ஹாய்..ப்ரெண்ட்ஸ்….
அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்…
இதோ உங்களுக்கான எபிசோடு..24
தாரி எழுந்து விட்டாயா?ஆதேஷ் உள்ளே செல்ல, சைலேசும், இன்பாவும் அவனை பின் தொடர்ந்தனர்.சாப்பிட ஏதாவது வேண்டுமா? ஆதேஷ் தாரிகாவிடம் கேட்டான்.
அவள் அவனை ஏறிட்டாள். ஆனால் பதில் கூறவில்லை
இன்பா சமையலறைக்கு சென்று காபி போட்டு அனைவருக்கும் கொடுத்தாள்.பின் அர்ச்சுவின் நண்பர்களிடமும் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள்.
ஆதேஷ்…… தாரிகா கேட்டால் என்று அர்ச்சுவை பற்றி கூறினான்.ஸ்ரீயும் கவனித்துக் கொண்டாள். யாருமில்லாமல் வாழ்வது கடினம் சைலேஷ் கூற, ஸ்ரீயும் கவலையுடன் தன் பெற்றோர்களை நினைத்துக் கொண்டு தலையசைத்தாள்.
அர்ச்சு தனியே உட்கார்ந்திருக்க, நிவாஸ் அவனிடம், நீங்கள் கூறியது ஸ்ரீ பற்றி தானே! கேட்டான். அவன் மௌனமாக இருப்பதனால் ஸ்ரீயும் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் அவர்களை பாதுகாக்க முதலில் துணிந்து சண்டையிட்டாள். திடீரென அவர்கள் கூறுவதை கேட்க ஆரம்பித்து விட்டாள். பெற்றோர்களை காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்தியா இல்லை வேறெதுவும் பிரச்சனையா? புரியவில்லை. ஆனால் அவள் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் தெளிவு.
உள்ளே இன்பா தாரிகாவிடம், அன்று உனக்கும் அம்மாவிற்கும் ஆதரவாக நான் வந்திருக்க வேண்டும் தான். ஆனால் வராததன் காரணமென்று அவள் கூற விழைந்தாள்.நீங்கள் எதுவும் கூற வேண்டாம் என்று இன்பாவை பேசவே விடவில்லை தாரிகா.
நான் அவளது அறையை பார்க்கலாமா? இன்பா கேட்க, தாரிகா சம்மதித்து விட்டு அவளும் அக்காவின் அறை பக்கம் வந்தாள். தேங்கிய நீரை அடக்கிக் கொண்டு, தோழியின் அறைக்குள் இன்பா சென்றாள்.
அவள் குடும்பத்துடன், தங்கையுடன் எடுத்த புகைப்படங்கள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்க, தாங்கமாட்டாமல் இன்பா வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த மற்ற பொருட்களை கவனிக்கலானாள்.மேசையுடன் இணைந்த மரப்பலகையை இழுத்தாள். அதில் நிறைய புகைப்படங்கள் இருந்தது. சந்துரூவுடனும், இன்பாவுடனும் இருந்ததை கையில் வைத்துக் கொண்டு ஆதங்கத்துடன் அழுதாள். அவர்கள் யாரென்று தெரியட்டும். அவர்களை விடமாட்டேன் மனதினுள் பொறுமிக் கொண்டிருந்தாள்.
அனைவரும் அங்கே வந்தனர். தாரிகாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். அவள் இறந்து விட்டாள் சைலேஷ் கை யாழினியின் புகைப்படத்தை காட்ட, அனைவரும் வருத்தமுடன் இன்பாவையும் தாரிகாவையும் பார்த்தனர். அரவம் பலமாக இருக்க, ஜிதின் உள்ளே வந்தவன் யாழினியின் படத்தை பார்த்து அதிர்ந்தான். அகில் அவனை கவனித்தான். ஆனால் ஏதும் பேசவில்லை.
ஆதேஷிற்கோ விசயத்தை கூறவா? வேண்டாமா? யோசித்தபடி சந்துரூவுடன் பேசியதை நினைவிற்கு கொண்டு வந்து .இப்பொழுது நிலைமை சரி இல்லை. இவர்கள் மேலும் காயப்பட வாய்ப்புள்ளது.
