அத்தியாயம் 82

துளசி ஹாஸ்பிட்டலில் இருந்து அழுது கொண்டே செல்ல..ரதிக்கு ஒருமாதிரி ஆனது. அவர் பிரதீப், தீனாவிற்கு போன் செய்ய..யாரும் எடுக்கவில்லை.

அபி அம்மாவிற்கு போன் செய்து கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை. அவளுக்கு துருவனை பிடிக்கும். அதான் அவனை அடிபட்டு பார்த்ததால் அழுதிருப்பாள் என்று சமாளித்தார். அவரையும் அபி அப்பாவையும் பார்த்து சொல்லி விட்டு தான் துளசி சென்றிருப்பாள்.

ஆதேஷ் அப்பாவிடம் பிரதீப் பேசி ஜானுவை தனியே அழைத்து வரச்செய்ய..ஹே..துளசி நீ எப்ப இங்க வந்த? ஜானு ஆர்வமுடன் கேட்டாள்.

அண்ணா..இந்த பிரச்சனை நேரத்தில் அவளை தனியே அழைச்சிட்டு வந்துருக்க? என்று ஜானு பிரதீப்பிடம் சாதாரணமாக பேசினாள். அவனுக்கு மகிழ்ச்சியானது.

என் மேல கோபம் போயிருச்சா?

கோபமெல்லாம் இல்லைண்ணா. தனியா இருக்க தோணுச்சு. அதான் வந்தேன்.

என்ன திடீர்ன்னு துளசிய கூட்டிட்டு வந்துருக்கீங்க? ஜானு கேட்க, ஆதேஷ் அப்பா துளசி முகத்தை ஆராய்ந்தார். துளசி ஜானுவை கட்டிக் கொண்டு.. நான் போயிட்டு வாரேன் ஜானு என்று கூறினாள்.

போறியா? எங்க போற?

அது தெரியல. ஆனால் வீட்ல இருந்தா அம்மா நினைவா இருக்கு. கொஞ்ச நாள் வெளிய தங்கலாம் என்று தான் கிளம்பிட்டேன்.

அண்ணா..இவ என்ன சொல்றா? தீனாவிடம் ஜானு கேட்டாள்.

அவன் கண்கலங்க..அவ இருந்துட்டு வரட்டும். வீட்ல இருந்தா அழுதுகிட்டே இருப்பா.

உனக்கு என்ன பைத்தியமா? தனியா உன்னால இருக்க முடியுமா? ஜானு கேட்டாள்.

கண்ணீர் வடிய அதை துடைத்த துளசி..முடியும் ஜானு. சில விசயங்கள் நம்மையும், நம்மால் சிலரையும் காயப்படுத்தும் என தெரிந்தால் விலகி இருந்தால் எல்லாம் சரியாகும். நான் என்னை சரி செய்யப்போகிறேன் என்று ஜானுவிடம் சொன்னாள் துளசி.

என்ன சொல்ற துளசி? எனக்கு புரியல. தெளிவா சொல்லு.

தெளிவா சொல்லணும்ன்னா..நான் இப்ப கிளம்புறேன். நீ வீட்ல எல்லாரையும் பார்த்துக்கோ..என்று பிரதீப்பிடம் துளசி கண்ணை காட்ட அவனும் தீனாவும் வண்டியில் ஏற துளசி மீண்டும் ஜானுவை அணைத்து விட்டு,

அங்கிள் எல்லாரிடமும் சொல்லிடுங்க..நான் போயிட்டு வாரேன் என்று ஆதேஷ் அப்பாவிடம் சொல்லி விட்டு வேகமாக ஏற, துளசி..என்று ஜானு அவள் கையை பிடிக்க அவள் கையை விடுவித்து கையசைத்து சென்றாள் துளசி.

ஜானுவிற்கு காலம் தாழ்ந்து தான் அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தது. ஏற்கனவே அர்தீஸூடன் நடந்த பிரச்சனையின் போது துருவன் துளசிக்கு முத்தம் கொடுத்ததை மற்றவர்கள் கூறி தெரிந்திருப்பாள்.

அங்கிள் போனை கொடுங்க என்று துகிராவிற்கு போன் செய்து கேட்க, ஜானு அவளை தொந்தரவு செய்ய வேண்டாம். அவள் வரும் போது வரட்டும் என்றாள்.

அண்ணி..அப்ப உண்மையிலே துருவனை துளசி காதலிக்கிறாளா? ஆம் என்று கூறி துகிரா துருவனுக்கு அவள் சென்றது தெரியாது. நீ சொல்லாத. உன்னோட அண்ணா பார்த்துப்பாங்க என்று போனை அணைத்து விட்டாள்.

ஏன் துளசி இப்படி பண்ற? என்று மனதில் எண்ணியவாறு அங்கேயே அமர்ந்தாள்.

என்ன ஜானு பிரச்சனை? துளசி முகமே சரியில்லை.

அங்கிள்..அவ போறா? தனியா போறா? இப்ப தான் எல்லாரும் குடும்பமா இருக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அவ போயிட்டா. ஒரு நாள் கூட தனியே இருக்க மாட்டாள். கஷ்டப்படுவா அங்கிள் என்று அழுதாள் ஜானு.

துருவன் ரதியிடம்..சக்கர சாயங்காலம் வாரேன்னு சொன்னான். வந்துட்டானா?

