அத்தியாயம் 88

காலை ஏழு மணிக்கே அனைத்தும் முடிய..நித்தியுடன் இருந்த அனிகாவிற்கு அவள் அம்மா நினைவு வந்தது. அவள் அமைதியாக வெளியே வந்தாள். ஆண்கள் அனைவரும் சென்றிருக்க, வெளியே பவி இருந்தாள். அவளருகே வந்து சோகமாக அமர்ந்தாள்.

அனி..டயர்டா இருக்கா? கேட்டாள் பவி.

ஏதும் பேசாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். துகிராவும் பவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஜானு, மீனாட்சி, லலிதாவும் இரண்டு மணியளவிலே வீட்டிற்கு சென்றிருப்பர்.

பவி..என்னால அம்மாவுக்கு சரியா எதுவும் செய்யகூட முடியல. அவங்க ஏன் இப்படி பண்ணாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனும் இப்ப இல்லை.

எனக்கு சைலேஷ் சார் குடும்பமே துணைக்கு இருந்தாலும் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் என்று தேம்பி அழுதாள். தாரிகாவும், அவள் அம்மாவும் அவளிடம் வந்தனர். இனி உன்னால் ஏதும் செய்ய முடியாதும்மா என்று தாரிகா அம்மா கூற அழுதாள் அனிகா. தாத்தா அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் ஜானு எழுந்து பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். மீனாட்சி வேலைக்காரர்களை அழைத்து, அன்று செய்வதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் ஜானு கீழிறங்கி வந்து சமையலறைக்குள் சென்று அவளுக்கு அவளாக டீ போட வேலைக்காரர்கள் ஆச்சர்யத்துடன் ஜானுவை பார்த்தனர்.

அவள் எடுத்து வந்து அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தாள். எனக்குடி? அப்பத்தா கேட்க, நாளைக்கு போட்டு தாரேன் அப்பத்தா. எனக்கு நேரமாகுது. நான் சாப்பிட்டு விட்டு துருவை பார்த்துட்டு பள்ளிக்கு செல்லணும்.

சாயங்காலம் கூட போகலாமேம்மா?

அப்பத்தா..சாயங்காலம் புவி அவ வீட்டுக்கு கிளம்புவா. நான்..என்று நிறுத்தி வேலைக்காரர்களை கவனித்துக் கொண்டிருக்கும் மீனாட்சியை பார்த்தாள்.

எனக்கு அண்ணாவுடன் எங்க வீட்டுக்கு போகணும் போல் உள்ளது என்று சத்தமாக சொல்ல, வெற்றியும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். அவர்களுடன் ஆதேஷும் வந்தான்.

ஏன்டி, இங்க இருக்கிறது உனக்கென்ன குறையாம்?

அப்பத்தா, குறையெல்லாம் இல்லை. அம்மா, அப்பா, அண்ணா எல்லாரும் இருக்காங்க. ஆனால் எனக்கு அங்கிருந்தே பழகிவிட்டது. நீ வர்றியா? அங்க போகலாம்.

இது என்னோட புருசன் வீடுடி. நான் எங்கையும் வர மாட்டேன்.

அப்படியா? இது என்னோட அப்பா வீடு இல்லையா? அச்சோ..அப்பத்தா, அப்பா உன்னை ஏமாத்தி எழுதி வாங்கிட்டாரா? எல்லாரும் வெற்றியோட வீடு எங்கன்னா இந்த வீட்டை தானே காட்டுறாங்க?

எல்லாரும் வந்துட்டீங்களா? அண்ணா நான் கேட்பது சரி தான? இது அப்பப்பா வீடா? இல்லை அப்பா வீடா?

அது என்னடி அப்பப்பா?

நீ அப்பத்தான்னா? உன்னோட புருசன் எனக்கு அப்பப்பா தான?

அடியேய்..உன் மூளைய எங்க கொண்டு போய் வச்சிருக்க. கருப்பா..இதெல்லாம் நான் கேட்கணுமா? என் பேர்த்தி கேட்பதை பாரேன். அப்பப்பாவாம்..லலிதா குடித்துக் கொண்டிருந்த டீ புரை ஏறியது.

பார்த்து மெதுவாம்மா..அப்பத்தா கூற, அண்ணா..நீ சொல்லு ஜானு பிரதீப்பிடம் வர..அங்கேயே நில்லுடி. அவன் முதல்ல குளிச்சிட்டு வரட்டும்.

ஜானு…ஜானு..அக்கா..அக்கா…அழைப்பு குரல் கேட்க, எல்லாரும் வழிய விடுங்க. ஏதோ போர்ஸ்டர் போடுவது போல் போஸ் குடுக்குறீங்க? அங்கிள் நீங்களுமா? என்று சிரித்த ஜானு, ஆதேஷை பார்த்தும் பார்க்காதது போல் வெளியே ஓடினாள்.

