அத்தியாயம் 85

பிளாக் சத்தம் கேட்க, நின்ற அர்ஜூன் நிவாஸை விடுத்து அவனிடம் ஓடினான். பாட்டி, நிவாஸ், கமலி அர்ஜூன் பின் செல்ல..அஜூ..பிளாக் தான் அந்த போதை மருந்தை கண்டுபிடிச்சான்.

ம்ம்..என்று பிளாக் அருகே சென்று..பெரிய விசயமெல்லாம் பண்ணி இருக்க. குட் டா..என்றான். அதுவும் கனைத்து மகிழ்ச்சியை காட்டியது.

நிவியும் அருகே வர, அவனை பிடித்து நிறுத்திய பாட்டி..அவனருகே அர்ஜூன், வேலுவை தவிர யாராலும் போக முடியாது என்றார்.

இருங்க பாட்டி..என்ற அர்ஜூன்..நிவி நீ வாடா..என்று அவனிடம் கையை நீட்ட..அவனுக்கு பயமாக இருந்தாலும் அர்ஜூன் அருகே இருக்கும் தைரியம். நிவி ஆசையோடு அதை தொட கனைத்து காலை தூக்கியது.

ஏய்..ஈசிடா. நான் தான் இருக்கேன்ல..என்று அவன் அதை சமாதானப்படுத்த, அர்ஜூன் நான் பயந்தே விட்டேன் என்று நிவாஸ் கத்த, பிளாக்கும் பயங்கரமாக கத்தியது.

போடா..உன் பேச்சை கேட்டு வந்தேன்ல. எனக்கு வேண்டும் தான் நிவாஸ் கோபமாக நடக்க..நிவி நில்லு..என்று அர்ஜூன் அவனை நிறுத்தி..மற்ற குதிரையை தொட வைத்தான். அவனும் மகிழ்ச்சியுடன் தன்னை குதிரையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவர்களுக்கு பின்னே வந்த காரில் ஆதேஷ் குடும்பமாக வந்து இறங்க, மீனாட்சியும் வெற்றியும் தங்கள் மகள் ஜானுவை காண ஆர்வமுடன் இருந்தனர். ஜானுவும் இறங்கி அவர்களை நோக்கி ஓடி வந்தாள். ஆனால் விலகுங்க என்று இருவருக்கும் இடையில் புகுந்து பின்னிருந்த தன் அண்ணன் பிரதீப்பை கட்டிக் கொண்டு,

சாரிண்ணா..நான் ரொம்ப பேசிட்டேன். உனக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல. நான் கோபத்தில் ஏதேதோ பேசிட்டேன் என்று அழுதாள். இல்ல ஜானும்மா..நான் தான் உன்னிடம் அண்ணம் போல் பழகி இருக்கணும். என்னால் தான் அனைத்தும் என்று அவனும் கலங்க..அண்ணா..உன்னோட கண்ணுல கண்ணீர் வரக்கூடாது என்று துடைத்து விட்டு,

துகி அண்ணி..அண்ணாவ நல்லா பார்த்துக்கிட்டீங்க. சூப்பர்..என்று புவனாவை தேடினாள்.

புவி எங்க அண்ணி? அங்க பாரு என்று அவள் கையை காட்ட..புவி என்று புவனாவிடம் ஜானு வந்தாள். புவனா கோபித்து திரும்பி அமர்ந்தாள்.

சாரி..புவி..என் கண்ணுல..செல்லம்ல..கோபப்படாத..நான் சினத்துல தான் இப்படி ஒரு முடிவ எடுத்திருந்தேன். இதோ..வந்துட்டேன்.

போறவ..சொல்லிட்டு போனா தான் என்ன? புவனா திட்டினாள். மீனாட்சி வெற்றியை பார்த்தார். இருவரும் தோழிகள் என்றார் சோகமுடன்.

அவளை சமாதானப்படுத்த..ஆதேஷ் வெற்றி, மீனாட்சியிடம் வந்து உரிமையுடன் அத்தை, மாமா..என்று பேசினான். அவன் இடையிடையே ஜானுவை பார்த்தான்.

அதை பார்த்து வெற்றி பிரதீப்பை பார்த்தார். பிரதீப் ஆதேஷை அழைக்க.. அவனை அணைத்து ஆதேஷ் அழுதான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது மாமா..மேம் இப்படி அழுது பார்த்ததேயில்லை. மயங்கிட்டாங்க என்று தோழனிடம் ஆறுதல் கேட்பதை போல் பிரதீப்பிடம் புலம்பி தீர்த்தான் ஆதேஷ்.

அவன் பேச்சை மாற்ற…ஜானு சண்டை போட்டாளா மாப்பிள்ள?

ஆமாம் மாமா. என் மீது தான் தவறு.

சீக்கிரம் சமாதானப்படுத்துங்க..என்று ஆதேஷிடம் கூற, அவன் பிரதீப்பை விடுத்து ஜானு பின் சென்றான். அவள் நித்தி வீட்டினுள் சென்று தாரிகாவுடன் அமர்ந்தாள். மீனாட்சி ஜானுவை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

தாரிகா ஜானுவிடம், அம்மாவிடம் பேசலாம்ல. அவங்க பாவம்.

