அத்தியாயம் 112
அர்ஜூன் எழுந்து பெட்டை தொட்டு பார்த்தான். கௌதம், அர்ஜூன் பால்கனி வழியே வரும் போது காருண்யா கவனித்து விட்டு தூங்குவது போல் நடித்திருப்பாள்.
இப்பொழுது அர்ஜூன் பெட் மேற்துணியை அகற்ற..அதில் பென்சில், கிரையான்ஸ், ஸ்கெட்ச்..மற்ற பொருட்களுடன் ஒரு பெரிய நோட் இருந்தது. கௌதமும் அவனிடம் வந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பிரித்து பார்த்தனர். அதில், இப்பொழுது அர்ஜூனிடம் கௌதம் மீது காதல் வந்ததை பற்றி கூறிய அனைத்தையும் படமாக வரைந்து இருந்தாள். முழுவதும் கலராக இருந்தது. கௌதம் கண்ணீருடன் அமர்ந்தான். ஹாஸ்பிட்டலில் வைத்து இருவரும் சந்தித்த தருணம் முதல் மாலினியுடன் சென்றது. கௌதம் முத்தமிட்டது. இப்பொழுது அவளுடன் சண்டை போட்டது என அனைத்தும் இருந்தது.
கௌதமிற்கு தேவ்விடமிருந்து கால் வந்தது. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். போனை எடுத்த அர்ஜூன், ஹலோ..என்றான்.
தேவ்..பதட்டமுடன்..அர்ஜூனா? அர்ஜூன் அவள் சரியில்லை. அவள் இருபது பண்டில் நிறைய நோட்டுக்களை வைத்திருக்கிறாளாம். அது முழுவதும் வரைந்து வைத்திருக்கிறாள் என்றான்.
சார், என்ன சொல்றீங்க?
ஆமா, அர்ஜூன்..அந்த பொண்ணுங்க நிறைய அனுப்பினாங்க. அதில் ஒவ்வொரு நாள் நடந்த அனைத்தையும் வரைந்திருக்கிறாள். எல்லாமே பென்சில் சேடிங்கில் தான் இருக்கு.
ஓ.கே சார், நான் என் மாமாவை விட்டு எடுத்து வர சொல்றேன். அதை அவருடன் சேர்ந்து அனுப்புங்க..என்றான்.
எவ்வளவு தான் அனுப்ப முடியும்?
சார், எல்லாத்தையுமே பார்க்கணும். அவள் யாருமில்லாமல் எந்த அளவு கஷ்டப்பட்டு இருக்கான்னு தான் எல்லாமே இருக்கும். நீங்க மாமாவிடம் காட்ட வேண்டாம். முடிந்தவரை அனுப்புங்க. அவள் கல்லூரி சேர்ந்ததிலிருந்து அனுப்புங்க..என்று அர்ஜூன் போனை வைத்தான்.
கௌதமிடம்..சார் அவளோட படம் அனைத்தும் பென்சில் சேடு. அதான் சுவாதி சொன்னாலே இருட்டு பகுதி. அது படம் அல்ல..அவளது இருட்டான பகுதி. அவளது வெளிச்சம் நீங்க மட்டும் தான் என்று அர்ஜூன் வெளியே வந்தான்.
என்னை உனக்கு எப்படி தெரியும்? என்று எண்ணியவாறு கௌதம் அழுது கொண்டிருந்தான்.
இன்பா அறைக்கு வந்த அபி..என்ன செய்றீங்க? என்று கேட்டான்.
பார்த்தா உனக்கு தெரியலையா? என்னோட கிளைண்டுக்கு மெயில் பண்ணிகிட்டு இருக்கேன்.
தெரியுது..என்று அபி இன்பாவை நெருங்க, அவள் அவனை பார்த்து நீ அங்க உட்காரு என்று மீண்டும் வேலையை பார்க்க அபி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி, உங்களுக்கு வேண்டாம் போல என்ற அபி..எழுந்தான்.
இன்பா அவனை பார்த்து, என்ன வேண்டாம் என்று எழுந்தாள்.
உங்களுக்கு வேண்டாம். நான் போறேன் என்று அபி அறைக்கதவருகே சென்றான். இன்பா கதவின் முன் வந்து நின்று அவனை மறித்தாள்.
மேம்..பக்கத்துல வராதீங்க. ஏடாகூடமாகிடாம?
ம்ம்..அப்புறம்..என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு..சொல்லு, என்ன வேண்டாம்? இன்பா கேட்டாள்.
மேம்..என்று அபி அவன் கன்னத்தை இன்பாவிடம் காட்ட, டேய் விசயத்தை சொல்லு..என்றாள்.
சொல்றேன்..நீங்க கொஞ்சம் நகருங்க என்று அவளை விலக்கி அவள் கையில் சில காகிதத்தை நீட்டினான்.
என்ன இது? அவள் வாங்கி பார்த்தாள்.
ஹேய்..என்று இது?
ம்ம்..உங்க அப்பா கம்பெனி எழுதி கொடுத்த ஒரிஜினல் பத்திரம்.
நிஜமாவா? என்று சந்தோசமாக அவனை அணைத்தாள். அவனும் அணைக்க கையை அவளிடம் கொண்டு செல்ல..ஏய்..என்ன பண்றீங்க? இதயா சத்தமிட..
ஹே..இது..இங்க பாரு என்று ஆரவாரமுடன் துள்ளிக் கொண்டு அவளை அணைத்தாள் இன்பா.
அக்கா, உனக்கு என்ன ஆச்சு? என்று அபியை பார்த்தாள். அவன் அசையாது நிற்க, அகிலும் கவினும் அவனிடம் வந்தனர்.
டேய்..என்று அபி தலையில் கவின் அடித்தான்.
ம்ம்..என்று நகர்ந்த அபியிடம் இன்பா வந்து சிரித்துக் கொண்டே..அபி எப்படி இதை கொண்டு வந்த?
நான் ஏதும் செய்யவில்லை. அண்ணா தான் என்று சந்துரூவை கூறிய அவன் முகம் மாறியது.
என்ன பண்ணீங்க? அந்த ஆளிடமிருந்து வாங்க முடியாதே?
கவினும் அகிலும் அவர்களிடம், நீங்க பேசுங்க என்று வெளியே வர இதயாவும் வெளியே வந்தாள்.
அபி அருகே வந்து அமர்ந்தாள் இன்பா.
அவர் மகனை வைத்து பேசி வாங்கினார் என்று அடுத்த காகிதத்தை காட்டி, இனி அவங்க யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க என்றான்.
அதை வாங்கி வைத்த இன்பா..என்னாச்சு?
