அத்தியாயம் 96
அர்ஜூன் வர சொன்னாயா? ரதி கேட்டார். ஆமா ஆன்ட்டி..மேரேஜூக்கு தயார் செய்வது போல் அனைத்தையும் தயார் செய்யணும். உங்க பசங்க அனைவரையும் வரச்சொல்லி வேலை ஆரம்பிக்கிறீங்களா? கேட்டான் அர்ஜூன்.
அர்ஜூன், துருவன்? என்று கேட்க, ஜானு துகிரா அகில் பார்த்துப்பாங்க.
என்ன? அகில் கேட்க,
நீ இங்க இருக்கியா? ஹாஸ்பிட்டல்ல..
தீனா சார் இருக்காங்க.
அவனா?
அம்மா..எனக்கு எல்லாமே தெரியும். துருவனுக்கும் தெரியும். அவன் சீரியசா தான் இருக்கான். அவனை நாம தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லா இருக்கும். நான் அவனை பார்த்துக்கிறேன். நீங்க வேலைய பாருங்க. நாளைக்கு காலையிலே தயார் செய்யணும். சீக்கிரம் ஆரம்பிங்க என்று அகில் சொல்ல, அர்ஜூன் பெரியத்தையை பார்த்தார்.
பாதி பணம் நான் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று பெரியத்தை அர்ஜூனை அழைத்து சென்றார். நம்பரை அர்ஜூன் ரதியிடம் கொடுக்க அவர் சென்றார்.
ஆடையை வீட்டிற்கு வந்து பார்த்துக்கலாம். அக்காவுக்கும் மாமாவுக்கும் மட்டும் வரும் போது வாங்கிட்டு வரணும்.
மாமாவா? அபி கேட்க, ஆமாம்..காயத்ரி உங்களுக்கு அக்கான்னா அவரு மாமா தான வெளியிருந்து குரல் கேட்டது. வினிதாவின் அம்மாவும் அப்பாவும் வந்தனர். வினிதாவின் அம்மா தான் கூறினார்.
அண்ணி..என்று பெரியத்தை வர, அவர்கள் காயத்ரியிடம் வந்து வினிக்கு வாங்கிய எல்லாமே இப்ப இருக்கிற என்னோட பொண்ணுக்கு என்று திரும்பி பார்க்க..
டேய்..எங்க போனீங்க? என்று வினிதா அப்பா வெளியே வந்தார். நிறைய பாத்திரம் பண்டங்கள். காயத்ரி இதை பார்த்து..ஆன்ட்டி என்ன இது?
இல்ல..அம்மா..என்றார் அவர். அவள் கண்ணீருடன் அவரை அணைத்து விட்டு அர்ஜூன் வீட்டுக்குள்ள இவ்வளவு பொருட்கள் பத்துமா? கேட்டாள்.
அக்கா..என்னை விட்டுருங்க என்று பெரியத்தையை பார்த்தான். அவர் முகம் வாடியது.
அத்தை வாங்க, தேவையான பொருட்களை பார்க்கலாம் என்றாள். நீ பார்த்துக்கோடா என்று அவர் அமர்ந்தான்.
யாசு இடையே வந்து, ஷாப்பிங்க கேன்சலா? என்னோட கட்டை பிரிச்சு நல்லா நடக்குறேன். இன்னும் தூரமா நடந்துட்டு சொல்லுங்கன்னு சொன்னாங்க. ஷாப்பிங் போச்சா..புலம்பினாள்.
யாசு? நீ எப்ப வந்த? உன்னை பார்க்கவேயில்லை என்று அர்ஜூன் அவள் தோளில் கை போட்டு அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தான். ஸ்ரீ அவனை முறைத்து பார்த்தான். கோபப்படாத ஸ்ரீ..இப்ப பாரு என்று தாரிகா..
டேய்..அண்ணா..எங்கே கொஞ்சம் இருவரும் திரும்புங்க? என்றாள்.
இருவரையும் புகைப்படம் எடுத்து விட்டு, கவினிடம் வந்து சீனியர் உங்ககிட்ட மாதவ் சார் நம்பர் இருக்குல்ல? கேட்டாள்.
எதுக்கு ஜில்லு?
சீனியர், அண்ணாவுக்கு கையை உடைக்கணும்ல..நாம பண்ண முடியாது. நீங்க நம்பரை கொடுங்க. மாதவ் சார் உடைப்பார் என்றாள்.
ஹேய்..தாரி..எதையும் செஞ்சுறாத. நான் பாவம்ல..என்றான் அவன்.
அனும்மா..அர்ஜூனை பார்த்தால் பாவமாகவா தெரியுது ஸ்ரீ கேட்டாள்.
இல்ல ஏஞ்சல். அவன் ஜாலியா இருக்கான்.
சரியா சொன்ன? ரொம்ப ஜாலியா இருக்கான் என்று அவன் மீது கனலை வீசினாள் ஸ்ரீ.
