அத்தியாயம் 86

மறை பிரதீப்பிடம்..எல்லாரும் இங்க வந்துருக்கீங்க? அங்க யாரு இருக்கா? கேட்டான்.

அங்க அவங்க வீட்டு பசங்க இருக்காங்க.

அண்ணா..அவங்களுக்கு பசங்களே இல்லையே?

ஆமாம். பசங்க இல்ல. ஆனால் நித்தியை கட்டிக்கப் போறவன் இருக்கலாமே? பிரதீப் கூற..சரிங்கண்ணா..என்று ராக்கியை பார்க்க அவன் அங்கே இல்லை.

எங்க போனான்? சுற்றிலும் மறை தேட, என்னடா கொஞ்ச நேரத்துல அந்த பையனோட நெருக்கமாயிட்ட. பார்த்துடா பிரதீப் கூற, அண்ணா..என்று பிரதீப்பை பார்த்தான்.

சொல்லுடா?

இல்லைண்ணா. நான் அவனை பார்த்துட்டு வாரேன் என்று காயத்ரி அறையை திறந்து பார்த்தான். அங்கே வினிதா அம்மா அமர்ந்திருந்தார்.

ராக்கி எங்க? அவன் கேட்க, உங்களிடம் தான வந்தான் என்று எழுந்தார்.

என்னிடமா? அவன் வெளியேயில்லை.

உங்களிடம் தான் வந்தான். அதான் உள்ளே வந்தேன் அவர் கூற, வேகமாக வெளியே சென்றான் காலை பிடித்துக் கொண்டு. பிரதீப்பும் அவனுடன் செல்ல ஒருவர் பையனுடன் நின்றார்.

குட்டிப்பையனை பார்த்து, ஸ்டார்..என்று கத்தினான் மறை. அதை கவனித்த அவன்..ராக்கியை தூக்கிக் கொண்டு ஓட..இவர்களும் விரட்டினார்கள்.

மறையால் ஓட முடியவில்லை. வெகுநேரமாக காலுக்கு அதிக வேலை கொடுத்ததில் அவனால் ஓட முடியல இருந்தும் ஓட முயன்றான். பிரதீப் அவனை பிடிக்க..பையனை விட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.

ராக்கியிடம் வந்த மறை அவனை துக்கி முத்தமிட்டான். பிரதீப் அவனை தவற விட்டு இருவரையும் பார்த்தான். கண்ணீருடன் மறையை பார்த்து திகைத்த பிரதீப் அவனருகே வந்தான்.

ப்ரெண்டு..எதுக்கு அழுறீங்க? என்று ராக்கி மறையின் கண்ணை துடைத்து..ப்ரெண்டு அந்த அங்கிள் சொன்னாங்கல்ல..உனக்கு யாமில்லையா? ஏன் இல்லை? கேட்டான்.

தெரியல..என்று ராக்கியை அணைத்து..உனக்கு ஒன்றுமில்லையே? எனக் கேட்டான்.

ப்ரெண்டு..இரத்தம் என்று அழுதான் ராக்கி. மறையின் காலில் இரத்தம் வந்தது.

டேய்..வாடா..என்று பிரதீப் ராக்கியை தூக்கிக் கொண்டு, மறையின் கையை எடுத்து அவன் தோளில் போட்டான்.

அண்ணா..இருக்கட்டும் என்று மறை எடுத்து விட, அமைதியா வர்றியா? இல்லையா? சத்தமிட,..என்னோட ப்ரெண்ட எதுக்கு திட்டுறீங்க அங்கிள்? என்று அவன் மேலும் அழுதான்

நீ அழுதா உன்னோட ப்ரெண்டுக்கு..இரத்தம் வருது நிற்காது. அழுவியா? கேட்டான் பிரதீப்.

அழுகை குறைய..ராக்கி மறையை பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கு வலிப்பது நேரடியாகவே தெரிஞ்சது.

அவனது அறையில் மறையை படுக்கையில் விட்டு பிரதீப் டாக்டரை அழைக்க சென்றான். டாக்டருடன் வந்த பிரதீப் ராக்கியை பார்த்து புன்னகைத்தான்.

ராக்கி மறையின் காலில் ஊதிக் கொண்டிருந்தான். மறை அவனையே பார்க்க பிரதீப்பும் டாக்டரும் ராக்கியை பார்த்து..

என்ன பண்றீங்க குட்டிப்பையா?

ராக்கி எழுந்து நின்றான். டாக்டர் மறைக்கு சுத்தம் செய்து கட்டிட பார்த்துக் கொண்டிருந்தான் ராக்கி.

உன்னோட ப்ரெண்டுக்கு ஊதுனா வலி போயிருமா? பிரதீப் கேட்க..அம்மா அப்படி தான் செய்வாங்க. ரொம்ப வலிக்காது.

டாக்டர் சென்ற பின், ஹாப்பியா இருக்கியா? பிரதீப் மறையிடம் கேட்டான்.

அவன் கண்ணீருடன் இப்படி பார்த்துக்க தான் யாருமில்லையே?