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை அபி வருத்தமாக சொல்ல, அவனை அவள் பக்கம் திருப்பி, அதனால என்ன? நீ எதுவுமே செய்யலையா?
அவர் மகனை வைத்து பேச சொன்னேன். அண்ணா..மற்றதை பார்த்துக்கிட்டாங்க.
நீ சொல்லி தான் அவன் செஞ்சுருக்கான். இதுல நீ எதுவும் செய்யலைன்னாலும் உன் மூளையை யூஸ் பண்ணி இருக்கேல..
இல்லை. நான் மூளைய யூஸ் பண்ணதெல்லாம் கணக்கில்லை என்றான்.
அது எப்படி இல்லாமல் போகும்? நீ சொன்னதை அவன் செய்திருக்கான். நீ அங்கே போக முடியாது. ஆனால் சந்துரூ அங்கே இருக்கான். அதான் அவன் செய்தான். அவன் என்னோட ப்ரெண்டுடா. சும்மா இருப்பானா?
அவன் முகம் மீண்டும் மாற, வெளியே எட்டி பார்த்தாள். யாருமில்லை என்றவுடன் அவனை கட்டிக் கொண்டு, நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன். ஆனால் நீ இப்படி பண்ணா நான் எப்படி சந்தோசமா இருக்க முடியும்? என்று அவன் கன்னத்தை கிள்ளி நெற்றி முட்டினாள்.
நான் ஒன்றும் சின்ன பையன் இல்லை. சின்ன பசங்கட்ட பேசுற மாதிரி பேசுறீங்கன்னு கோபமானான் அபி.
கோபத்தை பாரு என்று அவன் இதழில் மென்முத்தத்தை பதித்து விட்டு எழுந்தாள். அவன் இன்பா கையை பிடித்து எழுந்தான்.
“தேங்க்ஸ்”. உங்களுக்கு நான் பெரிய பையனா தெரியணும் என்று இன்பாவின் இரு கைகளையும் கோர்த்து அவளை முன் இழுத்தான். இருவரும் நெருக்கமாக, ரெயின்..என்று அவளது கையை விடுத்து அவளது இடையில் கை வைத்து மறுகையை அவள் கன்னத்தில் வைத்தான். இன்பா அமைதியாக அபியை பார்த்தாள். அவன் அவளது கண்களை பார்த்துக் கொண்டே அவளது இதழ் கோர்த்தான். அவள் அவன் தோகளில் இரு கைகளையும் மாலையாக்கிக் கொண்டு அவனுக்கு இடம் கொடுத்தாள்.
அபி அவளது இதழை விடுத்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டு..இனி நம்ம கம்பெனி வேலையையும் ஆரம்பிக்கலாம். அவனை அணைத்து நீயிருக்கும் போது நான் அழவே மாட்டேன் என்று இன்பா கூற..
அபி..கிளம்பலாமா? அகில் கேட்க, அவன் புன்னகையுடன் வாரேன் என்று அகிலிடம் சென்றான்.
அபி..இரேன். நான் மேம்மிடம் பேசிட்டு வாரேன்.
நீ என்ன பேசப் போற?
அகில் பதிலளிக்காமல் இன்பா அறைக்கு சென்று, “மே ஐ கம் இன் மேம்” என்று கேலியுடன் உள்ளே சென்றான்.
ஏய்..நான் வரச் சொல்லவேயில்லை.
நான் சும்மா தானே கேட்டேன் என்று அவள் சேரில் அமர்ந்தான். இன்பா அகிலை முறைக்க..மேம், நான் சொன்னபடி செஞ்சுட்டேன் பார்த்தீங்களா?
என்னடா சொன்ன? செஞ்ச?
மறந்துட்டீங்களா? அபியிடம் நீங்க காதலை வர வைப்பீங்கன்னு சொன்னேன்ல. எப்படி? என்றான்.
அவள் கையில் வைத்திருந்த துவாலையுடன் அவனிடம் வந்து அவன் கழுத்தில் சுற்றி இறுக்குவது போல் பாவனையுடன்.. எங்க இப்ப சொல்லு? இன்பா கேட்க,
டேய் அபி..உன்னோட ஆளு என்னை கொல்லப்பாக்குறாங்க? அகில் கத்தினான்.
வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த அபியும் பவியும் உள்ளே வந்தனர். அகில் சத்தத்தில் எல்லாரும் அவ்விடம் வந்தனர்.
நீ என்னடா செஞ்ச? எனக்கு அவனை பிடிச்சது சொன்னேன்?
மேம்..முதல்ல அவனை விடுங்க என்று அபி அவளிடம் வந்தான். இன்பா அவனை முறைத்தாள். அபி நின்றான். ஆனால் பவி அகிலிடம் வந்து, வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்ட. அவன் இப்படி தான் லூசு மாதிரி பேசுவான் என்று சொல்ல, இன்பா சிரித்துக் கொண்டே துவாலையை எடுத்தாள்.
டேய்..என்னடா பண்றீங்க? கிளம்பலாமா? என்று கவின் தாரிகா தோளில் கையை போட்டு கொண்டு வந்தான்.
பாருடா..இருந்தா இவனை போல இருக்கணும் அகில் சொல்லிக் கொண்டே பவி தோளில் கையை போட்டான். அவள் முறைத்துக் கொண்டே கையை தட்டி விட்டாள்.
ஏய்..நில்லு, இதுக்கே கோபிச்சா நான் என்ன செய்றது? அகில் அவள் பின்னே ஓட,..இதயா அவர்களிடம் வந்தாள்.
என்ன எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்திறீங்க? எங்க முக்கியமான ஜோடிய காணோமே? கேட்டாள். அபி ஸ்ரீயிடம் கண்ணை காட்டினான். ஸ்ரீ தோளில் சாய்ந்து கொண்டு, காருண்யா கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். அனு காருண்யா கண்ணீரை துடைத்து விட, அவளையும் விடாது அணைத்துக் கொண்டாள்.
இன்பா அபியிடம், எனக்கு ஒன்று வேண்டும்? என்றாள்.
அக்கா,..இதயா சத்தமிட, ஏ..ச்சீ..என்ற இன்பா அவன் கையை பிடித்து மாமரத்திற்கு கீழே நிற்க வைத்து மாங்காய் கேட்டாள்.
மேம்..உங்களுக்கு நான் வாங்கித் தாரேனே?
நோ..எனக்கு இது தான் வேண்டுமே?
அவன் புருவம் சுருங்க..அவளருகே வந்து..அங்க கொஞ்சம் பாருங்களேன் என்றான்.
எங்க? என்று அனைவரும் பார்க்க, கேமிரா இருந்தது.
அது இருக்கட்டும். உன்னால மரம் ஏற முடியாதா?