இல்லடா. நீ ஓய்வெடு என்று அவர் கூற, துருவன் புன்னகையுடன் அந்த பிரேஸ்லெட்டை வருடினான். ரதி அவனை பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். கவின் அம்மா துருவனை பார்க்க வந்தார். வந்து பார்த்து விட்டு ரதியுடன் வெளியே அமர்ந்தார்.

அந்த பொண்ணு ஊருக்கு போயிட்டாளாம்? கவின் அம்மா ரதியை பார்த்தார்.

எந்த பொண்ணு?

துளசி..என்று கவின் அம்மா கூறினார்.

ஊருக்கா? அவ எந்த ஊருக்கு போனா? சென்னைக்கா?

தெரியாது. அவ வீட்ல கூட யாருக்கும் தெரியாது. பிரதீப்புக்கு தெரிஞ்சவங்க இருக்கிற ஊர்ன்னு பேசுனாங்க.

அப்படியா?

என்னடி அப்படியா? ஒரு வார்த்தை அந்த புள்ளையிடம் பேசி இருக்கலாமேடி. உன்னை பத்தியோ உன் பையனை பத்தியோ எதுவும் பேசலை. அவ அம்மா நினைவா இருக்கான்னு அழைத்து போறதா சொல்லி இருக்காங்க.

இங்க பாரு. மத்தவங்க ஏமாறலாம். எங்கள ஏமாத்த பார்க்காத. அந்த புள்ளைக்கு அவளோட அப்பத்தா தான் எல்லாமே பார்த்துச்சு. அப்பவே காவேரி மேல சந்தேகம் இருந்துச்சு. ஆனா நாம என்னத்த பேசிறதுன்னு விட்டுட்டேன். அது சின்ன புள்ள..தனியா போய் எப்படி கஷ்டப்படப் போகுதோ? பண ஏற்பாடு எல்லாமே குடும்பம் பார்த்துட்டாலும் தனியா இருக்கிற கஷ்டம் உனக்கு தெரியும். உனக்கென்ன ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. போடி..என்று கவின் அம்மா எழுந்தார்.

கண்கலங்கிய ரதி..எங்க போயிருக்கான்னு ஏதாவது தெரிஞ்சா சொல்லு.

உன்னோட பையனுக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கோ..

நான் அவளை ஏதும் சொல்லலடி.

ஆனால் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு தான இருந்த? எல்லாரிடமும் பேசுன. அவாய்டு பண்ணேல.

அது வந்து..

விடு..புள்ளைய பார்த்துக்கோ என்று கிளம்பினார். ரதிக்கு பதட்டமாக இருந்தது.

சைலேஷ் நித்தியை விடுத்து ஹாஸ்பிட்டலுக்கு அவன் குடும்பத்தை  அழைத்து வந்தான். நித்தி அம்மாவிடம் கவின் அனைவரையும் அறிமுகப்படுத்தினான். அவரால் பேச முடியவில்லை. கண்ணீருடன் தலையசைத்தார்.

சைலேஷ் கையை பிடித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் நித்தியை பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை தரும் படி பேசினான். தாத்தாவும் பேச..கைரவிற்கு நித்தியை நினைத்து கவலையாக இருந்தது. அனிகாவும் உடன் வந்திருந்தாள். அவளுக்கும் தன் அம்மா நினைவு வந்து கைரவ் கையை பிடித்துக் கொண்டே நித்தி அம்மாவை கண்கலங்க பார்த்தாள். கைரவ் அவளை பார்த்து விட்டு அவள் கையை ஆறுதலாக இறுக பற்றினான். அவர்கள் அங்கேயே இருக்க..கவின் நித்தியை அழைக்க சென்றான்.

துளசி சென்ற சற்று நேரத்திலே குதிரை கனைக்கும் சத்தம் ஊரையே அதிர வைத்தது.

டேய்…மச்சான் சீக்கிரம் வா..பிளாக் ரகள பண்றான் வேலு நண்பன் வேலுவை அழைத்தான். ஊரார் அனைவரும் அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு முன் வந்தனர்.

இதயா அதிசயித்து அங்கிருந்த குதிரைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். காயத்ரியும் தன் மகனுடன் ஆர்வமாக கவனித்தனர்.

சீக்கிரம் குதிரையை அடக்குங்கள். இதுக்கு தான் கிழவி, அன்றே உன் பேரனிடம் காட்டுக்குதிரையை ஊருக்கு கொண்டு வாராதேன்னு சொன்னேன். கேட்டானா அவன்? என்று அர்ஜூன் பாட்டியை திட்டினார் ஒருவர்.

ஏய்…புரியாம பேசாத. ஏதோ பெரிய பிரச்சனை வரப்போகுது. அதான் இவன் கத்துறான். இதுவரை இவன் சத்தம் வந்ததா? இல்லை தான? ரதி மகனையும்..என் பேத்தியையும் அந்த பாவிகள் கடத்தும் போது தான் சத்தமிட்டான். அது போல் இன்று..அவர் பயந்தார்.

