அத்தியாயம் 104

சீனு பதறி காருவிடம் வந்தான். செவிலியர் சிகிச்சைக்கு தேவையானதை கொடுக்க கௌதம் அவளுக்கு நின்றவாரே கழுத்தில் மருந்திட்டு, நல்ல வேலை ஆழமாக படவில்லை என்று கூற காருண்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சார், ஒன்றும் ஆகாதுல்ல பதறினான் சீனு.

இல்லடா. வெட்டுக்காயம் போல தான் பட்டிருக்கு. கொஞ்சம் ஆழமாக இருந்தால் இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கும் என்றான். அவள் சாதாரணமாக தலையை வைத்த பின் தான் சீனுவிற்கு நிம்மதியானது.

தேவ் அப்பாவும் அவளிடம் வந்து காயத்தை பார்த்தார். கௌதமை பார்த்து “தேங்க்யூ சார்” என்றாள். சுவாதியின் முணங்கல் கேட்க உள்ளே விரைந்தனர். தேவ்வை தடுத்த கௌதம்..நீ உன் வேலைய பாரு. நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.

இல்லடா. நான் இனி யாரிடமும் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன் என்றான்.

தேவ் அம்மா அவனிடம் வந்து, இப்ப நீ செஞ்சதே போதும். நீ வீட்டுக்கு வா..என்று தேவ்வை இழுத்து சென்றார்.

சார்..சுவாதி அப்பா இருக்கும் இடத்திலே இருக்கட்டும். நான் முடிந்தால் இரவு வந்துருவேன் இல்லை காலையில வாரேன் என்று தேவ் அப்பாவிடம் கேட்டாள் காருண்யா.

அக்கா..எங்க போறீங்க? அடி பட்டிருக்குல்ல. நீங்க ஓய்வெடுங்க என்று சீனு சொல்ல..நம்ம முடிவை மாத்திக்கப் போறீயா? கேட்டாள்.

இல்லக்கா. எடுத்தது எடுத்தது தான் என்றான் சீனு.

நான் கிளம்புகிறேன். நீ சுவாதியை பார்த்துக்கோ.

எங்க போறீங்கன்னு சொல்லிட்டு போங்க? நான் ஒருவரைபார்க்கணும். வர நேராகும்டா என்று காருண்யா சொன்னாள்.

தனியாவாம்மா போகப் போற? தேவ் அப்பா கேட்டார்.

அப்புறம் எங்களுக்கு வேற யார் இருக்கா? எங்களுக்கு தேவையானதை நாங்க தான் பார்க்கணும் என்றாள்.

கொஞ்ச நேரம் இரும்மா..என்று கௌதமை பார்த்தார்.

சார்..பேசன்ட்? கேட்டான்.

யாரையாவது மாத்தி விட்டுட்டு போ..என்றார்.

ஓ.கே சார் என்றார்.

இல்ல சார். இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன் என்றாள் காருண்யா.

நேராகும்ன்னு நீ தானம்மா சொன்ன? நம்ம கௌதம் தான. நம்பி போகலாம் என்றார். அவன் காருண்யாவை பார்த்தான். அவள் யோசனையோடு சார் நேரமானால் உங்க அம்மா? என்று அவனிடம் கேட்டாள்.

நான் சொல்லிடுறேன்.

அவங்க தனியா இருப்பாங்கல்ல?

ஏம்மா. என்னோட அம்மா தானம்மா என்றான்.

டேய்..கௌதம் என்றார் அவர்.

இல்ல சார். நைட் டியூட்டியின் போது அம்மா தனியா இருந்து பழகிட்டாங்க. எப்பவாது சின்ட்டூ கூட இருப்பான்.

சின்ட்டூவா? சிரித்தாள் காருண்யா.

அக்கா சும்மா இருங்க என்றான் சீனு.

பக்கத்து வீட்டு சின்னப் பையன்ம்மா என்றான் கௌதம்.

ஓ.கே சார் என்றாள்.

அப்பா..நான் வேண்டுமானால் காருவுடன் போகவா? கேட்டான் சித்திரன்.

நோ..சார். அதுக்கு டாக்டர் சாரே ஓ.கே என்றாள் காருண்யா. கௌதம் சித்திரனிடம், என்னடா பண்ண? இப்படி பயப்படுறா?

சார். நான் ஒன்றும் அவனுக்கு பயப்படலை. தேவையில்லாம பேசுவான் என்று சித்திரனை பார்த்து கொன்றுவேன் பார்த்துக்கோ என்றாள்.

என்னம்மா சொன்ன? தேவ் அப்பா கேட்க, சாரி சார் என்று கௌதமிடம் சார் நேரமாகுது என்றாள்.

போகலாமா?

போகலாம் சார். நீங்க சீக்கிரம் வாங்க. இல்ல தனியாகவே கிளம்பிவேன் என்று சொன்னாள்.

அவன் லேடி டாக்டரிடம் அவன் வேலையை ஒப்படைத்து விட்டு ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்தான். காருண்யாவும் சுவாதியை பார்த்து விட்டு வெளியே சீனுவிடம் பேசிக் கொண்டே வந்தாள்.

சீனு இப்பொழுதைக்கு பணம் வச்சிருக்கியா?

