அத்தியாயம் 75

அபி அம்மா ஹாஸ்பிட்டலுக்கு வர, வேலுவை அங்கே இருக்க வைத்து விட்டு தருணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் பிரதீப்.

தீனா வீட்டில் அபி அம்மா ஆராத்தி சுற்ற வெற்றி-மீனாட்சி கையை கோர்த்துக் கொண்டு உள்ளே வந்தனர். இருவர் மனதிலும் அப்படியொரு நிம்மதி. சடங்குகளை முடித்து..இருவரும் ஆடையை மாற்றி வந்து அமர்ந்தனர்.

துகிரா வெற்றி அருகே அமர்ந்து, மாமா, அத்தை உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?

ஏன் அண்ணி, நீங்க சாப்பாடு செய்யப் போறீங்களா? துளசி கேட்டாள்.

என்ன நீ செய்யப் போறியா? அப்பத்தா நான் வெளிய சாப்பிடுக்கிறேன் தீனா கூற, ஏலேய்..எப்படின்னாலும் நம்ம வீட்டு புள்ளைங்க சமைக்கிறத தான் நீ சாப்பிடணும் அப்பத்தா கூறினார்.

அப்பத்தா..நான் அம்மா, புவி செய்யும் போது நான் சாப்பிட்டுக்கிறேன்.

அச்சோ..நான் சிம்பிள் டிஸ் தான் செய்வேன் புவனா கூறினாள்.

தீனா அவள் பின்னிருந்து அவள் கழுத்தை கைகளால் கோர்த்து விட்டு, நீ வெந்நீர் வைத்து தந்தால் கூட போதும்..என்றவன்..ஏய்..நீ இதுக்கு முன்னே சமைச்சிருக்கேல..என்று தீனா புவனா முன் நின்று பார்த்தான்.

அவள் கண்களை விரித்து துகிரா பக்கம் காட்ட..அவள் முகத்தை உம்மென்று வைத்திருந்தாள்.

நீ என்ன செஞ்சாலும் நான் சாப்பிடுவேன்ம்மா..வெற்றி துகிரா தலையை கோத, அதெல்லாம் யாரும் ஏதும் செய்ய வேண்டாம். நான் செய்கிறேன் என்று மீனாட்சி எழுந்தார்.

மீனா..இரு. யாருமே சமைக்க வேண்டாம். எதுலையோ..சாப்பாடு கொண்டு வருவானுகள. அதுல கொண்டு வரச் சொல்லுடா தீனா என்று அப்பத்தா கூற,

எல்லாரும் என்ன வேணும்ன்னு சொல்லுங்க?..தீனா கேட்க, துகிரா வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி புன்னகையுடன் அவளை பார்த்து விட்டு,..எங்கடா அவனை? என்று தீனாவிடம் கேட்டார்.

அவன் வந்துருவேன்னு சொன்னான் என்று துகிராவை பார்த்தான். அவன் வந்துடுவான். உனக்கு என்ன வேண்டும்? தீனா கேட்க,

நான் ரெண்டு நாள் தான் இங்க இருப்பேன். அவருடன் சேர்ந்து சாப்பிடுக்கவா? என்று கேட்டாள்.

இது என்ன கேள்வி? அவன் வரட்டும்மா. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றார் மீனாட்சி.

பிரதீப் தருணுடன் உள்ளே நுழைந்தான். அடிபட்டு காயத்துடன் தருணை பார்த்ததும் அனைவரும் எழுந்தனர்.

தருண் புவனாவை வீல் சேரில் பார்க்கவும் கண்கள் கலங்கியது. அண்ணா..என்று புவனா உணர்ச்சி வசப்பட்டு எழுந்தாள்.

தருண் பதறி புவனாவிடம் ஓடி வர, அவள் விழுந்து விடுவாளோ என்று அம்மாடி..என்று அப்பத்தாவும், வேண்டாம்மா..என்று மீனாட்சியும், புவி என்று தீனாவும், துளசி, துகிராவும் அவளிடம் ஓடி வர, வெற்றியும் அவளிடம் வந்தார். தருண் அப்படியே நின்று அவர்கள் அனைவரையும் பார்த்தான். அவனுக்கு கண்ணீர் பொளபொளவென வந்தது. புவனா விழாமல் பிடித்த தீனா, அவளை தருணிடம் அழைத்து வந்தான். அவள் தன் அண்ணாவை கட்டிக் கொண்டு..நிமிர்ந்து அவனை பார்த்து,

என்ன ஆச்சு அண்ணா? காயமா இருக்கு என்று அவன் காயத்தை தொட வந்தாள். பிரதீப்..புவனா கையை நிறுத்தி தருணை பார்த்தான்.

அண்ணா..அண்ணாவுக்கு? என்று புவனா பிரதீப்பை பார்த்தாள்.

