ஹாய்..ப்ரெண்ட்ஸ்…

எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?

என் இனிய இரவு வணக்கம்

இதோ உங்களுக்கான எபிசோடு 26

கலங்கிய படி நிவி…. என்றவள்.அர்ச்சு ஸ்ரீ அருகே வந்து அவளது கண்ணீரை துடைத்தவன்.அழாதே! ஆள்காட்டி விரலை அசைத்தான்.

அண்ணா…..நான் இருக்கிறேன் அண்ணா…ஆதேஷ் அவனை கட்டிக் கொண்டான்.

ஏன்டா…உண்மையை சொன்னால் ஏன்டா எமோஷ்னல் ஆகிறீர்கள்?அர்ச்சு கேட்டான்.

ஆது…உனக்கு இவனை தெரியுமா? தாரிகா அம்மா கேட்டான்.

தெரியும்மா..என்றவன். என் அம்மா, இவர் அம்மா பிஸினஸ் பார்ட்டனர்.

பெரிய இடத்து பையனா இவன்?

அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா…அனைவரையும் பார்த்து போதும்டா.. நார்மல் ஆகுங்க…..

அது சரி. உன் நண்பனை பழகி பிடித்திருந்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்று அம்மா பட்டென கூறினார். அனைவரும் அதிர்ந்து அவரை பார்க்க, உன்னை எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு உன்னை பார்த்தால்…யாழினி தான் நினைவிற்கு வருகிறாள்…அவளை போலவே….நடந்து கொள்கிறாய்… எனக்கும் மகனில்லை….நீ என்னை அம்மா என்றே அழைக்கலாம் என்றார். தாரிகாவும், இன்பாவும் அதிர்ந்து அவளது அம்மாவை பார்த்தார்கள்.

நீ  எப்பொழுது வேண்டுமானாலும் நம் வீட்டிற்கு வரலாம் என்றவர் உனக்கு சாப்பாடு…..?அவர் கேட்டார்.அர்ச்சு சிலை போல் நின்று கொண்டிருக்க, நிவாஸ் அர்ச்சு தோளை தட்ட, மீண்டவன் நிவாசை பார்த்து பின் அம்மாவை கவனித்து,

நீங்கள் என்ன கூறினீர்கள்?

நீ பேசும் போது உன் கண்களில் வலி தெரிந்தது. அம்மா தனியாக குடும்பத்தை நடத்துவது மிகவும் கடினம். எனக்கும் அந்த கஷ்டம் தெரியும். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ என்று பேசிக் கொண்டே, அவனது தலையை கோத, சரசரவென நீர் மழை பொழிந்தது.அவர் சிறு புன்னகையுடன் அதை துடைத்து விட்டு,இனி தினமும் நம் வீட்டிற்கு வா..தாரிகாவின் அண்ணாவாக… என்றவுடன் அவரை கட்டிக் கொண்டான்.

டேய்…விடுடா….வேலையிலிருந்து இப்பொழுது தான் வந்தேன். வியர்வையுடன் இருக்கிறேன் என்றவரை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் கட்டிக் கொண்டான். தாரிகாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.மற்றவர்கள் ஆனந்த கண்ணீருடன் இவர்களை பார்த்தனர்.

சிறிது நேரம் கழித்து அம்மா, நாங்கள் கிளம்புகிறோம் என்று அனைவரும் கிளம்பினர். ஸ்ரீ கண்கள் விரிய அர்ச்சுவை பார்த்தாள்.

ஓய் நேரமாகிறது நிவாஸ் சத்தமிட, ஸ்ரீ அர்ச்சு பின் அமர்ந்து கொண்டாள். நிவாசும் அமர கிளம்பினார்கள்.

ஆதேஷ் பெண்களை அழைத்துக் கொள்ள, அபியுடன் இன்பாவும் கிளம்பினாள்.

அபி அர்ச்சுவை பற்றி சிந்தித்துக் கொண்டே வண்டியினை செலுத்த, மழைத்தூரல் ஆரம்பித்தது. ஜில்லென்ற உணர்வோடு இருவரும் சென்று கொண்டிருக்க,எதிரே வந்த கார் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அபி எழுந்து இன்பாவை தூக்கி விட காரிலிருந்து வந்தவனை பார்த்து அபி, …..இவன் என்று கூறிக் கொண்டே தலையில் கை வைத்தவள்.

நீ…..போ…போ….என்று அபியை துரத்தினாள்.

