அத்தியாயம் 107

ஹலோ சார், என்னாச்சு? அர்ஜூன் கேட்க, டேய்..இங்க என்ன பண்ற? எங்க உட்கார்ந்திருக்க? விழுந்தா என்ன ஆறது? சத்தமிட்டாள் ஸ்ரீ.

ஷ்..என்று அவன் வாயில் கையை வைத்து காட்டிய அர்ஜூன்..சொல்லுங்க சார்?

தேவ் கால் பண்ணி இருந்தான். என்னடா இது? இவ்வளவு கஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு எப்படிடா சிரிக்கிற?

அதுக்கு அழுதுகிட்டே இருக்கணுமா சார். நான் பேசியது உங்களுக்கு எப்படி தெரியும்? அர்ஜூன் கேட்டான்.

கௌதம் கால் கட் பண்ணாமல் வைத்திருந்திருக்கான். கௌதமை பார்த்து முறைத்தான் அர்ஜூன். உள்ளே சென்று போனை எடுத்து பார்த்த கௌதம் பாவமாக சாரி அர்ஜூன் என்று சைகை செய்தான்.

ஸ்ரீ அர்ஜூனை பார்த்தவுடனே அவன் அழுததை கண்டு பிடித்திருப்பாள். காருண்யா, கௌதமையும் அர்ஜூனையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

தேவ்விடம் பேச வந்த சீனு அவன் வெளியே செல்வதை பார்த்து அவனும் வந்திருப்பான். ஹாஸ்பிட்டலுக்கு வெளியே வந்த தேவ்வால் ஓர் அடி கூட நகர மனமில்லாமல் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். பின் கண்ணை துடைத்து விட்டு அர்ஜூனுக்கு போன் செய்ய தான் போனை எடுத்தான். கௌதம் போனை அணைக்காமல் இருக்க அர்ஜூன் பேசிய அனைத்தும் அவன் கேட்டு கலங்கிப் போனான். அவனை மறைந்து பார்த்துக் கொண்டிருந்தான் சீனு.

தேவ் அர்ஜூனிடம் பேசினான். அர்ஜூன் இவனெல்லாம் சும்மா விடக் கூடாது. சொல்லு..அவன் யாரு? என்ன செய்யணும்? கேட்டான்.

சார், அவனை போலீஸ்ல ஒப்படைக்க விட்டு வச்சுருக்கேன்னு நினைக்கிறீங்களா? அவன் என் கையாலும் என் ஸ்ரீ கையாலும் தான் சாவான். நான் நினைத்தால் இப்பொழுதே போலீஸ்ல பிடிச்சு கொடுத்து ஜெயிலுக்கு அனுப்ப முடியும்? ஆனால் யாரெல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கிறோமோ அவனெல்லாம் வெளிய வரானுக. எனக்கு போலீஸ் மேல நம்பிக்கை இல்லை. அவன் செத்தா தான் எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும் என்றான் அர்ஜூன்.

ஆமா அர்ஜூன். சுவாதி அம்மா அவளை கொல்ல வந்துட்டாங்க.

என்ன? அவளுக்கு ஒன்றுமில்லையே?

இல்ல அர்ஜூன். அவங்க ஓ.கே தான் என்றான் வருத்தமாக.

என்ன சார்? உங்கள வெளிய போக சொல்லிட்டாளா?

எப்படிடா?

நாங்க ஒண்ணா படிச்சவங்க. சுவாதியை பற்றி தெரியாதா? ஆனால் என்ன இந்த ஹார்ட் பிராபிளமும் அவள் குடும்பத்தை பற்றியும் தான் தெரியாம போச்சு. ம்ம்..என்று பெருமூச்சு விட்டான்.

எங்க இருக்கீங்க?

வீட்டுக்கு போக மனசில்லாமல் ஹாஸ்பிட்டல் வெளிய தான் இருக்கேன்.

நீங்க ஹாஸ்பிட்டல் உள்ள போங்க. வெளிய போலீஸ் அவள் பாதுகாப்புக்காக தான் இருப்பாங்க பாருங்க என்றான். அவன் சுற்றி பார்த்து விட்டு, ஆமா அர்ஜூன் இருக்காங்க.

மாமா தான் சார். சுவாதி காருவோட ப்ரெண்டாச்சே. அப்படியே விட்டுருவாரா?

ம்ம்..நான் உள்ளே போனால் அக்காவும் தம்பியும் கோபப்படுவாங்களே?

பட்டால் படட்டும். சார், நீங்க அவங்க அம்மாவால மட்டும் தான் பயப்படுறீங்க? ஆனால் எங்க ஊர்ல இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆபத்து. ஏன் இப்பொழுது கூட நான் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதை கூட யாராவது கவனித்துக் கொண்டு இருக்கலாம் என்றான்.

சுவாதி, சீனுவுக்கும் இந்த கொலைகாரனால் ஆபத்து இருக்கு.

அவங்க என்ன செஞ்சாங்க? தேவ் கேட்க, அவங்க எங்க ஊரு. அதான் பிரச்சனை. எங்க ஊர்ல சிலர் மட்டும் தான் அவங்கவங்க வேலையை மட்டும் பார்ப்பாங்க. ஆனால் சிலர் மத்தவங்களுக்கு உதவ பார்ப்பாங்க.