என்ன திடீர்ன்னு வந்துட்ட? இவ்வளவு காயமா இருக்கு? என்று தீனா தருணிடம் கேட்டான். அவன் அமைதியாக அனைவரையும் பார்த்தான்.

ஏன்டா, வந்த புள்ளகிட்ட கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கீங்க? வா..வந்து உட்காரு என்று வெற்றி தருணை அழைத்தார்.

புவனா நகர்ந்து கொள்ள தருண் புவனாவை பார்த்தான். பின் இருக்கட்டும் அய்யா. நாங்க எங்க வீட்டுக்கு கிளம்புகிறோம் என்று தருண் சொல்ல, தீனா முகம் சுருங்கியது.

இப்ப தான வந்திருக்க? அதுக்குள்ள கிளம்பணுமா? என்று பிரதீப் கேட்டான்.

அண்ணா..என்னை நம்பி என்னுடன் ஆட்கள் வந்திருக்காங்க என்று இதயாவை தேடினான்.

அவங்க எல்லாரும் அர்ஜூன் பாட்டி வீட்ல இருக்காங்க பிரதீப் சொல்ல..

வா..புவி என்று தருண் அழைத்தான். அவள் எல்லாரையும் பார்த்து விட்டு தீனாவை பார்த்தாள். அவன் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான். தீனாவை பார்த்துக் கொண்டே தருண் கையை பிடித்தாள். பிரதீப்பை பார்த்த துகிராவும் புவனா அருகே வந்தாள். அவன் தீனாவை பார்த்துக் கொண்டிருந்தான். இப்பொழுது துகிராவும் தருணிடம்,

என்னை இதயா இருக்கும் இடத்தில் விட்டு விடுறீங்களா? என்று கேட்டாள். பிரதீப் துகிராவிடம் வந்து, நீ எங்கேயும் போகக்கூடாது என்று அவள் கையை பிடித்தான்.

ப்ளீஸ்..புரிஞ்சுக்கோங்க. நான் இங்க இருக்கிறது சரியா இருக்காது.

ஏன்? என்னை நம்பி எனக்காக தான வந்த?

வந்தேன். ஆனால் கிராமத்துல..இந்த மாதிரியெல்லாம் பேசுவாங்கன்னு தெரியாது என்று அழுதாள். தருண் புரியாமல் அனைவரையும் பார்த்தான். புவனா கண்களும் கலங்கியது.

பிரதீப் அவளிடம் வந்து, அவங்க எப்பையுமே அப்படி தான். அவங்க பேசுறதையெல்லாம் பெருசா எடுத்துக்காத என்றான். துகிராவுக்கு கோபம் வந்தது. அவன் கையை உதறி விட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டாள்.

தீனா சினமுடன், ஏன்டா..அவங்க முன்னாடி மட்டும் அப்படி பேசின? ஜானுவிடமும் மனசுல நினைக்கிறத பேச மாட்டிங்கிற? மனசுல அன்பா இருந்தா மட்டும் போதாது. அவள கஷ்டப்படுத்துனவங்கள பத்தி அவளிடமே பேசுற.அப்புறம் கோபப்படாமல் எப்படி இருப்பா? என்று தீனா பிரதீப்பிடம் கேட்டான்.

தருண் புவனாவை பார்த்தான். அவள் கண்களும் கலங்கி இருப்பதை பார்த்து..புவி, உன்னை யாரும் ஏதும் சொன்னாங்களா? என்று கேட்டான். அவள் மௌனம் அவனுக்கு உணர்த்தியது. சினத்துடன் அனைவரையும் பார்த்த தருண் ஏதும் பேசாமல் புவனாவை இழுத்து செல்ல, அவளது மறுகையை பிடித்தான் தீனா.

தருண் தீனாவிடம்..சார் புவி கைய விடுங்க. அவ இங்க இருப்பது சரியா இருக்காது. அவள பேசும் போது இங்க தான இருந்திருப்பீங்க?

இல்ல..நான் இங்க இல்லை என்றான் தீனா.

தருணிடம் பிரதீப் அருகே வந்தான்.

அண்ணா..போதும். நாங்க கிளம்புகிறோம் என்ற தருண் நின்றான்.

நில்லு..யாரும் எங்க வீட்டு புள்ளைய தப்பா பேச விட மாட்டோம். அவ இனி எங்க வீட்டுக்கு வரவே மாட்டா வெற்றி கூற, என்னை மன்னிச்சிருங்கய்யா..எதிர்த்து பேசுறேன்னு நினைக்காதீங்க.