உங்களுக்கு என்ன ஆயிற்று? அவன் அருகே வந்து கொண்டிருக்க அபி கையை பிடித்து இன்பா ஓட ஆரம்பித்தாள்.அந்நிலையிலும் போனை எடுத்து சந்துரூ….. எடுடா…எடுடா….அவள் ஓட, எதுவும் புரியாமல் அபி இருக்க, காரிலிருந்து வந்தவனும் அவர்களை துரத்த ஆரம்பித்தான்.

எதற்காக ஓடுகிறோம்? அவளது கையை விட, அவளது கண்கள் தவித்த படி, அவன் சைக்கோ போல். அவனை சமாளிக்க நம்மால் முடியாது கத்தினாள் இன்பா.அவளது கையை உதறிய அபி, நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை என்று அவனும் கத்தினான்.அவன் அருகே வந்து இன்பாவின் முடியை பிடித்து இழுத்தான். அபி கோபமாக அடி ஒன்றை அவனது கையில் கொடுத்தான்.

அய்யோ அம்மா! என்று கத்தினான் அவன்.இன்பா அபியை பார்த்துக் கொண்டே பின் விலகி நின்றாள்.அவன் மீண்டும் விடாது அவனது வித்தைகளை இறக்க, அபியும் அடி வாங்கினான்.

அபி…வேண்டாம்…வேண்டாம்……இன்பா கத்த, அபி வெறியானவன் போல் அவனை அடித்து விரட்ட சரியாக சந்துரூ வந்தான். அவன் ஓடிய சந்தோசத்தில் அபியை இன்பா கட்டிக் கொண்டிருக்க,அபி மெழுகாய் உருகினான்.

குட்டி சாத்தான்….. சத்தம் கொடுத்துக் கொண்டே சந்துரூ அவர்கள் அருகே வந்தான். அவனை பார்த்ததும் அவனையும் அணைத்துக் கொண்டு அவனை விடுவித்து

டேய்….அபி சூப்பராக சண்டை போட்டான். அப்படி இப்படி கை, கால்களை தூக்கி செய்து காட்டினாள்.அவன் சிரித்துக் கொண்டு,

 ஓ அப்படியா?என்று அவளது தலையை வருடி விட்டு, வாருங்கள் என்று ஒரமாக அவர்களை அழைத்து வந்தான் சந்துரூ.

இன்பா பக்கம் திரும்பி, நீ நன்றாக தானே இருக்கிறாய்? அவளை விசாரித்தான். அவளை ரசித்தவாறு அபி நிற்பதை பார்த்தான் சந்துரூ. அவன் இதழ்களில் மெதுவாக புன்னகை அரும்பியது.

அட போதும்மா… அந்த மீன் விழியாளோ பேசிக் கொண்டே இருக்க, அவளது தலையை அபி பக்கம் திருப்பினான் சந்துரூ. அவன் அவளை பார்த்திருப்பதை பார்த்த இன்பாவோ….

அபி இங்கே வா…..வா…..சிறு பிள்ளை போல் ஓடிச் சென்று அவனது கையை பிடித்து சந்துரூ அருகே அழைத்து வந்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். தாரிகா அக்கா யாழினியின் காதலன் என்று.

அபி அவன் மீது கூர்மையான பார்வை ஒன்றை உதிர்த்து விட்டு, இன்பாவை பார்த்தவாறு நின்றான்.

நன்றிடா….தம்பி… அபியை சீண்டினான் சந்துரூ.

தம்பியா?…நான் ஒன்றும் சிறு பையன் இல்லை என்றதும் சந்துரூ அவனை பார்த்து மெலிதாக சிரித்தான்.இன்பா இருவரையும் யோசனையோடு பார்த்தாள்.

நீ இன்பாவை வீட்டில் விட்டு விடுகிறாயா? எனக்கு வேலை ஒன்று உள்ளது என்று நழுவினான் சந்துரூ.

நீயும் வாடா வீட்டிற்கு என்று அழைத்தாள் அவள். இல்லடா…முக்கியமான வேலை என்றான்.என்ன வேலையோ இந்நேரத்தில்….இருவரிடமும் கையசைத்து விட்டு அகன்றான் சந்துரூ.

மழை விட்டபாடில்லை.அபியும் இன்பாவும் அருகருகே நின்று கொண்டிருக்க,அபி அவளை பார்த்து,

நீங்கள் எப்பொழுதும் இப்படி தான் பேசுவீர்களா?

எப்படி?

