ஹாய் ப்ரெண்ட்ஸ்,…

எப்படி இருக்கிறீர்கள்?

அன்புக்குரியவர்களுக்கு என் இனிய காலை வணக்கம்

இதோ உங்களுக்கான எபிசோடு 18

வாசித்து களியுங்கள்…..

நீ அந்த ரெஸ்டாரண்ட் போனதிலிருந்து சரியில்லை. வித்தியாசமாக நடந்து கொள்கிறாய்? உனக்கு ஏற்கனவே அகில் சீனியரை பிடித்திருக்கிறது. அவருடன் நன்றாக பழகிவிட்டால் ஜிதினை மணந்து கொள்ள முடியுமா? அவர்களை பற்றி உனக்கு ஏற்கனவே தெரியும் தானே! நிவாஸ் ஸ்ரீயிடம் கேட்டான்.

அதை பற்றி நான் இப்பொழுது யோசிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் நிவாசிடம் கூறி விட்டு, கயலிடம் பேசியதை யோசித்து பார்த்தாள்.

ஜிதினை சமாளிக்க தான் திருமணத்தை பற்றி பேசியிருப்பாள்.ஆனால் அவர்கள் இருவரும் வேறொரு விசயத்தை பற்றி பேசி இருப்பார்கள்.

நீ உன்னுடைய பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சி செய்கிறாயா? கண்டிப்பாக வரும். உன்னுடைய நண்பர்கள் அனைவரிடமும் பழகினால் மட்டும் போதும். ஆனால் அவர்கள் யார் மீதும் உனக்கு காதல் மட்டும் வரக் கூடாது என்று கயல் கூற,

நீங்கள் என் நினைவுகளை கொண்டு வர வேண்டும் என்றால் மருத்துவமனை சென்று சிகிச்சைகளை மேற்கொண்டால் வந்து விடும். எதற்காக அவர்களுடன் நான் பழக வேண்டும்?

உன்னுடைய கடந்த வாழ்வில் உனக்கும் நண்பர்கள் இருந்தார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.இவர்களுடன் பழகி அவர்களை பற்றியும், உன்னுடைய கடந்த காலம் பற்றி நினைவு வர வாய்ப்புள்ளது. அதனால் தான் கூறுகிறேன்.

நீங்கள் என் மீதும் கரிசனம் காட்டுகிறீர்களா?

காரணம் உள்ளது. எனக்கு உங்கள் அனைவரது சொத்தும் வேண்டும்.

அனைவரா?

ம்…ஜிதின், நிவாஸ்,அப்புறம் உன்னுடையது.

ஜிதினா?…அவன் உங்கள் மகன் தானே!..உங்களுடையது தானே….அவனிதும் என்றாள்.

இல்லை. அவன் என் மகன் இல்லை. ஆதியும் என் மகன் அல்ல…

அதிர்ச்சியாக இருந்தாலும் ,அப்படியென்றால் எங்களது திருமணம் நடக்காது தானே!

அது எப்படி விடுவேன்? கண்டிப்பாக நடக்கும்.

அவன் யார்?

கயல் சிரித்துக் கொண்டே, நிவாசின் உண்மையான அண்ணன் தான் ஜிதின் கூறினாள்.

அவனது அண்ணனா?

ஆம். உனக்கும் அண்ணன் தான். ஆனால் உங்கள் இருவருக்கும் தான் திருமணம்.

உங்களுக்கு என்ன பைத்தியமா?

அவள் ஸ்ரீயின் கழுத்தை பிடித்துக் கொண்டு, ம்ம்….பைத்தியம் தான். அப்படியே உன் அம்மாவை போல் பேசுகிறாய்?

அம்மாவா?…..

அது உனக்கு தேவையில்லை. இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் உன் ரகசியம் வெளியே வரும். உன் அண்ணன் தம்பியை கொல்லாமல் விட மாட்டேன் அவளது கழுத்தை மேலும் இறுக்கி ஸ்ரீயை கீழே தள்ளி விட்டு மிரட்ட,

ஸ்ரீ இருமிக் கொண்டு,நான் யாரிடமும் கூற மாட்டேன். திருமணம் மட்டும் வேண்டாம் அவள் கூற,

உனக்கு தெரியுமா? என்று தெரியவில்லை அந்த ஜிதின் உன் மீது உயிராக இருக்கிறான். திருமணம் வேண்டாம் என்று கூறினால் அவன் பைத்தியமாகி விடுவான். அந்த ஆதி இறந்த போது அவன் எப்படி இருந்தான் என்று உனக்கு தான் தெரியுமே! இப்பொழுதைக்கு நீயும், நிவாசும் தான் அவனது உலகம்.மீண்டும் அவன் பழைய மாதிரி அறையினுள் அடைந்து பைத்தியமாக வேண்டுமா? நீயே கூறு?