அவங்க வரலைன்னாலும் ஊர்க்காரவங்க பேசுவாங்கய்யா. புவிய பத்தி யாரும் தப்பா பேசினா என்னால தாங்க முடியாது. அவ இப்ப ஸ்கூல் தான் படிக்கிறா. அவ பேரு கெட்டு போயிரும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உங்க வீட்லயும் பொண்ணு இருக்கால என்று அவன் பேச அமைதியானார். பிரதீப்பும் ஜானு ஆதேஷ் வீட்டில் இருக்கிறாளே? என்று நினைத்தான்.

துளசி தருண் முன் வந்து, நாளைக்கு ஒரு நாளாவது இருக்கட்டுமே மாமா என்றாள்.

மாமாவா? என்று தருண் துளசியை பார்த்தான். அவள் தீனாவை பார்த்தாள்.

இல்லம்மா..அது சரியா இருக்காது.

ப்ளீஸ்..நாளைக்கு நான் ஊருக்கு கிளம்ப போறேன் துளசி கூற, புவனா கையை விடுத்து..ஊருக்கா? எங்க போற?

துளசி? என்று பிரதீப் அழைத்தான்.

அண்ணா…துளசி எங்க போகப் போறா? என்று கேட்டான்.

கொஞ்ச நாள் அவ..ஊருக்கு போனா நல்லா இருக்கும். அவ போறதை நாங்க யாருக்கும் சொல்லலை. அபிக்கு கூட தெரியாது. வெளிய சொல்லாத..அவள் கிளம்பிய பின் சொல்லிக்கலாம் என்று பிரதீப் கூறினான்.

ஆனால் அண்ணா..இப்ப இருக்கும் நிலையில் துளசி ஊருக்கா?

அதான் வெளிய சொல்லல?

எதுக்குண்ணா? அவசியமா?

போனா நல்லதுன்னு தோணுச்சு என்றான் பிரதீப்.

யோசித்த தருண்..நாளைக்கு கூப்பிட வாரேன். ஆனால் இப்பொழுது கொஞ்ச நேரம் தனியா பேசணும் என்றான். தீனா நிம்மதி பெருமூச்சு விட்டான்.

துளசி சோகமாக அமர்ந்தாள். அவளிடம் மீனாட்சியும் வெற்றியும் வந்தனர். மீனாட்சி அவர் மடியில் துளசி தலையை சாய்ந்தார். அவரை பார்த்த துளசி அவர் மடியில் புதைந்து அழுதாள். வெற்றி தன் மகளின் காலை அவர் மடியில் வைக்க, அப்பா..என்று காலை இழுத்தாள்.

நீ படுத்துக்கோம்மா..வெற்றி கூற, சாரிப்பா..அவங்க பேச்ச கேட்டு உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று அவர் மார்பில் புதைந்து அழுதாள்.

வெளியே தருண் புவனாவை ஊஞ்சலில் அமர வைக்க, கொஞ்சம் தள்ளி..பிரதீப் துகிராவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

அண்ணா..எல்லாமே மாறிப் போச்சு. அம்மா, அப்பா என்று தருண் தோளில் சாய்ந்து அழுது கொண்டே நான் ரொம்ப பயந்துட்டேன் அண்ணா. அவரோட அம்மா தான் என்னை பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் அண்ணா..அவர் வேலை இருந்தாலும் முடிச்சிட்டு வந்து என்னை பார்த்துட்டு தான் தூங்கவே போவார். நானும் அவரை ஏற்றுக் கொண்ட பின்..அவர் என்னருகிலே வந்தார். ஆனால் தவறாகவே நடந்து கொள்ளவில்லை.

ஹாஸ்பிட்டலில் நான் வலியால் அழுத போது..வேலைய கூட பார்க்காமல், நான் தூங்கிய பின் தான் சென்றார். இருவரும் ஹாஸ்பிட்டலில் தனியா தான் ஒரே பெட்டில் இருந்தோம். நான் வலியால் அவதிப்படும் போது தான் என்னை அவர்..அவர்..என்று தயங்கினாள்.

சொல்ல நினைக்கிறத முழுசா சொல்லிடு.

அவர் மேல போட்டு தான் தூங்க வைத்தார். ஒரு முறை எழுந்து பார்த்த போது அவர் அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நெஞ்சில் அடிபட்டிருந்தது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

அண்ணா..நான் அவரை முழுசா நம்புகிறேன். அவர் யாருடனும் தவறாக நடந்து கொண்டதில்லை. சும்மா தான் சுற்றிக் கொண்டிருந்தார்.

புவி..நான் உன்னிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன்? அதுக்கு மட்டும் பதில் கூறு.

சார்.. போலீஸ். அவருக்கு அடிபடும். அப்புறம் கொலைமிரட்டல் வரும். எப்பொழுதும் ஸ்டேசன்ல தான் இருக்கிற மாதிரி இருக்கும். உனக்கு இது எல்லாமே ஓ.கேவா?

