ஹாய்…ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 36..

கவின் வேலையை முடித்து அப்பொழுது தான் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அகிலை பார்த்தவுடன் அவனை அடித்தான் .பின்னே வந்த அபியும் அவனது வாயிலே குத்தினான். அர்ச்சு அவர்களை தடுக்க,

விடுடா…..அவனை….இருவரும் அர்ச்சுவை தள்ளி விட்டு அகிலை அடித்தனர். அகிலிற்கு வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது.

என்னடா பண்றீங்க? நித்தி தடுத்தாள்.

டேய்……நாயே….அவளே..எவ்வளவு காயத்துடன் நலமில்லாது இருக்கிறாள். அவளுக்கு விருப்பமில்லாமல் முத்தம் கொடுத்திருக்கிறாய்?அபி மீண்டும் அடித்தான். இப்பொழுது யாரும் தடுக்கவில்லை.

அங்கே வந்த செவிலியர்…என்ன செய்றீங்க? இது ஹாஸ்பிட்டல்….இப்படி செய்யாதீர்கள். அனைவரும் செல்லுங்கள்.நோயாளியுடன் ஒருவர் இருந்தால் போதும். ஒன்பது மணிக்கு மேல் யாரும் இங்கே இருக்க கூடாது என்றார்.

அர்ச்சு புரியாமல் பார்த்தான். நிவாஸ் அவனருகே வந்து, அவள் தடுத்தும் அகில் முத்தம் கொடுத்ததை சொன்னான். அவள் விருப்பப்பட்டு ஏற்கவில்லை. அவளால் தடுக்க முடியாமல் தான் தோய்ந்து கிடந்தாள். அந்நேரம் தான் சீனியர்…சொல்ல, அர்ச்சு அகிலை நோக்கி சினத்துடன் சென்றான்.

யாசு அவனை தடுத்தாள். அவர்கள் அருகே வந்த டெலிவரி பாய்…..சாப்பாட்டை கொடுக்க, யாரும் ஆர்டர் கொடுக்கவில்லையே என்றான்.

சார்…உங்கள் அறை எண் 33 தானே! அவன் கேட்டான்.

ஆம் என்றான்.

அர்ச்சுவிற்கு போன் வந்தது. நீ தானா? என்றான் அவன்.

ஸ்ரீக்கு சாப்பாடு என்ன கொடுக்க வேண்டும்? என்று  மருத்துவரிடம் கேட்டு சொல்லு.

சரி என்று போனை வைத்தான்.

தாரிகா தான் ஆர்டர் செய்திருக்கிறாள் என்று அர்ச்சு கூற,அனைவரும் வாங்கிக் கொண்டனர். இரவு நான் என் அறையில் இருந்து கொள்கிறேன் அர்ச்சு கூறினான். கைரவை மருத்துவர் நாளை தான் அனுப்புவதாக சொன்னார்.அதனால் நான் இங்கே தான் இருக்கணும் சைலேஷ் நித்தியிடம் திரும்ப, அவள் அவன் மீது கோபமாக இருந்தாள்.

அவன் அவள் பக்கம் வந்து, நான் உங்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ?…என்ற பயத்தில் தான் அடித்து விட்டேன். சாரிம்மா….அவளை கட்டி பிடித்தான். அவள் அமைதியானாள்.

நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் சார்…என்றான் அபி… நித்தி முகம் சிவக்க விலகினாள்.அகில் மருந்து போட்டு விட்டு வந்தான். யாசு போனை எடுத்து மாதவிற்கு அழைத்து, அவனை கூப்பிட வர சொன்னாள்.

கொஞ்சம் நேரமாகும்மா…என்றான் அவன். அவள் செல்லமாக கோபிக்க, இதோ வந்து விடுகிறேன்.எங்கே?

ஹாஸ்பிட்டல் என்றாள்.

உனக்கு என்ன ஆச்சு?பதறினான்.

எனக்கு ஒன்றுமில்லை.என் ப்ரெண்டுக்கு தான்.

வருகிறேன்.போனை துண்டித்து விட்டு ஸ்டேசனிலிருந்து கிளம்பினான் மாதவ்.

