அத்தியாயம் 103
சுவாதி என்று தேவ் அழைக்க, அவள் தேவ், சீனு இருவரையும் பார்த்து விட்டு..கதவு பக்கம் பார்த்து அப்பா எங்கடா? கேட்டாள். அவன் கண்கள் கலங்கியது. சீனு கையை அழுத்திய தேவ்..அப்பாவுக்கு பிரச்சனையில் சிறியதாக அடிபட்டு கையில் கட்டுப் போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்கணுமாம்.
சார்..கையில் சிறிய அடிக்கு மூன்று நாள் ஓய்வா?
ஆமா சுவாதி..கை எலும்புல பட்டிருக்கு.
எலும்பிலா? அப்பா வலி தாங்க மாட்டார் சார். நான் அவரை பார்க்கலாமா? கேட்டாள்.
உனக்கு இதயத்தில் ஆப்ரேசன் என்று கண்கலங்கிக் கொண்டே தேவ் ஓய்வெடுக்கணும் என்று எழுந்தான்.
சார்..எதுக்கு அழுறீங்க? நான் கூட செத்து போயிட்டேன். அதான் அழுறீங்க? பேசுறீங்கன்னு நினைச்சேன்.
நீ என்னடா சாரை மாமான்னு சொல்ற? எனக்கு தெளிவா கேட்டது.
அக்கா..அமைதியா இரு இல்ல டாக்டர் மாட்டுக்கு போடுற பெரிய ஊசியா போட்டுருவாங்க. அப்புறம் வலிக்குதுன்னு அழாதே என்றான். காருவும் சித்திரனும் உள்ளே வந்தனர்.
அவள் எழ முயன்றாள். வேண்டாம் சுவாதி..எழாத என்று தேவ் அவளை நிறுத்திக் கொண்டே இவன் என்னுடைய தம்பி சித்திரன் என்றான்.
உங்க தம்பியா? என்று சித்திரனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். நீ என்னை டீஸ் பண்ணுவ? உங்க அண்ணா என்னை ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டல்லா தூக்கிட்டு சுத்துறாரு என்று மெதுவாக கிண்டலாக பேசினாள்.
சுவாதி..என்னை மன்னிச்சிரு. உன்னிடம் பேசணும்ன்னு தான் உன்னை தொந்தரவு செய்தேன்.
ம்ம்..தெரியுமே? என்றாள்.
தெரியுமா? தேவ் கேட்டான். நீ பசங்களோட முதல் வருடம் பேசும் போதே கேட்டுட்டேன். ஆனால் என்னால தான் உன்னுடன் பேச முடியலை. ஆனால் உன்னை போல் எனக்கு காதலெல்லாம் இல்லை.
என் மீது இல்லை. என் அண்ணா மீது? என்று சித்திரன் கேட்க, அனைவரும் அவனை பார்த்தனர்.
இல்லை. எனக்கு..என்று அவள் சொல்லும் போதே அந்த ஹேர் பேண்டை அவள் முன் தேவ் வைத்து, உன் தலையில் இருந்ததாம் செவிலியர் சொன்னாங்க. இதுவுமாம்? என்று மறைக்க போட்டிருந்ததையும் வைத்தான். அவள் அவனை பார்த்தாள்.
சார், நான் எப்பொழுதும் பத்து ரூபாய்க்குள் தான் வாங்குவேன். ஆனால் இது முப்பது ரூபாய். துக்கி எறிய மனசில்லை. நான் விலை அதிகமுள்ள பொருட்களை என்று அவள் பேச முடியாமல் திணற,
வேண்டாம். நீ என்ன சொல்லப் போறன்னு தெரியுது. ரொம்ப பெயினா இருக்கா? நீ ஓய்வெடு தேவ் சொல்ல..மற்றவர்களுக்கும் புரிந்தது. சித்திரன் அமைதியாக எழுந்து சென்றான். காரு சுவாதியை முறைத்துக் கொண்டு வெளியே செல்ல..
காரு..அழைத்தாள் சுவாதி.
போடி. நான் உன்னை பார்க்க வந்தேன். பார்த்துட்டேன். நான் போறேன். இனி உன்னை பார்க்க வர மாட்டேன். உன்னோட வலியை கூட என்னோட ஷேர் பண்ண முடியலைல்ல. விசயம் தெரிஞ்சு உயிரே போச்சு. இனிமே காரு..செல்லம்ன்னு என்னிடம் வந்த நானே உன்னை கொன்றுவேன்.
காருண்யா, நீ கிளம்பு. என்னால எதுக்கு சிரமம் என்று மெதுவாக தலையை திருப்பிய சுவாதி ஓரக்கண்ணால் காருண்யாவை பார்த்தாள்.
சிரமமா? உன்னை.. என்று கையை சுவற்றில் அடித்தாள் அவள்.
ஏய்..என்னம்மா பண்ற? தேவ் கேட்டான்.
பாருங்க சார். எப்படி பேசுறா?
எனக்கு ஹார்ட்ல பிரச்சனை இருக்குன்னு சொல்லி..என்னோட வேதனையை எல்லாரிடமும் காட்ட சொல்றியா காரு. உன்னிடம் சொல்றேன்னு வச்சுக்கோ. நீ என்ன செய்வ?
நல்லா பார்த்துப்ப. நாம ப்ரெண்ட்ஸா சாதாரணமா இருந்திருக்க முடியாம போயிருக்கும். எனக்கு வலிக்கும் போது நான் வலிய சமாளிக்க பார்ப்பேனா இல்லை நீ அழுவதை சமாதானப்படுத்துவதா? சொல்லு? என்னால எல்லாரும் கஷ்டப்படுவீங்கன்னு நான் சொல்லலை. நீ சொல்வியா காரு..என்று சுவாதி கேட்க..
பேசியது போதும். அமைதியா இரு தேவ் கூறினான்.
அவனை பார்த்து விட்டு காருண்யா பக்கம் திரும்பினாள். உனக்கு ஏதாவது ஆகி இருந்தால்? என்று காருண்யா அழுதாள்.
அதான் ஒன்றுமே ஆகலையே?