இருக்குக்கா. அக்கா..பயமா இருக்கு. அக்காவிடம் எப்படி சொல்றதுன்னு தெரியலைக்கா. நீ உன்னை வச்சு அவள லாக் பண்ணு என்றாள்.

லாக் பண்ணனுமா? யார பண்ணப் போறீங்க? கேட்டான்.

சார், சொல்லிட்டு பேச மாட்டிங்களா? பயந்தே போயிட்டேன் என்று சீனுவிடம் என்ன செய்யணும் புரிஞ்சதா? கேட்டாள்.

சார்..அப்பா பத்தி அவளுக்கு தெரிஞ்சா ஒன்றும் ஆகாதுல்ல சீனு கௌதமிடம் கேட்டான்.

நான் அவளையும் பார்த்துக்க சொல்லிட்டு தான் வந்துருக்கேன் என்று போனை எடுத்து அந்த லேடியை அழைத்தான். அந்த பொண்ணு அங்கு வந்தார்.

சீனு..இவங்க தான். நான் சொன்ன பொண்ணோட தம்பி. அந்த பொண்ணை பார்த்துக்கோங்க என்று இப்ப உனக்கு போதுமா? தேவையில்லாமல் ஏதும் யோசிக்காத என்றான் சீனுவிடம் கௌதம்.

“தேங்க்ஸ் சார்”.

போதும்டா. நேரமாகுது என்றாள். வா..போகலாம் என்று அவன் காரை திறக்க..என்னோட கார்ல போகலாமா? கேட்டாள்.

கார்ல்லாம் வச்சிருக்கியா?

ம்ம்..இருக்கு என்றாள். சரி போகலாம் என்று இருவரும் காருண்யா காரில் சென்றனர்.

மறை வீட்டின் முன் வந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தான் வேலு. காயத்ரி வெளியே வந்து அவனை பார்த்து வாங்கண்ணா என்று அழைத்தாள்.

இருக்கட்டும்மா என்று அமைதியானான்.

எங்கம்மா அவன்? சத்யா கேட்டான்.

அவர் உள்ள தான் என்று உள்ளே சென்று அவனை அழைத்தாள். அவன் ராக்கியுடன் படுத்து தூங்கி விட்டிருந்தான். அவனை எழுப்பி..ஏங்க உங்க ப்ரெண்ட்ஸ் வந்துருக்காங்க என்றாள்.

வந்துட்டாங்களா? என்று ராக்கியை நகர்த்தி விட்டு எழுந்தான்.

மறையை பார்த்து..வாடா வெளிய என்றான்.

என்னாச்சுடா?

என்னவா? அடிச்சேன்னா தெரியும் என்று கையை ஓங்கினான் வேலு.

காயத்ரி கண்ணை மூட கையை இறக்கினான் வேலு. எல்லாரும் அவளை பார்த்தனர். மறை அவளை பார்த்து சிரித்தனர்.

சிரிக்கிறான் பாருடா. இவனை என்று கண்ணன் மறை காதை பிடித்து இழுத்தான்.

டேய், விடுடா..மறை சொல்ல, விடுடா என்று வேலு அவனிடம் வந்து கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்தான்.

வேலு..என்ன? கேட்டான். வேலு காயத்ரியை பார்த்தான். அவளும் வெளியே வந்தாள்.

ஏன்டா, இன்றே அவனை தொந்தரவு செய்யணுமா? பக்கத்து வீட்டு தாத்தா கேட்டார்.

இவன் செஞ்ச வேலை தெரியாம பேசாத கிழவா சத்யா கூற, அப்படி என்னடா பண்ணிட்டான்? பாட்டி கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.

கல்யாணத்தன்று காலையில எங்க போனான்னு கேளும்மா? காயத்ரியிடம் வேலு கேட்டான்.

காலையிலா? என்று மறையை பார்த்தாள்.

சாரு.. அம்மாவை பார்க்க போறேன்னு அந்த சக்தி பய வீட்டுக்கு தனியா போயிட்டு வந்திருக்கான் சிஸ்டர் என்றான் கண்ணன்.

அங்க பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கு.

மறையை முறைத்த காயத்ரி, எதுக்கு போனீங்க? கேட்டாள்.

அவன் இனி நம்மை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு தான் போனேன்.

ஏய்யா..அங்கெல்லாம் போன? தாத்தா கேட்க, அவன் பேசியது மண்டையில் ஓடிக் கொண்டே இருந்தது. நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்தான்னா? அதுக்கு தான் பேச போனேன்.

என்னது பேசப் போனீயா? அவன் உன்னை முத நாள் நைட் என்ன செய்ய வந்தான்? ஏதாவது ஆகி இருந்தால்..என்று வேலு சத்தமிட்டான்.

என்ன? என்ன? செய்ய வந்தான்? என்று பதட்டமானாள்.

ஒன்றுமில்லைம்மா..என்று மறை சொல்ல..ஒன்றுமில்லையா? என்று சத்யா கோபமானான். சரி இனி நீ போகக்கூடாது. நாங்க அவன பார்த்துட்டு வாரோம் கண்ணன் முன் செல்ல..

கண்ணா..நில்லு. இப்ப அவன் தனி ஆள் இல்லை. அவனை நம்பி நாலு உசுறு இருக்கு. லூசுத்தனமா ஏதும் செஞ்சிடாதீங்கடா என்று மறை அவனை தடுத்தான்.