செவிலியர் ஸ்ரீக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி விட்டு வந்தார். அவரிடம் சென்று மருத்துவரை பார்க்கணும் என்றான் அர்ச்சு.வாங்க…என்று அழைத்து சென்றார் அவர்.

மருத்துவரிடம் அவளுக்கான ஆகாரங்களை பற்றி கேட்டான். எப்பொழுதும் போல் சாப்பிடலாம். காய்கள்,பழங்கள், முட்டை,ஈரல் கொடுங்கள். அந்த பொண்ணு மயக்கம் தெளிந்தவுடன் ஏதும் பேச வேண்டாம்.சாப்பாட்டை கொடுத்து விட்டு தூங்க ஊசி போடுகிறோம்.நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகி விடுவார்.   தேவையில்லாமல் எதை பற்றியும் சிந்திக்காது இருந்தால் நல்லது என்றார்.

என்னால் தூங்க முடியவில்லை டாக்டர்.இன்று நானும் இங்கேயே இருக்கிறேன் என்று மருந்தும் கேட்டான். அவனுக்கு அடிபட்டதற்கான மருந்துடன் அவன் கேட்டதன் மருந்தையும் கொடுத்தார் மருத்துவர்.வாங்கி விட்டு வெளியே வந்தான்.

சைலேஷ் நித்தியிடம், எங்களது வீட்டில் இன்று ஒரு நாள் மட்டும் தங்கி தாத்தாவை பார்த்துக் கொள்ள முடியுமா? கெஞ்சுவது போல் கேட்டான்.

தாத்தாவிற்கு ஏதும் பிரச்சனையா?

அவருக்கு ஒரு முறை அட்டாக் வந்தது. அதனால் அவர் பக்கத்திலே இருந்து கவனித்து கொள்வேன்…இன்று கைரவை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். என்றான் தாழ்ந்த குரலில்.

சரி….ஆனால் நானாக எப்படி? என்று கேட்டாள்.

நானே அழைத்து செல்கிறேன்.யாராவது கொஞ்ச நேரம் கைரவை பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்.

நீங்கள் வரும் வரை அவனுடன் நான் இருக்கிறேன் என்று அகில் கூற, அனைவரும் திகைத்தனர்.உடனே நித்தி…வேண்டாம் என்றாள்.

நான் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன் அகில் கூறினான்.அர்ச்சுவும் அங்கே வர அனைவரும் சாப்பிட்டனர்.பின் சைலேஷ், கைரவ்..முன்  அனைத்தையும் கூறினான் அகில். பிரச்சனை பெரியது தான் போலவே! சைலேஷ் விறைத்து இருந்தான் மனதில் நினைத்தவாறு…

மாதவ் அங்கே வந்து சைலேஷை பார்த்து, நீ இங்கே இங்கடா?..அவன் கைரவ் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடைய அல்ல கைகள் முன்பே சென்றிருந்தனர். அவனை பார்த்து விட்டு சைலேஷ் நித்தியையும், மாதவ் யாசுவையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

அடுத்து நாம் என்ன செய்வது? நிவாஸ் மற்றவர்களை பார்த்தான்.நாளை பார்ப்போம்.நன்றாக தூங்கி எழுந்தால் தான் எனக்கு திட்டம் உதயமாகும் அர்ச்சு கூறினான்.மற்றவர்களும் அவனது கருத்தை ஆமோதித்தனர்.தாரிகா அங்கு வந்தாள்.

தனியாகவா வந்தாய்? அகில் கேட்டான்.

சீனியர் உங்களுக்கு என்ன ஆயிற்று?

அது..தயங்கினான் அகில். அவன் கீழே விழுந்து விட்டான் அபி கூறினான்.

கீழே விழுந்து விட்டாரா? அனைவர் முகத்தையும் பார்த்தாள்.ஆதேஷ் அங்கு வந்தான் சோர்வாக.

அவனை பார்த்து, உனக்கு என்னடா..? அர்ச்சு கேட்டான்.

ஒன்றுமில்லை அண்ணா. இவளை யாராவது வீட்டில் விட்டு விடுகிறீர்களா?

