அத்தியாயம் 102
தேவ்விற்கு அழைப்பு வர அதிகாலையிலே ஹாஸ்பிட்டலுக்கு சென்று விட்டான். அவன் வேலையை முடித்து விட்டு அவன் அறையில் மற்ற நோயாளிகளின் விவரத்தையும் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தான். வீட்டிலிருந்து சாப்பாடு வரவே சாப்பிட்டு விட்டு, சுவாதி அப்பாவிற்கு போன் செய்து அங்கிள் நம்ம ஏரியாவிலே வீடு இருக்காம். மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவேன். அப்பொழுது சென்று பார்க்கலாம் என்று அவரிடமும் அவன் அம்மாவிடமும் பேசி விட்டு போனை வைத்தான்.
சற்று நேரத்திலே வரவேற்பு அறையிலிருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்து வரச் சொல்லுங்க என்று வைத்து விட்டு, அவள் காலேஜ் போவதாக கூறினாளே? ஒரு வேலை ஆரு கூறியதை போல் அவளுக்கும் என்னை பிடித்திருக்குமோ? காதலை கூற வருகிறாளோ? என்று ஆர்வமானான்.
கதவை திறந்து உள்ளே வந்தாள் சுவாதி. அவன் வேலையை கவனித்துக் கொண்டே அவளை பார்த்தான். அவள் நின்று கொண்டிருக்க, உட்காரு என்று சீட்டை காட்டினான்.
ஆனால் அவள் அமராமல் நான் உங்களிடம் ஒன்று சொல்லணும் தேவ் என்றாள்.
ம்ம்..சொல்லு என்றான் ஆர்வமுடன். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.
தேவ்..அது வந்து..என்று அவள் தயங்கி இழுக்க, அவளை சட்டென நிமிர்ந்து பார்த்தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டாள். சுவாதிக்கு கோபமாக இருந்தாலும் சாதாரணமாக இருந்தாலும் சார் என்று தான் அழைப்பாள். அவனுக்கு சந்தேகம் எழுந்தது.
என்ன திடீர்ன்னு? நேற்று தான் ஓவரா பேசின? இப்ப என்ன கல்யாணமெல்லாம்?
நேற்று..நேற்று..நான் ஏதோ பயத்தில் பேசிட்டேன். ஆனால் இப்பொழுது புரிஞ்சிடுச்சு தேவ். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று எழுந்து அவனருகே வந்து அவனது கழுத்தை கட்டிக் கொண்டு, மாமாவிடம் பேசலாமா? கேட்டாள். இவள் அஸ்வினி என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
மாமாவிடம் பேசலாமே? என்று எழுந்து போனை எடுத்து, நான் சொன்னேன்ல. உங்க மருமகள் வந்துருக்கா என்று வாங்க என்று போனை அணைத்து விட்டு, அவளை இழுத்து அவன் நெருக்கமாக வைத்திருக்க, அவள் அவனை முத்தமிட நெருங்கினாள். அவளை தள்ளி விட்டு நீ என்ன தான் வேசம் போட்டாலும் என் சுவாதியாக முடியாது என்றான்.
ஏய்..என்று அவனிடம் அவள் வந்தாள். கௌதம் உள்ளே வந்து அவளை ஓங்கி அறைந்தான். இருவரும் அவளை மாறி மாறி அடிக்க, அவ உனக்கு கிடைக்க மாட்டா. நான் விட மாட்டேன் என்று கத்தினாள்.
என்னடா வர்றாங்களா? இப்ப வந்துருவாங்கடா மச்சான் என்று கௌதம் சொன்னான்.
போலீசை வர வச்சுட்டீங்களாடா? நான் எப்படி இங்க வந்தேன்னு தெரியுமா? போலீஸ் மூன்று பேரை கொன்னுட்டு வந்துருக்கேன். இருவரும் அதிர்ந்து அவளை பார்த்து, கொலையா? கேட்டனர்.
ஆமாம் என்று பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்தாள். கௌதம் மண்டையை பதம் பார்த்தது. போலீஸ் வர அனைவர் முன்னும் அவளை பிடித்து இழுத்து சென்றனர். தேவ் அப்பா அறையிலிருந்து எல்லாத்தையும் பார்த்திருப்பார். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. அவரும் கீழே ஓடி வந்தார். அப்பா..நீங்க இங்கேயே இருங்க. நான் பார்த்துட்டு வாரேன் என்று தேவ் செல்ல..தலையில் கட்டை போட்டு விட்டு கௌதமும் அவன் பின்னே சென்றான்.
மழை ‘சோவென” பொழிய சற்று நேரத்தில் ஹாஸ்பிட்டலுக்கு தலைதெறிக்க ஓடி வந்தாள் சுவாதி. அனைவரும் அவளை அஸ்வினி என நினைத்து உள்ளே விடாமல் பிடித்து தள்ளினார்கள். தேவ் அப்பா அங்கு வந்தார். அவரை தேவ் வீட்டில் புகைப்படத்தில் பார்த்திருப்பாள்.
அங்கிள்..அங்கிள்..சாரை வரச் சொல்லுங்க. ப்ளீஸ்..ப்ளீஸ் என்று கையெடுத்து கும்பிட்டாள்.