சரி, நீ ஓய்வெடு என்று தேவ்வை பார்த்து “தேங்க்யூ சார்” என்று வெளியே சென்றாள் காருண்யா.
காரு..என்று சுவாதி அழைக்க, அவள் சென்று விட்டாள்.
சாரி சுவாதி என்றான் தேவ்.
எதுக்கு சார்?
உன்னை அவன்னு எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.
இதெல்லாம் ஒன்றுமில்லை சார். அப்பாவை பார்க்க மட்டும் உதவுறீங்களா சார்?
அவர் ஓய்வெடுக்கட்டும். நீயும் தூங்கு என்றான் தேவ்.
சார், வலிக்குது. ஏதாவது மருந்து தாரீங்களா?
அவள் கையை பிடித்துக் கொண்டு, ரெண்டு நாள் ரொம்ப பெயினா தான் இருக்கும். நான் உன் பக்கத்திலே இருக்கேன் என்றான்.
இல்ல சார். உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க பாருங்க.
உன்னை விட எனக்கு ஏதும் முக்கியமில்லை என்றான் அவன்.
சார்..என்று சுவாதி பேச..கதவை திறந்து, டேய் மச்சான் தேஜூ வாராடா? கௌதம் சொல்ல..
அவளா? என்று பட்டென சுவாதி கையை விட்டு எழுந்து, அவ எதுக்கு வாரா? என்று அவனிடம் அவளை திருப்பி அனுப்பு.
என்னால அனுப்ப முடியாதுடா. அவ காலையில உங்க வீட்டுக்கு வந்திருக்கா. அம்மாவை பார்த்துட்டு போனா? இப்ப உன்னை பார்க்க வந்துருக்கா என்றான்.
கல்லூரி கிளம்பும் முன் சுவாதி தேஜ்வினியை பார்த்துக் கொண்டே, தேவ் அம்மாவிடம் சொல்லி விட்டு தான் கிளம்பினாள். பின் தான் அஸ்வினி போன் செய்து மிரட்டி இருப்பாள். பிடித்திருந்த சுவாதி கையை தேவ் விட, அவளுக்கு கஷ்டமா இருந்தது. ஆனால் கண்ணை மூடி படுத்தாள். நான் பக்கத்திலே இருப்பேன்னு அவன் சொன்னது மட்டும் அவளை தொந்தரவு செய்தது. தேவ் வெளியே செல்வதற்குள் உள்ளே வந்தாள் தேஜூ.
தேவ்..என்று அவனை அழைத்துக் கொண்டே கௌதமிடம், நகருடா எப்ப பாரு நந்தி மாதிரி இடையிலே நிக்குறது?
ஆமா, எனக்கு வேற வேலையே இல்ல பாரு. இவ பேச்சை குறைக்கவேயில்லடா. நீயே பார்த்துக்கோ என்று கௌதம் வெளியேறினான்.
தேவ் என்று தேஜூ அவனை அணைத்தாள். கண்ணை மூடி இருந்த சுவாதி விழித்து பார்த்தாள்.
ஏன்டா, கால் பண்ணா எடுக்கவே மாட்டேங்கிற?
எனக்கு வேற இல்லையா? நீ எதுக்கு வந்த?
என்னடா இப்படி கேக்குற? நான் பாவம் இல்லையா? எனக்கு பதில் செல்லிடு. அப்புறம் உன் பக்கம் தலைய காட்டவே மாட்டேன்.
பதிலா? என்ன பதில் உனக்கு வேணும்?
மறந்துட்டியா? லவ் தான் இல்லண்ணு சொல்லிட்டேல. “லிவிங் டூ கெதர்ல” இருக்கலாமா? தேஷூ கேட்க, சுவாதிக்கு தூக்கி வாரி போட்டது. தேவ் அவளை திரும்பி பார்த்தான். அவள் கண்ணை விரித்து இருவரையும் பார்த்தனர்.
தேஜூ அவளை பார்த்து, ஹே காலையில் பார்த்தோமே? என்று சுவாதியிடம் வந்தாள் தேஷூ. தேவ் அவள் கையை பிடித்து வெளியே இழுத்து சென்றான். சுவாதி கண்ணீர் தேங்கி நின்றது. அவளுக்கு வலிக்கவே கண்ணை மூடி படுத்தாள். அவளுக்கு இவர்கள் சேர்ந்து இருப்பது போன்று தோன்றியது. கண்ணை விழித்து பார்த்தாள். கௌதமும் சீனுவும் அவளிடம் இருந்தனர்.
இருவரையும் பார்த்து விட்டு கௌதமிடம் அண்ணா..எனக்கு ஏதாவது மருந்து தாரீங்களா? ரொம்ப வலிக்குது என்றாள் கண்கலங்கியவாறு.
பெயின் இருக்கும்மா..இப்ப என்ன சொன்ன? சுவாதியிடம் கேட்டான்.
அண்ணான்னு தான சொன்னேன்? தப்பா பாவமாக கேட்டாள்.
என்னையா அண்ணனுன்னு சொன்ன?
ஏன்? ரொம்ப பண்றீங்க சார்? சீனு கேட்டான்.
உன்னோட அக்காவ பார்த்து எப்படி பேசணும்ன்னு கத்துக்கோ என்றான் கௌதம்.
இரும்மா..வாரேன் என்று வெளியே வந்து தேவ்வை பார்த்தான். தேஷூ அவனும் ஒட்டி பேசிக் கொண்டிருக்க, இதுக திருந்தாதுக என்று அவனறைக்கு வந்து, மருந்து ஒன்றை எடுத்து சுவாதிக்கு கொடுத்தான்.
நிஜமா தான் அண்ணன்னு சொன்னீயா?
அக்கா..அண்ணா நல்லா இல்ல. நீ வேணும்னா சாரை தாத்தான்னு கூப்பிடு என்றான் சீனு. அவள் உதட்டை பிதுக்கி எனக்கு வலிக்குது என்று அவள் சொல்லும் போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது. சீனு கண்கலங்க வெளியே வந்து அமர்ந்தான்.