அது முடியாமலா? இத்தோட்டத்து சொந்தக்காரம்மா..என்னை அடித்து துவைத்து விடுமே?
ஒரு மாங்காய் தானடா கேட்டேன் இன்பா பாவமாக சொல்ல, தாராளமா பறிச்சு தாரேன். நீங்க அர்ஜூன் பாட்டியிடம் பர்மிசன் வாங்கிட்டு வாங்க என்றான்.
டேய்..கவின் என்று இன்பா அவனை பார்க்க, என்னை கோர்த்து விடாதீங்க என்று தாரிகாவுடன் சென்றான்.
வா..பவி இங்க இதுக்கு மேல நின்னா. நமக்கு அடி வாங்கி தந்துருவானுக என்று அகிலும் நழுவினான். போங்கடா என்று அமர்ந்தாள். அபி அவளிடம் வந்து, மாங்காயை நீட்டினான்.
எப்ப எடுத்து வச்ச?
வரும் முன்னே எடுத்திட்டேன் என்ற அபி..அவளிடம் ஒரு பாக்ஸை கொடுத்தான்.
வாவ்..கிரேப்ஸ் என்று இன்பா சுவைக்க இதயாவும் வந்து எடுத்தாள்.
அபி, புளிப்பே தெரியலை.
பிரதீப் மாமா தோட்டத்துல வளர்ந்தது. ஸ்வீட்டா தான் இருக்கும் என்றான். இன்பா அவனை முறைத்தாள்.
வேரென்னவெல்லாம் இருக்கு? இன்பா கேட்க, அர்ஜூன் பாட்டி, மாங்காய், வாழை, நெற்சாகுபடி எல்லாமே செய்வாங்க. மூட்டையை கூட வேலு அண்ணாவும் ப்ரெண்ஸூம் சந்தைக்கு கொண்டு போவாங்க.
பிரதீப் மாமா, ரெசார்ட், எஸ்டேட், கிரேப் விளைவிக்கிறாங்க. பூந்தோட்டம் இருக்கு மேம். பியூட்டி பிராடெட் தொழிற்சாலை வச்சிருக்காங்க. எல்லாமே பூக்கள் வைத்து தயாரிக்கப்படும் காஸ்மெட்டிக்ஸ்
வெற்றி மாமா ஜாம், பஞ்சு தொழிற்சாலை வச்சிருக்காங்க. ஏக்கர் கணக்கில் நிலம் வச்சிருக்காங்க. விவசாயம் பார்ப்பாங்க. நிறைய ஆட்கள் வேலை செய்றாங்க. வெற்றி மாமாவுக்கு ரெண்டு வீடு, பண்ணை வீடு இருக்கு.
தீனா மாமா உங்களுக்கே தெரியும். போலீஸ். அவருக்கு ஹை போஸ்ட்டிங்காக காத்திருக்கார்.
உன்னோட அப்பா? இன்பா கேட்டாள்.
அவரு..மசாலா கம்பெனி வச்சிருக்காரு. நல்லா தான் போய்கிட்டு இருக்கார். பணம் டெபாசிட் பண்ணி இருக்காரு. படிப்பு முடிந்து எனக்கு வச்சு கொடுக்கப்போறதா சொன்னாரு. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். எனக்கு அதில் விருப்பமில்லை.
உனக்கு ரிசர்ச் பிடிக்கும்ல? அப்புறம் எதுக்கு இந்த காலேஜ்ல சேர்ந்திருக்க?
ஸ்ரீ..ஸ்ரீக்காக தான். நான் மட்டுமல்ல. கவினுக்கு பணமில்லை என்றாலும் அவன் நீட் எழுதி இருக்கலாம். அவன் எழுதலை. அகில் மியூசிக் காலேஜ் சேர்ந்திருக்கிறது. அவனும் செல்லவில்லை. நித்திக்கு ஸ்போர்ட் கோட்டாவில் இடம் கிடைப்பது. குருவால் அவள் விளையாட்டை விட்டதால் அவளுக்கு இடம் கொடுக்கலை. ஆனால் அவளும் ஸ்ரீக்காக இந்த காலேஜ் வந்தாள். யாசு பேசன் டிசைனிங். அவள் அகிலை காதலித்தாலும் ஸ்ரீக்காக தான் எங்களுடன் சேர்ந்தாள். எல்லாருமே ஸ்ரீக்காக தான் ஒரே வகுப்பில் இருக்க தான் சேர்ந்தோம். அவளை கண்டுபிடிக்கணும் என்று தான்.
இதில் என்ன பெரிய விசயம்ன்னா..எங்களை விட அர்ஜூன் தான் ரொம்ப எஃபர்ட் போட்டுருக்கான். ஸ்ரீ இந்த காலேஜ்ல இருக்கா..அதுவும் பிரச்சனை என்றவுடன் உடனே இங்கே வந்து சேர்ந்துட்டான். அவனுக்கு போட்டோகிராபி தான் பிடிக்கும். “வொய்டு லைப் போட்டோகிராபி” அதனால் தான் மிருகங்கள் பற்றி அனைத்தும் தெரிஞ்சு வச்சிருக்கான். அவன் கனவை விட்டு பிசினஸில் இறங்கி விட்டான். ஆனால் அவனுக்கு அதிலும் பழக்கமிருக்கு அவன் அம்மாவால்.
இனி அவன் போட்டோகிராபி சைடு போவது சந்தேகம் தான். எந்த அளவு வேலை பார்க்கிறான்னு உங்களுக்கு தான் தெரியுமே? ஆர்வமில்லாமல் இந்த அளவு செய்ய முடியாது. நாங்க அவனை பலமுறை காயப்படுத்தி இருக்கோம். ஸ்ரீயாலும் அதிகமாக காயப்பட்டிருக்கான். ஆனால் எதையும் மனசுல வச்சுக்காம எப்படி எல்லாரிடம் நல்லா பழகுறான்? எனக்கு அவனை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு. அவன் நிலையில் நான் இருந்தால் ஸ்ரீயை ஏற்றிருக்கவும் மாட்டேன். அகிலை பார்த்தாலே வன்மம் தான் இருக்கும். அகிலுக்கு அடிப்பட்டப்ப எங்கள விட துடிச்சு போயிட்டான்.
ஸ்ரீ மட்டும் அர்ஜூனை மிஸ் பண்ணான்னா அவளை விட துரதர்ஷடமான பொண்ணு யாரும் இருக்க மாட்டாங்க என்று கண்ணீருடன் எழுந்தான் அபி. அவனை இன்பா சமாதானப்படுத்த, இவர்கள் பேசியதை கேட்ட ஸ்ரீ..அழுது கொண்டே ஓடினாள். அபி அவளை பார்த்து, அவள் பின் ஓட காருண்யாவும் அனுவுடன் அவர்கள் பின் ஓடினாள். இவர்களை பார்த்து ஸ்ரீ பின் மற்றவர்களும் ஓடினர்.
