அத்தியாயம் 78

வீட்டுக்கு வந்ததும் வேலு அகல்யாவை அவளது அறையில் படுக்க வைக்க, அனைவரும் அவளை சுற்றி அமர்ந்திருந்தனர் இரவு முழுமையும். அர்ஜூனும் கவினும் வீட்டிற்கு வர..தாரிகா கவினை அணைத்துக் கொண்டாள்.

அண்ணா…என்ன தான்டா பிரச்சனை?

நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். நாளையும் கம்பெனிக்கு போகணும் என்று ஸ்ரீயிடம் சொல்லு என்று கேட்டான். கவின் தாரிகாவை விலக்கி ஸ்ரீயை பார்த்தான்.

சொல்லு ஸ்ரீ? ஏன் என்னை ஹக் பண்ண?

பயத்துல பண்ணிட்டேன்.

இல்லையே? அப்படி தெரியலையே?

அர்ஜூன்..தேவையில்லாமல் கனவ வளர்த்துக்காத.. ஒன்றுமில்லை என்று அவள் அறையினுள் நுழைந்து கொண்டாள்.

துளசி தூங்க முடியாமல் தவிக்க..அவளருகே படுத்திருந்த அப்பத்தா அவளை அவர் பக்கம் திருப்பினார். கஷ்டமா இருக்காடி..என்று அப்பத்தா கேட்க, அவள் அழுதாள்.

அப்பத்தா..அம்மா இப்படி இருப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. அன்று அவங்க பேசியது ஓடிகிட்டே இருக்கு. அவங்களுக்கு நாங்க செத்தா கூட பிரச்சனையில்லையாம். ஆனால் இப்ப அவங்க இல்லை என்று அழுதாள்.

நான் அவளுடன் இருந்து கூட எனக்கு தெரியாமல் போய் விட்டதே..என்று அவரும் அழுதார். பின் நீ அழாதடி..உனக்கு அந்த பயல பிடிச்சிருக்காடி? அவள் மௌனமாக இருந்தாள். அவர் அவளை உற்று பார்த்தார்.

இப்பெல்லாம் இது சாதாரணமாக போய் விட்டது. அவனுக்கு உன்னை பிடிக்குமா?

அப்பத்தா..நான் தான் ஊருக்கு போகப் போறேனே என்று வருத்தமாக சொன்னாள்.

நான் வேண்டுமானால் எல்லாரிடமும் பேசவா?

இல்ல அப்பத்தா. அண்ணா சொல்றது தான் சரின்னு படுது. நான் போகிறேன். எனக்கு ஆன்ட்டியின் நிலை புரியுது. என்னால் புவி மாதிரியெல்லாம் இருக்க முடியாது.

இன்னும் என்னடி புவி? அண்ணின்னு சொல்லணும் அப்பத்தா கூற, அவங்களுக்கு தான் ஒருமாதிரி இருக்கும் அதனால் தான் அப்பத்தா.. கூப்பிடலை.

நல்லா சாப்பிடு. நல்லா படி..கொஞ்ச நாளுக்கு பிறவு கூட நீ இங்க வர நான் பேசுறேன். உன்னோட சத்தமில்லாம வீடே கழையிழந்து போயிரும்டி என்று கண்ணீர் விட்டார் அப்பத்தா. அப்பத்தா..என்று அவரை அணைத்துக் கொண்டாள் துளசி.

நீ கல்யாணம் பண்ணிக்காம உன்னோட அண்ணனுக கல்யாணம் பண்ணிக்க மாட்டானுக. அதனால சீக்கிரம் வந்துருடி..அந்த அழகுபுள்ள..பாவம்டி. நம்ம புள்ளைய நம்பி..அவ படிக்கிறதை விட்டு வந்திருக்கு.

அப்பத்தா..நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன். நீ யாரை பத்தியும் கவலைப்படாம இரு. இப்ப தூங்கு என்று அவர் மீது கையை போட்டுக் கொண்டு தூங்கினாள் துளசி. அவள் வீட்டில் இருக்கும் கடைசி இரவாயிற்றே. மனதில் வலியை மறைத்து அப்பத்தாவிற்காக கஷ்டப்பட்டு தூங்கினாள்.

எட்டுத்திக்கும் வெய்யோன் ஒளி பரவ, கைரவ் எழுந்து தயாரானான். மணி எட்டை தாண்டி இருக்க..அவன் போன் அலறியது. எடுத்தான் போனில் வேலன் பேசினான்.

சீக்கிரம் அணில்குட்டிட்ட போனை கொடு என்றான்.

உனக்கு என்னதான்டா பிரச்சனை? கத்தினான் கைரவ்.