சுவாதி ஸ்ரீ மண்டபத்துல வச்சு ஹக் பண்ணா? உங்களுக்கு நினைவிருக்கா? அவளும் எங்க லிஸ்ல இருப்பா? நீங்க தான் பார்த்துக்கணும்.

அப்ப கௌதம்?

சார் இப்பொழுதைக்கு ஊருக்கு வர மாட்டார். நான் யாரையும் விடுற மாதிரி இல்லை. பிரச்சனை முடிஞ்சு எல்லாமே சரியான பின் தான் விட முடியும் என்றான் அர்ஜூன் கௌதம் காருவை பார்த்து.

ஹே, என்னால முடியாது? நான் இப்பவே கிளம்புறேன். நான் என் அம்மாவை பார்த்துக்கணும். அம்மா தனியா இருப்பாங்க கௌதம் சொல்ல, காருவும் நான் சுவாதியை பார்க்க போகணும் என்றாள்.

சொன்னா கேளுங்க. உன்னை யாரு இங்க வர சொன்னது? இதுல சாரையும் கூட்டுட்டு வந்துருக்க? என்று காருவிடம் கூறிய அர்ஜூன், தேவ் சார் கௌதம் சார் அம்மாவை உங்க வீட்டுக்கு வர வச்சுக்கோங்க. அவங்க தனியா இருக்கிறதும் நல்லதில்லை.

அர்ஜூன்..அப்ப என்னோட அப்பா? காருண்யா கேட்டாள்.

ஏய், அவர் தான் இந்த கேஸ்ல முழுசா இருக்கார். அவருக்கும் ஆபத்து தான். அவரை எப்படி தனியா விடலாம்?

ஏன் காரு, உனக்கு சித்தி கிடைச்சா ஏத்துப்பியா? அர்ஜூன் கேட்க, லூசாடா நீ? எந்த நேரத்துல என்ன பேசுற?

பாவம்டி என் மாமா?

அதுக்கு நீ மாமா வேலை பார்க்கப் போறீயா?

பசங்க சேர்ந்து பெற்றோர்களை சேர்த்து வைப்பது கேள்விபட்டிருக்கியா? உன்னோட அம்மா என் மாமாவுக்கு சூட்டே ஆகலை. ஆனால் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் செம்மையா சூட் ஆவாங்கடி..என்றான்.

டேய்..வேண்டாம்டா. அப்பாவுக்கு தெரிஞ்சா கோபப்படப் போறார்? இத்தனை வருசமா அம்மாவையே நினைச்சுக்கிட்டு இருந்தார்.

இன்னும் அவர் உன் அம்மாவையே நினைச்சு கஷ்டப்பட சொல்றியா? அவரும் மனுசன் தான்டி. இன்னும் அவர் தனியா கஷ்டப்படணும்ன்னு நினைக்கிறியா?

இல்லைடா. அவர் ஒத்துக்க மாட்டார்டா.

அவரிடம் யார் சொல்ல சொன்னா? நீ சொல்லு..என்றான் அர்ஜூன்.

பணத்துக்காக இல்லாம உண்மையான பாசமா இருக்கணுமே? அப்படி யார் இருப்பாங்க? கேட்டாள் காருண்யா.

இருக்காங்க காரு.

அர்ஜூன், கதை எங்கேயோ போகுது? தேவ் கேட்டான்.

சார், நீங்க சுவாதிய பார்த்துக்கோங்க என்று சொல்ல, நான் உன் மாமா பொண்ணிடம் பேசணும்? என்றான் தேவ்.

அர்ஜூன் ஸ்பீக்கரில் போட்டான். பேசுங்க சார் என்றான் அர்ஜூன்.

ஏம்மா, நீங்க கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற எல்லாத்தையும் எனக்கு அனுப்புங்க. சுவாதி சரின்னு சொன்னா. உடனே நீங்க ஃபாரின் போக ஏற்பாடு செய்கிறேன் என்றான் தேவ். காருண்யா அமைதியாக இருந்தாள்.

சார், என்னை மன்னிச்சிருங்க. அவள் மேல இருக்கிற அக்கறையில ரொம்ப உங்களை பேசிட்டேன்.

அதை விடும்மா. அவள் பேசியதா தான் உன்னோட அப்பா பேசினார். நீயும் போகப்போறீயா? இல்லை அவங்க மட்டுமா? நீ உன் அப்பாவுடன் இருக்க போகிறாயா? கேட்டான் தேவ்.

சார், அவங்கள மட்டும் எப்படி தனியா அனுப்புறது? நானும் போவேன். அப்பாவுக்கு தான் மாமா ஏதோ ஏற்பாடெல்லாம் செய்றானே? பார்க்கலாம். அவருக்கு யாராவது செட் ஆனா கண்டிப்பா நானும் கிளம்பிடுவேன் என்றாள் அவள்.

சரிம்மா. ஆனால் ஒரே ஒரு கண்டிசன். உங்களுக்கு துணையா கௌதம் வருவான் என்றான். அவன் அருகே இருந்ததால் கேட்டிருக்கும்.

காருண்யாவிடம் போனை பிடுங்கி, டேய்.. மச்சான். அம்மாவை யார் பார்ப்பாங்க? ஃபாரினுக்கு நானா? நோ..டா முடியவே முடியாது என்றான் கௌதம்.