காருண்யாவை பார்க்க கௌதம் வந்து கொண்டிருந்தான். ஸ்ரீயையும் மற்றவர்களையும் பார்த்து விட்டு காருண்யாவை பார்த்தான். அவள் அவனை பார்த்து, சார்..பாப்பாவை பிடிங்க என்று அனுவை கொடுத்து விட்டு அவர்கள் பின் ஓடினாள். அனுவும் அழுது கொண்டிருந்தாள். அவனும் வந்த வழியே அனுவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே சென்றான்.
பாட்டி வீட்டிற்குள் வந்த ஸ்ரீ அவளறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள். அப்பொழுது தான் அர்ஜூன் போன் வேலையை முடித்து படுக்கையில் படுத்து கண்ணை மூடி இருப்பான்.
அபி ஸ்ரீ அறைக்கதவை தட்ட..அனைவரும் பதறி வந்தனர். கதவை திற ஸ்ரீ. அர்ஜூன் வெளியே வந்து கேட்க, அபி ஏதும் சொல்லாமல்..முதல்ல அவளை கதவை திறக்க சொல்லு என்றான்.
ஸ்ரீ..ஸ்ரீ..கதவை திற, என்னாச்சு? என்று கேட்டுக் கொண்டே அர்ஜூன் தட்ட, அவளிடம் பதிலில்லை. கௌதம் அறைக்குள் நுழைந்து ஸ்ரீ அறை பால்கனி வழியே அவளிடம் வந்தான். ஸ்ரீக்கு அர்ஜூன் டிப்பார்ட்மென்ட் மாற்றியது மட்டும் தான் தெரியும். அது அவன் கனவென்று தெரியாது.
படுக்கையில் கவிழ்ந்து அவள் அழ, அவளை பார்த்துக் கொண்டே கதவை திறந்து விட்டான் அர்ஜூன்.
அபி உள்ளே வந்து, ஸ்ரீ..நான் சும்மா பேசினேன். அதுக்காக நீ கஷ்டப்பட தேவையில்லை.
என்னடா பேசுன? அர்ஜூன் அபியை முறைத்துக் கொண்டு கேட்க, அபி அவனை பார்த்து விட்டு ஸ்ரீ அருகே சென்றான்.
போங்க எல்லாரும் என்று ஸ்ரீ கத்தினாள்.
அர்ஜூன் தவறாக எண்ணிக் கொண்டு அபியை அடிக்க வந்தான். ஸ்ரீ வேகமாக அவனிடம் வந்தாள். அதற்குள் இன்பா அர்ஜூன் கையை தள்ளி விட்டு அபி முன் வந்து, அவன் தப்பா எதுவும் பேசலை. நடந்ததை என்னிடமும் இதயாவிடம் ஷேர் பண்ணான். அவ்வளவு தான். அவன் பேசியதை ஸ்ரீ கேட்டாள். அவளுக்கு அழுகை வந்தது. அதை கட்டுப்படுத்த முடியாமல் ஓடி வந்தாள்.
நீங்க எல்லாரும் அவளுக்காக சைலு காலேஜ்ல சேர்ந்ததை சொன்னான். அர்ஜூன் கனவை பற்றி சொன்னான். அவளால் தான் எல்லாரும் கஷ்டப்படுறாங்கன்னு அழுறா..வேற ஒன்றுமேயில்லை என்ற இன்பா..ஸ்ரீயிடம் வந்து,
உன்னிடம் நான் அன்றே சொன்னேன். எதற்கெடுத்தாலும் உன்னை நீயே குற்றம் சாட்டாதே? நம் கனவை விட முக்கியமான சில விசயமும் இந்த உலகத்துல இருக்கு. உன்னோட ப்ரெண்ட்ஸ்..உனக்காக இந்த அளவு செய்றாங்கன்னா. அதை விட பலமடங்கு நீ கூட அவங்களுக்கு செய்திருக்கலாம் இல்லை உன் மீதுள்ள பாசத்தில் செய்யலாம். இதுக்காக நீ அழுதா அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு யோசித்தாயா? திட்டினாள்.
காருண்யா இன்பா பேசுவதை கேட்டு பின்னே விலகி சென்று கௌதமை இடித்தாள். அவனை பார்த்து பயந்து அவள் அறைக்கு செல்ல..அனைவரும் அவர்களை பார்த்தனர்.
எங்களுக்காக நீ என்னவெல்லாம் செஞ்சிருக்க? இதெல்லாம் விசயமே இல்லை. பிரச்சனை முடிந்த பின் காலேஜ் மாத்திக்கலாம். இதுக்கா அழுற? நித்தி கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். அவள் பின்னே சைலேஷூம் கைரவும் வந்தனர்.
எல்லாரும் மாத்திக்கலாம். எல்லாருக்கும் சரியாகும். ஆனால்..என்று தேம்பியவாறு அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூன் அவளிடம் வர ஸ்ரீ பின்னே சென்று கொண்டே, வராத அர்ஜூன். உன்னால இவங்கள மாதிரி உன்னோட ட்ரீமை அடைய முடியுமா? கேட்டாள் ஸ்ரீ.
அவன் கண்ணீருடன் அவளருகே வந்து, என்னால முடியும் என்று கண்ணீரை சுண்டி விட்டான். அர்ஜூன்..நீ? உன்னால..அபி கேட்க,
முடியும் அபி. எனக்கு போட்டோகிராபி பிடிக்கும். ஆனால் என்னோட ஏஞ்சலை விட அது முக்கியமில்லை. நான் பாட்டி சொல்லிய பண்புடன் வளர்ந்தாலும்..அவங்க என் பக்கத்தில் அதிகமாக இல்லை. நான் அதிகமாக பார்த்து வளர்ந்தது பள்ளியில் என்னுடன் படித்த என்னோட ஏஞ்சலை. எனக்கு அவள் என்னருகே இருந்தாலே போதும். என் கனவு, ஆசை, பாசம், காதல்..எல்லாமே அவள் தான். என் வாழ்நாள் கடைசி நிமிஷம் வரை என்னருகே அவளும் அனுவும் போதும். பிசினஸ் ஸ்ரீக்காக ஆரம்பித்தாலும் எப்படி என்னோட ஸ்ரீ, அனுவை விட முடியாதோ..அது போல கம்பெனியையும் விட மாட்டேன் என்று அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க..அவள் கண்ணீருடன் அமர்ந்தாள்.
