ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இன்றைய எபிசோடில் சிறு வயது அர்ச்சுவின் காதல் ஆரம்ப நிகழ்வு.. முன்னுறையாக…
இதோ உங்களுக்கான எபிசோடு 30…..
அர்ச்சுவும் தாரிகாவும் வண்டியில் சென்று கொண்டிருக்க,தாரி….ஸ்ரீ வீட்டில் இருக்கிறாளா? என்று கேள்.
அவள் தனியாக தானே இருப்பாள். முதலில் அவளிடம் செல்வோம். பின் அந்த ஆள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
என்ன? வண்டியை அர்ச்சு நிறுத்த, அம்மாவை பார்க்க போகலையா?
முதல்ல அந்த ஆளை தான் பார்க்கணும் என்றாள். சிந்தித்தவன் வா…செல்லலாம் என்று கைரவிற்கு போன் செய்தான்.பின் வீட்டிற்கு சென்று ஸ்ரீயை பார்த்தனர்.
கதவை பூட்டிக் கொள். நீ உள்ளேயே இரு….அர்ச்சு ஸ்ரீயிடம் பேச, அம்மாவை இன்னும் காணோம் என்று அவள் அர்ச்சுவிடம் கேட்டாள்.அவன் தாரிகாவை பார்த்தான்.
அம்மா….என்றவள்…போனில் வந்த செய்தியை கூறினாள்.
அப்படியா? நானும் அம்மாவை பார்க்க வருவேன் ஸ்ரீ சொல்ல, நாங்கள் இவளது அப்பாவை பார்க்க போகிறோம் பிரச்சனை கூட நடக்கும். நீ சோர்வாக தெரிகிறாய்.நீ இங்கேயே இரு என்றான்.
முடியாது என்று அவளும் வெளியே வந்தாள். சொன்னால் புரிஞ்சுக்கோ ஸ்ரீ….
நான் வருவேன் என்றாள் விடாப்பிடியாக…..அவள் தனியே தானே இருப்பாள்.அது எனக்கு சரியாக படவில்லை. வா ஸ்ரீ போகலாம் என்று தாரிகா அழைக்க, ஸ்ரீ அர்ச்சுவை பார்த்தாள்.
பல்லை கடித்துக் கொண்டு வா…..என்றான்.மூவரும் கிளம்பி மோகனது வீட்டை அடைந்தனர்.
டேய்,….என் மருமகள் வந்திருக்கா….விருந்து ரெடி பண்ணுங்க…என்றாள் மோகனின் தங்கை சுமதி.
மாமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லையாடி என் தங்கமே…… தாரிகா அருகே குமாரன் கையை கொண்டு வர, அர்ச்சு அவனது கையை பிடித்து முறுக்கினான்.
அய்யோ அம்மா! கத்தினான் அவன்.
யாருடா நீ? சுமதி உறும, நான் இவளது அண்ணன் டா…..தாரிகாவை தன் பக்கம் கொண்டு வர,கைரவ் அங்கே வந்தான்.
எங்கிருந்து வந்ததுடா இந்த புது காளான்? ஆண்குரல் ஒலிக்க, அனைவரும் அந்த பக்கம் திரும்ப,அண்ணா!…..இவன் தான் அம்மாவை கஷ்டப்படுத்தும் படுபாவி தாரி கூறினாள்.
அர்ச்சு பேசுவதற்குள்,ஸ்ரீ முந்திக் கொண்டு
நீ தான் அந்த ஏகாதிபதியா?…..அவன் ஸ்ரீ முன் வர, உனக்கு அசிங்கமாக இல்லை.உன்னோட பொண்ணுக்கு மாமா வேலை பாக்குற?
ஆமா…நான் பார்க்கிறேன் தான். எனக்கு அதனால் தான் பணம் நிறைய கிடைக்கிறது.
பணத்திற்காகவா?….நான் பணம் கொடுத்தால் இவர்களை உன்னால் கொல்ல முடியுமா? கைரவ் கேட்டான்.
பைத்தியமாடா…நீ? அந்த பணப் பைத்தியத்துக் கிட்ட பணம் தாரேன் சொல்ற,அவனுக்கு கொடுக்க வேண்டியது பணம் அல்ல அடி….உதை….. தான் ஸ்ரீ துடுக்காக பேசினாள்.
வாரே…..வா….இது தான் என்னோட ஸ்ரீ செல்லம்… அவள் மீதுள்ள கோபத்தை மறந்து அர்ச்சு கூறினான். மெதுவாக அவன் பக்கம் தலையை திருப்பி அவனை முறைத்தாள்.