என்னோட மகனையே வளைக்க பார்க்கிறாயா? கொலைகாரி என்று அவர் அவளிடம் சத்தமிட, அவள் புரியாமல் கொலைகாரியா? நானா? இல்லை அங்கிள். ப்ளீஸ் இப்பொழுது அவர் உதவி வேண்டும். இல்லைன்னா..என்று கதறி அழுதாள். இந்த உதவி மட்டும் அங்கிள். அப்புறம் நான் மொத்தமாக அவர் வாழ்விலிருந்து சென்று விடுகிறேன்.
இந்த பொண்ண உள்ள விடாதீங்க. போலீசுக்கு கால் பண்ணுங்க என்று அவர் சொல்லி விட்டு உள்ளே சென்றார். அங்கிள்..போகாதீங்க..ப்ளீஸ் அங்கிள் என்று கதறினாள்.
வெளிய போம்மா. போலீஸ் இப்ப தான் உன்னை பிடிச்சிட்டு போனாங்க. அதுக்குள்ள அவங்களிடமிருந்து தப்பித்து அய்யாவை கொல்ல வந்திருக்கியா? சிடுசிடுவென பேசி அவளை பிடித்து வாட்ச்மேன் தள்ள சுவாதி கீழே விழுந்தாள்.
போலீஸ் இப்ப தான் பிடிச்சிட்டு போனாங்களா? அசு இங்க வந்தாளா? அவள் அங்கே தானே இருக்கணும்.
இவருக்கு..இவருக்கு..என்று பதறி எழுந்து அவரிடம் வந்து, சாருக்கு.. சாருக்கு..ஒன்றுமில்லையே? அவர் நல்லா இருக்காரா? தேவ் சார் நல்லா இருக்கார்ல.
கொஞ்சம் விட்டா கொன்னுருப்ப நீ தான்டி என்று அவளை மீண்டும் தள்ள..என்னை மாதிரி அவள் வந்தாளா?
ஏன்க்கா இப்படி பண்ற? என்று அவரிடம் சென்று மண்டியிட்டு ப்ளீஸ் அண்ணா போன் தாங்க. என்னோட அப்பாவையும் தம்பியையும் கொல்லப் போறாங்க. அவரிடம் பேசணும்..என்று கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதாள்.
ஏம்மா..போகாம ஏன் உயிர வாங்குற? போனை குடுத்து என்னையும் போலீஸ் பிடிச்சிட்டு போகவா?
இல்லண்ணா..அந்த மாதிரி நடக்காது என்றாள்.
போம்மா..என்று அவர் அவளை விரட்டினார். மழையில் அழுது கொண்டே அமர்ந்து தலையில் அடித்து அழுதாள் சுவாதி. தேவ் அப்பா அவளை பார்த்து..அந்த பொண்ணிடம் திமிரு தெரிஞ்சது. ஆனால் இந்த பொண்ணு அழுதுகிட்டே இருக்கே. நடித்து ஏமாற்றப் பார்க்குதோ?
போலீஸ் வந்து சுவாதியை இழுத்து செல்ல அவள் மயங்கி கீழே விழுந்தாள். போலீசே அவளை அதே ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.
தேவ்வும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல..அவர்களையும் ஏமாற்றி ஓடினாள் அஸ்வினி. தேவும் கௌதமும் முதலில் அவளை பிடிக்க..
மணி என்ன ஆகுது? கேட்டாள்.
எதுக்குடி கேட்குற?
சொல்லுடா இல்ல நீ யார உயிரா நினைக்கிறியோ அவ செத்துருவா என்று மிரட்டினாள்.
ஏய்..என்று தேவ் சத்தமிட்டான்.
சவுண்டு கொடுக்குறத விட்டுட்டு டைம் என்ன சொல்லு?
மணி பன்னிரண்டாகப் போகுது.
சூப்பர். இன்னும் ஒரே மணி நேரம் தான். இனி நான் நிம்மதியாக வெளிநாட்டுக்கு போகலாம் என்று ஓட அவளை பெண் போலீஸ் பிடித்து அடித்து இழுத்து செல்ல..எல்லாம் முடியப் போகுது என்று சிரித்துக் கொண்டே சென்றாள். ஆனால் ஓரிடத்திலிருந்து தோட்டா அவள் மீது பாய்ந்தது. அவள் இறந்தாள். போலீஸ் ஒருவர் அவளை சுட்டு விட்டார் இறந்த தன் நண்பனுக்காக.
என்னடா சொல்றா? ஒரு மணி நேரமா?
வா..முதல்ல கிளம்பலாம் என்று இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.
மயங்கிய சுவாதியை பற்றியே அனைவரும் பேச உள்ளே வந்தனர் தேவ்வும் கௌதமும்.
சார்..அந்த பொண்ணை பிடிச்சுட்டாங்க. அவளே வந்து மாட்டிகிட்டா..என்றார் செவிலியர் ஒருவர்.
யாரு? என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நடக்க ஆருத்ரா இருவரையுமே கவனிக்காமல் சென்று அந்த பொண்ணு எங்க? கத்தினாள் செவிலியர் ஒருவரை பிடித்துக் கொண்டு.
ஆரு..என்னாச்சு? எதுக்கு கத்திக்கிட்டு இருக்க?
அண்ணா..அண்ணா..திக்கி ஆருத்ரா பேச..அவங்க அம்மாவும் வந்து, என்னாச்சும்மா? என்றாள் தெரியலம்மா என்று அவள் மீண்டும் கத்த அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
சின்னம்மா..அந்த பொண்ணு அங்க தான் இருக்காங்க. ஏய்..என்னன்னு சொல்லு? தேவ் கேட்க, நீ எங்க தான் போய் தொலைஞ்ச? என்று அவனை திட்டி விட்டு, சுவாதி இங்க வந்துருக்கா. ஆனால் இவங்க எல்லாரும் அவளை அஸ்வினின்னு என்று நிறுத்தினாள்.