சார், வாங்க காருவை பார்க்கலாம் என்று கௌதமை அழைக்க அப்பொழுது தான் எல்லாரும் காருண்யாவை தேடினர். அனு ஸ்ரீயிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். ஸ்ரீ அமைதியானதை பார்த்துக் கொண்டே அர்ஜூன் மேலே ஏறினான். அவனுடன் கௌதமும் சென்றான்.
அறைக்கு சென்ற காருண்யா கோபமாக அனைத்தையும் பார்த்தாள். அவள் படுக்கை களைந்து அவளுடைய படங்கள் தெரிந்து இருந்தது. முதலில் அர்ஜூன் உள்ளே செல்ல..அவன் பார்த்தவுடன் சீறலுடன் அவனிடம் வந்து..ஏன்டா நான் இல்லாதப்ப என் அறைக்கு வந்த? அர்ஜூன் சட்டை பிடித்து கத்தினாள். அவன் அப்படியே நிற்க கீழே இருந்தவர்கள் பதறி மேலே வந்தனர். அர்ஜூன் சட்டையிலிருந்த காருண்யா கையை தட்டி விட்டு கௌதம் அவள் முன் வந்து நின்றான். அர்ஜூன் அப்படியே நிற்க, ஸ்ரீயும் மற்றவர்களும் அர்ஜூனை பார்த்து விட்டு காருண்யா கௌதமை பார்த்தனர். ஸ்ரீ அர்ஜூன் முன் வந்து அவனது சட்டையை சரி செய்து விட்டு அவனை பார்க்க, அவன் காருண்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
அர்ஜூன்..ஸ்ரீ அழைக்க, கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறியா? கத்தினான் அர்ஜூன். ஸ்ரீ வேகமாக விலக காருண்யா அவனை பார்த்து பயந்து கொண்டே கௌதமை பார்த்தாள். அவன் அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.
சார், நீங்களும் என் அறைக்கு வந்தீங்களா? காருண்யா கேட்டாள். கௌதம் மௌனமாக மீண்டும் அவளை வெறித்தான். அறை களைந்திருப்பதை பார்த்த சைலேஷ் உள்ளே வந்து காருண்யா காலேஜ் பையை எடுக்க, காருண்யா சைலேஷிடம் உள்ள வராதீங்க என்று கத்தினான்.
என்னாச்சுடா காரு? கமலி உள்ளே வர, அவரிடமும் கத்த சென்றவள் இதழ்களை கவ்விக் கொண்டான் கௌதம்.
ஏய்..என்னடா பண்ற? பாட்டியும் அஞ்சனா கோபமாக உள்ளே வர, கமலி அதிர்ச்சியுடன் நின்றார்.
எல்லாரும் வெளிய போங்க என்று அர்ஜூன் அனைவரையும் தள்ளினான்.
அர்ஜூன்..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நல்லவன் மாதிரி பேசினான். இப்ப காருவிடம் தப்பா நடந்துக்கிறான் அஞ்சனா சொல்ல..
இல்லம்மா..வெளிய வாங்க என்று அனைவரையும் இரண்டு அறைக்கு தள்ளி அழைத்து வந்தான். கௌதம் அறைக்கதவை சாத்தினான்.
டேய்..கதவை சாத்துறான் டா பாட்டி பயத்துடன் சத்தமிட்டார்.
பாட்டி, நான் சொல்றத கேளு..அர்ஜூன் கத்தினான். காருண்யா பிரச்சனையை அவன் கூற, அதுக்கு இப்ப என்னடா செய்ற? அகில் சினத்துடன் கேட்டான்.
அவள் காதலிக்கிறது அவரை தான். அதுவும் அவருக்கு தெரியாமல் எங்கே, எப்பொழுது பார்த்தால் என்று தெரியணும். அவரால் தான் நம் காருவை சரி செய்ய முடியும் வைக்க முடியும். அவர் பேசிட்டு சொல்வார்.
பேசுவாரா? பேசியது போல் தெரியலை அபி சொல்ல..நாம எல்லாரும் இருந்தால்..அவள் மனதை திறக்க மாட்டாள்.
அபி..மேம்மிடம் மனம் திறந்து எல்லார் முன்னுமா பேசின? தனியா தான பேசுன? அதுவும் ஸ்ரீ பற்றியது என்றதால் இதயா பக்கம் இருந்தது பெரியதாக தெரியவில்லை. ஆனால் காரு விசயம் அப்படியில்லை. அது அவள் மறைத்த வலிகள். அவளால் நம்மிடம் வலிகளை காட்ட முடியவில்லை. சாரால் தான் முடியும்.
நீங்க எல்லாரும் அவளை சண்டை போட்டும், பிடிவாதம் செய்பவளாக பார்த்தீங்க? ஆனால் அவள் அப்படியில்லை. அமைதியாக இருப்பாள். நான் நம் பிரச்சனையில் அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். அவள் கௌதம் சார் மீதுள்ள காதலை சொல்லும் போது அழுதாலே அப்பொழுது தான் அவள் மாறி இருக்கிறாள் என தெரிந்தது சொல்லி விட்டு அமர்ந்து எல்லாரையும் பார்த்தான். அவர்களும் அவனை தான் பார்த்தனர். அவன் அப்செட்டாக இருக்கிறான் என்று எல்லாருக்கும் புரிந்தது.
எல்லாரும் செல்வதற்காக திரும்ப, போனை எடுத்துக்கோங்க. கவனமா இருங்க என்று சைலேஷ், கைரவ், நித்தி போனை வாங்கி உள்ளே சென்று அரை மணி நேரத்தில் முடிந்து விட்டு வெளியே வந்தான்.
அறைக்கதவை மூடிய கௌதம் மீண்டும் காருண்யா அருகே வந்தான். அவள் பேசுவால் என நினைத்தால், மீண்டும் கத்த ஆரம்பித்தாள். மீண்டும் அவன் லிப் லாக் செய்ய..அவளும் முத்தம் கொடுத்தாள். கௌதம் அவளை நகர்த்த..அவனை சுவற்று பக்கம் தள்ளி அவனை நகர விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள் காருண்யா. அவன் அவளை விலக்க முடியாமலும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
அவளை கஷ்டப்பட்டு பிரித்த கௌதம்..உனக்கு எப்பொழுதிலிருந்து என்னை தெரியுமென்று கேட்டான்.
அவள் அவனை அணைத்துக் கொண்டு, என்னிடம் ஏதும் கேட்காதீங்க? என்றாள்.
கேட்கக்கூடாதா? அப்ப நான் உன்னுடன் படுக்கணும்ன்னு ஆசைப்படுறியா? அவன் கேட்க, கௌதம் கன்னத்திலே அறைந்து விட்டு படுக்கையில் போர்வையுடன் இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.