ஸ்ரீ அமைதியாக இருக்க, நீ அனைத்தையும் ரகசியமாக நிவாஸ், ஜிதினிற்கு கூட தெரியாமல் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் உன்னுடைய பழைய நினைவுகளை கொண்டு வர, நீ அந்த பசங்களுடன் பழகலாம் வெளியே செல்லலாம். இத்தனை நாட்கள் நீங்கள் வீட்டிற்குள்ளே இருந்தது போல் இல்லாமல் வெளியே சுதந்திரமாக திரியலாம்.ஆனால் எட்டு மணிக்கு மேல் வெளியே சுற்ற கூடாது. வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

ஸ்ரீக்கு சந்தோசப்படவா? வருத்தப்படுவதா? என்று தெரியாமல் இருந்திருப்பாள். அப்பொழுது தான் அவளுக்கு ஓர் யோசனை உதித்தது.ஜிதின் நமக்கு அண்ணன் தான். திருமணத்தை நிறுத்த இந்த காரணம் போதாது ஏதோ யோசித்துக் கொண்டு சிரித்தாள். அதனை இப்பொழுது சிந்தித்து பார்த்தாள்.

கயல் நண்பர்களுடன் ஸ்ரீயை பழக கூறியதே அவளது வலியை மறைத்து எந்த அளவு கஷ்டப்படுகிறாள் என்று காட்டி அவர்களை பலவீனமாக்குவது  என்று வேறொரு காரணம் உள்ளது என்பது ஸ்ரீக்கு தெரியாது.

மறுபடியும் நிவாசும் ஸ்ரீயும் நண்பர்களிடம் வந்து, நாம் எங்கு செல்லலாம் என்று கேட்க, சிறு வயதில் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையை வைத்து, பூங்காவிற்கு செல்லலாம் என்று அகில் சொன்னான்.

டேய், வேறு இடமா இல்லை என்று கவின் கேட்க,

யாசு அங்கே வந்து, அது தான் சரி என்று அகிலை பார்த்து புன்முறுவல் செய்தாள்.

நீ இப்பொழுது தானே வந்தாய்? அபி கேட்க, நான் தூரத்தில் இருந்து உங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.

நீ ஒட்டு கேட்டேன் என்று கூறு கவின் கூற,

நான் என் நண்பர்களிடம் வந்தேன். சில பேரை பார்த்து அங்கேயே இருந்து விட்டேன்.அதனால் தான் தூரத்தில் இருந்து கவனித்தேன்.

சீனியர், நீங்கள் எதையும் நேரடியாகவே பேசலாம் நிவாஸ் கூற,

எனக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? என்று எனக்கு தெளிவாகவில்லை. ஒரு வேலை உங்களுடைய காதல் தான் காரணமென்றால் கவலைப்படாதீர்கள்! நான் ஜிதினை திருமணம் செய்து கொள்ள போகிறேன். எங்களது வீட்டில் நிச்சயத்திற்கான தேதியையும் முடிவு செய்ய போகிறார்கள். அங்கு அமைதி நிலவியது.

நாம் மாலையில் அகில் சீனியர் கூறியது போல் பூங்காவிற்கு செல்லலாம் என்று கூறி விட்டு ஒரு பாட்டினை வாய்க்குள் முணங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சென்றாள்.

இவள் ஒரே நாளில் இப்படி மாறி விட்டாள்! அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.நிவாசிற்கு திருமணத்தை ஸ்ரீ காரணமாக ஜிதினிடம் கூறியது சந்தேகத்தை உண்டாக்கியது. இவள் எதையோ மறைக்கிறாள்.அவள் இவ்வளவு சந்தோசமாக இருந்து நான் பார்த்ததே இல்லை.அவளது சந்தோசத்தை கெடுக்க வேண்டாம் என்று மனதினுள்  நினைத்தான்.அவளுடன் சேர்ந்து வகுப்பிற்கு சென்றாள்.