சக்கரையும் அவன் நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். என்னடா, இங்கேயும் விட மாட்டீங்களா?

அக்கா துருவன் அண்ணனை பார்க்கணும். தனியே போனால் விசயத்தை நானே உளறிடுவேன். நீயும் வர்றியா?

என்ன உளறப் போற?

அக்கா..துளசி அக்கா ஊரை விட்டு போனதுக்கு துரு அண்ணா தான் காரணம். அக்காவுக்கு அண்ணாவை பிடிக்குமாம். ஆனால் அண்ணா ஏத்துக்கலையாம்..

என்னடா சொல்ற? இதெல்லாம் எப்ப நடந்தது? என்று உள்ளே பார்க்க அனைவரும் சென்று விட்டிருந்தனர். வா..என்று அவனை தள்ளி அழைத்து வந்து புறாக்கூண்டருகே இருந்த திண்ணையில் அமர்ந்தாள்.

அக்கா..அண்ணாகிட்ட சொல்லிட்டாங்களாம்.

ஆனால் அவ ஊருக்கு போகும் போது ஏதோ சொன்னாலே என்று காவேரி சித்தி தான் காரணம்ன்னு சொன்னா. எல்லாரும் என்னை ஏமாத்தி இருக்காங்களா?

ஆது மாமாவுக்கு தெரியுமா?

அக்கா..மாம்ஸ் ஊர்ல இருந்தாரே..தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்.

சரிடா அதை எதுக்கு துருவனிடம் கூறக்கூடாது?

ஒரு வேலை..அண்ணாவால தான் ஊருக்கு போறது தெரிஞ்சா அண்ணா கஷ்டப்படுவாங்கன்னு சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருப்பாங்களோ?

அவன் இதுக்கெல்லாம் கஷ்டப்பட மாட்டானே? சிந்தனையுடம் அமர்ந்தாள் ஜானு. எல்லாரும் பிரச்சனை முடிந்தது என்றிருக்க காட்டினுள் இருந்த கட்டிடத்தில் அந்த போலீஸ்காரன் சங்கிலியால் துளசியை கட்டி தவறாக நடந்து கொள்ள முயன்ற போது பிரதீப்பும் துருவனும் தான் வந்திருப்பர். ஆனால் துருவன் தான் அவனை முதலில் தாக்கி இருப்பான். பின் தான் பிரதீப் அவனை எத்தி தள்ளிவிட..துளசியை திட்டிக் கொண்டே துருவன் சங்கிலியை அவிழ்த்துக் கொண்டிருப்பான்.

ஹே..பிடிச்சுட்டேன் டா சக்கர. துருவனுக்கு துளசியை பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அக்கா..அப்ப அவங்க சொன்னப்ப அண்ணா ஏத்துகிட்டு இருக்கணுமே? சக்கரை கேட்டான்.

இதெல்லாம் சரியா பேசு. அவ இருக்கும் போது சொல்லாம இப்ப சொல்றான் பாரு ஜானு சக்கரையை திட்டினாள்.

ஹாய்..ஜானு, ஊர்ல இருந்து வந்துட்டியா? நல்லா ஊர் சுத்துனியா? வெளியிருந்து ஜானு பள்ளியில் படிக்கும் ஒருவன் சத்தம் கொடுக்க, குளித்து வெளியே வந்த ஆதேஷ் அவனை பார்த்தான்.

டேய்..வா..இவனுக்கு ஏதாவது தெரியுதான்னு பார்ப்போம்? ஜானு குதித்து இறங்கி அவனை நோக்கி ஓடினாள். மற்றவர்களும் அவள் பின் சென்றனர். ஆதேஷ் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். பின் கீழிறங்கி வெளியே வந்தான்.

துருவன்- துளசி பத்தி ஏதாவது தெரியுமாடா? நேரடியாக கேட்டாள்.

துளசிக்கிட்ட நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்.

ஆதேஷ் அவள் பின் நிற்க..நீ மட்டும் உண்மைய சொல்லல..அப்புறம் சுஜாதா மேம்கிட்ட நீ பல்பு வாங்குற மாதிரி பண்ணிடுவேன். அப்புறம் பொண்ணுங்க எல்லாரும் உன்னை பார்த்து சிரிப்பாங்க..

நீ செஞ்சாலும் செஞ்சி..ரு…வ…என்று இழுத்தான்.

டேய்..ஒழுங்கா பேசுடா. சக்கரையும் ஆதேஷை பார்த்து, அக்கா..மாம்ஸ்.. என்றான்.

என்னடா மாம்ஸ்? அவனுக்கு கொஞ்சமும் மூளையேயில்லை. பார்க்கதான்டா உன்னோட மாம்ஸ் அமைதியா இருக்காங்க. கோபம் மட்டும் எங்கிருந்து வருதோ தெரியல? என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேசுவாரு. அவர பத்தி என்ன தேவையில்லாத பேச்சு?