ப்ளீஸ் கொடு. இதுக்கு மேல் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கெஞ்சினான்.

நீ கெஞ்சுறியா? என்று பேசிக் கொண்டே அனிகா அறைக்கதவை தட்டினான். அவள் கதவை திறந்து அவனை பார்த்து நின்றாள். அவளிடம் போனை நீட்டினான்.

டேய்..இங்க இருக்கான்டா என்று ஒருவன் கத்தும் சத்தம் லேசாக கேட்டது கைரவிற்கு.

அனிகா அவனிடம் பேச்சு கொடுக்க, அவன் அச்சத்தத்தை மறந்தான்.

யாரு?

நேற்று வந்தான்ல அவன் தான். உன்னிடம் பேசணுமாம்? இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொன்னான் என்று சொன்னவுடன் போனை வாங்கினாள் அனிகா.

அவன் பேசி விட்டு கைரவ் யோசனையோடு நிற்க, என்ன? என்றாள் அனிகா போனில் கோபமாக.

அணில்குட்டி..என்னை ஒரு முறை மட்டும் பிடிக்கும்ன்னு சொல்லு ப்ளீஸ் என்றான்.

அவன் கூறிய ப்ளீஸ் சொல்லை கவனிக்காது..பிடிக்குன்னு சொல்லு என்றவுடன் அவளுக்கு சினம் கூடியது.

பிடிக்கும்ன்னு சொல்லணுமா? நேற்று தான பேசினேன். உனக்கு கொஞ்சம் கூட சுரனையே இல்லையா? என்று திட்டினாள். அந்த பக்கம் சத்தமில்லை.

அவன் பேசியது, இப்பொழுது அனிகாவிடம் பேசியது என சிந்தித்தவன் அனிகாவிடமிருந்து போனை பிடுங்கினான் கைரவ். நீ எங்க இருக்க? கேட்க..பிடிடா அவனை என்று சத்தம் கேட்க…

என்னால இனி என்னோட அணில்குட்டிய பார்க்கவே முடியாது. ப்ளீஸ் ஒரு தடவை மட்டும் என்னை பிடிக்கும்ன்னு சொல்ல சொல்லு..அவன் கெஞ்சினான்.

எங்க இருக்க? என்று கைரவ் கத்த,..அவனது அலறல் சத்தம் கேட்டது. அனிகா கைரவிடம், என்ன ஆச்சு? என்று கேட்டாள்.

நீ இரு. நான் வாரேன் என்று மாடியிலிருந்து அவன் கீழே குதிக்க..கையூ என்று அனிகா கத்தினாள். கீழே பாதுகாப்பாக குதித்தவன் சைலேஷ் அறைக்கதவை தட்டினான்.

அவன் கதவை திறக்க, உள்ளே நித்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அண்ணா..உன்னோட போன் எங்க? என்று பதட்டமாக கேட்டான்.

என்னாச்சுடா? சைலேஷ் கேட்டான். சொல்கிறேன் அண்ணா..என்று சைலேஷ் போனை எடுத்து மாதவ் எண்ணை டயல் செய்தான்.

நான் உங்களுக்கு அனுப்பிய எண் இருக்கும் இடத்தை கண்டறிந்து போலீசை அங்க அனுப்புங்க அண்ணா..சீக்கிரம். அவங்க ஒருத்தன கொல்ல விரட்டுறாங்க. அந்த இடத்தை சொல்லுங்க என்று கைரவ் கூற, படியில் இருந்து ஓடி வந்த அனிகா இதை கேட்டு புரிந்து சிலையாக நின்றாள்.

கைரவ் சத்தத்தில் அனைவரும் அங்கு வர, நித்தி விழித்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அண்ணா..வா. காரை எடு..

நீ யாரை பத்தி பேசுற?

வேலனை தான் யாரோ விரட்டுறாங்க என்று அனிகாவை பார்த்தான். அவள் கண்கள் கலங்கியது. அவனை பார்த்து விட்டு அறைக்கு ஓடினாள்.

நித்தி..என்று கைரவ் அழைக்க, அவளும் அனிகா பின்னே சென்றாள்.

சரி..வா. போகலாம்.

கவனமா இருங்கப்பா..என்று தாத்தா கூற, கேரி..பார்த்துக்கோ..என்று சைலேஷ் காரை எடுத்தான். கைரவ்..மீண்டும் வேலனிடம் பேச, அவன் கைரவ் பேசியதை கவனித்திருப்பான்.

மூச்சு வாங்க ஓடிய வேலன் மறைவாக ஓரிடத்தில் அமர்ந்தான். அவனை விரட்டியவர்கள் அவனை தாண்டி சென்றனர்.