என்னை விடுங்க. தாயே நீ எதுவும் செய் என்று அர்ஜூன் ஸ்ரீயிடம் வந்து, உனக்கு பொறாமையா? கேட்டான்.
இல்லையே? தாரி இவன் ரொம்ப பேசுற மாதிரி இருக்கு. அனுப்பிடு என்றாள் ஸ்ரீ.
செகண்டு ஏஞ்சல் அர்ஜூன் பாவம்ல..
நீ ஏஞ்சலை தான் கட்டிக்கிட்ட. என்னை கட்டிக்கவேயில்லை போ..நான் பேச மாட்டேன்.
அர்ஜூன்..நீ காலிடா என்று அபி இன்பாவை பிடித்துக் கொண்டு, மேம் என்னோட காதலை ஏத்துக்கிட்டாங்க என கத்தினான்.
கேரி அவனை பார்த்து சிரிக்க, அவன் தலையில் ஒரு அடியை போட்டு இன்பா..எனக்கு அவனை பிடிச்சிருக்கு என்று..இப்படி சொல்லணும். ஏன்டா கத்துற?
அபி..நீ சிக்கிட்டடா வெளிய வரவே முடியாது என்றான் அர்ஜூன் கேலியாக.
அத்தை வாங்க என்று காயத்ரி பெரியத்தையையும், பின் வினிதா அம்மாவை ஒன்றாக அமர வைத்தாள். எனக்கு நீங்க மூவருமே வேண்டும். வினி இருந்தா கஷ்டப்படுவா? என்று அவள் கலங்க..
கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஏன்மா அழுற?
இன்னும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?
சரிம்மா..உனக்காக விடுறேன். உனக்காவது இந்த அளவு துணையா இருக்காங்களே! பெருசு தான் வினிதா அம்மா கூற, என்ன மன்னிச்சிருங்க அண்ணி..நான் என் பிள்ளை, பேரங்களை சரியா கவனிக்காம விட்டுட்டேன். அதான் என்னையே கொல்ல பார்க்குதுக. எனக்கு வினிய பிடிக்கும். அவள் திடீர்ன்னு எதுக்கு வீட்டை விட்டு போனான்னு தெரியலை. அதான் கோபமா இருந்தேன். காயூ சொல்லி தான் தெரிஞ்சது. சாரி அண்ணி.
சரி..விடுங்க. நான் காயத்ரி அம்மாவா இருந்து எல்லா சீரையும் செய்கிறேன் என்றார்.
இல்ல..நீங்க பாத்திரங்கள் வாங்கிட்டீங்கள்ள..நான் மற்ற பொருட்களை வாங்குகிறேன் என்று அன்றாடம் பயன்படுத்தும் பொருளையும் ஆடையையும் வாங்குகிறேன். மாப்பிள்ள..அவர் பணத்தில் திருமணத்திற்கு காயத்ரிக்கு ஆடை எடுக்கட்டும். அவருக்கும் மற்றவர்களுக்கு நான் எடுக்கிறேன் பெரியத்தை கூற,
அர்ஜூன் அவர்களிடம் வந்து, இவ்வளவு நேரமா?
பஸ்ல வர முடியல. ரயிலில் பயணித்து தான் வந்தோம் என்றார் வினிதாவின் அப்பா.
நீங்க ஓய்வெடுங்க. நாங்க சென்று வாங்கி வருகிறோம் என்றார் பெரியத்தை.
நாங்க மாப்பிள்ளைய மட்டும் பார்த்துட்டு வீட்டுக்கு வந்துடுறோம். ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் வைத்து பார்த்திருக்கிறேன். ரொம்ப அமைதியான குணமான பிள்ளை தான்.
ஏங்க..நீங்க பார்க்கலைல. வாங்க பார்த்துட்டு வருவோம் என்றார்.
பாட்டி..என்று ராக்கி வினிதா அம்மாவிடம் வந்தான். அவரை இருவரும் கொஞ்சி விட்டு..கிளம்பலாமா? கேட்டனர்.
அம்மா..நானு..அக்கா போறா..என்றான் ராக்கி.
நாங்க ராக்கிய கூட்டிட்டு போறோம். மாப்பிள்ள கூட இருப்பார்ல. பார்த்துப்பார் பெரியத்தை கூற, அவள் யோசித்தாள்.
ஏன்மா, இன்னும் யோசிக்கிற..அக்கா நாங்க எல்லாரும் இருக்கோம். பார்த்துக்கிறோம் என்றாள் ஸ்ரீ. அர்ஜூன் ஒத்து பாட சரி என்றாள் காயத்ரி.
ராக்கியை அவளிடம் இழுத்து, யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது. சமத்தா இருக்கணும்..அவனுக்கு அறிவுரை கூறி விட்டு, பார்த்துக்கோங்க என்றாள் அனைவரையும் பார்த்து.
அம்மா..நீ வரலையா?