அக்கா..மாம்ஸ்..ஜானு பேசிக் கொண்டிருப்பவனை ஆதேஷ் முறைத்துக் கொண்டிருந்தான்.

பாஸ்..நானில்லை. அவள் தான் பேசிக்கிட்டே இருக்கா என்று அவன் ஓட முயற்சிக்க, டேய்..நில்லுடா, அவனை பிடி சக்கரை என்றாள்.

அவர்கள் அவனை இழுத்து வர, ஆதேஷ் ஜானுவின் சடையை பிடித்து இழுத்தான்.

டேய்..தீனா, இனி உனக்கு மரியாதை இல்லை. எனக்கு தெரியாமல் குடும்பமே சேர்ந்து மறச்சிருக்கீங்க? தீனா என நினைத்து அவள் பேசிக் கொண்டே போக, துகிரா, புவனாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் தீனா.

அண்ணா..நீயா? என்று ஜானு பட்டென திரும்ப, ஆதேஷ் தலையில் முட்டி விட்டாள்.

அய்யோ..என்னை கொலை பண்றா? வாங்க..வாங்க.. கத்தினான் ஆதேஷ். துகிராவும், புவனாவும் பதறி அவனிடம் வந்தனர்.

மாப்பிள்ள பக்கம் போகாதீங்க தீனா இருவரையும் நிறுத்தினான்.

மாமாவா?

சக்கரை இதுக்கு தான் சொன்னியா? நீ இதுக்கு தான் ஓடுனியா? கேட்டுக் கொண்டே ஜானு ஆதேஷை பார்த்தாள். பிரதீப்பை பற்றி லலிதா கூறியது நினைவு வர, ஆதேஷை பார்ப்பதை விட்டு, அண்ணா..நில்லு என தீனாவை நிறுத்தினாள்.

டேய்..நீ சொல்லப்போறியா இல்லையா? அவன் துளசியும் துருவனும் தனியாக நடந்து வரும் போது துளசி துருவனை மாமா என அழைத்து நெருங்கி இருந்ததை கூறினான்.

என்ன நடக்குது? துளசி எதுக்கு ஊருக்கு போனா?

குளிச்சிட்டு வாரேன். பேசிக்கலாம்.

என்ன பேசப் போற? இரண்டு பேரையும் பார்க்க விடாம இருக்க தான ஊருக்கு அனுப்புனீங்க?

ஆமா. அதுக்கென்ன?

அதுக்கென்னவா?

துருவனை கூட நாங்க இங்க பார்த்துக்குறோம். ஆனால் துளசி ஒரு நாள் கூட தனியா இருந்ததில்லை. அவனையும் விட்டு, குடும்பத்தையும் விட்டு தனியா எப்படிடா வாழ்வா?

அவ இருப்பா. இருந்து தான் ஆகணும்?

அப்படியென்ன அவசியம் இருக்கு?

இருக்கு என்று வீட்டிலிருந்து பிரதீப் வந்தான். அண்ணா நீயுமா? ஏன் எல்லாரும் அவளை தனியா விட்டீங்க? அவ ரொம்ப கஷ்டப்படுவா என்று ஜானு அழுதாள்.

காரணமில்லாமல் ஏதும் செய்யலம்மா. அவள் தனியா இருந்தா தான் எல்லாரிடமும் எப்படி பழகணும்ன்னு கத்துப்பா? மீனாட்சி கூற,

இங்க வச்சி அவளால கத்துக்க முடியாதா?

கத்துக்க முடியாதும்மா. அவ பக்கத்துல இருந்து கஷ்டப்படுறத யாரும் விரும்பல.

சோ..அவள தனியா எங்கையோ விட்டுட்டு வந்துட்டீங்க?

ஜானுவிடம் வந்த துகிரா, அவளுக்கு துருவன் அம்மா நிலையை விளக்கினாள்.

என்ன சொன்னாலும் அவள தனியா விட்டது தப்பு தான் ஜானு கோபமாக கூறி விட்டு உள்ளே செல்ல…

தப்பு தான்ம்மா..என் மேல தான் தப்பு. அந்த ராட்சசிக்கு பயந்து என்னோட புள்ளைங்க எல்லாரையும் விட்டு விலகி இருந்தது தப்பு தான்ம்மா. அவங்களுக்கு செய்யுற எதையும் செய்யாம இருந்தது தப்பு தான்ம்மா. அவளுக்கு நல்லது கெட்டது சொல்லாம விட்டது தப்பு தான்ம்மா வெற்றி கண்ணீருடன் நின்றார்.

அப்பா..சும்மா இருங்க என்றான் பிரதீப்

என் தப்பை சரி செய்ய தான் உன்னோட அக்கா துளசி வெளிநாட்டுக்கு போயிருக்கா?