அக்கா அவங்க இல்லாம நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். அண்ணா தான் ரொம்ப பாவம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கல்லூரி படிக்கும் போதும் நான் தனியாக கூடாதுன்னு மூன்று மணி நேர பயணத்தின் பின் வேலை செய்து என்னை படிக்க வைத்து ஓய்வில்லாமல்..எல்லாமே என் கண் முன்னே வருகிறது என்று கண்ணீருடன் ஜானு கூறினாள். பின்னிருந்து கேட்ட மீனாட்சி மனபாரத்துடன் எழுந்து வெளியே சென்றார்.

லலிதா தனியே இருக்க..ஆதேஷ் அப்பாவும் வெற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜானு அவங்க வெளிய போயிட்டாங்க.

இருக்கட்டும் அக்கா. கொஞ்ச நேரம் கஷ்டப்படட்டும். நான் அப்புறம் பேசிக்கிறேன் என்று ஜானு சொல்ல..ஏதாவது செய்…சொன்னால் கேட்கமாட்டாய் தாரிகா கூறினாள்.

நானே பேசிடுவேன்.

அவங்களுக்கு தெரியாமலே நடந்ததுக்கு..அவங்கள எப்படி குறை சொல்றது?

சரிக்கா, பேசுகிறேன் என்று வெளியே வந்து அவள் அம்மாவை தேடினாள். ஆதேஷ் அவள் முன் வந்து நின்றான்.

வழியவிடுங்க..அம்மாவை காணோம்.

இங்க தான் இருப்பாங்க.

இல்ல..இப்ப தான் இங்கே அமர்ந்திருந்தாங்க. இப்ப காணல..என்றாள்.

இருவருமே தேடினர். அவர் தள்ளி இருட்டுப் பகுதியில் அமர்ந்திருந்தார். அம்மா..என்று ஜானு கத்த..அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். வெற்றி, பிரதீப், புவனா, துகிராவும் பார்க்க..மீனாட்சி எழுந்து நின்று திரும்பி பார்த்தார்.

ஓடி வந்த ஜானு அவரை அணைத்து, சாரிம்மா என்றாள். ஆதேஷ் அவளிடம் வந்தான்.

மாமா..என் பக்கத்துல வந்தீங்க. அவ்வளவு தான்.

சாரி ஜானு. நான் மாமாவை பற்றி பேசியதில் நம்மை மறந்துட்டேன். டென்சன்..தான். மேம் ரொம்ப அழுதாங்களா? எனக்கு அதான் கேட்டுக் கொண்டே இருந்தது. அதான் டென்சன்ல பேசிட்டேன்.

இனி இப்படி பேசுனீங்க? நான் உங்களிடம் பேசவே மாட்டேன் என்றாள். அப்பொழுது காரிலிருந்து இன்பா கீழே இறங்கினாள். அபி வீட்டின் முன்..அபி அவன் அம்மாவை அழைத்திருப்பான். அவர் இன்பாவை வீட்டிற்கு அழைத்து சென்றான். கேரி..மற்றவர்களை அழைக்க..அவன் தயங்கினான்.

என்ன சார்? வீடு சின்னதா இருக்கான்னு பார்க்குறீங்களா? இல்லை.. பிரின்சஸ் ஓய்வெடுக்கட்டும். “நாங்க”? என்று அவன் கேட்க..வாங்க சார் என்று அர்ஜூன் அவர்களை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

முதலில் பணமில்லாமல் அர்ஜூன் பாட்டி கஷ்டப்பட்டாலும் அர்ஜூன் அவருக்கு ராசியானான். அவன் வந்த பின் விளைச்சல் கூடி ஒவ்வொன்றாக வாங்கி ஸ்ரீ வீட்டை விட பெரியதாக்கினார் விசாலாட்சி.

யாசுவும், அவளுடைய பெற்றோரும் வர..அவர்களுடன் மாதவிற்கு பழக்கமான டிரைவர் தான் வந்திருப்பார். அவனுக்கு வேலைப்பளு அதிகமென்பதால் அவன் காலை வருவதாக கூறி இருந்தான். சந்துரூவும் அவனுடன் வருவதாக கூறி இருந்தான்.

அனைத்தையும் யோசித்த அர்ஜூன் தருணிடம் சொன்னான். ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர் அகிலும்..வினிதாவின் அம்மாவும். அபி வீட்டில் தான் இன்பா அம்மாவும் இதயாவும் இருப்பார்கள். இருவரும் அவளை அணைத்து அழ, அவளோ படுத்துக் கொண்டாள். இதை பார்த்த அபி அம்மா..நீங்களும் ஓய்வெடுங்கள் என்று கூற, இதயாவை அங்கே விட்டு அபியுடன்..இன்பா அம்மா நித்தி வீட்டிற்கு வந்தார்.சற்று நேரத்தில் இன்பாவும் இதயாவும் வெளியே வந்தாங்க. இன்பாவை அமர வைத்து அபியை அழைத்த இதயா,

அபி..நாங்க தருண் வீட்ல தங்கிக்கவா? அக்கா உள்ள இருக்க மாட்டேங்கிறா. தூங்காம வெளிய வந்து உட்கார்ந்துக்கிறா? பதிலும் பேச மாட்டிங்கிறா.

