அத்தியாயம் 100

பெரியவர்களை தவிர காதலரசர்கள் தங்கள் காதல் அரசிகள் பின் சென்றனர். ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள். அர்ஜூன் பின்னே சென்று கதவை அடைத்தான்.

செகண்டு ஏஞ்சலுக்கு தூக்கம் வருது போல என்று ஸ்ரீயை ரசித்துக் கொண்டே அனுவை தூக்க வந்தான். அவனை விலக்கிய ஸ்ரீ அனுவை தோளில் போட்டு உலவினாள். அர்ஜூன் பெட்டில் படுத்துக் கொண்டு ஸ்ரீயை ரசித்தான். அனு தூங்க, அர்ஜூன் கண்களை மூடி தூங்குவதை போல் நடித்தான். அர்ஜூனை பார்த்த ஸ்ரீ அனுவை படுக்கப் போட்டு அர்ஜூன் பக்கம் வந்து அவன் தூங்குகிறானா? என்று உற்றுப்பார்த்தாள். அவன் கைகளால் அவளை இழுத்து அவன் மேலே போட்டுக் கொண்டு அவளது இதழ்களை பார்வையால் வருடியபடி..நீ அனுவை தூங்க வைத்து விட்டு போகாமல் என் பக்கம் எதுக்கு வந்த?

அர்ஜூன்..நீ தூங்கி விட்டாயான்னு பார்க்க தான் அருகே வந்தேன். நான் தூங்கினால் என்ன? துங்கவில்லையெனில் உனக்கென்ன?

சும்மா தான் வந்தேன். இனி உன் பக்கமே வர மாட்டேன். பாப்பாவை பார்த்துக்கோ என்று ஸ்ரீ கோபமாக கதவருகே சென்றாள். ஓடி வந்து அவளை இழுத்தான் அர்ஜூன். அவளது விரித்த பட்டுப் போன்ற முடி அர்ஜூன் முகத்தில் பட, அதன் மணத்தை கண்களை மூடி ரசித்தான். ஸ்ரீ அவனது கையை தள்ளி விட்டு கதவை திறந்தாள்.

அர்ஜூன் வேகமாக கதவை சாத்தி தாழிட்டான்.

நான் போகணும் என்றாள் கோபமாக.

எதுக்கு அறைக்கு வந்த?

பாப்பாவை தூங்க வைக்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சது கிளம்புறேன். நீ வழிய விடு என்று அர்ஜூனை தள்ளினாள்.

நீ போகலாம் ஏஞ்சல் என்று அவளை பின்னிருந்து அணைத்து அவளது கழுத்தில் முத்தமிட்டான். அவள் கிரங்கி நின்றாள். அவளை திருப்ப ஸ்ரீ சுதாரித்து போன்னு சொல்லிட்டு என்னை விடாமல் என்ன செய்ற?

ஸ்ரீ நீ புடவையில ரொம்ப அழகா இருக்க. இனி புடவை உடுத்துறியா?

அர்ஜூன்..என்னை விடு. பாப்பா தூங்குறா? தொந்தரவு செய்யாதே!

தொந்தரவா? நீ தான் என்னை இன்று காலையிலிருந்து தொந்தரவு செய்ற? என் பக்கத்தில் இப்பொழுது போல் திட்டிக் கொண்டாவது இரு ஸ்ரீ என்றான்.

அர்ஜூன்..என்னிடம் எதுவும் கேட்காத. என்னால் இப்பொழுது எதுவும் கூற முடியாது என்றாள்.

சரி. ஆனால் இப்ப நீ வெளிய போகக்கூடாது.

டேய்..நீ தானடா ஓவரா பேசின? நான் போயே ஆகணும். உன் பக்கத்துல நான் வர மாட்டேன் என்று ஸ்ரீ விலகினாள். அர்ஜூன் அவளிடம் செல்ல ஸ்ரீ விலகி விலகி கதவருகே மீண்டும் வந்து தாழ்ப்பாளில் கை வைத்து கண்களை மூடினாள்.

விலகியதில் அவளது புடவை விலக அவள் அங்கம் அர்ஜூனை வா..என்று அழைத்தது. அவள் கதவருகே வந்தவுடன் தாழ்ப்பாளில் அர்ஜூன் கையை வைத்து ஸ்ரீயை மறித்து அவளது இடையில் முத்தமிட்டான். ஸ்ரீ அவளை மறந்து நிற்க கண்ட அர்ஜூன் இதழ்களில் புன்னகை அரும்பி, அவளை அவனது முத்தத்தால் குளிப்பாட்டினான்.

அர்ஜூன்..ப்ளீஸ் விடு என்றாள் ஸ்ரீ முணங்கிய படி. அர்ஜூன் ஸ்ரீயை தூக்கி பெட்டில் போட்டு அவள் மீது படர, அவளுக்கு திடீரென ஜிதினின் தவறான போக்கு நினைவிற்கு வந்து அர்ஜூனை அடித்து அழுதாள். அர்ஜூன் அவளை அமைதியாக அடிக்க விட்டு அவள் கையை பிடித்திருந்தான்.

என் பக்கதுல வராத..வராத..என்று அவள் மேலும் அர்ஜூனை அடிக்க, ஏஞ்சல் என்ற அவனது அழைப்பில் அவனை அடிப்பதை நிறுத்தி அவனை பார்த்தாள். அர்ஜூன் மனம் வலித்தது.