அதான் அவருடன் என்றான்.

ம்ம்ம்….எல்லாரிடமும் அப்படி தான் நடந்து கொள்வேன் முன்பு. ஆனால் இப்பொழுது முடியவில்லை. நான் மறைந்து விட்டது போல் ஓர் உணர்வு.உன் சண்டையை பார்த்து கொஞ்சம் பிடித்து என்னை அறியாமல் என்னுள் இருந்த பழைய இன்பா வெளியே வந்து விட்டாள்.அதான் என்றாள். அவள் அருகே அவன் திரும்ப, அட….மழை விட்டு விட்டது என்று நகர்ந்தாள். அவன் தலையை சிலிப்பியவாறு அவன் சென்று வண்டியை எடுத்து வீட்டிற்கு சென்றனர். வீட்டு வாசலிலே கிளம்ப முற்பட்டவனை நிறுத்தி வீட்டிற்குள் அழைத்தாள் இன்பா.

நேரமாகிறது நான் கிளம்புகிறேன் என்றான். அவனது தலையில் கையில் காயத்தை பார்த்தவள். வா…என்று கையை பிடித்து இழுத்து சென்றாள். இருவருமே முழுவதும் நனைந்திருந்தனர்.இருவரையும் பார்த்த இதயா உறைந்து நின்றாள்.

ஹே இதயா, காயத்திற்கான மருந்தை எடுத்து வா…. இன்பா கூற, அவளிடம் பதிலில்லை.திரும்பிய இன்பா அவளை பிடித்து உலுக்கினாள்.

ம்ம்ம்…..வருகிறேன் என்று உள்ளே சென்றாள்.

யாரும்மா? அவர்களது அம்மா கேட்டார்.

தெரிந்தவன் தான்ம்மா…நாங்கள் வண்டியில் வந்த போது சிறு விபத்து. அவனுக்கு அடி பட்டிருக்கிறது என்றவள் பேசி கொண்டே உடை மாற்றி விட்டு ஒரு டவலை எடுத்து தலை துவட்ட கொடுத்தாள் அபிக்கு. அவன் தலை துவட்ட, இன்பா தலையை விரித்து ஒரு கிளிப் போட்டிருந்தாள். முடியின் நுனியில் நீர் சொட்ட நின்றவள். இதயாவிடம் மருந்தை வாங்கி அவனுக்கு போட்டு விட்டு கொண்டிருக்க. அவள் முடி கற்றை முன் வந்து விழுந்தது. அவன் அதனை விலக்கி விட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் மெதுவாக, அவனை பற்றி….கேட்க

ஷ்ஷ்…..அவளது இதழில் அவள் கை வைத்து வேண்டாம் என்று கூற,அவன் அவளது இதழையே பார்த்துக் கொண்டிருந்தான்.இதயா இருவரை பார்த்தவாறு நிற்க, நிமிர்ந்த இன்பா அம்மாவிடம் காபி வாங்கி வா……. இதயாவிடம் கூற, அவள் தயங்கினாள்.

என்ன? புருவத்தை உயர்த்தினாள் இன்பா. இதயா சைகையிலே, அம்மா என் மீது கோபமாக இருக்கிறார்கள் தலையை தொங்க விட்டாள்.அம்மா அவராகவே அபிக்கு காபி போட்டு கொடுத்தார்.

இன்பா சமையலறை சென்று அம்மாவை அணைத்துக் கொண்டு,அம்மா இந்த ஒரு முறை அவளுக்கு வாய்ப்பு கொடுங்கள் கேட்டாள்.

அவளுக்கு செல்லம் கொடுத்ததற்கு என்ன வேலை செய்து விட்டாள்? அம்மா கண்கலங்கினார்.

அம்மா…அவள் புறம் அம்மாவை திருப்ப, அபி அவர்களருகே வந்தான்.

நான் பேசலாமா ஆன்ட்டி? கேட்டான்.

மூவரும் திகைக்க, இதயாவிற்கு மேடம் மீது பொறாமை அவ்வளவு தான். நீங்கள் அவளை பிரித்து பார்ப்பதாக தவறாக நினைத்து தான் இவ்வாறு நடந்திருக்கிறாள். மேடம் கூறியது போல் ஒரு முறை விடுவதால் ஒன்றும் நடக்காது. அவள் அனைத்தையும் அப்பொழுதே புரிந்து கொண்டாள். இனி அனைத்தும் சரியாகும் பயப்படாதீர்கள்! என்று கூறி விட்டு இதயாவிடம் திரும்பியவன் உடன் பிறந்தவர்கள் இல்லாமல் இருப்பது வாழ்வு வெறுமையாக இருக்கும். பிற்காலத்தில் பிரச்சனை என்றால் முன் நிற்பவர் உடன் பிறந்தவர்கள் தான் பேசி விட்டு காபி தம்ளரை இன்பா கையில் கொடுத்து விட்டு, வருகிறேன் அம்மா, மேடம் என்று கூறி விட்டு இதயாவிடம் தலையசைத்து வெளியே வந்தான்.