அர்ஜூன் பாட்டி வீட்டில் பிளாக், ஒயிட், கிளாரா, பிரவுனி என நான்கு குதிரைகள், மாடு, கோழி, ஆடுகள்..அனைத்தும் உள்ளது. பிளாக் முரட்டு குதிரை. அர்ஜூனை தவிர அப்பொழுது யாருக்கும் அடங்காது. அர்ஜூன் ஸ்ரீக்காக ஊரிலிருந்து செல்லும் முன்..வேலுவை பார்த்துக் கொள்ள சொல்லி இருப்பான். அர்ஜூன் வீட்டிற்கு வேலு பிளாக்கிற்காக தினமும் செல்வான். அவன் தான் குதிரைகளை பாதுகாத்து வந்தான். அவனுடன் அவன் நண்பர்களும் பார்த்துக் கொள்வார்கள். பிளாக் பக்கம் மட்டும் மற்றவர்கள் செல்லவே முடியாது. அவ்வளவு கோபக்காரன் பிளாக்.

தருணால் பக்கம் கூட செல்லவில்லை. பிளாக்கின் கனைப்பு ஊர் முழுவதும் எதிரொலிக்க..அங்கே வந்த ஒருவன்..மகனை தூக்கி வைத்திருந்த காயத்ரி மூக்கில் கைக்குட்டையால் அழுத்தி அவளை இழுத்து செல்ல..பிளாக் கயிற்றை இழுத்து இழுத்து…அவிழ்த்தான். அனைவரும் பயந்து ஒதுங்க..வேலு அங்கே வந்தான். அவன் பிளாக் மீது ஏற முயற்சிக்க அவனை தள்ளி விட்டது.

அவன் மீண்டும் மீண்டும் ஏற முயற்சிக்க..அவன் தள்ளி விட்டு ஓடினான். வேலுவும் குதிரைக்கு ஈடாக ஓடினான். அவனுக்கு ஏதோ தவறாக பட..இனி அவனை தடுக்க கூடாது. அவன் மீது ஏறி அவன் என்ன செய்யப் பார்க்கிறான் என்று அவன் நண்பர்களுக்கு ஓடிக் கொண்டே சிக்னல் கொடுத்தான். மற்ற நால்வரும் பைக்கில் வேகமெடுத்தனர். மைதானத்தில் ஓடிய பிளாக் திசை மாறியது. அவனுக்கு முன் வந்த வேலுவின் நண்பர்கள் தள்ளி தள்ளி நின்று முதலாதவன் கைகளை கோர்த்து தாழ்த்தி இறுக்கமாக வைத்திருந்தான். அடுத்தவன் கைகளை அதேபோல் கொஞ்சம் உயரமாகவும்..மற்றொருவன் அதற்கு மேலும். அடுத்தவன் அவன் தலைக்கு மேலும் வைத்தபடி நின்றனர். வேகமாக வந்த வேலு.. ஒவ்வொருவர் கையிலும் காலை வைத்து தாவி பிடித்து பிளாக் முதுகில் ஏறினான்.

வேலுவிற்கு மூச்சு வாங்க..பிளாக் கயிற்றை பிடித்து.. அவனை அடக்க முயன்றான். ஆனால் பிளாக் அவனை தள்ளி விட்டது. ஆனாலும் சமாளித்து..எங்க போறியோ என்னையும் கூட்டிட்டு போ..என்று வேலு கத்தினான். அவன் நண்பர்களும் பைக்கில் பின் தொடர, தருணும் மற்ற பசங்களும் வண்டியுடன் தொடர்ந்தனர். அதுவும் வேலு பேச்சிற்கு இணங்க செயல்பட்டது.

வேலுவின் செயலால் துகிரா, இதயா மற்ற பொண்ணுங்க ஆவென அவனை பார்த்தனர். அகல்யா பயந்து வாயில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். இதயா அம்மா..பாட்டியிடம், உங்க ஊரு பசங்களுக்கு சிறப்பான சக்தி எதுவும் இருக்கா? கேட்டார்.

பாட்டி அவரை முறைத்து விட்டு திரும்ப, காயத்ரியை காணவில்லை. ஊரார் அனைவரும் காயத்ரியை தேடினர். பிளாக் காயத்ரி கணவன் அவளையும் புள்ளையையும் ஆட்களுடன் தூக்கி சென்றதை பார்த்திருக்கும். அதனால் தான் கயிற்றை அவிழ்த்திருக்கும். அவர்களை நோக்கி தான் சென்று கொண்டிருக்கும்.

காயத்ரி இல்லை என்பதை வைத்து ஏதோ நடக்கப் போகுது..என்று ஊரார் பேச வெற்றி அனைவரிடமும் எல்லாரும் வீட்டுக்கு போங்க.

நாங்க பார்த்துக்கிறோம் என்று ஊர் பெரியவர்கள் கூற..என்னன்னு பாருங்கப்பா..சின்ன புள்ள வேற இருக்கு அர்ஜூன் பாட்டி கூற..நான் பார்த்துக்கிறேன்ம்மா என்று வெற்றியும் அவர்களுடன் கிளம்பினார்.

அகல்யா மட்டும் அங்கேயே நிற்க அர்ஜூன் பாட்டி அவளிடம்..தனியா என்னடி பண்ற? உள்ள வா என்று அழைத்தார். உன்னோட மாமனுக்கு ஒன்றுமாகாது. வா..என்று அழைத்து சென்றார்.