என்னடா ஓவரா பேசிட்டேனோ? தாரிகாவிடம் கேட்க, ஆம் என்று தலையசைத்தாள்.இவ்வாறாக இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க ஒருவன் ஸ்ரீயை தாக்க வந்தான். கைரவ் ஒரே அடியில் அவனை திருப்பி போட்டான்.மற்றொருவனும் வர, அவனை தடுத்த அர்ச்சு,நாங்கள் சண்டை போட வரலை.இனி என் அம்மா, தங்கை வாழ்க்கையில் நீங்கள் வரக்கூடாது என்று எச்சரிக்கவே வந்தேன்.
எனக்கு எச்சரிக்கையா? ஹா…ஹா….ஹா…சிரித்தான் மோகன்.
உன்னை போல் ஒரு பொறுக்கியால் தான் என் அம்மாவும் வாழ்வை தொலைத்தார்கள். அது போல் தான் நீயும் இருக்கிறாய். இவர்கள் இடையே வந்தால் உன்னை சாவடிச்சிடுவேன் அர்ச்சு அவனிடம் மிரட்டல் விடுத்தான்.மூவரும் அவனை பார்த்தவாறு இருக்க,மோகன் அர்ச்சுவை உற்று பார்த்து விட்டு,….
யார் அந்த பொறுக்கி? கேட்டான்.
நான் அவனை பார்த்தது கூட இல்லை. எனக்கும் அது தேவையில்லை. உனக்கும் அது தேவையில்லை.
யாரும் உன்னோட அப்பா பெயர் கேட்டால் என்ன சொல்வ?
மிஸஸ் கமலி . அதுவும் நான் உயிரோடு இருப்பதால் என் அம்மாவுக்கு மிஸஸ்.என் அம்மா தனியா வாழ்ந்து பழகிட்டாங்க. அதனால் ஏதும் பிரச்சனையில்லை என்றவுடன்…
என்னடா…சொன்ன? என்று தாரிகாவும் ஸ்ரீயும் ஒருவாறு அவனது சட்டையை பிடித்தனர்.
அவனுகள? அடிங்கடா…… சுமதி கத்த, சண்டை போட்டனர். பசங்க பொண்ணுகள….பாதுகாக்க கைரவிற்கும் பலத்த அடி கையில்.அர்ச்சுவை ஒருவன் தாக்க ஸ்ரீயும் அவர்களுடன் சண்டை போட்டாள். தாரிகா திகைப்புடன் ஸ்ரீயை பார்த்தாள்.
நிறுத்துங்கள்….என்ற ஒலியுடன் மோகன் சத்தமிட, அனைவரும் அமைதியானார்கள்.
மாமா…அவர்களை கொன்று விடுங்கள் குமாரன் கூற, அர்ச்சு கைரவ் முன் ஸ்ரீயும் தாரிகாவும் வந்து நின்றனர்.
ச்சீ….உன்னை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது. நீ என்னை உன்னோட பொண்ணு என்று யாரிடமும் சொல்லாதே! சீற்றத்துடன் கத்தினாள் தாரிகா.
உனக்கு எவ்வளவு தைரியம்டி..? சுமதி தாரிகாவின் தலையை கொத்தாக பிடித்தாள். கைரவ் அவளை தள்ளி விட்டு தாரிகாவை அவன் பக்கம் பிடித்து இழுத்தான்.
போதும்…கிளம்புங்கள்….என் கண்முன் யாரும் வந்து விடாதீர்கள்! மோகன் சொல்ல,ஸ்ரீ உடல் அதிக சோர்வாக மறுபடியும் மயங்கினாள். அர்ச்சுவோ……இவளுக்கு வேற வேலையில்லை என்றவாறு அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.
கல்லூரியில் மதிய வேலை முடிந்து வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் வகுப்பில் இருக்க, நித்திக்கு சைலேஷ் போன் செய்தான்.பெஞ்சிற்கு அடியில் தலையை விட்டவாறு,நான் வகுப்பில் இருக்கிறேன். அப்புறம் போன் செய்கிறேன் என்று அவன் பேச வந்ததை கூட கவனியாது வைத்து விட்டாள்.
மறுநொடியே அவளது வகுப்பிற்கு வந்து விட்டான் சைலேஷ்.வியர்க்க விறுவிறுக்க அவனை கண்ட அவளது ஆசிரியர் வேகமாக வெளியே வந்து கேட்க, அகில் நண்பர்களிடம் பேச வேண்டும் என்றான் கைக்குட்டையால் வியர்வையை துடைத்தபடி…
அவன் முகத்தை பார்த்து நித்தியோ….ஏதும் பிரச்சனையோ? நினைக்க, சரியாக அவர்களை அழைத்தார் ஆசிரியர்.