அகில் ஸ்ரீயை பார்த்து, இவள் புது விதமாக நடந்து கொள்வதன் காரணம் கயலாக இருக்குமோ என்று சரியாக யூகித்தான்.நடந்ததை அர்ச்சுவுடம் கூறலாம் என்று நித்தி போன் செய்தால் அவன் எடுக்கவில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். அவன் எடுக்கவில்லை.உடனே மேகாவிற்கு நித்தி போன் செய்ய, அவளிடம் கேட்ட போது, அவன் கல்லூரிக்கு வரவில்லை என்றும் அவனுடைய ஊருக்கு சென்றிருப்பதாக கூறவும் அதிர்ச்சியோடு ஊருக்கா? என்று போனை துண்டித்தாள்.

அவளை பார்த்து நண்பர்கள்…. என்னம்மா நித்தி எங்கே இருக்கிறானாம்? என்று கேட்க,அவள் அதை மறைத்து வீட்டில் இருக்கிறானாம். உடல் இன்னும் சரியாகவில்லையாம் என்றாள்.

அப்படியே மாலை நேரமும் வந்தது. ஸ்ரீ ஒரு குஷியுடன் நண்பர்கள் அருகே வர ஓடி வந்தாள். நிவாஸ் அவள் பின்னே வந்தான்.

சீனியர் கிளம்புவோமா?

அனைவரும் அவளை ஒருவாறு பார்க்க, என்ன ஆயிற்று சீனியர்? ஸ்ரீ நித்தியை பார்த்தாள்.

நீ வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வது போல் தெரிகிறதே! அபி ஸ்ரீயை உற்றுநோக்கினான். அனைவரும் அவளை அதே போல் கவனிக்க ஸ்ரீ உஷாராகி,

நீங்கள் தான் என்னை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள கூறினீர்களே! நண்பர்கள் சேர்ந்து வெளியே செல்வது இயல்பு தானே!

இயல்பு தான் இருந்தாலும் இன்று விதிவிலக்கென தெரிகிறாயே? கவின் புருவம் உயர்த்தினான்.

அகிலின் கூர்மையான கண்கள் ஸ்ரீ மீது ஆழ்ந்து பதியவே, அவள் தடுமாறினாள்.

சரி…சரி….செல்லலாம் என்று நித்தி நிலைமையை சமாளிக்க, அனைவரும் கிளம்பலாகினர்.கைரவும் நடந்தவற்றை பார்த்த படியே தூரமாக நின்றான்.

நண்பர்கள் படை பூங்காவை சூழ,அங்கே ஆச்சர்யத்தோடு நித்தி அப்படியே நின்றாள்.அர்ச்சு கல் இருக்கையில் உட்கார்ந்தவாறு குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ அவனிடம் சென்று, அவனது கண்ணை தன் கைகளால் மூட, அவன் அவளை பிடித்து இழுத்ததில் அவன் மடி மீதே விழுந்து விட்டாள். அனைவரும் அதிர்ந்து தான் பார்த்தனர்.அர்ச்சு வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அகில் வேகமாக அவர்களருகே வந்து,

இது என்ன விளையாட்டு ஸ்ரீ? காலையில் இருந்து நீ என்ன தான் செய்து கொண்டிருக்கிறாய்? அவளை பிடித்து இழுத்து அவளிடம் கத்த, அவள் அமைதியாக குற்றவாளி போல் நின்றாள்.

அமைதியாக இரு அகில். அனைவரும் பார்க்கிறார்கள் அர்ச்சு கூற அவனை முறைத்து விட்டு பதில் கூறு சத்தமிட்டான்.

ஏன் நான் மகிழ்ச்சியாக இருக்க கூடாதா? காலையிலிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்? நான் அமைதியாக தான் இருக்க வேண்டுமா?அவள் அழுவதை போல் பேசி விட்டு, கல் இருக்கையில் அமர, அகில் நிலையுணர்ந்து,

அவள் அருகே சென்று, இங்கே பார் ஸ்ரீ. நீ சிரித்தால் அவ்வளவு அழகாக இருக்கும். நீ திடீரென புது விதமாக நடந்து கொண்டதால் தான் கோபப்பட்டு விட்டேன். என்னை மன்னித்து விடு என்று அவளை அழைத்து ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டிக் கொண்டே அவளை சமாதானப்படுத்தினான். அவளும் அமைதியாக அர்ச்சுவிற்கு பழைய நினைவுகள் நிழலாடியது.