கௌதம், அம்மாவும் உங்களுடன் தான் வருவாங்க. சீனுவால் பார்த்துக்க முடியாது. அவன் சின்ன பையன். ஃபாரின்ல மெடிக்கல் காலேஜ் ரொம்ப கண்டிப்பா தான் இருக்கும். அதனால் வீட்ல வந்து அவங்களுக்கு வேலை பார்க்க முடியாது. அம்மாவையும் கூட்டிட்டு போங்க. உனக்கு டிரான்ஸ்பர் வாங்கி தாரோம். எனக்கான வாய்ப்பை உனக்கு தாரேன் என்றான் தேவ்.

என்னடா சொன்ன? வாய்ப்பை எனக்கு குடுக்க போறியா? டேய்..அது உன்னோட டிரீம். ஏன்டா, எனக்கு என்னோட கனவு பெருசா தெரியலைடா கௌதம். சுவாதியையும் சீனுவையும் நல்லா பார்த்துக்கோ என்று பேச்சை நிறுத்தினான். போனில் கை வைத்து மறைத்தவன் விசும்பி விசும்பி அழுதான். அவன் பேசியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சீனு அழுது கொண்டே தேவ் முன் வந்து அவனை அணைத்துக் கொண்டான். தேவ் போனை தவற விட்டான். தேவ் அழும் சத்தம் கேட்க,

டேய்..அழுறியாடா..வேண்டாம்டா கௌதம் கண்கலங்கினான். காருண்யா போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

சீனு பேசுவது தெளிவாக கேட்டது. சாரி மாமா. எனக்கு பயம் அவ்வளவு தான் மாமா. நீங்க இவ்வளவு கஷ்டப்படுவீங்கன்னு நினைக்கலை. அக்காவுக்கு நேரம் வேண்டும்ன்னு தோணுச்சு மாமா. அவளது இதயத்துல பிரச்சனை இருக்குன்னு தெரியாது. அந்நேரத்தில் நீங்களும் வேறொரு பொண்ணுடன் நெருக்கமாக பேசிக்கிட்டு இருந்தீங்கல்லா. அக்காவுக்கு ஏதாவது ஆகிடுமோ? இல்லை மத்த பசங்க மாறி அக்காவை ஏமாத்திடுவீங்களோன்னு பயந்துட்டேன் மாமா. இப்ப தான் மாமா முதல் முறையாக இங்கே வந்திருக்கேன். அக்காவை பார்க்க கூட வந்ததில்லை என்று சீனு தேவ்வை அணைத்து அழுதான்.

அவளுக்கும் உங்களை பிடிக்கும். ஆனால் எங்களிடம் ஏதுமில்லை. அதனால் பயப்படுகிறாள். எல்லாருக்கும் புரளி பேச தான் தெரியும். காயப்படுவர் நிலையை யாருமே நினைத்து பார்ப்பதேயில்லை. அவள் நல்ல நிலைக்கு வரும் வரை நீங்கள் அவளுக்காக காத்திருப்பீங்களா? அவள் பக்கம் யாரும் வர விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் சீனு.

தேவ் அவனை அணைத்து, யார் என்ன பேசினாலும் அவளுக்காக எத்தனை வருசமானாலும் ஏன் சாகும் வரை காத்திருப்பேன்டா. என்னால யாரையும் நினைக்க முடியாதுடா என்றான் தேவ்.

“தேங்க்ஸ் மாமா”. எங்க பிராமிஸ் பண்ணுங்க? பிங்கி பிராமிஸ் என்று விரலை நீட்ட, மாமா இப்படி செய்யுங்க என்று தேவ் விரலுடன் கோர்த்து சிரித்தான் சீனு. மீண்டும் தேவ் சீனுவை அணைக்க, மாமா நாம இப்படி நின்றால் எல்லாரும் நம்மை தப்பா நினைப்பாங்க என்றான் அவன். தேவும் சிரித்தான்.

ஹலோ மாமனும் மச்சானும் சேர்ந்துட்டீங்க? எவனாது போனை எடுங்கடா கௌதம் சொல்ல, அங்கே போன் அணைக்கப்பட்டது. டேய்..தேவ் என்னை மறந்துட்டியேடா? கௌதம் சொல்ல, சார் போனை அப்பொழுதே வச்சுட்டாங்க என்றாள் காருண்யா. அனைவரும் சிரித்தனர்.

அர்ஜூன்..நீ சொல்லு. என்னோட அப்பாவுக்கு யாரு சரியா இருப்பா. நீ தேர்ந்தெடுத்து விட்டாயே?

வேற யாரு? நந்து அம்மா தான்.

என்னது அவனா? எனக்கு அவன் அண்ணனா? என்னால ஏத்துக்க முடியாது. அவன் அமைதியா இருந்தே காரியத்தை சாதிப்பான் என்று புலம்பினாள் காருண்யா.

அப்பா கிட்ட நடக்காது டா? என்றாள் அவள்.

அப்படியா? பார்க்கலாமா? சவாலா? அர்ஜூன் கேட்க, இந்த ஆம்பளைங்கள நம்ப முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று நழுவினாள்.

என்ன பயப்படுறியா?

இல்ல. அவனுக்கு யாராவது பயப்படுவாங்களா? அவனையெல்லாம் தூசிய தட்டுற மாதிரி தட்டிருவேன்ல என்றாள் காருண்யா.

இரு. அங்க ஒரு பிள்ளையார் சுழிய போடலாம் என்று நந்துவிற்கு போன் செய்தான் அர்ஜூன்.