சரி. நீ கொஞ்சம் அவனிடமிருந்து விலகி இருந்தாள் நல்லது. அவனோட அம்மா எழுந்துட்டாங்க. உன்னிடம் விட மாட்டாங்க. அந்த பொண்ணு முதல்ல நம்ம ஊர்ல தான் இருக்குமான்னு தெரியல. இருந்தாலும்..அந்த பொண்ணை இப்ப விதவையா தான் பார்ப்பாங்க. மனசுல ஏதும் இருந்தா அழிச்சிரு. உனக்கு வேற பொண்ணு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு..என்று பேசுவதை மறைந்திருந்து வினிதா அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த பையன் தான் பக்கத்துல இருக்கணும்ன்னா..நம்ம ஊர் சம்பிரதாயம் தெரியும்ல. அந்த பொண்ணு தான் பாவம் என்றான் பிரதீப்.

அண்ணா. அதெல்லாம் ஒன்றுமில்லை.

எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குல்ல.

இல்லண்ணா. ராக்கி இடைபுகுந்து அங்கிள்..ப்ரெண்டு என்னோட இருப்பாங்களா?

என்ன? என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

இல்லப்பா..நான் உன்னை சொல்லலை. இன்னொரு பையனை சொன்னேன்.

யாரு? நானு..என்று அவன் அழுதான். எழுந்து அமர்ந்த மறை அவனை தூக்கி தாங்கண்ணா? கேட்டான்.

பிரதீப் படுக்கையில் அவனை அமர வைத்தான். அவனும் படுத்து அவன் மார்பில் ராக்கியை கிடத்தி, நீ அம்மாவுடன் இருப்பது தான் பாதுகாப்பு. அம்மா சரியானவுடன் நல்ல பையனாக அம்மா பேச்சை கேட்கணும். யாரும் தூக்கினால் போகக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. அவன் சொல்ல சொல்ல ஊ… போட்டுக் கொண்டிருந்தான். பின் சத்தம் அடங்கி மறையின் மார்பிலே தூங்கி விட்டான்.

பிரதீப் தூக்க வந்தான். அண்ணா..ரெண்டு நாள் மட்டும் தான். இருக்கட்டுமே? கெஞ்சுவது போல் கேட்க..போனில் இருவரையும் புகைப்படமாக்கினான் பிரதீப்.

தீனா துருவனை அவனறையில் விட்டு பிரதீப் துளசியிடம் கூறியதை கூறினான். படிப்பில் கவனம் செலுத்த சொல்லி சொல்ல..துருவன் தீனாவிடம்..இந்த மாதிரி சார் பேசமாட்டீங்களே?

தீனா அசட்டு சிரிப்பை உதிர்க்க..பிரதீப் அண்ணாவிடம் காபி பண்ணீட்டீங்களோ?

நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும் தம்பி. ஆராயக்கூடாது.

ஆமா..இவரா பேசியது போல எப்படி சீன் போடுறாரு பாருங்கண்ணா..என்று அர்ஜூனிடம் கூற, அகில் தீனாவை முறைத்து பார்த்தான். மற்றவர்கள் சிரித்தனர்.

சாரா? அப்படி தான் கூப்பிட போறியா? தீனா துருவனிடம் கேட்டான்.

சார் என்பதே ரொம்ப மரியாதைக்குரிய சொல். நான் பிரதீப் அண்ணாவை வேண்டுமானால் மாமான்னு கூப்பிட முயற்சிக்கிறேன் துருவன் சொல்ல..

உன்னோட அம்மா..? அர்ஜூன் கேட்டான். நான் பார்த்துகிறேன் என்றான் அகில்.

அகிலை பார்த்த துருவன். அதெல்லாம் வேண்டாம். நானே பேசிக்கிறேன். எனக்கு அம்மாவை சமாளிக்க தெரியும். அதை விட ஸ்ரீய பார்த்தாலே எல்லாமே சரியாகிடும். அவங்களும் வந்துருக்காங்கல்ல என்று அகிலை பார்த்தான்.

நம்ம வீட்ல தான் இருக்கா என்று அகில் அர்ஜூனை பார்த்தான். அர்ஜூனுக்கு அந்த கொலைகாரன் சொன்ன கதை நினைவுக்கு வந்தது. அதை ஆன்ட்டியிடம் சொன்னா யார பத்தி சொல்றான்னு தெரிந்து விடும். நமக்கு ஏதாவது க்ளூ கூட கிடைக்க வாய்ப்பிருக்கு என்று நினைத்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

அர்ஜூன் அண்ணா..ஆதேஷ் அழைக்க, என்னாச்சு அர்ஜூன்? தீனா கேட்டான்.

அகிலை பார்த்த அர்ஜூன், ஒன்றுமில்லை அண்ணா. நீங்க கிளம்புங்க. இன்று பிடிச்சவருக்கு ஏதும் ஆகி விடாமல்..பேசிக் கொண்டிருக்க,..பிரதீப் அங்கு வந்து..தீனா குட்டிப்பையனை ஒருவன் தூக்கி செல்ல பார்த்தான் என்று நடந்ததை கூறினான்.

அகில் துருவனுடன் இருக்க, மற்றவர்கள் மறையிடம் வந்தனர். அவனும் ராக்கியை மார்பில் சுமந்தவாறே துயிலாயிருந்தான்.

என்னடா நடக்குது? தீனா கேட்க, பிரதீப் அவனையும் மற்றவர்களையும் தனியே அழைத்து வந்தான். அவன் முகம் சரியா தெரியல. ஆனால் பார்க்க நடுத்தர வயதுடையவனாக தெரிந்தது என்று உயரத்தை கூறினான். இங்க சிசிடிவி இருக்கும்ல..என்று அர்ஜூன் கேட்க, அனைவரும் அங்கே சென்றனர். நித்தி அப்பா ஹாஸ்பிட்டல் என்பதால் தீனாவை பார்த்தவுடன் பார்க்க உடனே அனுமதித்தனர்.