பிளாக் நேராக காட்டின் முன்பக்கம் வந்து நிற்க பேச்சு குரல் கேட்டது. நீ இரு..நாங்க வாரோம் என்று அவன் கீழிறங்க..அவனை இறங்க விடாது கனைத்தது. மற்ற குதிரைகளும் பாட்டி வீட்டிலிருந்து வேகமெடுத்தது.

பாட்டி பார்த்து விட்டு..ப்ளாக் இருக்கும் இடத்துக்கு தான் போகுது. பசங்க பார்த்துப்பாங்க என்று சொல்லி விட்டு உள்ளே வந்து..பிள்ளைக்கு என்னன்னு தெரியலையே? என்று புலம்பினார்.

ஏடி..எல்லாருக்கும் காபி கொண்டு வந்து குடுடி..என்றார்.

வேலு இறங்காமலிக்க குதிரை சத்தத்தில் காட்டினுள் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். பசங்களை பார்த்து விட்டு குதிரையை பார்த்து..இங்க பாருடா நான் கூட காட்டுக்குதிரையாக இருக்குமென்று நினைத்தேன். புல்லை சாப்பிட்டு சாணி போடும் குதிரை என்று கூறவும் பிளாக் கொந்தளித்தது. அவனும் பேசிக் கொண்டே அருகே வர..அவனை தள்ளி இரண்டு கால்களையும் உயர்த்தி கத்தியது.

ப்ளாக்..வேண்டாம் டா..அர்ஜூனை நீ பார்க்க வேண்டாமா? இவனுகள நான் பார்த்துக்கிறேன்.

பிளாக் கால்களை இறக்கியது. ஆனால் வேலுவை கீழே இறங்க விடாமல் அவர்களை பார்த்து கனைத்து..மீண்டும் காலை துக்க,

டேய்…இது காட்டுக்குதிரை ஒருவன் கூற மற்றவன் துப்பாக்கியை எடுத்தான்.

இங்க என்ன பண்றீங்க? வேலு நண்பன் கேட்க, நாங்க என்ன செஞ்சா உனக்கென்ன? வந்த வழியிலே போயிருங்க. இல்ல புணமா தான் போவீங்க அவர்களுள் ஒருவன் மிரட்டினான்.

டேய்..காட்டுக்குதிரையில எப்படிடா உட்கார்ந்திருக்க?

தெரியுதுல..என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

தருண் போன் ஒலிக்க..இதயா தான் போட்டிருந்தாள். இவள் வேற என்று போனை தருண் வைக்க..மீண்டும் போட்டாள்.

கட் பண்றேன்ல. எதுக்கு இப்ப போடுற?

காயத்ரிக்காவும் பையனையும் காணோம்.

வீட்ல நல்லா பார்த்துட்டீங்களா?

பார்த்துட்டோம்..அவங்கள காணோம்.

சரி. நீ வை என்று தருண் அவர்களிடம் காயத்ரி அக்கா எங்கடா?

உனக்கு அக்கா இருக்காங்களா? எங்களுக்கு தெரியாதே? கிண்டல் செய்ய..பிளாக் உன் வேலையை காட்டு என்று வேலு கூறிய மறு நிமிடம் தூர சென்று விழுந்தான் அவன்.

பிளாக் அவனை சீற்றத்துடன் முட்டி தள்ளினான். தருணுக்கு அனு நினைவு வந்தது. அவளுக்கு நடந்தது போல் ஏதும் நடக்கக்கூடாதுன்னு குட்டிப்பையன் எங்கன்னு சொல்லுங்க? என்று ஆவேசமாக சத்தமிட்டான்.

வேலு அவனை பார்த்து விட்டு பிளாக்..உனக்கு ஏதும் ஆகக்கூடாது. நீயும் யாரையும் ஏதும் செய்து விட்டால் உன்னை வீட்டில் வச்சிருக்க முடியாது. லைசன்ஸ் கேன்சலாகி விடும். நீ வீட்டுக்கு போ..நாங்க பார்த்துக்கிறோம் என்று அதனிலிருந்து கீழே இறங்கினான்.

பிளாக் மெதுவாக சென்று கொண்டிருந்தது. கீழே விழுந்தவன் வாயில் இரத்தத்துடன் எழுந்து பக்கத்தில் இருந்தவன் துப்பாக்கியை எடுத்து பிளாக்கை குறி வைத்தான். வேலு நண்பன் அவனை தடுத்து ..அவன் கையிலிருந்த துப்பாக்கியை அவன் கைக்கு கொண்டு வந்தான்.

சூட் பண்ண தொடங்கினான். அனைவரும் சிதறி ஓட காயத்ரி கணவன் அவனது மகன் ராகேஷ் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வந்து..

இங்கிருந்து போறீங்களா? இல்லை இவனை கொல்லவா? மிரட்டினான்.

உன்னோட புள்ளைய விட உனக்கு சொத்து, பணம் முக்கியமா போச்சா? தருண் சினத்துடன் கத்தினான். அவன் கையை அழுத்திய வேலு.. பையனை முதல்ல காப்பாத்தணும். அவன் ஏதும் செய்து விடாமல் அமைதியா இரு என்று மெதுவாக கூறினான்.

