வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-72
137
அத்தியாயம் 72
என்ன பண்றீங்க? என்று கூலாக விரலில் மெதுவடையை மாட்டி கடித்துக் கொண்டு நிவாஸ் கேட்க, இதயா அவனை பார்த்து விட்டு எரிச்சலுடன் நகர்ந்து சென்றாள்.
நான் சாப்பிட தான செய்கிறேன். எதுக்குடா உன்னோட ஆளு மூஞ்சிய இப்படி வச்சுட்டு போறா?
சீனியர் அவங்களுக்கு என்னாச்சு? அபியிடம் ஸ்ரீ கேட்டாள்.
அவனும் வருத்தமுடன் அவர்களை கடந்து சென்றான்.
ஸ்ரீ..நாம குடுக்காம சாப்பிட்டுறோம்ன்னு கோபமா இருக்குமோன்னு நிவாஸ் பேச, பெரியவர்கள் அனைவரும் அவனை முறைத்தனர்.
உங்களுக்கு காயத்ரிக்கா பத்தி தெரியுமாம்மா? என்று வினிதாவின் பெற்றோர்களை பார்த்தான் அர்ஜூன்.
சொல்லுவா.. பக்கத்து வீடு தான். அந்த பொண்ணை ரொம்ப நாளாவே காணோம். அவ ஓடிப்போயிட்டான்னு சொன்னாங்க. கொஞ்ச நாள்ல அவ அம்மா, அப்பா காணோம். வேரெதுவும் தெரியாதுப்பா.
ஏதோ தப்பா இருக்குல்ல? தருண் கேட்டான்.
ஆமா, கண்டிப்பா ஏதோ இருக்கு அர்ஜூன் சிந்தனையுடன் கூறினான்.
இப்ப என்ன பண்ணப் போற அர்ஜூன்?
வினிதா அக்கா மாதிரி இவங்கள விட்றக் கூடாது என்ற அர்ஜூன் எடிட் பண்ணப் போறேன். போதை மருந்தை பற்றி ய இந்த வீடியோவை இப்பொழுது வெளியிட்டால் அது எங்கு தயாரிக்கிறார்கள்? எங்கே ஏற்றுமதி, இறக்குமதி நடக்குது எல்லாவற்றையும் கண்டறிய முடியாது. அனைத்தும் வீணாகிவிடும். இப்பொழுதைக்கு அவங்கள காப்பாற்றுவது தான் முக்கியம் என்று அவன் வேலையை ஆரம்பித்தான். தருண் அர்ஜூன் அருகே இருக்க..உன்னால கார் ஓட்ட முடியுமா? உன்னை சீஸ் பண்ணி வந்தாலும் செல்ல முடியுமா? அர்ஜூன் கேட்க,
எங்க போகணும் அர்ஜூன்?
நம்ம ஊருக்கு.
என்ன திடீர்ன்னு?
நடக்குறது சரியா படலை. நீ மேம்மோட அம்மா, இதயா. அப்புறம் காயத்ரிக்கா, அவங்க பையனை அழைத்து ஊருக்கு போகணும் என்றான் அர்ஜூன்.
அவங்க எப்படி?
இதுல தான் பார்த்தோமே?
நான் இப்பவே இதை புது அக்கவுண்ட் தொடங்கி அதில் போட்டு சோஷியல் மீடியாவில் விசயத்தை பரப்புகிறேன். கொரியராக நம்மிள் ஒருவன் போலீஸ் ஸ்டேனசில் சென்று கொடுக்கணும். பின் அந்த அக்காவை ஆட்டோவில் ஓரிடத்திற்கு வரச் சொல்லி அவங்கள ஆட்டோவின் மூலம் நம் காருக்கு ஏதாவது சிக்னலில் வைத்து நம் காருக்கு. மாற்றி நீ உடனே கிளம்பணும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. பார்த்து கவனமா இருக்கணும் தருண் என்று அர்ஜூன் கூறினான். சிக்னல் கிராஸ் பண்ண பின் நிறுத்தாது காரை ஊர் பக்கம் செலுத்து, நான் தீனா, பிரதீப் அண்ணாவிடம் கூறி விடுகிறேன் என்றான்.