அண்ணா..அசைந்தாலே வலிக்குது என்றாள்.
அப்படி தான் இருக்கும்மா என்று ஊசியை எடுத்தான். கண்ணை மூடிக்கோ அவன் சொல்ல, அவளும் மூடினாள். ஊசி போட்டு அவள் கண்ணை துடைத்து விட்டு, நல்லா தூங்கி எழுந்திரும்மா என்றான் கௌதம். சீனுவை பார்த்து விட்டு ஆருத்ராவும் அவள் அம்மாவும் உள்ளே வந்தனர்.
ஷ்..என்று கௌதம் சத்தம் கொடுத்தான். கௌதம் அண்ணா, என்னாச்சு? எதுக்கு சீனு அழுறான்?
சுவாதிக்கு பெயினா இருக்குன்னு அழுதா. அதான் அவனுக்கு கஷ்டமா இருந்திருக்கு.
அதுக்குள்ளையுமா? தூங்கிட்டா?
இல்லம்மா. நான் தான் மருந்து கொடுத்திருக்கேன். அவள் அழுதுகிட்டு இருந்தாலும் பெயின் அதிகமாகும். அதான் கொடுத்தேன்.
ஆனால் அண்ணா தேவ்வண்ணா?
உங்க அண்ணனுக்கு தேஜ்வினிய சமாளிக்க நேரம் சரியா இருக்கும். நான் சுவாதிய பார்த்துக்கிறேன் என்றான். இருவரும் வெளியே வந்தனர். கௌதம் சுவாதி கையை பிடித்து அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். நல்லா தெரியுதும்மா. உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு நீ ஏத்துக்க மாட்டேங்குற? ஏன்ம்மா உன்னை நீயே கஷ்டப்படுத்துற? அவன் உன்னிடம் தள்ளி இருந்தால் தான் உனக்கு புரியவும் செய்யும். வலியும் சரியாகும் என்று மனதினுள் நினைத்தான்.
சீனுவுடன் காருண்யாவும், சித்திரனும் வந்து அமர்ந்தனர். அக்காவுக்கு ரொம்ப வலிக்கிறதாம் அக்கா என்று அழுதான். சீனு, நான் ஒன்று சொன்னால் தப்பா எடுத்துக்க கூடாது என்று சித்திரனை பார்த்து அவனிடம் தனியா பேசணும். நீ போ என்றான்.
எதுக்கு? என்ன பேசப் போற?
உங்கிட்ட எதையும் நாங்க சொல்லணும்ன்னு அவசியமில்லை என்றாள்.
அவன் கோபமாக நகர்ந்து சென்றான்.
சீனு அப்பாவை பற்றி அவளிடம் இன்றே முடிந்தால் சொல்லிடு. அப்புறம் அவள் யோசிப்பது சரி தான். தேவ் சார் உங்களுக்கு சரிபட்டு வர மாட்டார். நீங்க அதிகமாக காயப்பட வேண்டி இருக்கும்.
அங்க பார்த்தேல்ல..அந்த பொண்ணும் அவரும் இத்தனை பேர் முன்னாடி சாதாரணமா நெருக்கமாக நின்று பேசுறாங்க. இதில் அவர் சுவாதியின் கணவர்னு சைன் பண்ணி இருக்கார். இவங்க பெரிய இடத்துக்காரவங்க. நம்ம சுவாதிய தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க.
முதல்ல அப்பா கூட இருந்தாங்க. ஆனால் இனி நீயும் அக்காவும் தான். நீ என்னை அக்காவ மதிக்கிறதா இருந்தா சொல்றதை கேளு. இன்னும் ஒரு மாசத்துல செம் முடியும். நாம இங்கிருந்து வெளியூருக்கு போகலாம். நான் உங்களுடனே இருக்கிறேன். உனக்கே தெரியும் என்னோட பெற்றோர்கள் பிரிஞ்சு தான் இருக்காங்க. நான் இங்கே இருப்பது எனக்கும் கஷ்டமா இருக்கு. நமக்கு தேவையான அனைத்தையும் நான் தயார் செய்கிறேன். பணமும் தர பார்க்கிறேன். நீயும் படி. அவளும் படிக்கட்டும். வேலை செய்து படித்து விட்டு மூன்று வருடம் தான் அவள் டாக்டர் ஆகிடுவா. அப்புறம் பார்க்கலாம் உன் மாமாவை. ஆனால் சாருக்கோ வேறு யாருக்குமோ நாம் இப்ப பேசியது தெரியக்கூடாது. கிளம்பும் முன் முடிந்தால் சொல்லுங்க இல்லை மெசேஜ் பண்ணிக்கலாம். என்ன சொல்ற? கேட்டாள் காருண்யா.
ஆனால் அக்கா ஒத்துப்பாளா?
கண்டிப்பா ஒத்துப்பா. யாருமில்லாமல் தனியே இருக்கும் போது பேசிக்கலாம் என்றாள். முதல்ல அப்பா விசயத்தை சொல்லி அப்பாவுக்கு செய்ய வேண்டியதை செய் என்றாள்.
சரிக்கா. ஆனால் அவர் அக்காவுக்காக காத்திருப்பாரா?
டவுட்டு தான் சீனு. ஆனால் நீ மத்தவங்கள பத்தி யோசிக்காம உன்னோட அக்காவுக்காக யோசி. நான் அப்பாவை பார்க்கணும் போகலாமா? கேட்டாள். வாங்க என்று இருவரும் கிளம்பினார்கள்.
தேவ் அவர்களை பார்த்து தேஜ்வினியிடமிருந்து நகர்ந்து வந்து, எங்க போறீங்க? கேட்டான்.
சீனு தேஜ்வினியை பார்த்துக் கொண்டே, என்னோட அப்பாவை பார்க்க போறோம் சார் என்று தேவ் முகத்தை கூட பாராது சென்றான். தேவ் கோபமாக, தேஜூ இங்கிருந்து கிளம்பு.
நீ என்னுடன் ஒரு மாதம் டேட்டிங் வரணும்? அப்படின்னா நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றாள்.
முடியாது தேஜூ.