அர்ஜூன் என்று உணர்ந்த ஸ்ரீ..அர்ஜூன்..அர்ஜூன்..என்று தேம்பிய படி அனுவை பார்க்க அவள் அருகே இல்லை. அவர்கள் அறையின் உள்ளிருக்கும் அறையில் அனு தூங்கினாள். அர்ஜூனும் ஸ்ரீயும் தரையில் படுத்திருந்தனர். அவள் மீண்டும் அர்ஜூனை பார்க்க..அவன் கண்ணீருடன் ஸ்ரீயை பார்த்தான்.

அர்ஜூன்..சாரி..சாரி. நான்..என்று சொல்ல முடியாமல் திக்கி ரொம்ப அடிச்சுட்டேனா அர்ஜூன் என்று அவனை அணைக்க..அவனுக்குள் இருந்த மோக உணர்வுகள் ஸ்ரீ கஷ்டப்படுவதில் காதலாகி அமைதியானான்.

நீ எதையும் மறக்கலைல்ல ஸ்ரீ? அர்ஜூன் கேட்டான். அவள் மௌனம் காத்தாள். நான் மறந்துட்டேன் ஸ்ரீ. இப்ப தான் நினைவுக்கு வருது அர்ஜூன் சொல்ல..அவள் கண்களில் அவளை மீறி நீர் சுரந்தது. முகத்தை மூடி ஸ்ரீ அழுதாள். அவள் கையை எடுத்த அர்ஜூன், இப்ப அழு ஸ்ரீ. உன் அழுகை என் நெஞ்சில் பதியணும். அப்ப தான் காரணமானவங்க சாவாங்க என்றான்.

வேண்டாம் அர்ஜூன். இப்படி பேசாத. உனக்கு ஏதாவதுன்னா..என்று மீதியை வாய்க்குள் விழுங்கிய ஸ்ரீ அனுவை பாதிக்கும் என்றாள்.

அவளை அசட்டையாக பார்த்த அர்ஜூன்..அவள் கண்ணீரை துடைத்து விட்டு, நானும் அவன் போல் தவறாக நடந்து கொள்ள பார்த்தேன். மன்னிச்சிரு ஸ்ரீ என்று அர்ஜூன் அழுதான்.

அர்ஜூன் அழாத. கஷ்டமா இருக்கு என்றாள்.

நான் உன்னை அடைய நினைக்கலை ஸ்ரீ. ஏதோ உன் மீதுள்ள காதலும் மோகமும் அதிகமாகி என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து தான். சாரி ஸ்ரீ என்று நகர்ந்து அமர்ந்தான்.

அர்ஜூன் அழாத. அர்ஜூன் நீ இத்தனை நாட்களாய் என்னை நினைத்தே இருந்தது போல் யார் இருப்பார்கள்? என்றும் நான் உனக்கு மட்டும் தான் சொந்தமாவேன் என்று சொல்ல துடித்த இதயத்தை அமைதி படுத்தி, அர்ஜூனை அணைத்து உன் மேல தப்பு இல்ல அர்ஜூன். நான் உன்னை தவறாக நினைக்கவில்லை. நீ என்றும்..என்னோட குட்டிப்பையன் என்று வாய் வரை வந்து மென்று விழுங்கினாள்.

அர்ஜூன் அவளை விலக்கி விட்டு எழுந்தான். ஸ்ரீ..என்று அணைத்து, நான் அன்றே உன்னை பார்த்திருந்தால் நீ கஷ்டப்பட்டிருக்க மாட்ட. என் மீது தான் தவறு என்று மீண்டும் அழுதான்.

அர்ஜூன் கண்ணீரை தொட்ட ஸ்ரீ..எனக்காக அழ நீ இருக்க அர்ஜூன். இப்பவே செத்துப்போகணும்ன்னா கூட நான் தயார் தான். ஆனால் அர்ஜூன்..என்று நெற்றி முட்டி அவனை பார்த்து..அனு விழித்தால் அர்ஜூன் உன்னோட கண்ணுக்கு கீழ ஏதோ இருக்குன்னு கேலி செய்வா. அதனால சமத்தா அர்ஜூன் அறைக்குள் வந்தது போல் வெளிய போகணும். ஆனால் இப்ப இல்லை என்று  ஸ்ரீ சத்தமில்லாமல் உடல் குலுங்காமல் அழுது கொண்டே அர்ஜூனை அணைத்து அனு அருகே அவனை படுக்க வைத்து கண்ணை துடைத்து விட்டு அவன் மீதிருந்து எழுந்து தூங்கு அர்ஜூன். கொஞ்ச நேரத்தில் அண்ணா வீட்டுக்கு போகணும். நீ ஓய்வெடுத்துக்கோ என்று பக்கத்தில் அமர்ந்து அவன் தலையை வருடிக் கொடுத்தாள். அவளது கையை பிடித்துக் கொண்டு கண்ணை மூடி தூங்கினான் அர்ஜூன்.