வாவ்..சூப்பர் திட்டம். ஆனால் இப்பொழுது தான் வெளியிட வேண்டாம்ன்னு சொன்ன?
சொன்னேன். ஆனால் அது சரியா இருக்காது. அந்த அக்காவுக்கு ஏதாவது ஆனால்? வீடியோ போட்டவுடன் அவன் அந்த அக்காவை தான் பார்க்க செல்வான். அதற்குள் அவங்கள நீ பிக் பண்ணணும்.
ஓ.கே டா என்றான் தருண்.
அர்ஜூன் வேகமாக எழுந்து இன்பா இருக்கும் அறையை தட்டினான். அனைவரையும் ஓரிடத்தில் வைத்து திட்டத்தை கூறினான். பாட்டியை வினிதா அம்மா சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார்.
மேம்..நீங்க இங்க தான் இருக்கணும். ஆன்ட்டி..மேம்மை நாங்க பார்த்துக்கிறோம். சைலேஷ் சார், சந்துரு சார் எல்லாரும் இங்க தான் இருக்காங்க. எங்க மேல நம்பிக்கை இருந்தா..
அவ இங்கேயே இருக்கட்டும். ஆனால் பார்த்துக்கோங்க என்று ஸ்ரீயிடம் வந்து பார்த்துக்க சொல்லி கேட்டார். அவளுக்கு புரியவில்லை இருந்தாலும் சரி என்று தலையாட்டி வைத்தாள்.
அபியிடம் வந்து, உன்னை நம்பி விட்டுட்டு போறேன் என்று இன்பாவை பார்த்தார் அவள் அம்மா. இன்பா அமைதியாக இருந்தாள்.
நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன் என்ற அபி தருணை பார்த்து, கவனமாக இரு. உனக்கு பிரச்சனையில்லையே? நீ நல்லா தான இருக்க? உன்னால அழைத்து போக முடியுமா? கேள்வி கணைகளை தொடுத்தான்.
என்னால முடியும். நானும் புவியை பார்க்கணும் என்றான்.
கொஞ்ச நேரம் காயத்ரிக்கா போன் செய்வாங்க. அப்புறம் கிளம்புங்க அர்ஜூன் கூற காயத்ரியிடமிருந்து போன் வந்தது. அவரிடம் திட்டத்தை கூறி விட்டு சோஷியல் மீடியாவில் அர்ஜூன் அந்த வீடியோவை போட்டு விட்டான். உடனே காயத்ரி தன் மூன்று வயது மகனை தூக்கிக் கொண்டு அர்ஜூன் திட்டப்படி தருணிடம் வந்து சேர்ந்தாள். அவர்கள் காரில் தருண், இன்பா அம்மா, இதயா சென்றனர். காயத்ரி ஏறியவுடன் அர்ஜூன் கூறியது போல் வேகமெடுத்தான்.
கவின் வேலுவை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான். கவின் அம்மா அகல்யாவை திட்டும் சத்தம் கேட்டது. அவன் அப்பா தாத்தாவுடன் இருந்தார். நந்துவும் வேலு தாத்தாவிடம் இருந்தார்.
அகல்யாவிற்கு அவன் காதலன் வாங்கிக் கொடுத்தது அனைத்தையும் தூக்கி எறிந்து கொண்டிருந்தாள்.
நான் கீழ எடுத்து போடுறேன்டி வீட்டை குப்பையாக்காதே அவள் அம்மா கூறிக் கொண்டே அவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். அகல்யா அழுவதை கூட கவனிக்காமல் அவர் திட்டிக் கொண்டிருந்தார். அனைத்தையும் தூக்கி எறிந்த அகல்யா..அவனுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தாள். அழுது கொண்டு அதை எடுத்து தூக்கி எறிய கவின் வேலு காலடியில் வந்து சில்லு சில்லாய் நொறுங்கியது. உடைந்த துண்டை விட்டு புகைப்படத்தை மட்டும் கையில் எடுத்தான் வேலு. அதில் இருவரும் அழகாக சிரிப்பது போல் இருந்தது. அதை கையில் வைத்துக் கொண்டான்.