அர்ஜூன் பார்த்தவுடன் கண்டு கொண்டான். காயத்ரியின் குடும்ப ஆள் என்று..நீங்க பார்த்தது ஆணல்ல அண்ணா.. பிரதீப்பிடம் அர்ஜூன் கூறினான்.

பொண்ணா? என்று அவன் கேட்க, ஆமாண்ணா..ஆனா அவங்க இப்ப இந்த வீட்ல இல்லை. மூத்தவரோட பொண்ணு போனை எடுத்து தேடி புகைப்படத்தை காட்டினான்.

எதுக்கு பையனை கடத்த வரணும்?

என்ன தான் குடும்பம் வேண்டாம் என்றாலும் அக்கா அங்க தான வாழ்ந்தங்க. எல்லாரையும் பொறுத்தவரை..அவங்க அந்த வீட்டு மருமக தான? சொத்துக்காக தான் இருக்கும். பையனை வச்சு வாங்க..என்றான் அர்ஜூன்.

ஆனால் இந்த பொண்ணு, பையன் மட்டும் போதும் என்று தானே கூறினாள் பிரதீப் கேட்டான்.

ஆமாம் அண்ணா. அக்கா எழுந்த பின் தான் என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியும்.

நம்ம ஊர் வரை வந்துருக்காங்க. எனக்கு சரியா படல. எதுக்கும் அனுவையும் கவனமா பார்த்துக்கோங்க என்றான் தீனா.

அண்ணா..இவங்க கொஞ்ச நாள் இங்க தான் இருக்கணும். அக்கா ஒத்துப்பாங்களான்னு தெரியல. வினிதா அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க. இவங்கள பத்தி மட்டும் ஏன் சொல்லலை? எனக்கு இதில் இன்னும் ஏதோ இருப்பது போல் உள்ளது அர்ஜூன் கூறினான்.

சரியா சொன்ன அர்ஜூன். கண்டிப்பா ஏதோ காரணம் இருக்கு.

அனு பக்கம் கூட இந்த புகைப்படத்துல இருக்கிறவங்க வந்ததில்லை. ஆனால் இந்த பையனை மட்டும்..என்று அர்ஜூன் யோசித்தான்.

வெரி சிம்பிள். அனுவுக்கு கார்டியனா நீங்க இருவர் இருக்கீங்க. அவள் பக்கம் எப்பொழுதும் யாராவது இருந்துகிட்டே இருக்கோம். ஆனால் காயத்ரி பக்கம் யாருமில்லை.

யாருமில்லைன்னு சொல்ற? நாம எல்லாரும் இருக்கோமே?

இருக்கோம். ஆனால் அவங்களுக்கென யாருமில்லை. அனுவை அர்ஜூன் மகளாக பார்ப்பதாக எல்லார் முன்னும் சொல்லிட்டான். ஆனால் இவங்களுக்கு ஆண் துணையில்லை. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. எல்லா நேரமும் அந்த பையனுடன் நம்மால் இருக்க முடியுமா? அக்காவுடனும் இருக்க முடியாதே. பிரச்சனை முடிந்தால் அவங்க தனியா தான் இருப்பாங்க.

ஆமாடா..இதனால தான் வினிதா அக்காவையும், அனுவையும் ஈசியா கடத்திட்டாங்க. அதனால் தான் அவங்களை இழந்தோம் அர்ஜூன் கண்கலங்க சொன்னான்.

எல்லா நேரமும் அவங்களுடன் இருக்க முடியாது. பிரச்சனை முடிஞ்சு பார்க்கலாம் பிரதீப் கூற, அர்ஜூன் உன்னோட பாட்டி வீட்ல அக்கா இருக்கலாமே?

நான் இருக்கும் வரை பார்த்துக்கலாம். இவங்களால் பிரச்சனை என்றால் பாட்டியால் சமாளிக்க முடியாதே?

டேய்,..முதல்ல இப்ப நடக்கும் விசயத்தை பாருங்க. அர்ஜூன் நீ உன்னோட பாட்டி வீட்டுக்கே கூட்டுட்டு போ..தீனா கூற, சரின்னா. இப்ப இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல என்று யோசித்த அர்ஜூன்..அனு..இப்ப..என்று போனை எடுத்து ஸ்ரீக்கு கால் பண்ணான்.

அர்ஜூன் அனுவை தூங்க போட்டு..அப்பொழுதே நித்தி வீட்டுக்கு வந்துட்டேன் ஸ்ரீ கூறினாள்.

வீட்ல யார் இருக்கா?

வீட்ல..பவி அப்பா தான் இருக்கார். மத்தவங்க..அர்ஜூன் கேட்க..எல்லாரும் இங்க தான் இருக்கோம்.

ஓ..செட்..அர்ஜூன் கத்தினான்.

அர்ஜூன் பிரச்சனையா?

ஆமா ஸ்ரீ. அபி பக்கத்துல இருக்கானா? கேட்டான் அர்ஜூன்.

கவின் சீனியர் இருக்காங்க என்று போனை கவினிடம் ஸ்ரீ கொடுக்க அவன் வேகமாக கிளம்பினான். அனுவிற்கு ஆபத்து என்று அர்ஜூன் பைக்கை எடுத்து புயலென பறந்தான். ஸ்ரீ வெளியே வந்து பயந்து சாலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அபி இன்பாவுடன் இருப்பதை கவின் கூறி இருப்பான். ஸ்ரீ அபியை பார்க்க ஓடினாள்.