அவ எதுக்கு இங்க வந்தா? என்ன பண்ணாங்க? என்று அவனும் சத்தமிட்டான்.
டேய்..வா. பார்க்கலாம் என்று கௌதம் அவனை இழுத்து சென்றான். இருவரும் அறைக்குள் நுழைய தேவ் சுவாதியை பார்த்து அவளிடம் வந்து,
சுவாதி,..என்று அவளை பார்த்து விட்டு, அவளை என்ன செஞ்சீங்க? என்று அவன் அப்பாவை பார்த்து கத்தினான். பின் அவளை தொட்டு பார்த்தான். உடல் கொதித்தது.
சார், கொலைகார பொண்ணுக்காக எதுக்கு சார் இப்படி பதருறீங்க? போலீஸ் கேட்டார்.
அய்யோ..அவ செத்துட்டா. உங்க போலீஸ் ஒருவரே கொன்னுட்டாங்க. இவ என்னோட சுவாதி என்று கத்தினான். அங்கிருந்தவர்கள் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
அப்பா..என்று சினத்துடன் சுவாதியை ஓய்வெடுக்கும் அவனறைக்கு தூக்கி சென்று அவளை படுக்கையில் போட்டு செவிலியரிடம் பேசி சிகிச்சை அவளுக்கு முடிந்ததை அறிந்து என்ன நடந்ததுன்னு கேட்டு கோபமுடன் அமர்ந்திருந்தான். அவனருகே அவன் அம்மா, அப்பா, ஆருத்ரா, கௌதம் இருந்தனர்.
காலேஜூக்கு போறேன்னு தான்டா கிளம்பினா? அவங்கள எங்க? அண்ணா..பேங்க் போனாரு. அந்த பையன் பக்கத்துல கடைக்கு போறேன்னு சொன்னான். இருவருமே வரலை.
இன்னும் வரலையா? இவள் என்னை தேடி வந்தாளா? எதுக்கு?
தேவ்..அந்த அஸ்வினி சொன்ன ஒரு மணி நேரத்துக்கு பதினைந்து நிமிஷம் தான் இருக்கு. ஒரு வேலை அவங்களை ஏதும் செய்ய திட்டம் போட்டிருப்பாளோ?
என்ன தான் டா நடக்குது? தேவ் அப்பா கேட்டார்.
ஏங்க நான் சொன்ன பொண்ணு இவ தான் என்றார் தேவ் அம்மா.
சுவாதி கண்விழித்தாள். சுற்றி இருந்தவர்களை பார்த்து தேவ்வை பார்த்து, சார்..அப்பா, சீனுவ அக்கா..என்று நெஞ்சை பிடித்து பல்லை கடித்தவள். சார்..போங்க என்று போனை அவனிடம் கொடுத்தாள். அவள் மூச்சு வாங்க நெஞ்சை பிடித்து அமர்ந்தாள்.
சுவாதி..என்னாச்சு? என்று அவன் பதற,..போங்க சீக்கிரம் என்று சத்தமிட்டாள்.
அம்மாடி என்னாச்சுமா?
ஆன்ட்டி, நான்..நான்..என்று தேவ்வை பார்த்து கண்ணீருடன்..சார், நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன். சாரி சார் என்று பேச முடியாமல் நெஞ்சை பிடித்து, நான் உயிரோட இருக்க முடியாது சார். ரொம்ப கஷ்டம். சாரி சார். சார் என்று அவன் கையை பிடித்து, ப்ளீஸ் அப்பாவையும் சீனுவையும் கொல்லப் போறாங்க. காப்பாத்துங்க சார் என்றாள்.
அவள் போன் ஒலித்தது. தேவ்..கண்ணீருடன் என்ன சொல்ற? உனக்கென்ன? என்று பதறினான். பைத்தியம் மாதிரி பேசாத சுவாதி ஆருத்ரா திட்டினாள். வலியிலும் புன்னகைத்த சுவாதி, அங்கிள் நீங்க அடுத்த முறை எங்க ஊர் விழாவுக்கு போங்க. அங்க குலோப்ஜாமுன் ரொம்ப ஸ்பெசல். சூப்பராக இருக்கும் என்றாள் தேவ் அப்பாவை பார்த்து. அவரிடம் போனில் பேசிய பொண்ணு இவள் தான்னு தெரிந்தது. அவர் தேவ்வை பார்த்தார்.
போனை கௌதம் வாங்க, தேவ் அவளை தூக்கிக் கொண்டு ஹார்ட் சர்ஜன் அறைக்குள் நுழைந்தான். அந்த மருத்துவர் நோயாளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் பாருங்க சார் என்னோட சுவாதிக்கு நெஞ்சு வலிக்குது பாருங்க சார் என்று கத்தினான்
சார்..வேண்டாம். சார் சீனு? அவனை பார்க்க போலீசுடன் அப்பாவை அனுப்பி இருக்கேன். அவங்க பார்த்துப்பாங்க.
அவள் போன் மீண்டும் ஒலிக்க, கௌதம் போனை எடுத்தான். அந்த பக்கம் காருண்யா அழுது கொண்டே,எங்கடி இருக்க? ஏன்டி சொல்லலை? இவ்வளவு வலிய வச்சுக்கிட்டு எப்படிடி சிரிச்ச?