கௌதம் அவளருகே வந்து படுத்தான்.
வராதீங்க என்று கத்தினாள்.
நான் உன்னை.. என்று போர்வையுடன் அவளை அணைத்துக் கொண்டு படுத்தான். அவள் அவனை தள்ளி விட.. மீண்டும் அவளை அணைத்து படுத்தான். இம்முறை அவள் தள்ளாமல் அவன் பக்கம் திரும்பி அவனை அணைத்து படுத்துக் கொண்டு அவள் சொல்ல ஆரம்பித்தாள். அதே நேரம் அர்ஜூனுக்கு காருண்யா வரைந்த படங்கள் வந்து கொண்டிருந்தது. அர்ஜூன் மாமாவிற்கு தெரியாமல் அறைபொண்ணுங்களிடம் சொல்லி அனுப்ப சொல்லி இருப்பான்.
அம்மாவும் அப்பாவும் என்னை விடுதியில் சேர்த்த போது ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தேன். அங்கிருந்த சின்ன பிள்ளைகளெல்லாம் யாருமே இல்லாம இருந்தாங்க. அம்மா மட்டும் தான் என்னை அடிக்கடி பார்க்க வருவாங்க. அங்க எல்லாரும் என்னை வித்தியாசமா பார்த்தாங்க.. என்னிடம் யாருமே பேசவே மாட்டாங்க. அம்மா எனக்கு ஏதாவது வாங்கித் தந்தால் யாராவது எடுத்திட்டு ஓடிருவாங்க. காலை எழுந்தவுடனே என்னுடைய முதல் வேலையே என்னுடைய பொருட்களை தேடுவது தான். அதிலிருந்து அம்மாவிடம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அப்படியும் என்னை கஷ்டப்படுத்துவாங்க. அம்மா, அப்பா இல்லாத பசங்க அவங்க என்பதால் என் அம்மா பார்க்க வந்தாலே என் மீதுள்ள பொறாமையில் விலகுவாங்க. ஆனால் வகுப்பு கூட கூட இதனால் தொல்லை அதிகமானது. அம்மாவிடமோ? காப்பாளரிடமோ? சொல்ல நினைத்தால் அவங்களுக்கு பெரிய தண்டனையா கொடுப்பாங்கன்னு மனசே வரல. எப்படியோ பத்தாம் வகுப்பு வந்தேன். விடுதியில் ஆரம்பித்தது..பள்ளியிலும் தொடர்ந்தது.
விடுதியில் அம்மா பார்க்க வந்தது பிரச்சனை. ஆனால் பள்ளியில் அம்மா, அப்பா பிரிஞ்சு இருக்காங்க. அப்பா பார்க்க கூட வர மாட்டார்ன்னு எல்லாரும் என்னை தப்பா பேசுனாங்க. நான் அவர் பொண்ணே இல்லைன்னு பேசி ரொம்ப காயப்படுத்தினாங்க. கேண்டீன்ல சாப்பிட போனா..சாப்பாட்டை பொண்ணுங்க மேலே கொட்டி விடுவாங்க. பசங்க என்னை தள்ளி விட்டும்..சிரிப்பாங்க. ஒரு நாள் எல்லை மீறி சென்றது.
நான் பள்ளி முடிந்து விடுதிக்கு வரும் போது என்னுடன் படிக்கும் பசங்க என்னை பின் தொடர்ந்து வந்திருக்காங்க. நான் அதை கவனிக்கவேயில்லை. சந்து வழியே செல்லும் போது என்னை மறித்து தப்பா நடந்துக்க பார்த்தாங்க என்று தேம்பி தேம்பி அவனை அணைத்து அழுதாள்.
அழுகையை நிறுத்தி அவனை பார்த்தாள். கௌதம் கண்கலங்க அவளை பார்த்தான். போர்வையை தூக்கி எறிந்து விட்டு அவனை அணைத்துக் கொண்டு அமைதியானாள். அந்த பசங்க என்னை கஷ்டப்படுத்தும் போது ரெண்டு பேர் வந்து காப்பாத்துனாங்க என்று கௌதமை பார்த்தாள். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவங்க காப்பாற்றி விட்டு அவங்க தோழியுடன் என்னை என் விடுதிக்கும் அழைத்து சென்று விட்டு சென்றனர் என்று சொல்லிக் கொண்டே கௌதம் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் கண்கள் விரிய அவளை பார்த்தான்.
உங்களை எனக்கு எப்பொழுது தெரியும்ன்னு கேட்டீங்கல்ல? அன்று தான் உங்களை முதலாய் பார்த்தேன். அன்று என்னை காப்பாற்றியது நீங்களும் தேவ் சாரும் தான். உங்களுடன் தேஜ்வினியும் வந்திருந்தாங்க.
நாங்களா?
ஆம். நான் உங்களுடன் சேர்ந்து தான் வந்தேன். ஆனால் ஒரு முறை கூட உங்கள் பார்வை என் மீது விழவில்லை. நம் முன் சென்ற தேவ் சார், தேஜூ மேல தான் இருந்தது. நீங்க எதுக்கு அவங்களை அப்படி பார்த்தீங்கன்னு எனக்கு அப்பொழுது புரியலை. ஆனால் இரு நாட்களுக்கு பின் தான் தெரிந்தது.
நீங்க பார்த்த அதே பார்வை போல ஒரு பொண்ணு இருவரை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் உங்கள் நினைவு வந்தது. அவளிடம் கேட்டேன். அவள் அந்த பையனை காதலிப்பதாக கூறினாள். அப்பொழுது தான் நீங்களும் தேஜூவை காதலிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒரே வாரத்தில் உங்க காலேஜ் பக்கம் விடுதியில் சேர்ந்தேன்.
எதற்கு?
எனக்கு நீங்கள் தான் முதலில் உதவ வந்தீங்க? உங்களுக்கு உங்கள் காதல் கிடைக்க உதவ நினைத்தேன். அன்று பீச்ல தேஜூ உங்களை பயந்து கட்டிப்பிடிச்சாங்களே! அது என்னுடைய வேலை தான். இரப்பர் பல்லியை தூக்கிப் போட்டேன். நான் நினைச்சது போல பயந்துட்டாங்க என்று அவனை பார்த்தாள். அவன் ஆர்வமுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்புறம் அந்த கல்லூரி பக்கம் வந்த சைக்கிள் நினைவிருக்கா? அதை ஓட்டி வந்ததே நான் தான். வேண்டுமென்றே இடிக்க வந்தேன். சரியா அவங்கள பிடிச்சுட்டீங்க..இதெல்லாம்மே இணையத்தில் பார்த்து தான் செய்தேன். எனக்கு முதலில் எப்படி உதவன்னு தெரியலை. ஆனால் அவங்க பெருசா உங்ககிட்ட வந்த மாதிரி இல்லை. அதனால் தான் என்று பயத்துடன் அவன் கையை விலக்கி நகர்ந்தாள்.