அர்ச்சுவின் காதல் ஒரு தலை ராகமாகவே இருந்தது.அப்பொழுதும் இப்படி தான். பள்ளி விட்டு வந்த பின் அகிலும் ஸ்ரீயும் அவர்களது கிராமத்தில் தனியிருக்கும் ஒரு பெரிய மரத்தின் ஊஞ்சலில் இருவரும் விளையாடுவதும்,அர்ச்சு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து  வருந்துவதுமாக நினைவலைகள் வர,  அவனுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. ஸ்ரீ என்ன தான் அகிலுடன் இருந்தாலும் இப்பொழுது அவளுக்கு நேராக இருக்கும் அர்ச்சு கலங்குவதை பார்த்து பழைய நினைவு எழ, அவளுக்கு தலைவலி ஆரம்பமானது. அவளது வலியை உணர்ந்து கொண்டு நிவாஸ் அவளருகே வந்து ஸ்ரீயை இறக்கி விட,அவள் தன் வலியை கட்டுப்படுத்திக் கொண்டு அகிலையும் ,அர்ச்சுவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் ஸ்ரீ….ஸ்ரீ……என்று அழைக்க,அவள் நிதானித்த படி அர்ச்சு அருகே வந்து,

அன்று எதற்கு கோபப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. என்னை மன்னித்து விடு என்று அர்ச்சு கையை பிடிக்க, அவனுக்குள் ஏதோ செய்தது. அவன் அவளையே பார்த்த படி நின்றான்.

அப்புறம் சீனியர் அகிலிடம் திரும்பி, உங்கள் உதவிக்கு நன்றி என்று அவனது கையையும் பிடித்து ஏதோ சொல்ல வந்தால், அதற்குள் ஒரு குரல்,..

குட்டிம்மா….இறங்கி விடு அம்மா வாங்கி தருகிறேன்.கீழே விழுந்து விடுவாய்? பெண்ணொருத்தி தன் குழந்தையிடம் பேச, அனைவரும் திரும்பி அங்கே பார்த்தனர்.

அந்த பெரிய சறுகலின் மேல் நின்று ஒரு சிறுவன் குதிப்பதை போல் நின்று கொண்டிருக்க, இதை பார்த்த ஸ்ரீக்கு ஆதி நினைவே எழுந்தது. கொஞ்சமும் யோசிக்காது அகில் கையை விட்டு,வேகமாக அவள் செல்லவும், அந்த அம்மா கத்தவும், சிறுவன் குதிக்கவும் ஸ்ரீ அவனை பிடிக்க, இன்னொரு கை அவளையும், அந்த சிறுவனையும் தாங்கியபடி மூவரும் கீழே விழுந்தனர்.

ஜிதின்…..ஆம் அந்த ஜிதின் தான் ஸ்ரீயையும் அந்த சிறுவனையும் தாங்கி பிடித்தான். அவள் ஜிதினையே பார்க்க, பின் இருவரும் எழுந்து,அந்த பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து  விட்டு,அவனுக்கு ஜிதின் அறிவுரை கூறினான். இதை எதிர்பார்க்காத அனைவரும் ஆ….வென்று ஜிதினை பார்த்தனர் ஸ்ரீ உட்பட…..

நீ இங்கே என்ன செய்கிறாய்? நிவாஸ் ஜிதினிடம் கேட்க,

நீங்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினீர்களே! அதை கண்டு கொள்ளதான் வந்தேன்.

என்ன பேசுகிறீர்கள்? ஸ்ரீ கேட்க,

நான் உன்னை பார்க்க தோன்றியதால் வந்தேன். நீ உன் நண்பர்களுடன் நேரத்தை செலவழி. நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அவனும் கல் இருக்கையில் உட்கார்ந்தான்.

                             “புது மாற்றமே

                          கவலையை மறக்கும்.

                               புது மாற்றமே

                          மனச்சோர்வை நீக்கும்.

                                புது மாற்றமே

                          பிரச்சனையை தீர்க்கும்.

                                 புது மாற்றமே

                      வாழ்கைக்கு புத்துணர்வளிக்கும்.

                               மாற்றத்தை ஏற்ற

                            என் அழகு சிலையே!

                              இன்று போல் என்றும்

                              உன் சிரிப்பலைகள்

                                  தொடர

                               வேண்டுகிறேன்

                             அந்த இறைவனிடம்!”