என்னடா, இந்த நேரத்தில்? நந்து கேட்க, எங்க இருக்கடா?

இன்று மேகா வீட்ல தான். அவ அப்பா தான் ஸ்ரிட்டா சொல்லிட்டாரே..என்றான் நந்து.

அப்ப அம்மா?

அம்மா வீட்ல தான் இருக்காங்க.

தனியாவா இருக்காங்க?

ஆமா, அதுனால என்னடா?

ஏய், நான் எத்தனை முறை சொன்னேன். அந்த கொலைகாரன் உங்களையும் பார்ப்பான். ஏன்டா, அம்மாவை தனியா விட்ட? பயமா இருக்குடா. முதல்ல வீட்டுக்கு போ என்றான் அர்ஜூன்.

என்னடா பயமுறுத்துற? நந்து கேட்க, நிஜமா தான் சொல்றேன் நந்து. நான் சம்பந்தப்பட்ட எல்லாரும் பாதுகாப்பா இருக்காங்க. உன்னையும் அம்மாவையும் தவிர. இதுக்கு தான் நீயும் வான்னு சொன்னேன்.

சரி, நான் என்னோட மாமா நம்பர் அனுப்புகிறேன். அவர் நம்பரை வச்சுக்கோ. ஏதாவது பிரச்சனைன்னா அவரை சென்று பார் என்றான் அர்ஜூன்.

கமிஷ்னரா? என்னை உள்ளே விடுவாங்களா?

அர்ஜூன் பெயரை சொல்லு விடுவாங்க என்றான் அர்ஜூன்.

உன்னோட பகுமானம் தாங்க முடியலடா என்றான் நந்து.

ஓ.கே நந்து பார்த்துக்கோ. அம்மாவை முதல்ல போய் பாரு. மேகா அப்பா பாதுகாப்புக்கு செக்யூரிட்டி கார்டு இருக்காங்க. ஆனால் உங்களுக்கு இல்லை. நான் மாமா நம்பர் அனுப்புகிறேன் என்று அர்ஜூன் அனுப்பி விட்டு போனை வைத்தான்.

எப்படிடா? ஆள் ஏதும் செட் பண்ணீட்டியா? காருண்யா கேட்க,

ஏய்..உண்மையாகவே அந்த கொலைகாரன் கண்ணு அவங்க மேலேயும் இருக்கு. அந்த பயம் வேற..ஏற்கனவே அதுக்கு தான் என்ன செய்யன்னு யோசிச்சேன். நீ உன்னோட அம்மா பத்தி சொன்னவுடனே எனக்கு நந்து அம்மா மாமாவுக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு. எனக்கு தெரிஞ்சே அவரு யாருமில்லாம ரொம்ப கஷ்டப்பட்டார். நான் கூட ரெண்டு மூணு வருசமா தான் பிரிஞ்சு இருந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் பத்து வருசமா எப்படி தானோ? அது கூட பத்து வருசமா தானான்னு சரியா தெரியலன்னு அர்ஜூன் காருண்யாவை பார்த்தான். அவள் கண்ணீருடன் என்னோட அப்பா இதுக்கு மேல தனியா இருக்கக் கூடாது அர்ஜூன். நான் ஏதாவது செய்யணும்ன்னா கூட நானும் அவங்க சேர்ந்து இருக்க உதவுகிறேன் என்றாள்.

நந்து வீட்டிற்கு சென்று பார்க்க அங்கே அவன் அம்மா இல்லை. அவன் வீட்டை சுற்றி சுற்றி பார்த்து விட்டு அர்ஜூனுக்கு போன் செய்தான். அர்ஜூன் ஸ்ரீ அறைக்கு சென்று விட்டான். அதனால் சிக்னல் இல்லை. நந்து பதட்டமானான். சோபாவில் காகிதத்துடன் போன் ஒன்று இருந்தது. அதை எடுத்து பார்த்தான். உன் அம்மா வேணும்னா வீட்டில் உள்ள முக்கியமான விலை போகக் கூடிய பொருட்களை எடுத்து விட்டு போன் போடு என்றிருந்தது. யோசித்த நந்து கமிஷ்னருக்கு தான் போன் செய்தான். அர்ஜூன் சொன்னது போல் அவன் பெயரை சொன்னவுடன் அவரும் உதவினார்.

லோக்கல் ரௌடி பசங்க..நந்து அம்மாவை பணத்திற்காக கடத்தி வச்சிருந்தாங்க. அவர்களை அவரே நேரே வந்து பிடித்தார். நந்து பயந்து அம்மாவை பார்த்து பதறினான். கமிஷ்னர் தான் அவனிடம் வந்து பதறாதப்பா.. அவங்களுக்கும் உனக்கு ஏதோன்னு பயப்படப் போறாங்கன்னு அவனை சமாதானப்படுத்த நந்து அம்மாவின் கண்கட்டை அவிழ்த்தனர்.

அவர் பயத்துடன் கமிஷ்னரை பார்க்க, உங்களுக்கு ஒன்றுமில்லை. பயப்படாதீங்க. உங்க பையன் இருக்கான் பாருங்க என்றவுடன் தான் நந்து அம்மா அவனை பார்த்து அழுதார்.

ஏன்டா? என்னை விட்டுட்டு போயிட்ட? பயமா இருந்ததுடா கண்ணா. உனக்கு ஒன்றுமில்லையே? கேட்டார் அவர்.