வெளிநாடா? ஆதேஷ் கேட்டான்.

கண்ணீருடன் வெற்றி, அவளோட அக்காக்களிடம் தான் அனுப்பி இருக்கோம். ஆனால் அவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டாள். ஒரு வீடு பிடிச்சு நாலு பொண்ணுங்க தங்கி படிக்கும் ஏற்பாடு தான். அவ்வப்போது  அவங்க பார்த்துப்பாங்க. மாதம் ஒரு முறை நாம் தான் அவளை பார்த்துட்டு வரணும்.

ஏதோ..வீடுன்னு சொன்னீங்க? ஜானு பிரதீப் தீனாவை பார்க்க,..அது ஏர்ப்போர்ட் என்றான் தீனா.

ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள் ஜானு. சக்கரை வெளியே காத்திருக்க.. தயாராகி புத்தகப்பையுடன் வந்தாள் ஜானு. நானும் வாரேன் ஜானு.. ஆதேஷ் கேட்க,

நீங்க இருங்க. நான் துருவனை பார்த்துட்டு போவேன்.

நானும் வாரேன்.

வேண்டாம்..என்று ஒரு மாமா கூட போடாமல் பேச, நில்லு ஜானு..எதுக்கு என்னை அவாய்டு பண்ற?

நீங்க உங்க அம்மாகிட்ட ஸ்டேட்டஸ் பற்றி பேசி முடிவெடுங்க. அப்புறம் உங்களுடன் பழகலாமான்னு பார்க்கிறேன்.

என்ன சொல்ற ஜானு? ஸ்டேட்டஸா? துகிரா கேட்க,

ஆமா அண்ணி, உங்க அப்பா அளவுக்கும் சரி, லலிதா ஆன்ட்டி அளவுக்கும் என்னோட அண்ணாவிடம் ஸ்டேட்டஸ் இல்லை.

ஆனால் தனியா சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவு வந்துருக்கான். ஆனா அது சில பேருக்கு புரியல. என்னோட அண்ணோட வலி, கஷ்டம் எல்லாத்தையும் பங்கு போடலைன்னாலும்.. பார்த்திருக்கேன். எனக்கு என்னோட அண்ணாவை தவிர யாரும் முக்கியமில்லை.

முக்கியமில்லையா? நானா பேசினேன் ஜானு? ஆதேஷ் சீறினான்.

நீங்க பேசல? ஆனால் நான் மனசுல அதிகமா ஆசைய வளர்த்துட்டு இந்த மாதிரி பேச்சை கேட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருக்க முடியாது. நம்ம விசயத்துல..நீங்க தான் முடிவெடுக்கணும். என்னை போல் அண்ணாவை உங்களுக்கு தெரியுமே? அவரை பத்தி ஆன்ட்டி பேசியது ரொம்ப கஷ்டமா போச்சு. நீங்க என்ன செய்யலாம்னு யோசித்து வையுங்கள் என்று கிளம்பினாள் ஜானு.

ஆதேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். துகிரா ஆதேஷையும், லலிதாவையும் பார்த்தாள். ஆதேஷ் அவன் அம்மாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான். துகிராவிற்கு விசயம் புரிபட லலிதாவை தனியே அழைத்து சென்று பேசினாள்.

ஜானுவை உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும்? அவள் இந்த அளவு பாதுகாப்பாக இருக்க காரணமே அவர் தான். அவருக்காக தான் நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். உங்களுக்கு பிடிக்கலைன்னு என்னால அவர விட முடியாது. உங்களுக்கு விருப்பமில்லைன்னா நீங்க இப்பவே இங்கிருந்து கிளம்பலாம். ஜில்லாவையும் கூட்டிட்டு வேற யார் வீட்டினாலும் இருந்துக்கலாம் என்று துகிரா பட்டென கூற, லலிதா கண்ணீருடன்..நான் ஏதோ யோசனையில் பேசி விட்டேன். அதுக்காக உன்னோட ஆன்ட்டியை இப்படி விட்ருவியா? அழுதார்.

பிரதீப் மேலிருந்து ஜானு பேசியதை கேட்டு அவள் கிளம்பிய பின் கீழே வந்தான். துகிரா லலிதாவை தனியே அழைத்து செல்வதை வெற்றி பார்த்து அவர்கள் பின் வந்தார். வெற்றியை பின் தொடர்ந்து பிரதீப் வர, அவனை பார்த்து ஆதேஷும் வந்திருந்தான்.

அனைவரும் இதை கேட்க ஆதேஷ் அவர்களிடம் வந்து, நான் அன்றே என் சீனியரை பற்றி பேசும் போதே உங்களிடம் இப்படி பேசாதீங்கன்னு சொன்னேன். இப்படி பேசி பேசி யாரை பத்தி பேசுறோம்னு யோசிக்காம பேசி வச்சிருக்கீங்க? லலிதாவை திட்டினான்.