அபி இன்பா அருகே வந்து அமர்ந்தான். கவின், சைலேஷ், கைரவும் அவர்களிடம் வந்தனர்.

மூவரும் அபியை பார்க்க..கவின் உங்க வீட்ல இவங்கள தங்க வைக்கலாமா? அபி கேட்டான்.

ம்ம்..ஷுயர்.

சைலேஷ் இன்பாவிடம் பேச அவள் எழுந்து நடந்தாள். அவனை பார்த்த இதயா..அண்ணா..அவ என்ன நினைக்கிறான்னே தெரியல வருத்தமாக  கூறினாள்.

நாம அவங்களுக்கு நேரம் கொடுக்கணும் என்று கவின் கூற, அபி அமைதியாக அமர்ந்திருந்தான்.

அபி..வா அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று கவினும் அபியும், இன்பா இதயாவை அழைத்து சென்றனர்.

மறை படுக்கையில் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான். அவனுக்கு காயத்ரி அழுது கொண்டே அவள் கஷ்டப்பட்டதை கூறியதே நினைவிற்கு வந்தது. எழுந்து அமர்ந்தான்.

ஹாஸ்பிட்டலில் காயத்ரி இருப்பதை தெரிந்து கொண்ட வினிதா அம்மா அவளை பார்க்க வேண்டுமென்று கூறியதால் அகில் அழைத்து வந்தான். அர்ஜூன் தருணிடம் பேசி விட்டு வெளியே அமர்ந்திருந்தான். காயத்ரிக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அவள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் அகிலை பார்த்து அவனிடம் வந்தான். வினிதாவின் அம்மா அர்ஜூனிடம் எங்கப்பா..காயூ? என்று கேட்டார்.

அக்கா..உள்ள தான் இருக்காங்க. பாருங்க என்று அர்ஜூன் கதவை திறக்க இருவரும் உள்ளே சென்றனர். குட்டிப்பையனை பார்த்தவருக்கு கண்ணீர் பெருகியது. என் பிள்ளையும் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று கலங்கினார்.

அகில் வெளியே வர, ராக்கியை வினிதா அம்மா வாங்கிக் கொண்டார். தருணும் வெளியே வந்தான்.

நீ கிளம்பு தருண். நான் பார்த்துக்கிறேன் அர்ஜூன் மீண்டும் கூற, தருண் கிளம்பினான். அகில் துருவனை பார்க்க சென்றான்.

துருவன் வாசலையே பார்த்துக் கொண்டிருக்க..ரதிக்கு நடக்கும் ஏதும் தெரியாமல் படியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அகிலை பார்த்து ரதி,..நீ எப்படா வந்த?

நீங்க கிளம்புங்க. நான் தம்பிய பார்த்துக்கிறேன்.

என்ன? எங்க?

நித்தி அம்மா இறந்துட்டாங்க. ஸ்ரீ வந்துருக்கா. நம்ம வீட்ல தான் அவளும் பவியின் குடும்பமும் இருக்காங்க. பார்த்துக்கோங்க என்றான்.

அவனை நீ பார்த்துக்கிறியா? ஆச்சர்யமாக கேட்டார்.

அம்மா..சொல்றது புரியலையா? கிளம்புங்க என்றான்.

நீ இப்படி பேச மாட்ட. இப்ப என்ன அவன் மீது திடீர் அக்கறை? நீ எங்கள பத்தியெல்லாம் யோசிப்பாயா? கேட்டார்.

என்ன பேசுறீங்க? நீங்க என்னோட அம்மா, அவன் தம்பி. உங்கள பார்க்காம வேற யார பார்க்கப் போறேன். அர்ஜூன் கீழ தான் இருக்கான். சீக்கிரம் கிளம்புங்க என்று அவரை அனுப்பி விட்டு..துருவனிடம் சென்றான். அவன் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தார்.

அகிலை பார்த்து, அண்ணா..எப்ப வந்த? சக்கர வாரேன்னு சொன்னான். அவன் வரல. எப்பொழுதும் மாலை என்றாலே புவி ஜானுவை விட அவனுடன் தான் இருப்பேன். ஆனால் இன்று அவனை காணோம்.

அகில் எல்லாவற்றையும் கூறினான். நீ அங்க போகாம இங்க என்ன பண்ற?

உன்னை எப்படி தனியே விட முடியும்?

என் மேல் உனக்கு அக்கறை இருக்கா?

நீ என்ன அம்மா மாதிரியே கேக்குற?

என் மேல உனக்கு அக்கறை இருந்தா. எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு. துளசிய அம்மா ஏதாவது சொன்னாங்களான்னு கேட்டு சொல்லு என்று அகிலை பார்த்து..எனக்கு அவள பிடிச்சிருக்கு. நான் இன்னும் காதலை நேரடியா சொல்லல. ஆனால்..என்று இன்று அவளிடம் பேசியதை கூறினான். அவளும் நன்றாக பேசியதாகவும் துளசி துருவனிடம் காதலை சொன்னதையும் கூறினான்.