இன்பாவை வேகமாக இதயா அவளது அறைக்கு அழைத்து சென்று, அபி உன்னிடம் பேசுவானா?உனக்கு அவனை பிடிக்குமா? இருவரும் சரிசமமாக இருப்பீர்கள் என்றாள்.

அவளது தலையில் குட்டு வைத்து விட்டு, அவன் என்னை விட சிறியவன். அப்படி பேசாதே! என்றாள்.

அக்கா, காதலுக்கு சிறியவன் பெரியவன் என்றெல்லாம் தெரியாது. சிறியவனை திருமணம் செய்ய கூடாதா என்ன? அவனுக்கு உன்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

அடியேய்…அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவனது கல்லூரி ஆசிரியை என்பதால் விட்டு சென்றிருக்கிறான். அதுவும் சைலேஷ் கூறியதால்… இதயா தலையை உலுக்கி விட்டு வெளியே வந்தாள் இன்பா. இதயா சன்னலுக்கு வெளியே பார்க்க, சிரித்துக் கொண்டே அபி சென்றான்.

அட,…நான் நினைத்தது சரி தான் போலவே நினைத்தாள் இதயா.

அன்று இரவு யாருக்கும் தூக்கம் வர வில்லை. ஸ்ரீ தூங்கமுடியாததால் தோட்டத்து பக்கம் வந்தாள்.ஏதோ அரவம் கேட்டு மறைந்து நின்றாள்.

கயல் ஆட்கள் யாரையோ மிரட்டுவது போல் தெரிய மெதுவாக எட்டிப் பார்த்தாள். ஒருவனை கட்டி வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.அவன் வாயில் தேவையான தகவல்களை சேகரித்து விட்டு,கயல் தலையசைக்க அவன் கதற, கதற அவனது நாக்கை துண்டித்தனர். பின் ஒவ்வொரு உறுப்புகளாய் வெட்ட,அதை பார்த்த ஸ்ரீ வாயை பொத்திக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தாள். மறுபடியும் எட்டி பார்த்தாள். ஒரு சாக்கு பையில் அவனது உறுப்புகளை கட்டுவதை பார்த்து மிரண்ட ஸ்ரீ, அப்படியே சிலையென அமர்ந்து விட்டாள்.பின் அனைவரும் சென்று விட்டனர்.ஸ்ரீயை தேடி வந்த நிவாஸ் அவளை பார்த்து பயந்து,

ஸ்ரீ…..ஸ்ரீ…ஸ்ரீ…..உலுக்கினான்.அவள் கண்கள் திறந்திருந்தாலும் எவ்வித உணர்ச்சியும் காட்டாது இருந்தாள்.ஜிதின் அங்கே வந்து, நிவாசை தள்ளி விட்டு, அவளது கன்னத்தில் தட்டினான்.அவள் அப்படியே இருக்க, தண்ணீரை தெளித்து பார்த்தனர். அப்பொழுதும் அவள் உணராமல் இருந்தாள்.ஸ்ரீ வீட்டிலிருந்து வெளியே வரும் போதே ஜிதின் பார்த்திருப்பான்.

ஜிதின் அகிலுக்கு போன் செய்து ஸ்ரீக்கு ஒரு பிரச்சனை, நான் வெளியே செல்ல முடியாது. அவள் இங்கிருப்பது சரியாக தோன்றவில்லை. இப்பொழுது உதவ வர முடியுமா? கேட்டான்.

ஏற்கனவே வார்டனால் பிரச்சனையாக உள்ளது. அதனால் யாரையாவது அனுப்புகிறேன் என்றவன் அவளுக்கு என்ன பிரச்சனை? அகில் கேட்டான்.

என்னால் கூற முடியாது என்று போனை துண்டித்தான். சிறிது நேரம் அவர்கள் அப்படியே இருக்க, அங்கே வந்தது அர்ச்சுவின் பைக்.