ஓ.கே. அப்ப நான் சுவாதியிடம் பேசிக்கிறேன் என்றாள்.
ஏன் இப்படி சாவடிக்கிற? அவகிட்ட எதையும் பேசி அவளை கஷ்டப்படுத்திறாத. நான் வந்து தொலைகிறேன் என்றான்.
அவனை கடந்து சென்ற இரு செவிலியர்கள்.. சார், அந்த பொண்ணுக்கு புருசன்னு சைன் பண்ணி கொடுத்துட்டு இந்த பொண்ணுடன் என்ன பண்றாரு பாரேன். இந்த பசங்களே இப்படி தான்டி..என்று பேசிக் கொண்டே சென்றனர். தேவ்விற்கு கஷ்டமாக இருந்தது.
ஏய்.என்னடி பேசுறீங்க? அவங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டு அவங்கள பத்தியே இப்படி புரளி பேசுறீங்க? பார்த்துடி சாருக்கு தெரிஞ்சு வேலையை விட்டு தூக்கிறாம? பெரிய இடத்துல இதெல்லாம் சாதாரணம். போய் வேலைய பாருங்கடி என்று அதட்டினாள்.
ஆமா..வக்காலத்துக்கு வந்துட்டா பாரு என்று அவளையும் திட்டிக் கொண்டே சென்றனர். இதை கேட்ட தேஜ்வினி..ஏன்டா புருசன்னா சைன் பண்ணி குடுத்த? பாவம் அந்த பொண்ணு தான் கஷ்டப்படப் போறா?
அவ எதுக்கு கஷ்டப்படணும்? அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு. ஆனால் சொல்ல மாட்டேங்கிறான்னு சொன்ன? ஆனால் வெளிய இப்ப உன்னை பற்றி தப்பா பேசியதை போல் நாளைக்கு அவளை பத்தி பேசுவாங்க?
அவள பத்தி எதுக்கு பேசுவாங்க?
நாம் சுத்திக்கிட்டு இருந்து அவள் அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா. அவளுக்கு உன் மீதும் ஏதுமில்லை. பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு பேசுவாங்க.
நாங்க எங்க கல்யாணம் பண்ணோம்?
இல்லைன்னு உன்னோட குடும்பத்துக்கு மட்டும் தானே தெரியும். ஆனா நீ தான் எல்லாருக்கும் அவ உன்னோட பொண்டாட்டின்னு தம்பட்டை அடிச்சு சைன் பண்ணி இருக்கியே?
பேசுவாங்களா? நான் அதை கழித்து போட்டு விடுறேன்.
அதை எல்லாரும் பார்த்து, விசயம் தெரிந்த பின் அதை கிழித்தால் என்ன? கிழிக்காமல் போனால் என்ன? அவர்கள் பேசிக் கொண்டிருக்க சீனுவும், காருண்யாவும் அவனிடம் வந்தனர்.
சார்..என்று சீனு தேவ்வை அழைக்க, தேஜ்வினி வேண்டுமென்றே அவனிடம் நெருக்கமாகி அவன் கையை கோர்த்தாள்.
சீனு..நான்..என்று தேவ் பேச ஆரம்பிக்க, சினமான சீனு வேகமாக அங்கிருந்த செவிலியரிடம் சென்று உங்க சார் ஃபுல் செஞ்சு கொடுத்த சுவாதியின் ஃபார்ம் வேண்டும்.
எதுக்கு சார்?
அதுல்ல கொஞ்சம் மிஸ்டேக் இருக்கு. நான் சரி செஞ்சு தாரேன். தேவ் வருத்தமுடனும் யோசனையுடனும் அவனை பார்த்தான்.
சார், அதை தர முடியாதே?
அங்கே வந்தார் தேவ் அப்பா. அவரிடம் வந்த சீனு..அவரிடம் கேட்டான். அவர் கண்ணசைக்க செவிலியர் எடுத்து கொடுத்தார். அதை வாங்கிய சீனு அதை கிழித்து எறிந்து, உங்க சாருக்கும் சுவாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சார் ஏதோ பதட்டத்தில் தான் இப்படி எழுதி விட்டார். அவர் ஜஸ்ட் உதவினார். அவ்வளவு தான். இனி என் அக்காவை பத்தி யாரும் பேசத் தேவையில்லை என்று சத்தமிட்டு கூற, அனைவரும் வேடிக்கை பார்த்தனர். தேவ் கண்கலங்கியது.
சிஸ்டர், நீங்க வேற ஃபார்ம் தாங்க என்று வாங்கி அவன் அதை கையெழுத்திட்டு கொடுத்து விட்டு, சுவாதிக்கு டீரிட் பண்ண சாரிடம் பேசலாமா? கேட்டான் செவிலியரிடம்.
அவர் அப்பொழுதே கிளம்பி விட்டார் என்றாள். நாளைக்கு வந்தார்ன்னா..கொஞ்சம் சொல்ல முடியுமா? நான் அக்காவை டிஸ்சார்ஜ் பண்றத பத்தியும் அவளை பார்த்துக் கொள்ளும் விதத்தையும் தெரிஞ்சுக்கணும் என்றான்.
ஓ.கே சார் சொல்றேன் சார் என்றார் செவிலியர்.
சீனு..அதுக்குள்ள என்ன டிஸ்சார்ஜ்? அவளுக்கு சரியாக நாட்களாகும் தேவ் கூறிக் கொண்டே சீனுவிடம் வர, சார்..அங்கேயே நில்லுங்க.
நீ எதுக்கு என்னை சார்ன்னு கூப்பிடுற?
நீங்க டாக்டர் தான சார். அதான் சார்ன்னு கூப்பிடுகிறேன்னு சொல்லிக் கொண்டே தேஜ்வினியிடம் வந்து, “ஆல் தி பெஸ்ட் மேம்” என்று தேவ்வை பார்த்தான்.
சீனு..என்று தேவ் சத்தமிட்டான். தேவ் அப்பா அங்கிருந்தவர்களுக்கு போக சொல்லி சைகை செய்ய..அனைவரும் அகன்றனர்.