இல்லம்மா. எனக்கு ஒன்றுமில்லை. என்னை மன்னிச்சிருங்கம்மா என்று இருவரும் கமிஷ்னருக்கு நன்றி சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு அழைத்து வந்தான். வீட்டிற்கு வந்தும் அவன் அம்மா நடுக்கம் குறையலை. அவன் அம்மாவிடம் பேசிய பின் தான். அவர்கள் இரவு பத்து மணிக்கே வந்து அம்மாவை துக்கிட்டு போயிருக்காங்கம்ன்னு சொன்னாங்க. இப்ப மணி அதிகாலை நான்காகிறது. இதுவரை அவர்களுடன் இருந்தீங்களா? ரொம்ப பயந்துட்டீங்களா? என்று அழுதான்.

அவன் அழுகையை பார்த்த அம்மா..இல்லப்பா. எனக்கு ஒன்றுமில்லை. நான் நல்லா தான் இருக்கேன் என்று நந்து சமாதானப்படுத்தி அவனை படுக்க வைத்து அவரும் தூங்கினார்

அர்ஜூன் நந்துவிடம் பேசிட்டு ஒரு நாள் கண்டிப்பா நான் நினைத்தது நடக்கும் என்று காருண்யாவை பார்த்து சொல்லி விட்டு போய்..தூங்குங்க என்று ஸ்ரீயை பார்த்தான்.

இருடா..உன்னை என்ன செய்கிறேன் பாரு என்று மனதில் நினைத்த காருண்யா..ஸ்ரீ இங்க பாரு. இந்த அர்ஜூனை நம்பாத. நீங்க எல்லாரும் சேர்ந்து படித்த போது அவ..பேரு என்று யோசித்த காருண்யா.. ஹா.. நியாபகம் வந்துருச்சு.

பிரகதின்னு ஒருத்திய பார்த்துகிட்டே இருப்பானாம். அவனுக்கு உன்னை விட அவளை தான் பிடிக்குமாம். பாவம் அந்த பொண்ணு நீ காதலிச்ச அகிலை காதலித்தாளாம் என்று அவள் போட்டு விட, ஸ்ரீ முகம் மாறியது.

அர்ஜூன் எழுந்து ஸ்ரீ அவ சொல்றதை நம்பாத. நான் உன்னை விட யாரையும் நினைத்தது கூட இல்லை. நான் உத்தம புருசன் என்றான். உள்ளே சென்ற ஸ்ரீ தலையணையை எடுத்து வந்து அவன் மீது தூக்கி எறிந்து..நீ இங்கேயே கிட என்று உள்ளே செல்ல.

என்னடா..எப்படி? என்று காருண்யா காலரை தூக்கி விட்டாள். கௌதம் தலையில் அடித்துக் கொண்டான்.

எனக்கு ஸ்ரீ பற்றி தெரியும்? இப்ப பாரு என்று அவன் குதித்து பால்கனி கம்பியை பிடித்து தொங்க..டேய்..அதுக்கு இப்படியா பண்ணுவ? என்ற காருண்யா..ஏய்..ஸ்ரீ வெளிய வா..என்று சத்தமிட்டாள்.

ஸ்ரீ அர்ஜூனை பார்த்து பதறி..என்னடா பண்ற? என்று அவள் குனிந்து கையை பிடித்து இழுக்க அவளால் முடியவில்லை. அர்ஜூன் வா..என்று அழுதாள்.

ஸ்ரீ கையை விட்டேன் அர்ஜூன் சாதாரணமாக சொல்ல ஸ்ரீ கையை எடுத்தாள். அவன் குதித்து மேலேறி வந்தான். அவனை அடித்துக் கொண்டு ஏன்டா, இதிலெல்லாம்மா விளையாடுறது? உயிரே போச்சு என்று கை வலிக்க வலிக்க அவனை அடித்தாள்.

காருண்யாவை கௌதம் உள்ளே இழுத்து சென்று, என்ன வேலை பார்க்கிற? கிளம்பு..இந்தா பக்கத்து அறை சாவி என்று கொடுத்தான்.

உங்க வீடு மாதிரி பேசுறீங்க சார்?

உன்னோட மாமா தான் முதல்லே கொடுத்தான். அப்ப கோபமா இருந்தான்ல. என்னை கொடுத்துட்டு வரச் சொன்னான். அதான் நீயே வந்துட்டியே? போ..என்றவன் இரு..என்று பக்கத்து அறை கதவை திறந்து சன்னலை சாத்தி வைத்து திரையை மறைத்து விட்டு பாதுகாப்பாக அறையை தயாராக்கி விட்டு ஓய்வெடு என்று அவன் வெளியே வந்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் சென்ற பின் படுக்கையில் பொத்தென விழுந்து, “லவ் யூடா க்யூட் டாக்டர்” என்று மகிழ்ந்தாள். இருவரும் அறைக்குள் சென்றது. கதவு திறந்திருக்க அவன் செய்தது; சென்றது அனைத்தும் வெளியே தெரிய பாட்டி சிரிப்புடன் சென்றார்.

அர்ஜூனை ஸ்ரீ அடிக்க, அர்ஜூன் அவளை உள்ளே அழைத்து சென்று பால்கனி கதவை தாழிட்டான்.

ஸ்ரீ..நீ அந்த ஆடை உடுத்தலையா?