ஏன்டா,உன்னை தொந்தரவு செய்கிறேனா? தாரிகா வினவ…

இல்லை. அம்மா போன் செய்தார்கள். நான் வருகிறேன் என்று அவளை தவிர்த்தான். நில்லுடா….அவள் அழைத்தாள்.ஆனால் அவன் நிற்கவே இல்லை.

அர்ச்சு அவளருகே வந்து,அவன் செல்லட்டும். அவனை விடு.அவன் தனியாக இருந்தால் நார்மலாகி விடுவான். அவள் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.கவின் அவளையே பார்க்க,

ம்….போதும்டா….அபி அவனை கலாய்க்க…..

அபி…நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்? அர்ச்சு அபியிடம் நெருக்கமாக வந்து கேட்டான்.

நான் என்று திணறியவன்…எனக்கு புரிந்தது அது காதல் தான். ஆனால் எனக்கு இப்பொழுது அவர்களிடம் பேச தோன்றவில்லை.நாட்கள் செல்லட்டும்…. பார்க்கலாம் என்றான் தெளிவாக.அர்ச்சு அவனிடம் நல்ல முடிவு தான் செய்திருக்கிறாய் என்றான்.

ஸ்ரீ முணங்கும் சத்தம் கேட்க, எல்லாரும் அறை முன் வந்தனர். அர்ச்சு……..அனைவரையும் தடுத்து,மருத்துவர் சொன்னதை கூறி விட்டு நிவாஸ், தாரிகாவை மட்டும் அனுப்பினான். நாம் அனைவரும் அவள் சரியான பின்னே அவள் முன் செல்வோம். அதுதான் அவளுக்கு நல்லது என்றான்.

ஏன் இப்படி கூறுகிறாய்?அபி கேட்டான்.

நம்மை பார்த்தால் நடந்தவை அவள் முன் வந்து நிற்கும். அவளுக்கு மறுபடியும் உடல் பாதிக்கப்பட்டால் அதனால் தான்….என்று சமாளித்தான். அவள் பழைய நினைவுக்காக கஷ்டப்படுவதை நண்பர்களிடம் மறைத்தான் அர்ச்சு.

அப்பா…அப்பா…என்று முணங்கிய ஸ்ரீயை நிவாஸ் சமாதானப்படுத்தினான். தாரிகா ஸ்ரீக்கு ஊட்டி விட்டாள். ஸ்ரீ எதையோ பேச வந்தாள். அவளை தடுத்த நிவாஸ் நீ எதையும் யோசிக்காதே! படுத்துக் கொள். நன்றாக ஓய்வெடு அவன் கூற, தாரிகா அவளுடைய எண்ணத்தை மாற்றுகிறேன் ஜோக் கூறி ஸ்ரீயை சிரிக்க வைத்தாள். அவள் அமைதியாக தாரிகாவை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள்.

மறுபடியும் அவளுக்கு மருந்தை செலுத்த அவள் தூங்கிப் போனாள். தாரிகா வெளியே வந்து ஸ்ரீ செய்கையை கூற அனைவரும் மகிழ்ந்தனர். தாரிகாவை கவின் அழைத்து செல்கிறேன் என்று கூற, அபி நானும் வருகிறேன். நாளை சந்திப்போம் என்று கிளம்பினார்கள்.அவன் அவளை வீட்டில் இறக்கி விட்டு அவனும் அபியும் விடுதிக்கு சென்றனர்.

நித்தியை சைலேஷ் அவனது வீட்டிற்கு அழைத்து செல்ல,தாத்தாவிற்கு ஒரே ஆனந்தம்.

வாம்மா…என்று மனம் நிறைய அழைத்தார். அவள் வீட்டை பார்த்து பிரமித்து நின்றாள்.சைலேஷ் அவளது கையை பிடித்து அழைத்து உள்ளே வந்தான்.நித்தி கைரவிடம் பேசியது நினைவுக்கு வந்தது.அவனது உயரம்…என்று மனதினுள் பயந்தவாறு…அமைதியாக இருந்தாள்.

அவளை உட்கார வைத்து தாத்தா அவளை உற்று கவனித்தார். அவள் தரையை பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

என்னம்மா…ஏதும் பிரச்சனையா?கேட்டார்.