சரி..சொல்றேன். நீ சாப்பிடியா? கேட்டான்.

இல்லை. இன்று எல்லாமே வித்தியாசமா இருக்கு என்ற துருவன் பிரதீப் பேசியதை கூறினான். ஏதோ சரியில்லாதது போல் உள்ளதுடா.

நான் தான் சொல்றேன்ல. நீ அமைதியா ஓய்வெடு. நான் பார்த்துக்கிறேன் என்று யோசித்த அகில் வெளியே வந்து தருணிடம் பேசினான்.

துளசி ஊருக்கு போயிருக்கா. ஆனால் அவங்க வீட்ல அவள ரொம்ப கவனிச்ச மாதிரி இருந்தது. அவ அவளோட அம்மாவுக்காக போனது போல் தெரியல. ஏதோ விசயம் இருக்கு என்று கூறினான்.

ஓ.கே டா என்று அகில் வைத்து விட்டு..பிரதீப்பிற்கு போன் செய்து அவனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்தான்.

எதுக்குடா? அண்ணா உங்ககிட்ட பேசணும் என்றான்.

என்ன பேசணும் சொல்லு? வேலை இருக்குடா.

வேலு அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. கொஞ்ச நேரம் தான் வாங்க என்றான்.

துருவனுக்கு ஏதும் பிரச்சனையா? பிரதீப் கேட்க, அகிலுக்கு சந்தேகம் அதிகமானது.

பிரதீப் வெற்றியிடமும் வேலுவிடமும் கூறி விட்டு கிளம்பினான். துகிரா அவனை பார்க்க..அவன் அவளை பார்த்து விட்டு சென்றான்.

மறை தூங்க முடியாமல் வெளியே வந்தான். அர்ஜூன் போன் பேசிக் கொண்டிருந்தான். தருண் எங்கே? என்று அர்ஜூனிடம் கேட்டான். அவன் சென்று விட்டான். பையன் உள்ள இருக்கான் என்று காயத்ரி அறையை அர்ஜூன் காட்டினான்.

கதவை திறந்து மறை பார்க்க..ராக்கி விழித்திருந்தான். அவன் அம்மா அருகே நின்று கொண்டிருந்தான். வினிதா அம்மா அசதியில் அவனை மார்பிலே போட்டு தூங்கி இருப்பார். விழித்த ராக்கி கீழிறங்கி அவன் அம்மாவிடம் சென்றிருப்பான்.

குட்டிப்பையன் காயத்ரி படுக்கையில் ஏற முயன்று கொண்டிருந்தான். ஹே..ராக்கி என்று மறை சத்தமிட..வினிதா அம்மா விழித்தார்.

ராக்கி அவனை பார்த்து, ப்ரெண்டு என்று ஓடி வந்தான்.

என்ன பண்ற?

அம்மா..எழுந்திருக்க மாட்டாங்கிறாங்க. வா..ப்ரெண்டு அம்மாவை எழுப்பலாம். நான் அம்மாவை கட்டிக் கொண்டு தான் தூங்கணும்.

அம்மா இப்ப எழுந்திருக்க மாட்டாங்க என்று வினிதா அம்மாவிடம்..நீங்க அவங்களுக்கு யாரு? கேட்டான்.

நான் அவள் தோழியின் அம்மா.. நீங்க தான் காயூவிற்கு உதவியவரா?

ஆமா பாட்டி..ப்ரெண்டு கையில இரத்தம்..என்று அவன் கையை ராக்கி காட்டினான்.

ரொம்ப தேங்க்ஸ் தம்பி.

அம்மா..நீங்க ஓய்வெடுங்க. நான் பையனை பார்த்துக்கிறேன் என்றான்.

இருக்கட்டும் தம்பி. ஏற்கனவே உங்களுக்கு அடிபட்டிருக்கு.

பெரிய அடியெல்லாம் இல்லைம்மா. நான் பார்த்துக்கிறேன் என்று வெளியே வர, அர்ஜூன் கதவை திறந்தான். அகில் அர்ஜூனுக்கு மேசேஜ் பண்ணான். துருவனை பார்த்துக்க மேல வா. நான் கீழே பார்த்துக்கிறேன்.

ஏன்டா? இவனும் பதிலுக்கு கேட்க..சொல்றேன். நான் பிரதீப் அண்ணாவிடம் பேசிட்டு சொல்றேன் என்று துருவனிடம் மறை, காயத்ரியை கூறி அவங்கள பார்த்துட்டு வாரேன்னு  சொல்லி அவன் கீழே வந்து அர்ஜூனிடம் துருவா என்ன கேட்டாலும் தெரியாதுன்னு மட்டும் சொல்லு என்று வெளியே காத்திருந்தான்.

அண்ணா..பார்த்துக்கோங்க. நான் இப்ப வந்துருவேன் அர்ஜூன் மறையிடம் கூறி விட்டு படி ஏறி மேலே சென்றான்.