அம்மா வரக்கூடாது. உன்னோட ப்ரெண்டு இருப்பார்ல. நீ போயிட்டு வா என்றாள். அனைவரும் அவளை மகிழ்ந்து பார்த்தனர்.
அனைவரும் கிளம்ப வீட்டில் அர்ஜூன் பாட்டியும், காயத்ரியும் இருந்தனர். பிரதீப்பிடம் போன் செய்து விசயத்தை கூற…வேலுவும் அவன் நண்பர்களும் குதிரையை பார்த்துக் கொள்ளும் சாக்கில் வந்தனர்.
அர்ஜூனுடன் சென்ற அனைவரும் மறை வீட்டிற்கு செல்ல..முதலில் உள்ளே சென்றது அர்ஜூன், வினிதா அம்மா, அப்பா.
மறை தூங்கிக் கொண்டிருந்தான். அர்ஜூன் முதலில் அவனருகே வந்து, மாமா..எழுந்திருங்க என்று எழுப்பினான்.
மாமாவா? நானா? என்று எழுந்து அமர்ந்தான்.
அர்ஜூன் நீயா? நீயா மாமான்னு சொன்ன?
அவன் பின்னே கண்ணை காட்டினான். வினிதா அம்மா அப்பாவை பார்த்து, நீங்களா? ஹாஸ்பிட்டல்ல பார்த்தோம்ல என்று மறை எழுந்து, உள்ள வாங்க என்றான். அவர்கள் பின்னே பெரியத்தையை பார்த்து..அவரையும் உட்கார சொன்னான்.
மாப்பிள்ள தயாராகி வாங்க என்றனர்.
எங்கே?
அண்ணா..ஷாப்பிங் போகணும் யாசு உள்ளே வந்து, சீக்கிரம் வாங்க இல்லை நீங்க இல்லாம விழாவை நடத்தி விடாமல்..
ஏய்..யாசு அர்ஜூன் சத்தம் கொடுக்க, தாரிகா கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள்.
பேச கூட கூடாதா? பாரு அவளே சும்மா இருக்கா என்று அர்ஜூன் ஸ்ரீயை காட்டினான். ஸ்ரீ ஏதோ யோசனையில் இருக்க, நிவாஸ் அவளிடம் வந்து ஆருத்ராவின் புகழாரத்தை பாடினான்.
பேசியது போதும். சீக்கிரம் வாங்க என்று அனைவரும் வெளியேற அனைவரும் உள்ளே வாங்க என்றான்.
நேரமாகுதுப்பா.
அவன் முகத்தை கழுவி துடைத்து விட்டு சட்டையை எடுத்து போட்டு விட்டு, போகலாமா? என்று கேட்டான்.
அவ்வளவு தானா? பெரியத்தை கேட்க, இதுக்கு மேல என்னம்மா பண்ணனும்? கேட்டான் மறை.
டேய்..அர்ஜூன், ரெண்டு நாளுக்கு நீ தான் மாப்பிள்ளையை தயார் படுத்தணும் என்று பெரியத்தை கட்டளையிட்டார்.
நான் இவரிடம் தனியா பேசணும் என்று வினிதா அம்மா கேட்டார். அனைவரும் வெளியேற, பெரியத்தை பார்த்துக் கொண்டே சென்றார்.
நானும் என்று அப்பாவும் உள்ளிருக்க..மறை இருவரையும் அமர வைத்து டீ சாப்பிடுவீங்களா? கேட்டான்.
சமைக்க தெரியுமா? கேட்டார் வினிதா அம்மா.
தெரியும் அத்தை என்றான்.
பரவாயில்லை பிடிச்சுக்கிட்டீங்க? அப்பா கூற, அவன் புன்னகைத்தான். அம்மா..காயத்ரியை சந்தித்தது, வினிதா – காயத்ரி நட்பு என்று அவர்களை பற்றி பேசினார்.
ஒரே ஊரா? அவன் கேட்டான்.
ஆமாப்பா என்று தொடர்ந்தார். வினிதா அமைதியா தான் இருப்பா. காயத்ரி அதுக்கு மாறானவ. தைரியம் சுட்டி. அவளோட சிரிப்பே எல்லாத்தையும் மறக்க வைக்கும். அப்படி இருந்தவப்பா..இப்ப பேசவே மாட்டிங்கிறா. அந்த பையனால ரொம்ப கஷ்டப்படுட்டிருக்கா.
ஆமா அத்தை. இருட்டுக்கு கூட பயந்தா.
யாரு? காயுவா பயந்தா? நீ வேற பாம்பையே கையில பிடிச்சி தூக்கிப் போடுவா. இரவு கடைக்கு வினிதாவுக்கு துணைக்கு அவ தான் போவா.