அவன் தூங்கிய பின் எழுந்த ஸ்ரீ அவளை கண்ணாடியில் பார்த்தாள். அன்று அர்ஜூன் கண்ணாடி முன் நிறுத்தி அவளை அணைத்து, நீ கண்ணாடி பார்த்தால் நம் இருவர் உருவம் தான் தெரியணும் என்று கூறிய நினைவில் அவனை திரும்பி பார்த்தாள். அவன் தூங்க, அவனை ரசித்து பார்த்த ஸ்ரீ அவன் நெற்றியில் முத்தமிட்டு,

அர்ஜூன் நீ அருகே இருந்தால் நான் உலகத்தையே மறப்பேன். ஆனால் என்னமோ..இந்த படுக்கை முத்தம் எனக்கு பிடிக்கலை. அந்த ஜிதினால் என் அர்ஜூனை நானே அடித்து விட்டேன் என்று அவன் உள்ளங்கை, கன்னம் என்று முத்தமிட்டாள். முகத்தை கழுவி விட்டு கண்ணாடி முன் அமர்ந்து அதன் வழியே அர்ஜூனை பார்த்தாள்.

ஏதோ உன்னுடன் வாழ்வது போல் இருக்கு அர்ஜூன் என்று அவள் தயாரானாள். அனு விழிக்க,ஷ்..அர்ஜூன் தூங்கட்டும். வாங்க என்று அனுவை தூக்கி தயார் செய்து அர்ஜூனிடம் வந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அனுவும் முத்தம் கொடுக்க இருவரும் வெளியேறினர். அர்ஜூன் புன்னகையுடன் வாசலை பார்த்தபடி எழுந்து அமர்ந்தான்.

அர்ஜூன், ஸ்ரீ, அனு அறைக்குள் வந்த சமயம் மறை வினிதா அம்மாவை தனியே அழைத்தான். இருவரும் செல்ல காயத்ரி அவனை பார்த்தாள்.

அத்தை காயூவுக்கு மென்சஸ்ன்னு சொன்னாங்க. அவங்க இந்த நிலையில் கல்யாணம்? என்று தயங்கினான்.

அதுவா? அது பிரச்சனையில்லைப்பா. சில பேருக்கு குழந்தை பெத்தவுடன் நாட்கள் குறையும். சிலருக்கு வராமல் கூட இருக்கும். ஆனால் அதில் பிரச்சனை உள்ளது. ராக்கி குட்டி பிறந்தப்ப காயத்ரி இதை பெருசா எடுத்துக்காம விட்டுருக்கலாம். ஒரே நாளில் அவளுக்கு முடிஞ்சிருக்கு. அவகிட்ட கேட்டப்ப எப்பொழுதும் போல் தான் ராக்கி பிறந்த பின்னும் உள்ளது என்றாள். மறு மாசம் பார்க்கலாம் என்று இப்பொழுது விட்டு விட்டேன் என்றார் அவர்.

ஒரு வேலை அவ உங்களிடம் பொய் சொல்லி இருந்தான்னா..அவளுக்கு உடல் நலமில்லாமல் போகுமா?

அவனை பார்த்து சிரித்த வினிதா அம்மா..நல்லா அக்கறையா கேட்குறீங்க? பிரச்சனை வந்தால் ஒன்று கட்டி சேரும் இல்லை பிள்ளைபாக்கியம் இல்லாமல் போகும் என்றார்.

என்ன கட்டி சேருமா? நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகலாமா அத்தை?

நீங்க கூப்பிட்ட உடன் வந்துருவாளா? ஏம்ப்பா நான் பிள்ளை பாக்கியம் இல்லாமல் போகும் என்றேனே? அது கஷ்டமா இல்லையா?

இல்லத்த. அதான் ராக்கி இருக்கானே? அவளுக்கு ஏதாவது ஆனால் என்று கண்கலங்கினான். அவர் கண்ணீருடன் நீங்களே முதல்ல காயத்ரிய பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா சந்தோசமா வாழ்ந்துருப்பா.

அத்த..பழச அவ முன்னாடி பேசாதீங்க என்றான்.

சரிப்பா. நான் பேசலை இருந்தாலும் இன்னொரு பிள்ளை இருந்தா நல்லா இருக்கும் என்று அவனை பார்த்தாள்.

அத்தை..முதல்ல அவ சரியாகட்டும். அப்புறம் பார்க்கலாம்.

அவளிடம் பொய் சொன்னாளா? இல்லையான்னு நீங்களே கேட்டு சொல்லுங்க?

அத்தை நானா? நான் எப்படி இதை பற்றி பேசுவது? சும்மாவே முறைப்பா..என்று காயத்ரியை பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உங்க பொண்டாட்டி தான நீங்க தான் கேட்கணும்? என்று அவர் எழ, அவனும் அவருடன் சேர்ந்து வந்து காயத்ரியிடம் அமர்ந்தான்.

என்ன பேசுனீங்க? என்று காயத்ரி மறையிடம் கிசுகிசுத்தாள்.

இப்பவே சொல்லணுமா? அவனும் கிசுகிசுக்க, இல்ல அப்புறம் சொல்லுங்க என்றாள். புன்னகையுடன் அவளை பார்த்தான்.

இருவரும் தயாராகிட்டு வாங்க. மாப்பிள்ள உங்க வீட்டுக்கு போகணும் என்றார் வினிதா அப்பா. இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றனர். இங்கு மாலையில் தான் நல்ல நேரம் பார்த்து வீட்டில் விளக்கேற்றுவாங்களாம்.

காலை ஏற்றலாம். உச்சி வெயிலாக இருந்ததே. அதான் மாலையில் சென்று ஏற்ற சொல்லலாம். ஆனால் மாப்பிள்ள சாமி கும்பிட வேண்டாம்ன்னு சொன்னாரு.