சார்..உங்கள நாங்க ஒரே நாள் தான் பார்த்தோம். என்னோட அக்காவுக்கு உதவி நிறைய செஞ்சிருக்கீங்க? அவ இன்று உயிரோட இருக்க காரணமே நீங்க தான் என்று அனைவர் முன்னும் மண்டியிட்டு “ரொம்ப தேங்க்ஸ்” சார். இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க பணம் கட்டிய பில்லை கொடுங்க சார். என்னால மொத்தமா பணத்தை கொடுக்க முடியாது. மாதா மாதாம் பணம் அனுப்புகிறேன்.
ஏய், சீனு என்ன பணம் அனுப்பப் போகிறாயா? தனியா என்ன செய்வ? கௌதம் கேட்டான்.
சார், நான் பார்த்துக்கிறேன். நீங்களும் உதவி செஞ்சுருக்கீங்க. “ரொம்ப தேங்க்ஸ்” சார்.
தேவ் முன் காருண்யா வந்து, நீங்க உங்க வேலைய பார்க்கலாம். என்னோட ப்ரெண்டை நான் பார்த்துக்கிறேன். நீங்க அவளை பார்க்க வர வேண்டாம் என்றாள்.
நான் அவளை பார்க்க வர வேண்டாமா? வேற யார் வருவா?
சார், நீங்க உங்க டேட்டிங்கையும் வேலையையும் பாருங்க. இனி சுவாதி பக்கம் நீங்க வர வேண்டாம்.
கௌதம் அவளிடம் வந்து, ஏம்மா..உனக்கு அம்மா, அப்பா, உடன் பிறந்தவங்கல்லாம் இல்லையா? நீ பார்த்துக்கிறேன்னு சொல்ற?
உங்களுக்கு எதுக்கு நான் என்னை பற்றி சொல்லணும்? அவள நான் ஹாஸ்டல்ல வச்சு பார்த்துக்கிறேன். தேவ்வை பார்த்து அவ அப்பாவுக்கு செய்ய வேண்டிய உதவி செய்யுங்க. அதுவே போதும்.
அது எப்படி? சுவாதிய பார்க்க மட்டும் விட மாட்டிங்கிறீங்க? ஆனால் சுவாதி அப்பாவுக்கு செய்ய வேண்டியதை மட்டும் என் அண்ணா செய்யணுமா?
சரியா கேட்டீங்க? சார் எதுக்கு பாக்கணும் காரு அக்கா? அவர் பையன் உயிரோட தான இருக்கேன். நான் பார்த்துக்கிறேன் என்று தேவ் அப்பாவிடம் வந்து,
சார்..என்னோட அக்காவிடம் அப்பாவை பற்றி சொல்லும் வரை அவர் நீங்க வைத்திருக்கும் இடத்திலே இருக்கட்டும் அக்காவிடம் சொல்லி விட்டு அவள் அவரை பார்த்த பின் நாளை காலை அவரை வாங்கிக்கிறோம். நாங்க இருக்க இடம் கூட இல்லை சார். ப்ளீஸ் என்றான்.
அவர் தேவ்வை பார்த்தார்.
சீனு..இப்ப சுவாதிக்கு அதிர்ச்சியான எந்த விசயமும் தெரியக்கூடாது. அவள் உயிருக்கு ஆபத்தாகும்.
அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் சார். நான் தான் சொன்னேன்ல. நாங்க அவளிடம் பேசி புரிய வச்சிருப்போம் என்றாள் காருண்யா.
எல்லா காரியமும் செய்ய பணம் வேண்டும்? என்ன செய்வீங்க? ஆருத்ரா கேட்டாள்.
நீங்க சொன்ன மாதிரி உங்க அண்ணாவிடம் கேட்டு விட மாட்டோம். பயப்படாதீங்க. எங்க அப்பா பேங்க் போனதே பணத்துக்காக தான். எங்களுக்காக அவங்க பணம் சேர்த்து வச்சிருக்காங்க என்று கண்ணீருடன் அதை வைத்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை முடித்து விடுகிறோம் என்று சொல்லி அழுது கொண்டே சித்திரன் அருகே சென்று அமர்ந்தான்.
காருண்யா அவனிடம் வந்து, சீனு நீ அழுதா அக்காவ எப்படி சமாதானப்படுத்துறது? கேட்டாள். தேவ் தேஜூ கையை எடுக்க, அவள் அவனை போக விடாமல் இறுக்கமாக பிடித்து முறைத்தாள்.
கௌதம் காருண்யாவிடம், உன்னை யாரும் தேடவே மாட்டாங்களா? நீ எப்படி சுவாதிய பார்த்துப்ப. உன்னோட பெற்றோர் என்ன செய்றாங்க? கேட்டான்.
அவள் சீற்றமுடன் அவனிடம் வந்து, சார்..என்னை பற்றி உங்களுக்கு தேவையில்லை. நான் பார்த்துப்பேன் என்றாள்.
இங்க பாரு. அவள் என்னை அண்ணன்னு அழைத்தாள். நானும் உங்களுடன் அவளை பார்த்துப்பேன் என்றான் கௌதம். சீனு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
சார், அவ எமோசனல்ல கூட சொல்லி இருக்கலாம்.
அதான் சொல்லிட்டாள. நானும் உங்களுடன் சேர்ந்து அவளை பார்த்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு குடும்பம் இல்லையா? காருண்யா கேட்டாள்.
அம்மா மட்டும் தான். சொந்தங்கள் இருக்காங்க. ஆனால் நாங்க தனியா தான் இருக்கோம். அதனால அவங்கள எங்களுடன் வச்சி பார்த்துக்கலாம்.
சார், நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கள? அந்த பொண்ணு எப்படி ஏத்துப்பாங்க?
கல்யாணமா? பண்ணலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அவள் எனக்கு செட் ஆக மாட்டா. இப்பொழுதைக்கு நான் திருமணம் பற்றி யோசிப்பதாக இல்லை என்று தேஜ்வினியை பார்த்தான். அவள் கண்டுகொள்ளாமல் நின்றாள்.