ராக்கியை தோளில் போட்டு ஓரிடத்தில் அமர்ந்து..நீ தூங்கு. அம்மாவுடன் நாளைக்கு தூங்கு என்று காலை நீட்டியவாறு அமர்ந்தான்.

ராக்கி அவனது கழுத்தை கட்டிக் கொண்டு சாய்ந்தான். கதவை திறந்து வினிதா அம்மா அவர்களை பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

பிரதீப் அங்கே வந்தான். அண்ணா..என்று மறை எழுந்தான். அவன் பின் வந்த அகில்..பிரதீப் கையை பிடித்து தனியே இழுத்து சென்றான்.

மறை இதை பார்த்து, அர்ஜூனுக்கு போன் செய்து..அகில் பிரதீப் அண்ணாவிடம் கடுமையாக நடந்து கொள்வது போல் தெரிகிறது.

அப்படி இருக்காதுண்ணா.

இல்லடா கோபமா தான் அகில் இருக்கான்.

பிரச்சனை என்னவென்று தெரியுமா? கேட்டான்.

தெரியலை அண்ணா. இருங்க நான் கீழ வர்றேன் என்று அர்ஜூன் இறங்கி வர..அவர்கள் பின் ராக்கியை தூக்கிக் கொண்டு சென்றான் மறை.

பிரதீப்பிடம் துளசி எங்கன்னு? கேட்டான் அகில்.

அவ ஊருக்கு போயிருக்கா..என்று காரணத்தை கூற..

பொய் சொல்லாதீங்க அண்ணா.

அவள் எங்க போனா உங்களுக்கென்னடா? அவள் என்னோட தங்கச்சி. நான் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி படிக்க வைப்பேன். உன் வேலைய பார்த்துட்டு போ பிரதீப் கூறினான்.

உங்களுக்கு துளசி காதல் தெரிஞ்சு தான அவள அனுப்பி வச்சிருக்கீங்க?

தேவையில்லாததை பேசாத..

அண்ணா..இது என்னோட தம்பிக்கு தேவையானது. அவனுக்கும் துளசியை பிடிக்கும். அவள எப்படி சொல்ல விடாம அனுப்புவீங்க? எங்க இருக்கான்னு சொல்லுங்க.

முடியாது என்று பிரதீப் நகர, அவன் கையை பிடித்தான்.

பிரதீப்பிற்கு சினம் ஏறியது.

கையை விடு அகில்..அவன் கூற, நீங்க சொல்லீட்டு போங்க என்று விடாமல் பிடித்தான்.

அகிலை பிடித்து தள்ளிய பிரதீப்..ஆமா தெரியும். இருவர் காதலும் தெரிஞ்சு தான் அனுப்பினோம். அதற்கென்ன இப்ப?

தெரிஞ்சே அனுப்புனீங்களா?

ஆமா..தெரிஞ்சதால தான் அனுப்பினேன்.

சரி. துளசி எங்க இருக்கான்னு சொல்லுங்க?

இதுக்கு தான் நீ என்னை அழைத்தால்..நான் கிளம்புகிறேன்.

சொல்லுங்கண்ணா?

இல்ல

 என்னோட தம்பிக்கிட்ட என்ன குறை இருக்கு? சொல்லுங்க கத்தினான்.

எதுக்குடா கத்துற? மறை அவனிடம் வர, அண்ணா நீங்க பேசாதீங்க..நான் இவரிடம் பேசுறேன் சொல்லுங்க?

பிரதீப் நகர்ந்து செல்ல..சொல்லாம நீங்க எங்கையும் போக முடியாது. அவன் புவனாவை காதலித்தது தான் பிரச்சனையா? அவனுக்கு விருப்பமிருந்து அவளை தவறான கண்ணுடன் பார்த்தது கூட இல்லை. உங்களுக்கு தான் தெரியுமே?

அன்று நடந்த அர்தீஸ் பிரச்சனையில் துருவன் துளசிக்கு முத்தம் கொடுத்த போதே அவனுக்கு துளசி பிடித்து தான் பண்றான்னு புரிந்தது. சரி..பேசுவான்னு நினைச்சேன். அவன் ஏதும் அவளிடம் பேசாமல் இருந்திருக்கான்.

ம்ம்..அதுவும் நல்லது தான் பிரதீப் கூற, கோபத்தில் கையை அகில் ஓங்கினான்.

அகில் என்ன பண்ற? அர்ஜூன் வேகமாக ஓடி வந்தான்.

அகில் நீ போ. அப்புறம் பேசிக்கலாம் மறை சொல்ல..அண்ணா..நீங்க பேசாதீங்க என்று அகில் கத்த..விழித்த ராக்கி அழுதான்.

டேய்..என்று பல்லை கடித்த மறை அங்கிருந்து நகர்ந்து நின்று ராக்கியிடம் சமாதானமாக பேசினான். மூவரும் அவனை பார்த்தனர்.

என்னாச்சு அகில் உனக்கு?