அவள் சைலேஷை பார்த்தாள். அவனும் அவளிடம்,உங்க வீட்டுக்கு வந்ததும் அமைதியாக நல்ல பிள்ளை போல் இருக்கிறாயா? கேட்டவுடன் கண்ணீர் சரேரென்று வழிந்தது. அவன் அதிர்ந்து அவளருகே அமர்ந்து, அவளது கையை எடுத்து அவனது கைக்குள் வைத்தவாறு நான் சும்மா விளையாட்டிற்காக தான் கூறினேன். சாரிம்மா…என்றான். அவள் தனது கையை அவனது வாயில் வைத்து, வேண்டாம் என்று விட்டு, தாத்தாவை பார்த்தார்.

என்னம்மா..எங்கள் வீடு பிடிக்கவில்லையா? தாத்தா வினவ,அதெல்லாம் இல்லை தாத்தா…நான்….நான்…மீண்டும் கண்ணீர் அவளை மீறி வர, அவளுக்கு தொண்டை அடைத்தது.

தாத்தா அவளது தலையை ஆதரவாக தடவி விட்டார். கண்ணை மூடி திறந்தவள். நான் அவருக்கு தகுதியானவள் தானா? என்று எனக்கு தெரியவில்லை அவள் சைலேஷை பார்க்க, அவன் சினத்துடன் அவளை பார்த்தாள்.

ஏன்மா இப்படி பேசுகிறாய்? அவனிடம் ஏதும் எதிர்பார்க்காமல் பல வருடங்களாய் காதலிக்கிறாய்.இது போதும்மா என்றார் அவர்.

இது தான்….தயங்கினாள்.

எது? சினத்துடன் கேட்டான் சைலு.

நான் அவங்க மாதிரி பணத்திற்காக உங்களுடன் பழகுகிறேன் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அப்படி நினைப்பேன் என்று நீ நினைத்து விட்டாயா? நான் உன்னை முதலில் எந்நிலையில் பார்த்தேன் தெரியுமா? ஸ்ரீக்காக,… அதான் உன்னுடைய தோழிக்காக கீழே விழுந்து அடிபட்டும் ஓடினாயே! அப்பொழுது தான் பார்த்தேன்.அப்பொழுது உன்னுடைய தோழமை எனக்கு பிடித்து விட்டது.அந்த பதட்டம்…பாசம்…கோபம் எல்லாம் அந்த பொண்ணுக்காக இல்லாமல் எனக்காக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அக்கணமே. அது காதல் என்று புரியவில்லை. கல்லூரியை பார்க்கவே வந்தேன்.பின்பும் நிறைய முறை உன்னை காண நேரிட்டது. அந்த ஒரு நாளே எனக்கு உன் மீது காதல் வந்தது புரிந்தது நான் வீட்டிற்கு வந்த பின்….

உன்னுடைய காதலை அறிந்து,அதுவும் எனக்காக தனியாக உன்னுடைய ஊரிலிருந்து தோழியுடன் வந்து என்னை பின் தொடர்ந்து காதலித்து இருக்கிறாய் என்றால் உன் காதல் எவ்வளவு உண்மையானதாக இருக்கும் என்று உன் மீதான காதல் அதிகமானது. ஆனால் நீ என்ன நினைத்து விட்டாய்? வருந்தினான்.

அவள் இதழ்கள் புன்னகை பூக்க, அவனது கையை இறுக பற்றியவள்.எனக்கு பயம். இப்பொழுது இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் கோபத்தில் பணத்திற்காக தான் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறி விட்டால் அதை என்னால் தாங்க முடியாது நீர் கசிய..அன்று நந்தினி மேடம் கூட கோபமாக பேசியதையும் பார்த்தேனா? எனக்கு பயம் பீடித்துக் கொண்டது. உங்களது வீட்டின் பாதி கூட எங்கள் வீடு இருக்காது…அப்பா இங்கே வர மாட்டார். என்ன தான் மருத்துவர் என்றாலும் கிராமத்தில் பார்ப்பதால் வருமானம் குறைவு தான். இல்லாதவர்களிடம் பணமும் வாங்க மாட்டார்.அவருக்கு மருத்துவ சேவை மனநிறைவை தரும் என்று அடிக்கடி கூறுவார். அதனால் அவரிடம் இங்கே வர கூட நான் சொன்னதில்லை. பேசி முடித்து தாத்தாவை பார்த்தாள்.