பிரதீப், ஆதேஷ் ஹாஸ்பிட்டலில் இருக்க, தீனாவும் அர்ஜூன் பின் விரைந்தான்.

பவி அப்பா, ஜூலி, அனு இருந்தனர். அனு தூங்கிக் கொண்டிருக்க, பவி அப்பா அவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஜூலி கத்த..ஜூலி கத்தாத. பாப்பா தூங்குறா பாரு என்று அனுவை பார்த்தார்.

அனைவரும் அகில் வீட்டுக்கு வந்த போது..முன்னே அகில், ஸ்ரீ குடும்ப புகைப்படங்கள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அகிலும் ஸ்ரீயும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து..அனு அகிலை முறைத்து பார்த்தாள்.

அவன் அறைகள் அனைத்தையும் காட்டி விட்டு ஸ்ரீ..இது நாம் சிறுவயதில் இருந்த அறை என்றான். அவள் உள்ளே செல்ல..அது முழுவதும் ஸ்ரீயும் அகிலும் இருக்க..அனு, பவி முகம் சுருங்கியது.

அகில் இருவரையும் பார்த்தான். பின் ஸ்ரீ..நீ பாரு என்று அனுவை அவளிடமிருந்து வாங்க.,.போ..நான் வரமாட்டேன். நீ மட்டும் என்னோட ஏஞ்சல் கூட போட்டோஸ் எடுத்திருக்க? அனு கேட்டாள்.

நானும் உன்னோட ஏஞ்சலும் இந்த வீட்ல தான் இருந்தோம். நீ பார்க்கலையா? உன்னோட ஏஞ்சல் போட்டோஸ் தனியா ஒட்டி வச்சிருக்கா..ஒரு நிமிஷம் என்று அறையினருகே பூனை நடை போட்டு அகில் மறைந்திருந்து அறையினுள் ஸ்ரீ என்ன செய்கிறாள்? என்று பார்த்தான். பவி கோபத்தை மறந்து.. அவனுடன் சேர்ந்து பார்க்க.. அனைத்தையும் தொட்டு பார்த்து விட்டு ஜன்னலோரம் வந்து மூடிய ஜன்னல் கதவை திறந்து நேராக பார்த்தாள். அர்ஜூனின் அறை. கீழே அர்ஜூனும் நிவியும் குதிரையுடன் இருந்தனர். பின் இருவரும் உள்ளே செல்ல..ஸ்ரீ அவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் அறையில் விளக்கு ஒளிர, மறைந்து நின்றாள் ஸ்ரீ. அர்ஜூனும் அவன் அறையின் சன்னலை திறந்து நிவாஸிடம்..நான் தினமும் ஸ்ரீயை இங்கிருந்து தான் பார்ப்பேன் என்று ஸ்ரீயின் அறையை காட்டினான். இருவரும் பேசினாலும் அர்ஜூனுக்கு பழைய நினைவுகள் ஓட தொடங்கியது. நிவாஸ் அவனை பார்த்து..மலரும் நினைவுகளா? என கிண்டல் செய்தான்.

ஆமாடா..என்று அர்ஜூன் அப்படியே நிற்க, இப்ப என்ன பாக்குற? ஸ்ரீ இப்ப அறைக்கெல்லாம் வர மாட்டா. சாப்பிட அமர்ந்திருப்பாள்.

இல்லடா..ஸ்ரீ அறையில் தான் இருக்கா என்றான் அர்ஜூன் சோகமாக.

எங்க? யாரையுமே காணோம்? நிவாஸ் கேட்க, உனக்கு நேராக இருக்கும் கண்ணாடியை பாரு என்றான். அதில் ஸ்ரீ ஓரமாக அமர்ந்து அழுவது தெரியும். இதை பார்த்த நிவாஸ்..அழுறாடா? நான் போய் பார்க்கிறேன்.

நில்லு..அவளுக்கு ஏதோ நினைவு வந்திருக்கு. அதான் அழுறா அர்ஜூன் கூறினான்.

அகில் பற்றி கூட வந்திருக்கலாம்.

நான் அக்காவை பார்த்துட்டு வாரேன்.

இல்லடா..எனக்கு தெரியும் என்றான் அர்ஜூன்.

என்ன? நிவாஸ் கேட்க, ஸ்ரீ என்னை காதலிப்பது எனக்கு தெரியும் என்றான் அர்ஜூன்.

நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க?

அப்படியா? அப்படின்னா..நான் டீஸ் பண்ணா திட்ட மட்டும் தான் செய்றா. விலக மாட்டேங்கிறா. அவளுக்கு எப்பொழுது என்னை பிடித்ததோ தெரியல. ஆனால் முன்னமே பிடிச்சிருந்தா..இப்ப நடந்த மாதிரி ஏதும் நடந்திருக்காது என்று கலங்கினான் ஸ்ரீயை பார்த்துக் கொண்டு.

ஸ்ரீ கையில் ஏதோ இருப்பதை இப்பொழுது தான் கவனித்தான் அர்ஜூன். அதே நேரம் பவி ஸ்ரீயிடம் ஓடி வந்தாள். கையில் அவள் வைத்திருப்பதை பார்த்த அகில் அதிர்ந்து..ஸ்ரீ இதுக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டான்.

