வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-108
141
அத்தியாயம் 108
காட்டை அடைந்த அர்ஜூன் பிளாக்கை நிறுத்தி அவர்களையும் ஓநாயையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஜானு அவனிடம் வந்து அழுதாள். அமைதியா இரு ஜானு என்று அவன் ஜானுவிடம் பேசிக் கொண்டிருந்தான். தீனா அங்கு வந்து, அர்ஜூன் இந்த பாரஸ்ட் ஆபிசர் ஊருக்கு போயிருக்கானாம். அவன் அசிஸ்டென்ட் மட்டும் தான் இருந்தான். ஆனா உதவுவான்னு விசயத்தை சொன்னா..அவன் அதுக்கு மேல நடுங்குறான்.
அண்ணா,..ஓநாய் ரொம்ப பெருசா இருக்கு அர்ஜூன் சொல்ல, மதிற்சுவறில் ஏறினர் அர்ஜூன், கவின், தீனா. ஆட்கள் வரவும். அதை பிடிக்க வலை, தீப்பந்தம், ஈட்டி, கத்தி, கோடாரி…மேலும் பல பொருட்களை கொண்டு வந்திருந்தாங்க.
அண்ணா..நாம அதை கொல்லக்கூடாது. விரட்ட தான் பார்க்கணும்.
அது எப்படி போகும்?
தெரியல. ஆனால் போக தான் வைக்கணும். காட்டு விலங்குகளை துன்புறுத்தினாலும் சட்டப்படி தண்டனை கிடைக்கும். நாம் தான் அதன் இடத்துக்கு போகப் போறோம். அதனால் நாம் தான் காயப்படுவோம்.
அண்ணா, நீங்க தயாரா இருக்கீங்களா? அர்ஜூன் கேட்க, நாங்க தயாரா இருக்கோம் என்று கீழிறிருந்து குரல் கேட்டது. வேலுவும் அவன் நண்பர்களும் வந்தனர். அந்த ஓநாய் இப்பொழுதும் ஸ்ரீ, தாரிகாவை விடுவதாக இல்லை. அவர்கள் இருக்கும் மரத்திலே ஏற முயற்சித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரீயும் தாரிகாவும் கிளைகள், இலைகள் என அதன் மீது போட அதற்கு கோபம் தான் அதிகமானது. ஆனால் மேலுயரத்திற்கு அதனால் ஏற முடியவில்லை.
அர்ஜூன்..என்று அவன் தாரிகாவை பார்க்க, டேய் அவ முதல்ல எனக்கு தங்கச்சி என்றான்.
சரி..பார்த்து அர்ஜூன் என்றான் கவின்.
அர்ஜூன் திரும்பி வலையை கேட்க அந்த பெரிய வலையை பிடித்துக் கொண்டு, தீனா சத்தமிட..ஓநாய் அவர்கள் பக்கம் வந்து தவ்வியது. வலையை அதன் மீது போட்டுக் கொண்டே தீனாவும் அர்ஜூனும் உள்ளே குதித்தனர். அது வலையினுள் சுருண்டு இருக்க, அண்ணா..என்று அர்ஜூன் கண்ணை காட்டிய மறுநொடி உள்ளிருந்தவாறு ஓநாய் வலையை பிடித்து இழுத்து வேகமாக ஓட, அவர்களும் வலையை விடாமல் இழுத்த இழுப்பிற்கு சென்றனர். இருவருக்கும் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அர்ஜூன் முடியாமல் விட்டு விட தீனாவை தூக்கி வீசி வலையிலிருந்து வெளியே வந்தது. அது அர்ஜூனை நோக்கி பாய்ந்து வந்தது. அண்ணா..என்று தாரிகா சத்தமிட்டாள்.
அர்ஜூன் அவன் சட்டையை கழற்றி, அது அவனை நோக்கி கடிக்க பாய்ந்த சமயம் சட்டையால் அதன் வாயை கட்டலாம் என்று தயாராக இருந்தான். அது போல் முயன்றான். ஆனால் அவன் செய்கையில் அது அவனை விட்டு தீனா பக்கம் ஓடியது. அவன் அதற்கு ஆட்டம் காட்ட..ஒரு சமயம் அவன் மாட்டினான்.
அங்கே வந்த ஈட்டி அந்த ஓநாய் முன் வந்து குத்தி நிற்க, அது மிரண்டு பின் வாங்கியது. தருண் உள்ளே குதித்து வந்தான். இருவரும் அவனை பார்த்தனர். அவன் பின் பிரதீப்பும் வந்தான்.
பிரதீப் அவர்களிடம் பாரஸ்ட் ஆபிசர் வரும் வரை எப்படியாவது சமாளிக்கணும். அவர் மயக்க ஊசிகளை எடுத்து வருவார் என்று அர்ஜூன், தீனாவிடம் கத்தியை தூக்கி எறிந்தான்.