வீட்டை பார்த்தால் அனைத்தும் திண்பண்டங்கள் சிதறிக் கிடந்தது. அதனிடையே அவளது கை போன்ற அமைப்பு ஐஸில் வார்த்து தனியே உடைந்து இருந்தது. அருகே ஒரு ஆணின் கை இரண்டாக பிளவுபட்டு ஐஸ் உருகிக் கொண்டிருந்தது. வேலுவிற்கு புரிந்தது இருந்தாலும் அவளது கையமைப்பை எடுத்து சமையலறை பக்கம் சென்று குளிர்சாதனப்பெட்டியில் வைத்தான்.
ஏய்..பூசணிக்கா..என்ன வீட்டை இப்படி போட்டு வச்சிருக்க? கவின் கத்திக் கொண்டே அகல்யா அறை பக்கம் சென்றான். அவள் கதவை சாத்தி அழுது கொண்டிருந்தாள்.
கதவை திற..அக்கா..என்று பதறினான் கவின்.
அவன் சத்தம் கேட்டு தான் வேலுவையும் கவனித்தார் கவின் அம்மா.
அய்யோ..உட்காருங்க மாப்பிள்ள..என்று அவர் கூற, அத்தை.. அகல்யா என்று அறையை பார்த்தான்.
அவளே கதவை திறப்பா..என்று கூற, வேலுவும் மனசு கேட்காமல் கவினருகே வந்தான். அழுது கொண்டிருந்த அகல்யா கதவை திறந்து போனை வெளியே தூக்கி போட்டு. இத முதல்ல கீழ போடு. போன் போட்டு கிட்டே இருக்கான் இரிட்டேட்டிங் பெல்லோ..என்று கத்தி விட்டு கதவை மூட, கதவில் கை வைத்து வேலு தள்ளினான்.
மாமா..என்று கவின் அழைப்பதற்குள், நோ..என்று தலையை ஆட்டினான். அவள் கத்தியவுடன் அவள் அம்மாவும் அங்கு வந்தார்.
டேய்…கொஞ்ச நேரம் தனியா விடுறியா? என்று கதவை இரு கையால் தள்ளினாள்.
சொல்றேன்ல புரியலையா? என்று அவள் திட்ட, வேலுவின் ஒரே தள்ளுதலில் கீழே விழுந்தாள்.
போண்டா தலையா..? என்று நிமிர்ந்து பார்த்தாள் கண்ணீருடன். வேலுவை பார்த்து வார்த்தை வராமல் அமைதியாக கண்ணீர் மட்டும் நிற்காது வந்து கொண்டிருந்தது.
மாமா என்று எழுந்தாள். கையை கட்டிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வேலு. கவினை தேடினாள். அத்தையும் மச்சானும் வெளிய இருக்காங்க என்றான். வேலுவின் சிறு கண்ணசைவிலே இருவரும் நகர்ந்து சென்றனர்.
மாமா..என்று அவள் வார்த்தைகள் தடுமாறியது.
சொல்லு..என்று அவளது மெத்தையில் அமர்ந்து அறையை சுற்றி பார்த்தான்.
நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் என்றாள்.
நான் கேட்பதற்கு மட்டும் தெளிவா பதில் சொல்லு. நீ அவர மறக்க முடியாம அழுறியா? அவர் திருமணத்தை நிறுத்த சொன்னதால அழுறியா?
நாங்க ரெண்டு வருசமா காதலித்தோம். எனக்காக ஒரு வருசமா காத்திருந்தார். அதுவே பெருசா தெரிஞ்சது. ஆனால் இப்ப அவன் திருமணத்தை நிறுத்த சொன்ன போது..எனக்குள் ஒரு கேள்வி? அவன் எதற்கு எனக்காக ஒரு வருசம் காத்திருக்கணும்? நான்கே நாளில் திருமணத்தை வச்சுட்டு நிறுத்த சொல்லணும்? புரியல மாமா.. இத்தனை நாளும் அவங்க அம்மா..என்னிடம் திமிருடன் பேசுவாங்க. அவமானப்படுத்துவாங்க. அப்ப அவங்கள எதிர்த்து பேசலைன்னாலும் என் கையை விட்டதில்லை. ஆனால் திருமணத்தை எப்படி நிறுத்த சொன்னான்? அகல்யா அழுது கொண்டே பேசினாள்.