கண்ணை துடைத்துக் கொண்டு ஸ்ரீ எழுந்தாள். அனு அவளை அம்மா..என்று அழைக்க..மூவரும் அனுவை பார்த்தனர். அவளுக்கு அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.

பவியை அணைத்து, என்னால முடியல என்று அழுதாள். அவள் கையில் இருந்தது குதிரையில் சவாரி செய்யும் இருவர் அடங்கிய பொம்மை.

அனு, அம்மா..அம்மா..அம்மா..அம்மா..என தொடர்ந்து அழைக்க..அதை ஓரமாக வைத்து விட்டு..ப்ளீஸ் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் அகிலிடம் கூறி விட்டு வெளியேற..ஸ்ரீ நில்லு..சொல்லிட்டு போ என்றான்.

அர்ஜூன் அகிலுக்கு போன் செய்ய..நிவாஸ் வேகமாக வெளியே ஓடி வந்தான். ஏன்டா, இப்படி ஓடுற? கமலி கேட்க, அவன் ஓடினான் எதிரே இருந்த அகில் வீட்டிற்கு.

ஸ்ரீ அழுது கொண்டே ஓரிடத்தில் பாப்பாவுடன் அமர்ந்து..அம்மா என்றே அனுவை அழைக்க சொல்ல நினைத்தாள். ஆனால் பயம்..ஸ்ரீக்கு பயம். தன்னால் அர்ஜூனுடன் வாழ முடியாத நிலையில் எப்படி அனுவை அம்மா என்று அழைக்க சொல்வது? என்று கலங்கினாள்.

அனுவை கட்டிக் கொண்டு அழ, அர்ஜூன் கையசைத்து ஸ்ரீயை பற்றியும், கையில் என்ன வைத்திருந்தாள் என்றும் கேட்டான். அகில் சட்டென பக்கத்தில் இருந்த குட்டி பைக் பொம்மையை காட்டினான்.

அர்ஜூன் புன்னகையுடன்..இது இன்னும் இருக்கா? என்றான்.

இது என்ன? அகில் கேட்டான்.

ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவள் பிறந்த நாளுக்கு நான் வாங்கிக் கொடுத்தேன். அவள் அங்கிளிடம் பர்த்டே கிப்டா..ஒரிஜினல் பைக் கேட்டா. என்னால முடிஞ்சத செஞ்சேன் என்றான். பவி ஸ்ரீயிடம் சென்று விட்டாள்.

இதை வச்சு எதுக்கு அழுவாள்? காதலை சொல்ல முடியாமல் இதை வைத்துக் கொண்டு அழுதிருக்கலாம் என்று அவனாக எண்ணிக் கொண்டு வெளியே சென்றிருப்பான். ஆனால் அகிலோ அந்த குதிரை பொம்மையை பார்த்து..இதுவும் அர்ஜூன் கொடுத்ததாக இருக்குமோ? என்று எண்ணினான்.

அகிலுக்கும் அர்ஜூனின் காதல் வியப்பாக தான் இருந்தது.

அகில் வீட்டில் நடுஇரவில் ஜூலி குரைத்துக் கொண்டிருக்க, அதை அமைதியாக்க நினைத்தார் பவி அப்பா.

திடீரென சன்னல் உடைபட்டு ஒருவன் உள்ளே குதித்தான். அவன் அனுவை தூக்க..கவின் வந்தான். பவி அப்பா அவனை தடுத்து அனுவை வாங்க முயற்சித்தார். கவினிடம் கத்தியை காட்டி மிரட்டினான். பின் அனுவை தூக்கிக் கொண்டு படியில் ஏறினான். ஜூலி கத்திக் கொண்டே இருந்தது. மாடியின் உச்சியில் அனுவை வைத்துக் கொண்டு..கீழே போடுவது போல் காட்ட..ஸ்ரீ அப்பொழுது தான் வந்து இறங்கினாள் அபியுடன். அபி திகைத்து பார்க்க..ஸ்ரீ வேகமாக கீழ் சன்னல் லாஃப்ட் என மேலேறிக் கொண்டிருந்தாள். அனுவை கீழே விட, அம்மா..என அனு கத்தினாள். ஸ்ரீ அவளை பிடித்து அணைத்து கையை தவற விட்டு கீழே விழ..ஸ்ரீ விழுவதை பார்த்த அர்ஜூன் ஓடிய பைக்கிலிருந்து இறங்கி ஓடி வந்து கல் இருக்கையில் கால் வைத்து பின் மரத்தில் வைத்து எம்பி..பாய்ந்து ஸ்ரீயை பிடித்து இருவரையும் பாதுகாப்பாய் அணைத்து கீழே விழுந்தான். அர்ஜூன் வாயிலிருந்து இரத்தம் வந்தது. அனுவும் ஸ்ரீயும் அதிர்ந்து அர்ஜூனை பார்த்து..

அம்மா..அம்மா..அர்ஜூனுக்கு இரத்தம் என்று அனு ஏங்கினாள். வாயை துடைத்து எழுந்து.. அனுவிடம் ஒன்றுமில்லைடா என்று அர்ஜூன் அனுவை அணைத்தான்.

அர்ஜூன்..உனக்கு ஒன்றுமில்லையே? என்று அவனை ஸ்ரீ ஆராய்ந்தாள். அர்ஜூன் வாயிலிருந்து இரத்தம் வடிந்தது. அர்ஜூன்..வா.. ஹாஸ்பிட்டலுக்கு என்று அழைத்தாள்.