இப்ப என்ன நாங்க போகணும் அவ்வளவு தான? வாங்கடா போகலாம் என்று வேலு அனைவரிடமும் கண்ணை காட்டினான். அனைவரும் திரும்பி செல்ல..அவனும் மகனுடன் திரும்பினான். அந்நேரம் சுதாரித்த வேலு காயத்ரி கணவனை அடித்து தள்ளி விட்டு ராகேஷை அவன் பக்கம் தூக்கிக் கொண்டு ஓடி வந்து தருணிடம் கொடுத்து சீக்கிரம் போடா என்று கத்தினான்.

அண்ணா,காயத்ரிக்கா.. நான் பத்திரமாக அழைச்சிட்டு வாரேன்..நீ போ..சீக்கிரம் என்று அவன் கூறிக் கொண்டிருக்க..காயத்ரி கணவன்..பயங்கரமாக கத்தினான். மற்ற குதிரைகள் அங்கே வந்தது.

ஒயிட்ல புள்ளைய தூக்கிட்டு போ..வேலு நண்பன் கூறி விட்டு, ஒயிட்..போ..இருவரையும் பத்திரமா வீட்ல சேர்த்துருங்க என்றான்.

தருண் ராகேஷை தூக்கி ஏற, குட்டிப்பையனோ அம்மா..அம்மா..  அம்மா… என்று அழுது கொண்டிருந்தான். ஒயிட்டை நகர விடாமல் தடுத்த தருண் கீழே இறங்கினான்.

நீ போடா..வேலு சத்தமிட..இல்ல..அக்கா இல்லாமல் நான் போகமாட்டேன். ஏற்கனவே வினிதாக்கா இல்லாமல் அனு எப்படி கஷ்டப்படுகிறாள். அக்காவை பாதுகாப்பாக மீட்டெடுக்காமல் போகமாட்டேன் என்று ராகேஷிடம் அம்மாவை பார்க்க போகலாமா? அழாதே என்று அணைத்தான். குட்டிப்பையன் அழுகை குறைந்து தருணை அணைத்துக் கொண்டு..

அம்மா…என்று கையை ஓரிடம் காட்டினான் ராகேஷ். அண்ணா..நீங்க எல்லாரும் அவர்களை சமாளிங்க. நான் போய் பார்க்கிறேன் என்று ஓர் அடி தருண் எடுத்து வைக்க..அவன் காலடியில் தோட்டா பாய..நகர்ந்து பையனுடன் கீழே விழுந்தான் தருண்.

எழுந்த தருண் துப்பாக்கி வைத்திருந்த வேலு நண்பனிடம் வந்து அதை வாங்கி அவனிடம் வரும் ஆட்களை சுட்டுக் கொண்டே முன்னேற.. அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். வேலுவிற்கும், காயத்ரியின் கணவனுக்கும் சரியான சண்டை நடந்தது. அங்கே வந்தனர் வெற்றியும் அவர் ஆட்களும். பிள்ளையை தூக்கிக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் சென்ற தருணை பார்த்த வெற்றி..அவன் பின்னே சென்றார்.

வெற்றி ஆட்கள் உதவ காயத்ரியின் கணவனை சேர்த்து பிடித்தனர். போலீஸாரும் அங்கே வந்து அவனையும் அவன் ஆட்களையும் பிடித்தனர்.

ஆனாலும் உள்ளே நிறைய ஆட்கள் இருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் சில தடியன்கள் பேசிக் கொண்டிருந்தனர். தருண் மறைந்து நின்று கேட்க..வெற்றியும் அவன் அருகே வந்தார். பயந்து துப்பாக்கியை நீட்டினான் தருண்.

நான் தான்ட்டா..என்று அவர் கூற..அவன் ஷ்..என்றான்.

ஒரு சிறிய கட்டிடத்தில் போதை மருந்தை தயார் செய்து கொண்டிருந்தனர். அதை பார்த்த வெற்றி..இதனால் தான் பிளாக் சத்தமிட்டு கொண்டிருந்திருக்கிறான். ஆனால் நேற்று கூட இங்கே யாருமில்லை. எதுவுமில்லை. எப்படி இன்று கொண்டு வந்திருக்கிறார்கள்? எப்படி இது நடந்திருக்கும் என்று சிந்தனையுடன் நின்று கொண்டிருந்தார். அவர்களை பார்த்து ஒருவன் வந்து..சத்தமிட்ட முனைந்தான். தருண் துப்பாக்கியை நீட்ட..அவனை தடுத்த வெற்றி அவன் வாயை அடைத்து அவன் கழுத்தை திருப்ப..அவன் அங்கேயே சரிந்தான். குட்டிப்பையன் இதை பார்த்து பயந்து சத்தமிட்டான். அனைவர் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பி அங்கு வந்தனர். அதற்குள் வெளியே போலீஸார் அனைவரையும் இழுத்து செல்ல வெற்றியின் ஆட்களும் அவர்களுடன் சென்றனர். இரு போலீஸ்காரர்களுடன் வேலுவும் அவன் நண்பர்களும் சுற்றி வளைத்தனர்.

இரு கும்பலுக்கு சண்டை நடந்து போதை மருந்தை கைப்பற்றி அவர்களையும் இழுத்து சென்றனர். ஆனால் காயத்ரியை காணவில்லை. அப்பொழுது ராகேஷ் கைகாட்டியது போதை மருந்து தயாரித்த இடம். அப்படியென்றால் அக்காவும் உள்ளே தான் இருப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளே காலை எடுத்து வைக்க அவ்விடம் வெடித்து சிதறியது.