இல்லடா..லலிதா தொடங்க. எம்மா..என் புள்ள தனியா சம்பாதித்தே அதிகம் அதுவும் இக்கிராமத்திலிருந்தே.

நாங்க இல்லாம அவனுக்கென பணம், சொத்து, பெயரையும் சம்பாதித்து இருக்கிறான். அவனுக்கென பரம்பரை சொத்துக்களும் வரும். அவன் ஒன்றும் சும்மா இல்லை என்று அவர் கோபமாக கூற,

அப்பா..என்று பிரதீப் அவர்கள் முன் வந்து நிற்க, துகிராவுக்கும் லலிதாவுக்கும் ஒருமாதிரி ஆனது.

துகிரா அவனிடம் சென்று, வாங்க போகலாம் என்று அவன் கையை பிடித்து இழுக்க, பிரதீப் புன்னகையுடன்..இதெல்லாம் பிரச்சனையா? அவங்க முன்னாடி நான் என்றும் போட்டியாக நிற்கவில்லை. சொல்லப்போனால் நாங்க பார்ட்னர்சுன்னு கூட சொல்லலாம்.

நாங்க தயாரிக்க பிராடெக்ட்டை அவங்க கம்பெனி மூலமா சேல் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதுக்கு எங்களும் பெனிபிட்..அவங்களுக்கு பெனிபிட்..அப்படி தான அத்தை என்று லலிதாவை பார்த்து கேட்டான்.

ஆமாம் என்று தலையை ஆட்டினார் லலிதா.

உனக்கு என்ன? அவங்க தான் உன்னை பற்றி பேசலைல்ல? துகிராவிடம் கேட்டான்.

அது எப்படி? உங்களை பற்றி யார் பேசினாலும் நான் இப்படி தான் பேசியிருப்பேன் என்று லலிதாவை முறைத்தாள்.

சரி. என்னையும் நம்ம குடும்பத்தையும் விட்டா உனக்கு யார் இருக்கா?

அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே?

ஆதேஷ் அவளை முறைத்தான்.

நான் எப்பொழுதும் இருப்பேன் என்று தோன்றுகிறதா?

நிச்சயமாக. யாரும் இல்லைன்னாலும் எனக்காக நீங்க இருப்பீங்க.

ம்ம்..நல்லா பேசுற? நமக்குள் பிரச்சனை வந்து சண்டையிட்டு நான் உன்னை அடித்தால் நீ யாரிடம் போய் சொல்வ?

நீங்க என்னை அடிக்கமாட்டீங்க?

ஒரு வேலை எதிலாவது நடந்தால்..என்று பிரதீப் கேட்க, துகிரா ஆதேஷை பார்த்தாள். அவன் கோபத்தில் திரும்பிக் கொண்டான்.

என்னப்பா..அடிப்பேன்னு பேசுற? என்று லலிதா கேட்க, என் கையில் ஏதுமில்லையே? அவள் நடந்து கொள்வதில் தான் உள்ளது என்றான்.

தப்பு செஞ்சா சொன்னா புரிஞ்சுப்பா. அடுத்த முறை செய்ய மாட்டா? நீ என்னன்னா அடிப்பேன்னு சொல்ற? வா. போகலாம் துகி என்று லலிதா துகிரா கையை பிடித்தாள். அவள் பிரதீப்பை பார்த்தாள்.

அப்படியே அவள இழுத்துட்டு போயிடாதீங்க அத்தை. இப்ப என்ன சொல்றீங்க என் செல்லக்குட்டிம்மா? பிரதீப் துகிராவிடம் கேட்க, துகிரா கையை லலிதா விடுவித்தார்.

மாமா..உங்க கொஞ்சல்ச எங்க முன்னாடி போடாதீங்க மாமா என்றான் ஆதேஷ்.

சும்மா தான் சொன்னீங்களா? துகிரா அவனிடம் வர, நில்லு..நான் கேட்டதற்கு பதில் சொல்லு

எனக்கு அவங்க அம்மா மாதிரி தான். ஆனால் அவங்க ஸ்டேட்டஸ் பாக்குறாங்க? உங்கள் பத்தி பேசுறாங்க?