ஹலோ யாரு நீங்க?
நான் காருண்யா. நீங்க யாரு? சுவா எங்க?
போனை பிடுங்கிய சித்திரன்..சார் சுவாதி எங்க? அவளுக்கு பெரிய பிரச்சனை இருக்கு? எதையும் சொல்லாம மறைச்சிருக்கா. அவள் உயிருக்கே ஆபத்து.
இந்த வாய்ச எங்கேயோ கேட்டது போல் இருக்கே? பேசிக் கொண்டே கௌதமும் சுவாதி இருக்கும் அறைக்கு வந்தான்.
முதல்ல நீ யாருன்னு சொல்லு?
சார்..நான் சுவாதியோட காலேஜ் மெட். அவளை பார்க்கணும்.
அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கா.
ஹாஸ்பிட்டல்லா? எந்த ஹாஸ்பிட்டல்? என்னாச்சு பெயின் அதிகமாயிருச்சா?
ஹார்ட் பீட் குறைவா இருக்கு. ஆப்ரேசன் உடனே செய்து ஹார்ட்டை மாற்றணும். ஆனால் காப்பாத்துறது கஷ்டம் என்றார் ஹார்ட் சர்ஜியன்.
இல்ல..சுவாதிக்கு ஒன்றுமில்லை அழுதான் தேவ். போனிலிருப்பவனுக்கு சத்தம் கேட்க, அண்ணாவா? ஆருத்ரா ஹாஸ்பிட்டல்லா சார்? சித்திரன் கேட்டான்.
ஆமா..நான் அப்புறம் பேசுறேன்னு கௌதம் பதட்டத்தில் போனை வைத்தான்.
சார் என்று உதட்டை அசைத்தவள் கையை தேவ்விடம் நீட்டினாள். கண்கள் மெதுவாக மூட..சுவாதி வேண்டாம்..என்று பதறி அவள் கையை பிடித்தான். அப்பா, தம்பிய பார்த்துக்கோங்க சார்..என்று அவள் கண்களை மூடினாள்.
சார் இதயம் விட்டு விட்டு துடிக்குது. சார் சீக்கிரம் இதயத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. 99 சதவீதம் காப்பாற்ற முடியாது சார் என்று பேசிக் கொண்டிருக்க, கௌதம் வேகமாக வெளியே ஓடி விசயத்தை சொல்ல பிளட் எடுத்து காலையில் உடல் தானம் செய்த ஒருவரின் இதயத்தை மேச் செய்து பார்த்தான். இதயம் சரியாக பொருந்தியது. அவளை சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். உடனே ஆப்ரேசன் செய்வதற்கான அனைத்தையும் ஆரம்பித்தனர். அதற்கான ஃபார்மை எடுத்து வந்த செவிலியர் தேவ்விடம்..
சார்..இதுல சைன் பண்ணனும் என்று அவனிடம் கொடுத்தார். சார்..நீங்க ஆரம்பிங்க. நான் சைன் பண்ணிட்டு வாரேன்.
நீங்க காத்திருங்க. நாங்கள் சிகிச்சை முடிந்த பின் உங்களை அழைக்கிறோம் என்று டாக்டர் கூறினார்.
இல்ல சார். நானும் உடன் இருப்பேன் என்று பிடிவாதமாக சொன்னான் தேவ்.
சரிங்க சார். நாங்க ஆரம்பிக்கிறோம். நீங்களும் வாங்க என்று அவர் கூறி விட்டு உள்ளே சென்றார்.
தேவ் ஃபார்ம்மை ஃபுல் செய்து செவிலியரிடம் கொடுத்து ஆருத்ராவையும், அம்மாவையும் பார்த்து இங்கேயே இருங்கள் என்று வேகமாக உள்ளே சென்றான். செவிலியர் அதை பார்த்து அதிர்ந்தார்.
ஏய், இங்க வாயேன் சார்..என்ன பண்ணி இருக்கார் பாரேன் என்று மற்றொருவரிடமும் காட்ட, என்ன? அந்த பொண்ணுக்கு அவர் கணவனா? அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?
மேம் என்று அந்த பொண்ணு.. அவன் அம்மாவிடம் காட்ட, இப்ப இதுக்கு என்னடி? இனி பண்ணிக்குவான் என்றார் அவர்.
என்ன? இது எதுக்கு நமக்கு என்று அவளை ஒருத்தி இழுத்து சென்றாள். அம்மா..சுவாதிக்கு எதுனால இப்படி ஆகிடுச்சு? ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்குன்னு சொன்னாங்க. பயமா இருக்கும்மா. ஆப்ரேசன் செய்து சரியானால் போதும்மா. அவள் மண்டபத்துல சந்தோசமா, ஜாலியா இருந்தா. அவளுக்கு ஒன்றும் ஆகாதுலம்மா ஆருத்ரா கண்ணீருடன் கேட்டாள்.
“எண்ணம் போல் தான் வாழ்க்கை” நாம் நல்லதே நினைப்போம் என்று மகளை தேற்றினார்.
செவிலியர் சுவாதியின் சடையை அவிழ்க்க அதில் தேவ் வாங்கி கொடுத்த பூவுடனான ஹேர் பேண்ட் இருந்தது. அதன் மேலே நிறைய ஹேர் பேண்டை சுற்றி மறைத்து இருந்தாள் சுவாதி.