நல்ல துணிச்சல் தான் புன்னகைத்தான். பள்ளிக்கூடத்துல யாரும் வினிய பத்தி பேசிறக்கூடாது. அடிச்சிட்டு வந்துருவா. அவளோட அம்மா, அப்பா பயந்தாங்க. பள்ளிய விட்டு நிறுத்திடுவாங்களோன்னு. அவளுக்கு இங்கிலீஸ் ரொம்ப பிடிக்கும். டீச்சர் ஆகணும்ன்னு அவ முடிவெடுத்ததே பேசிக்கிட்டே இருக்கலாம் என்று தான். அர்ஜூன் சொன்னான். வினி காயூவை படிக்க வைத்து டீச்சராக்கணும்ன்னு சொன்னதை. ஒரு வருடம் காலேஜ் முடிச்சிருக்கா.
ஆனால் இப்ப படிப்பாலான்னு தெரியலை. வினிக்காக எல்லாத்திலும் முன் வந்து…அவள் வாழ்க்கையை தொலைப்பால் என்று நாங்க நினைக்கவேயில்ல. அவ எங்க யாரிடமும் நடந்த கஷ்டத்தை சொல்ல மாட்டா. கல்யாணத்துக்கு பின் உங்ககிட்ட சொன்னா..கொஞ்சம் ஆறுதலா இருங்கப்பா. கோபப்பட்றாதீங்க..என்ன தான் அவள் பேசிக்கிட்டே இருந்தாலும் யாரிடம் என்ன பேசணும்ன்னு யோசித்து தான் பேசுவா. எனக்கு தோன்றியது சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. பழக பழக உங்களுக்கே அவளை பத்தி தெரியும்.
வினிதா அப்பா..மறையை பற்றிய சொந்த விசயத்தை கேட்டார். அவன் அனைத்திற்கும் பதிலளித்து விட்டு, நான் படிக்கலை. அவங்க படிச்சிருக்காங்க. இனி கூட படிப்பாங்க. பிரச்சனை வராதே.
இந்த வேறுபாட்டை பற்றி இருவரும் நினைக்க கூடாது. நான் அவளிடம் பேசுகிறேன்.
நான் சும்மா தான் கேட்டேன். அவங்ககிட்ட கேட்க வேண்டாம்.
பேச வேண்டியதை பேசித்தான் ஆகணும்.
நீ, போ, வான்னு அவளிடம் நீங்க பேசுங்க. அவ ஏதாவது நினைச்சுப்பா.
சரி மாமா.
நிரந்தர வேலை ஏதாவது பார்க்க முடியுமான்னு பாருங்க அவர் கூற, சரி மாமா என்றான்.
கல்யாணம் முடிஞ்சா பேச முடியாது. அதான் இப்பொழுதே பேசினோம்.
வாரோம் மாப்பிள்ள.
நீங்க வரலையா?
இல்லப்பா..நீங்க வாங்கிட்டு வாங்க. நீங்க தான் காயூவுக்கு உடை எடுக்க போறீங்களா? வாங்கிட்டு நேரத்திற்கு வந்துடுங்க என்றார்.
நானா?
சம்பந்தி தான் சொன்னாரே? நீங்க அர்ஜூனுடன் சென்று பாருங்க, அந்தம்மா..நிறைய காசு போட்டு எடுக்கும். பார்த்துக்கோங்க.
மாப்பிள்ள அது என்ன காயம்? கேட்க, சும்மா வாங்க என்று அவர் கணவனை இழுத்து சென்றார். வெளியே நின்றவர்களிடமும் சொல்லி விட்டு அவர்கள் கிளம்ப இவர்களும் ஷாப்பிங்கிற்கு கிளம்ப, ராக்கி மறையுடன் ஒட்டிக் கொண்டான்.
நாம இந்த வீட்ல இருக்கப் போறோமா? ராக்கி மறையிடம் கேட்க, வீடு உங்களுக்கு பிடிக்கலையா? அவன் கேட்டான்.
குட்டியா இருக்கு அவன் கூற, மறைக்கு ஒருமாதிரி இருந்தது. அவன் அமைதியாக தாரிகா அவனிடம்..குட்டி வீடு தான் நல்லா இருக்கும் செல்லம்.
பெரிய வீட்ல நீ இருந்தேல..ஓடி பிடிச்சு விளையாண்டியா? கேட்டாள். பெரியத்தை அவளை முறைக்க தாரிகா கண்டு கொள்ளவேயில்லை.
இல்ல. நானும் அம்மாவும் அறைக்குள் மட்டும் தான் விளையாடுவோம். அந்த அறை தான் இந்த வீடு, இப்பையுமா உனக்கு பிடிக்காது.
பிடிக்குமே? அம்மாவுடன் விளையாட பிடிக்குமே? என்றான்.
கடையினுள் இருவரும் பேசிக் கொண்டே உள்ளே வந்தனர். நீ அவரை ப்ரெண்டுன்னு சொல்லக்கூடாது. அப்பான்னு சொல்லு..தாரிகா கூற, அனைவர் காலும் நின்றது. ஆனால் ராக்கி அழுது கொண்டே வெளியே ஓடினான்.