எனக்கு ஏதும் ஆகலை. இவருக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஏதோ ஆச்சு? காதலிக்கிறவங்கள பிரிக்கிறதே வேலையா போச்சு? அகில் கூற, பிரதீப் அவனை அறைந்தான்.

அகில் சட்டையை பிடித்த பிரதீப், உனக்கு என்னடா? துளசி எதுக்கு போனான்னு தெரியணும்? அப்படி தானே? நல்லா கேட்டுக்கோ..எல்லாமே உன்னால் தான் நடக்குது?

என்னாலா? நான் என்ன செய்தேன்?

உன்னால் தான் ஆரம்பித்தது சீற்றத்துடன் பிரதீப் கத்தினான்.

இப்ப தான் தம்பி பாசம் உன்னை இழுக்குதோ? இத்தனை நாள் எங்க போச்சு அந்த பாசம்? ஸ்ரீயையும் அப்பாவையும் நினைத்துக் கொண்டு உன்னோட அம்மா, தம்பிய தனியா விட்டுட்ட. அவன் சின்ன பையன் தானடா. ஸ்ரீ போய்..கொஞ்ச நாள்ல உன்னோட அப்பாவை காணோம். அதற்காக வீட்டை கூட கவனிக்காமல் விடுவாயா?

ஸ்கூல் முடிஞ்சு எங்காவது போயிருவ? வீட்டுக்கு நைட் வந்து சாப்பிட்டு தூங்குவ. மறுநாள் தயாராகி ஸ்கூலுக்கு போவ? ஒரு மாசமா இப்படி தான இருந்த. உன்னோட ப்ரெண்ட்ஸ் பேச வருவதை கூட காது கொடுத்து கேட்டதில்லை.

கவின் ஒரு பக்கம் அவனோட சொந்த குடும்பத்தையே மறந்துட்டான். நீ ஒரு பக்கம். நித்தி ஒரு பக்கம் அந்த மரத்தடியிலிருந்து வரவேயில்லை. யாசு உன்னை சமாதானப்படுத்த உன் பின்னே சுற்றினாள். அபி ஸ்கூல் வீடு என்று இருந்தீர்கள்?

நட்பு முக்கியம் தான். அதுக்காக குடும்பத்தை விடலாமா? நீங்க அன்று செய்ததால் தான் அனைவரும் அனுபவிக்கிறீங்க?

நித்தி..கொஞ்சம் விழித்திருந்தால்..இப்ப அவளோட அம்மா இருந்திருக்க வாய்ப்புள்ளது. இப்ப அழுது என்ன பிரயோஜனம்? கவினுக்கு கொஞ்சமும் அறிவில்லை. வேலு தான் மாமான்னு தெரியுது. பேசணும்ன்னு தோணல? பெரியவங்க பிரச்சனையில புள்ளைங்க வரக்கூடாது. அவன் பேசி இருந்தால் வேலுவும் தாத்தாவும் தனியா கஷ்டப்பட்டு இருந்திருக்க மாட்டாங்க.

இந்த யாசுவுக்கு காதல்ன்னா என்னன்னு புரியாம உன் பின்னால சுத்தி ஸ்ரீயை காயப்படுத்தி அவளையே காயப்படுத்தி..என்ன சொல்ல?

அர்ஜூன் நீ என்ன பண்ண? உன்னோட பாட்டிகிட்ட சொல்லாம போயிட்ட. நீ போன காரணம் தெரிஞ்சாலும் சொல்லாம போனதால எப்படி கஷ்டப்பட்டாங்க தெரியுமா?

அகில்..உன்னை விட வேதனை உன் அம்மாவுக்கு. உயிர்த்தோழி உடன் இல்லை. அண்ணணாக பழகிய ஸ்ரீ அப்பாவும் இல்லை. ஸ்ரீ இல்லை. கணவனை காணோம். யோசித்தாயா? கத்தினான்.

உடைந்த உன் அம்மா பக்கம் இருந்தது துருவன். சின்ன பையனா இருந்தாலும் எல்லாமே செஞ்சான். சாப்பிடலைன்னா..ஊட்டி விடுவான். தூங்கும் வரை பக்கத்திலே இருப்பான். நீ நம் ஊரில் இருந்த போதே இதை செய்திருக்கான். நீங்க எல்லாரும் சேர்ந்து செய்வதை அவன் செய்திருக்கிறான் இப்பொழுதும். திடீர்ன்னு அவன் ஒருபொண்ணை காதலிச்சா..உன் அம்மாவை பற்றி யோசி.

இன்னும் உங்க அம்மா அன்று நடந்ததிலிருந்து வெளிய வரலடா. உன் அம்மாவுக்கு எல்லாமே துருவன் என்னும் போது..எப்படி துளசிய ஏத்துப்பாங்க? ஆனால் அவளை உங்கம்மா ஏதும் சொல்லலை. ஆனால் அவளை அவாய்டு பண்ணாங்க. அதையே துளசியால தாங்கிக்க முடியல. அழுதாள். எப்படி நாங்க அவளை துருவனிடம் விடுவது? மூவருமே கஷ்டப்படணும். அதுமட்டுமல்ல புவனாவை அவங்க ஏத்துக்க காரணம் இருக்கு. அவள் அம்மாவை நல்லா பார்த்துக்கிட்டா. அது போல் தன்னை பார்த்துக் கொள்வாள். தன் மகனை பிரிக்க மாட்டாள் என்று நினைத்திருக்கலாம். ஆனால் துளசி புவனா மாதிரி இல்லை.

வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள் துளசி. அவளுக்கு தான் எல்லாரும் வேலை செய்வாங்க. பிடிவாத குணம். இது நம் ஊரில் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இப்ப யாரும் துணைக்கு கூட இல்லாமல் குடும்பத்தை விட்டு தனியா யாருமில்லாமல் அனாதை போல் என்று வாய் உலற கண்ணீருடன் பிரதீப் அமர்ந்து அழுதான்.

தோளில் ராக்கியை போட்ட மறை உலவினான். இவர்கள் பேச்சை கவனித்தவன் வேகமாக அறைக்கு சென்று அம்மா..என்று வினிதா அம்மாவை எழுப்பி..தம்பிய பார்த்துக்கோங்க. நான் வாரேன் என்று விறுவிறுவென கிளம்பினான்.

பிரதீப் பேசும் போது அருகே தான் இருந்திருப்பான் மறை. பிரதீப் அழவும் அண்ணா..அதெல்லாம் பாப்பா சமாளிச்சுப்பா..என்று மறை பிரதீப்பை தேற்ற அவனை பார்த்தவாறே எழுந்தான்.

ஆமாம்..சமாளிப்பா. துளசி இதான் சொன்னா. இப்ப மாதிரி இல்லாம தெளிவா..எல்லாவிதத்திலும் சரியான பின் நானே வருவேன்னு சொன்னான்.

எங்கள உள்ளவே விடல. தீனா ரொம்ப அழுதான். இரண்டு நாள் கூட இருக்கேன்னு சொன்னான். அவள் கேட்கவேயில்லை. ரெண்டு கண்டிசன் போட்டா..ஒன்று.. துருவனுக்கு ஏதும் தெரியக்கூடாது என்று.. மற்றொன்று.. அவள் வந்த பின் தான் அண்ணனுக கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னா. ஆனால் இது எதுக்குன்னு தான் எனக்கு புரியலை.

அண்ணா…பாப்பா காரணமா தான் சொல்லி இருக்கு. பொண்ணுங்க இருவரும் சின்னவங்க..அதனாலும்..அப்புறம் அவள் உங்களுடன் சேர்ந்து இருக்கலைன்னாலும் கல்யாணத்தில் கலந்து கொள்ள தான்.

அப்ப..துளசி வரவே மாட்டாளா? உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா அவள் மறுபடியும் கிளம்பிடுவாளா?

அதை அவள் தான் சொல்லணும் என்று கண்ணீரை துடைத்து விட்டு.. நானும் தப்பு செஞ்சிருக்கேன். ஆனால் இனி சரி செய்து விடுவேன். அகில் நீ என்ன பண்ணப் போற?

நான் ஒன்று சொல்லவா? நமக்கு கிடைத்த அனைத்து உறவுகளும் மறைக்கு கிடைச்சிருந்தா எப்படி பார்த்திருப்பான் தெரியுமா? என்று அவன் தோளில் பிரதீப் கையை போட்டு..அவன் அம்மாவையே எப்படி பார்த்துக் கொண்டான். தெரியுமா? “யூ ஆர் தி பெஸ்ட்”. நீ யாருமில்லைன்னு நினைக்காதடா. உனக்கு அண்ணன் நான் இருக்கேன் என்றான். மறை கண்ணீருடன் பிரதீப்பை அணைத்தான். பின்னே ராக்கியும் வினிதா அம்மாவும் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்களை பார்த்த மறை ராக்கியிடம் வந்தான். அவன் பார்வை வேறிடத்தில் இருக்க..வினிதா அம்மாவை அங்கேயே பார்த்தார்.

என்ன இருக்கு? என்று பார்த்த மறை.

ஏ..துருவா..நீ என்ன பண்ற? என்று மறை அவனிடம் வந்தான். மற்றவர்களும் உள்ளே வந்து பார்த்தனர். துருவன் அழுது கண்கள் சிவந்து..தேம்பியவாறு அமர்ந்திருந்தான்.

அகில் துருவனிடம் வர..துருவன் அகிலை பிடித்து தள்ளி விட்டு எழுந்தான். அர்ஜூனும் பிரதீப்பும் துருவனை பிடித்தனர்.

பிரதீப்பிடம்..ஒரு வார்த்தை சொல்லி இருக்காலாமே? ஏன் இப்படி பண்ணீங்க? என நிற்க முடியாமல் ஒரு கையை நீட்டிவாறு மற்றொரு கையால் பிரதீப் சட்டையை பிடித்து கத்தினான்.