வாங்க பார்க்கலாம் என்றார் பெரியத்தை.

ஹாஸ்பிட்டலில் சுவாதி தூங்க தேவ் தலையை பின்னே தொங்கப் போட்டு தூங்கிக் கொண்டிருந்தான். சீனு அப்பா அவனை பார்த்துக் கொண்டே வெளியே சென்றார். சீனு அவனிடம் வந்து டேபிளை இழுத்து அவன் தலையை சாய்த்து விட்டு அவன் வெளியே சென்றார். அவர் அப்பா வைத்திருக்கும் முக்கியமான பொருளை எடுக்க இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

சற்று நேரத்தில் தேவ் கண்ணை திறக்க அவனுக்கு நேராக ஒரு சாய்த்து படுத்திருந்த தனக்கு பிடித்த சுவாதியின் ஆடை களைந்து இடை தெளிவாக தெரிய கண்ட தேவ் அவள் இடையையே பார்த்து எழுந்து அவளிடம் வந்தான்.

அவள் திரும்பி படுத்து கண்ணை மெதுவாக திறந்தாள். அவளின் முன்பக்கம் புடவை விலக, அதையும் பார்த்துக் கொண்டே அவளை நெருங்கினான். விழித்த சுவாதி தேவ் அருகே வருவதை பார்த்து பயந்து எழுந்து அமர்ந்தாள். அவன் கண்கள் அவளது உடலை வருட..அப்பா என்று அழைத்தாள்.

அப்பாவா? என்று திரும்பி பார்த்தான். பின் எழுந்து வெளியே சென்று பார்த்தான். யாருமில்லை.

வெளியேயும் யாருமில்லை. எங்கே போனாங்க? அவளிடம் கேட்டான்.

எனக்கு எப்படி தெரியும்? சினத்துடன் பேசினாள்.

என் மீது உனக்கு கோபமா? உனக்கு என்னை பிடிக்கலையா? என்று அவளது கையை பிடித்தான்.

சார்..விடுங்க சார். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை என்று அவன் கையை எடுத்தாள்.

நீ சொன்னேன்னா நல்லா இருக்கும் என்றான் தேவ்.

என்ன சொல்லணும்? எரிச்சலுடன் கேட்டாள். ஆனால் தேவ் அதை கண்டுகொள்ளாது அவளை நெருங்கி அவளது முகத்தின் வந்து, “ஐ லவ் யூ” என்று நீயும் சொல்லு என்றான்.

நேரம் எடுத்துக்க சொன்னீங்க?

ஆமா. ஆனால் என்னால காத்திருக்க முடியலையே? சரி..எனக்கு ஒரு கிஸ் தா?

வாட்? கிஸ்ஸா? நான் இன்னும் உங்களுக்கு பதிலே சொல்லலையே?

சொல்லலை. அதுக்கு கிஸ் பண்ணக்கூடாதா?

ப்ளீஸ் க்யூட்டி..ஒரே ஒரு கிஸ். சீக்கிரம் கொடு. மாலை கிளம்பிட்டா எப்ப பார்ப்போம்ன்னு தெரியாது என்றான். அவள் முகம் மாறியது. உன்னோட அப்பாவும் தம்பியும் வந்துருவாங்க என்று கன்னத்தை அவள் இதழ் அருகே கொண்டு வந்தான்.

சார்..அப்பா என்றாள். அவன் திரும்பி பார்க்க மனதினுள் சிரித்த சுவாதி. அப்பா வந்தவுடன் கிளம்பலாம். பெயின் இப்ப அதிகமில்லை என்று பேச்சை மாற்றினாள்.

முன் போல் பேசினால் தான் என்னவாம்? என்று முகத்தில் அழகாக பாவனை காட்டிக் கொண்டே, க்யூட்டாவே பேச மாட்டேங்கிற. காதலை சொன்னது ஒரு குத்தமா என்று புலம்பியவாறு நான் சாப்பாடு வாங்கி வாரேன் என்று வெளியே சென்றான். அவன் சென்ற பின் சிரியாய் சிரித்தாள் சுவாதி.

தேவ் மீண்டும் உள்ளே வர சுவாதியின் அப்பா, தம்பி இருவரும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர். மறைந்து நின்று என்ன பேசுறாங்கன்னு கேட்டுக் கொண்டிருந்தான்.

ஏம்மா..அந்த தம்பி நல்ல புள்ளையா தெரியுது. நீ சரின்னு சொன்னால் நான் வேண்டுமானால் அவங்க குடும்பத்திடம் பேசுகிறேன்.

ஆமாக்கா. ஆனா என்ன உன்னோட ஹைட்டுக்கும் அவர் ஹைட்டுக்கும் கிஸ் பண்ணனும்னா ரொம்ப கஷ்டம் என்றான் சீனு.

டேய்..என்ன பேச்சு பேசுற? அப்பா அதட்ட, சுவாதி அமைதியாக இருந்தாள்.

ஏன்க்கா அசுவ நினைச்சா பயமா இருக்கா?

அப்பொழுதும் அமைதியாக இருந்தாள். அவ உன் பக்கமே வராம நான் பார்த்துக்கிறேன்.

இல்லடா. இப்பொழுதைக்கு இதை பற்றி பேச வேண்டாமே?

அவர் காத்திருப்பார்ன்னு தோணலைம்மா.