அர்ஜூனும் தருணும் சேர்ந்து கொள்ள, பிரதீப்பும் தீனாவும் சேர்ந்து கொண்டனர். அண்ணா..இது முன்னாடியே எல்லாத்தையும் பேசுறீங்க? அர்ஜூன் கேட்க, பிரதீப் தீனாவை பார்த்தான்.
ஆமா..இவனுக்கு நாம பேசுறது நல்லா புரியும். என்ன கிரே? என்றான் தருண்.
செல்லப்பேரா டா அதுக்கு வைக்கிற லூசு? என்று சத்தம் கேட்டு அனைவரும் மரத்தின் மேல் பார்த்தனர். ஸ்ரீ தான் தருணை திட்டியவாறு கையில் வைத்திருந்த வில்லமைப்பை தூக்கி தருண் மேலே போட்டாள்.
என்ன மாதிரி அழகா பண்ணி இருக்கியே ஸ்ரீ?
கமெண்டரி கொடுக்கிற நேரமாடா இது? தாரிகா புலம்பியவாறு, சீனியர் உங்க கிரே உங்கள தான் பார்த்து முறைக்குது என்றாள்.
வாய மூடுறீங்களா? என்று அர்ஜூன் கத்தி விட்டு அவர்களை முறைத்தான்.
தீனா அர்ஜூன் சட்டையை கையில் எடுத்தான். அர்ஜூனை பார்த்து மரத்தில் இருப்பவர்களை இறக்கி காப்பாற்ற சைகையில் கூறி பிரதீப்பை பார்த்து, அண்ணா தயாரா இருக்கிறாயா? கேட்டான்.
ம்ம்..என்று பிரதீப் தலையசைக்க, அர்ஜூன் திட்டத்தை கையில் எடுத்து அவன் சட்டையுடன் ஓநாயை நோக்கி தீனா சென்றான். பிரதீப்பும் அவன் பின் சென்றான்.
அர்ஜூனும் தருணும் ஸ்ரீ, தாரிகாவிடம் வந்தனர். முதல்ல அவங்கள காப்பாத்துங்க. துகி ரொம்ப பயந்துட்டா என்று ஸ்ரீ கூறினாள். இருவரும் ஆதேஷ், துகிராவை கீழே இறக்க, அதை கண்டு கொண்ட ஓநாய்..அவர்கள் பக்கம் திரும்பியது. அதே நேரத்தில் தீனா சட்டையை அதன் மீதே ஏறி கட்டுமளவு நெருங்கினான். கோபமடைந்த ஓநாய் அவனை முன்னிழுத்து அவன் கையை கடித்தது. அவன் கத்தினான். பிரதீப் கையிலிருந்த கத்தியை அதன் காலில் இறக்கினான்.
வேலுவும் சத்யாவும் வேகமாக உள்ளே குதித்தனர். சத்யாவிற்கும் தியாவிற்கும் இரு நாட்களில் திருமணம். அவன் அம்மா சொல்வதை கூட கேட்காமல் அவன் இங்கே வந்திருந்தான். ஓநாய் பிரதீப்பிடம் திரும்பியது. கீழே இறங்கிய ஆதேஷ் துகிராவை வேகமாக மறையும் சரவணனும் தூக்கினர். துகியையும் ஆதேஷையும் ஜானு அணைத்து அழுதாள்.
தருண், வேலு, சத்யா தீனாவை தூக்கி ஓரிடத்தில் சாய்த்து அமர வைத்தனர். அவன் மயங்கிவிட்டான். தருண் அவனுடைய இரத்தத்தை துடைத்துக் கொண்டே..அண்ணா..சீக்கிரம் இவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும். இரத்தம் நிற்கவில்லை என்று கலக்கத்துடன் பேசினான். அகில், கௌதம், காருண்யா அங்கு வந்தனர்.
மூவரும் வெளியேயிருந்து நடப்பதை பார்த்தனர். கௌதம் அக்கயிற்றை பார்த்து ஏறினான்.
சார், நீங்க என்ன பண்றீங்க? காருண்யா கத்த..இரு நானும் வருகிறேன் என்று அகிலும் அவ்விடம் வந்த அபியும் வேகமாக ஏறினர்.
வேலு, சத்யா, தருண் தீனாவை மேலேற்ற..பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது ஓநாய். அர்ஜூனும் பிரதீப்பும் அதனை தாக்க, சத்யா இடை புகுந்து ஏற்கனவே பிரதீப் குத்திய அதே கால்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடினான். அனைவரும் திகைத்து உள்ள போகாதடா என்று கத்தினார்கள். ஓநாயும் அவனை விரட்ட..தீனாவை பாதுகாப்பாக மேலேற்றினார்கள்.