அவன் ஸ்ரீயிடம் உனக்கு அடி ஏதும் பட்டிருக்கா? கேட்டான். பாட்டியும் கமலியும் ஓடி வர..ஊரார் கூடினர். அனுவை கொல்ல வந்த பெண்ணை கவினும் பவி அப்பாவும் பிடித்தனர்.

எனக்கு ஒன்றுமில்லை ஏஞ்சல் என்று ஸ்ரீயை அணைத்தான். அவள் கமலியை பார்த்ததும் விலகினாள். அபி அர்ஜூனை பைக்கில் ஏற்றி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல..அனுவும், ஸ்ரீயும் அவனுடனே ஏறிக் கொண்டனர்.

தீனா அந்த பொண்ணு கையில் விலங்கை மாட்டி..விசாரிக்க அழைத்து சென்றான். அபியிடமிருந்து மெசேஞ் வந்தது. கவினை நித்தி வீட்டிற்கு செல்ல சொல்லி..அர்ஜூன் பாட்டியும், கமலியும் ஹாஸ்பிட்டல் கிளம்ப. கவின் நித்தி வீட்டை அடைந்ததும் விசயத்தை சொல்ல..காட்டுத்தீ போல் வினிதா குடும்ப ஆட்கள் பற்றி பரவியது. கைரவ்,  தாரிகா, அவள் அம்மாவும் அர்ஜூனை பார்க்க கிளம்பினர்.

அர்ஜூன் முதுகில் வலி இருப்பதாக கூற, ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார் டாக்டர்.

டாக்டர், அதெல்லாம் ஒன்றுமிருக்காது அர்ஜூன் கூற, உன்னிடம் யாரும் கேட்கலை. நீ அமைதியா இரு ஸ்ரீ திட்டினாள்.

சும்மா இரு ஸ்ரீ. எனக்கு ஒன்றுமேயில்லை. அவள் பாட்டியிடம் கூற..அஜூ நீ பேசவே கூடாது. டாக்டர்..நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்க என்றார் அவர்.

அவனுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு டாக்டர் வெளியே வந்து..அவனுக்கு ஒன்றுமில்லை. கீழே விழுந்ததில் அடிபட்டிருக்கு. அந்த பெயின் தான். விழுந்த வேகத்தில் இரத்தம் வந்துருக்கு. ஒன்றுமில்லை. ஆனால் நன்றாக ஓய்வெடுக்கணும்.

ஆமா டாக்டர். அவன் ஒரு வாரமாக தூங்கவேயில்லை ஸ்ரீ கூற..அனைவரும் அவளை பார்த்தனர். அவள் அதை கண்டுகொள்ளவில்லை. சார்..நாம என்ன சொன்னாலும் ஓய்வெடுக்க மாட்டான். அதனால என்று அவள் தயங்கி அர்ஜூன் அம்மாவை பார்த்தாள். பிறகு டாக்டரிடம் அவனை தூங்க வைக்க ஊசியோ இல்லை மாத்திரையோ கொடுங்க..யார் சொன்னாலும் கேட்கவே மாட்டான் என்றாள்.

யம்மா..நாம நினைக்கிற நேரத்துல இதெல்லாம் கொடுக்கக் கூடாது.

டாக்டர் ப்ளீஸ். நீங்க எங்ககிட்ட சொன்னதை அவனிடம் சொல்லி பாருங்க. அவன் வெளிய கிளம்பிடுவான் என்றாள் ஸ்ரீ. அவரும் நர்ஸை பார்க்க..அவங்க அர்ஜூனை அழைத்து வந்தாங்க.

ஸ்ரீ கூறியது போல் டாக்டர் கூற, நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒன்றுமில்லை என்று ஸ்ரீயை பார்த்து சொன்னா கேட்க மாட்டீயே? என்று அனைவரையும் பார்த்து..எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?

ஹே..கையூ என்று அவன் தோளில் கையை போட, கையை எடுத்து விட்டு..டாக்டர் கடைசியா ஒண்ணு சொன்னார் அர்ஜூன். உனக்கு கேட்கலையா?

என்ன? என்று அனைவரையும் பார்த்தான். எதுக்கு எல்லாரும் இப்படி பாக்குறீங்க?

நீ ஓய்வெடுக்கணும். நீ வீட்டுக்கு போய் தூங்கு. அனுவை நான் பார்த்துக்கிறேன் அபி கூற,

நோ..நோ..நோ..என்று அர்ஜூன்..அனு எங்க? காணோம் என்று கதவை திறக்க..அவன் அம்மா அவன் கையை பிடித்தார். அவரை பார்த்து விட்டு ஸ்ரீயை பார்த்தான். அவள் டாக்டரை பார்க்க..

சார்..ஸ்ரீ சொன்னது தான் சரி. இவனெல்லாம் கேட்க மாட்டான் என்று கைரவ் அர்ஜூனை பிடித்து இழுத்தான்.

டேய்..என்ன பண்ற? அர்ஜூன் கேட்டான்.

வாங்க எல்லாரும் வெளிய இருக்கலாம் என்று வெளியேற, கைரவும் அபியும் அர்ஜூனை வெளியே விடாது நின்றனர்.

என்னடா பண்ண போறீங்க? டாக்டர் என்று அர்ஜூன் அழைக்க, அவர் ஊசியுடன் அர்ஜூனிடம் வந்தார்.