உன்னை நம்பியும் உன் குடும்பம் இருக்கு வேலு சொல்ல..மறை காயத்ரியை பார்த்தான். அவள் முகம் பயத்தை தத்தெடுத்து இருந்தது.

அவன் முதல்ல மாதிரி இல்லை. அந்த பொண்ணு அவனை விட்டு அவளோட அம்மா வீட்டுக்கு போயிட்டா. அவனோட அம்மா, அப்பா கூட இல்லை.

ம்ம்..ரொம்ப வசதியா போச்சு கண்ணன் சொன்னான்.

டேய்..அவன் மாறுவான்னு நம்பி, அவனிடம் என்ன செஞ்சா வீட்டுக்கு வருவேன்னு மாலினி சொல்லிட்டு போயிருக்கா.

அவள கஷ்டப்படுத்திறாதீங்கடா. அவளுக்காக இல்லைன்னாலும் அவ வயித்துல இருக்கிற சின்ன உசுறுக்காகவாது விட்டுருங்கடா.

நீ சொல்றது சரி தான்டா. ஆனால் அவன் மாறணுமே?

மாறுவான்டா மறை சொல்ல, காயத்ரி பதட்டத்துடன் மறையிடம் வந்து அவன் பின் நின்று கொண்டாள். அவள் பார்வை வெளியே இருக்க, எல்லாரும் பார்த்தனர்.

குடிச்சிட்டு தள்ளாடி வந்து நின்றான் சக்தி. எல்லாரிடமும் வந்து, என்னா டா…? திட்டம் போடுறீங்களா?..என்னை கொல்லவா? மாலு இங்க வந்தாளா? உலறினான்.

மறை நண்பர்களை பார்த்தான். வேலை எப்படி பார்ப்பீங்க? அவளுக்கு வேல பாக்கணுமாம். ஆத்தாவும் அப்பனும் அவ வீடுக்கு போயிட்டாங்க..போங்க எல்லாரும்..போங்க..என்று சத்தமிட்டான்.

ஏய்..போடா தாத்தா குச்சியை எடுத்து வந்து விரட்டினார்.

அவரை பார்த்து, யோவ் அவ வீட்டுக்கு போனா நா என்ன செய்றது? என்னை விட்டு என்னோட ஆத்தா போனதேயில்லை. இப்ப போயிருச்சு.

நா சாப்பிடவேயில்லை. என்ன விட்டு எல்லாரும் போயிட்டாங்க என்று கண்ணீருடன் அங்கேயே விழுந்தான். காயத்ரி கைகள் நடுங்கியது. அவளை பார்த்த மறை நகராது நின்றான்.

டேய்..நடிக்கிறியா? சத்யா சத்தமிட்டான்.

தாத்தா அவர்களிடம் வந்து, அவன இந்த திண்ணையில போடுங்க என்றார்.

இவன் இப்படியே சாவட்டும் கண்ணன் சொல்ல, மறை நகர்ந்தான். காயத்ரி பயத்தில் அவனை பிடித்துக் கொண்டு நகரவே விடவில்லை.

இருடா. நாங்க பார்த்துக்கிறோம் என்று வேலு அவனது காலை பிடித்து இழுத்து அந்த பாட்டி தாத்தா வீட்டு திண்ணையில் போட்டான்.

காயத்ரி மறையை விட்டு நகர்வதாக இல்லை. அவனை நாங்க பார்த்துக்கிறோம். இனி சொல்லாமல் எங்கேயும் போகாதே என்ற வேலு..சிஸ்டரை கவனி என்று கூற மற்றவர்களும் காயத்ரியை பார்த்தனர்.

பாட்டி மறையிடம் வந்து..போய்யா. முதல்ல புள்ளைய வீட்டுக்குள்ள கூட்டிட்டு போ என்றார். அம்மா.. அவன் உன் பக்கம் வர மாட்டான். நானும் என் மாமாவும் இருக்கோம்ல என்று அவள் தலையை தடவினார். அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வர..மறை அவளை தூக்கினான். அவள் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டு அழுதாள்.

உள்ளே சென்று கதவை அடைத்து விட்டு, தூக்கியவாறே அவளை நிமிர்த்தினான். அவள் நிமிரவேயில்லை. அவளை தரையில் படுக்க வைத்து அவளருகே அமர்ந்தான்.

காயூ? அழைத்தான். அவள் அவன் மீது தாவி அணைத்து அழுதாள்.

என்னாச்சும்மா?

அழுது கொண்டே..பயமா இருக்கு. இவனை பார்த்தால் அவன் மாதிரியே தெரியுது என்று அழுதாள்.

சக்தி குடிப்பான். பொண்ணுங்ககிட்ட வம்பு செய்வான். ஆனால் அவன் வேரேதும் செய்ய மாட்டான்ம்மா.

ஆனால் அன்று அவன்..?

ம்ம் அன்று குடிச்சிருந்தான். ஆனால் நீ மயங்கியதும் அவன் பயந்து விட்டான். பின்னிருந்து அவனை பார்த்து தவறாக தோன்றியது. அதனால் தான் என்னிடம் உதை வாங்கினான்.

ஆனால் அந்நேரம் வந்ததும் நல்லது தான். நீ மயங்கலைன்னா..என்று மறை நிறுத்தினான். அவள் மீண்டும் அழுதாள்.