 பதட்டமாக வண்டியை நிறுத்தி விட்டு அர்ச்சு வேகமாக ஸ்ரீ அருகே வந்தவன் மற்றவர்களை பார்க்க, அவர்கள் அவளை காண்பித்தனர்.

ஸ்ரீ….. ஸ்ரீ…… என்று உலுக்கினான்.அவளிடம் அசைவில்லாததை பார்த்து, என்ன நடந்தது?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றான் நிவாஸ்.

அர்ச்சு ஜிதினை பார்க்க, அவன் மௌனம் காத்தான்.

நீ தான் அவளை திருமணம் செய்ய போவதாக கூறினாயே! அவள் உன் பொறுப்பு தானே. இப்பொழுதே முடியவில்லை என்றால் அப்புறமும் இப்படி தான் வேடிக்கை பார்ப்பாயா? கத்தினான்.

அவன் மேலும் மௌனம் காக்கவே, அர்ச்சு ஸ்ரீயை நிவாசிடம் விட்டு விட்டு ஜிதினிடம் வந்து, அவனது சட்டையை பிடித்து, உன் அம்மா தானே அவளது இந்நிலைக்கு காரணம் என கேட்டான்.அவன் தலை கவிழ்ந்து நிற்கவே, அர்ச்சுவிற்கு கோபம் தலைக்கேறியது.அவன் வீட்டை ஒருமுறை  பார்த்து,

ஏய் கயல் கத்த ஆரம்பிக்க, ஜிதின் அர்ச்சு வாயை பொத்தி விட்டு, முதலில் அவளை பார் என்று ஸ்ரீயை கை காட்ட, அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

அர்ச்சு அவளருகே வந்து மண்டியிட்டு அமர்ந்து அவளது கையை வருடியவாறு,

ஸ்ரீம்மா…இங்கே பார்.ஸ்ரீம்மா…ஸ்ரீம்மா…என்றவன் நான் உன்னுடைய குட்டி பையன் வந்திருக்கிறேன். உனக்கு ஏதுமில்லை. உனக்கு பிடித்த சாக்லெட் சாப்பிடுகிறாயா? அவளை பார்க்க, அவள் கண்ணில் நீர் நிற்காமல் வழிந்தோடியது. மற்றவர்கள் அர்ச்சுவை திகைப்புடன் நோக்கினார்கள்.

அவனோ அவளது கையில் சாக்லேட்டை வைத்தவாறு மேலும் பேசினான். ஸ்ரீம்மா….நாம் இங்கிருந்து சென்று விடுவோம். என்னுடன் வருகிறாயா?தாரிகா வீட்டிற்கு செல்வோம்.

என்னால் உன்னை இந்நிலையில் பார்க்க மிகவும் சிரமமாக உள்ளது. உன்னுடைய குட்டி பையனை நீ மறந்து விட்டாய் தானே! ஆனால் இந்த குட்டி பையன் என்னுடைய குட்டி ஏஞ்சலை மறக்கவில்லை. உனக்கு எப்பொழுதும் போல் அரணாக நான் காப்பேன் என்றவுடன் ஸ்ரீ அவனது மார்பில் சாய்ந்தாள். அவன் கண்ணீரோடு அவளை குனிந்து பார்த்தான். அவள் அப்படியே தான் இருந்தான். கண்ணீருடன் அவன் மீது சாய்ந்த அசைவும் அவள் உணர்கிறாள் என்று அறிந்தவன் மேலும் பேச ஆரம்பிக்க,

நீ குடித்திருக்கிறாயா? உன்னால் இவர்களை அழைத்து செல்ல முடியுமா? ஜிதின் வினவ, அவனை முறைத்து கொண்டே, நான் குளித்து தான் வந்திருக்கிறேன். உன்னை விட என்னால் இருவரையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்று நக்கலாக கூறினான் அர்ச்சு. நீயும் அவனுடன் கிளம்பு..நான் அம்மாவை சமாளித்துக் கொள்கிறேன் என்று உள்ளே சென்று விட்டான் ஜிதின்.

                        “வலி நிறைந்த இவ்வுலகம்

                            வெறுமையாகிறது.

                       கண்ணீருக்கும் பதிளில்லை

                        செந்நீருக்கும் பதிளில்லை

                           நீ எப்படி என்னுடன்

                           முடியுமா உன்னால்?

            என்னால் வலி மட்டும் தானே மிஞ்சும்.

                                  உன் காதல்

                      வாழும் ஆசை உந்துகிறதே!”