வேலு கையிலிருந்த போன் அழைத்தது. அவன் தான் அழைக்கிறான். நீயே கேளு என்று போனை வேலு அகல்யாவிடம் நீட்டினான்.
மாமா..என்று தயங்கிய அகல்யா வாங்கிக் கொண்டு வேலு அருகே அமர்ந்தாள். கோபப்படாம மெதுவா பேசு..என்றான்.
அவள் போனை எடுத்தவுடன்..அகலு..என்னை மன்னிச்சிரு. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். ஆனால் என்னால் உன்னை விட முடியலை என்று அழுதான் அவன். வேலு அவளிடம் கேட்டது போல்..நான் கேட்பதற்கு மட்டும் பதில் கூறு? என்றவுடன் வேலு அவளை பார்த்து புன்னகைத்தான். அவனை புரியாமல் பார்த்தாள். பின் வேலுவிடம் கேட்டதை அவனிடம் கேட்டாள்.
அது..அகலு..அம்மா தான் டென்சன் ஆக்குறாங்கன்னா? ஆன்ட்டியும் சண்டைய ஆரம்பிச்சாங்கள்ளா? அதான் டென்சன் ஆகிட்டேன். ஆனால் கோபத்துல தான் திருமணத்தை நிறுத்த சொன்னேன்.
கோபமா? என்னை பற்றி ஒரு நிமிஷம் யோசிச்சியா? உங்க அம்மாவ பத்தி தெரிஞ்சு தான இருவருமே திருமணம் செஞ்சுக்கணும்ன்னு பேசினோம். என்னோட அம்மா பேசியது தான் உனக்கு பிரச்சனையா? அப்படி பார்த்தால் நான் உன் அம்மாவை பார்க்க வந்தப்பவே எல்லாத்தையும் முடிச்சிருக்கணும். அவங்க எவ்வளவு சீப்பா பேசுனாங்க? நீ வேடிக்கை தானடா பார்த்த?
நான் உன்னை மட்டும் தான் நம்பினேன். ஆனால் உன் குடும்பத்தையும் என் குடும்பமாக பார்த்தேன். அதனால் தான் உன்னோட அம்மா பேசும் போதெல்லாம் அமைதியா இருந்தேன்.
அகலு..நான்..இனி அம்மாவை ஏதும் பேச விட மாட்டேன். நான் உன்னை நல்லா பார்த்துப்பேன். ப்ளீஸ்..
நீ கோபத்துல இன்றைக்கு திருமணத்தை நிறுத்த சொன்ன? அதே போல் நாளை திருமணம் முடிந்து ஏதேனும் பிரச்சனைன்னு விவாகரத்து பண்ணா? நான் யாரிடம் போறது? என் அம்மாவிடமா? இல்லை என் தம்பியிடமா? உனக்கே தெரியும்? நம்ம கல்யாணத்துக்காக அவன் ஒரு வருசமா சரியா ஓய்வெடுக்காம கல்லூரி போய் வந்து வேலை செய்து நம்ம திருமணத்தை நடத்த அவ்வளவு ஏற்பாடு செய்து..என்று அழுதாள். வேலு அவள் கையை பிடித்து அழுத்தினான். அவனை பார்த்து விட்டு,..எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இத்தனை நாள் உன் அம்மா வார்த்தைகளை கிரகித்தது போல் என்னால் உன் பேச்சை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு இனி போன் செய்யாதே! நான் என் மாமாவை தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.
அவன் உனக்கு சூட் ஆக மாட்டான் என்று அவன் கூற, வேலு முகம் இறுக அமர்ந்திருந்தான்.