அழாதம்மா..என்று அவளை இடையோடு இழுத்து அவன் மார்பினுள் போட்டு படுத்துக் கொண்டான்.

எனக்கு பயமா இருக்கு. நீங்க வெளியே சென்ற பின் அவன் வந்தான்னா..நான் என்ன செய்வது?

அவன் பசங்கள பார்த்து தான் வந்தான். அவன் பேசியதை கேட்டாயா? அவன் வீட்டில் யாருமில்லைன்னு புலம்பினான். அவன் குடிச்சா தான் ரொம்ப பிரச்சனை பண்ணுவான்.

மற்றபடி நல்லவன் தான். அவனுக்கு சேர்க்கை சரியில்லை. அது அவனுக்கு புரியலை. அவனிடம் பிரச்சனை இருக்கு. அவன் பொண்டாட்டியால அவன் மாறுவான்னு தோணுது. அவனுக்கு பிடிக்கலைன்னா பேசவே விட மாட்டான். ஆனால் அவன் வீட்டில் அந்த பொண்ணு பேசியதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.

எனக்கு பயமா இருக்கே?

உனக்கு பயமா? சரி ஒன்று செய்யலாம். நான் எங்கும் போகலை. உன் பக்கத்திலே இருக்கவா? என்று அவளை அணைத்தான்.

இல்ல..நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?

நானா? நான் வெற்றி அய்யா, பிரதீப் அண்ணா, வேலு என்ன வேலை சொன்னாலும் பார்ப்பேன். பிரௌனியையும் பார்த்துப்பேன்.

அதெல்லாம் சரி. என்ன வேலை?

எதுவானாலும்? என்றான்.

இப்படியா சொல்லுவாங்க. உங்களுக்கு என்ன வேலை பிடிக்கும்?

நாம் இன்னொரு நாள் இதை பற்றி பேசலாமே?

ஏன்?

உன்னை பார். ரொம்ப சோர்வா தெரியுற? நான் வேண்டுமானால் பூஸ்ட் தரவா? என்று முத்தம் கொடுக்க வந்தான்.

ராக்கிய வச்சுக்கிட்டு என்ன பண்றீங்க?

பையனை வச்சிட்டு நீங்க மட்டும் அழலாமா?

அவள் முகம் வாடியது. அவளை மீண்டும் தூக்கி ராக்கியிடமிருந்து தள்ளி வந்து, இப்ப கொடுக்கலாமா? கேட்டான். அவள் மௌனமாக இருக்க, இப்படி அமைதியா இருந்தீங்கன்னா வேற மாதிரி ஆகிவிடும் என்று அவள் இதழ்களில் இதழ் பதித்தான். அவளை இழுத்து முத்தப்போரில் இருவரும் இருக்க..அம்மா என்று ராக்கி எழுந்தான். அவள் மறையை தள்ளினாள்.

ஏய்..பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் குடுத்திட்டு போகலாமே? என்று அவள் கையை பிடித்தான். ராக்கி எழுந்து அவர்களிடம் வர, அவளை சரி செய்த காயத்ரி ராக்கியை தூக்கினாள்.

அம்மா…பூஸ்ட் என்றான் ராக்கி. மறை காயத்ரி அருகே வந்து, எனக்கும் பூஸ்ட் வேண்டும் என்றான் குறும்புடன்.

சும்மா இருங்க என்று அவள் அடிக்க, அம்மா ப்ரெண்டுக்கு பூஸ்ட் இல்லையா? கேட்டான்.

ஸ்டார்..நல்லா கேளுப்பா. ராக்கி முழிச்சுட்டீங்கல்ல. முதல்ல உங்களுக்கு தான் பூஸ்ட் என்றாள்.

காயூ..இங்க வா என்று கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு, நீங்க இங்கேயே இருக்கணும். ஸ்டார் கண்ணா அம்மாவை கீழே காலை வைக்க விடாதே என்றான்.

எதுக்கு?

அம்மாவுக்கு கால் வலிக்கிறதாம். நீ பார்த்துக்கிறியா? நான் பூஸ்ட் கொண்டு வாரேன் என்றான்.

அச்சோ, நீங்க இருங்க. நான் செய்கிறேன்.

பயப்படாதேம்மா..எனக்கு சமைக்க தெரியும் என்றான்.

சமைக்க தெரியுமா? என்ன தெரியும்? கிண்டலாக கேட்டாள்.

அவன் அனைத்து பதார்த்தங்களின் பெயரையும் சொன்னான்.

உண்மையிலே தெரியுமா?

செய்வேன் என்றான்.

நாம ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணுவோமா?

உங்களுக்கு தான் ஏற்கனவே ஹோட்டல் இருக்குல்ல.

ஆமா. அதை விற்கலாமா?

என்ன பேசுற காயூ? அதெல்லாம் கூடாது. அது நம் உழைப்பில்லையே?

நம் உழைப்பில்லை தான். ஆனால் வினி எனக்காக கொடுத்தது. நம்ம கல்யாண கிப்டா எடுத்துக்கலாமே? அவள் அப்படிதானே அர்ஜூனிடம் சொல்லி இருக்கா.

ஆனால் காயூம்மா..வேண்டாமே?

சரிங்க. இங்க பெரிய ஹோட்டல்ல வேலை செய்யலாமே? முதல்ல எங்களுக்கு ஏதாவது வித்தியாசமா செஞ்சு காட்டுங்க என்றாள்.