உங்க அம்மா எப்படி ஏத்துப்பாங்க?
என்னோட அம்மாவுக்கு என் மேல நம்பிக்கை அதிகம். தப்பு செய்ய மாட்டேன்னு அவங்களுக்கு தெரியும் என்றான். காருண்யா யோசித்தாள்.
சீனு எழுந்து அவனிடம் வந்து, அக்கா..எழுந்து உங்களிடம் பேசலைன்னா என்ன செய்வீங்க?
நான் என்ன செய்வது? நான் அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு என் வேலையை பார்க்க போயிருவேன்..இரு..எதுக்காக கேக்குற? கேட்டான் கௌதம்.
அக்காவிடமே நீங்க பேசிக்கோங்க என்று சீனு சொல்ல, ஓ.கே சுவாதி எழுந்ததும் நான் பேசுகிறேன் என்றான் கௌதம்.
ஹலோ சார், நான் சொன்னது காரு அக்காவிடம் பேசிக்கோங்கன்னு சொன்னேன். சுவாதிய தான் எல்லாரும் ஈசியா ஏமாத்திடுவீங்களே? என்று தேவ்வை பார்த்தான்.
அப்படியா? என்று ஏம்மா..நான் உதவலாம்ல? கேட்டான் புன்னகையுடன்.
சொல்றேன் சார். ஆனால் இப்ப முடியாது. சுவாதி எப்ப விழிப்பாள்? என்று காருண்யா கேட்க, எதுக்கு விழிக்கணும்? என்ன செய்றா? தேவ் கேட்டான். காருண்யா அவனை முறைத்தாள்.
அவ இப்ப முழிச்சிருவா. நீங்க பேசி புரிய வையுங்க. நான் வாரேன் என்று கௌதம் அவளிடம் கூற, காருண்யா, சீனுவை பார்த்தாள்.
அக்கா விழிக்கட்டும். போகலாம் என்றான் சீனு. அவனருகே வந்து அமர்ந்தாள்.
அவ தூங்கிட்டாளா? கேட்டான் தேவ். அவன் முன் கை கட்டி வந்து நின்றான் கௌதம்.
நீ தான் அவளோட கையை விட்டுட்டு வந்துட்டேல. அவ இருந்தா என்ன? இல்லாட்டி உனக்கென்னடா? தேவ் தேஜூ கையை தட்டி விட்டு கௌதம் சட்டையை பிடித்து, ஒழுங்கா பேசு என்றான்.
நான் என்ன தப்பா பேசிட்டேன்? கௌதமும் சத்தமிட்டான். சீனுவும் காருண்யாவும் அதிர்ந்து கௌதமை பார்த்தனர். சுவாதிக்காக தன் உயிர்த்தோழனுடன் சண்டை போடுகிறானா? என்று பார்த்தனர்.
அவ வலியை உன்னிடம் சொன்னாலே மறந்துட்டியாடா? இவள கூட்டிட்டு வந்தது சரி. ஆனால் உள்ள அவள் வலியால் அழுதாள் உனக்கு தெரியுமா?
நான் அவளுக்கு ஊசி போட்டு தூங்க வச்சிருக்கேன். போடக் கூடாது தான். ஆனால் அவள் ரொம்ப அழுதா. சமாதனப்படுத்த முடியலை. அதான் தூங்குறா. இப்ப எழுந்திருவா?
தேவ் அவனை விலக்கி விட்டு சுவாதி இருக்கும் கதவருகே வந்தான். அவனை உள்ளே செல்ல விடாமல் கௌதம் வந்து நின்று, இனி என்னோட தங்கச்சிய நான் பார்த்துக்கிறேன். நீ தலையிட்டால் ப்ரெண்டுன்னு பார்க்க மாட்டேன் என்றான்.
அண்ணா, அவளுக்காக தேவ் அண்ணாவுடனே சண்டைக்கு வர்றீங்க? ஆருத்ரா கோபமாக கேட்டாள்.
ஆரு. நீ அமைதியா போ என்றான் கௌதம்.
உனக்கு சுவாதிய பிடிச்சிருக்கா? கேட்டாள்.
நான் சொன்னது உனக்கு கேட்கலையா? அவள தங்கச்சின்னு சொன்னேன். உன்னோட அண்ணன்னு நினைச்சியா? அவன் ஒழுங்கா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. ஒரு பொண்ணு ப்ரெண்டா இருந்த அவளிடம் எல்லையுடனே பழகணும் மீறினால் இப்படி தான் ஆகும் என்றான்.
என்னடா சொன்ன? தேவ் அப்பா சத்தமிட்டார்.
உங்க பிள்ள படிக்கும் போது பிராஜெக்ட்டுன்னு சொல்லி வெளிய போனது இந்த நிக்கிறல்ல..இவளுடன் ஊர் சுத்த தான். இருவரும் ப்ரெண்ட்ஸ் மாதிரியா நடந்துக்கிட்டாங்க. காதலிக்கிறவங்க எங்கெல்லாம் போவாங்கல்லோ அங்கெல்லாம் அவளோட போயிருக்கான்.
சார்..அதை மீறியும் நடந்திருக்கு என்று சுற்றி பார்த்த கௌதம் அவர் அருகே சென்று உங்க புள்ள உங்களுடன் முதல் முறையாக சண்டை போட்டு வெளியே சென்றது தான உங்க எல்லாருக்கும் தெரியும் என்று தேவ்வை பார்த்தான்.
கௌதம்..போதும் என்றான் தேவ் சீனுவை பார்த்துக் கொண்டு.
என்னடா பயமா இருக்கா? கௌதம் கேட்டு விட்டு, அவன் குடிச்சிட்டு தேஜூவை தான் பார்க்க போனான். நான் அவளை தற்செயலாக பார்க்க போனேன். ஆனால் இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாங்க என்று அவன் முடிக்கும் போது தேவ் கௌதமை அடித்திருந்தான்.
தேவ் அம்மா அவனிடம் வந்து, அவனை எதுக்கு அடிக்கிற? அவன் சொன்னது உண்மையா? கேட்டார். தேவ் அமைதியாக இருந்தான். அவன் அம்மா அவனை அடித்து விட்டு அழுதார்.