அப்படியா? நீ எனக்கு நல்லா சூட் ஆவேல..என்று சினத்துடன் அகல்யா.. பணம், உடையை வைத்து யாரையும் எடை போடாதே? உன்னை விட என் மாமா தான் எனக்கு பொறுத்தமா இருப்பார். உன்னிடம் இல்லாத நிறைய அவரிடம் இருக்கு. எனக்கு பணம் தேவையில்லை. காதலும் சந்தோசமும் போதும். இனி அவரை உன்னுடன் ஒப்பிட்டு பேசுன மரியாதை கெட்டுரும் என்று திட்டினாள். வேலு அகல்யாவை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
உன்னோட மாமா..காதல், சந்தோசம் உனக்கு கொடுப்பான். ஆனால் அவன் உன்னை தொட்டால் உனக்கு என் நினைவு வராதன்னு சொல்லு பார்ப்போம்.
வராதுடா நாயே..என்ன பேச்சு பேசுற? நான் உன்னோட உடம்புக்காக பழகல. காதல் இருந்தது. இப்ப கூட உன்னிடம் நல்லவிதமா தான் பேசிக்கிட்டு இருக்கேன். ஆனால் உன் புத்தி எப்படி போகுது பார். உன் அம்மா சொல்லியும் என்னை நீ விடாத காரணத்தால் உன் மீது அதீத நம்பிக்கை இருந்தது. ஆமாடா..நாம கிஸ் பண்ணி இருக்கோம். அது உன் மேலிருந்த காதலால். எனக்கு உன் மீது காமம் இருந்ததில்லை. ஆனால் இப்ப காதலும் இல்லைன்னா.. அதெல்லாம் காற்றோடு காற்றாகி விடும்.
சொல்ல நல்லா தான் இருக்கும். நீ அவன் கையை பிடிக்கும் போது கூட உன் கையில் நடுக்கம் தெரிந்தது அவன் கூற,
நடுக்கம் இருந்தது. ஆனால் உனக்கு தெரியாத ஒன்று சொல்லவா? நானும் மாமாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக தான் வளர்ந்தோம். உனக்கு சீனியர் அவர் தான்டா. என் வாழ்க்கையின் முதல் முத்தமும் அவர் தான் இறுதி முத்தமும் அவர் தான் அகல்யா கூற, வேலு உறைந்து அவளை பார்த்தான்.
என்னோட மாமாவுக்கு ஒரு முறை உடல்நலமில்லாததால் ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க. எப்ப தெரியுமா? ம்ம்..நாங்க ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். மாமா கண் விழிக்கவேயில்லை. எல்லாரும் பயந்து அழுதுகிட்டு இருந்தாங்க. எனக்கு ஃபர்ரி டேல் கதை ரொம்ப பிடிக்கும். நிறைய பார்ப்பேன். ஒரு கதையில ஹூரோ சாகும் நிலையில் இருக்கும் போது அவரை காதலிக்கும் பொண்ணு முத்தம் கொடுப்பா. உடனே ஹூரோ பிழைச்சிடுவார். இத பார்த்து என்று…வேலுவை பார்த்தவள்.. நானும் என் மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு முத்தம் கொடுத்தேன். ஆனா அப்ப காதல் இல்லை. பாசம் தான். நன் பாசத்துக்கே முத்தம் கொடுத்தேன். இப்ப அவரு என்னை காதலிக்கிறார். கல்யாணம் பண்ணிக்க போறோம். என்னால் என்னை அவருக்கு கொடுக்க முடியும் என்று தீர்க்கமுடன் சொன்னாள்.
வேலு மகிழ்ச்சி, அதிர்ச்சி..என எல்லாம் கலந்து அமந்திருந்தான். நீ நம்பலைன்னா..என்று அவன் போனை அணைத்து அவனுக்கு வீடியோ கால் செய்தாள். பதறி அவன் எடுத்து அவளை பார்க்க, அவள் எழுந்து வேலு மடியில் அமர்ந்து கைகளை அவன் கழுத்தில் மாலையாக போட்டு…போனை காதலனுக்கு தெரியும்படி வைத்து…மன்னிச்சிருங்க மாமா..நான் அன்று உங்களுக்கு தெரியாம முத்தம் கொடுத்துவிட்டேன் என்று அவன் இதழ்களோட அவள் இதழ்களால் உரசினாள். மாமா..நான் உங்க கேள்விக்கான பதிலை தருகிறேன் என்று முத்தமிட்டாள். வேலுவிற்கு கனவில் இருப்பதை போல் இருந்தது. அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்தான்.