ராக்கி என்று அவள் பின் வந்த தாரிகா..கண்ணை மூடி கத்த, ராக்கியை இடிக்க வந்த லாரி முன் நின்றான் மறை. பிள்ளையை தூக்க சென்று விபரீதமாகி விட்டால்…லாரியை பிரேக் போட்டு வண்டியை லாரிக்காரன் திருப்பி நிறுத்தி விட்டு மறையை திட்டிக் கொண்டே கீழிறங்கி வந்தான்.
ராக்கி அழுது கொண்டிருக்க, அவனை மறை துக்கி விட்டு..உனக்கு அப்பான்னா பிடிக்காதா?
அப்பா..அடிப்பான்..துஸ்மந்த் என்றான் ராக்கி.
நீ ப்ரெண்டுன்னே கூப்பிடு அவன் கூற, மறையை திட்ட வந்த லாரி டிரைவர் அவனை பார்த்து கைதட்டினான்.
சின்ன குழந்தைக்காக தில்லா முன்னாடி வந்து நின்ன பாரு..எங்கையோ போயிட்ட..அவன் பாராட்ட, ராக்கி அவனை ஏற்றுக்கொள்ள மாட்டானோ என்று கவலையுடன் விலகினான். அவர் செல்ல..ஸ்ரீ ராக்கியை தூக்கிக் கொண்டு தாரிகாவை அழைத்தாள்.
இங்க பாரு என்று ஸ்ரீ..அவளோட பர்ஸை திறந்து அவளது பெற்றோரை காட்டி..இவர் தான் என்னுடைய அப்பா. இது நான் சின்ன பொண்ணா இருந்தப்ப எடுத்தது.
அப்பா..ரொம்ப நல்லவங்க. நமக்கு சாப்பிட வாங்கித் தருவாங்க. நம்முடன் விளையாடுவாங்க. அம்மா அடிக்க வந்தா அப்பா பின்னாடி ஒளிஞ்சா அம்மா நம்மள அடிக்காம பார்த்துப்பாங்க. உனக்கு தெரியுமா? நான் அப்பா மேல தான் படுத்து துங்குவேன். சேட்டை பண்ணா தான் திட்டுவாங்க என்று கண்கலங்கினாள். ராக்கி மாதிரி குட் பாய்ஸை திட்ட மாட்டாங்க. அவங்க உன்னை திட்டி இருக்காங்களா? ஸ்ரீ மறையை கை காட்டி கேட்டாள்.
இல்லை என்று மறையை பார்த்தான். ஹாஸ்பிட்டலில் மறை மீது தூங்கியது நினைவிற்கு வந்தது. ஸ்ரீக்கு அவள் அப்பா நினைவில் அழுதாள். தாரிகா அவளை அணைக்க,
உங்க அப்பா எங்க?
அப்பா..அப்பா..அவரு தூரமா போயிட்டாரு. என்னிடம் நிறைய விசயத்தை சொல்லாம போயிட்டாரு என்று அர்ஜூனை பார்த்து அழுதாள். அவன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
ரொம்ப தூரமா? அனுவோட அப்பா மாதிரி. தூரமா போயிட்டாரு என்றாள் தாரிகா.
செத்து போயிட்டாரா? ராக்கி கேட்க, மறை அவனை துக்கினான். ஸ்ரீ அழுதாள்.
அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க, அபி அவளை மறைத்து நின்று அர்ஜூன்..என்று அழைத்தான்.
அனு அஞ்சனம்மாவிடமிருந்து ஓடி வந்து, ஏஞ்சல் அழாதே என்று கண்ணீரை துடைக்க..மறையை பார்த்தான் ராக்கி. பின் அவனும் ஸ்ரீயிடம் வந்து கண்ணை துடைத்து விட்டான்.
நான் அப்படி சொல்ல மாட்டேன் ஏஞ்சல் என்றான் ராக்கி. அழுத அவள் கண்ணீரை துடைத்து சிரித்தாள். உனக்கும் நான் ஏஞ்சலாகி விட்டேனா? என்று முத்தம் கொடுத்தாள் இருவருக்கும்.
போகலாமா? அர்ஜூன் கேட்டான். என்ன கேட்டுகிட்டு இருக்க? என்று நிவாஸ் ஸ்ரீயை பிடித்து இழுத்து நடத்தினான்.
மறைக்கு பொண்ணுங்க ஆடை பற்றி தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்க ஸ்ரீ அவனிடம் வந்து..ஒவ்வொன்றாய் காட்டினாள். புடவையை பற்றியும் கூறி அவனாகவே எடுக்கும் படி செய்தாள். அனைத்தையும் முடித்து வீட்டிற்கு வர மணி ஐந்தாகியது.