அனைவரும் யாழினியின் படத்தை பார்த்துக் கொண்டிருக்க, கவின் உற்று கவனித்து, இவர்கள்….என்று அவனது நெற்றி தழும்பை தொட்டுப் பார்த்தான்.ஐஸ்கிரீம் பொண்ணு என்று முணுமுணுத்து நித்தி,…இவர்கள் என பேச தாரிகா அழுவதை நிறுத்தி, அவர்கள் தான் என்றாள் முறைத்தவாறு…
என்ன?….கவின் அவளருகே விரைய, நில்லுங்கள்…..அவனை நிறுத்தி விட்டு, நான் தான் அந்த ஐஸ்கீரிம் பொண்ணு என்றாள்.
உன்னுடைய அக்கா…அவர்கள்….. என்று திகைத்தான்.
அவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள். கவின் நண்பர்களிடம் கூற ஆரம்பித்தான்.நாம் இதே கல்லூரி போட்டிக்கு வந்தோமே! நித்தி கூட சைலேஷ் சாரை பார்த்ததாக கூறிய அன்று தான் நடந்தது.நித்தி பக்கம் திரும்பி, நீங்கள் இருவரும் சென்ற பின் எப்பொழுதும் போல் நண்பர்களுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்த போது, திண்பண்டங்கள் வாங்கி ஓடி வந்தேன்.ஒரு பெண்ணை இடித்ததில் அவளது சாப்பாடு முழுவதும் கொட்டி விட்டது.அதனால் அந்த பெண் அழுதாள். அதனால் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன். அந்த பொண்ணு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இவர்கள் வந்து என்னை அடித்தார்.
அவர்கள் அடித்தது தான் இது என்று அவனது தழும்பை காண்பித்தான்.
ஐஸ்கிரீமிற்கு அடியா? நித்தி கேட்டாள்.
எனக்கு அன்று காய்ச்சல். ஏற்கனவே உடல் பலவீனமாக இருந்தது. இடித்து தள்ளியதால் அழுதேன்…தாரிகா கூறினாள்.
நீ தான் அந்த பொண்ணா?அபி கேட்க, அவள் தலையசைத்தாள்.
அப்படியென்றாள் எதற்காக வாங்கினாய்? வேண்டாம் என்று கூறி இருக்கலாமே! நித்தி கேட்க
அவள் மௌனமாக இருக்க, தாரி நீ அவரை அப்பொழுதே!…..ஆதேஷ் கேட்டுக் கொண்டே அவளை உற்று பார்த்தான். அவளது கண்ணின் மணி உருண்டோட, அவன் கண்கள் நனைந்தது.
ஆதேஷ் பின் சென்று கொண்டே வெளியே நகர்ந்தான். கண்ணின் மணியை சுண்டி விட்டு,
நில்லுடா…ஆது….தாரிகா அழைத்துக் கொண்டே தள்ளாடி நடக்க, கவின் அவளது கையை பிடித்து நிறுத்தி, நீ முதலில் ஓய்வெடு….என்றான்.
அவனது கையை உதறி விட்டு வெளியே வர, நித்தி தடுத்தாள். அவள் போகட்டும் நித்தி…. அர்ச்சு கூறினான்.அனைவரது பார்வையும் அவன் மீது பதிய, …
அவள் இப்பொழுது தெளிவான முடிவெடுக்கட்டும் என்று அர்ச்சு கூறினான்.
என்ன முடிவு? அகில் கேட்டான்.
புரியாதது போல் நடிக்காதே! அர்ச்சு கூற, அகிலும் முறைக்க, அர்ச்சுவோ விறைத்தவாறு நின்றான்.
இரண்டு பேரும் நிறுத்துங்கள் ஸ்ரீ, அர்ச்சு கூறியது தான் சரி என்று கவினை முறைத்தாள்.
அவன் சரியா? சரியா?….அகில் ஸ்ரீயிடம் கோபப்பட, அவள் கண்ணில் நீர் கசிந்தது.அவள் எழுந்து வெளியே சென்றாள்.ஸ்ரீ…….நித்தி அழைக்க, தயவுசெய்து என்னை தனியே விடுங்கள் என்றாள். நிவாஸ் அவள் முன் வந்து நின்றான்.
ஒரு முறை சொன்னால் புரியாதா? மிரட்டும் தொனியில் ஸ்ரீ கூறி விட்டு விலக, நிவாஸ் திகைத்து நின்றான்.