எதுக்கு? கொன்றுவேன் பார்த்துக்கோ. கதவை திறக்கிறேன் உன் அறைக்கு சென்று விடு என்றாள் ஸ்ரீ.

நான் சாப்பிடவேயில்லை என்றான் அர்ஜூன். அவளுக்காக தாரிகா எடுத்து வந்த உணவை அவனிடம் ஸ்ரீ கொடுத்தாள்.

நீயும் சாப்பிடலையா? மணிய பாரு மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இனி என்ன சாப்பிடுவது? அர்ஜூன் கேட்டான்.

உனக்கு தான் பசிக்குதே?

நாம சேர்ந்து சாப்பிடுறதா இருந்தா சாப்பிடுறேன். நீ தான் எனக்கு ஊட்டி விடணும் என்றான் அவன்.

நீயென்ன அனுவா? அவள மாதிரி கேக்குற?

சரி. நான் சாப்பிடலை என்றான் தலையை திருப்பிக் கொண்டு.

ஏதோ வேலையெல்லாம் பயங்கரமா பாக்குற? ஸ்ரீ கேட்க,

மாமாவை பத்தி கேட்கிறாயா?

எல்லாத்தையும் தான் சொல்றேன் என்றாள் அவனருகே சாப்பாட்டை எடுத்து வந்து ஸ்ரீ அர்ஜூனுக்கு ஊட்டி விட, நீயும் சாப்பிடு என்று அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான். சாப்பிட்டு விட்டு கையை கழுவி விட்டு ஸ்ரீ அருகே வந்தான்.

நீ ஏன் இன்னும் தூங்கலை ஸ்ரீ?

தூங்க முடியலை.

எதுக்கு?

தெரியலை. சரி, நான் தூங்கவா? கேட்டான்.

தூங்கு. உன் அறைக்கு செல்லேன். உன் வீட்டில் இருந்ததால் முதலில் ஏதும் தெரியலை. பெரியவங்க எல்லாரும்.. பாட்டி வேற இருக்காங்க. தப்பாகிடும் அர்ஜூன்.

என்னை பற்றி எல்லாருக்கும் தெரியும் ஸ்ரீ. இந்த ஸ்ரீ இல்லாமல் அர்ஜூன் இல்லை.

ப்ளீஸ் அர்ஜூன். அப்படி மட்டும் சொல்லாத.

ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு. நான் தூங்கணும். வா என்று அவளை அணைத்து அவன் படுக்க, ப்ளீஸ் அர்ஜூன் என்று அவனை விலக்கி விட்டு எழுந்து அனுவின் மறுபக்கம் படுத்துக் கொண்டாள்.

அர்ஜூன் அவளை பார்த்து விட்டு, அனு மீதும் ஸ்ரீ மீதும் கையை போட்டுக் கொண்டு..இதுவும் கூடாதா? கேட்டான். அவள் அமைதியாக அர்ஜூனை பார்த்தாள். நான் தூங்குகிறேன் என்று அர்ஜூன் கண்ணை மூடினான்.

அவன் தூங்கிய பின் ஸ்ரீ அவனருகே வந்து அர்ஜூன் கன்னத்தில் முத்தமிட்டு வந்து படுத்துக் கொண்டாள். காருண்யாவிற்கும் அர்ஜூனுக்கும் ஒன்றுமில்லை என்று ஸ்ரீயும் கௌதமும் புரிந்து கொண்டனர். கௌதம் நன்றாக தூங்கினான். ஆனால் ஸ்ரீக்கோ தூங்க முடியவில்லை. அர்ஜூனையும் அனுவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான்கு மணிக்கு பின்னே படுத்த அர்ஜூன் நித்திரையில் இருக்க, அடுத்த இரண்டு மணி நேரத்திலே எழுந்து தயாரானாள் ஸ்ரீ. அவளும் தாரிகாவும் காபியை குடித்து விட்டு கமலியிடமும், பாட்டியிடமும் கூறி விட்டு வெளியே சென்றனர். அர்ஜூனும் அனுவும் தூங்குவதை பார்த்து விட்டு கீழே சென்றார் அஞ்சனா.

ஸ்ரீயும் தாரிகாவும் பூட்டியிருந்த பாழடைந்து செடி கொடிகளால் சூழ்ந்த கோவில் ஒன்றின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அண்ணி..போகாதீங்க என்று ஜானு கத்திக் கொண்டே அவர்களை தாண்டிச் செல்ல அவளை பார்த்து அவள் பின் சென்றனர் இருவரும். அவர்கள் பின் ஆதேஷூம் ஓடி வந்தான். துகிரா தான் அனைவர் முன்னும் ஓடினாள். அங்கிருந்த பெரிய கேட்டை திறந்து உள்ளே சென்றாள். அதனுள் பெரிய மதிற்சுவர்..பெரிய மைதானம் போன்ற அமைப்புடன் சுற்றிலும் உயரத்திற்கும் கம்பி வலை அடித்து, சற்று தள்ளி பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. மதிற்சுவற்றின் கீழே குழி தோண்ட பட்டு இருந்தது. அச்சுவற்றில் தொங்கிய கயிற்றை பிடித்து ஏறினாள் துகிரா.