செவிலியர் அதை ஓரமாக வைக்க, கண்ணீரை துடைத்து உள்ளே வந்த தேவ் அதை பார்த்து, இது.. இது..அவளா வச்சிருந்தா? என்று கேட்டான்.
ஆமா சார். இதுக்கு மேல இங்க பாருங்க சார். இத்தனை பிளாக் கலர் ஹேர் பேண்டு போட்டிருந்தாங்க என்று அவன் கையில் அனைத்தையும் கொடுத்தாள். வாங்கிய தேவ் அழுதான். அவள் துக்கி எறிந்து காதல் இல்லை என்று மறைமுகமாக கூறிய ஹேர் பேண்டாயிற்றே. இது அவள் தலையில் என்றால் தேவ் மீது அவளுக்கும் காதல் உள்ளது என்று தானே அர்த்தம்.
சார். இதுக்கு தான் நீங்க வெளிய இருங்கன்னு சொன்னேன் டாக்டர் சொல்ல, சுவாதியை கண்ணீரோடு பார்த்த தேவ் வெளியே வந்தான். கௌதம், அவன் அம்மா, ஆருத்ரா வெளியே இருந்தனர்.
தேவ்வை பார்த்து, என்னடா வெளிய வந்துட்ட? கௌதம் கேட்டான். மற்றவர்களும் அவனிடம் வந்தனர்.
அவ என்னை ஏமாத்திட்டாடா என்று கௌதமை அணைத்து அழுது விட்டு, இங்க பாருடா என்று அந்த பேண்டு அனைத்தையும் காட்டினான். மற்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை. என்னிடம் மண்டபத்தில் வைத்து இதை பற்றி பேச வந்தான்னு தோணுதுடா. அப்பொழுதும் அந்த அஸ்வினியால் பயந்து ஓடி விட்டாள். அப்பொழுதே சொல்லி இருந்தால் முன்னமே பார்த்திருக்கலாம். நேற்றிலிருந்து ரொம்ப வித்தியாசமாக நடந்து கொண்டாள்.
ஆமாடா. வேண்டுமென்றே உன்னை கோபப்பட வைத்தாள் என்று கௌதம் கூறிக் கொண்டிருக்க, சித்திரனும் காருண்யாவும் வந்தனர்.
ஆருத்ரா அவனை கண்டு, சித்திரா இங்க என்னடா பண்ற? என்று காருண்யாவை பார்த்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள்.
ஆருத்ராவிற்கு பதிலளிக்காமல் அண்ணா..என்று கௌதமிடம் வந்து, சுவாதி போன் உன்னிடம் எப்படி வந்தது? கேட்டான் சித்திரன்.
சுவாதியை உனக்கு தெரியுமா? தேவ் கேட்டான்.
நாங்க கிளாஸ் மெட் தான் என்று காருண்யாவை பார்த்தான் அவன். இவள் தான் சுவாதிக்கு க்ளோஸ்.
காருண்யா தேவ்விடம் வந்து, சார்..சுவாதிக்கு ஒன்றும் இல்லை தான. நல்லா இருக்கால்ல. எங்க இருக்கா? என்று கேட்டாள்.
அவள்..என்று பேசாமல் கௌதமை பார்த்தான்.
நீ தான் போன்ல சுவாதியிடம் பேசியதா? ஆருத்ரா கேட்டாள்.
ஆமா..அவ எங்க இருக்கா? என்று அவள் கண்கள் அவ்விடத்தை சுற்றியது. அவளுக்கு ஹார்ட் ஆப்ரேசன் நடக்குது. அவள் பிழைப்பது கஷ்டம்ன்னு சொல்லி இருக்காங்க கௌதம் சொன்னான்.
அவள் மேலும் அழுது கொண்டு கோபமுடன், உனக்கு இப்ப சந்தோசம் தான? என்று சித்திரனை திட்டினாள். அவனும் கண்ணீருடன் அமர்ந்தான்.
ஏம்மா, என் பிள்ளைய திட்டுற? தேவ் அம்மா கேட்டார். அவரின் சொந்த தங்கையின் மகன் தான் சித்திரன். அவனுக்கு பாதுகாவலர்கள் இவர்கள் தான்.
சுவாதிக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?
உங்க பையனா? அவளுக்கு அவளோட அம்மாவும், அக்காவும் கொடுக்கும் பிரச்சனை போதாதுன்னு. காலேஜ்ல இவனுக சும்மா இல்லாமல் அவளை கிண்டல் செய்வது, பின்னாடியே சுத்தி மத்தவங்க அவளை எப்படி பேசினாங்க தெரியுமா? பொறுக்கி..என்று அவனை அடித்தாள் அவள். அவள் எப்படி கஷ்டப்பட்டான்னு தெரியுமா? என்று அழுதாள்.
தேவ் அவனிடம் கோபமாக, உன்னை படிக்க அனுப்பினாங்களா? இல்லை பொண்ணுங்களை கிண்டல் செய்ய அனுப்பினாங்களா? என்று அடித்தான்.
அண்ணா..நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று சித்திரன் அழுதான்.
இப்ப பாரு என்னோட சுவாதி யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ள போட்டு இந்த நிலையில கிடக்கா என்று அழுதான் தேவ்.
அண்ணா..என்ன சொன்ன? உன்னோட சுவாதியா? கேட்டான் சித்திரன்.
ஆமாடா. என்னோட சுவாதி தான் என்று தேவ் மீண்டும் அழுதான்.