நீ எதுக்கு என்னை காப்பாற்ற நினைக்கிற? வேலன் கைரவிடம் கேட்டான்.

வாய மூடு. எங்க இருக்கணுன்னு சொல்லு? கைரவ் கத்தினான்.

வேலன் புன்னகையுடன் எனக்காக நீ வருத்தப்படுறியா? சந்தோசமா இருக்கு. ஆனால் என்னை காப்பாற்ற யாராலும் முடியாது. இப்ப கூட நான் தப்பிக்க நினைப்பது உன்னிடம் பேசத்தான். என்னோட அணில்குட்டி..என் மேல ரொம்ப கோபமா இருப்பா. அதைவிடு..நான் உன்னிடம் முக்கியமான விசயத்தை சொல்லணும் என்று அவனிருக்கும் இடத்தை கூற, சைலேஷ் வண்டியை வேகமெடுத்தான்.

போலீஸ் செல்லும் முன் சைலேஷும் கைரவும் அங்கு வந்தான். இருவரும் தனித்தனியே தேடிக் கொண்டிருக்க, வேலன் இடத்தை சொல்ல கைரவ் வந்தான். ஆனால் அந்த சந்தின் ஒரு பக்கம் கைரவ் வர, அதற்குள் வேலனருகே அவனை கொல்ல நினைப்பவர்கள் வந்து அவனை கத்தியால் குத்தினர். கத்தி ஆழமாக இறங்கியது.

ஏய்…என்ன பண்ணீட்டீங்க? என்று கத்திக் கொண்டே கைரவ் அவர்கள் அருகே வர, சைலேஷ் போலீஸ் வந்தனர். வலது பக்கமும் கத்தியை இறக்கி வேலனை தள்ளி விட்டு அவர்கள் ஓடினர். போலீஸ் அவர்களை விரட்ட..இரத்த வெள்ளத்தில் வேலனை கைரவ் பிடித்தான். சைலேஷும் அவர்களிடம் வந்தான்.

வா…ஹாஸ்பிட்டல் போகலாம் என்று இருவரும் வேலனை தூக்க,..சார் முடியாது. எப்படியும் நான் சாக தான் போகிறேன். கடைசியா நான் அவளை பார்க்கணும் என்றான். சைலேஷ் கேரியிடம் அனிகாவை அழைத்து வரச் சொல்லி போன் செய்தான். அவன் அவளை அழைத்து வந்து கொண்டிருந்தான்.

நீங்க சொன்ன மாதிரி அணில்குட்டி..என்னோட இருந்தா. இவனுக அவளையும் ஏதாவது செய்திருப்பாங்க. எனக்கு உங்களால் ஒரு உதவி வேண்டும். அவளோட அப்பா நல்லவர். அவரை மிரட்டி தான் திருமணம் செய்து அமைச்சர் பதவி கொடுத்து இருந்திருக்கிறார்கள். அவர் மனைவி மீதுள்ள காதலால் தான் அணில்குட்டியையும், அவளோட அம்மாவையும் விட்டு அவர்களுடன் வாழ்ந்து வந்தார்.

என்னிடம் உதவி கேட்டு தான் முதல் முறையாக அணுகினார். ஆனால் நான் நினைத்ததை விட அவள் அண்ணனும் சித்தியும் ரொம்ப மோசமானவங்க. அவள கொல்ல தான் அடிக்கடி ஆள் அனுப்பினாங்க. அதனால் அவளது பாதுகாப்பிற்காக தான் நான் அவள் பக்கம் யாரையும் விடலை. உங்க கல்லூரியிலும் அவளை கொல்ல ஆள் வந்தான். எனக்கு முதலில் பார்த்த போதே அவளை பிடித்தது. அவள் அப்பாவிடம் சொன்னேன். அவரும் பாதுகாப்பிற்காக ஒத்துக் கொண்டார். ஆனால் என்னோட குடும்பம் சரியில்லை என்று எனக்கே தெரியும். நானும் கொலை செய்வதால் என்னை அவளுக்கும், ஆன்ட்டிக்கும் சுத்தமாக பிடிக்கலை. இப்ப அவரை அவர்களிடமிருந்து விடுவிக்கணும். அணில்குட்டிக்காக..அவரிடம் பேசினேன்.

உங்க பொண்ணுடன் நீங்க எங்காவது போயிடுங்க? இவனுகள நான் கவனிச்சுக்கிறேன்னு சொன்னேன்.

ஆனால் அவரு..பாதுகாப்பா இருக்கணும்ன்னா என்னை விட்டு தள்ளி இருந்தால் தான் நல்லா இருப்பா. அவளோட சித்திக்கு எல்லா ஊரிலும் ஆட்கள் இருக்காங்க. என் பிள்ளைய வாழவிட மாட்டாங்க. அவ இப்ப பாதுகாப்பான இடத்துல தான் இருக்கா. அப்படியே இருக்கட்டும் என்றார்.