சார்..எனக்கு தான் ஏதுமில்லையே?

இல்லை தான். ஆனால் ஓய்வெடுத்தால் தான் சரியா வரும் என்று அவர் அருகே வர அர்ஜூனுக்கு புரிந்தது. அய்யோ மேம் என்ன பண்றீங்க? கேட்டு திசை திருப்ப, அபியும் கைரவும் நகர்ந்து மேம்மா? என்று பார்க்க..அவர்களை பிடித்து தள்ளிய அர்ஜூன் கள்ளச்சிரிப்புடன் வெளியே வந்தான். கதவருகே ஸ்ரீயும் தாரிகாவும் நின்றனர்.

அண்ணா..பின்னாடி பாரு என்று தாரிகா கத்த..அர்ஜூன் அறையினுள் திரும்பி பார்த்தான். ஸ்ரீயை உள்ளே தள்ளி விட அவள் நேராக அர்ஜூன் மேல் இடித்து நின்றாள். இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்க்க, டாக்டருக்கு சைகை செய்தாள் தாரிகா. அவர் ஊசி போட சுதாரித்த அர்ஜூன் விலக, ஸ்ரீ அர்ஜூனை அணைத்து கண்ணை காட்டினாள். அவர் ஊசியை செலுத்தினார். அர்ஜூன் அவள் அணைப்பில் அதிர்ந்து நின்றான். இதற்கு முன் பயத்தில், கவலையில், ஆறுதலுக்கு அணைத்திருப்பாள். ஆனால் தானாக விருப்புடன் அவன் அம்மா வெளியே இருப்பது தெரிந்தும் அணைத்து இருக்கிறாள். காரணம் இருந்தாலும் அவனுக்குள் ஆனந்தம். அவர் போட்டது தெரிந்து ஸ்ரீ விலக..அவளை இழுத்து இறுக அணைத்து மயங்கினான்.

கைரவும், அபியும் அவனை டாக்டர் அறையினுள்ளே முதலில் படுக்க வைத்தனர். தாரிகா டாக்டரிடம்..தூக்க மாத்திரை சாப்பிடுவர்களுக்கு நீங்க போட்ட மருந்து எதுவும் செய்யாதுல..என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே கேட்டாள். உள்ளிருந்த மூவரும் அவள் கேட்டதில் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

தாரி..தூக்க மருந்து அர்ஜூன் எடுப்பானா? ஸ்ரீ கேட்டாள்.

ஆமா ஸ்ரீ. எப்ப இருந்துன்னு தெரியல. அவன் அறையில் இருந்தது. நான் கேட்ட போது..குடிக்கலைன்னா போடுவேன்னு சொன்னான்.

டாக்டர்..அவனுக்கு வேறேதுவும் செய்யாதுல? தாரிகா கேட்டாள்.

ரெண்டுமே ஒன்று தான். அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் தூங்க மருந்து போடுற அளவு என்ன பிரச்சனை? டாக்டர் கேட்டார். பாட்டியும் கமலியும் உள்ளே வந்தனர்.

டாக்டர், ரொம்ப நாளா தனியா இருந்திருக்கான். அதனால் தான் போட்டிருப்பான்னு நினைக்கிறேன் தாரிகா கூறினாள். அனைவரும் அர்ஜூனை பார்த்தனர்.

நல்லது தான். இந்த மாத்திரையோட நிறுத்தி இருக்கான். தனிமை ரொம்ப கொடுமையானதுல்ல. தனிமை போக்க பசங்க போதை மருந்து எடுத்துப்பாங்க, பொண்ணுங்களுடன் தவறான பழக்கம், கொலை கொள்ளையில் கூட ஈடுபட்டு இருக்காங்க. திருச்சியில ஒரு பையன் பெற்றோரை இழந்து யாருடனும் பேசாமல் தனியே ஆறு மாதத்தை கூட கடக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கான்.

ஸ்ரீ கண்ணில் கண்ணீர் பெருகியது. எத்தனை வருசமா தனியா இருக்கான்? டாக்டர் கேட்டார்.

நாலு வருஷமா டாக்டர் அபி கண்கலங்க கூறினான்.

பரவாயில்லை. மனச ஸ்ட்ராங்கா வச்சிருக்கான் என்று அவர் கூற, ஆமாம் டாக்டர்..மனசளவில அவன் ஸ்ட்ராங் தான். அதனால் தான் அவன் காதலுக்காக பத்து வயசுல இருந்து காத்திருக்கான் என்று அபி ஸ்ரீயை பார்த்தான்.

பத்து வயசுல இருந்தா? ம்ம்..கிரேட் என்று அவர் ஸ்ரீயை பார்த்தார். அவள் கண்ணீருடன் வேகமாக வெளியே சென்றாள்.

பாட்டி அர்ஜூன் அருகே சென்று அவனை பார்த்து அவன் தலையை கோதிக் கொண்டே..என் பேரன் பார்க்க தான் ஸ்ராங். எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான். யாருக்கும் அவனை ஏத்துக்க மனசேயில்லை என்று கமலியை முறைத்தார். அனைவர் கண்களும் கலங்கியது. கமலி அழுது கொண்டே வெளியே சென்றார்.

அவன் எப்பொழுது விழிப்பான் டாக்டர்? கைரவ் கேட்டான்.