அண்ணா..என்று தயங்கிய புவி. எனக்கு அவரை பிடிச்சிருக்கு. அவர் இல்லாமல் கஷ்டம் என்று மட்டும் தெளிவா புரிந்தது. ப்ளீஸ் அண்ணா..உன்னால அவர ஏத்துக்கமுடியுமா?

எனக்கு ஓ.கே தான். ஆனால் பிரச்சனையின் போது உனக்கும் பாதிப்பு ஏற்படுமோன்னு தான் பயமா இருக்கு.

அண்ணா..அப்படி பார்த்தால் எல்லா வேலையிலும் எதிரிகள் இருக்காங்க தான?

இருக்காங்கம்மா. ஆனால்..என்று தருண் சிந்தித்தான். தீனா கோபமாக பேசிக் கொண்டே வெளியே வந்தான். ஏன்டா ஒரு நாள் கூட வீட்ல இருக்க விட மாட்டீங்களே! ஏழறைய கூட்டி வச்சிருக்கீங்க?

வந்து தொலையிறேன் என்று கத்திய தீனா.

சார்..என்ன சார் நீங்களாவது கவனமா இருந்திருக்கலாம்ல? புவனாவிற்கு அவரை பார்த்துக் கொண்டாரே அவர் என்று புரிந்தது.

சரிங்க சார் வாரேன் என்று தருண், புவனாவை பார்த்து சிறுபுன்னகையை காட்டி விட்டு பிரதீப்பிடன் கோபமாக வந்தான். அவன் துகிராவிடம் பேசிக் கொண்டிருக்க,

டேய்..அண்ணா..எழுந்துருடா..என்ன பண்ணியிருக்க? என்னிடம் சொல்லணும்ன்னு உனக்கு தோணவேயில்லையா? என்று தீனா கத்த, வீட்டினுள் இருந்தவர்களும் வந்தனர். புவனாவும் எழுந்திருக்க, தருண் அவளை அழைத்துக் கொண்டு தீனாவிடம் வந்தான்.

எதை கேக்குறடா? என்று தீனா அடிக்க கையை ஓங்க, வெற்றி வெளியே வந்து சத்தமிட்டார்.

வாங்க…இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க? தீனா மீண்டும் சினத்துடன் கத்த, என்னன்னு சொல்லுடா? எதை சொல்ற? புரியல என்று பிரதீப்பும் சத்தமிட்டான்.

மதியம் ஹாஸ்பிட்டலில் என்ன நடந்தது? யார பிடிச்ச? ஸ்டேசன்ல ஒப்படைச்சு இருக்க? என்ன நடந்தது? சத்தமிட்டான் தீனா.

பிரதீப் தயங்கி அனைவரையும் பார்த்தான். பின் அனைத்தையும் கூறினான்.

ஓ..இப்ப வேற யாரையோ பிடிச்சிருக்க? அதையும் சொல்லல? தீனா பிரதீப்பிடம் கோபப்பட்டான்.

அதுக்கு என்னடா இப்ப? வெற்றி கேட்க,

அப்பா..சைலேஷ் சாரை கொல்ல வந்தவன் ஸ்டேசனலயே தற்கொலை பண்ணிட்டானாம். என்னோட ஆளுங்களும் என்னிடம் சொல்லல. பக்கத்து ஊர்ல என்னோட ஸ்டேசனை பற்றி இழிவா பேசுறானுக. நம்ம ஊர் கமிஷ்னர் கழுவி கழுவு ஊத்தி இருக்கார். இப்ப இந்த விசயம் வெளிய போனா? அவ்வளவு தான் என்று விடாமல் கத்தினான்.

நான் விடுப்பில் இருப்பதால் அதுவும் அம்மா இறந்த காரணத்துனால என்னை விட்டு வச்சிருக்கானுக.

நான் நாளை தான் வருவேன். ஸ்டேசன் போகணும். கமிஷ்னரை பார்க்க போகணும். சிட்டிக்கு போகணும். நேராகும். வாரேன் என்று கோபமாக அவன் நகர்ந்தான்.

ஒரு நிமிஷம் நில்லுங்க..சாப்பிட்டு போகலாமே?

இல்ல புவி. பசிக்கலை என்று அவன் ஜூப்பை செலுத்தினான். பிரதீப்பும் நான் வாரேன். கோபிச்சிக்காதடா என்று தீனாவை பார்த்து விட்டு துகி உள்ள போ என்று வெற்றியிடம் கவனமா இருங்க என்று சொல்லி தருணை பார்த்து சென்றான். இங்க வேற யாரும் இல்லாததால் தருணுக்கும் போக மனதில்லை. அவனும் அங்கே தங்க..இதயா அவனை  பார்க்கணும் என்றாள்.