இது சரி. பார்க்கலாம் என்றான்.

அவன் பூஸ்ட் செய்து வர மூவரும் குடித்தனர். பின் மூவரும் விளையாடுவதில் பொழுதை கழித்து விட்டு அமர்ந்தனர். வெளியே சென்று வந்தனர்.

சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ராக்கி மறை மீதே படுத்து தூங்கி விட.. என்னங்க சார் கிளாஸ் ஆரம்பிக்கலாமா?

என்னவென்று அவன் கேட்டான்.

மறந்துட்டீங்களா? ஒரு மாசத்துல இங்கிலீஸ் கத்துக்கணும் என்றாள்.

நான் தூங்கணுமே? என்று அவன் கண்ணை மூடினான். அவன் மீதிருந்த ராக்கியை மெதுவாக தூக்கி கீழே படுக்கப் போட்ட காயத்ரி மறை அருகே வந்து படுத்துக் கொண்டு தூங்க விடாமல் அவனை தொந்தரவு செய்தாள்.

காயூம்மா வேண்டாம். என்னால முடியாது. எனக்கு ஏ, பி, சி, டி யும் சிறிய சொற்கள் மட்டும் தான் இங்கிலீஸ்ல தெரியும் என்று கண்ணை மூடியவாறு அவன் சொல்ல, அவனை அணைத்துக் கொண்டு..உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா?

சின்ன வேர்டுஸ் மட்டும் தான் தெரியும்.

ஓ.கே. நாளைக்கு வேலைக்கு கிளம்பிடுவீங்களா? கேட்டாள்.

ஆமா..போகணும்ல.

சரி. போகலாம். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாலை ஆறு மணிக்கே வர முடியுமா? கேட்டாள்.

ஏம்மா? என்று கண்ணை திறந்தான்.

இல்ல. நாம இங்கிலீஸ் கத்துக்கணும்ல.

வேண்டாம்.

இப்படி பேசுனா எப்படி? என்று அவள் கோபமாக தள்ளி படுக்க, அவளை இழுத்து அவன் பக்கம் இழுத்த மறை..நான் முயற்சி செய்கிறேன். உனக்காக மட்டுமே.

ஓ.கே சொல்லுங்க என்று நெற்றி, கண், காது, மூக்கு என்று அனைத்தையும் ஆங்கிலத்தில் அவனை கூற வைத்து முத்தமிட்டுக் கொண்டே வந்தான்.

லிப்ஸ் என்று அவள் கூறியதும் அவளது இதழ்களை அடைந்தான் மறை. சிறிது நேரம் பாடத்தை மறந்து இருவரும் முத்தத்தில் ஈடுபட காயத்ரி சுதாரித்து அவனை விலக்கி படிக்கணும் என்றாள்.

ம்ம்..படிக்கலாம். இப்படி படித்தால் தினமும் நான் வேகமாகவே வந்து விடுகிறேன் என்று அவன் காயத்ரி இடையை வருட,

ம்ம்..சொல்லுங்க. ஹிப், ஸ்டோமெக்..கை தான் வேலைய பாக்குது வாய்க்கு வேலைய கொடுங்க என்று செல்லமாக அதட்டினாள். அவளை பார்த்து சிரித்த மறையை மறுநாள் நம் ஆங்கில அதிரூபினி காயத்ரி எழுத வைக்க ஆரம்பித்து டீச்சர் ஆகும் கனவை தன் கணவன் மூலம் அடைந்து விடுவாள். தினமும் எழுத வைத்து அவனுக்கு ஆங்கிலத் திறனை வளர்க்க அவள் போராட தயாரானாள்.

எங்க போகணும்? கௌதம் கேட்க..காலேஜூக்கு என்று படிக்கும் காலேஜை சொன்னாள் காருண்யா. அவன் புன்னகைத்தான்.

எதுக்கு சிரிக்கிறீங்க சார்?

நாங்களும் அங்க தான் படிச்சோம் என்றான்.

ம்ம்..என்றாள். வந்தவுடன் இருவரும் இறங்கினார்கள். வாட்ச்மேன் கௌதமை பார்த்து புன்னகையுடன் எப்படி இருக்கீங்க தம்பி? கேட்டார்.

சூப்பர் அண்ணா என்று அவரை அணைத்தான்.

தம்பி மறக்கவேயில்லை என்று மகிழ்ந்தார்.

அண்ணா தொப்பை வளர்ந்து விட்டதே? மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?

அவர் தலையை சொரிந்தார்.

லிமிட்லயே வச்சுக்கோங்க என்றான்.

சார்..நீங்க இங்க இருக்கீங்களா? வர்றீங்களா? நேரமாகுது.

நீ ஹாஸ்ட்டலுக்கு தான போவ? போ..நான் வாரேன் என்று அவன் அவரிடம் பேச..அவனை முறைத்து விட்டு வேகமாக உள்ளே ஓடினாள்.

அவர் காருண்யாவை பார்த்து, கட்டிக்கப் போற பொண்ணா?

அவளா? என்று அவளை பார்த்து இல்லைண்ணா என்றான்.

எத்தனை நாளா உங்களுக்கு அந்த பொண்ண தெரியும்?

எதுக்குண்ணா?

ரெண்டு நாளா தெரியும் என்றான்.