கௌதம், கவின், அபி, மறை மற்றவர்கள் உதவியுடன் கீழே தீனாவை இறக்க வெற்றி பதட்டத்துடன் தன் மகனை கண்கலங்க பார்த்து அவரது வண்டியில் அவனை ஏற்ற கௌதமும் அவனுக்கு இரத்தம் வெளியேறுவதை தடுக்க முயற்சி செய்து கொண்டே அவர்களுடன் சென்றான். காருண்யா இங்கே இருக்க..ஊரார் முக்கால் வாசி பேர் அங்கே வந்து விட்டனர். கமலியும் அவர் அம்மாவும் கையில் அனுவிடனும் காயத்ரி ராக்கியுடனும் வந்திருந்தனர். அனைவர் பதட்டத்தில் இருந்தனர். மறையும் நண்பர்களும் சத்யா வேலுவிற்காக உள்ளே செல்ல இருந்தவர்களை தடுத்த அவ்வூர் பெரியவர்கள் சிலர் உள்ளே இறங்கினர்.
மறை தன் நண்பர்களுடன் விசயமறிந்து கிளம்பும் போது, சக்தி மறை வீட்டினருகே இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிலிருந்து வெளியே வந்திருப்பான். அவனை காயத்ரியும் பார்க்க, அவனும் அவளை பார்த்தான். நேற்றைய போதை தெளிவாகாமலே..நான் என்னன்னு பார்த்துட்டு வாரேன் கிழவா? என்று அவன் வாசலை அடைய, காயத்ரி அங்கே வந்து அவனை மறித்து இதை குடிச்சிட்டு போ..என்றாள்.
என்னது? அவன் கேட்டான்.
அம்மா..என்று ராக்கி காயத்ரியிடம் வந்தான். போதையோட போய் செத்து தொலைச்சிட்டா உனக்கும் பொண்டாட்டி, புள்ளங்க இருக்காங்கல்ல. இத குடிச்சா சரியாகிடும். அப்புறம் போய் என்னமும் செய் என்று முகத்தை சுளித்துக் கொண்டு, “டம்மென” டம்ளரை வைத்து விட்டு சென்றாள். பாட்டியும் தாத்தாவும் அவளை பார்த்து புன்னகையுடன், நீ அந்த பொண்ண கஷ்டப்படுத்துன. ஆனால் உனக்கு ஏதாவது ஆகிட்டா, உன்னோட பொண்டாட்டி நிலைய பத்தி கவலைப்பட்டு கொடுத்துட்டு போவுது. உன் பொண்டாட்டி மேல உனக்கு இல்லாத அக்கறை அவளுக்கு இருக்கு பாரு..நீயெல்லாம் எப்ப தான் திருந்த போறியோ? என்று பாட்டி புலம்பியவாறு உள்ளே சென்றார்.
சக்தி காயத்ரி கொடுத்ததை குடித்து விட்டு, முகத்தை தண்ணீரால் அடித்துக் கொண்டிருந்தான். கதவை பூட்டி விட்டு காயத்ரி ராக்கியுடன் வெளியே வந்தாள்.
நீயுமாம்மா போகப் போற? தாத்தா வினவ, அவருக்கு ஏதாவது ஆகிட்டா. என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. எல்லா பசங்களும் உள்ள இருக்காங்க. நான் போகத் தானே செய்வேன் என்று அவள் செல்ல, சக்தியும் சென்றான்.
அர்ஜூனும் தருணும் ஸ்ரீ, தாரிகாவை கீழே இறக்கி, அவர்களை தப்பிக்க வைக்க நினைத்தனர். ஆனால் தாரிகா கவினுடன் மேலே ஏறி ஸ்ரீக்கு கை கொடுத்தாள்.
அர்ஜூன் நீயும் வா..என்று ஸ்ரீ அழைத்தாள். நீ போ..நாங்க வாரோம். அண்ணா எல்லாரும் காட்டுக்குள்ள போயிருக்காங்க. பிரச்சனையாகிடாமல் அழைச்சிட்டு வாரேன் என்று அவன் சொல்ல..நீ வந்தால் போவேன் என்று ஸ்ரீ பிடிவாதம் செய்து கொண்டிருக்க, அர்ஜூன் சீக்கிரம் மேலே ஏறுங்க என்று பெரியவர்கள் கத்திக் கொண்டே வந்தனர். பிரதீப், வேலு, சத்யா கை, கால்களில் காயத்துடன் ஓடி வந்துக் கொண்டே ஸ்ரீ..மேலேறு என்று அவர்கள் மரத்தின் ஊடே தாவி தாவி வந்து மதிற்சுவற்றில் ஏறினர்.
அண்ணா..என்னாச்சு? ஓநாய் எங்கே? அர்ஜூன் கேட்க, பிரதீப் ஸ்ரீ கையை பிடித்து கத்தினான். சீக்கிரம் வாங்கடா..அவளோ அர்ஜூன் கையை பிடித்துக் கொண்டு வா..அர்ஜூன் என்று சத்தமிட்டாள்.
பறவைகள் அனைத்தும் மரத்திலிருந்து சிதறி ஓட, அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். கர்ஜனையுடன் சிங்கமொன்று அதன் கம்பீரம் குறையாது அவர்கள் முன் வந்து நின்றது.