இப்ப எப்படி வர்றது? நீ வெளிய வா..போதும் என்றாள்.

தருண் வெளியே வந்து பார்த்து, தனியா இந்த குளுருல வரணுமா? என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க, ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

எனக்கு ஒன்றுமில்லை. அவளை விலக்கி விட்டு..இங்க பாரு லேசான காயம் தான் என்று அடிபட்ட இடத்தை காட்டிக் கொண்டிருந்தான். வெற்றியும் மீனாட்சியும் வெகு நாட்களுக்கு பின் தனியாக இருக்கிறார்கள். மீனாட்சி அழுது புலம்ப அவரை அணைத்த வெற்றி..முடிஞ்சத விட்டுருவோமே? கேட்டார்.

தலையசைத்த அவருக்கு வெளியே ஏதோ நிழல் தெரிய மீனாட்சி ஜன்னலருகே வந்தார். வெற்றியும் பின்னே வந்தனர். வெளியே தருண், இதயா பேசுவதை பார்த்தனர். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர்.

மீனாட்சி வருத்தமாக, நாம் சேர்ந்த முதல் நாளே பசங்களுக்கு பிரச்சனை?

நீ வேறம்மா..தீனா எல்லாத்தையும் சமாளிப்பான். அவனது தைரியமும், பிரதீப் பொறுமையும், அவன் கையாளும் விதமும் எந்த பிரச்சனையையும் தீர்க்கும்.

நாளைக்கு பாரு. வரும் போது இருவரும் சிரித்துக் கொண்டே சேர்ந்து வருவாங்க என்றான். அது தான் நாளைக்கும் நடக்கப் போகுது.

இதயா கிளம்ப, துகிரா வந்து அமர்ந்தாள். அவளை பார்த்த தருண்..அருகே அமர்ந்து..நீயும் புவியும் எனக்கு ஒன்று தான். வருத்தப்படாத..ஆதேஷும் ரெண்டு நாள்ல வருவான்.

அவன் வந்து, என்ன ஆகப் போகிறது?

என்ன இப்படி சொல்ற?

எப்படி சொல்றது? நீங்களும் புவியும் உடன் பிறந்தவங்க. ஆனால் எனக்கு அப்படி யாரும் வேண்டாம்ன்னு தானே வந்துருக்கேன்.

நீயா எதுவும் நினைக்காதே? ஆதேஷ் அவ்வப்போது பிரதீப் அண்ணாவிடம் பேசிக்கொண்டு தான் இருக்கான்.

அவனோட மாமா. பேசுறான்.

ஏ,..நீ அவனுக்கு இல்லைன்னா? பிரதீப் அண்ணா எப்படி அவனுக்கு மாமா?

ஜானுவுக்காக பேசுவான்.

இல்ல ஜானுவ காதலிக்கிறான். அவளுக்காக ஒருவனை சூட் செய்திருக்கிறான். எல்லாமே செஞ்சுருக்கான். ஆனால் என்று அவன் ஆரம்பிக்க, அவன் போன் அழைத்தது.

இங்க பாரு இந்த நேரத்துல எனக்கு கால் பண்றான். நீ கேட்கிறாயா? தருண் கேட்க, சரி என்று தலையசைத்தாள்.

இந்த நேரத்துல, என்னடா?

மாமா இருவருமே போனை எடுக்கலை. நீங்க ஊர்ல இருக்கிறதா சொன்னாங்க. அதான் ..

என் மேல அக்கறையில போன் செய்தாயா?

உங்க மேலையா? இல்ல..துகி என்ன பண்றா? பார்த்து சொல்றீங்களா?

நான் என்னோட வீட்ல இருக்கேன் டா.

மாமா வீட்டுக்கு போய் பார்த்து சொல்லுங்க?

இந்த நேரத்துல போன தப்பா நினைக்க மாட்டாங்களா?

அதெல்லாம் யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க சீனியர்.

அப்புறம், ஏன்டா அவள விட்டு ஊருக்கு போன?

அதுக்கு, வாழ்நாள் முழுவதும் பக்கத்துல இருந்து சண்டை போட சொல்றீங்களா? அதுக்கு ஜானுவே பரவாயில்லை. சண்டைய குறைச்சுட்டா. துகி ஜானுவ பார்த்தா…இங்க இருக்குறது ஜானுவான்னு கேட்பா. அப்படி இருக்கா..

எப்படிடா? சைட் அடிக்கிறியாடா?

சீனியர், நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. போங்க..சீக்கிரம் கிளம்புங்க. அவ சாப்பாடு சாப்பிடவே மாட்டா. எப்பப்பாரு..திண்பண்டம் தான். அதுவும் சிப்ஸ நொறுக்குவா பாருங்க. நம்ம போன் பேசிட்டு திரும்புறக்குள்ள காலி பண்ணிடுவா. சாப்பிட தான் வரவே மாட்டா. அவ முதல்லவே எங்க வீட்டுக்கு வந்திருந்தா. அம்மா அவ தலையில போட்டாவது சாப்பிட வச்சிருப்பாங்க.