மூவரையும் பார்த்தவன் அபி கையில் இருந்த போனை பிடுங்கி போன் செய்தான். அனைவரும் புரியாமல் இருக்க, நித்தி முன் வந்து என்ன ஆயிற்று? எதற்கு இந்த பதட்டம்? என்று தான் கேட்டாள். உடனே அவளது கையை பிடித்தவன், கைரவ்…கைரவை காணோம்….என்றான்.
அவன் எங்காவது சுற்றிக் கொண்டிருப்பான் அகில் கூற,சைலேஷ் அவனை முறைத்தான். கவினும் அபியும் சைலேஷ் நித்தி கையை பற்றி இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சும்மா இருடா…நித்தி திரும்பி மற்றவர்களை பார்க்க, அவர்கள் இவர்களது கையை பார்ப்பதை கண்ட நித்தி, அனைவரையும் வேரொரு இடத்திற்கு அழைத்து சென்றாள்.
அவன் எங்கே செல்ல போகிறான்?
அவனை காலையிலிருந்தே நான் பார்க்கவில்லை.கல்லூரி விட்டு சென்றாலும் நாங்கள் மூவரும் ஒன்றாக தான் சாப்பிவோம். மணி இரண்டாகிறது. அவன் வரவில்லை. வீட்டிலும் அவன் இல்லை. தாத்தாவிடமும் வெளியே சென்றிருக்கிறான் வந்து விடுவான் என்று கூறி இருக்கிறேன்.
அதான்… அவன் பின்னே இரண்டு சுற்றுமே!…..கவின் கேட்டான்.
அவர்களுக்கும் தெரியவில்லை கலங்கினான்.
ஏய்…..தாரிகாவுடன் அர்ச்சு சென்றானே! அவனுடன்….அபி வினவ,
வாய்ப்பேயில்லைடா…..அர்ச்சு எப்படி கைரவுடன்….? எகத்தாளமாக அகில் பேச, நித்தி அவனை சும்மா இருக்க சொல்லு சைலேஷ் சீறினான்.
டேய்…எல்லாரையும் உன்னை போல் நினைக்காதே! நித்தி கூறினாள்.
என்ன கூறி விட்டாய் நீலவேணி? என்பது போல் அகில் நடிக்க,நான் நடிக்கவில்லை கோபமாக சொன்ன நித்தி அர்ச்சுவிற்கு போன் செய்தாள்.
போனில் தாரிகா குரல் கேட்க, கைரவ் அங்கே இருக்கானா? நித்தி கேட்க,ஆமாம் இங்கே தான் இருக்கார்.ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.
என்ன ஆயிற்று? அவள் சைலேஷை பார்த்தாள்.
சீனியர்…சீனியர்…. என்று தாரிகா….. அவரது கையில் தான் அடி…
என்ன தான் நடந்தது? நித்தி கேட்டாள். சைலேஷ் அவளை தீவிரமாக கவனித்து பதட்டமானான்.
தாரிகா நடந்தவற்றை விவரித்தாள்.
அவனுக்கு என்ன பைத்தியமா? அர்ச்சு எங்கே? அவர் ஸ்ரீயை அறையில் விட்டு,அம்மாவை பார்க்க சென்றிருக்கிறார் என்றாள்.
அண்ணா மேல தப்பு இல்லை. நான் தான் அவரை பார்க்க தனியே போவதாக கூறினேன்.ஸ்ரீயும் கேட்க மாட்டேன் என்றால் அதனால் தான் கைரவ் சீனியருக்கு போன் செய்தோம்.
போனை வை…கோபமாக உரைத்தவள்,சைலேஷிடம் வாங்க மருத்துவமனைக்கு என்றாள்.
அவனுக்கு……திக்கி கொண்டே கேட்டான் சைலேஷ்.அவனை அணைத்து கொண்டு அவனுக்கு கையில் அடிபட்டிருக்கிறதாம்…என்றவள் நண்பர்கள் பக்கம் திரும்பி, நீங்கள் வகுப்பு முடிந்தவுடன் வாருங்கள் என்று விட்டு அவள் கிளம்ப, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சைலேஷ் அவளை நிறுத்தினான்.
நீங்களா? என்றவள் அவனும் என்னோட குடும்பம் தானே! நீங்கள் காரை நிதானமாக எடுத்து வெளியே வாங்க.நான் விடுப்பு கூறி விட்டு வருகிறேன் என்று கூற கண்கலங்க அவளை கட்டிக் கொண்டான். மற்றவர்கள் அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்து விழித்தனர்.