அங்கு வேலை செய்பவர்களும் அவர்கள் பேசியதை கேட்டு,சைலேஷ்..நித்தியை ஆர்வமுடன் பார்க்க, எப்படி நம்ம வீட்டு மருமகள்…..? தாத்தா அவர்களிடம் வினவினார்.

சாரே,…நம்ம பையனுக்கு ஏத்த பொண்ணா தெரியுறாங்க…அவர்கள் கூற, அவள் அவர்கள் அருகே சென்று பேச..அவன் கோபமாக அவளை பார்த்தான்.

அம்மா…அங்கே பாருங்கள் என்று அங்கிருந்து ஒரு அம்மா சைகை செய்ய திரும்பியவள்.

சார்,….கோபமா?…சைலூ சார்..உங்களுக்கு தெரியுமா? என்னோட ப்ரெண்டோட அண்ணன் சரியான ஸ்ரிட் ஆபிசராம்.பாவம் அவன்….ரொம்ப கவலைப்படுறான். அவனுக்கு இன்று அடிபட்டிருந்தும் அவனை திட்டிக் கொண்டிருந்தார்.

அந்த ஆபிசரை என்ன செய்யலாம்? எனி ஐடியா?

வேண்டாம்…வேண்டாம்..நீங்களும் அவர் மாதிரி தான். அவரை …..சிந்தித்தவள் அவரை கொட்டு வைத்து, இனி நண்பனை காயப்படுத்தாதீர்கள் கூறலாம்ல அவனருகே நெருங்கி கையை கொண்டு வர,

ஆமாம்மா…அவனை விடாதேம்மா…என்னை கூட இனிப்பு சாப்பிடவே விட மாட்டேங்கிறான்….தாத்தா புகாரளிக்க, அவள் கையில் கோலப்பொடி வைத்திருந்தாள். வேலைக்கார அம்மாவுடன் பேசும் போது எடுத்திருப்பாள். அதை அவன் மீது  தலையில் போட தயாரானாள்….ஆனால் சைலேஷ்… யாரு… விடுவானா? அவளது கையை திருப்பி அவளை இழுக்க, இதை எதிர்பார்க்காத நித்தி கை திறக்க பொடி அவள் மீது பட்டது.சைலேசும் மற்றவர்களும் அவளை பார்த்து சிரித்தனர்.அவள் வேகமாக தண்ணீரை எடுத்து வந்து அவன் மீது ஊற்ற, அவன் அவளை கைக்குள் வைத்திருக்க, இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். தாத்தா சைகை செய்ய அனைவரும் உள்ளே சென்றனர். தாத்தாவிடம் அவரது துணையாள்….தம்பி சிரித்து பார்த்ததே இல்லை. இந்த பொண்ணு மட்டும் நம்ம வீட்டுக்கு வந்தா..வீடு மகிழ்ச்சியாக இருக்கும்…என்றார்.

பார்த்துக் கொண்டே இருந்த இருவரும், மேலும் நோக்க, சைலு நித்தி நெற்றியில் முத்தமிட்டு,நீ அவ்வாறு நினைத்து பயப்பட தேவையில்லை.உன் காதலையும் உன்னையும் முழுதாக அறிந்து தான் உன்னை ஏற்றுக் கொண்டேன்.இனி எக்காலத்திலும்…உன்னை விட என்னால் முடியாது.மறு முறை இவ்வாறு பேசாதே! பணத்தில் ஏதுமில்லை.எனக்கு உன் காதல் முழுதாக வேண்டும் என்று அவளை முத்தமிட்டான். நித்தி உருகி விட்டாள்.

      “காதலே! காதலே!

         கை கூடியது

      காலை பார்த்தது

      மாலை வந்தது

  மனதில் பிறந்தது புது மலர்

       மணம் வீசியது

   என் வாழ்விலே மறு மலர்

      காயாகிய மனதை

       கனியாக்கினாள்

          எங்கிருந்தாள்

       இத்தனை நாளாய்?…”