என்னை தான பேசுனாங்க? ஊர்க்காரன் யாரை பற்றியும் பேசலையே? என்று லலிதாவை பார்த்து, துகிய அவ வீட்டிலிருந்து கூட்டி வரும் போது அவளுக்கு அவங்க பத்திய நினைவு வரக்கூடாதுன்னு தான் அவள் உடுத்திருந்த ஆடையை மாற்றி அழைத்து வந்தேன். அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும் அளவிற்கு என்னிடம் பணம் இருக்கு. ஆனால் நீங்க யாரிடம் பேசினாலும் மாப்பிள்ள சொன்னது போல் கவனித்து பேசுங்க. நீங்க பெரிய இடத்துல இருக்கீங்க? உங்க பேச்சை அனைவரும் கவனிப்பாங்க. என்னை நீங்கள் ஏதாவது பேசினால் அது என்னை மட்டும் பாதிக்காது. நம் அனைவரையும், உங்க கம்பெனியை கூட பாதிக்கும். நம்ம ஊர் பசங்களுக்கு தெரிஞ்சா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்கிறேன் என்று புன்னகையுடன் கிளம்பினான். அவன் பேசியது வெற்றிக்கு பெருமையாக இருந்தது. துகிரா லலிதாவை பார்த்து விட்டு அவன் பின் செல்ல, அவன் அவனறைக்குள் நுழைந்தான்.

நோ..கதவை பூட்டாதீர்கள். நான் வாரேன் என்று கதவில் அவள் கையை வைக்க அவளை பிடித்து உள்ளே இழுத்தான்.

எதுக்கு இப்படி இழுக்கிறீங்க? கை வலிக்குது?

வலிக்குதா? என்னை சொன்னால் உனக்கு அவ்வளவு கோபம் வருது?

அப்புறம் வராதா? நீங்க என் செல்ல காட்டான் என்றாள்.

காட்டானா? காட்டான் என்ன செய்வான் தெரியுமா?

காட்டான் என்ன செய்வான்னு தெரியாது? ஆனால் இந்த செல்லக்குட்டிம்மா..என்ன செய்வாள் தெரியுமா? என்று பிரதீப்பை அணைத்துக் கொண்டு தேங்க்ஸ் என்றாள்.

அப்புறம்..

நீங்க கேட்டுட்டீங்க? கஷ்டப்படுவீங்கன்னு டென்சன் ஆகிட்டேன். நல்லவிதமா முடிச்சுட்டீங்க. என்ன இருந்தாலும் கஷ்டமா இருக்கும்ல என்று ஆன்ட்டி பேசியதுக்கு நீங்க எனக்கு என்ன தண்டனை வேண்டுமாலும் தரலாம்.

சுயரா?

சுயர். ஆனால் வெளிய தெரியும் அளவு தண்டனை இருக்கக்கூடாது.

ம்ம்..கண்டிப்பா வெளிய தெரியாது என்று அவளை பிரித்தெடுத்து அவளையே பார்க்க..அவள் பயத்துடன் பார்த்தாள். உனக்கான தண்டனை ஆயிரம் முத்தங்கள்.

முத்தமா? என்று விலகினாள்.

அவளை இழுத்து..ம்ம்..சீக்கிரம் கொடுத்துட்டு போ. வேலை இருக்கு என்றான். அவளும் நெருங்கி அவனது முகத்தில் முத்தமிட்டி ஓடி விட்டாள்.

ஹே..நில்லு..நயன்டி டூ தான் கொடுத்திருக்க..மீதிய குடுத்துட்டு போ என்று அவள் பின் வர, வெளியே மீனாட்சி கையை கட்டிக் கொண்டு நின்றார்.

அம்மா..அதும்மா..அவ..

தெரியுது..போய் வேலையப் பாருடா என்றார். அவன் அசட்டு சிரிப்புடன் வெளியேறினான். ஜானு துருவனை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள்.

வேலு பிள்ளைகளுடன் அமர்ந்திருந்தான். அவன் அர்ஜூனை பற்றி கூற, அவன் இருக்கும் அறையை திறந்து பார்த்தாள். அர்ஜூன், ஸ்ரீ இருவரும் ஒரே படுக்கையில் இருப்பதை பார்த்து,

அண்ணா உள்ள..ஜானு கேட்க, ஆமாம்மா இருக்குமே உடம்பு சரியில்லை. அதான் தூங்குறாங்க என்றான். பின் மறையை பார்த்து விட்டு காயத்ரியை பார்க்க கேட்டாள்.

அந்த பொண்ணு ஓய்வெடுக்கணுமாம். அதான் யாரையும் உள்ளே விட மாட்டிங்கிறாங்க என்றான் வேலு.

நாங்க துருவன் அண்ணாவை பார்த்துட்டு வந்துடுறோம் சக்கர கூற..டேய் பார்த்து பேசுங்க என்ற வேலுவும் துருவனுக்கு துளசி பற்றி தெரியும்ன்னு சொல்லலை.

சக்கர நண்பர்களும், ஜானுவும் உள்ளே நுழைய அவன் வெற்றிடமான அவனது அறையை வெறித்துக் கொண்டிருந்தான்.

துருவா என்று ஜானு கண்கலங்க அழைத்து அவனிடம் வந்தாள்.

நில்லுங்க..என்று அனைவரையும் பார்த்தான். எதுக்கு வந்த ஜானு?

என்னடா இப்படி கேட்கிறாய்?

நாம ப்ரெண்ட்ஸ்.