தருண்..வா என்று பிரதீப் கையை நீட்ட பாய்ந்து அவனை நோக்கி வந்தது. பயத்தில் உறைந்து நின்றனர். பிரதீப் கையை எடுத்து விட, தருணை நெருங்கியது. அதன் வாயெங்கும் இரத்தம். துர்நாற்றம்.
அவன் கழுத்தை திருப்பிக் கொண்டு கண்ணை மூடி நின்றான். பிரதீப்பும் மதிற்சுவற்றின் ஓரம் சென்று உள்ளே குதித்தான். அண்ணா..என்று ஜானு மயங்கினாள். ஆதேஷ் அவளை எழுப்பிக் கொண்டிருக்க, துகிரா அவ்வலையின் அருகே வந்து நின்றாள் கண்ணீருடன்.
இப்பொழுது சிங்கம் பிரதீப் பக்கம் திரும்பியது. அண்ணா..மேலே ஏறுங்க அர்ஜூன் கத்த, அவன் அசையாது நின்றான். பார்த்துக் கொண்டிருந்த துகிரா சிங்கம் பிரதீப் பக்கம் திரும்பும் போது அவள் மீண்டும் மதிற்சுவறில் ஏறினாள்.
வேலு, அவன் நண்பர்கள், அகில் நண்பர்கள் சத்தமிட சைலேஷ் அவளை பிடித்து கீழே இழுத்து விட்டான். கைரவ், நித்தி, யாசு, காயத்ரி, கமலி வலையருகே வந்து பதறி நின்றனர்.
அர்ஜூனிடம் ஸ்ரீ, அவள் கையிலிருந்த மரக்கட்டை கீழே கிடந்ததை காட்டினாள்.
இந்த சிங்கம் ரொம்ப பெருசா இருக்கு. இது எப்படி? தருண் கேட்க, ஜஸ்ட் திசை திருப்ப செய்யலாம் அர்ஜூன் சொல்ல, அர்ஜூன் இது ரிஸ்க் என்றான் தருண். இருவரும் மெதுவாக பேசிக் கொண்டிருக்க..ஸ்ரீ நகர்ந்து கட்டையை எடுக்க, சிங்கம் அவள் பக்கம் திரும்பியது. அவள் கட்டையை வைத்துக் கொண்டு நிற்க, சிங்கம் திரும்பி ஸ்ரீயை பார்த்து பயங்கரமாக கர்ஜித்தது. அவள் பயந்து கட்டையை கீழே விட்டாள். அனைவரும் அவளை பார்த்து கத்தினர்.
அவளருகே சிங்கம் வர அர்ஜூன் அவளிடம் ஓடிச் சென்று அவள் கையை பிடித்து ஸ்ரீயை மறைத்து நின்றான். அவன் மீது வேகமாக வந்து சிங்கம் பாய்ந்தது.
அப்பா…என்று அழுது கொண்டே வலையின் வழியே கையை நீட்டி கத்தினாள் அனு. அர்ஜூன் உறைந்து அப்படியே நின்றான். ஸ்ரீ அர்ஜூனையும் அனுவையும் பார்த்துக் கொண்டே அர்ஜூனை கீழே தள்ளி விட்டாள். சிங்கம் ஸ்ரீயின் மீது பாய ஸ்ரீ கீழே விழுந்தாள். சிங்கம் அவளை லாக் செய்து முகத்தருகே சென்றது. ஸ்ரீ.. என்று அனைவரும் கத்தினர்.
அம்மா..அம்மா…அம்மா..என்று அனு அழ ஆரம்பித்தாள். சிங்கம் கடிக்க அவளை நெருங்கி பின் திடீரென அவளை முகர்ந்தது. அமைதியாக ஸ்ரீயை விட்டு நகர்ந்தது. அர்ஜூன் சுயம் வந்து ஸ்ரீயை பார்த்து அவளிடம் பதறி வந்தான்.
அர்ஜூன்..அர்ஜூன்..என்று மூச்சுவிட முடியாமல் திணறி படுத்திருந்தாள். அர்ஜூனிடம் வந்து காலை தூக்கியது. அவன் புரியாமல் அதையும் ஸ்ரீயையும் பார்த்தான். தருண் நடுக்கத்துடன் அ,..அ..அர்..ஜூன், ந..நல்லா அதை பாரு என்றான்.
ம்ம்..என்று அர்ஜூன் சிங்கத்தை பார்த்தான். அது தருணை பார்த்து அவனிடம் வர, அர்ஜூன் ஸ்ரீயை கையில் தூக்கிக் கொண்டு தருணிடம் ஓடி வந்தான்.
கண்களை மூடி மூச்சு விடாமல் தருண் நிற்க, அருகே வந்து கர்ஜித்து விட்டு தருண் காலருகே படுத்துக் கொண்டது. அனுவோ..அழுகையை நிறுத்தவேயில்லை.