இல்ல..என்று கத்தினான் சித்திரன்.
அம்மா அவன் கன்னத்தில் அறைந்து, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?
ஆமா பைத்தியம் தான் அவள் மீது. அவ என்னோட சுவாதி என்றான் சித்திரன்.
டேய்..என்று தேவ் அவனது சட்டையை பிடித்து, என்னடா சொன்ன? என்று அடித்தான்.
நிறுத்துங்க என்று சத்தமிட்டாள் ஆருத்ரா.
எல்லாரும் வாய மூடிக்கிட்டு உட்காருங்க. குடும்ப மானத்தை வாங்காதீங்கடா அம்மா கத்தினார். அனைவரும் அமைதியானார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
ஆன்ட்டி, நான் இவனிடம் பேசணும் என்று காருண்யா சித்திரனிடம் சென்று அவனை அடித்து விட்டு, உன்னோட சுவாதியா? எந்த தைரியத்துல பேசுற? அவள் கஷ்டம் ஒன்றாவது தெரியுமா? சும்மா..பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கிறது. நீயெல்லாம் எதுக்குடா படிக்க வர்ற? அவள் படிப்பும் உங்களால் பாழானது. அவளால் கவனத்தை செலுத்த முடியலை. முதல்ல இருந்த அவ இப்ப ஆறாவது இடத்துல இருக்கா.
அவள் சரியாகி வந்த பின் காதல்ன்னு அவ பின்னாடி வந்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டினாள்.
எல்லாரும் பிரச்சனைன்னு சொல்றீங்க? எனக்கு பிரச்சனை இருக்காதா? அவன் சத்தமிட, உனக்கு என்னடா பிரச்சனை? தேவ் அம்மா கோபமாக அவனை திட்டிக் கொண்டே தனியே இழுத்து சென்றார். இவர்களும் அவர்கள் பின் சென்றனர். தேவ் அவனை முறைத்துக் கொண்டே சென்றான்.
அம்மா, அப்பான்னு உங்கள கூப்பிட சொன்னீங்கல்ல? ஏன் என்னை ஹாஸ்டல்ல சேர்க்கணும்? அண்ணா மட்டும் வீட்டிலிருந்து காலேஜ் வந்து தான படித்தான். ஆருவும் அப்படி தான படிக்கிறா? என்னை நீங்க எல்லாரும் ஒதுக்கி வச்சுட்டீங்க? எனக்கு அநாதை என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. என்னை பார்க்க மாதம் ஒரு முறை வர்றீங்க? நான் உங்க பிள்ளையா இருந்தா இப்படி செய்வீங்களா? என்று கேட்டான். அவர்கள் அம்மா தடுமாறினார்.
ஏய்..என்னடா பேசுற? உன்னை நாங்க என்னைக்கு ஒதுக்கினோம். நீ என்னோட தம்பிடா கோபத்தை விட்டு தேவ் அவனிடம் வந்தான்.
இல்ல..எனக்கு யாருமே இல்லை. நீங்க எல்லாரும் எனக்கு குடும்பம் மாதிரி தான். ஆனால் நாம் அனைவரும் ஒருவர் இல்லை. நான் பள்ளியிலே தனிமையில் கஷ்டப்பட்டேன். பக்கத்தில் வீடிருந்தும் என்னை ஹாஸ்டலில் எதுக்கு சேர்த்து விட்டீங்க?
அம்மா, அப்பா நினைவில் கஷ்டப்படுவன்னு தான் பள்ளி விடுதியில் சேர்த்தாங்க. கல்லூரியில் பிராஜெக்ட்டுக்காக நான் வீட்டிற்கும் கல்லூரிக்கும் அலைவேன். அதனால் தான் விடுதி உனக்கு ஏதுவாக இருக்கும்ன்னு சேர்த்தாங்க. வீடு என்ன பக்கத்திலாடா இருக்கு? தேவ் சத்தமிட்டான்.
உன்னை வைத்து என்னை எப்படி முடிவு செய்தீங்க? என்னிடம் யாருமே கேட்கலை. நான் அப்பொழுது தான் என் பெற்றோரை பிரிந்தேன். பின்பும் விடுதி. எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?
காரு உனக்கு நினைவிருக்கான்னு தெரியலை. கல்லூரி சேர்ந்து ஒரு வாரத்தின் பின் தான் சுவாதி வகுப்புக்கு வந்தாள். ஆனால் எனக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது. அவளிடம் பேசினால் பதில் கூட சொல்ல மாட்டா? விலகியே இருப்பாள். யாரிடமும் பேச மாட்டாள். கையில் எப்பொழுதும் புத்தகம் தான். உன்னுடன் கூட ஒரு மாதத்திற்கு பின் தான் தோழியானாள். நானும் மூன்று மாதமாக சும்மா ப்ரெண்டா தான் பழகலாம்ன்னு பேசினேன். ஆனால் அவள் கண்ணுக்கு நான் தெரியவேயில்லை. அவள் என்னை பார்த்தால் தான் பேசுவாள் என்று அவளை பசங்களுடன் சேர்ந்து கிண்டல் செய்தேன். அவள் என்னை பார்த்தால் ஆனால் இப்பொழுது வரை பேசலை.
