம்மாக்களும் கவினை முறைத்தனர்.
நீ ஏன் உன் பாட்டியை விட்டு சென்றாய்? நீ இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? அபினவ் அம்மா கூற, அவனது முகம் வாடியது. கவின் அம்மா அவரை இடித்து, அமைதியாக இருக்க சொல்ல, மூன்று பசங்களும் அர்ச்சுவை முறைத்த வண்ணம் நின்றனர்.
இவர்கள் உன்னுடன் தான் தங்க போகிறார்களா அர்ச்சு?அகில் அம்மா கேட்க,
அவனும் ஆமாம் என்று கூறினான்.
அப்படியென்றால் சரி…..நாங்கள் கிளம்புகிறோம் என்று தங்களது பசங்களுக்கு வாங்கி வந்த உணவுகளை அம்மாக்கள் கொடுக்க, அதையே ஏக்கத்தோடு பார்த்தபடி அர்ஜீன் நின்று கொண்டிருந்தான். இதை கவனித்த அகில் அம்மா, அவரிடமிருந்த இன்னொரு பையில் இருந்த உணவை கொடுத்து விட்டு சென்றார். அவனது மனது ஆறுதலடைந்தது.
நீ எதற்காக வந்தாய்? அபினவ் அர்ச்சுவிடம் கேட்க,நான் தான் அவனை அழைத்தேன் அகில் கூறினான்.
இவனை எதற்காக அழைத்தாய்?உனக்கு தான் பிரச்சனையாகும்.
பாசமழையில் நனையவா? இவனை அழைத்தேன். காரணமாக தான் அழைத்தேன்.
நான் என்ன உங்களது பாச மழையில் நனையவா வந்தேன்? என் ஏஞ்சலை காணவே வந்தேன் என்றான் அர்ச்சு.
அகில் கோபமாக, நான் கூறியதை மறந்து விட்டாயா? என்ன? கத்தினான்.
நான் எதையும் மறக்கவில்லை. அவளது நினைவை கொண்டு வர தான் நானும் வந்திருக்கிறேன். அதற்காக அவள் மீதுள்ள காதலையும் விட முடியாது…எப்பொழுதும் அவளை மட்டுமே காதலிப்பேன் என்றான் உறுதியாக அர்ச்சு.
டேய்,..உன்னை….அகில் கோபப்பட, நீயும் அவளை காதலிக்கிறாயா? என்ன? அப்பொழுது இல்லாத காதல் இப்பொழுது மட்டும் எப்படி வந்தது?அர்ச்சு கேட்டான்.
இது உன்னுடைய குணமே இல்லையே! நீ அர்ச்சு தானா? அபினவ் கேட்க,அவன் சிரித்துக் கொண்டு,எல்லாரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்று அகிலை பார்க்க, மீண்டும் இருவரும் முட்டிக் கொண்டு நின்றனர்.
அகில்,இதற்காக தான் இவனை அழைத்தாயா? கவின் முறைக்க,
இருவருக்கும் தான் ஆகவே மாட்டிக்கிறதே இருந்தும் எதற்காக அழைத்தாய்?அபினவ் கோபப்பட,
சரி,…விடுங்கள். வீட்டிற்கு செல்லலாம் வாருங்கள் அர்ச்சு அவர்களை அழைக்க,…மூவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
அட,…சும்மா விளையாடினேன் வாங்கடா..என்றான் அர்ச்சு. மூவரும் அவனுடைய வீட்டிற்கு சென்றனர்.
பிரம்மாண்டமான வீடு… பெரிய கேட்.உள்ளே சென்றால் பூக்களால் சூழப்பட்டு இருந்தது.பெரிய ஹால்.இரு புறமும் நான்கு அறைகள். ஒவ்வொறு பக்கத்திலும் வராந்தா அமைந்திருக்க அங்கேயும் அறைகள் இருந்தன.அதில் ஒன்று சமையலறை.நடுவே மாடிப்படி மேலே சென்றால் அங்கும் அறைகள். வசதி எழிலோடு அழகிய கண்ணாடியாலான பொருட்கள் மற்றும் வீட்டை சுற்றி அழகான செடிகள், ஹாலின் பின்பக்கத்தின் உள்ளே பெரிய நீச்சல் குளம் ரம்மியமாக காட்சியளித்தது.
இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக எப்படி இருக்கிறாய்? கவின் கேட்க….
இருக்கிறேன்….என்றான். மூவரும் வீட்டை சுற்றி பார்த்தனர்.மது பாட்டில்களை பார்த்து….
என்னடா,…நீ மது அருந்துவாயா?அகில் கேட்க, அவன் சிறு புன்னகையை உதிர்த்தான்.
எதற்கு சிரிக்கிறாய்? இந்த வயதில் இது தேவையா? அபினவ் கேட்க,
காரணம் கூறினால் உங்களுக்கு பிடிக்கவும் செய்யாது.புரியவும் செய்யாது அர்ச்சு கூற,
அது என்ன? பிடிக்காது, புரியாது….கவின் கேட்க,அவன் பதில் கூறாமலிருந்தான். சுற்றி பார்த்து விட்டு கீழே வந்தனர். அபினவ் ஓர் அறை அருகே சென்று,இதில் என்ன உள்ளது? கேட்க, அர்ச்சு கோபமாக இதன் அருகே யாரும் வரக்கூடாது என்று தடுத்தான்.
அதற்காக ஏன்டா, இப்படி கோபப்படுகிறாய்?அதில் பொண்ணு யாரையாவது அடைத்து வைத்திருக்கிறாயா? என்ன? அகில் கேலி செய்ய, பேச்சை மாற்றினான் அர்ச்சு. அப்படியே அந்த அறையை மறந்து விட்டனர் மூவரும். அர்ச்சுவும் நன்றாகவே எல்லாரிடமும் பேசினான்.
“தொலைந்தன எல்லாம் கிடைத்தது போலாகின
புதைந்தன எல்லாம் மறந்து போயின
தோழியே! தோழியே!
எங்களுயிர் தோழியே!
நீயின்றி உலகே அசையாது போயிற்று
உயிர் நீத்து வந்தாய் எங்கள் வாழ்விலே
இனி விட மாட்டோம்
விடமாட்டோம்
எந்நாளும் எந்நொடியேனும்
உந்தனது நட்பை”
”