எல்லாரும் ஆச்சர்யமுடன் இவர்களை பார்த்தனர். ஸ்ரீ..இங்க பாரு.. ஒன்றுமில்லை என்று அர்ஜூன் ஸ்ரீயை அனுவிடம் கொண்டு சென்று அவளுக்கு மூச்சு கொடுத்தான். தருண் சிங்கத்தை பார்த்து விட்டு மெதுவாக அதன் முடியில் நடுக்கத்துடன் கையை வைத்தான். அது அவன் மீது தாவியது. இதயா மயங்கி சரிந்தாள்.
ஆனால் அது அவனுடன் விளையாடியது. பிரதீப்பும் அருகே வந்தான். அவனும் அதை மெதுவாக தொட,..அது அவனை தொடவே விடவில்லை. கோபமுடன் கர்ஜித்தது.
அண்ணா..நீங்க மேலேறுங்க என்று தருண் சொல்ல, பிரதீப் சென்றான். ஸ்ரீ எழுந்து அனுவை பார்க்க, அவள் அம்மா..அம்மா..அம்மா..என்று கையை தூக்கினாள்.
ஸ்ரீ அழுது கொண்டே அனுவை பார்த்து, அர்ஜூன்.. அர்ஜூன்.. அனு என்றாள். ம்ம்..என்று அவனும் கண்ணீருடன்..அனு என்னை தான் அப்பான்னு சொன்னா ஸ்ரீ என்று அவளை அணைத்தான்.
பாப்பா அழக்கூடாது என்று அனு கையை ஸ்ரீ பிடிக்க, சிங்கம் அங்கே வந்து அனுவை பார்த்தது. ஸ்ரீ மிரண்டு அர்ஜூனை கட்டிக் கொண்டு இருந்தாள். அம்மா..அம்மா..என்று அழுகை நின்று அனு ஸ்ரீயை அழைக்க, சிங்கம் வலையினருகே முகத்தை வைத்தது. அனு தொட்டு பார்த்தாள். அருகே இருந்த அர்ஜூன் அம்மா, பாட்டி, காருண்யா, தாரிகா பயந்தவாறு சிங்கத்தை பார்த்தனர்.
ஸ்ரீ நிமிர்ந்து பாரு..என்று அர்ஜூன் சொல்ல, அனு சிங்கத்தை தொட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீ மெதுவாக சிங்கத்தை தொட, அது ஏதும் செய்யவில்லை.
அர்ஜூன்..இது அந்த சிங்கமாக இருக்குமோ? ஸ்ரீ கேட்டாள்.
அப்படி தான் நினைக்கிறேன்.
உனக்கு அதெல்லாம் நினைவிருக்கா? தருண் கேட்டான்.
இப்ப தான் நினைவு வருது என்று எழுந்து அந்த கட்டையை எடுத்து பார்த்தாள். அன்று ஸ்ரீயை காப்பாற்ற அர்ஜூன் எடுத்த அதே கட்டை. அதில் இருந்த இரத்தக்கறையை காட்டினாள்.
ம்ம்..அது தானோ? அர்ஜூன் சிங்கத்தை பார்க்க, அது அவனருகே வந்து மண்டியிட்டது. அர்ஜூன்..தூக்கு..என்று அனு சத்தமாக சொல்ல, அர்ஜூனும் ஸ்ரீயும் எழுந்தனர். சிங்கம் அவர்களை பார்த்து, கர்ஜித்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றது.
மூவரும் வெளியே வந்தனர். இங்க பாரேன். சிங்கத்தோட மனசையே ஜெயிச்சுட்டாங்க என்று மூவரையும் ஊரார் பெருமையாக பேச, அப்பொழுது வந்தார் பாரஸ்ட் ஆபிசர்.
எப்ப வர சொன்னா? எப்ப வாரார் பாரு? அபி சத்தமிட்டான்.
சும்மா இரு அபி என்று இன்பா சொல்ல, அர்ஜூன் வெளியே வந்தவுடன் அனுவை தூக்கி அணைத்துக் கொண்டான். பின் ஸ்ரீயை முறைத்துக் கொண்டே அவளிடம் வந்தான். தருணை பார்த்த இதயா ஓடி வந்து அவனை அணைத்து அழுதாள்.
அர்ஜூன்..என்று அவள் பேசுவதற்குள் அவளை அடித்தான். மறு பக்கமும் அடிக்கும் சத்தம் கேட்டது. பிரதீப் துகிராவை அடித்திருந்தான்.
அண்ணா..இருவரும் என்ன செய்றீங்க? என்ற ஜானு, ஸ்ரீ அக்கா மேல தவறில்லை. அவங்க உதவ தான செஞ்சாங்க. துகி அண்ணி எனக்காக தான் உள்ளே குதிச்சாங்க. சாம்சங் உள்ளே செல்வதை பார்த்து தான் இப்படி செஞ்சாங்க. நான் தான் அவன் வேண்டும்ன்னு அழுதேன். அதனால் தான் அண்ணி உள்ளே குதிச்சுட்டாங்க. என் மேல தான் தப்பு என்று அழுதாள்.