பரவாயில்லைப்பா. அவர் வேற பொண்ணை கட்டிக்கிறது தான் நல்லது.

அக்கா, அவங்க பணக்காரவங்கன்னு யோசிக்கிறியா?

ஆமாடா. இப்ப நம்மகிட்ட என்ன இருக்கு? சொல்லு. பணம் இருந்தாலும் படிப்பு, குடும்பச்செலவுக்கு, வாடகைக்கு என்று செலவாகிவிடும். இனி தான் நாம் சம்பாதிக்கணும் என்று கண்கலங்கியவள்..ஏப்பா என்னிடம் அம்மா, அக்காவை பத்தி சொல்லி இருக்கலாமே? அவங்களால் இத்தனை நாள் பட்ட கஷ்டம் கூட பெருசா தெரியலை. ஆனால் பொறுக்கி பசங்கட்ட என்னை எடுத்துக்க சொன்னா பாருங்க. நான் செத்துட்டேன் என்று அழுதாள்.

அக்கா..இனி அவள பத்தி பேசாத ப்ளீஸ். அவள தீனா சார் கண்டிப்பா பிடிச்சிருவாங்க என்றான்.

அவளா பிடி படுவா? அவளுக எமகாதவளுக. அவங்கள பத்தி விசாரிக்காம நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க வாழ்க்கையே அழிச்சிட்டேன். என்னை மன்னிச்சிருங்கப்பா..என்று அவர் அழ, அப்பா..அழாதீங்க. நாம புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

அவங்கள பிடிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சா தான் நிம்மதியாவே இருக்க முடியும். அஸ்வினிக்கு இப்பொழுது தான் கோபம் அதிகமாகும். போலீஸ் வரை விசயம் போனதால் அவள் முதல்ல நம்மை தான் பார்க்க வருவாள். சுவாதிம்மா..நீ தான் கவனமா இருக்கணும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

கவனமா இருக்கணுமா? யாரு? இவளா? விடுவேனா? என்று சொல்லிக் கொண்டே சன்னல் வழியே ஏறி குதித்து உள்ளே வந்தாள் அஸ்வினி கையில் துப்பாக்கியுடன்.

அக்கா..என்று சுவாதி எழுந்தாள். துப்பாக்கிய கீழ போட்டுரு சீனு சொல்ல..

அதுக்கா போலீஸிடமிருந்து தப்பி வந்தேன். என்னை உள்ள தள்ள நல்லா ஏற்பாடு செஞ்சி வச்சிருக்க? எங்கடி அவனை? சுவாதியை பார்த்து கேட்டு விட்டு கையில் சரியா குத்தாம விட்டுட்டேனோ? இப்ப சரியா சுடுறேன் என்று சுவாதியை குறி வைக்க..

அம்மா, என் பிள்ளைகளை விட்டுரும்மா..என்னிடம் இருக்கும் எல்லாத்தையும் கொடுத்திடுறேன் என்று அவள் காலில் விழுந்தார். சுவாதியும் சீனுவும் அப்பா..என்று கத்தினர்.

உனக்கென்ன? என்னை கொல்லணும் அவ்வளவு தான? என்று சுவாதி அவளாகவே அஸ்வினி அருகே வர, அக்கா வேண்டாம். அவகிட்ட போகாத என்றான் சீனு. ஆப்ரேசன் செய்யும் கத்தி ஒன்று அஸ்வினி கையில் பட்டு அவள் அலறியவாறு துப்பாக்கியை கீழே போட்டாள். தேவ்வும் தீனாவும் உள்ளே வந்தனர்.

இங்க தான் இருப்பன்னு நினைச்சேன் என்று துப்பாக்கி முனையில் அஸ்வினியை பிடிக்க, சுவாதி நெஞ்சில் கை வைத்தாள்.

அங்கிள்..எழுந்திருங்க என்று தேவ் சுவாதி அப்பாவிடம் வந்தான். சுவாதியும் சீனுவும் கூட அவரிடம் வந்தனர். பின் போலீஸ் ஆட்கள் வர, அஸ்வினியை இழுத்து சென்றனர். உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டி என்று அவள் கத்திக் கொண்டே சென்றாள். சுவாதியும் சீனுவும் அவங்க அப்பாவை அணைத்து அழுதனர்.

அங்கிள் சாப்பிட வாங்க என்று தேவ் அழைத்தான். மூவரும் அவனை பார்த்தனர். சீனு சுவாதியை பார்த்தான். அவள் பெட்டில் அமர்ந்து கொண்டாள். அனைவரும் சாப்பிட ஆருத்ரா தேவ்விற்கு போன் செய்தார்.

ஆரு..மேரேஜ் முடிஞ்சிருச்சா?

ம்ம்..நாங்க வாரோம். சரியா முடிஞ்சது அண்ணா. சாப்பிட்டியா?

சாப்பிட்டுக்கிட்டே இருக்கோம்.

ஓ..இருக்கீங்களா? கேலி செய்தாள்.

அவன் புன்னகையுடன் சுவாதியை பார்த்தான். பின் மாப்பிள்ள என்ன பண்றார்?

இங்க வந்தவுடனே அவன் எல்லாரோடையும் சேர்ந்து சுத்துறான். என்னை கண்டுக்க மாட்டேங்கிறான்.

அப்படியா? சாப்பிட்டியா?

டேய்..அவன் கண்டுக்க மாட்டேங்கிறான்னு சொன்னா. அப்படியான்னு கேக்குற?