தேவ் அப்பா தேஜ்வினிடம் நீ கிளம்பும்மா. அப்புறம் பேசலாம் என்றார்.
நான் போக மாட்டேன் அங்கிள். எனக்கு தேவ் தான் வேணும் என்றாள். தேவ் அம்மா அவளை பார்த்து முறைத்தார்.
போன்னு சொல்றேன்ல என்றார் அவர் சீற்றமுடன்.
நோ..அங்கிள், நான் இப்ப போனா அவன் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டான்.
அதுக்கு? உன்னை?
நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லவா சார்? சீனு கேட்டான். அனைவரும் அவனை பார்த்தனர்.
உங்க குடும்ப விசயம் தான் நான் தலையிடக்கூடாது. நீங்க விருப்பப்பட்டா சொல்றேன் என்றான் சீனு தேவ் அப்பாவிடம்.
சொல்லு?
சார், உங்க பையனுக்கும், இந்த மேடமுக்கும் திருமணம் செஞ்சு வச்சிருங்க என்றான். சீனு, என்ன பேசுற? காருண்யா அவனிடம் வந்தாள்.
அக்கா..நான் தப்பா ஏதும் சொல்லவில்லை. இது என்னோட யோசனை மட்டும் தான் என்றான்.
நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என்றான் தேவ். எனக்கு சுவாதி தான் வேண்டும் என்றான்.
என்னடா சுவாதி? என்று தேஜ்வினி அவனிடம் வந்தாள்.
ஆமா. எனக்கு சுவாதி தான் வேண்டும் என்றான். சீனு கோபமாக சார்..என்னோட அக்காவை நான் இப்பொழுதே கூட்டிட்டு போறேன் என்று தேவ் அப்பாவிடம் கூறினான்.
சீனு? உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாது தேவ் சத்தமிட்டான்.
அவ என்னோட அக்கா. அவளுக்கு என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும்.
ஆமா. அவனோட அக்காவை அவன் பார்த்துப்பான். இப்பவே நீ என்னுடன் வரணும்? இல்ல அந்த வீடியோ எல்லாருக்கும் பகிரப்படும் என்றாள் தேஜ்வினி.
வாவ் தேஷூ..சூப்பர். கவுண்டர் அட்டாங்க குடுக்கிறதா உனக்கு நனப்பா? அது வெளிய வந்தா அவன பத்தி விட உன்னை தான் எல்லாரும் கேவலமா பேசுவாங்க. நான் கூட உன்னை நல்ல பொண்ணு தான்னு லவ் பண்ணேன். அன்று நேரில் பார்த்ததிலிருந்து எனக்கு உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. அதுக்கு அவன் தப்பு செய்யலன்னு சொல்லலை என்ற கௌதம்..
உன்னிடம் பாதி தான் இருக்கு. ஆனால் என்னிடம் முழுசா இருக்கு என்றான்.
முழுசா? என்று தேவ் கௌதமை பார்த்தான்.
ம்ம்..நீ குடிச்சிட்டு தான் அவ வீட்டுக்கு வர்றன்னு தெரிஞ்சு தான் வீடியோ எடுக்க செட் செய்து அவள் அறையை அவளே தயார் செய்தாள். ஒரு வேலை நீ நிதானத்தில் இருந்தால் உன்னை கவிழ்க்க ஏற்பாடும் செய்து வைத்திருந்தாள் என்று தேஷூவிடம் வந்து..
தேஷூ செல்லம் ஒரு விசயத்தை நீ மறந்துட்ட. வீடியோ எடுத்தியே அதை முதல்ல இருந்தா எடுப்ப என்று சிரித்த கௌதம்..நான் அன்று வந்து உங்களை அந்நிலையில் பார்த்து கோபத்தில் உள்ளே வர நினைத்தேன். ஆனால் உன் கண்கள் தேவ்விடம் இல்லை. அது ஓரிடத்தில் இருக்க, நீ அவனை வைத்து வீடியோ எடுக்குறன்னு தெரிஞ்சிருச்சு. நான் செல்லாமல் அங்கேயே இருந்தேன். நீ தூங்கிய பின் வீடியோ எடுத்து பார்த்தேன். அப்பொழுது தான் உன் சுயரூபம் தெரிந்தது. வீடியோவ அப்படியே விட்டுட்டு தூங்கிட்ட. நான் முழுதையும் எடுத்து விட்டு பாதியை மட்டும் தான் வைத்தேன். நீ என்ன செய்யப் போறன்னு பார்க்க நினைச்சேன். இத்தனை நாள் இல்லாம ஏன் இப்ப வந்து அவனை மிரட்டுற?
நீ அமெரிக்காவுக்கு போகலைல்ல? கேட்டான். அவள் சீற்றத்துடன் கௌதமிடம் வந்து, எங்கடா வச்சிருக்க குடு..குடு..கத்தினாள்.
கூல் பேபி, என் பக்கத்துல வராத. கொஞ்ச நேரம் இரு. நான் குளிச்சிட்டு வந்து தரவா? உன் கை பட்டது எனக்கு அருவருப்பா இருக்கு என்றான் கௌதம்.
அருவருப்பா? என் பின்னாடி சுத்தும் போது உனக்கு தெரியலையா?
சுத்தினேன். நல்ல பொண்ணுன்னு காதல் இருந்தது. சுத்தினேன். ஆனால் இப்ப ச்சீ..உன்னை பார்த்தாலே உமட்டிக் கொண்டு வருது என்றான்.
ஏய்..அதிகமா பேசுற?
யாருடி அதிகமா பேசுறது? அவனுடைய தொனி மாற, அவள் பின் நகர்ந்து சென்றாள். சொல்லு எதுக்கு தேவ்வை பாலோ பண்ண? உனக்கு அவன் தேவையில்லை. என்னன்னு சொல்லு? கேட்டான் கௌதம். தேவ் அதிர்ந்து அவளை பார்த்தான்.