அர்ஜூன்..மாப்பிள்ளையை தயார் படுத்தி விட்டு வந்து நீ தயாராகு அத்தை கட்டளையிட, அவனும் மறையுடன் வீட்டிற்கு சென்று வீட்டை மாற்றும் வேலையிலும் இறங்கி அதை கொஞ்சம் முடித்து விட்டு, மாமா எதற்கும் இன்னொரு அறை இருந்தால் நல்லா இருக்கும். அக்கா ஆடை மாற்ற வேண்டுமே? வீட்டில் ஆட்கள் இருந்தால் என்ன செய்வது? கேட்டான்.
பார்க்கிறேன்டா மச்சான் என்று இருவரும் சிரித்துக் கொண்டனர். பின் மறையை தயார் செய்யும் முன் பெரியத்தை, வேலுவின் நண்பர்கள், கவின் அம்மா, அகல்யா மற்றும் சில ஊர் பொம்பளைகளையும் வந்து நலங்கு வைத்து சடங்கை செய்ய பின் அர்ஜூன் அவனை தயார் படுத்தி விட்டு அவனும் தயாராக கிளம்பினான்.
நலங்கு வைத்து முடிந்தவுடன் மறை பெரியத்தையிடம் பேசினான். வீட்டில் சாமி கும்பிடுவதோ, கோவிலுக்கு செல்வதோ இருக்க வேண்டாம்.
சாமி கும்பிடாமல் எப்படி திருமணம் நடத்துவது? கவின் அம்மா கேட்டார்.
அம்மா..உங்க பேரன் இறந்து இரு நாட்கள் தான் ஆகிறது. உங்க மருமகள் கணவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவில்லை. அவரை பார்க்க கூட போகலை. அதனால் ஒரு வருடத்திற்கு பூஜை, கோவில் எதுவும் வேண்டாம். திருமணச் சடங்குகளை கூட உங்கள் ஆசைக்காக தான் ஒத்துக் கொண்டேன். அதனால் நேராக மண்டபத்திற்கு சென்று விடலாம் என்றான்.
மறையை பெருமிதத்தோடு அனைவரும் பார்த்தனர். பெரியத்தை கண்கலங்க நல்லதுப்பா என்றார்.
கோவிலுக்கு போகாமல் எப்படி நடத்துவது? பர்வதம் பாட்டி கேட்க, சாமியை பார்க்க வேண்டாம்ன்னு தான் சொன்னேன். மனதில் நினைத்துக் கொள்ளலாம். எங்களுக்காக நீங்க எல்லாரும் கோவிலுக்கு சென்று வேண்டிட்டு வாங்க பாட்டி. எனக்காக செய்ய மாட்டீங்களா? கேட்டான் மறை.
என்னப்பா இப்படி கேட்டுட்டு? நீ எத்தனை பேருக்கு உதவி இருப்ப? உனக்காக கோவிலுக்கு போக மாட்டோமா? ஒரு பெண் கேட்க, ரொம்ப நன்றிக்கா என்றான் அவன்.
அர்ஜூன்..நீ இவரை தயார்படுத்து. நாங்க கோவிலுக்கு போயிட்டு வந்துடுறோம் என்றார் பாட்டி. மற்றவர்களும் கூற, அவன் நண்பர்களும் மறைக்கு பதிலாக கோவிலுக்கு சென்றனர். பெரியத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே வெளியே திண்ணையில் அமர்ந்தார். அவர் மறை சார்பாக திருமணத்தில் நிற்க வந்தார். மறையை பற்றி மற்றவர்கள் பேச மகிழ்ச்சியுடன் இருந்தார்.
இது போல் என் பேரன் இருந்திருந்தால் காயத்ரி வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். பாவம்..பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருப்பா. இனியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று எண்ணியவாறு போனை எடுத்து அர்ஜூன் பாட்டியை அழைத்து, காயத்ரிக்கு நலங்கு வைத்தாயிற்றா என்று கேட்டார்.
முடிந்தது. பொண்ணு தயாராக அறைக்கு போயிருக்கா என்றார். பெரியத்தை மறை கூறியதை சொல்ல, அவன் சொல்வதும் சரி தான். அப்ப நேரா மண்டபத்துக்கே வந்துருவா..என்றார் பாட்டி.
சீக்கிரம் நேரமாகுதுடி. மாப்பிள்ள சாமி கும்பிட வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். ஆடையை மட்டும் மாற்றி விட்டு வாங்க. மண்டபத்துல போய் வச்சுக்கலாம் என்றார்.
வினிதா அம்மா, அப்பா, தாரிகா அம்மா, கமலி.. பழம், இனிப்பு, வெற்றிலை பாக்கு அனைத்து தட்டுகளையும் தயார் செய்து கொண்டிருந்தனர். இருவர் முறைப்படியும் நிச்சய நடக்குட்டுமே என்று தயார் செய்தனர். அர்ஜூன் வீட்டிற்கு வந்து தயாராக, ஸ்ரீயும் தாரிகாவும் காயத்ரியை தயார் செய்து வெளியே வந்தனர். கேரி, ஜாஸ்மின், ஜான் தயாராகி வந்தனர். ஜாஸ்மினும் குட்டிப்பாப்பாவும் காயத்ரியுடன் இருக்க, இவர்கள் ராக்கியையும், அனுவையும் தயார் செய்து அவர்களும் தயாராகி வந்தனர். அர்ஜூன் காயத்ரியுடன் இருந்தான்.