அப்படியா? எனக்கு புரியலையே?

துரு..

ஏன் ஜானு? உன்னிடம் கூடவா துளசி சொல்லாமல் சென்றாள்?

சொன்னா..துரு. ஆனால் காரணத்தை யாரும் சரியா சொல்லலை. அவள் நிற்க கூட இல்லை. சொன்னால் அழுது கொண்டு தான் சென்றாள். முதல் முறையாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதால் தான் அழுகிறாள் என்று நினைத்தேன். அது சரி..நீ எதுக்கு கோபப்படுற? உனக்கு தான் அவளை பிடிக்காதே?

நான் சொன்னேனா? அவளை பிடிக்காதுன்னு சொன்னேனா? துருவன் கேட்க, சரி பிடிக்கதான செய்யும். அதனால் எதுக்கு இப்படி கவலையா பேசுற்?

ஏன்னா ஜானு..எனக்கு அவளை பிடிக்கும்.

என்னடா மறுபடியும் அதையே சொல்ற?

ஜானு அவள் என்னிடம் காதலை சொன்னா. நான் தான் ஏத்துக்கல. நேற்று வந்து பேசும் போது கூட நல்லா தான் பேசுனா? ஆனால் அவள் என்னை நடிச்சு ஏமாத்தி இருக்கா?

என்ன ஏமாத்தினா? ரொம்ப பேசுறடா?

அவளோட காதலை ஏத்துக்கலைன்னா..அவ எப்படி எல்லாத்தையும் சொல்லுவா?

நேற்று நான் அவள் காதலை ஏற்றுக் கொண்டது போல் தான் பேசினேன்.

சரி..காதலை சொன்னீயா?

இல்ல. ஆனால் அவள் காதலை ஏத்துக்கிட்டேன்.

லூசாடா நீ? உன்னோட காதலை நீ சொல்லாம அவள் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? அதான் கிளம்பிட்டா.

எல்லாரும் சேர்ந்து தான் அவளை அனுப்பிட்டாங்க.

தெரியும். அதான் எல்லார் மீதும் கோபத்தோட இருக்கேன்.

எதுக்காகன்னு தெரியுமா? துருவன் கேட்டான்.

ஆமா. அதை கேட்க மறந்துட்டேனே?

துருவன் காரணத்தை கூற, டேய்..இதெல்லாம் ஒரு காரணமா? பிராக்டிஸ் பண்ணா எல்லா வேலையும் கத்துக்கலாம். உன்னிடமிருந்து அம்மாவை எப்படி பிரிப்பாள்? அவள் பெற்ற அம்மாவை இப்பொழுது தான் இழந்திருக்கிறாள். அப்படியிருக்க..அவளால் முடியாதுடா. ஆனால் என்ன உன்னை காதலிக்கிறால்ன்னா உன்னுடன் சுற்ற நினைப்பாள்.

இந்த காரணத்தையும் அவகிட்ட சொல்லிட்டானுகளா?

இது தெரிஞ்சு தான் அவள் இந்த முடிவுக்கே வந்துருக்கா என்று துருவன் சக்கரையை பார்த்தான்.

அண்ணா..எனக்கு தெரியும். ஆனால் உனக்கு அந்த அக்காவை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியாது. சாரி அண்ணா என்று துருவனை அணைக்க வந்தான்.

நில்லு சக்கர, எல்லாரும் கிளம்புங்க. புவிக்கு கூட எனக்கு கெல்ப் பண்ண தோணல. எல்லாரும் அம்மாவ பத்தி யோசிச்சாங்க. என்னை பத்தி யாரும் நினைக்ககூட இல்லை என்று அழுதான்.

துரு..இதுக்கெல்லாம அழுவ? உன்னால துளசிய பார்க்க, பேச தான முடியாது. அவள் என்ன செய்றான்னு நான் சொல்றேன்டா. உன்னோட ப்ரெண்டு நான் இருக்கேன்டா ஜானு அவன் கையை பிடிக்க,

அவ காதலை சொன்ன போது கூட எனக்கு அவளை பிடிக்க தான் செய்தது. ஆனால் அம்மாவுக்காக தான் நான் ஏத்துக்கல. அவங்கள பத்தி யோசித்து யோசித்து ரொம்ப டயர்டாகிட்டேன் ஜானு என்று அழுதான். அண்ணாவுக்கு அவன் கனவு தான் முக்கியமா போச்சு. வருவான், சாப்பிடுவான், அம்மாவை பார்ப்பான். போய்க் கொண்டே இருப்பான். சரி மியூசிக் காலேஷ்லவாது சேர்ந்திருக்கலாம். ப்ரெண்ட்ஸ விட்டு பிரிய மாட்டேன்னு சொல்லி வெட்டி வேலை பார்த்துக்கிட்டு இருக்கான்.