அனைவரும் பதறி உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே காயத்ரி இருந்த தடயம் மட்டும் இருந்தது. ஆனால் அவர் இல்லை.

அக்கா..செத்துட்டாங்களோ? என்று தருண் அழுதான்.

ராக்கி..என்று முணங்கும் சத்தம் வெளியே கேட்டது. வேலு சென்று பார்க்க..மரத்தின் ஓர் ஓரத்தில் போதையில் வாயில் இரத்தம் ஒழுக..சரிந்து கிடந்தாள். கை, கால், முகத்திலும் அடிப்பட்டு காயத்துடன் பரிதாபமாக இருந்தாள். மற்றவர்களும் அங்கு வந்தனர். வேலுவின் நண்பன் தண்ணீர் எடுத்து காயத்ரி முகத்தில் தெளிக்க..அவள் எழவில்லை. ராக்கி என்று முணங்கிக் கொண்டே இருந்தாள்.

அவன் அவர்களை தூக்கிக் கொண்டு..வேகமாக செல்ல வேண்டும் என்று வேலுவை பார்த்தான். தருண் கையிலிருந்து துள்ளி இறங்கி அம்மா..அம்மா..என்று ராகேஷ் வேலு நண்பன் காலை பிடித்துக் கொண்டு அழுதான்.

அவனை தூக்கிய தருண்..அம்மாவுக்கு ஒன்றுமில்லை. அண்ணா..சீக்கிரம் கிளம்பணும் என்று வேலு நண்பனிடம் வந்தான். வெற்றி வந்த காரை பார்த்து இருவரும் அவரை பார்த்து..அய்யா..நாங்க பைக்கிலே போகிறோம் என்றனர்.

இல்லடா..அது பாதுகாப்பு இல்லை. பேசுறதை விட்டு காரை வேகமாக எடு. அது பழைய பிளஸ்சர் கார்.

வேலுவின் நண்பன் காயத்ரியை உள்ளே போட்டு டிரைவர் சீட்டில் அமர, தருண் ராகேஷூடன் ஏறினான். பிளாக் சீக்கிரம் வாடா..என்று அழைக்க அது வந்தது. அதில் ஏறி போலீஸ் அரெஸ்ட் பண்ணவங்களை பின் தொடர்ந்தான் வேலு. அவர்களை ஜெயிலில் போட்ட பின் ஹாஸ்பிட்டலுக்கு வேலு கிளம்பினான்.

வேலுவின் நண்பன் ஹாஸ்பிட்டல் வந்ததும் காயத்ரியை தூக்கி உள்ளே செல்ல..தருணும் ராகேஷும் உள்ளே சென்றனர். வேலுவின் மற்ற நண்பர்களும் அவர்கள் பின் வந்திருக்க..ராகேஷ் அழும் சத்தம் கேட்டு அவனை சமாதானப்படுத்தினர்.

காயத்ரியை தூக்கி வந்த வேலு நண்பன் மறை மட்டும் தனியே அமர்ந்திருந்தான். வேலுவும் அங்கே வந்து அவர்களை பார்த்து விட்டு மறையிடம் அமர்ந்தான்.

என்னடா ஏதாவது சொன்னாங்களா?

இல்ல. பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று ராகேஷை பார்த்தான். சிறு புன்னகையுடன் வேலு அவனை பார்க்க..டாக்டர் வெளியே வந்து அவங்களுக்கு கொக்கைன் அதிகமா கொடுத்திருக்காங்க. உயிருக்கு ஏதும் பாதகமில்லை. ஆனால் அவங்க இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கட்டும் என்றார்.

தருண் நிம்மதி பெருமூச்சுவிட்டான். அப்பாடா..இந்த அக்காவாது உயிர் பிழைச்சுட்டாங்களே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தான். இருவரும் அவனை பார்த்தனர். அவர்களிடம் விமலாவிற்கு நடந்ததை கூறினான் தருண்.

எல்லாமே ஓ.கே டா? உங்க மேம் எப்படி?

இன்பா மேம்மா?

ம்ம்..அவங்கள தான் என்று வேலு கேட்டான்.

அவங்கள எதுக்குண்ணா கேக்குறீங்க?

அவங்களுக்கு உதவிக்கு அர்ஜூன் என்னை கூப்பிட்டதா பிரதீப் அண்ணா சொன்னாங்க.

கங்கிராட்ஸ் அண்ணா..ரொம்ப திறமையானவங்க. ஆனால் அவங்கள பேசி ஜெயிக்க முடியாது. அவங்களா அமைதியா இருந்தா தான்..என்றவன் இன்பா அப்பா, அவளை தொந்தரவு செய்யும் விக்கி பற்றியும் கூறினான்.

ம்ம்..

என்னண்ணா..நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்கிறீர்களா?

உங்களுடனா?

ஆமாண்ணா என்று யாரெல்லாம் இருக்காங்க என்று கூறினான்.

அர்ஜூன் திறமைசாலி தான். அவனை சின்ன பையனா பார்க்கும் போது..அது பிளாக்கை வீட்டிற்கு கொண்டு வந்தான் பாரு. அவன் செயலில் நான் வியந்து பார்த்தேன்.