சீக்கிரம் வாங்க கமலி சத்தமிட, பொண்ணு வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். சற்று நேரத்தில் மேள சத்ததுடன் பெரியத்தையுடன் மறையும் மற்றவர்களும் வர, மணி ஏழரை ஆனது. காயத்ரி நடுவே டிசைனர் புடவையில் கையில் மருதாணியுடன் அமர்ந்திருந்தாள். அவளருகே ராக்கியும், அனுவும் சுற்றிலும் பொண்ணுங்க மருதாணி வைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாட்டு ஆட்டம் என்று இருக்க மறை அவளை பார்த்துக் கொண்டே நண்பர்களுடன் அமர்ந்தான்.
அக்கா..வாங்க என்று அபி காயத்ரியை உள்ளே பெண்ணறைக்கு அழைத்து சென்றான். அவள் மருதாணி வைத்திருந்த கையை கழுவி விட்டு அமர்ந்தாள். தாரிகா அவளிடம் வந்து, அவளுக்கு டச் அப் செய்தாள்.
அக்கா..மாமாவை பார்த்தீங்களா? இளஞ்சிவப்பு நிற சர்ட்டை டக்கின் செய்து செம்மையா இருக்காங்க.
ஓய்..சைட் அடிக்கிறியா? காயத்ரி கேட்க, அக்கா..அவர் உங்க கணவர் நீங்க இப்படி கேட்கிறீங்க?
பெரியத்தை உள்ளே வந்து காயத்ரியை பார்த்து, நீ கஷ்டப்பட்டதுக்கு சேர்த்து நல்ல பையனா கிடச்சிருக்கான்ம்மா. நீ சந்தோசமா இருக்கணும்மா என்று கண்கலங்கினார்.
தாய்மாமா..இருவருக்குமே இல்லை என்பதால் ஊர்ப்பெரியவர் முன் வந்து தாய்மாமன் செய்ய வேண்டிய சடங்கை செய்து காயத்ரி, மறையை அழைத்து அவன் எடுத்த ஆடையை அவள் கையில் கொடுத்து உடுத்தி வரச் சொன்னார்கள். மறை கீழிறங்க ராக்கி அவனிடம் ஓடி வந்தான். அவன் ராக்கியை தூக்கி விட்டு காயத்ரியை பார்த்தான். அவள் அறைக்குள் சென்றாள்.
மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிற லெஹங்கா சோலியுடன் நெற்றிசூட்டி, காதணியுடன் மாட்டல் அணிந்து அழகாக மேடையேறினாள். மறையையும் மேலேற்றினார்கள். இருவரும் ஜோடியாக நின்றனர். ஸ்ரீ, அனு, ராக்கி, யாசு, தாரிகா, கவின், பவி, அபி, வேலு, அவன் நண்பர்கள், அகில் மேடையேறினார்கள். பின் மறை காயத்ரிக்கு மோதிரம் அணிவித்தான்.
அர்ஜூன் எங்கடா? கேக் ஆர்டர் பண்ணதா சொன்னான். அவனையே காணோம் வேலு கேட்க, அனைவரும் தெரியலையே? என்றான்.
சாப்பாடு தயார் செய்யும் இடத்திற்கு அப்பொழுதே போனான் காயத்ரி கூற, நான் பார்த்துட்டு வாரேன் என்று ஸ்ரீ நகர..இரு நானும் வாரேன் என்று அபி அவளுடன் சென்றான்.
கேக்கை ஒருவன் கொண்டு வந்தான். அனைவரும் அர்ஜூனை கேட்டனர். தெரியல ஆர்டர் பண்ணாங்க . நான் கடையிலிருந்து வந்துருக்கேன் என்றான்.
தேங்க்ஸ்டா தம்பி என்று வேலு அவனை அனுப்பி விட்டு, முதல்ல இருவரும் கேக் வெட்டுங்க. அவன் வருவான் என்று ராக்கியை அவர்கள் இடையே நிற்க வைத்தான். மூவரும் சேர்ந்து கேக் வெட்ட மறையின் பார்வை காயத்ரியை விட்டு மீளவில்லை. அவள் அவனை பார்த்து விட்டு கேக்கை நீட்டினாள். அவன் சுவைக்க..ராக்கிக்கு ஊட்டி விட்டாள். மறையும் அவளுக்கு ஊட்டி ராக்கிக்கு ஊட்டி விட்டான். பின் மூன்று பெரிய சாக்லெட்டை நீட்டினான்.
பிரித்து ஊட்டி விடுடா? நண்பர்கள் கூற, சும்மா இருங்கடா என்று அவளை பார்த்தான்.