அண்ணி..அங்கே வந்த ஜானு அண்ணி வேண்டாம் என்று மூச்சிறைத்து நிமிர்ந்து பார்த்தாள். துகிரா அங்கு இல்லை. மதிற்சுவர் பின்னிருந்தது பெரிய அடர்ந்த காடு. அனைத்து கொடூரமான மிருகங்களும் வசிக்கும் இடம். ஸ்ரீயும் அர்ஜூனும் சிங்கத்திடம் மாட்டிய அதே காடு.

ஜானு அழுது கொண்டே நிற்க, ஸ்ரீ அவளிடம் வந்து கேட்டாள். சாம்சங்கை காணோம். தேடினோம். இந்த பக்கம் ஓடி வந்தது. அண்ணி அதை பிடிக்க, என்ன இடம் என்றும் பாராமல் குதித்து விட்டாள். அக்கா, வேட்டை மிருகங்கள் இருக்கும் காடு என்று மூவரிடம் ஜானு சொன்னாள்.

துகி, உன்னை என்ன செய்றது? என்று ஆதேஷ் சினமுடன் துகி..துகி…என சத்தமிட்டான். ஸ்ரீ அவனை பார்த்து, நீங்க இருங்க. நான் பார்க்கிறேன் என்று அவள் கயிற்றை பிடித்து ஏற, ஆதேஷூம் ஏறினான்.

இருங்க நானும் வாரேன் என்று தாரிகா சொல்ல, அவளை பார்த்த ஸ்ரீ நோ தாரி, நீ ஜானுவிடம் இரு என்றாள்.

நானும் வருவேன் என்று அவள் சொல்ல, ஜானு சொன்னது புரியலையா? மிருகங்கள் இருக்கும் என்றாள். ஆதேஷூம் அவளை பார்த்து, நாங்க அவளை கூட்டிட்டு வாரோம் என்று சொல்ல,

எது இருந்தாலும் பரவாயில்லை. ஸ்ரீயுடன் தான் இருப்பேன் என்று பிடிவாதமாக ஏறினாள். ஜானு பிரதீப்பிற்கு போன் செய்து சொல்ல, அவன் கத்தினான். அவன் ஊரிலே இல்லை. உடனே அவன் அர்ஜூனுக்கு போன் செய்ய, அவன் போனை எடுக்கவில்லை. அபிக்கு போன் செய்து அவன் விசயத்தை சொல்ல, அபி தீனாவிடம் கூறி விட்டு அர்ஜூனை பார்க்க ஓடினான்.

குதித்த துகிரா சாம்சங்கை தேடினாள். அங்கே வந்தது ஓர் ஓநாய். பயங்கர கருமையுடனான கண்கள், கூரான பற்கள். அது பார்க்க நாய் போல் இருந்தாலும் பருமனான தடித்த பெரிய ஓநாய். அதை பார்த்த துகிரா நாய் என்று நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தாள். மதிற்சுவறில் ஏறிய ஸ்ரீ அதை பார்த்து துகிரா அது ஓநாய். நில்லு மெதுவாக பின்னே வா..என்று ஸ்ரீ சொல்ல ஆதேஷ் உள்ளே குதித்தான்.

ஏய்..எதுக்குடா குதிச்ச? ஸ்ரீ கத்தினாள். அது உர்..உர்ரென்ற சத்ததுடன் துகிராவை நோக்கி ஓடி வந்தது. ஆதேஷ் அவளருகே சென்று அவளை பிடித்து இழுத்தான்.

ஆது, அந்த மரக்கட்டையை எடு என்றாள் ஸ்ரீ. ஆனால் அது கிட்டத்தட்ட இருவர் பக்கமும் வந்தது. ஸ்ரீ உள்ளே குதித்து அந்த கட்டையை எடுத்து ஆதேஷ் பக்கம் வீசினாள். அவன் அதை எடுத்து அடிக்க வர..அது சீறியது. பயத்துடன் கைகள் நடுங்க இறுக்கமாக மரக்கட்டையை பிடித்திருந்தான். துகிரா அவன் பின் நின்று கொண்டாள். அது ஆதேஷை தாக்க வந்த நேரம் அவன் கட்டையை மேல்நோக்கி அடிப்பது போல் பிடித்து துகியை பார்த்தான். அவள் பயத்துடன் அவனை பிடித்திருந்தாள். ஓநாய் அவர்கள் மீது பாய்ந்தது. சட்டென விலகிய ஆதேஷ் கட்டையை வலப்பக்கமாக சுழற்றி இரு கைகளையும் வைத்து அதனை அடித்தான். ஓநாய் கீழே விழுந்தது. ஆனால் வீறிட்டு வேகமாக எழுந்தது. ஆது..சீக்கிரம் அதை கொடுத்துட்டு துகியுடன் மரத்தில் ஏறு கத்தினாள் ஸ்ரீ. அவர்கள் மரத்தில் ஏறினர்.

அந்நேரம் கீழே ஸ்ரீ அருகே விழுந்தாள் தாரிகா. ஏய்..தாரி, நீயுமா? என்று கோபமாக அவளை பார்த்தாள் ஸ்ரீ. ஆதேஷ் கட்டையை தூக்கி எறிய, அதை பிடித்த ஸ்ரீ தாரி, சீக்கிரம் இந்த மரத்தில் ஏறு என்று கீழே நின்றாள். தாரிகா மெதுவாக செல்ல, ஓநாய் அவர்களிடம் பாய்ந்து வந்தது. மெதுவாக அமர்ந்த ஸ்ரீ கை நிறைய மணலை எடுத்தாள். கட்டையை ஒரு கையிலும் மணலை ஒரு கையிலும் வைத்து, சீக்கிரம் ஏறு என்று கத்தினாள் ஸ்ரீ.