அர்ஜூனும் பிரதீப்பும் ஒரே போல், அதுக்காக உள்ளேவா குதிக்கிறது? எவ்வளவு உயரம் எப்படி ஏறி குதிச்சிருக்கா? அவன் எப்படியும் செத்து போயிருப்பான். இப்ப குதிச்சு நீ தான் செத்து போயிருப்ப. சாம்சங் வேற வாங்கிக்கலாம்ன்னு ஜானுவுக்கு சொல்றத விட்டு..என்று அவளிடம் பிரதீப் கையை ஓங்கினான். துகிராவிடம் சத்தம் கேட்டது. சாம்சங் அவள் ஆடையிலிருந்து வெளியே வந்தான்.
“சாம்சங்” என்று ஜானு துகிராவிடம் ஓடி அவளை அணைத்துக் கொண்டு, அண்ணி “லவ் யூ” என்று துகிரா கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் கண்ணீருடன் அணைத்தாள்.
“தேங்க்ஸ் அண்ணி” அவனை காப்பாத்திட்டீங்க என்று அவளுக்கு மேலும் முத்த மழையை பொழிந்தாள். அனைவரும் ஜானுவை திகைப்புடன் பார்க்க, மீனாட்சி அங்கே வந்து, ஏய்..என்னடி பண்ற? உனக்காக பிள்ள எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கு. இப்படி அவள நிக்க வைக்கிற? என்று ஜானுவிடம் செல்லமாக பேசிக் கொண்டே பிரதீப்பை பார்த்து, வா..ஹாஸ்பிட்டல் போகலாம் என்று அழைத்தார்.
துகிரா கை பிரதீப் அடித்த கன்னத்தில் இருந்தது. பின் அதை எடுத்து விட்டு, ஜானுவிடம் சாம்சங்கை கொடுத்து விட்டு அங்கேயே அமர்ந்தாள். லலிதாவும், ஆதேஷ் அப்பாவும் வந்தனர். ஆதேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். லலிதா அவளை திட்ட, விடும்மா பிள்ளைய திட்டாதே என்று ஆதேஷ் அப்பா அவளுக்கு சப்போர்ட் செய்தார். எல்லாரும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பா..வீட்டுக்கு போகலாமா? தலை வலிக்குது துகிரா சொல்ல, நான் பேசுறது உனக்கு தலை வலிக்குதா? லலிதா சத்தமிட்டார்.
போதும். நிறுத்துறியாம்மா என்று துகிரா கத்தினாள்.
ஏங்க..அவள பாருங்க. என்னை அம்மான்னு சொன்னா? என்று அவர் மகிழ்ச்சியுடன் சொல்ல, அம்மா இப்ப ரொம்ப எமோஸ்னல் ஆகாதீங்க. வேரெதாவது சொல்லி கத்தி மானத்தை வாங்கிடுவா? ஆதேஷ் கேலி செய்ய..துகிரா கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.
ஏய், எதுக்கு அழுற? என்று இன்பாவும் தாரிகாவும் அவளிடம் வந்தனர்.
இன்பாவை பார்த்த துகிரா அவளை அணைத்து அழுதாள். இங்கே மிருகங்கள் வரும்ன்னு தெரிஞ்சு தான் போனேன். சாம்சங்கை காப்பாற்ற தான் தோன்றியது. எனக்கு வேரெதுவும் தோணலை. இப்ப என்னால தான் எல்லாருக்கும் அடிபட்டிருச்சு. தீனாவுக்கு ரொம்ப வலிக்குமே? என்று உடைந்து அழுதாள்.
மீனாட்சியை பார்த்து அவரிடம் ஓடிச் சென்று அவனை பார்த்தீங்களா? நல்லா இருக்கானா? முழிச்சிட்டானா? என்னை மன்னிச்சிருங்க அத்தை என்று அணைத்து அழுதாள். அவளை திகைப்புடன் பிரதீப் பார்த்தான்.
அவன் முழிச்சிட்டான்ம்மா. அவனுக்கு ஒன்றுமில்லை. வா..நாம போய் பார்க்கலாம் என்று மீனாட்சி சொல்ல, அம்மா..நானும் வாரேன் என்று ஜானுவும் அவர்களுடன் செல்ல, மாமா..வாங்க என்று ஆதேஷூம், மருமகனே வாங்க ஹாஸ்பிட்டல்ல போய் மருந்து போட்டுக்கலாம் என்று அவனது கையை பார்த்துக் கொண்டு, நல்ல வேலை அடி அதிகமில்லை என்றார்.
ஆனால் அர்ஜூனுக்கு ஸ்ரீ மீதுள்ள கோபம் போகாமலிருக்க, நான் ஹாஸ்பிட்டல் போய்..தீனா அண்ணாவையும் மத்தவங்களையும் பார்த்துட்டு வாரேன் என்று அனுவை அவன் அம்மாவிடம் கொடுத்து விட்டு அர்ஜூன் சென்றான். ஸ்ரீ அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவ முன் போலில்லைய்யா. அவளாகவே உன்னை பார்க்கணும்ன்னு சொன்னா. உன் அம்மா தான் இவளை கூட்டிட்டி போன்னு அனுப்பி வச்சா.