அவருக்கு ஏதாவது முடிந்தால் உதவி செய்யுங்க. அவருக்கு பதவி, பணம் மீதெல்லாம் ஆசை இல்லை. அதனால் பிரச்சனை அதிகமாக இருக்காது. எனக்கு தெரிந்து சொத்து அனைத்தையும் அவங்களுக்கு மாற்றி விட்டால் பிரச்சனை சரியாகும்ன்னு தோணுது. ப்ளீஸ் அவருக்கு உதவி…அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுங்க என்று கைரவை பார்த்து,

உன்னை நான் ஏதும் செய்யாமல் இருந்தது. உன்னால் அவளுக்கு ஆபத்து இல்லை என்று தான். அதுமட்டுமல்ல..நீ வெளியூருக்கு சென்று விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் போது அவள் விடுப்பு எடுத்து அவளும் வருவாள். நாங்க இருவரும் நீ விளையாடுவதை நிறைய முறை சேர்ந்து பார்த்திருக்கிறோம். நீ நல்லா விளையாடுற என்று சைலேஷை பார்த்து விட்டு, கைரவிடம் அவளுக்கு உன்னை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன் என்றான்.

நீ வா..ஹாஸ்பிட்டல் போகலாம் என்று கைரவ் பேச்சை மாற்றிக் கொண்டிருக்க, கேரி அனிகாவை அழைத்து வந்தான். அவள் அழுது கொண்டே அவனிடம் வந்தாள்.

ஏன்..இப்படி செஞ்ச? என்று அழுதாள்.

அணில்குட்டி வந்துட்டியா? நீ ஒரு முறை அப்பாவிடம் பேசு. அப்புறம் ஒரு தடவை மட்டும் என்னை பிடிக்குன்னு சொல்லு என்றான்.

எனக்கு உன்னை பிடிக்கும். ஆனால் காதல் இல்லை. நீ ரௌடியா இல்லாம என்னிடம் அறிமுகமாகி இருந்தால் உன்னை நான்..அவள் பேச, அவளை இழுத்து வேலன் முத்தமிட்டான். அவள் தடுக்காமல் அழுது கொண்டு ஏற்றுக் கொண்டாள். கைரவ் கையை இறுக்கினான். கேரி கைரவ் தோளில் கை வைத்தான். வேலன் அனிகாவை விடுவிக்க..எனக்கு எந்த உணர்வும் ஏற்படலை..சாரி என்றாள். ஆனால் எனக்கு நெருக்கமாக இருப்பவங்களுக்கு உன்னோட நிலை இருந்தால் எனக்கு எப்படி இருக்குமோ? அப்படி இருக்கு உன்னை பார்க்கும் போது.

எனக்கு உன்னை அண்ணாவா தான் பார்க்க முடியும். ஆனால் நீ.. என்ன செஞ்சுட்ட?

அவன் புன்னகையுடன் அனிகா கையை பிடித்து, சைலேஷ் கைரவ் கையில் கொடுத்து விட்டு..அவர்களை பார்த்து, அவ உங்க கூட இருந்தா தான் பாதுகாப்பா இருப்பா. அவளை விட்றாதீங்க என்று அவன் பேண்டில் கைவிட்டு நிறைய கிரிட்டி கார்ட்டை எண்ணுடன் கொடுத்தான். “ஐ லவ் யூ அணில்குட்டி” என்று அவள் கையை பிடித்துக் கொண்டே கண்ணை மூடினான்.

எழுந்திரு..எழுந்திரு..என்று அனிகா தேம்பி தேம்பி அழுதாள்.

சைலேஷூம் கேரியும் கைரவை பார்த்தனர். அவன் கண்கலங்க வேலனை வெறித்துக் கொண்டிருந்தான். அவ்விடத்திற்கு மாதவும் போலீஸும் வந்தனர்.

சைலேஷ் அவர்களிடம் சென்று அவனை அவனது பெற்றோரிடமே ஒப்படைக்கும்படி கூறி விட்டு, அவன் கொடுத்த கிரிட்டிட் கார்டை அவன் பேண்டிலே வைத்து விட்டு, வாங்க போகலாம் என்று அழைத்தான். கைரவ் எழ, அனிகா வேலனை பிடித்து அழுது கொண்டே இருந்தாள். அவனை எடுத்து செல்ல ஆட்கள் வந்து அவனை தூக்கினர். அனிகா அவனை விடுத்து அங்கேயே அழுது கொண்டு அமர்ந்திருந்தாள்.