அவள் ஏறவும் ஓநாய் ஸ்ரீ அருகே வரவும் சரியாக இருந்தது. அவள் மரத்தை ஒட்டி அமர்ந்திருந்தாள். ஓநாய் அருகே வர, கையிலிருந்த மணலை அதன் கண்ணில் தூவி வேகமாக ஏற, அப்பொழுதும் விடாமல் ஓநாயும் மரம் ஏறியது. தாரிகா மேலிருந்த கிளைகளை ஒடித்து அதன் மேல் போட்டுக் கொண்டிருக்க, ஆதேஷூம் துகிராவும் கிளைகளை தூக்கி அதன் மீது எறிய அது மேலேறாமல் கீழே விழுந்தது. ஸ்ரீ கையில் கட்டையை வைத்திருந்தாள்.

ஜானு வெளியே கம்பி வலையின் மூலம் பார்த்து அழுது கொண்டிருந்தாள். முடிவெடுத்தவளாய் அர்ஜூனுக்கு போன் செய்தாள். அதே நேரம் வேகமாக ஓடி வந்த அபி, அர்ஜூன்..அர்ஜூன்..அர்ஜூன்..என்று கத்தினான். நம் அர்ஜூன் அப்பொழுது தான் அனுவை தூக்கிக் கொண்டு அறையிலிருந்து கீழே வந்தான்.

என்னடா ஆச்சு? இப்படி வந்திருக்க? உள்ள வா..என்று அபியை அழைத்தான் அர்ஜூன்.

தாரிகா அம்மா அனுவை வாங்க, அர்ஜூன்..ஸ்ரீ, தாரிகா, ஆதேஷ், துகிரா அந்த காட்டுக்குள்ள இருக்காங்கலாம் என்றான்.

என்ன? காடா? என்று கௌதம் கேட்க, என்னடா சொல்ற? என்று அபி சட்டையை பிடித்தான் அர்ஜூன். ஜானு தான் மாமாவிடம் சொல்லி இருப்பா போலடா. சீக்கிரம் வா. நான் வேலு அண்ணா ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன்.

ஜானுவிடமிருந்து அர்ஜூனுக்கு போன் வர, அர்ஜூன் பதறி போனை எடுத்தான். அது துகிராவின் போன்.

ஜானுவா? அந்த காட்டுல..என்று பதட்டமாக அவன் கேட்க, அண்ணா..காட்ல தான். அண்ணா…சீக்கிரம் வாங்க. ஓநாய் கிட்ட மாட்டிங்கிட்டாங்க என்று அழுதாள். அண்ணா..அதுவும் மரம் ஏற முயற்சி செய்யுது. அவங்க மரத்துக்கு மேல தான் இருக்காங்க. பயமா இருக்கு அண்ணா என்று கதறி அழுதாள்.

இப்பவே வந்துடுறேன் ஜானு என்று போனை வைத்த அர்ஜூன். முகம் முழுவதும் படபடப்பு, பயம், வியர்வை கோர்த்து இருக்க, அபி சீக்கிரம் ஊர்க்கார பசங்க எல்லாருக்கும் விசயத்தை சொல்லி வர வை. மிருகத்தை விரட்ட, உன் மாமா வைத்திருந்த பொருட்களை எடுத்து வா.

பிரதீப் அண்ணா..போயிருக்காரா?

அவர் ஊர்ல இல்லை. அர்ஜூன் அங்க யாருமே இன்னும் போகலை. போ..அபி சீக்கிரம் என்று அர்ஜூன் கத்தினான். அனைவரும் வெளியே வந்தனர்.

பிளாக் தயாராடா? அஞ்சே நிமிசத்துல போகணும். எவ்வளவு வேகமா போக முடியுதோ போ..சீக்கிரம் என்று கயிற்றை அவிழ்த்து அதில் ஏறினான். கவின் அங்கு வர, அர்ஜூன் கவினிடம் கையை நீட்டினான்.

டேய்..பிளாக் டா?

என்ன பிளாக்? மச்சானை ஏத்திக்கலாம்ல? அர்ஜூன் முறைப்புடன் வினவ, அது கனைத்தது. கவினும் அர்ஜூனுடன் ஏறினான். நல்லா பிடிச்சுக்கோடா என்று கவினிடம் அர்ஜூன் சொல்ல, மின்னல் வேகத்தில் அவர்கள் சென்றனர். கவினுக்கு பிளாக்கை ரொம்ப பிடிக்கும். அவன் தான் அர்ஜூன், வேலுவை தவிர யாரையும் பக்கம் விடவே மாட்டேனே?

அகில் அங்கு வர, நானும் வாரேன் என்று கௌதம் அவனுடன் ஏற, காருண்யாவும் ஏறினாள்.

ஏய்..நீ எதுக்கு வர்ற? அவன் சத்தமிட, அகில் அவர்களிடம் நீங்க எல்லாரும் யாரு? இங்க எப்ப வந்தீங்க? கேட்டான். காருண்யா அகிலிடம் பேசிக் கொண்டே வந்தாள். கௌதம் காதை பொத்திக் கொண்டே வந்தான்.