என்ன திறமை இருந்து என்ன பிரயோஜனம்? ஸ்ரீ இப்ப கூட அவனை ஏத்துக்க மாட்டிங்கிறா?

அந்த பொண்ணுக்கு என்னடா பிரச்சனை? மறை கேட்டான்.

அண்ணா..அதை விடுங்க. நீங்க அக்காவ பார்த்துக்கோங்க. நான் ராக்கிய அர்ஜூன் பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டி போறேன். அவனை பாருங்க..அழுது அழுது தூங்கிட்டான்.

அதெல்லாம் வேண்டாம்டா. அவன் அம்மாவை தேடினா என்ன செய்றது? அந்த பொண்ணும் தேடினாங்கன்னா? அவன் இங்கே இருக்கட்டும் என்றான் மறை.

அண்ணா..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறம் புவியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் வந்ததிலிருந்தே வீட்டுக்கு போகலை என்று தருண் கண்கலங்கினான்.

வேலு அவன் தோளில் கை வைக்க..கஷ்டமா இருக்குண்ணா. எப்படிண்ணா அவங்க எங்கள தனியா விட்டு போகலாம்? தருண் அழுதான்.

டேய்..உனக்காவது புவனா இருக்கா. இவன பாரு..யாருமேயில்லாம தனியா வாழ்ந்துகிட்டு இருக்கான். எத்தனை வருசமாச்சு? யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும்….யாரும் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான் வேலு கூற மறை எழுந்து சென்றான்.

நில்லுடா..வேலு அழைக்க, அவனை போன் அழைத்தது.

சொல்லுங்க மாமா..என்றான்.

மறை நின்று வேலுவை பார்த்தான். வெற்றி வந்துட்டார். நீங்க எங்க இருக்கீங்க?

ஹாஸ்பிட்டல்ல மாமா..

சீக்கிரமா வந்துருங்க இல்லை உங்கள காப்பாத்த யாராலும் முடியாது.

என்ன ஆச்சு மாமா? எதுவும் பிரச்சனையா?

ஆமாம் மாப்பிள்ள. உங்களுக்கு தான்..சீக்கிரம் வாங்க. வேப்பங்குலயே இல்லாம பாப்பா ஆடுவா. உங்க மேல ரொம்ப கோபமா இருக்கா..

மாமா..என்னை காப்பாத்தி விட்டுருவீங்கள?

அய்யோ..என்னால முடியாது. நீங்க தான் பார்த்துக்கணும். சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று போனை துண்டித்தார்.

வேலு மறையிடம்..நீ பார்த்துக்கிறியா? பாப்பு என் மேல கோபமா இருக்காலாம் வேலு கூற..அவனுகள பார்த்துக்க சொல்லு மற்ற நண்பர்களை கை காட்டி நான் கிளம்புறேன் என்றான் மறை.

வேலு அவர்களை பார்க்க..இப்ப தான் அவங்களுக்கு பிரச்சனையில்லைன்னு சொல்றாங்கல்ல. நாங்க கிளம்புகிறோம் என்று பதில் எதிர்பார்க்காது மற்றவர்கள் ஓடி விட்டனர். தருண் இருவரையும் பார்த்தான்.

சரி..நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனா பெரியவங்க யாருமில்லாமல் நான் எப்படி உள்ள போறது?

நான் ஆள் அனுப்புகிறேன் அண்ணா..குட்டிப்பையனை பார்த்துக்கோங்க. அக்கா இப்பொழுதைக்கு எழ மாட்டாங்க தருண் கூறிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் குட்டிப்பையனை மறையிடம் கொடுத்தான். அனுவிற்கும் ராகேஷிற்கும் ஒரே வயது தான் வித்தியாசம்.

மறை கைகள் நடுங்க ராகேஷை வாங்கினான். வேலு அவன் கையை பற்றி நடுக்கத்தை குறைத்து எல்லார் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது என்று அவனை அணைத்து இருவரும் கிளம்பினார்கள். வெளியில் நின்று மறை காயத்ரியை பார்த்தான்.

சார்..இதை வாங்கிட்டு வாங்க. சைடு எபெக்ட் வராமலிருக்கும் என்று நர்ஸ் ஒரு சீட்டை நீட்டினார்.

நானா?

நீங்க தான சார் துணையா இருக்கீங்க? நீங்க தான் வாங்கணும்?

அவர்கள் பேச்சில் ராகேஷ் விழித்தான். அம்மா..அம்மா.. என்று அவன் அழ..சார் பையனுக்கு பசிக்குது போல..பாருங்க மணி நேரமாயிருச்சு..

என்ன சாப்பிட கொடுப்பாங்க? என்று மறை நர்ஸிடம் கேட்டான்.

சார்..சின்ன பசங்க நைட் இட்லி தான் சாப்பிடுவாங்கன்னு கூறிவிட்டு மருந்து சீக்கிரம் வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் அவங்களுக்கு கொடுக்கணும் என்றார்.

ராகேஷ் கண்ணீருடன் மீண்டும் அவன் அம்மாவ தேட..வெளியிலிருந்து அவனிடம் காண்பித்த மறை. அம்மாவுக்கு மருந்து வாங்கலாமா? என்று அவனிடம் பேச..