வாம்மா..போகலாம் சைலேஷ் அழைத்தான். அவள் மேலும் அழ, எழுந்திருக்கிறியா? இல்லையா? கைரவ் கத்தினான். அவள் பயந்து மயங்கினாள்.

ஏன்டா..என்று சைலேஷ் கைரவை திட்ட, கேரி தண்ணீரை எடுத்து அவள் மீது தெளித்தான்.

கையூ..நீ எதுக்கு இவகிட்ட கத்துற? அமைதியா இரு..சைலேஷ் கூற, கைரவ் அவனை அணைத்து அழுதான்.

அனிகா எழுந்து அமர்ந்தாள். மனதில் சோர்வுடன் அமைதியாக சைலேஷ் காரில் ஏறி அமர்ந்தாள். அவளுக்கு வேலன் நினைவாகவே இருந்தது. கைரவ் கண்ணை மூடி சாய்ந்திருந்தான். சைலேஷ் காரை எடுத்தான். கேரியும் மற்றுமொரு காரில் வந்தான். அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அனைவரும் உள்ளே வர, அனிகா மட்டும் மெதுவாக தனியே வந்து கொண்டிருந்தாள்.

தாத்தா அவர்களிடம் வர, டேய்..குளிச்சுட்டு வாங்க என்று சைலேஷ் அவரை பார்த்து விட்டு, நித்திக்கு கண்ணை காட்டி விட்டு அவனறைக்கு சென்றான். அனைவருக்கும் புரிந்தது வேலன் இறந்து விட்டானென்று. அனிகாவை பார்த்துக் கொள்ள சொல்லி கண்ணை காட்டினான் சைலேஷ்.

அனிகாவிடம் நித்தி வர, அவள் அங்கு வேலை செய்யும் கனி அக்காவை பார்த்தவுடன்..ஓடிச் சென்று அவரை அணைத்து அழுதாள். நகர்ந்து சென்ற மூவரும் அவளை பார்க்க, மற்றவர்கள் உள்ளே செல்ல..கைரவ் மட்டும் அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவள் அழுத சத்தத்தில் குட்டிப்பாப்பா அழுதது. ஜாஸ்மின் பாப்பாவை தூக்கி கொண்டு வெளியே வந்தாள். நித்தி இரு பக்கமும் பார்த்தாள். அவள் சோபாவில் அமர்ந்தாள். அவளை சமாதானப்படுத்திய அந்த அக்கா..நித்தியை பார்த்தார். அவளும் இவ்வளவு கவலையாக இருந்ததில்லை. என்னாச்சு இந்த புள்ளைக்கும்? என்று சிந்தித்தார்.

அனிகாவை விலக்கிய அக்கா..போம்மா..குளிச்சிட்டு வா என்று அவளை அறையில் விட்டு வந்தார். நித்தி அதே சோபாவிலே சாய்ந்து கண்ணீருடன் படுத்திருந்தாள்.

என்னாச்சும்மா? எதுக்கு அழுறீங்க?

அக்கா..நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன். என்னோட அம்மாவ நான் புரிஞ்சுக்கவேயில்லை. ஆனால் இனி நான் அவங்கள பார்க்குற நாள் தான் அவங்களுக்கு கடைசி நாளா இருக்கப் போகுது. என்னோட தப்பு தான் என்று அவள் அழுது கொண்டிருந்தாள். சைலேஷ் அவர்கள் முன் வந்தான்.

தம்பி..என்று அக்கா எழுந்தார். நீங்க போங்க என்று நித்தியை பார்த்தான். அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கையால் முகத்தை மறைத்து அழுது கொண்டிருந்தாள். அவளருகே அமர்ந்து அவள் கையை எடுத்தான். அவள் தரை பார்த்தே அமர்ந்திருந்தாள்.

என்ன நினைக்கிறன்னு புரியுது? நீ காரணமில்லை. ஆனால் நம்ம ஊருக்கு போற நேரம் வந்துருச்சு. உன்மேல தவறு இருக்கு. யாரோ பேச்சை நம்பினது தான் தவறு..சைலேஷ் கூற, அவங்க தான் சொன்னாங்க என்றாள்.

யார் என்ன சொன்னாங்க?

காவேரி ஆன்ட்டி தான் சொன்னாங்க. அவங்க அப்பாகிட்ட பேசியதை கேட்டேன். பின் என்னையும் தனியே சந்தித்து பேசுனாங்க. அம்மா வேறவங்களோட வாழ முடிவெடுத்ததாகவும், இருவரையும் கோவிலில் பார்த்ததாக ஒரு புகைப்படம் வேற இருந்தது. அதையும் என்னிடம் கட்டினாங்க. அந்த ஆள் அம்மா கையை பிடித்து பேசினார். அதனால் தான் நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். என்னோட பிறந்தநாளில் வந்த அதே ஆள் தான் புகைப்படத்திலும் இருந்தாரா? அதனால கோபத்தில் தகாத வார்த்தைகளை கூறி திட்டினேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று நித்தி சைலேஷ் மார்பில் புதைந்து அழுதாள்.