மாமா..ஒரு நிமிஷம் என்று..அவனை நிறுத்தி, எனக்கு வேலை இருக்கு. நீ எனக்கு போன் செய்யாதே என்று கூறி விட்டு போனை தூக்கி எறிந்தாள்.
வேலு அவளை காதலுடன் பார்க்க..மாமா நம்ப முடியலையா? என்று கேட்டாள். ஆனால் அவனை விட்டு இறங்கவேயில்லை.
அவன் பார்வை முழுவதும் அவள் கண்கள், இதழ்கள் என மாறி மாறி அலைபாய, மாமா..நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசத்துக்கு பின் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால் ஆடம்பரமாக வேண்டாமே?
இல்லை பாப்பு..உனக்காக..
மாமா..நீங்க என்னை?
பாப்புன்னு தான் அழைப்பேன் என்றான்.
மாமா..நான் உங்கள ரொம்ப காத்திருக்க வச்சிட்டேனோ? அவன் பார்வை மாறாதிருந்தான். நாம கிஸ் பண்ணலாமா? அவள் கேட்க, அவள் முகத்தை கைகளால் அள்ளியவன் முகமெங்கும் முத்த மழையை பொழிந்தான்.
மாமா..உங்களுக்கு என் மேல இவ்வளவு காதலா? கிஸ் பண்ணுவோம்னு சொன்னா..முகத்துல முத்தம் கொடுக்குறீங்க?
காதல் இல்லை. உன் மேல எனக்கு பைத்தியம், ஆசை. கல்யாணத்துக்கு பின் தான் மத்ததெல்லாம்.
நீங்க இப்படி பேசுனா? எனக்கு உங்கள இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு என்றாள்.
அதனால என்ன? என்று அவன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி அவளுக்கு போட்டு விட..என்ன மாமா இது? இவ்வளவு லூசா இருக்கு? என்று உதட்டை பிதுக்கினாள்.
அவளை பார்த்து புன்னகையுடன்..வேண்டாம்ன்னா கொடு என்றான்.
மாமா..நீங்க தினமும் கையில வச்சிருக்கிற பொருள் ஏதாவது கொடுக்க என்று அவனது சட்டையை விலக்கி, செயின் போட்டிருக்கீங்களா? என்று பார்த்தாள்.
என் அத்தை எனக்கு சிறு வயதில் போட்டு விட்டதை விட வேறெதுவும் இல்லை.
அம்மா..கொடுத்ததா? ஆனா..பெருசா இருக்கு?
எனக்கு பத்தலைன்னு கொஞ்சம் பெருசாக்கினேன்.
சரி மாமா..என்று அவள் கழுத்தில் இருந்த செயினை அவனுக்கு போட்டு விட்டாள்.
எனக்கு எதுக்கு?
என்னோட மாமாவ..எவளும் தப்பா பார்க்கக் கூடாதுல. இந்த செயின் என்னுடையதுன்னு ஊர்ல எல்லாருக்கும் தெரியும். அம்மா தான் எல்லார்கிட்டையும் காண்பித்து பந்தா பண்ணாங்களே? அதனால உங்க கழுத்துல இந்த செயினை பார்த்தா…எந்த பொண்ணும் உங்க பக்கத்துல வர மாட்டா.
உனக்கு கஷ்டமா இல்லையா? வேலு கேட்டான்.
மாமா..ரொம்ப கஷ்டமா இருக்கு. திடீர்ன்னு.. அவனை மறக்க முடியல. ஆனா அவன் என்னை என்னன்னு நினைச்சுட்டான். உடம்புக்கு அலையுறவன்னு சொல்லாம சொல்லிட்டான். இதுக்கு மேல அவன் மேல காதல் இருக்கும்ன்னு நினைக்கிறீங்க? என்று அவன் மீது சாய்ந்து அழுதாள்.