அவன் பேச பேச..அழுதாள் துகிரா. சரிடா..பார்த்துட்டு கால் பண்றேன். மாமாவிடம் தினமும் கேட்பேன். அவங்க எடுக்க மாட்டிக்கிறாங்க. எதுவும் பிரச்சனையா?

டேய்..ஒழுங்கா வச்சிரு. நானே கால் பண்றேன் என்று தருண் போனை வைத்தான்.

இப்ப என்ன சொல்ற?

நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என்னோட அப்பா ஒரு நாள் கூட இப்படி பாசமா பேசியதேயில்லை.

ஏம்மா..அவனா பாசமா பேசினான். உன்னை திட்டுறான்.

ம்ம்..திட்றானல. அவன் திட்டுனா கூட நல்லா இருக்கும். என்னோட வீட்ல நான் அங்கிருக்கும் கட்டிடம் மாதிரி தான். அப்பா வந்தா..என்னை பார்ப்பார். சாப்பிடுவார். பேசகூட மாட்டார். அப்படியே திரும்பி போயிடுவார்.

எனக்கு உண்மையிலே அவர பிடிச்சு தான் கூட வந்தேன். ஆனால் ஏன் இதையெல்லாம் தப்பா பேசுறாங்க? என்று அழுதாள்.

அழாத. அண்ணாவ பத்தி எல்லாருக்குமே தெரியும். அண்ணா பக்கத்துல ஒரு பொண்ணு கூட நெருங்க முடியாது. அப்படி கடந்துடுவார். நீ தான் மாட்டுன. இல்ல..இல்ல.. அண்ணா.. தான் உன்னிடம் மாட்டினார்.

எனக்கு யார் என்ன பேசினாங்கன்னு தெரியாது. பிரதீப் அண்ணா காதலிக்கிற முதல் பொண்ணும் நீ தான். கடைசி பொண்ணும் நீ தான். உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். அவருக்கு யாருமில்லாதப்ப…ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டார். ஜானுவும் தான். ஆனா உன்னால தான் அவரை அறியாமலே அவரிடம் புன்னகையை பார்த்ததாக புவியும் சொன்னா.

ஜானுவுக்கு அவ லெவலுக்கு விளையாட, பேச யாருமில்லை. அண்ணா..மற்றவற்றை கவனிப்பதால் அவள் தனியாக இருந்தாள். அதான் அன்று உன்னை காரணம் காட்டி இருப்பாள். அவளையும் தப்பா எடுத்துக்காத.

உனக்கு காதலை சொல்ல வைக்க டிரிக் இருந்தா அர்ஜூனுக்கு சொல்லு. அவனும் வெகு காலமாக ஸ்ரீயை காதலிக்கிறான். அவளுக்கு புரிய வைக்க யாருமேயில்லை.

நாம ஏதாவது பண்ணலாமா?

நீ வேற..நானும் நினைச்சேன். ஆனால் அவள் அர்ஜூனை காதலிப்பது எல்லாருக்கும் தெரியும் என்று அவளுக்கே தெரியுமாமே?

அவள் அர்ஜூனிடம் காதலை சொல்ல மாட்டேங்கிறாள். அவள பத்தி உனக்கு தெரியாது. அவ சொல்லக்கூடாதுன்னு முடிவெடுத்தா சொல்லவே மாட்டா.

சரி..நாம அர்ஜூனிடம் சொல்லலாம்.

எப்படி? ஸ்ரீ உன்னை காதலிக்கிறாள் என்றா? அவன் ஏத்துக்கமாட்டான்.

காதலை..காதலிப்பவர்கள் கூறணும். அர்ஜூனை பற்றி எனக்கு நல்லா தெரியும்? அவன் நம்ம சொல்றத நம்பினாலும் ஸ்ரீ தான் சொல்லணும்ன்னு நினைப்பான்.

அப்புறம் என்ன தான் பண்றது? முதல்ல.இந்த கொலைகாரனை பிடிக்கணும். அப்ப தான் அர்ஜூன் ஸ்ரீயை சேர்த்து வைக்கும் வழி கிடைக்கும். இதுல அவன் அம்மா வேற..

நீ போ..தூங்கு. நாளைக்கு பேசிக்கலாம் என்று இருவரும் உள்ளே சென்றனர். இந்த பசங்கள பற்றி எல்லாவற்றையும் வெற்றி மீனாட்சியிடம் கூறினார். எல்லாருடைய பெற்றோரையும் மீனாட்சிக்கு தெரியும். ஆனால் பசங்க யாரும் தெரியல. அவர் விளக்கினார்.