கைரவ் அவளை பார்த்துக் கொண்டே வந்தான். கைரவை பார்த்ததும் நித்தி நேராக அமர்ந்து கொண்டாள். சைலேஷின் செக்கரட்டரி வந்து, சில காகிதங்களை நீட்டினான்.

அனிகா அப்பாவின் இரண்டாவது குடும்பம் பற்றிய விவரமும், அவள் அப்பா பற்றிய விவரம் அதில் இருந்தது. அதை வாங்கி பார்த்த சைலேஷ் உதட்டை சுளித்துக் கொண்டு கைரவிடம் கொடுத்தான்.

என்னது? எனக்கு எதுக்கு? கைரவ் கேட்டான்.

சைலேஷ் கைரவிடம், அவன் செத்த பிறகும் அந்த பொண்ணு மேல உனக்கு என்னடா கோபம்?

கைரவ் அவன் அண்ணனை முறைத்தான். கைரவிற்கு வேலன் அனிகாவிற்கு முத்தம் கொடுத்ததில் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை.

டேய்..என்னோட ப்ரெண்ட எதுக்குடா இப்படி முறைக்கிற? கேட்டுக் கொண்டே சந்துரூ வந்தான். அவன் சில காகிதங்களை நீட்டினான்.

அதை வாங்கி பார்த்த சைலேஷ், இதுல சிலத கட் பண்ணிடு என்று அனிகா அப்பாவை விடுத்து மற்றவர்களுக்கும் அனிகாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மாற்றி கொண்டு வரச் சொன்னான்.

அவர் பெரிய ஆள்டா. அந்த பொண்ணே வேண்டாம்ன்னு சொன்ன பிறகு எதுக்கு அவரோட சேர்க்கணும் சந்துரூ கேட்க, வேலன் கூறியதை சைலேஷ் சொன்னான். கேரியும், தாத்தாவும் வந்து அமர்ந்தனர்.

தாத்தாவை பார்த்த சந்துரூ..வாங்க தாத்தா. உங்க பேரனை பாருங்க. என்னை படுத்தி எடுக்குறான்? அவனை தாத்தாவிடம் குறை கூற, என்னோட பேரனுக சரியான முடிவு தான் எடுப்பாங்க என்று அவர் கூறினார்.

அதான பார்த்தேன். உங்க பேரன்கள விட்டு கொடுக்க மாட்டீங்களே? சிலாகித்தான் சந்துரூ. அவர் சந்துருவிடம் பேசினாலும் அவர் கைரவையும், நித்தியையும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம்..இரு காகிதங்களையும் நீட்டி சைலேஷ் விவரித்து விட்டு, அந்த பொண்ணோட அப்பா வெளியூரில் இருப்பதை விட அந்த பொண்ணுடன் நம்ம வீட்ல இருக்கட்டுமா? சைலேஷ் கேட்க, அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

எனக்கு பிரச்சனையில்லப்பா. அந்த பொண்ணு தான் சொல்லணும் என்று தாத்தா கூற, கைரவும் அவன் தாத்தாவை பார்த்தான். நித்திக்கு அவர் அனிகாவை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? புரிபடவில்லை. ஆனால் அவர் ஏற்றுக் கொண்டதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர். கைரவ் ஏதும் பேசாமல் அமைதியாக தாத்தாவை பார்த்தான். அவரும் அவனை பார்த்தார்.

சந்துரூ இவர்களை பார்த்து, தாத்தா..கைரவும் நீங்களும் இப்படி அமைதியாக பாக்குறீங்க? உங்க அமைதி எனக்கு ஆச்சர்யமா இருக்கு? என்னடா..தாத்தா சொன்னதை கேட்காமல் ஏடாகுடாம ஏதும் செஞ்சுட்டியா? சந்துரூ கேட்க, நித்தி தாத்தா நினைப்பதை உணர்ந்து கொண்டு..கைரவை பார்த்தாள்.

அவனருகே வந்த நித்தி..சொல்லுடா? என்றாள். சந்துரூ அவளை பார்த்து, நீ அழுதாயா? கேட்டுக் கொண்டே சைலேஷை பார்த்தான்.

அண்ணா..ப்ளீஸ். நாம அப்புறம் பேசலாம். நீ சொல்லு கைரவ்? நித்தி கூறினாள்.