அப்புறம் என்ன கேட்கணுமாம்? எல்லார் முன்னாடியும் கையை பிடிச்சு சேர்ந்தே சுத்தணும்ன்னு நினைக்கிறியா? அவருக்கு கொஞ்சம் பிரைவேசி வேண்டாமா?

டேய் அண்ணா..அவனுக்காக தான அப்பாவை ஏமாத்திட்டு வந்தோம்.

ஏய்..லூசு அப்பாவை ஏமாத்தியது அவருக்கு தெரியும். ஆனால் நீ அவரோடவே சுத்துனா? யாராவது ஏதாவது பேசுவாங்க. இது சிட்டி இல்லை. கிராமம் புரியுதா? மரமண்டை என்றான்.

யூ..யூ..என்று சினத்துடன் அவள் சொல்ல, எஸ்..மீ..மீ..டாக் நைவ் என்று எழுந்தான்.

உன்னோட கோபத்தை நாம மீட் பண்ணும் போது காட்டு. அங்க எல்லாருமே ஓ.கேவா?

ஓ.கே தான். நீ ஜாலியா இருக்கேல்ல.

யாரு, நான் ஜாலியா இருக்கேனா?

ஏதோ உன்னோட புண்ணியத்துல கேப் கிடச்சது. இப்ப கூட எனக்கு ஒரு ஆப்ரேசன் இருந்தது. எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டு உன்னோட வந்தேன்ல என்னை சொல்லணும்?

ப்ளீஸ்டா அண்ணா, அப்பாக்கிட்ட எதையாவது சொல்லி கூட்டிட்டுவான்னு கொஞ்சி பேசி அப்பாவை ஏமாத்திட்டு வர வச்ச. ஊர்ல போய் நமக்கு இருக்கு. அவருக்கு நாம இங்க தான் இருக்கோம்ன்னு தெரிஞ்சு போச்சு. உன்னால நான் திட்டு வாங்கினேன். உன்னோட மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு தயாரா இரு. இன்னும் இரண்டு மணி நேரத்துல அங்க வந்துருவேன்.

அதுக்குள்ளவா?

ஓய்..நாம என்ன டிரிப்பா வந்துருக்கோம். ஒழுங்கா கிளம்பு. அப்பா என்ன சொல்லப் போறாரோ? நீ தான் சமாளிக்கணும் என்று போனை வைத்தான்.

சார்..அப்பான்னா பயமா? சீனு கேட்டான்.

பயமெல்லாம் இல்லை. வீட்ல யாராவது கண்டிப்போட இருக்கணும்ல. அதிகமா அவர்கிட்ட வச்சுக்க மாட்டேன். நான் என்ன சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டார். கடைசி சண்டையில தான் முடியும். அது எதுக்கு?

ஏமாத்திட்டா வந்துருக்கீங்க?

தேவ் புன்னகையுடன், என் செல்ல தங்கைக்கான தான. என்ன திட்டுவார்? அவ்வளவு தானே?

என்ன சொல்லி ஏமாத்திட்டு வந்தீங்க? சீனு கேட்க, என்னோட ப்ரெண்டு மேரேஜ்ன்னு அவருக்கு தெரியாத ப்ரெண்டை சொல்லிட்டு தான் வந்தேன். ஆனால் சுவாதி பேசியதில் மாட்டிக் கொண்டேன்னு அவளை பார்த்தான்.

எனக்கு தெரியாது? சாரி சார்..என்றாள்.

எதுக்கு சாரி? எப்படியும் கண்டுபிடிச்சிருவாரு அவன் சொல்ல, அவன் போன் மீண்டும் ஒலித்தது. அவன் சுவாதியை பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்.

ரஞ்சி என்ன பண்ற?

டேய் படவா? நீ என்ன பண்ற?

நான் இப்பொழுது தான் சாப்பிடேன். நீ சாப்பிடியா செல்லம்? என்று சுவாதியை பார்க்க அவள் முறைத்தாள்.

என்னடா செல்லம்? யாருடா அந்த பொண்ணு?

அதுவா ரஞ்சி..ப்ரெண்டு தான். கெல்ப் பண்ணேன். தப்பா? கொஞ்சலுடன் கேட்டான். சீனு அவள் அக்காவை பார்த்தான். அவள் விரலை உடைத்து விடுவாள் போல் அப்படி கடித்துக் கொண்டிருந்தாள். சீனுவும் அவன் அப்பாவும் அவளை பார்த்து சிரித்தனர்.

அப்பா கால் பண்ணாரா? கண்டு பிடிச்சிட்டாரா?

அவர் கண்டுபிடிச்சது உனக்கு எப்படி தெரிந்தது?

சிரிப்பொலி கேட்க தேவ் டென்சன் ஆனான்.

அம்மா..உன் வேலை தானா? உன்னை யார் அப்பாவிடம் சொல்ல சொன்னது?

அம்மாவா? என்று சுவாதி பெருமூச்சு விட்டாள். அப்பாடா நானும் கொஞ்சம் பயந்து தான் போனேன் என்று சீனிவிடம் அப்பா கூறினார்.

நான் பேசினேனா? அவரே கண்டுபிடிச்சிட்டார்?