எனக்கு அவள் மீது விருப்பம் அதிகமாகி காதலிக்க தொடங்கினேன். இன்று தான் அவள் பேசணும்ன்னு சொன்னான்னு சந்தோசமா காத்திருந்தேன். ஆனால் அவள் வரலை. அவளை தேடி ஒரு சார் காலேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தார். அவர் தான் என்னிடம் சுவாதிக்கு ஹார்ட் பிராபிளம் இருக்குன்னு சொன்னார்.
காருவிடம் கேட்டால் அவளுக்கு தெரியாதுன்னு அப்ப தான் தெரியும். சார் அவராக தான் அவளை கவனித்து பேசி டெஸ்ட் எடுத்துருக்காங்க காலேஜ்ல வைத்து. ஆனால் எங்க யாருக்குமே தெரியாது என்று அழுதான்.
லூசாடா நீ? என்று காரு அவனிடம் வந்து, நம்ம காலேஜ்ல பேரண்ட்ஸ அதிகமா பார்க்க அனுமதிக்கவே மாட்டாங்க. அவங்க குடுக்கிற வீக் என்டுல போவோம். என்னை மூன்று மாசத்துக்கு ஒரு முறை தான் அம்மா பார்க்கவே வருவாங்க. என்னை விடு சுவாதியை ஒரு முறை கூட யாரும் வந்து பார்த்ததில்லை. உன்னை பெத்தவங்க இல்லைன்னாலும் மாசத்துக்கு ஒரு முறை பாக்க வாராங்கன்னா எவ்வளவு பெரிய விசயம்.
உனக்கு மூளையே இல்லையா? சுவாதி பசங்க ஒருவனிடம் கூட பேசியதில்லை. காரணம் ஏதாவது இருக்குன்னு உனக்கு தோணலையா? நம்ம காலேஜ்ல இவங்க ஊர் பையனிடம் அவ அக்கா அவளை வேவு பார்க்க சொல்லி இருக்காங்க. அவள் யாரிடமாவது பேசினால் என்று தேவ்வையும் மற்றவர்களையும் பார்த்தாள்.
தேவ் அவளிடம் வந்து, அவள என்ன செய்வா?
அவள தப்பா பேசுவாங்க? அவளுக்கு ஒரு முறை சூடு கூட வச்சிருக்காங்க தெரியுமா? பாவம் அவள் என்று காரு அழுதாள்.
ஏய்..அவளுக்கு அக்காவே இல்லை. தம்பி மட்டும் தான். ஏமாத்தி குடும்பத்துல வந்து அவள எப்படி கஷ்டப்படுத்திட்டு இருந்திருக்கா?
என்ன சார் சொல்றீங்க? அவ சுவாவோட அக்கா இல்லையா?
இல்லை. ஆனால் இருவரும் ஒரே மாதிரி இருப்பாங்களே? காரு கேட்க, ஆருத்ரா அனைத்தையும் கூறினாள்.
இப்படியெல்லாமா மனுசங்க இருப்பாங்க. பாவம் நான் நினைச்சத விட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா என்று அதனால் தான் அவளுக்கு இந்த நிலையா? என்று இப்ப அவ எங்க ஊர்ல தான இருப்பா?
இல்ல. அவ செத்துட்டா என்றான்.
அண்ணா..என்ன சொல்ற?
ஆமா ஆரு. அவ செத்துட்டா. அவளோட அம்மா போலீஸ் கஷ்டடியில் தான் இருக்காங்க என்று அமர்ந்தான்.
அம்மா..சாரிம்மா. நான் கோபத்தில் பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கம்மா என்று சித்திரன் அவர்கள் அம்மா காலில் விழுந்தான்.
இனி நீ வீட்ல இருந்தே படி என்றார் அம்மா. காரு அவர்களை பார்த்தாள். அம்மாவை விட்டு நகர்ந்தவன் நான் சுவாதியை யாருக்காகவும் விட மாட்டேன் என்றான்.
அம்மா..அவனை அமைதியா இருக்க சொல்லுங்க. இல்லை அவ்வளவு தான் தேவ் சொல்ல..தம்பி..நீ அவள காதலிக்கிற? அவளுக்கு உங்க அண்ணனை தானே பிடிச்சிருக்கு கௌதம் ஹேர் பேண்டு பற்றி சொன்னான்.
இல்ல. அவள் சரியாகட்டும். நான் அவளிடம் கேட்டுக்கிறேன்.
என்னடா கேட்கப் போற? என்று தேவ் சீற்றமுடன் எழுந்தான். ஆம்புலன்ஸ் ஒன்று உள்ளே வர, அதிலிருந்து தலை களைந்து அழுது களைத்து போய் இறங்கினான் சீனு. அவன் பின்னே தேவ் அப்பாவும் இறங்கினார்.
தேவ், ஆருத்ரா, கௌதம் அவனை பார்க்க, சீனு என்று காருண்யா அவனிடம் சென்றாள். அவர்கள் பின் சுவாதியின் அப்பாவை பிணமாக இறக்கினர்.
காருவை பார்த்து அக்கா..அப்பா என்று தேவ்வை பார்த்து அவனிடம் ஓடி வந்து அவனை அணைத்தான். சார்..அப்பா எங்கள விட்டு போயிட்டாங்க என்று அழுதான்.
அப்பா..என்ன இது? தேவ் அவன் அப்பாவிடம் கேட்டான்.
நாங்க போகும் போதே செத்துட்டார். இந்த பையனையும் கொல்லப் பார்த்தாங்க. ஆனால் நம்ம போலீஸ்காரவங்க தான் காப்பாத்திட்டாங்க.