சொல்ல என்ன இருக்கு? என்றான் கைரவ்.

சார்..என்று அனிகா அழைத்தாள். அவள் குளித்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு கீழே வந்தாள். அனைவரும் அவளை பார்த்தனர்.

அவள் நேராக தாத்தாவிடம் வந்து, நான் இங்கிருந்து கிளம்பிகிறேன் தாத்தா என்றாள்.

கிளம்புறியா? எங்க போகப் போற? சைலேஷ் கூர்மையாக அவளை பார்த்தான். கைரவிற்கு அவள் கிளம்பப் போகிறேன்னு சொன்னதும் கோபம் ஜிவ்வென்று ஏறியது.

சார்..என்னை விடுதியில் சேர்த்து விடுங்க.

அதுக்கு பணத்துக்கு என்ன செய்வ?

முதல் பணம் நீங்க குடுங்க சார். அதை நான் சம்பாதித்து கொடுத்து விடுவேன். என்னை படிக்க மட்டும் வையுங்க சார் ப்ளீஸ் என்றாள். தாத்தா அவளை பார்த்து,..உன் விருப்பம் தான் என் விருப்பமும் என்றார்.

கைரவ் அதிர்ந்து அவரை பார்க்க..தாத்தா..என்ன சொல்றீங்க? சைலேஷ் கேட்டான்.

என்னடா பண்ண சொல்ற? அந்த பொண்ண நிறுத்தி வைக்க எனக்கு தான் எந்த உரிமையும் இல்லையே?

தாத்தா..நான் அதுக்கில்லை என்ற அனிகாவை நிறுத்தி, என் பேரனிடம் பேசுறேன். நீ இடையில பேசாத என்று வேண்டுமென்றே அனிகாவை அவாய்ட்டு செய்வது போல் பேச கைரவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தான்.

தாத்தா..என்று நித்தி அவரிடம் வந்தாள். அவர் கைரவை பார்க்க, அவனை பார்த்தவுடன் அவர் செய்ய நினைப்பதை புரிந்து கொண்டாள்.

அனி..நீ எப்ப கிளம்புற? நானும் உன்னுடன் துணைக்கு வரவா? நித்தி கேட்க,

இல்ல நித்தி என்று சைலேஷிடம் வந்து, சார்..எனக்கு உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் மட்டும் வேண்டும் என்றாள். அனைவரும் கைரவை பார்த்து விட்டு அவளை ஆர்வமுடன் பார்த்தனர்.

சமையலறைக்குள் சென்று கனி அக்காவை அழைத்து வந்து, என்னுடன் இவங்கள மட்டும் அழைச்சிட்டு போகவா?

சார்..நீங்க படிக்க மட்டும் வையுங்க. சாப்பிட மற்ற செலவுகளை நானே பார்த்துக் கொள்வேன் என்றவுடன் கைரவ் சினத்துடன் எழுந்து அவனறைக்கு சென்றார். அனிகா அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

கையூ நில்லு..சைலேஷ் சத்தமிட..அவன் நின்று, அண்ணா..நான் என் அறைக்கு செல்கிறேன்.

அவன் தான் இருக்க சொல்றானே? சற்று நேரம் இரு என்று தாத்தா கூறினார்.

நித்தி அனிகாவிடம் வந்து, கையை கட்டிக் கொண்டு..நீ என்ன வேலை பார்த்து சம்பாதிப்ப? என்று கேட்டாள்.

வேலைக்கா பஞ்சம். ஏதாவது செய்ய வேண்டியது தான். நித்தி..நீயும் செஞ்சேல அனிகா கேட்க, அவள் சினமுடன் நான் வேலை செய்யல. என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு துணையா தான் போனேன்.

இந்த காலத்துல வெளிய போய் வேலை செய்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பசங்களே ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஆனால் நீ தனியா எப்படி போவ? சும்மா வெளிய தனியா நடந்து போற பொண்ணுங்களையே கடத்துறாங்க. உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா? என்று சத்தமிட்டாள்.

அவள் கண்ணீருடன் நித்தியை பார்க்க, அனிகாவை அவள் அறைக்கு இழுத்து சென்றாள் நித்தி. கைரவ் கோபமாக அவனறைக்கு சென்று பஞ்சிங் பேக்கை அடித்துக் கொண்டிருந்தான்.

உனக்கு என்ன பிரச்சனை? நித்தி கேட்க, அனிகா அமைதியாக நின்றாள்.

கைரவை லவ் பண்றேல? நித்தி கேட்க, பதட்டமாக அவள் கையை மடிக்கி விரித்துக் கொண்டிருந்தாள். நித்தி அவளிடம் வந்து, காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் எதுக்கு இப்ப போகப்போறேன்னு சொல்ற?