என்ன செஞ்ச?
நீங்க சாப்பிட வந்த இடத்துல குளிர்பானத்தில் ஆல்கஹாலை கலந்தேன். உங்களுக்கு கொடுக்க சொல்லி விட்டு பார்த்துக் கொண்டே இருந்தேன். நீங்களும் குடிச்சிட்டீங்க. ஆனால் அங்கே தேஜூ இல்லாததால் உங்க ப்ரெண்டு மயங்கிட்டார்ன்னு சொல்லி அவங்களை உங்களுடன் சேர்க்க நினைத்தேன். ஆனால் நான் அவங்கள பார்க்க போன போது..அவங்க கையில ஒரு பாட்டில் இருந்தது. அதில் ஆல்கஹாலும் மயக்க மருந்தும் கலந்து வச்சிருந்தாங்க. அவங்க ஊத்துவதை நானே பார்த்தேன். அதை தட்டி விட அருகே போனேன். ஆனால் எனக்கு..என்று கண்கலங்கிய காருண்யா அதை விடுத்து..
பின் நான் அங்கு வந்த வேலையில் தேஜூ தேவ் சாருக்கு அதை கொடுப்பதை தான் பார்த்தேன். அவரை ஆட்களை விட்டு இழுத்து செல்வதை பார்த்தேன். அப்பொழுது தான் எல்லாம் விளக்கமாக புரிந்தது. உங்களை எழுப்பினேன். நீங்க போதையில இருந்தீங்க. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. வேற வழியே இல்லாம உங்க மேல தண்ணீர் ஊற்றினேன். அதை பார்த்த ஒருவர்..எனக்கு உங்களை எழுப்ப உதவினார். உங்களுக்கு போதை தெளியப் போறதை பார்த்து மறைந்து கொண்டேன். அவரிடம் சொல்லி விட்டு மறைந்து இருந்தேன். நீங்க தெளிவானவுடன்.. அவர் உங்களிடம் கூறி விட்டு உங்களுடன் வந்தார்.
நான் பார்த்துக்கிறேன்னு நீங்க அவங்க அறைக்கு போய் பார்த்தீங்க. நீங்க அழுறதை பார்த்து கஷ்டமா இருந்தது. ஆனால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. நீங்க நகன்ற பின் இருவரையும் பார்த்தேன். நான் நினைத்தது சொதப்பி தேஜூ நினைச்சது நடந்திருச்சு என்று அவனை பார்த்தாள்.
என்ன வேலை செஞ்சு வச்சிருக்க? கத்தினான் கௌதம்.
சார்,..நான் உங்க காதலுக்கு உதவ தான் நினைத்தேன். ஆனால் தேஜூ இந்த அளவு போவாங்கன்னு அன்று யோசிக்க கூட இல்லை. அப்ப நான் சின்ன பொண்ணு.
சின்ன பொண்ணா? சின்னப் பொண்ணு வேலையவா பார்த்து வச்சிருக்க?
சார், போதும். நான் உங்களுக்கு உதவ தான் நினைத்தேன். உங்க தேஜூ..அவள் சொல்ல அவளை நெருங்கிய கௌதம் அவள் கழுத்தை பிடித்தான். காருண்யா தடுக்காமல் கண்ணீருடனும் வலியுடனும் நின்றாள். காருண்யா கண்கள் சிவந்திருப்பதை கவனித்த கௌதம் அவளை விடுத்து, அவள் என்னோட தேஜூ இல்லை. உனக்கு புரியுதா? கேட்டான்.
கழுத்தை நீவிக் கொண்டே அமர்ந்த காருண்யா, அப்படியா சார்? எல்லாத்தையும் பார்த்தீங்க? அந்த வீடியோவ கூட பத்திரமா வச்சிருக்கீங்க? அவங்க தவறா நடந்தது தெரிந்தும் அவங்க புகைப்படம் எதுக்கு உங்க வாலெட்ல இருக்கு? கேட்டாள்.
வாலெட்டா? என்று எடுத்து பார்த்தான் கௌதம். தேஜ்வினியின் புகைப்படம் அவன் வாலட்டில் இருந்தது. திகைத்து கீழே விட்ட கௌதம் காருண்யாவிடம்..நான் அவளை காதலிக்கும் போது கூட அவள் புகைப்படம் என்னிடம் கிடையாது. நாங்க மூவரும் எடுத்தது தான் இருக்கும். இதுல எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியலையே? பதறினான்.
காருண்யா கௌதமை கூர்ந்து பார்த்தாள். எனக்கு தெரிஞ்சு அவங்க கூட வச்சிருக்கலாமோ? கேட்டாள்.
இருக்கும் என்ற கௌதம்..காருண்யாவிடம்..சொல்லு என்று அமர்ந்தான்.
நீங்க உங்க அறைக்கு சென்று ஓய்வெடுங்க என்றாள்.
சரி..அவள் கலந்து வைக்கும் போது இடையில நீ எங்க போன? கேட்டான்.
அவள் முகம் மாறியது.
சொல்லு? என்று கேட்டான்.
வேண்டாம் சார்,..நீங்க போங்க என்றாள்.
அவளை நெருங்கிய கௌதம் சொல்லு..இல்லைன்னா என்று படுக்கையை பார்த்தான்.
ப்ளீஸ் சார், கேட்காதீங்க. ஆனால் அடுத்து நடந்ததை சொல்றேன் என்று மீதியை தொடர்ந்தாள். அடுத்த நாலு மாசம் நல்லா குடிச்சீங்க சார். உங்க காலேஜ் முன்னாடி வந்து பார்ப்பேன். நீங்களும் சாரும் மட்டும் தான் இருந்தீங்க. தேஜூ..என்று இழுத்த காரு காலேஜ்ல இல்லை. அடுத்து நான் சுவாதியுடன் தேவ் சார் இருக்கும் போது வந்தாங்களே அன்று தான் பார்த்தேன்.
இரவு குடிச்சிட்டு கீழ விழுந்து கிடந்திருக்கீங்க. நான் தான் கேப், ஆட்டோல உங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
என்னோட வீடு உனக்கு தெரியுமா? கேட்டான்.
தெரியுமாவா? உங்க வீட்டுக்கு நான் வந்திருக்கேன். உங்க அம்மா என்னை பார்த்திருக்காங்க என்றாள்.