அவர் சிரித்தார்.

எதுக்கு சிரிக்கிறீங்க?

பொம்பள புள்ளைங்க கோபமா திட்டுறதும், முறைப்பதும் உரிமையாக பழகுபவர்களிடம் மட்டுமே. சிலர் மட்டுமே பிடிக்காதவர்களிடம் நடந்துப்பாங்க. ஆனால் தம்பி உங்களுடன் இந்த பொண்ணு வந்துருக்கு என்றால் உங்களை பிடிக்குமோ? உங்களுக்கு எப்படி தம்பி?

அவ முன்னாடி சொல்லிடாதீங்க. எனக்கு எதுவும் தோணலை அண்ணா. நான் பார்த்துட்டு வாரேன் என்று அவனும் உள்ளே சென்றான்.

அவள் வார்டனிடம் பேசி விட்டு வந்தாள். அவளுக்கு எதிரே அவளது ஹாஸ்ட்டல் மேட் வந்தனர். அவர்களிடம் எனக்கு ஒருநாளைக்கு மட்டும் விடுப்பு சொல்லுங்கடி.

எதுக்குடி?

ஒரு முக்கியமான வேலை இருக்குடி. உங்களுக்கு துரை சார் நம்பர், அட்ரஸ் ஏதாவது தெரியுமா? கேட்டாள்.

எதுக்கு டி?

இருக்கா? இல்லையா? அவள் கேட்டுக் கொண்டிருக்க அவளிடம் வந்தான் கௌதம்.

யாருடி? என்று அவனை ஆவென பார்த்தாள்.

ஓய்..அப்புறம் சைட் அடிக்கலாம்? முதல்ல சொல்லுங்கடி..

ஹாய்..என்று பொண்ணுங்க கௌதமிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவனும் அவர்களுடன் சகஜமாக பேசினான்.

அப்புறம் பேசுங்கடி. தயவு செஞ்சு இருந்தா கொடுங்கடி. வளவளன்னு பேசாதீங்க என்று சினமானாள்.

புருவத்தை சுளித்துக் கொண்டு கௌதம் காருண்யாவை பார்த்தான். சரி..டென்சன் ஆகாத. உனக்கு ஒன்றுமில்லையே? அக்கறையும் அவர்கள் கேட்க, நம்பரை கொடுடி நேரமாகுது என்றாள்.

இரவாக போகிறது நினைத்தை சேகரிக்க முடியாதோ என்று அவள் நினைத்தாள்.

இந்தா என்று நம்பரை கொடுத்தாள். சார் கிளம்பி இருப்பார்லடி..கேட்டாள் காருண்யா.

அவரு அப்பொழுதே போயிட்டார் என்றாள்.

போன் செய்தால் ஸ்விச் ஆப் என்று வந்தது.

ஸ்விச் ஆப் செஞ்சிருக்கார். அவரு அட்ரஸ் இருந்தா குடுடி..

வீட்டுக்கு போகப் போறியா? அவர் தனியா இருக்கார். மேரேஜ் ஆகலடி. ஏதும் தப்பாகி விடாமல் என்று ஒருத்தி சொன்னாள்.

அதான் சார் கூட இருக்கார்ல என்று மற்றொருத்தி கூற காரு கௌதமை பார்த்தாள். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சீக்கிரம் குடு நேரமாகுது என்று வாங்கி விட்டு, சார் போகலாம் என்று காரு அவன் கையை பிடிக்க..ஏய்..லீவு கேட்டுட்டு ஆடை எடுத்துட்டு போகலையா? ஒருத்தி கேட்டாள்.

ஓ..மறந்துட்டேனே? என்று அவன் கையை விட்டு, சார் இருங்க வந்துடுறேன்னு ஓடினாள். கௌதம் அவளை பார்த்துக் கொண்டிருக்க, என்னாச்சு சார்?

ஒன்றுமில்லை என்று அவன் கூற, சிரித்தனர்.

என்ன? புருவத்தை உயர்த்தினான்.

உங்களுக்கு காருவை பிடிச்சிருக்கா?

எனக்கா? இல்லையே என்றான்.

ஓ.கே..ஓ.கே சார் என்றாள் ஒருத்தி கிண்டலாக.

ஓய்..என்ன? மிரட்டுவது போல் கேட்டான்.

இல்லை சார். நீங்க தடுமாறியது போல் தெரியுதே?

நானா? என்று அவன் சிரிக்க, காருண்யா காலேஜ் பேக்கை போட்டுக் கொண்டு ஓடி வந்தாள்.

சார்..வாங்க நேரமாகுது என்று பொண்ணுங்களை பார்த்து, வெளிய ஏன்டி சுத்திக்கிட்டு இருக்கீங்க? அந்தம்மா பார்த்துச்சுன்னா அவ்வளவு தான். சீக்கிரம் போங்க. இருட்டாகப் போகுது.

நீ பார்த்துப் போயிட்டு வா. ஹாப்பி ஜார்னி. எஞ்சாய் பண்ணு என்று கையசைத்தனர்.

என்னது? எஞ்சாய்யா? நான் எதுக்கு போறேன். இவளுக என்ன பேசுறாளுக? என்று முகத்தை சுளித்து..வாங்க சார் நேரமாகுது என்று அவனது கையை பிடித்துக் கொண்டு செல்ல..