எனக்கு தனியா இருக்கணும் போல இருக்கு.

தனியா இருந்தா. நீ எதை நினைக்கக்கூடாதுன்னு நினைக்கிறியோ அது தான் உன் முன் வரும். அவள் அழுதாள்.

எதுக்கு அழுற?

நித்தி..நான்..என்று அனிகா தயங்கிக் கொண்டு, நான் இங்க இருந்தால் எனக்கு கஷ்டமா இருக்கும். நான் அவனை காதலிக்கிறேன். அதனால் தான் என்னால இங்க இருக்க முடியாது.

காதலித்தால் இருக்க தானே தோன்றும்?

ஆனால் என் நிலை வேறாக உள்ளது. என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் என்னை விட்டு சென்று விடுகிறார்கள். வேலனை எனக்கு பிடிக்காமல் இல்லை. என்னால் எல்லாரையும் கொல்வான் அது தான் பயம். அதற்காக அவன் மீது காதலில்லை. அவனை போல் இவனுக்கும் ஆகிவிட்டால் என்று அழுதாள்.

நித்தி அவளிடம்..அவனை பார்க்க சென்றாயே? ஏதாவது நடந்ததா?

வேலன் அவளுக்கு முத்தம் கொடுத்ததை கூறவும் தான் கைரவின் செயலுக்கான காரணம் புரிந்தது.

அவனை சொல்ல வைப்போமா? நித்தி கேட்க, என்ன சொல்ல வைக்கணும்? அனிகா கேட்டாள்.

அவனுக்கும் உன்னை பிடிக்கும். வேலன் உனக்கு முத்தம் கொடுத்தது அவனுக்கு பிடிக்கல. அதான் மூச்சிய இப்படி வச்சுக்கிட்டு இருக்கான். இப்பொழுது பேசியது போலவே நடந்துக்கோ..நான் செய்றேன் பாரு என்று..

இல்ல நித்தி. நான் கிளம்புகிறேன்.

வெளிய தனியா வாழ்க்கையை நடத்துறது கஷ்டம். நீ இங்க இருப்பது தான் பாதுகாப்பு. நீ இப்பவே எல்லாத்தையும் எடுத்து வை..

நான் எதுவும் எடுத்துட்டு வரலையே?

சரி..நீ ஓய்வெடு. அவனே இப்ப உன்னை பார்க்க வருவான். நீ உன்னோட காதலை சொல்லக்கூடாது. உன்னை சொல்ல வைக்க பார்ப்பான். நீ சொல்லாத அவனை சொல்ல வைக்கணும். போ..நீ படுத்துக்கோ.

தாத்தாவும் அதுக்காக தான் உன்னிடம் அப்படி பேசினார் என்றாள்.

அப்ப..அவருக்கு என் மேல கோபம் இல்லையா?

இல்லை. உனக்கு அவனை பிடிக்கும்ன்னு வந்தவுடனே தெரிந்தது. சொல்றத செய். இன்றே அனைத்தும் சரியாகும் என்றாள் நித்தி.

பயமா இருக்கே.

அவனுக்கா பயப்படுற? எல்லாரும் உன் பக்கம் தான்.

வருவான். கவனமாக இரு என்று நித்தி வெளியே சென்றாள்.

அறைக்கு வெளியே கைரவ் நின்று கொண்டிருந்தான். நீ இங்க என்ன செய்ற? அவள் போகக்கூடாது என்று எண்ணிக் கொண்டே பஞ்சிங் பேக்கை அடித்து கொண்டிருந்தான் கைரவ். அவனால் அங்கு இருக்க முடியவில்லை. அதை விட்டு படுக்கையிடம் வந்து துவாலையால் முகத்தை துடைத்து விட்டு அமர்ந்தான். பின் வெளியே வந்து அனிகா அறையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சைலு..இங்க என்ன நடக்குது? உன்னோட தம்பி எதுக்கு கோபப்படுறான்? சந்துரூ கேட்டான். அவனிடம் அனைத்தையும் சொல்ல..என்ன சொல்ற? அவனுக சாதாரண ஆளா தெரியல.

அதெல்லாம் பிரச்சனை இல்லைடா. நாம பார்த்துக்கலாம் என்று சைலேஷ் கூறி விட்டு அவனது அசிஸ்டென்டிடம் நான் அமைச்சரை யாருக்கும் தெரியாமல் சந்திக்கணும். ஏற்பாடு செய். யாருக்காவது தெரிந்தால் அவருக்கு தான் ஆபத்து என்றான். அவன் கிளம்பினான்.