அம்மா..வரலையா?
நீ தான் அவ பேச்சை கேட்காம ஓடிட்டியாம். அதான் உன் மேல கோபமா இருக்கா.
நான் வீட்டுக்கு போய் அம்மாவை பார்த்துப்பேன். அடி ஒன்றும் பெருசில்லை. தீனா சாருக்கு தான் அதிகமா அடிபட்டிருக்கு. நீங்க கிளம்புங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் என்று தியாவை பார்த்தான். அவள் அனைவருடைய காயத்தையும் சத்யா காயத்தையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரி தான். பாட்டி முதல்ல இவள கூட்டிட்டி போ. இல்லை கொஞ்ச நேரத்துல ஓவரா பேச ஆரம்பிச்சிருவா?
நடிப்பா? எனக்கு நடிக்கவே தெரியாதுடா கருவாயா? என்று அவனுடன் சண்டைக்கு நின்றாள்.
பார்த்தீங்கல்ல? சத்யா பிரதீப்பிடம் கண்ணை காட்ட, நான் கிளம்புறேன் என்று பிரதீப் எழுந்து தீனா அறைக்கு சென்றான். பிரதீப்பை பார்த்த துகிரா அவனை கண்களால் அலசி விட்டு, அத்தை நான் வீட்டுக்கு போறேன் என்று எழுந்தாள்.
சரிம்மா என்ற மீனாட்சி பிரதீப்பிடம் வந்து அவனது காயத்தை பார்த்து விட்டு, பசங்கள அழைக்கவா? இருவரும் வீட்டுக்கு போங்க என்றார்.
இல்ல ஜானு. நேரமாகட்டும் என்றாள் துகிரா. ஆதேஷ் குடும்பமும், வெற்றி குடும்பமும் அவளை பார்க்க, தீனா புன்னகையுடன், திட்டுனியாடா? பிரதீப்பிடம் கேட்டான்.
இல்ல தீனா. அவரு அடிச்சிட்டாரு. நான் அவருடன் செல்ல மாட்டேன். சாம்சங்கும் ஓர் உயிர் தான. எனக்கும் அவனை பிடிக்கும். எப்பொழுதும் ஜானுவுடன் இருப்பவன். அன்று அவனை மறந்து விட்டு ஜானு எப்படி அழுதாள் தெரியுமா? துகிரா கேட்க, ஜானு கண்கள் கலங்கியது. ஜானு அண்ணாவிடம் எதிர்பார்த்ததை துகிரா பேச, அண்ணி என்று அவளிடம் மீண்டும் வர, ஆதேஷ் அவள் முன் வந்து போதும் ஜானு. அவளை கட்டிப் பிடிக்காத என்றான்.
ஏன் மாமா? அண்ணி பொண்ணு தான? அவங்க என்னை பத்தி எவ்வளவு யோசிச்சு இருக்காங்க? எனக்காக தான் அவங்க உயிரையே பணயம் வச்சிருக்காங்க என்றாள்.
அப்பாவி பொண்ணு மாதிரியே பேசுற ராட்ச்சசி என்று ஆதேஷ் சிரித்தான்.
நான் எவ்வளவு ஃபீலிங்கோட பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க சிரிக்கிறீங்க மாமா?
அவன் மேலும் சிரித்தான். பிரதீப் துகிரா அருகே வந்து மண்டியிட்டு அவள் கையை பிடித்து, சாரிம்மா கோபத்துல அடிச்சிட்டேன். உனக்கு ஏதாவது ஆகி இருந்தால்..அந்த டென்சன்ல அடிச்சிட்டேன்ம்மா. இனி உன்னை அடிக்கவே மாட்டேன் என்று பேச, துகிரா எழுந்து அத்தை, மாமா நாங்க வீட்டுக்கு போறோம் என்று தீனாவை பார்த்து மன்னிப்பு கேட்டாள்.
இதுக்கு அவசியமில்லை. உனக்கு மட்டுமல்ல யாருக்காக வேண்டுமானாலும் நான் செல்ல தான் செய்வேன். நீங்க கிளம்புங்க என்றான் தீனா. அவனுக்கு கையில் கட்டிட்டு இருந்தனர்.
புவனாவை வரச் சொல்கிறேன் என்று துகிரா கதவை திறக்க, புவனா தருணை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். தீனாவை பார்த்து கண்ணீருடன் அவள் செல்ல, தருண் மீனாட்சி வெற்றி தவிர மற்றவர்கள் வெளியே வந்தனர்.
தருண் தோளில் கை வைத்து கட்டிலில் தீனா அருகே அமர்ந்தாள். இவர்களும் வெளியே சென்றனர்.
புவி அழுது கொண்டே, ரொம்ப பயந்துட்டேன். ரொம்ப வலிக்குதா? என்று தீனா கையை பார்த்தாள். பின் மார்ப்பில் இன்னும் வலி இருக்கா? என்று கேட்க, அவன் தலையை மட்டும் அசைத்தான். இன்று மாலையே வீட்டுக்கு போயிருவேன் தீனா சொல்ல, அவள் முகம் வாடியது.