சரி விடு. அவள் அங்கேயே இருக்கட்டும். யாருக்கும் தெரியாமல் நான் உனக்கு உதவுகிறேன். அவளை பற்றிய அனைத்தும் சொல்கிறேன். ஆனால் அவள் போனதே அம்மாவுக்காக தான். மறுபடியும் இப்ப பேசியது போல் டயர்டாகிட்டேன்னு சொல்லக் கூடாது. அம்மாவை நல்லா பார்த்துக்கணும். இதுக்கு நீ ஒத்துக்கிட்டா நான் உதவுகிறேன். உன்னை விட அவள் தான் அதிகமா கஷ்டப்பட்டிருப்பாள் என்ற ஜானு கண்ணீருடன் துருவனை பார்த்தாள்.

அவள் நேற்று பேசியதில் கூட அவளை கட்டுப்படுத்தி தான் சிரித்து பேசி இருக்காள் ஜானு. என்னால் அதை கூட புரிஞ்சுக்க முடியல என்று துருவனும் அழுதான்.

ரெண்டு பேரும் அழுறத நிறுத்துங்க. அக்காவை நாம நினைச்சாலும் பார்க்க முடியாது. பேசுறதை மட்டும் தான் கேட்க முடியும். அதுக்காக அழுதுகிட்டு இருந்தா? அழுதுக்கிட்டே இருக்க வேண்டியது தான் சக்கரை சத்தமிட,

டேய் சக்கர, அண்ணா அடிக்க போறாங்க. வாய மூடு ஒரு சிறுமி கூற,  போடி கொடிக்கா தொக்கு..எனக்கு தெரியும்.

ஏன் அவள பார்க்க முடியாது? ஜானுவை பார்த்தான் துருவன்.

அவ ஃபார்ல ரீச் ஆகி இருப்பா என்றாள் சோகமாக ஜானு.

ஃபாரினுக்கா?

ஆமா துருவா. எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். அவன் கவலையோடு படுத்துக் கொண்டான். நாங்க ஈவ்னிங் வாரோம் துருவா. பள்ளிக்கு நேரமாகிறது. நீ எதையும் நினைச்சு கவலைப்படாதே? ஜானு இருக்க கவலை எதுக்கு?

ஜானு நானும் சீக்கிரம் பள்ளிக்கு வாரேன் என்றான். ஓ.கே துருவா. புவி ஓய்வெடுத்து தான் வரணுமாம்.

பள்ளிக்கு வரும் போது எப்பொழுது போல் ஈவ்னிங் புவனாவை பார்க்க வருவேன். அவள் மீது கோபம் தான். ஆனால் அவள் என்ன தான் செய்வாள்?

சரிடா. துளசிய பத்தியே யோசிக்காம..நான் சொன்னதை செய் என்றாள் ஜானு. துருவன் தலையசைக்க..நீயாவது சீக்கிரம் பள்ளிக்கு வாடா?

ஆதேஷ் அண்ணா வரலையா? ஜானுவிடம் கேட்டான்.

வரல. நான் வாரேன் என்று அவள் கிளம்ப, அண்ணாவுடன் சண்டையா?

துருவா..அமைதியா போரேன். என்னை கோபப்படுத்தாத? எல்லாரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கன்னு ஆன்ட்டிய பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். ஒழுங்கா ரெஸ்ட் எடு என்று வெளியே வந்த ஜானுவும், சக்கர கூட்டமும் வெளியே நின்ற ரதியையும், அகிலையும் பார்த்து திகைத்தனர்.

அப்படியே கிளம்புங்க. நீங்க பேசியதை கேட்டது போல் நடந்துக்க கூடாது ரதி கூற, ஓ.கே ஆன்ட்டி என்று ஜானு அகிலை பார்த்தாள். அவன் வருத்தமுடன் நின்றிருந்தான். நான் சொன்னது உனக்கும் சேர்த்து தான் என்று அகிலிடம் திரும்பினார். அவன் கண்ணீரோட அவன் அம்மாவை அணைத்து, சாரிம்மா..என்னால் தான் என்றான்.

என் மீதும் தவறுள்ளது. என் பசங்கள கவனிக்காம அவங்க என்னை கவனிக்கும் படி ஆயிற்று. அவன் இப்படி கஷ்டப்படுவான்னு தெரியாதே? என்று வருத்தமாக அமர்ந்தார்.

ஆன்ட்டி ஜானு அழைக்க, நீ கிளம்பு என்று சக்கரையை பார்த்து அவனிடம் நாம சந்தித்ததை காட்டிக்காதீங்க?

நீங்க பேசியதை நாங்க கேட்டோம்ன்னு அவனுக்கு தெரிஞ்சது. தொலைச்சிப்புடுவேன் பார்த்துக்கோங்க என்று மிரட்டினார். சரி..என்று அவர்கள் ஜானுவுடன் சென்றனர்.