அர்ச்சு யாரையும் கண்டு கொள்ளாமல் அவள் பின் மறைந்து மறைந்து சென்றான்.வெகு தூரம் சென்றதும் புல்தரையுள்ள ஓரிடத்தில் அமர்ந்தவள்
அம்மா, அப்பா ஏன் என்னை விட்டு சென்று விட்டீர்கள்? என்னையும் அழைத்து சென்றிருக்கலாமே! இந்த கஷ்டம் எனக்கு இராமல் போயிருக்கும்.இனியாவது என்னை அழைத்து செல்வீர்களா? தேம்பித் தேம்பி அழுதாள்.பின் சட்டென நிமிர்ந்தாள். அர்ச்சு அவளது பின் பக்க தோளில் சாய்ந்தவாறு அமைதியாக உட்கார்ந்தான்.ஏதும் பேசவில்லை. அவனுடைய செயல் அவளுக்கு ஆறுதல் அளித்ததோ என்னமோ! அவளும் அவனது பின் பக்க தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். சற்று நேரத்தில் சத்தம் அமரவே, அவன் ஒரு டைரி மில்க் சாக்லேட்டை நீட்டினாள். அதை பிரித்து சாப்பிட்டுக் கொண்டு அவன் மீது சாய, பட்டென அவனது தோளில் அவளது தலை பட்டது. அவளுள் ஏதோ இதே போல் அர்ச்சுவுடன் இருந்தது போல் தோன்றியது. கண்ணை மூடி அப்படியே உணர ஆரம்பித்தாள்.
அவன் என்னை என்ன கூறி விட்டான் பாருடா? எல்லாருடனும் நான் இப்படியா?…அவன் பேசியது என் உடலெல்லாம் கூசுகிறதுடா….எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது அவள் அழுவது போன்ற நினைவலைகள் வந்தது. வேகமாக எழுந்தவள் அவன் முன் வந்து பார்த்தாள். அவனது கண்களிலும் கண்ணீர். அவளுக்கு ஏதோ செய்தது.
அர்ச்சு….. என்று குனிந்து அவனது கண்ணீரை தொட்டாள். நிமிர்ந்தவன் அவளது கையை விலக்கி விட்டு எழுந்தான்.ஸ்ரீ பேசுவதற்கு முன்பே…..வா கிளம்பலாம் அனைவரும் தேடுவார்கள்.இருவரும் தாரிகா வீட்டிற்கு நடந்தனர்.
ஆதேஷை தொடர்ந்து வந்த தாரிகாவால் நடக்க முடியவில்லை. அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,
ஆது…..கத்திக் கொண்டே அங்கேயே உட்கார்ந்தாள்.அவளது சத்தம் கம்மிய குரலாக…. திரும்பியவன் அவளை நோக்கி வந்தான்.அவள் உடல் மேலும் சோர்வாக
ஏய்…தாரி…அவளருகே வந்து அவளை திட்ட ஆரம்பித்தான்.
உனக்கு அறிவிருக்கிறதா? இல்லையா? உடல் நிலை சரியில்லாத போது ஏன் என் பின்னே வந்தாய்?கத்திக் கொண்டே கையை கொடுத்தான். அவளால் எழ முடியவில்லை. அவளை தூக்க முற்பட்டான்.
வேண்டாம்….டா…நீ என்னுயிர் தோழன். எத்தனை பேர் என் வாழ்வில் இருந்தாலும் நீ எனக்கு முதற்படி.நான் சிறுவயதிலிருந்து என் அப்பாவை கண்டது கூட இல்லை. அதற்கு மேலான பாசத்தை கொடுத்து இருக்கிறாய்.அதை காதல் என்று கொச்சை படுத்த என்னால் முடியாது.கவினை பற்றி நான் கூறவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடு……அவர் என்னை நிராகரித்தாலும் என் காதல் மாறாதுடா….அக்கா கல்லூரி சென்ற அன்று தான் பார்த்தேன். உடனே காதல் வந்து விட்டது.உன்னிடம் கூற எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. அவரை கல்லூரியில் பார்த்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன். உன் முன் காட்டிக் கொண்டால் அன்றே ஏன் கூறவில்லை? கோபப்படுவாய் என்று தான் …….இழுத்தாள்.கல்லூரியில் நான் கவினை கவனித்த விதம்,உனக்கு கோபம் வந்ததை கவனித்து தான் உனக்கு என்னை பிடித்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன். நேரடியாக கேட்க தடுமாறி தான்….விட்டு விட்டேன். என்னால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று முடித்தாள்.