சீக்கிரம் செல்லுங்கள்.நானும் வருகிறேன் திரும்ப நண்பர்கள் கையை கட்டியவாறு அவளை பார்த்தனர்.அவள் தோளை குலுக்கி விட்டு நாங்கள் சேர்ந்து விட்டோம்….
அடப்பாவி…என்னம்மா…சீன் போட்ட…பழி வாங்க….என்று அபி கலாய்க்க, இதற்கு நேரமில்லை பை…பை…என்றவள் ஓடி விட்டாள். கவினிற்கு இம்முறை ஏதும் பெரியதாக தோன்றவில்லை.இருவரும் மருத்துவமனை சென்றனர்.
மருத்துவமனையில் கைரவ் கையில் கட்டுடன் இருந்தான் ஓர் அறையில்.தாரிகா அம்மாவிற்கு தலையில் சிறு அடி தான் போல்.அவள் அம்மாவுடன் இருக்க,அர்ச்சு அம்மாவை பார்த்து விட்டு, கைரவை பார்த்தான். அவன் தூங்கிக் கொண்டிருக்க,ஸ்ரீ அறைக்குள் வந்தவன் அவளும் மயக்க நிலையிலே இருக்கவும் வெளியே வந்தான். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த அர்ச்சு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் தலை சாய்த்து அயர்ந்து தூங்க,ஸ்ரீ விழித்து சுற்றி பார்த்தாள்.
அர்ச்சுவை பார்த்து அவன் கூறிய என்னோட ஸ்ரீ…நினைத்து புன்னகையுடன் அவனது முகமருமே வந்து அவனை கண்களால் மெதுவாக வருடியவாறு ரசிக்க, அவன் அசையவும் ஸ்ரீ….உனக்கு என்ன ஆச்சு? என்று தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் அவனை ரசித்தாள். கதவு பட்டென திறக்க திடுக்கிட்டவள் எழுந்து அமர்ந்தாள்.
நித்தி வேகமாக உள்ளே நுழைந்து, டேய்….அர்ச்சு எழுப்பினாள்.
ஸ்ரீயை பார்த்து, உனக்கு ஒன்றுமில்லை தானே அவளருகே வந்தாள். அர்ச்சு தலையை பிடித்து கொண்டு எழுந்தான்.
ஸ்ரீ கண்கள் விரிய, அர்ச்சு…பதட்டமாக அழைத்துக் கொண்டு அவனருகே வந்து அவனை திருப்பி, அவனது பின் தலையை தொட அவளது கைகள் நடுங்கியது. அவளது கைகளில் இரத்தம்….நித்தியும் அவனருகே வந்து பார்த்தாள்.
அர்ச்சு…அர்ச்சு…இரத்தம்….ஸ்ரீ நடுங்க, அவனும் தொட்டு பார்த்தான். பின் ஸ்ரீ ஒன்றுமில்லை…. அவன் அவளை சமாதானப்படுத்தினான்.
டேய்,…என்னடா செஞ்சு தொலைஞ்சீங்க? கோபமாக நித்தி கத்த, கூல்…நித்தி….என்றான்.
ஸ்ரீ…இங்கே இரு….நித்தி கூற, நானும் வருகிறேன் அவள் இறங்க, அவ தான் இருன்னு சொல்றால…கேட்கவே மாட்டாயா? அர்ச்சு ஸ்ரீயை திட்டினான்.அவனுக்கு தலை சுற்ற, நிற்பாளா ஸ்ரீ?
நித்தி டாக்டரை அழைக்க,…..ஸ்ரீ அர்ச்சுவை தாங்கினாள். இருவரது முதல் சந்திப்பும் இவ்வாறு தான் இருந்திருக்கும். அவள் மீதே சாய்ந்தான் அர்ச்சு.அர்ச்சுவிற்கு எட்டு வயதிருக்கும் அப்பொழுது ஸ்ரீயின் கிராமத்திற்கு வந்திருப்பான். அங்கிருந்த பசங்க அவனை காயப்படுத்தி பிடித்து தள்ளி விட ஸ்ரீ வந்து தான் பிடித்திருப்பாள்.அது ஸ்ரீக்கு தற்பொழுது நினைவிற்கு வந்தது.பின் ஒவ்வொன்றாக நினைவு வர,…..அவன் அன்று ஸ்ரீயை பின் தொடர ஆரம்பித்தவன் தான். இன்று வரை அவன் விடவில்லை.
“நெஞ்சுள் புதைந்த நினைவுகள்
திரும்புதே!
நினைத்து நினைத்தும் எழாத
நினைவுகள்
உங்களால் மீண்டெழுகிறதே!
நேற்றைய நினைவுகள்
இன்றைய கனவுகளா?
அன்றி
மீண்டெழுவன கற்பனையா?”