உன்னை வச்சு ஒண்ணுமே மறைக்க முடியாது. பாரு நாங்க இப்பவே கிளம்பணும்? ஒரு நிமிஷம் என்று மூவரையும் பார்த்த தேவ்..அம்மா என் அருகே ஒரு பொண்ணு இருக்குன்னு உனக்கு யார் சொன்னா? ஆருவா?

இல்லை என்றார்.

இல்லையா? என்று சன்னல் வழியே எட்டிப் பார்த்தான். கீழிருந்து ஒருவன் கையசைத்தான்.

அம்மா..உங்க புருசனை என்ன பண்றது? நாங்க என்ன வெளிநாட்டுக்கா வந்துருக்கோம். ஆள வச்சு கண்காணிக்கிறாரு.

போனை வை என்று வைத்து விட்டு மடமடவென நீரை அருந்தி விட்டு அமர்ந்தான். பின் அவன் சட்டையில் கை விட்டு ஒரு ஹர்பேண்டை எடுத்து சுவாதி அருகே வைத்து விட்டு..அங்கிள் நான் இப்ப வந்துடுறேன்னு கீழே சென்றான்.

கீழிருந்து கையை ஆட்டியவன் தேவ்வை பார்த்து ஓட, இவன் அவனை விரட்டி பிடித்தான். அவன் நழுவி மேலே வந்தான். மேலிருந்து மூவரும் இருவரையும் பார்த்தனர்.

அவன் இவர்கள் அறைக்குள் வந்து கதவை சாத்த தேவ் வந்து கதவை பிடித்தான்.

டேய்..கதவை விடு. இல்ல உன்னை கொல்லாமல் விட மாட்டேன் தேவ் வெளியிருந்து கதவை இழுக்க, அவன் உள்ளே பிடித்து இழுத்தான். இருவர் சண்டையிலும் கதவு உடைந்தது. தேவ் உள்ளே வந்து விழுந்தான்.

டாக்டர் இங்க பாருங்க..கதவை உடைச்சிட்டாங்க என்று செவிலியர் ஒருவர் கத்தினார்.

டேய்..எங்கிருந்துடா வந்த? குரங்கு பயலே.. இரு. டாக்டருக்கு செட்டில் பண்ணிட்டு வாரேன் என்று தேவ் எழுந்து சென்றான்.

அப்பா முடியலைடா. தம்பி வழிய விடுப்பா என்று சீனுவை நகர்த்தி விட்டு அமர்ந்தான் கௌதம். மூச்சு வாங்க ஏம்மா..பொண்ணு என்று சுவாதியை பார்த்து..ஏய் நீ தான சன்னல் ஏறி குதிச்சு வந்த. போலீஸ் கூட பிடிச்சிட்டு போனாங்கல்ல.

அது என்னோட மூத்த அக்கா.

அக்காவா? இரட்டையரா?

இல்லை. முகமூடி மனுசி என்றான் சீனு.

முகமூடி…மனுசியா? என்று சுவாதி அருகே சென்று அவளை தொட வந்தான். அவள் பயந்து எழுந்தாள். தேவ் உள்ளே வந்தான்.

முகமூடி போட்ருக்கியா? கௌதம் கையை நீட்ட, அவன் கையை பிடித்து இழுத்த தேவ்..வந்து நல்ல வேலைய பார்த்துட்டடா.

உங்கள் சேவையே என் சேவை நண்பா கௌதம் கூறி விட்டு, ஹாய்…ஐந்து வருடமாக நாங்க ப்ரெண்ட்ஸ்.

ப்ரெண்டா என்று அவன் கழுத்தை பிடித்த தேவ்..என்னோட ப்ரெண்டு எதுக்குடா அப்பாவுக்காக வேலை பாக்குற?

நண்பா..நான் உனக்காக தான் செய்வேன். உயிர்க்காக்கும் நண்பன்..

நீயா உயிரை காப்பாய். என் உயிரை எடுப்பாய் என்று அங்கிள் இந்த பய என்னோட பர்சனல் சின்ன டாட்ட கூட அப்பாகிட்ட சொல்லிடுவான். துரோகி என்றான் தேவ்.

என்ன கூறி விட்டாய் என்னுயிர் தோழா? நானா துரோகி. அந்த

“வானை கேட்டுப்பார் சொல்லும்.

 கடலை கேட்டுப்பார் சொல்லும்.

 நிலத்தை கேட்டுப்பார் சொல்லும்.

 நெருப்பை கேட்டுப்பார் சொல்லும்.

 மலையை கேட்டுப்பார் சொல்லும்

 என்னுயிர் தேவா என்று”

வாயை மூடு. உனக்கு என்னோட பேசண்ட்டை கொடுத்திட்டு வந்தா. நீ இங்க வந்து என்னையே வேவு பாக்குற ராஸ்கல் என்று அவனை திட்டிக் கொண்டு அமர்ந்தான்.

செவிலியர் உள்ளே வந்து சார்..பணம் நிறைய வச்சிருக்கீங்களா? என்ன? கார்ட்டை கீழே வச்சிட்டு வந்துட்டீங்க என்று கார்ட்டை கொடுத்தார்.

மச்சி..வேண்டாம்ன்னா எனக்கு கொடுத்திருடா என்று கௌதம் பிடுங்க..நோ..நோ..உனக்கு ஒத்த பைசா கூட கிடையாது. அதான் இன்பர்மேஷன் கொடுத்திருக்கேல அவரு தருவாரு. அவர்கிட்ட என்னவெல்லாம் சொன்ன? கேட்க அவன் கூறினான்.