மூன்று எதுக்கு? காயத்ரி கேட்டாள்.
அவன் அனுவையும் கைகாட்டினான். மறையை பார்த்து புன்னகைத்து அனு, ராக்கிக்கு கொடுத்து விட்டு அவளே சாக்லெட்டை பிரித்து அவனுக்கு ஊட்டி விட்டாள். அவன் நண்பர்கள் ஆர்பரித்து கத்தினர். அவனும் அவளுக்கு கொடுத்தான்.
அர்ஜூன் குடித்து அங்கு வந்தான். கமலியும் அஞ்சனாவும் அவனை பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர். ஸ்ரீயும் அபியும் அங்கு வந்தனர்.
அர்ஜூன்..குடிச்சிருக்கியா? ஸ்ரீ கேட்க,.ஏஞ்சல் கொஞ்சமா அங்க போனேனா? ஊத்தி விட்டுடாங்க..
யாருடா அபி கேட்க, சக்தி அண்ணாவும் அவங்க ப்ரெண்ட்ஸூம்.
அவனுக இங்க என்ன பண்றானுக? வேலு கீழிறங்க, மறையும் செல்ல இருந்தவனை தடுத்து நிற்க வைத்தார் பெரியத்தை. காயத்ரியிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தவன் தான் சக்தி.
அண்ணா..பிரச்சனை வேண்டாம் அபி அவனை தடுத்தான். ஆமாம்ப்பா.. இன்னும் டான்ஸ் இருக்கு என்றார் பெரியத்தை.
வாவ்..சூப்பர். வா மாமா அவன் கிடக்கான் என்று அகல்யா அவனை பிடித்து இழுக்க, பாப்பு அவனுக..இருங்க தம்பி. நான் பார்க்கிறேன் என்று வெற்றியின் நண்பர் ஆட்களுடன் அவனிடம் சென்றனர்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து, ஏஞ்சல் தாவணி உனக்கு ரொம்ப அழகாக இருக்கு.” வில் யூ மேரி மீ”? என்று உளறலுடன் கேட்க, அனைவரும் திகைத்து அர்ஜூனை பார்த்தனர்.
அர்ஜூன்..இங்க என்ன நடக்குது? நீ என்ன பண்ற? கோபமாக ஸ்ரீ கேட்டாள். ஆனால் அனைவரும் அமைதியாக இருவரையும் பார்த்தனர். அவன் காதல் தான் ஊருக்கே தெரியுமே?
என்ன? விசாலாட்சி உன்னோட பேரன் இன்னும் பிள்ளைய விடல போல. பேசாம கல்யாணம் செய்து வச்சிரு என்றார் ஒரு கிழவி.
என்ன பேசுறீங்க? அவன் தான் உளறிகிட்டு இருக்கான்னா..இப்படி பேசுறீங்க? தாரிகா அம்மா கேட்டார்.
அம்மா..அவள் எனக்கு பதில் சொல்லும் வரை விடமாட்டேன் என்றான் அர்ஜூன்.
யாரும் பதில் கூறாமல் இருக்க, நிவாஸ் ஸ்ரீ கையை பிடித்து வா..என்று இழுத்தான்.
அர்ஜூன் அவன் கையை பிடித்து, காலையில தானடா மாமான்னு உரிமையா பேசுன? அர்ஜூன் கேட்டான்.
ஸ்ரீ நிவாஸை பார்த்து முறைக்க, அது சொல்ல தோணுச்சு. அதான் சொன்னேன். அதுக்காக இப்பவே கல்யாண பேச்சை எடுப்பாயா?
ம்ம்..என்று ஸ்ரீயிடம் அர்ஜூன் வந்து, சொல்லு ஏஞ்சல் என்றான் குழறியபடி.
அர்ஜூன்..என்ன பண்ற? புரிஞ்சு தான் செய்றியா? குடிச்சிட்டு உளறாதே? அகில் சத்தமிட்டான். ஸ்ரீ ஏதும் பேசாமல் அர்ஜூன் பார்த்துக் கொண்டே நின்றாள்.
நான் குடிச்சிட்டு தான் பேசுறேன். ஆனால் என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறேன். ஸ்ரீ உன்னிடம் எத்தனை முறை என் காதலை சொல்லி இருக்கேன் தெரியுமா? உனக்காக எத்தனை வருசமானாலும் காத்திருப்பேன். ஆனா பதில மட்டும் சொல்லிடு..என்று அனைவரையும் பார்த்து உட்காருங்க என்று ஸ்ரீயின் கையை பிடித்தான்.
ஹே..மை ஏஞ்சல் “ஐ லவ் யூ”. உனக்கு ஐந்து நிமிடம் நேரம் தாரேன் என்று அவளை பிடித்து இழுத்து அவன் கையில் வைத்து..ஆடலுடன் ஸ்ரீ மீதான காதலை பறை சாற்றும்படி பாடலை பாடினான்.