அவன் அவளிடம், நீ தான் தந்தைக்கும் மேல் என்று கூறினாயே! இந்த நண்பன் உன்னை தவறாக தொட மாட்டேன் என்றவன் அவளை தூக்கி ஓரிடத்தில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான். எனக்கு உன்னை போல் இல்லை. உன் குணம் பிடித்து தான் காதலித்தேன். அம்மாவிடமும் கூறினேன். அம்மாவிற்கு தோழி என்று உன்னை அறிமுகப்படுத்தினாலும் அவர்களும் என்னைப் போல் குணம் பார்த்து பழகுவர் தான். அவர் தற்போது தான் என் காதலுக்கு சரி என்றார். உனக்கு சீனியரை பிடிக்கும் என்பதையும் கூறினேன். அவளை விட்டு விலக போகிறேன் என்றும் கூறினேன். அப்பொழுது என் அம்மா கூறியது. இப்பொழுது தான் நீ விலக கூடாது.அவளுக்கு உன் மீது காதல் இல்லை என்றால் நீ ஏன் அவளது காதலுக்கு உதவ கூடாது. ஒரு நண்பனாக உனக்கான கடமையை நீ செய்து விட்டு, அவளது காதலனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, நீ விலகு…கஷ்டமாக தான் இருக்கும். “தோல்வியையும் ஏற்க பழகுவது தான் வாழ்க்கை” என்றார். அவன் முடித்தவுடன் தாரிகா அவனை கட்டிக் கொண்டு அழவும் அங்கே கவினும் அவனது நண்பர்கள் வரவும் சரியாக இருந்தது. கவினை பார்த்த ஆதேஷ்,மேலும் அவளை இறுக்கிக் கொண்டு, தாரி நான் என் கடமையை ஆரம்பிக்க போகிறேன் சிரித்தான்.
என்னடா?…..அவள் அவனை தள்ளி விட்டு பார்க்க, அவளும் அவர்களை பார்த்தாள்.சொல்வதை கேள். நாம் காதலர்கள் போல் நடிக்க வேண்டும். எனக்கு உன்னுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்றான் ஆதேஷ்.
வேண்டாம்டா…….
செய்யவில்லை என்றால் நான் உன்னுடன் பேச மாட்டேன். உன்னை பார்க்க வர மாட்டேன்….
அவள் தலையசைக்க, அவளை ஆதேஷ் தூக்கினான்.
அய்யோ! டேய்…என்னடா செய்ற? விடுடா…என்று நெளிந்தாள் தாரிகா.வாயை மூடிக் கொண்டு வா என்று அதட்டினான் ஆதேஷ்.
இதை பார்த்த கவின், செங்கணலோடு நிற்க அதை பொருட்டும் மதியாது அவளை தூக்கிக் கொண்டு அவர்களை கடந்து சென்றான்.
டேய்,…என்னடா நடக்குது? அதற்குள் மாறி விட்டாளா தாரிகா? நித்தி வாயை பிளக்க,
ம்ம்ம்ம்……என்னவொறு அழகான காட்சி? யாசு கவின் தோள் மீது கை போட்டு நின்றாள்.
யாசு,….? நீ எப்படி இங்கே? அபி கேட்க, நான் வந்தது இருக்கட்டும். இந்த ஜோடியை ரசியுங்கள்.அடடடா……இப்பேர் பட்ட ஜோடியை நான் பார்த்ததே இல்லை என்று மேலும் வெறுப்பேற்றினாள். எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலிருந்தது கவினிற்கு. அவனது முஷ்டிகள் இறுக, அவர்களை எறிப்பது போல் நின்றிருந்தவனை யாசு அனைவருக்கும் சைகையில் காட்ட, வியந்த படி கவினை பார்த்தனர் நண்பர் பட்டாளம்.
“அழகான நட்பும் அற்புதமான காதலும்
தோன்றிய இடம்
இதமாய் மலர்கிறதே!
நாணம் உள்ள இடத்தில் காதலும்
விட்டு கொடுத்தலில் நட்பும்
இவ்விரண்டினிடயில் பொறாமை
தலைதூக்க
வெற்றி அடைவது
காதலா? நட்பா?”