என்ன சொல்ற? நான் தேவ்வை லவ் பண்றேன் என்றாள்.
இல்லை. நீ அவனை காதலிக்கலை. உன்னோட பெற்றோர் எங்கே?
அவங்க ஃபாரின்ல இருக்காங்க..
இல்லை. அவங்க செத்து போயிட்டாங்க என்றான். அனைவரும் அதிர்ந்து பார்க்க, கௌதம் என்ன சொல்ற? தேவ் அம்மா அவனிடம் வந்தார்.
அம்மா, இவ தான்..இவ தான் அவளோட அம்மா, அப்பாவை கொன்றுக்கா.
இல்லை. நான் ஏதும் செய்யலை.
என்னிடம் ஆதாரம் இருக்கு என்றான் கௌதம். தேவ்வால் நம்பவே முடியவில்லை.
என்னருமை நண்பா..உன்னோட தேஜூல்ல இவ. உயிர்த்தோழில்ல என்று தேவ்வை பார்த்தான். அவ அப்பாகிட்ட சொத்தை அவ பேர்ல எழுதி வைக்க சொன்னா? ஆனா அவங்க பண்ணலை. இவள் போக்கு சரியில்லைன்னு ஆசிரமத்துக்கு கொடுக்கப் போறதா பேசி இருந்திருக்கார் என்று அவள் அப்பா பேசிய ஆசிரமத்து ஆட்களிடம் பேசியதை காட்டினான் கௌதம்.
இரவு குடிச்சிட்டு வந்து அவங்க அப்பாவோட பிரச்சனை செஞ்சிருக்கா. கைகலப்பில் அவரை கீழே தள்ளி விட்டாள். அவர் படியிலிருந்து உருண்டு இறந்து விட்டார். அதை பார்த்த அம்மாவை அவளே மேலிருந்து தள்ளி விட்டு கொன்றிருக்கிறாள். அந்த ஆசிரமத்து ஆட்களிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதும் ஆகக்கூடாதுன்னா யாருக்கும் எந்த விசயமும் தெரியக்கூடாதுன்னு மிரட்டி இருக்கா. இது அவள் பள்ளியில் படிக்கும் போதே செய்திருக்கிறாள். நம்மிடம் பெற்றோர் ஃபாரின்ல இருக்காங்கன்னு..
அப்பப்பா..என்னவொறு தத்ரூபமான நடிப்பு? இப்ப அவ உன்னை டார்கெட் பண்ணது? உனக்கு சுவாதியை பிடிச்சிருக்கு. அவளும் டாக்டருக்கு படிக்கிறாள். எங்க அவளை கல்யாணம் செய்தால் அனைத்தும் அவளுக்கு சொந்தமாகி விடுமென்று தான் இதை வைத்து மிரட்டி இருக்கிறாள். என்ன டார்லிங் சரியா? கேட்டான் கௌதம்.
அவனை அடிக்க கையை ஓங்கினாள் தேஜ்வினி. அவள் கையை பிடித்து தள்ளி விட்டாள் காருண்யா.
உன்னை மாதிரி பொண்ணுங்களால தான பணக்கார பசங்கள பொண்ணுங்க காதலிச்சாலே தப்பா பேசுறாங்க. எல்லாத்தையும் விடு. உன்னோட அம்மா, அப்பாவை நீயே கொன்றுக்க? மனுசியா நீ? கேட்டாள்.
ஏய்..என்ன உன்னோட ப்ரெண்டு நல்லா இருக்கான்னு பேசுறியா? தேஜ்வினி கேட்டாள். அவள் கன்னத்தில் அறைந்தார் தேவ் அம்மா.
ஏன்டி, உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பா போச்சுடி. நீயெல்லாம் பொண்ணா? தேவ் அம்மா திட்டி விட்டு, கௌதம் போலீஸ்க்கு கால் பண்ணு என்றார்.
அம்மா அவங்க அப்பொழுதே வந்துட்டாங்க என்றான் கௌதம். அவள் சட்டென பக்கமிருந்த காருண்யாவை பிடித்து இழுத்து அவள் கழுத்தில் கை வைத்தாள்.
ஏய்..அவள விடு கௌதம் கூற, உனக்கென்ன? வாயை மூடு என்று அவள் விரல் நகத்தை ஆயுதமாக்கி காருவின் கழுத்தில் வைத்தாள் தேஜ்வினி. போலீஸாரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
அக்கா..என்று சீனு அவளிடம் வர, பக்கத்துல வந்த இவ செத்துருவா என்றாள் அவள்.
தேஜூ, அவள விட்டுரு தேவ் கூறினான்.
தேவ், நீ என்னை இவங்களிடமிருந்து காப்பாற்றணும் என்றாள். அவன் அமைதியாக இருக்க..அவள் நகத்தை கழுத்தில் மெதுவாக அழுத்தினாள். காருவின் கழுத்தில் லேசாக இரத்தம் எட்டிப் பார்த்தது. தேவ்வும் கௌதமும் பார்த்துக் கொண்டனர்.
சார்..அவ பக்கத்துல வராதீங்க. அவ காருவை ஏதும் செய்து விடாமல் என்று கௌதம் சொல்ல, தேஜ்வினி திரும்பி பார்த்தாள். கௌதம் தேவ்விடம் கண்ணசைக்க, கௌதம் காருவிடம் விலக சொல்லி சைகை செய்தான். தேஜூ முன் திரும்பும் போது..கௌதம் விலகி குனிந்த காருண்யாவை பிடித்து இழுத்தான். தேவ் தேஜூ கையை பிடித்து வளைத்தான்.
காருண்யா கௌதம் மீது சாய்ந்து கழுத்தில் கை வைக்க, இரத்தம் வந்தது. கௌதம் செவிலியரை கத்தி அழைத்தான். ஏன் தேஜூ? கௌதமை விட உன்னை தான் நான் நம்பினேன். என்ன காரியம் செஞ்சிட்ட?
உன் மேல தப்பே இல்லாத மாதிரி பேசாத..தேஜ்வினி தேவ்விடம் பேச போலீஸ் ஆட்கள் அவளை இழுத்து சென்றனர்.