என்ன? அம்மாவுக்கு தெரியுமா?
தெரியும். ஆனால் சாரி சார். உங்க அம்மாவுக்கு என்னை மட்டுமல்ல லவ்வும் தெரியும். நீங்க தேஜூ கிட்ட கடைசி வரை லவ்வ சொல்லலன்னு தெரியும். ஆனால் தேஜூ தப்பானவங்கன்னு தெரியாது. அதை சொல்ல எனக்கு மனசு வரலை. நீங்க ஏமாந்துட்டீங்கன்னு அவங்களும் கஷ்டப்பட வேண்டாம்ன்னு நினைச்சேன் என்றாள்.
அவன் கண்ணீருடன் காருண்யாவை அழைத்து, ரொம்ப தேங்க்ஸ் காரு..நீ சொல்லி இருந்தா அம்மாவுக்கு ஏதாவது ஆகி இருக்கும். அவங்க அந்த நேரம் உடம்பு சரியில்லாம இருந்தாங்க என்றான். அவள் அவனையே ரசித்து பார்த்தாள்.
என்ன? அவன் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
அடுத்து ஒரு வருசம் வாரமாக கூட பார்க்க முடியலை சார். பதினொன்றாம் வகுப்பு பாடதிட்டம் புதியதாக இருந்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. மாதா மாதாம் பார்க்க வருவேன். பன்னிரண்டாம் வகுப்பு போன பின் தான் உங்களை பார்க்கவே முடியலை. அதுவரை எனக்கு ஏதும் தெரியவில்லை. ஸ்கூல்ல டீஸ் பண்ணது கூட பெருசா தெரியலை. நீங்களும் தேவ் சாரும் பாசிட்டிவ்வா..பேசி எனக்கு ஏதோ நீங்க ப்ரெண்ட்ஸ் மாதிரி தெரிஞ்சீங்க. அதனால எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிட்டேன். நீங்க இல்லைன்னாலும் தேவ் சாரையாவது பார்க்க மாட்டோமா? என்று தேடினேன். இருவருமே எங்குமே இல்லை. இந்த பன்னிரண்டாம் வகுப்பு இருக்கே. சரியான டிராஜடி. செம்ம கஷ்டம். படிப்பு இல்லை. பசங்க தொல்லை..அப்பா..தப்பித்து எப்படியோ உங்க காலேஜ்ல சீட் கிடச்சிருச்சு.
உடனேவா? நீட் எக்சாம்?
உங்க பின்னாடியே சுத்தி, எனக்கும் டாக்டருக்கு படிக்க ஆசை வந்து விட்டது. அதில் பாதியிலே காணா போயிட்டீங்கல்லா? அதான் அந்த காலேஜ் ஹாஸ்பிட்டல்ல கூட வேலை பார்க்க வாய்ப்பிருக்குன்னு பன்னிரண்டாம் வகுப்புடன் நீட் எக்சாமுக்கும் படித்தேன். தேர்வெழுதி பாஸ் ஆனேன். நீங்க படித்த காலேஜ்ல வந்து சேர்ந்தேன். சுவாதியுடன் ப்ரெண்டானேன். முதல் வருடத்தில் கூட உங்களை நான் ஒரு முறை பார்த்தேன். ஆனால் உங்க பக்கத்துல வர முடியலை.
அப்ப..இந்த காதல்?
எனக்கு ஸ்கூல் படிக்கும் போதே உங்க மேல காதல் இருந்திருக்கு. ஆனால் எனக்கு தான் புரியலை. உங்கள பார்க்க முடியாதப்ப தான் எனக்கு உங்க மேல இருந்தது காதல்ன்னு புரிஞ்சது. ஆனால் பார்க்க முடியலை.
பென்சில் சேடிங்கை இப்ப தான் கலரா மாத்தி இருக்கிறாயா? ஏன்? கேட்டான்.
என்னுடைய சின்ன வயசு ரொம்ப டார்க் சைடு. அது கலராக இருக்காது. ஆனால் இப்ப..என்று சொல்ல தயங்கி சுவாதி, சீனு, அப்பா, அர்ஜூன்..பேமிலியே இருக்காங்க. இனி எனக்கு ஒன்றுன்னா இவங்க எனக்காக இருப்பாங்கல்ல.
ம்ம்..என்ற கௌதம் எழுந்து அவனை கலராக்கி அவள் வரைந்து வைத்திருந்ததை எடுத்து வந்து போட்டு..இது எதுக்கு கலரா இருக்கு?
சார்,..எனக்கு உங்க மேல காதல் இருக்கு. அதனால தான கலரா வரைஞ்சிருக்கேன். நான் கேட்டதுக்கு நீங்க தான் பதில் சொல்லலை.
சொல்லலையா? சொன்னேனே! எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை என்றான்.
அப்படீன்னா? எதுக்கு என்னை கிஸ் பண்ணீங்க? என்னுடன் படுக்கையில் படுத்திருந்தீங்க?
உன்னை பற்றி தெரிந்து கொள்ள செய்தேன். நாம் படுக்கையில் இருந்தாலும் நான் எல்லை மீறவில்லை என்றான்.
உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது? என்று கண்ணீர் வடிய கேட்டாள்.
உன்னை பார்த்தால் எதுவும் தோணலை என்று கௌதம் கூற, காருண்யா முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். அவள் பக்கம் செல்லவிருந்த கையை கௌதம் அவனே கட்டுப்படுத்திக் கொண்டு உடல் விறைக்க கண்ணீரை உள்ளிழுத்து குரலுக்கு பாதகமில்லாமல், நான் கிளம்புகிறேன் என்று அவன் செல்ல, அவனை பின்னிருந்து அணைத்த காருண்யா ப்ளீஸ் சொல்லுங்க. நீங்க விளையாட்டுக்கு தான சொன்னீங்க? கேட்டாள்.
இல்லை, எனக்கு உன் மீது விருப்பமில்லை என்று வெளியேறினான். அவள் அழுது கொண்டே அவனை வரைந்து வைத்திருந்த சீட்டை கிழித்து எறிந்தாள்.
என்னை பற்றி தெரிய நடிச்சீங்களா? நான் கூட உங்களுக்கு என் மீது ஆர்வம் வந்திருச்சுன்னு நினைச்சேன். எதுவுமே இல்லையா? நான் தான் பைத்தியம் போல மேரேஜ் பிரபோர்சல் கொடுத்தேனா? என்று கண்ணாடி முன் வந்து அவன் முத்தமிட்ட இதழ்களை பார்த்தாள். கண்ணை மூடிக் கொண்டு கௌதம் அருகே இருப்பதை போல் நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டாள்.