வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-21
395
ஹாய்…ப்ரெண்ட்ஸ்….
இனிய இரவு வணக்கம்…
இதோ உங்களுக்கான எபிசோடு 21
கவின் செல்ல, ஸ்ரீயும் நித்தியும் பின் தொடர்ந்தனர்.சைலேஷ் வகுப்பறைக்கு வந்தான்.அவருடன் முதல்வரும் வந்தார். அங்கே அகிலும், அபினவும் அந்த பெண்களுடன் இருந்தனர். தாரிகாவை பற்றி அவர்களிடம் கேட்டு விட்டு, அந்த பெண்கள் அருகே வந்த சைலேஷ் கோபமானான். அனைவரையும் பொதுவாக திட்டி விட்டு, முதல்வரிடம் என்னுடைய அறைக்கு இவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டு, ஒரு பெண்ணை மட்டும் நிற்க வைத்தான்.வகுப்பு மாணவ மாணவிகள் வெளியே நின்று வேடிக்கை பார்த்தனர்.
அந்த பெண் அருகே வந்தவன்,நீ எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய்? அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று உனக்கு தெரியாதா? நீ செய்த இந்த செயலால் அவள் மீண்டும் வருத்தப்படுவாள்? யோசிக்கவே மாட்டாயா? உரிமையுடன் கர்ஜித்தான் சைலேஷ்.
என்ன தான் எல்லாருக்கும்? எப்பொழுதும் அனைவரும் அவளை பற்றியே யோசிக்கிறீர்கள்? என்னை யாரும் கண்டு கொள்வதே இல்லை. அப்பா இருந்த போதும் அவருக்கு அவள் தான் உயிர். அவளுக்கு தான் எல்லாமே கிடைக்கும்.சொந்த பந்தங்களுக்கு கூட அவளை தான் மிகவும் பிடிக்கும். அப்பா இறந்த பின்னாவது எல்லாம் சரியாகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் பக்கம் இருந்த என்னுடைய அம்மாவும் அவள் பக்கம் சென்று விட்டார்கள் என்று அந்த பொண்ணு பைத்தியம் போல் கத்தினாள்.
என்ன பேசுகிறாய்? அவள் நிலையில் இருந்து யோசித்து பார். அவள் வேதனை உனக்கு எள்ளளவும் புரியவில்லையா?
இது அவள் தலை விதி.
சைலேஷ் வீறிட்ட கோபத்துடன், அவள் தலை விதியா? இல்லை. அவள் நினைத்தால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். நான் கூட உங்கள் அப்பா இறந்த அன்றே கூறினேன். வெளிநாட்டிற்கு சென்று விடு. உன் திறமைக்கு அது தான் சரி என்றேன்.ஆனால் அவள் உன்னை பற்றி யோசித்து,உனக்கு வெளிநாடு பிடிக்காது என்று உன்னுடைய விருப்பத்திற்காக அவளது விருப்பத்தை விட்டு விட்டாள்.இப்பொழுது பள்ளியில் வேலை பார்த்து பணம் போதவில்லை என்பதால் இங்கே வந்திருக்கிறாள். உன் அப்பா இருக்கும் போது அவள் தான் எல்லாமே இருந்திருப்பாள் தான். ஆனால் உங்கள் அப்பா சென்ற பின் அவளது வாழ்வே புரண்டு விட்டது. அதை விட உன் அப்பா இழப்பிற்கு பின் அவளுக்கு நடந்த பிரச்சனை தெரிந்தும் இப்படி பேசுகிறாயா?அவள் உன் உடன் பிறந்தவள் தானே! நீ அவளுக்கு உதவ வேண்டாம். உபத்திரம் செய்யாதே! ஒரு பெண்ணை இப்படி காயப்படுத்தியது தெரிந்தால் அவள் மனது என்ன பாடு படும் என்று அவன் பேச, அவளும் அமைதியாக நின்றாள்.