அவளுக்கு என்னிடம் சொல்லிட்டு போக தோணலையா? அப்ப.. கிளம்புறதுக்கு முன்னாடி தான் என்னை பார்க்க வந்திருக்கா. சக்கரைக்கு தெரியும்ல. அதான் அவன் என்னை பார்க்கவே வரல. அவளால எப்படி சிரிச்சுக்கிட்டே பேச முடிஞ்சதுண்ணா..என்று பிரதீப்பை கட்டிக் கொண்டு அழுதான்.

எனக்கு தெரியலண்ணா. எப்ப அவ மேல காதல் வந்ததுன்னு தெரியல. ஆனால் அன்று ஏதோ ஓர் உணர்வு. அவளை யாரும் தொடக்கூடாதுன்னு. அதான் அன்று என்னையும் மீறி முத்தம் கொடுத்திருக்கேன். சாரிண்ணா..அவ வர மாட்டாளா? நாளைக்கு வந்துருவான்னு நினைச்சேன். எனக்கு அவள பார்க்கணும் போல இருக்கு என்று கதறி அழுதான்.

துருவா..போதும். துளசி வருவா? நீ போ..உனக்கு இன்னும் கை சரியாகவில்லை அர்ஜூன் கூற, எப்ப வருவான்னு தெரியுமா அண்ணா? அவன் கேட்டான்.

ஏன் துருவா? உனக்காக தான போயிருக்கா. நீ காத்திருக்க மாட்டாயா? அர்ஜூன் கேட்டான்.

நான் காத்திருப்பேன் அண்ணா..எத்தனை வருசமானாலும் காத்திருப்பேன். ஆனால் அவள் தனியா கஷ்டப்படுவாளே?

யார் சொன்னா? என்று தீனா கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். உடன் ஆதேஷும் வந்தான். துருவனை பார்த்து..என்னாச்சுடா? கேட்டுக் கொண்டே அவனிடம் ஓடி வந்தான்.

துளசி கஷ்டப்பட மாட்டாளா? துருவன் பாவமாக கேட்க..மூஞ்சிய பாரு. நீ தான் சொல்லைல. அதான் அவளுக்கு கஷ்டமா இருக்கும்.

என்ன சொல்லலை? மாமா சார் புரியவேயில்லை. என்ன பேசுறீங்க? ஆதேஷ் கேட்டான்.

மாப்பிள்ள..இவனை தான் சொல்றேன். நீ துளசியிடம் காதலை சொல்லவேயில்லை.

என்ன அண்ணா நீங்க? ஆதேஷ் கேட்டான்.

ஆமா..அவள் பிரிந்து கஷ்டப்படப் போவதை கூட எண்ணவில்லை. நீ அவளிடம் காதலை கூறவில்லைன்னு தான் ரொம்ப வருத்தப்பட்டா.

நான் அவளிடம் பேசும் போது..என்று நிறுத்திய துருவனுக்கு அவர்களின் முத்தம் நினைவுக்கு வந்தது. நான் சொல்லலைன்னாலும் அவளுக்கு என்னை பிடிக்கும் என்று புரிய வச்சுட்டேன். அது அவளுக்கு தெரியும்.

என்ன புரிய வச்ச? தீனா கேட்க..தீனா இரு. துருவா..முதல்ல அறைக்கு போ..உடம்பு சரியாகாம இங்க என்ன பேச்சு? வா..என்று பிரதீப் அவன் கையை பிடித்தான். துருவன் அகிலை முறைத்துக் கொண்டே சென்றான்.

எப்படிடா தனியா வந்த? அர்ஜூன் கேட்டான்.

அண்ணா..நீங்க கீழே வேகமாக செல்வதை பார்த்தேன். இப்ப தான் அண்ணாவிடம் துளசி பற்றி கேட்டேன். கண்டிப்பா அவள பத்தி இருக்குன்னு தான் வந்தேன். துருவன் சோர்வுடன் இருக்க..அண்ணா..வழிய விடு என்று தீனா பிரதீப்பை நகர்த்தி துருவனை தூக்க வந்தான்.

என்ன பண்ணப் போறீங்க? வேகமாக நகர்ந்தான். அவன் விழுவதற்குள் தீனா துருவனை தூக்க அனைவரும் அவனை ஆவென பார்க்க, சார் என்ன பண்றீங்க? துருவன் கேட்க..வாய திறந்த கொன்னுடுவேன். என் தங்கச்சிய அழ வச்ச உன்னை அப்படியே கீழே போட்டிருவேன் பார்த்துக்கோ..தீனா கூற..அப்புறம் எதுக்கு பிடிச்சீங்க?

அவள் ஊருக்கு வரும் போது நீ உயிரோட இருக்கணும்ல. அதுக்கு உதவ தான்..

மாமா..சார், உங்க இருவரையும் பார்த்தா..எனக்கு வேற மாதிரி தோணுது. வேகமா போனா நல்லா இருக்கும் ஆதேஷ் கூற, அண்ணா..என்று துருவன் இறங்க முயன்றான்.

இருடா..என்று தீனா சீக்கிரம் போயிடலாம் என்றான். அவர்களுக்கு எதிரே வந்த பெண்மணி துருவனை பார்த்து சிரித்தார்.

அய்யோ..என் மானம் போகுதே கத்தினான் துருவன்.