சைலேஷ் காரில் சென்று கொண்டே மாதவிடம், டேய்…தயாரா இரு. உன்னொட மற்றொரு குடும்பம் ஹாஸ்பிட்டலுக்கு வாராங்க?

அம்மா, அப்பாவா? பதறினான் மாதவ்.

டேய்..உன்னோட அம்மா, அப்பா இல்லை. யாசுவோட அம்மா, அப்பா..

அவங்க வாராங்களா? சார்..வேண்டாம் சார். அவங்க வர வேண்டாம் என்றாள் யாசு.

ஏன்மா, சார்..அப்பாவுக்கு..என்று மாதவை பார்த்து போலீசே..பிடிக்காது.

என்ன? அப்ப என்னையும் உன்னோட அப்பா ஏத்துக்கமாட்டாரா? புலம்பினான். நித்தி அப்பா முகத்தில் புன்னகை.

சைலேஷ் சும்மா..இல்லாமல் சரிடா..அப்ப யாசுவை விட்டுரு. வேற பொண்ண பார்த்துக்கலாம். சரியாம்மா? கேட்க,

சார்..நீங்க அவர் ப்ரெண்டு தானா? இப்படி பேசுறீங்க?

சும்மா தான்ம்மா. பார்த்துக்கலாம் என்றான்.

டேய்..நீ நார்மலா பேசு. எதையாவது பேசி சொதப்பிடாத சைலேஷ் கூற, நித்தி அவனை முறைத்தாள்.

மாதவ் தனியே வந்து, டேய்…சந்துரு, அந்த பொண்ணு யாழினி முழிச்சிட்டான்னு ஏதாவது சொன்னாளா? கேட்டான். காரை நிறுத்திய சைலேஷ் அவனது கார் சிஸ்டத்தை அழுத்தும் முன்..நித்தி அவனது கையை பிடித்து தடுத்தாள். பேசுங்க என்றாள்.

இல்லை என்று தலையசைத்தான். டேய்..லையன்ல இருக்கியா? இல்லையா? மாதவ் கத்தி விட்டு போனை அணைத்தான்.

சார்..அவங்க உயிரோட இருக்காங்களா? கவினும் கேட்டான். கேசவன் மூவரையும் ஆர்வமுடன் கவனித்தார்.

சொல்லுங்க என்று நித்தி கோபப்பட, சொல்றேன்.. அவ கோமாவில் இருக்கா. அவளிடம் இருக்கும் ஆதாரம் அந்த கொலைகாரனை அழிக்கும். ஆனால் மொத்த விவரமும் எங்க வச்சிருக்கான்னு தெரியல. அவள் விழித்தாள் தான் அனைத்தும் தெரியும்.

அர்ஜூனுக்கு தெரியுமா? கவின் கேட்டான். தெரியும் என்றான் சைலேஷ்.

அந்த போதை மருந்த ஸ்ரீ திருட்டுத்தனமா கண்டுபிடிச்சி அர்ஜூன் சண்டை போட்டு..என்று கவின் நடந்ததை கூறினான். ஆனால் அது வேற போதை மருந்து என்று சொல்ல..கேசவன் ரெண்டும் ஒன்றாக இருக்க கூட வாய்ப்புள்ளது. போதை மாத்திரை ஒன்றின் சிறு சிறு துகள்களை எடுத்து கூட ஆயிரக்கணக்கான மருந்து தயாரிக்க முடியும் என்றார். மூவரும் கேசவனை பார்த்தனர்.

இந்த விசயம் வெளிய தெரிஞ்சா உண்மையிலே யாழுவ கொன்னுடுவாங்க. அதனால தான் ரகசியமா அவளை பாதுகாத்து வந்து கொண்டிருக்கிறான்.

இன்பா மேம்கு தெரியுமா? நித்தி கேட்டாள்.

இல்ல..தெரிஞ்சா..யாழுவ பார்க்கணும்ன்னு பிடிவாதம் பண்ணுவா? அதனால சொல்லல். ப்ளீஸ் சொல்லிறாதீங்க என்றான்.

கைரவ் கால் செய்தான். சொல்லுடா..அந்த பொண்ணுக்கு இப்ப எப்படி இருக்கு? அவ எழுந்தா அண்ணா. சரியா சாப்பிட முடியல. ஜூஸ் மட்டும் குடிச்சிட்டு படுத்துட்டா..எழுப்பினா கண்ணை விழித்து தொந்தரவு செய்யாதேன்னு சொல்றா? நான் என்ன செய்தேனாம்?

அவ இப்ப நார்மலா இல்லை. விடுடா. அவள் ஓய்வெடுக்கட்டும் நித்தி கூறினான்.