அங்கே வந்த இன்பா, இவர்கள் பேசுவதை வெளியிருந்த மாணவ, மாணவிகளுள் ஒருவராக கேட்டு விட்டு, கண்ணீருடன் உள்ளே வந்தாள்.
அக்கா……என்று அந்த இதயா……அழைக்க,மற்றவர்கள் அவளை நோக்கினார்கள்.
இதயாவின் கன்னத்தில் பளீரென அறை விட்டு, என் மீது உள்ள கோபத்தால் அந்த பெண்ணை காயப்படுத்தினாயா?என்று கண்ணை துடைத்து விட்டு, உனக்கு என்ன அனைவரும் உன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் அவ்வளவு தானே!
கண்டிப்பாக நடக்கும். என்ன சொன்னாய்? அப்பாவிற்கு உன் மீது பிரியம் இல்லாதது போல் கூறினாயே! நீ இப்பொழுது இரண்டாம் வருடம் படிக்கிறாய். உன் படிப்பு முடிந்தவுடன் உனக்காக அப்பா சேர்த்து வைத்த பத்து இலட்சம் வந்து விடும். நீ அதை வைத்து உன் வாழ்க்கையை கவனித்துக் கொள்.
அவள் விழித்து விட்டு, எனக்காகவா?…உனக்கு?….கேட்க, எனக்கு என்று ஏளனமாக நகைத்து விட்டு, எனக்கு ஏதும் தேவையில்லை. நீ பேசியதை அம்மாவிடம் கூற மாட்டேன். ஆனால் நீ செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
உனக்கு இதயா என்று அப்பா எதற்காக பெயரிட்டாரோ, அது முழுக்க தவறு. இதயா என்றால் இரக்கமுடையவள் என்று பொருள். இரக்கமில்லாமல் ஒரு பெண்ணை துன்புறுத்தி இருக்கிறாய்? முன்பு வசதியாக நாம் இருந்திருக்கலாம் ஆனால் அந்த பெண்ணுடைய நிலை தான் நமக்கும் என்பதை நீ மறந்து விட்டாய்?கண்கலங்கி விட்டு, உன் வழியில் நான் இருக்க மாட்டேன் என்றாள்.
பைத்தியம் மாதிரி பேசாதே! சைலேஷ் கூற, அவள் எப்படி பேசுகிறாள் பாருடா…
அவன் இருவரையும் பார்க்க, இன்பா திடமான குரலில் மற்றவர்களுக்கு கொடுக்கும் அதே தண்டனையை இவளுக்கும் கொடுங்கள். இவளது பொறுப்பை நான் அம்மாவிடமே கொடுத்து விடுகிறேன். இதற்கு மேல் நான் எடுத்தால் இருவரும் பிரியும் வாய்ப்பு கூட வந்து விடும். அப்பாவை விட்டு பிரிந்து துயரே என்னால் தாங்க முடியவில்லை.இதற்கு மேல் முடியாது. அம்மாவிடம் பேசிக் கொள் சைலேஷிடம் கூறி விட்டு இதயாவை பார்த்து விட்டு ஓடினாள். அகிலும் அபினவும் இதயாவை பார்க்க, அவள் தலைகுனிந்தவாறு நின்றாள்.
எனக்கு ஒரு உதவி….அகில் அபினவை பார்த்து, இன்பா இந்த இடத்தில் தான் இருப்பாள் அவளை வகுப்பிற்கு அழைத்து செல்ல முடியுமா? இன்னும் உங்களுக்கு வகுப்பிற்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளது.
இருவரும்…நாங்களா?…கேட்டனர்.
ஆமாம். நான் அவர்களை கவனிக்க வேண்டும் என்று இதயாவை அழைத்து வெளியேற, தாரிகாவை அழைத்துக் கொண்டு கவின், நித்தி, ஸ்ரீ அங்கே வந்தனர்.முதலில் இவளை மருத்துவனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றாள் நித்தி.