நாளைக்கு தான் எழுந்திருப்பான் டாக்டர் கூறி விட்டு, ஆட்களை அழைத்து அர்ஜூனை வேரொரு அறைக்கு மாற்றினார். பாட்டி, ஆதேஷ், பிரதீப் அர்ஜூனிடம் இருக்க, கைரவ் ஸ்ரீயிடமும் அபி கமலியிடமும் சென்றார்.

தாரிகா அம்மாவிடம் அனு இருந்திருப்பாள். அனு தூங்க ஸ்ரீ அவரை அணைத்து அழுதாள். அர்ஜூனை என்ன செய்றதுன்னே தெரியலம்மா? என்னால எப்படி அவனுடன்? பாருங்கம்மா..தினமும் குடிக்கிறான் இல்லை தூக்கமாத்திரை எடுத்துப்பானாம் என்று அழுதாள்.

ஆமாம். அப்புறம் என்ன செய்வானாம்? டாக்டர் சொன்ன பையனை போல் தற்கொலை செய்ய சொல்றியா? கைரவ் கேட்டான்.

என்னடா சொன்ன? என்று ஸ்ரீ கைரவை அறைந்தாள்.

நிறுத்து ஸ்ரீ..என்று கத்தினான் கைரவ். அனு விழித்து இருவரையும் பார்த்தாள். தாரிகா அம்மா கைரவை தடுக்க..சும்மா இருங்க ஆன்ட்டி. அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என்று ஸ்ரீயிடம் வந்து, எனக்கு தெரியும்.

ஜிதினால் நீ பட்ட கஷ்டம் தெரியும். அதனால் என்ன? ஏன் அவனை நீயும் கஷ்டப்படுத்துற? உன்னுடன் வாழப் போகும் அவனே பெருசா எடுத்துக்கல. அவன் எதுக்கு கஷ்டப்படுறான் தெரியுமா? அவன் காதலை ஏத்துக்க மாட்டிங்கிற? அதுதான் அவனோட ரொம்ப பெரிய பிரச்சனையே? உனக்கு புரியலையா?

அவனுக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. உன்னை மட்டும் தான் அழுத்திக் கூறினான் கைரவ். யார் என்ன சொன்னாலும் கண்டிப்பா எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்க மாட்டான். உனக்கும் அவனை பிடிக்கும் தானே? அப்புறம் ஏன் கஷ்டப்படணும்? ஜிதினை நினைச்சு பயப்படுறியா? அவனெல்லாம் ஓர் ஆளே இல்லை. அவனை விடு. உன்னோட ஆன்ட்டியை விடு. கொலைக்காரனை விடு. அர்ஜூனை மட்டும் பார். அவனை நீ ஏத்துக்கிட்டா. அதுவே எல்லா பிரச்சனைக்கும் முடிவை தரும்.

நீ அர்ஜூனை நம்பலையா? ஜிதினுடன் உன்னை இணைத்து பேசுவான்னு நினைக்கிறியா?

இல்லை. அவன் என்னை தவறாக பேச மாட்டான். நீ பேசுறத நிறுத்து. போதும். எல்லாமே எனக்கும் தெரியும் கைரவ். அவனை கஷ்டப்படுத்த எனக்கு என்ன ஆசையா? உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத. எனக்கும் அவனுடன் வாழனும்ன்னு ஆசை தான். என்னால முடியல. நான் அவனுக்கு தகுதியில்லாதவளாயிட்டேன். அந்த வீடியோவை பார்த்து செத்தே போயிட்டேன். என்னால அர்ஜூனை மட்டுமல்ல யாரையும் ஏத்துக்க முடியாது. எல்லாமே தொடங்கும் முன்னே முடிஞ்சு போச்சு என்று கதறி அழுதாள் ஸ்ரீ.

ஸ்ரீ அப்படியில்லை. எதுவும் முடியலை. நீங்க ஆரம்பிக்கலாம். அனு இருக்கா. அவளுக்காகவாது என்று கைரவ் வாயெடுக்க..ப்ளீஸ் கையூ. உனக்கு புரியலை. என்னால ஏத்துக்க முடியல. எனக்கு செத்து போயிறலாம் போல இருக்கு. என்னை பார்த்தால் எனக்கே பிடிக்கலை என்று கதறி அழுது கொண்டே கையெடுத்து கும்பிட்டு, இதை பத்தி இனி பேசாதே என கத்தினாள்.

அம்மா..அம்மா..அம்மா..அம்மா..என்று அனு அழுது கொண்டே தாரிகா அம்மாவிடமிருந்து கீழே அமர்ந்து அழுது கொண்டிருந்த ஸ்ரீயிடம் ஓடி வந்தாள்.

அம்மா..அழாத..என்று அனு அழ, அவளை அணைத்துக் கொண்டு ஸ்ரீ தேம்பி அழுதாள். அனு கூறிய அம்மாவில் கைரவ் மீண்டும் கோபமுடன்..இதுவரை அர்ஜூன் தான் உன்னால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இனி நீ இல்லாமல் அனு அழுதுகிட்டே இருப்பா. நல்லா பார்த்து ரசி என்று கத்தி விட்டு அங்கே ஓரமாக அமர்ந்தான்.

ஸ்ரீயும் அதை நினைத்து தான் வேதனையில் இருந்திருப்பாள். கைரவ் பேசியதும் உடைந்து அழுதாள். தாரிகா அம்மா பேசுவது அவள் காதில் விழவேயில்லை.