என்னத்த? காலையில இருந்து தூங்கிகிட்டு தான் இருக்கா?

ஏய்..நீ அவளோட அறையில என்ன செய்ற? நித்தி கேட்க, அண்ணா..நான் சும்மா தான் பார்க்க வந்தேன்.

டேய்..கேட்கிறது நான். பதில் உன் அண்ணனுக்கா?

ரெண்டு பேருமே ஒண்ணா தான வாரீங்க? நீயும் கேட்டுக்கோ?

உனக்கு திமிரு வச்சுப் போச்சு..

கையூ..அவன் வந்தானா?

இல்லண்ணா. அவன் வரலை.

தாத்தா?

அவர் கல்லூரிக்கு போயிருக்கார். சரி..எதுக்கும் கவனமா இருங்க. அர்ஜூன் பிரச்சனை வராதுன்னு சொன்னான். இருந்தாலும் எல்லாரையும் பார்த்துக்கோ என்று போனை வைத்து விட்டு,

சைலேஷ் கேசவனிடம் மாமா..என்னோட தம்பி கைரவ் என்றான்.

அன்று பார்த்தேன். ஆனால் சரியாக நினைவில்லை என்றார். கவின் மூவரையும் கவனித்துக் கொண்டே வந்தான்.

மாமா நீங்க எங்க போகணும்? சைலேஷ் கேசவனிடம் கேட்டான்.

அகில், யாசுவ பார்த்துட்டு போறேன். ஹாஸ்பிட்டல் போங்க என்றார்.

நித்தி அவள் அப்பாவை முறைக்க, அவர் பாவமாக முகத்தை வைத்திருந்தார். கவின் நித்தியை முறைத்தான். சைலேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. ஹாஸ்பிட்டல் வரவும் எல்லாரும் உள்ளே சென்றனர். கவினை நிறுத்தி சைலேஷ் கேட்க, அவன் கூறியதை கேட்டு, எப்ப நடக்கும்?

நாளைக்கு இரவு சார் என்றான் கவின். நீ போவியா? ஆமா சார் எல்லா வருடமும் போவேன். நான் அவளை அழைத்து வர முயற்சி செய்றேன் சைலேஷ் கூற,

நீங்க சொல்லியாவது அவள் வரணும்? என்றான்.

யாசு அறைக்கு…அவள் பெற்றோர்கள் செல்ல..மாதவ் அவளருகே யாசு கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவள் அப்பா அவனை பார்த்து முறைத்தார்.

வாங்க..அங்கிள். உட்காருங்க..என்று அவரை கவனிக்க ஆரம்பித்தான். யாசு அம்மா அழுது கொண்டு, ஏன்டி தேவையில்லாத விசயத்துல தலையிடுற?

அம்மா..நான் இப்ப நல்லா இருக்கேன். முதல்ல அழாதீங்க. எனக்கு ஒருமாதிரி இருக்கு என்று அவள் அப்பாவை பார்த்து சாரிப்பா..நானே சொல்ல நினைச்சேன். ஆனால் அதற்குள் என்று மாதவை அழைத்து அவன் கையை பிடித்தாள். அவர் கோபமாக அவன் கையை தட்டி விட்டு..நீ அகில தான காதலிக்கிற?

இல்லப்பா..அது புரியாம ஏதோ செஞ்சுட்டேன். ஆனால் அவனுக்கு வேற பொண்ண தான பிடிக்கும். நான் கஷ்டத்துல இருக்கும் போது இவர் தான் ஆறுதலா இருந்தார். ப்ளீஸ்ப்பா..என்று கெஞ்சினாள். அவளால் அதற்கு மேல் பேசமுடியாமல் சாய்ந்து படுத்தாள்.

நீ ஓய்வெடு பப்ளி..என்று அவர் அப்பா முன்னே அழைத்தவன். அங்கிள், ஆன்ட்டி நாம பேசலாமா? என்று அழைத்தான். மீண்டும் கதவை திறந்து யாரோ வருவது போல் இருக்க, அவர்கள் முன் வந்து நின்றான். வந்தது மாதவின் அம்மா, அப்பா, தங்கை.

அப்பா..நீங்க இந்த நேரத்துல? என்று பதட்டமானான். உள்ளே மாதவை ஏற்றுக் கொள்ளாத மாமனார், வெளியே அவன் அப்பா..

அப்பா..நாளைக்கு பார்க்கலாமே? அவளோட பெற்றோர்கள் வந்திருக்காங்க என்றான்.

வழிய விடுடா என்று அவன் அம்மா உள்ளே நுழைந்தார் கையில் பழங்களுடன். ஏய்..வாடி என்று மாதவின் தங்கையையும் இழுத்து உள்ளே சென்றார்.