சைலேஷ் கைரவிற்கு போன் செய்து காரை எடுத்து வர செய்ய, இதயா தாரிகா அருகே வந்து மன்னிப்பு கேட்டாள்.
பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல் என்று கைரவிடம் கூறி விட்டு, நித்தி கவினிடம் அவளை சேர்த்து விட்டு உடனே கல்லூரிக்கு வாருங்கள் கூற, அவளுக்கு ஆடை வேண்டும். விடுதிக்கு சென்று என்னுடைய உடை ஒன்றை எடுத்து வா…கவினிடம் நித்தி கூற,அவன் சென்றான்.
பின் மருத்துவமனைக்கு கவின் வந்த போது தாரிகா கொஞ்சம் தெளிவாக இருந்தாள். அவனிடம் துணியை வாங்கியவள் கவினை பார்த்து நகைத்து விட்டு, உள்ளே சென்று தாரிகாவை குளிக்க சொல்லி உடையை கொடுத்தனர்.அவள் அணிந்து வந்த பின் கைரவும், கவினும் உள்ளே வந்து அவளை பார்க்க,பிரமித்து போனார்கள். அந்த நிலையிலும் அழகாக இருந்தாள்.
சாதாரண உடை அல்லாமல் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் ஆடை அது. செவிலியர் அங்கே வந்து, வேறு உடை இல்லையா? அவர் கேட்க, தாரிகாவால் நிற்க முடியாமல் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். சோர்வாகவே இருந்தாள்.
அவசரத்தில் உடை மாறி விட்டது நித்தி கூறி விட்டு கவினை பார்த்தாள்.அவன் புரியாமல் விழித்தான்.
ஒருவர் மட்டும் உடன் இருங்கள் செவிலியர் கூறி தாரிகாவிற்கு குளுக்கோஸ் பாட்டிலை எடுத்தார்.நாங்கள் மாலை வருகிறோம் நித்தி சொன்னாள்.
இருக்கட்டும் சீனியர் மெதுவாக தாரிகா கூறினாள்.
யார் பார்த்துக் கொள்ள போகிறீர்கள்? செவிலியர் கேட்டார்.
நான் தான் ஸ்ரீ கூறினாள்.
கல்லூரி மெதுவாக தாரிகா கேட்க, எங்களால் ஒரு மாத காலத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாது கைரவ் கூற மற்றவர்கள் இருவரையும் ஆழ்ந்து நோக்க, ஸ்ரீ தெளிவாக கூறினாள்.
என்னுடைய கல்லூரி பை தாரிகா ஸ்ரீயை பார்க்க, கவின் உள்ளே வந்து அவளது பையை சடாலென போட்டு விட்டு, அவள் முன்னே ஒரு போட்டோவை கிழித்தான்.
நீங்கள்….அதை…. தாரிகா பதறினாள்.
நான் பார்த்து விட்டேன். உன்னுடைய பையை எடுக்கும் போது உன்னுடைய பையின் முன்புறத்தில் என்னுடைய போட்டோ என்றான்.
அவள் தயக்கத்துடன், அது வந்து சும்மா தான் என்றாள். கவின் அவளை முறைத்து விட்டு செல்ல, அவள் முகம் வெளுத்தது. நித்தி அவனை அழைத்துக் கொண்டே பின் சென்றாள். அந்த பெண் இருக்கும் நிலையில் நீ இப்படி தான் நடந்து கொள்வாயா? பேசிக் கொண்டிருக்க நித்தியை போன் அழைத்தது. அவள் அவசரத்தில் துண்டிப்பதாக நினைத்து எடுத்து விட்டாள். ஸ்ரீயும் மற்றவர்களும் போனில் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
கவின் நித்தியிடம், நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?