ஹே..கௌதம் என்று சத்தத்தில் இருவருமே நின்றனர்.

போச்சு யாரிடம் மாட்டக்கூடாதோ? அதுகிட்டவே மாட்டிக்கிட்டேனே? என்று கௌதம் பின் ஒளிந்தாள் காருண்யா. சார் சொல்லிடாதீங்க என்றாள்.

கௌதம் அருகே வந்த மேம்..எப்படி இருக்க? என்று அவன் கன்னத்தை கிள்ளினார்.

அய்யோ..மேம். இப்பவும் என் கன்னத்தை விட மாட்டீங்களா? என்று அவன் கொஞ்சியவாறு பேசினான். பெரிய கண்ணாடி பருமனான உடல்..அவருக்கு கௌதம் பெட் மாதிரி.

தேவ் வந்திருக்கானா? என்று அவனுக்கு பின் பார்க்க காருண்யாவின் முடி தெரிய, ஹேய் யாருடா கெர்ல் ப்ரெண்டா? யாருடா? என்று அவள் முன் வந்தார். அவள் முகத்தை கையால் மறைத்து நின்றாள். அவர் கையை எடுக்க கண்ணை மூடிக் கொண்டு நின்றாள்.

காருண்யா. நீயா? பையை எடுத்துட்டு எங்க போற? அதட்டினார்.

மேம்..உங்களுக்காக தான் போறேன் என்றாள்.

எனக்காகவா?

எஸ் மேம். நீங்க கொடுத்த அசென்மெண்டுக்காக தான் போறேன். சார் கெல்ப் பண்றேன்னு சொன்னாரு என்று கௌதமை பார்த்து கெஞ்சுவது போல் முகத்தை வைத்தாள்.

கௌதமுடனா? ஓ.கே. ஆனால் கௌதம் உனக்கு எப்படி இவளை தெரியும்?

அவனை பேச விடாமல், மேம்..சார் என்னோட மாமாவோட ப்ரெண்டு.

ஏய்..உன்னோட மாமாவுக்கும் உனக்கும் ஒரே வயசு தான. அப்புறம் எப்படி கௌதமை உன் மாமாவுக்கு தெரியும்?

அதான் எப்படி தெரியும்? என்று அவள் உலற, கௌதம் சிரித்தான்.

அவனை பார்த்து விட்டு, மேம் ஒரே வயசுல இருக்கிறவங்க தான் ப்ரெண்டா இருக்கணுமா? என்னோட மாமா யாருன்னு கூட பார்க்க மாட்டான். எல்லாரிடம் நல்லா பேசுவான். அவன் பொண்ணுங்கள தவிர சின்ன பொண்ணுங்க பெரியவங்க எல்லாருமே ப்ரெண்ட்ஸ் தான். உரிமையா தான் நடந்துப்பான். ஆனால் என்ன பேசுற இடத்தோட விட்டுருவான்.

போதும்டி உன் மாமா புராணம். கௌதம் பார்த்து.. பார்த்துப்பா..விட்டா உன்னையே வித்திருவா?

மேம்..மேம்..நேரமாகுது. இருட்டுது பாருங்க. வீட்டுக்கு போகலையா?

ஆமாம் போகணும். நேரமாகுது. அவர் வந்திடுவார். காருண்யா சுவாதி எங்க? லீவா? அவள் லீவே போட மாட்டாளே?

மேம்..நான் வந்து சொல்லவா? நாங்க பார்க்கப் போறவங்களை பார்க்க முடியாமல் போயிடும்.

கிளம்புங்க. கௌதம் காருண்யாவை பார்க்க வந்தா..எங்களையும் பார்த்துட்டு போ என்றார். இருவரும் காரில் ஏறினார்கள்.

என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

சார், உங்கள கெல்ப்புக்கு தான் வர சொன்னாங்க. கொஞ்சம் அமைதியா இருங்க என்று அவள் பையை திறந்து லேப்பை எடுத்து பென்டிரைவை போட்டாள். அச்சோ..பத்தாதே என்று அணைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

மொபைல்ஸ் கடையை பார்த்து, சார்..ஒரு நிமிசம் நிறுத்துங்க என்று இறங்கி பென்டிரைவ் ஒன்றை வாங்கி விட்டு ஏறினாள்.

சார் வீட்டிற்கு இருவரும் வந்தனர். அவள் காலிங்பெல்லை அழுத்தினாள். யங்கான ஒருவர் வந்து கதவை திறந்தார்.

ஏய்..இங்க என்ன பண்ற? கேட்டார் அவர்.

சார்..என்று திரும்பி கௌதமை காட்டி இவர் டாக்டர் என்று சொன்னாள்.

வாங்க என்று இருவரையும் அழைத்தார். சார் சுவாதி பத்தி வச்சிருக்கிற எல்லாமே தர முடியுமா? கேட்டாள்.

சுவாதிக்கு ஒன்றுமில்லையே?

ஆப்ரேசன் முடிஞ்சது என்று கௌதமை பார்த்தாள்.

நீ எதுக்கு இதையெல்லாம் கேட்கிறாய்? அதான் ஆப்ரேசன் முடிஞ்சு நல்லா இருக்கால்ல கௌதம் கேட்டான்.

சார், காரணம் இருக்கு. ஆனால் என்னால் சொல்ல முடியாது.