சார் என்று அவனிடமிருந்து விலகி, அக்கா எங்க சார்? எல்லாரும் இங்க எதுக்கு நிக்குறீங்க? காருக்கா அக்கா..எங்க? பதறினான். தேவ் அவனை அணைத்து அழுதான். அவனை தள்ளி விட்டு சுவாதி எங்க? என்னோட அக்கா எங்கன்னு கேக்குறேன்ல. ஏன் யாருமே பதில் சொல்ல மாட்டிங்கிறீங்க? என்று தேவ் அம்மாவிடம் வந்தான்.
ஆன்ட்டி சொல்லுங்க. என்னோட அக்கா எங்க?
உன்னோட அக்காவுக்கு ஹார்ட் ஆப்ரேசன் நடக்குது. பிழைக்கிறது கஷ்டம் என்று கௌதம் கூறினான்.
சார்..இவர் என்ன சொல்றார்? மதியம் போல் விளையாடுகிறாரா? அவளுக்கு எதுக்கு ஹார்ட் ஆப்ரேசன்? சொல்லுங்க என்று தேவ்வை உலுக்கினான். கையிலிருந்த பேண்டை தூக்கி எறிந்தான் தேவ்.
சார்..அக்கா இதை கீழ போடலையா? அப்ப உங்கள தான் அவளும் காதலிக்கிறாளா? நாங்க அநாதை இல்லைல்ல. நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல..என்று தேவ்வை பார்த்து, எனக்கு நீங்க மாமாவா? கேட்டான்.
தேவ் கதறி அழுதான். அவள் இருப்பாளான்னு தெரியலையே?என்று கூறிக் கொண்டே அவன் அழுதான். சித்திரன் சீனுவை பார்த்துக் கொண்டே நின்றான்.
மாமா அவளுக்கு ஒன்றும் ஆகாது. நீங்க இங்க என்ன பண்றீங்க? என்று தேவ்வை பிடித்து நிமிர்த்தி அவன் கண்ணீரை துடைத்து, அவன் துக்கி எறிந்த பேண்டை அவன் கையில் கொடுத்து, வாங்க மாமா..அவள நம்மள விட்டு போக விடக்கூடாது. அவ பிடிச்சவங்களுக்காக எதையும் செய்வா. அமைதியா இருப்பா தான். பழக்கமானவங்க, பழக்கமான இடத்துல அவ அவளா இருப்பா. சந்தோசமா குறும்பு செஞ்சுகிட்டு இருப்பா. உங்கள அவளுக்கு பிடிக்கும். வாங்க அழாம அவளிடம் பேசுங்க என்று அவன் செல்ல, மற்றவர்களும் அவன் பின்னே வந்தனர். அவன் அப்பாவை தேவ் அப்பா பார்த்து விட்டு ஆட்களிடம் சொல்லி பார்த்துக்க சொல்லி உள்ளே சென்றார்.
ஆப்ரேசன் இருக்கும் அறைக்கு வந்தனர். மாஸ்க்குடன் உள்ளே வந்தனர் தேவ்வும், சீனுவும். சீனுவால் பார்க்க முடியாமல் தேவ்வை உள்ளே விட்டு வெளியே சென்று அழுதான். காரு அவனுக்கு ஆறுதல் சொல்ல, தேவ் அப்பா அவனிடம் வந்து, உன்னோட அக்கா மீண்டு வருவா. அழாதப்பா என்று அவனை அணைத்தார்.
அங்கிள், அப்பா மாதிரி அக்காவுக்கும் ஏதாவது ஆனால் நானும் இருக்க மாட்டேன் என்று சீனு அழுதான்.
ஏன்ப்பா இப்படி பேசுற? நாங்க எல்லாரும் இருக்கோம் என்று தேவ் அம்மா ஆறுதலளித்தார்.
உள்ளே ஆப்ரேசன் முடிந்து சுவாதி சிகிச்சை வெற்றியுடன் “ஐ சி யூ” வில் மாற்றினார்கள். ஆனால் அவள் எழவில்லை. தேவ் பேசினால் டாக்டரால் கவனம் செலுத்த முடியாது என்பதால் அமைதியாக சுவாதி கையை மட்டும் பிடித்திருந்தான். பின் தான் முடிந்து அவளை” ஐ சி யூ” விற்கு மாற்றினார்கள். சித்திரன் வெளியே தனியா அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் அம்மா அவனிடம் பேசி அவனை சமாதானப்படுத்தினார்கள்.
உள்ளே கூட்டமாக இருக்கக்கூடாது என ஒவ்வொருவராக சுவாதியை பார்த்து விட்டு வந்தனர். கடைசியில் சீனுவும் தேவும் சேர்ந்து உள்ளே சென்றனர். தேவ் அவளிடம் பேசினான். சீனு அவளிடம் அக்கா..நீ மாமாவ வேண்டாம்ன்னு சொன்னேல. அதனால ஆன்ட்டி அவங்க சொந்தக்காரப் பொண்ணை மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கலாம் என்றான்.
சும்மா இருடா என்று தேவ் அவன் கையை பிடிக்க, அவன் கை மீது சீனு கையை வைத்து அழுத்தினான். சுவாதியின் கண்ணிமைகள் அசைந்தது.
அக்கா..நீ தூங்கு. நான் ஏற்பாட்டை கவனிக்கணும். நிறைய வேலை இருக்கு என்றான். அவள் மெதுவாக கண்ணை விழித்தாள்.