சார் இப்படி பேசினா? பையன் மேலும் அழுவான். அவங்க தூங்குறாங்கன்னு சொல்லி பேசுங்க என்று நர்ஸ் அவனை வாங்கி சமாதானப்படுத்தினார். மறைக்கு ராகேஷின் அழுத முகம் அவனையே நினைவு படுத்தியது.

சார்..வாங்கிட்டு வாங்க..என்று நர்ஸ் ராகேஷிடம் பேசிக் கொண்டிருக்க..மறை வந்து பார்க்கும் போது..அந்த நர்ஸையும் பையனையும் காணோம்.

அவன் தேட..ராகேஷ் தனியா ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். வேகமாக வந்து அவனை தூக்கிய மறை..எதுக்கு அழுற? நர்ஸ் எங்க? கேட்டான்.

அவங்க..விட்டு போயிட்டாங்க. அம்மா..அம்மா..அவன் ஓரிடத்தை கை காட்டினான். காயத்ரி இருந்த அறை காலியாக இருக்க..ராகேஷை பின்னிருந்து கத்தியால் ஒருவன் தாக்க வந்தான். மறை அவனை காக்க அவன் கையில் காயம் பட்டு இரத்தம் வடிந்தது. அம்மா..என்று குட்டிபையன் காட்டிய இடத்தை பார்த்தான். அந்த அறையின் வெளிப்புறக் கதவின் மூலம் காயத்ரியை அந்த நர்ஸ் பொண்ணும் மூவரும் ஸ்ரெச்சரிலிருந்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஏய்..என்று சத்தமிட்ட மறை வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவன் சத்தத்தில் அவ்வூராரும் வந்தனர். அவள் கண்களை மெதுவாக திறந்தாள். காயத்ரியை ஏற்றி வண்டியில் அனைவரும் அவளுடன் தப்பிக்க முயற்சிக்க..கையால் வண்டியை நகர்த்த விடாமல் இறுக்கமாக பிடித்தவாறு ராகேஷுடன் மறை கோபக்கனலுடன் நின்றிருந்தான். அவன் கையில் தன் ராக்கி இருப்பதை பார்த்து எழ முயன்றவளை பிடித்திருந்தனர் இருவர்.

மறை பக்கத்தில் வந்த ஓர் அம்மாவிடம் ராகேஷை கொடுத்து விட்டு, அவள் இருந்த ஸ்ரெச்சரை பிடித்து இழுக்க..அவர்கள் விடுவதாக இல்லை. வண்டியை எடுக்க…ஸ்ரெச்சரை விடுத்து வண்டியை பிடித்தான். அவன் ஏறுவதற்குள் வண்டி எடுக்க..அவனது தொடைப்பகுதியிலிருந்து தரை உரசிக் கொண்டு வர..அங்கிருந்தவர்கள் கத்தினர். இளைஞரில் ஒருவன் அவனுக்கு உதவ..வண்டியை முந்திக் கொண்டு வந்து கார் டிரைவர் சீட்டில் இருப்பவனை பிடித்து இழுக்க அவன் கீழே விழுந்தான். வண்டி கண்ணுமுன்னு தெரியாமல் ஓட..காயத்ரியை பிடித்து இருந்தவர்கள் அவளை விட..காரை விட்டு ஸ்ரெச்சர் வெளியே வந்தது. சரிவான பாதையில் நிற்காமல் ஓடியது. அதன் பின்னே ஓடி வந்த மறை அப்படியே பின்னிருந்து நிறுத்த முடியாது என்று ஒரே தாவலில் முன் வந்து ஸ்ரெச்சரை பிடித்தான். ஆனால் நிறுத்த கஷ்டமாக இருக்க..காயத்ரியை பார்த்தான். அவள் கண்களை இறுக மூடியவாறு இருந்தாள். வேறு வழியில்லாமல் அவளை எழுந்திருக்க முயற்சி செய்யுங்க என்று கத்தினான்.

அவன் உருவமே சரியாக அவளுக்கு தெரியவில்லை. அவள் கண்ணை திறந்து கண்ணை கசக்கினாள்.

இதுக்கு மேல முடியாது என்று அவனது மொத்த பலத்தையும் உபயோகித்து அவளை வந்த வழியிலே தள்ள ஓரிடத்தில் ஸ்ரெச்சர் நின்று காயத்ரி கீழே விழ, அவன் அவளை பிடித்து இருவரும் உருண்டனர். சரிவான பகுதி என்பதால் பள்ளம் இருக்க வாய்ப்புள்ளது என்று அவளை நிறுத்த அவள் இடையில் கையிட்டு அவளை ஒரு கையில் பிடித்து மறு கையில் மரத்தின் கிளை கையில் படுகிறதா? என்று பார்த்துக் கொண்டே வந்தான். கையில் ஒன்று சிக்க அதை பிடித்து நிறுத்தி மேலேறினான். அவளுக்கு சுயநினைவேயில்லை. ராக்கி..என் செல்லம்..என்று முணங்கிக் கொண்டே அவன் கன்னத்தில் முத்தமிட்டு மயங்கினாள். மறை அதிர்ந்து அவளை பார்த்தான்.

அவர்களுக்கு உதவிய இளைஞன் பலருடன் வந்திருந்தான். அண்ணா.. கையை கொடுங்க..அவன் கையை கேட்க, இவன் அவளையே பார்த்தான்.