சொல்லலைன்னா. நான் தர முடியாது சார் சொல்ல, பெருமூச்சுடன் இருவரையும் பார்த்தாள் காருண்யா.

கௌதம் சார்..கொஞ்சம் வெளிய இருக்கீங்களா?

எதற்கு? என்று புருவத்தை அவன் உயர்த்தினான்.

ப்ளீஸ் சார் என்றாள்.

சாரிடம்..நான் சொல்வது யாருக்கும் தெரிய வேண்டாம். சுவாதியின் பாதுகாப்பிற்காக தான் என்று நாங்க ஃபாரின் போகணும். இந்த மாதிரி அனைத்தையும் கொடுத்தாள். நாங்க செல்ல சுலபமாக இருக்கும் என்றாள்.

இது தேவையிருக்காதே. படிப்பை முடிச்சிட்டு போகலாமே?

சார், இருவரது காதலை கூறி இப்பொழுதை பிரிந்து இருந்தாங்கன்னா. நல்லா இருக்கும். அவள் அம்மாவை பற்றி கூறி அவங்க ஜெயில்ல இருக்காங்க. வெளிய வந்தாலும் வந்திருவாங்க. பாதுகாப்பு இல்லை. அதான் சார்.

இதில் அவள் ஹார்ட் பிராபளம் பற்றியது எதுக்கு?

சார், இது என்னோட நிம்மதிக்காக. அங்க வச்சு ஏதாவது ஆனால்.. ரிப்போர்ட் வேணும்ல.

தெளிவா இருக்க என்று சிரித்தார் சார்.

சார், தாரீங்களா?

தாரேன். இப்ப அவ ஹாஸ்பிட்டல இருக்கான்னா அந்த ரிப்போட்டை வாங்கணுமே?

வாங்கணும் சார். நாளைக்கு பார்க்கணும். சீக்கிரம் தாங்க என்றாள். அவர் கொடுக்க அதை பென்டிரைவில் எடுத்துக் கொண்டாள்.

காருண்யா. அவரு டாக்டர்ன்னு சொன்ன? ஆனால் அவரு நீ சொன்னதுக்காக வெளிய போட்டாரு. லவ்வா? கேட்டார். அவள் புன்னகைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.

ரொம்ப “தேங்க்ஸ் சார்” என்று கையை நீட்டினாள். அவர் கையை கொடுத்துக் கொண்டே அவள் காதருகே வந்து, உங்க ஜோடி நல்லா இருக்கு என்றார்.

கௌதமை பார்த்தால் அவன் முறைத்துக் கொண்டிருந்தான். அவள் புன்னகையுடன் சாரை நெருங்கி நான் இன்னும் சொல்லலை சார் என்றாள்.

சீக்கிரம் சொல்லிடும்மா என்றார்.

ஓ.கே சார். பை என்றாள்.

“ஆல் தி பெஸ்ட்” என்று கையசைத்தார். “தேங்க்ஸ் சார்” என்று கௌதமிடம் வந்தாள்.

எவ்வளவு நேரம் நிக்குறது? கௌதம் கேட்டான்.

சார், நீங்க கார்ல உட்கார்ந்திருக்கலாம்ல..

சார்..சொன்னதால தான் வந்தேன். ஆனால் நீ என்னென்னமோ பண்ற? தனியா ஒருவருடன் உனக்கு பயமாவோ, தவறாகவோ தெரியலையா? கேட்டான்.

நான் தப்பு செஞ்சா தானே பயப்படணும்?

எதுக்கு “ஆல் தி பெஸ்ட்” சொன்னார்?

அது சீக்ரட் சார் என்று காரை எடுங்க என்று ஏறினாள்.

எல்லாம் என் நேரம். உனக்கு டிரைவராக்கிட்ட?

இல்ல சார். நான் அப்படியெல்லாம் நினைக்கவேயில்லை என்று பேசிக் கொண்டே போன் செய்தாள்.

போனை எடுக்குறானா பாரு? இடியட் என்று திட்டினாள்.

யாருக்கு போன் செய்ற? எங்க போகணும்?

காரை நிறுத்துங்க சார் என்று மீண்டும் போன் செய்தாள். அந்த பக்கம் எடுக்கவேயில்லை. அவள் திட்டிக் கொண்டே காரை எடுங்க சார் என்றாள். நான் சொல்றேன் போங்க என்று கிளம்பியவர்கள் கமிஷ்னர் ஆபிஸ் முன் வந்து நின்றனர்.

அவள் பாட்டுக்கு உள்ளே கௌதம் கையை பிடித்துக் கொண்டு செல்ல..ஏய், நீ பாட்டுக்கு உள்ள போற என்று அவள் கையை எடுத்தான். போலீஸ் ஆட்கள் அனைவரும் அவர்களை பார்த்தனர்.

சார், இங்க உட்காருங்க. வாரேன்.

ஏய், என்னால முடியாது. நான் இங்கெல்லாம் இருக்க மாட்டேன். எல்லாரும் பாரு நம்மையே பாக்குறாங்க. நான் போலீஸ் ஸ்டேசன் பக்கமே போனதில்லை. என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறாய் என்று நகர்ந்தான்.

அவள் புன்னகையுடன் அவனது கையை பிடித்து அமர வைத்து, ப்ளீஸ் சார். இப்ப வந்துருவேன் என்று கமிஷ்னர் அறைக்குள் சென்றாள்.