நீ வீட்டுக்கு என்னை பார்க்க வரலாமே? அவன் கேட்க, நான் வர மாட்டேன். அது சரியா இருக்காது என்ற புவனா கீழே இறங்க, அவள் கையை பிடித்த தீனா மாலை வரை பக்கத்தில் இரேன் என்றான்.
அண்ணாவிடம் சொல்லிட்டு வாரேன் என்று அவள் மீண்டும் இறங்க, ப்ளீஸ் இரு என்று போனை எடுத்து தருணுக்கு போன் செய்ய அவன் உள்ளே வந்தான். அவன் சற்று நேரம் இருந்து விட்டு சென்றான்.
மாலினி ஹாஸ்பிட்டலில் நுழைய சக்தியும் அங்கு தான் இருந்தான் அவன் நண்பர்களுடன். அவளை பார்த்த காயத்ரி அவளிடம் பேச, மறை அங்கே வந்தான். அவனிடமிருந்து ராக்கியை வாங்கிய காயத்ரி..நான் கிளம்புகிறேன் என்று வெளியே நின்று கொண்டிருந்த ஸ்ரீயிடம் கண்ணை காட்டினாள். அர்ஜூனை மறைந்து நின்று பார்த்து விட்டு வெளியே சென்று விட்டாள் ஸ்ரீ. கமலி, பாட்டி, அனு அவனுடன் இருக்க காயத்ரி அங்கே வந்து அனுவை வாங்கிக் கொண்டு, நான் ஸ்ரீ, அனுவை வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று அர்ஜூனிடம் சொல்ல, அவன் அமைதியாக இருந்தான். அவர்கள் கிளம்பினார்கள். வேலுவுடன் கவினும் அவன் குடும்பமும் அமர்ந்திருந்தனர்.
மாலினியிடம் மறை பேசுவதை பார்த்த சக்தி, ரெஸ்ட் ரூம் போவதாக நண்பர்களிடம் சொல்லி விட்டு மறைந்து நின்று இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
எதுக்கும்மா? இங்க வந்த? அவனுக்கு ஒன்றுமில்லை. முனியாத்தா வீட்ல தான் உன் புருசன் இருக்கான் என்றான் மறை.
அண்ணா..நான் அவரை பார்க்க வரலை. வெற்றி அய்யாவை பார்க்க வந்தேன் என்றாள்.
எதுக்கும்மா?
என்னண்ணா இப்படி கேட்குறீங்க? மருத்துவ செலவு எவ்வளவு ஆகும்? அம்மா வீட்ல இருந்தாலும் அவங்களுக்கு என்னால செலவு வைக்க முடியாதே? அய்யா இங்க இருக்கிறதா சொன்னாங்க? தீனா சாரை பார்த்துட்டு அய்யாவை பார்த்து வேலை விசயமா பேசலாம்ன்னு வந்தேன்.
இந்த நிலையில நீ எப்படிம்மா வேலை பார்ப்ப? மறை கேட்க, விரக்தி சிரிப்புடன் இப்பொழுது தான் ஆரம்பித்து இருக்கேன் அண்ணா. பிள்ளையை நல்ல படியாக பெற்றெடுக்கணும். வளர்க்கணும். அனைத்துக்கும் பணம் வேண்டுமே? எனக்கு வேலை செய்து பழக்கம் உள்ளது தான் என்றாள்.
அப்ப நீ சின்ன புள்ள தான். ஆனா இப்ப உன் வயித்திலையும் புள்ள இருக்கும்மா?
ஆமாண்ணா. எல்லாமே என்னோட பிள்ளைக்காக தான் செய்யப்போறேன். அவனை நான் பார்த்துப்பேன். அவன் என்னை பார்த்துப்பான் என்றாள்.
நல்லா பேச பழகிட்டம்மா.
பேசுனா தானண்ணா வாழ முடியும் என்று கண்ணீருடன் மறையை பார்த்து, உங்கள குடும்பமா பார்க்க சந்தோசமா இருக்குண்ணா என்றாள்.
காயத்ரி மறையிடம் வந்து, சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. இன்னும் சாப்பிடலை என்று மாலினியை பார்த்து புன்னகைத்தாள். மாலினியால் சிரிக்க முடியவில்லை. கண்ணீருடன் அவள் மறையிடமிருந்து செல்ல, மாலினி நில்லும்மா..என்று அவன் அழைக்க, நான் பார்த்துக்கிறேன் அண்ணா என்று அவள் சென்றாள். அவள் கண்ணீர், அவள் பேச்சு சக்தி மனதில் நெருடலாய் வந்து நின்றது.
வேலு, அவன் நண்பர்கள், அர்ஜூன், தருண் அனைவரும் ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பினார்கள். தீனா ஜோடியும், வெற்றி ஜோடியும் மட்டும் ஹாஸ்பிட்டலில் இருந்தனர்.