என்னிடம் எதற்கு கேட்கிறாய்?அந்த உடை உனக்கு நினைவிருக்கிறதா? நீ எனக்கு வாங்கி தந்தது.எனக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது.அது தாரிகாவிற்கு சரியாகவும், பொருத்தமாகவும் உள்ளது.நான் தான் உன்னை வேண்டாம் என்று சொல்லிட்டேன். எனக்கு யார் வேண்டும் என்பது உனக்கே தெரியும். நீ ஏன் அந்த பெண்ணிடம்……. நித்தி தயங்கிக் கொண்டே கவினை பார்த்தாள்.
ஓ ! உனக்காக அவளை ஏற்றுக் கொள்ள சொல்கிறாயா? எனக்கு அந்த பொண்ணு மாதிரி பெண்ணையெல்லாம் பிடிக்காது. வேற பெண்கள் அதான் கிளப்பிற்கு செல்வார்களே அந்த மாதிரி பெண்ணை பார். அவர்கள் தான் அழகாக எனக்கு ஏற்றாற் போல் இருப்பார்கள்.
நித்தி கோபமாக, அவளை மாதிரி என்றால் என்னடா அர்த்தம்? அவளை இப்பொழுது தான் பார்த்தோம். அதற்குள் என்ன அவளை பற்றி உனக்கு தெரிந்தது? உனக்கு ஏற்ற அந்த மாதிரி கேவலமான பெண்கள் அருகே செல்ல கூட எனக்கு பிடிக்காது. உனக்கு தேவையென்றால் நீயே எவள் பின் கூட சுற்று. இனி நான் உன் வழிக்கு வரமாட்டேன். ஆனால் எனக்கு தாரிகாவை பற்றி புரிந்தது. அவளுக்கு உன்னை பிடித்திருந்தும் அவள் அதை உன்னிடம் சொல்லவும் இல்லை. உன் பின்னே மற்ற பெண்கள் போல் சுற்றவும் இல்லை.அவள் நல்ல பொண்ணு தான்.
ஒருவரை பற்றி தெரியும் முன் தேவையில்லாமல் அவர்களை பழி தூற்றுவதே இந்த ஆண்களின் வேலையாய் போயிற்று என்று பேசி விட்டு நித்தி திரும்ப, அதிர்ந்து தான் போனாள்.
ஸ்ரீ அங்கே கையில் நித்தியின் பர்ஸுடன் நின்றாள். வேகமாக நித்தி அருகே வந்து, அவளது பர்ஸை கொடுத்து விட்டு, இனி நீங்கள் எங்களை சந்திக்க வர தேவையில்லை சீனியர் என்று கவினிடம் சொல்லி விட்டு, உங்களது போனை அணைத்து வையுங்கள் நித்தியிடம் கூறினாள். இருவரும் திகைப்புடன் இருக்க, அவள் நீங்கள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டாள். ரொம்ப நல்லது சீற்றமாக ஸ்ரீ சென்றாள்.
அறையுனுள் தாரிகா அழுது கொண்டிருக்க, ஸ்ரீ உள்ளே நுழைந்தாள்.கைரவ் செய்வதறியாது இருக்க,ஸ்ரீ அவளை அணைத்து ஆறுதலளித்தாள்.
அழாதே! உன் உடல் மிகவும் மோசமாகி விடும் அவளை ஸ்ரீ தணித்தாள்.மேடம் என்றொறு சத்தம் கேட்டது. அனைவரும் திரும்பினர். உங்களுக்கான ஆடை….ஆதேஷ் அளித்தார்.
தாரிகா ஸ்ரீயை பார்க்க அவள் வாங்கிக் கொண்டாள். தாரிகா அவர்களிடம், அவன் எங்கே?மெதுவாக கேட்க, போன் அழைத்தது தாரிகாவிற்கு.
ஸ்ரீ எடுத்தாள்.ஆதேஷ்…..தன்னை அறிமுகப்படுத்தினான். போனை தாரிகாவிடம் கொடுத்தாள்.