சார்..இவரும் டாக்டரா? சீனு கேட்க, எஸ் என்றான்.

இல்ல..டாக்டர் ஓரிடத்திலே இல்லாமல் ஓடிக்கிட்டும் பேசிக்கிட்டு ஆப்ரேசன் செய்வாரா? பாவமாக முகத்தை வைத்து சீனு கேட்க,

ஏய் சின்னப் பையா? ரொம்ப யோசிக்காத. இவனை மாதிரி தான் நானும் செய்வேன் என்றான் கௌதம். பின் சுவாதியை பார்த்தான். அவள் தேவ்வை பார்த்தாள்.

என்ன? தேவ் கேட்டான்.

எழுந்த சுவாதி சன்னலருகே வந்து, எனக்கு தான் கொடுத்தீங்களா சார்? கேட்டாள்.

இங்க நீ தான பொண்ணு. உனக்கு தான்.

இது ரொம்ப அழகாக இருக்கு. ஆனால் காஸ்ட் அதிகமாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதனால் இது எனக்கு வேண்டாம் சார் என்று சன்னல் வழியே கீழே எறிந்தாள். கௌதம் புரியாமல் பார்த்தான். தேவ் டக்கென எழுந்தான்.

அக்கா..என்ன பண்ற? சீனு அவளிடம் வர, அவள் தேவ்வை பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அமர்ந்தாள். அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் தூக்கி எறிந்தது அவனை அல்லவா? தேவ் கண்கள் கலங்கியது. அவன் எழுந்து வெளியே சென்றான்.

சுவாதிம்மா..ஏம்மா இப்படி பண்ற? அவள் அப்பா கேட்டார். கௌதம் அவர்களை பார்த்து விட்டு தன் நண்பனை பார்க்க சென்றான். தேவ் வெளியே கண்ணீருடன் அமர்ந்தான்.

டேய் மச்சான், எதுக்கு அழுற?

கௌதமை அணைத்த தேவ் நடந்த அனைத்தையும் கூறினான். விடுடா வேற பொண்ணா இல்லை என்று அவன் சொல்ல..தெரியலை டா. ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அவளிடம் சீரியசா இருக்கேன். என்னை அவள் தூக்கி எறிஞ்சிட்டா. ஆனா என்னால் முடியலைடா என்று அழுதான்.

மேலிருந்து தேவ்வை பார்த்துக் கொண்டிருந்தாள் சுவாதி. சீனுவும் சுவாதி அப்பாவும் அவனிடம் வந்தனர். கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்தான்.

சுவாதி யாரிடமும் இப்படி வெடுக்கென பேச மாட்டாள். இப்ப நடந்த பிரச்சனையால ஒரு மாதிரி இருக்கான்னு நினைக்கிறேன் என்றார் அவர். சீனு பேண்டை தேடினான். கிடைக்கவேயில்லை. அவள் இருக்கும் அறையை பார்த்தான். அதை அறிந்த சுவாதி கீழே அமர்ந்தாள். பின் வாஷ்ரூம் சென்று வாயில் கை வைத்து அழுதாள்.

சாரி சார். என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது என்று கதறி அழுதாள். அவள் மறைந்ததை கண்டு கொண்டான் கௌதம்.

அங்கிள் நாம கிளம்பலாம். மண்டபம் சென்று எல்லாரிடமும் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று மேலே வந்தனர். சுவாதி அமைதியாக அமர்ந்திருந்தாள். கௌதம் அவளை கூர்ந்து கவனித்தான்.

சுவாதி சீனுவை அழைக்க, அவன் ஏதும் பேசாமல் அப்பா நான் கீழ போறேன் வாங்க என்று வேகமாக கீழே சென்றான். சுவாதி மனதை திடமாக்கிக் கொண்டு, அப்பா..ஒரு நிமிஷம் நீங்க எல்லாரும் கீழ போங்க. நான் வாரேன் என்று ரெஸ்ட் ரூமிற்கு சென்று முகம் கழுவி சிறிய பொட்டு ஒன்றை வைத்து விட்டு தலையை போனிடைல் போட்டு மெதுவாக வந்தாள். அப்பா அவளிடம் வந்து..அவளை அழைத்து அவன் காருக்கு சென்றார். அவர்கள் கிளம்ப தேவ் மிரர் வழியாக சுவாதியை பார்த்தான். அவள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கவனிக்காத சமயம் தேவ்வை பார்த்தாள். அவன் முகம் வாட்டமாக இருந்தது.

காயத்ரியும் மறையும் தயாராகினர். அர்ஜூன், ஸ்ரீயின் அமைதி கேள்வியாய் அவர்கள் மீது வந்து நின்றது காயத்ரிக்கு. அர்ஜூன்..என்று காயத்ரி அழைத்தாள். ஆனால் ஸ்ரீயின் அழுகை அவனை பாடாய் படுத்தியது.

அக்கா..நாம் நாளை பார்க்கலாமா? சோர்வா இருக்கு ஸ்ரீ கூற, காயத்ரி அர்ஜூனை பார்த்தாள். மறையும் அவனை பார்த்தான்.

நீ இங்கேயே இரு என்று தாரிகாவிடம் சொல்ல, நாங்க இருக்கோம். நீங்க போயிட்டு வாங்க என்றாள் தாரிகா. பவியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே இருந்தாள்.