தாரி……உனக்கு எப்படி உள்ளது? அங்கிள் வந்தாரா?
ம்ம்ம்ம்…ஆடை….என்றாள் கலங்கிய குரலில்
நீ எதுவும் பேச வேண்டாம்.நீ ஓய்வெடுத்துக் கொள். மாலை சந்திப்போம் என்றும் ஸ்ரீயிடம் அவளை மாலைவரை பார்த்துக் கொள் என்று போனை அணைத்தான்.
போனை வைத்து விட்டு ஸ்ரீ தாரிகாவை பார்க்க, அவன் பள்ளியில் ஒன்றாக படித்த என்னுடைய நண்பன்.
ஓ அப்படியா! பணக்காரன் போல அவள் கேட்க, தாரிகா ஓரப்புன்னகையுடன்
ஆமாம், அவனுக்கு அம்மா மட்டும் தான். அவர்களும் இனிமையான மனமுள்ளவர் என்றாள்.
உனக்கு அவன் மீது…
ச்சே…..அதெல்லாம் இல்லை. நட்பு மட்டும் தான் என்றவள் சோகமாக கவினை பற்றி யோசித்தாவாறு, குளுக்கோஸ் முடிந்தவுடன் கூறுகிறாயா ஸ்ரீ. நான் உடையை மாற்ற வேண்டும் என்றாள்.அவளும் ஒத்துக் கொள்ள தாரிகா கண்ணை மூடி உறங்கலானாள்.
ஸ்ரீ சென்றவுடன் கவினை முறைத்து விட்டு நித்தி செல்ல, அவள் பின்னே சென்றான் கவின் அமைதியாக.
இதயாவையும் அவளது தோழிகளையும் உள்ளே அழைக்க, அவர்களுடைய பெற்றோர்களும் வந்தனர்.சைலேஷ் பேச ஆரம்பித்தான்.இதயா அம்மாவை பார்க்க முடியாதவனாக, மற்றவர்களை பார்த்து பெண்கள் செய்ததை சொன்னான். மருத்துவமனையிலிருக்கும் பெண் மேல் முறையிட்டால் உங்களது பெண்ணிற்கு சட்டத்தின் படி பெரிய பிரச்சனை எழும்.வேறு யாரும் இது போல் தவறு யாரும் செய்ய பயப்பட வேண்டும். அதற்கான தண்டனையை அவர்கள் ஏற்க வேண்டும்.
தண்டனையா? நாங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் ஒருவர் கூற, ஒரு பெண்ணின் வேதனைக்கும்,அவமானத்திற்கும் பணமா? சைலேஷ் கேட்க, வார்த்தை இவர்களுக்குள் வளர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் சைலேஷ் அவர்களிடம். உங்கள் பெண்கள் படிப்பை தொடர வேண்டுமென்றால் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் கல்லூரியை விட்டு நீக்க படுவார்கள் என்றான் உறுதியாக.
இவள் யார் தெரியுமா? கல்வி அமைச்சரின் பொண்ணு…என்றார் ஒரு பெண்ணின் அம்மா.
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை…உங்க பொண்ணு இங்க படிக்கணும்னா…தண்டனையை ஏற்று தான் ஆக வேண்டும்…..
அந்த ஊரிலே பிரபலமான கல்லூரி என்பதால் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ள, பெண்களது முகம் கன்றியது. நாளை முழுவதும் தவறிழைத்தவர்கள் கல்லூரி கேண்டியனில் வேலை செய்ய வேண்டும். அந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் உங்களது மன்னிப்பை உளமாற ஏற்று விட்டால் படிப்பை தொடரலாம் என்றான்.கண்கள் கோர்க்க அனைவரும் மன்னிப்பு கேட்டும் அவன் சமாதானமாகவில்லை. அனைவரும் வெளியே வந்தனர்.