அவளை மெத்தையில் போட்டு..அவள் அறையில் எதையோ தேடினான். பின் ஒரு நூல் கண்டுடன் வந்து அவள் கையில் மோதிரத்தை போட்டு விட்டு அதில் நூலை சுற்றி விட்டான். இனி இது கீழே விழாது. உன் கையில் இது இருக்கும் வரை உன் மனதில் நான் தான் இருக்கணும் என்றான்.
மாமா..என்று அவனை அணைத்து, நீங்க என்னை பார்க்க தினமும் வரணும். நான் உங்களை பத்தி தெரிஞ்சுக்கணும். இதை நான் சாகும் வரை கழற்றமாட்டேன் என்றாள்.
நம்ம நிச்சயத்துக்கு மோதிரம் உன் விரல்களில் மாட்டுவேன். அப்பொழுது என்ன செய்வ?
மாமா..நீங்க இதை கழற்றுங்களேன்.
என்ன? சோகமுடன் அவன் பார்க்க, மாமா..இந்த விரல்ல போட்டு விடுங்க. நம்ம நிச்சயத்துக்கு போட விரல் வேண்டுமே?
அவன் புன்னகையுடன் மாட்டி விட, அவள் அவனை கட்டிக் கொண்டு.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு மாமா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தாள். அவன் முகமலர்ச்சியுடன் வெளியே வந்தான்.
வீட்டை சுத்தம் செய்து கவின் அமர்ந்திருந்தான். அகல்யாவை பார்த்து கத்தினான். ஏய்..பூசணிக்கா..வீட்டையே அலங்கோலப்படுத்திட்ட? அதை சுத்தம் செய்றதுக்குள்ள நான் ஒரு வழியாகிட்டேன்.
அம்மா எங்கடா?
ம்ம்..தெரியாது என்றான்.
கவின் வேலுவை பார்த்து, மாமா இங்க உட்காருங்க. நீங்க ரொம்ப பாவம். இவள வச்சு மேயக்கிறது சாதாரண விசயமில்லை. கோபம் வந்தால் வீடே தலைகீழாகி விடும். அவன் அவளை பார்த்து சிரித்தான். பின் தான் இருவரையும் ஆழ்ந்து கவனித்தான். அதுவும் செயின் மோதிரத்தை.. எப்படியோ மாமா சரி செய்துவிட்டார். இனி பிரச்சனை வராது என்று நினைத்தான்.
கவின் அம்மா, அப்பா பரபரப்பாக உள்ளே வந்தனர். என்னாச்சுப்பா? என்று கவின் பதற, வழிய விடுடா என்று அவனை தள்ளி விட்டு புன்னகையுடன் பரண் மீதுள்ள நாற்காலி, டீப்பாய்..அனைத்தையும் எடுத்து கீழே போட்டு சுத்தம் செய்து ஹாலில் வைத்தார். அவன் அம்மா சமையலறைக்கு சென்றார். மூவரும் புரியாமல் பார்த்தனர்.
தாத்தா, நந்து, தாரிகா அம்மா மற்றும் சிலர் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்த மூவரும் மகிழ, கவின் கண்களோ தாரிகாவை தேடியது.
அதை கவனித்த தாரிகா அம்மா..அகல்யாவிடம் பேச்சு கொடுத்து தாரிகா வரவில்லை என்று உணர்த்த அவன் முகம் வாடியது.
தாத்தா, என்ன திடீர்ன்னு வந்துட்டீங்க? வேலு கேட்டான்.
நம்ம முறைப்படி பொண்ணு கேட்டு வந்து தான..கல்யாண பேச்சே பேசணும். அதான் ..
தாத்தா..திருமணம் ஒரு மாதத்திற்கு பின் தான..
அதுக்கு அப்படியே விட முடியுமா? வேலுவை பார்த்துக் கொண்டே அவன் தாத்தா நிச்சயத்தை வர்ற வெள்ளிக்கிழமையே வச்சுக்கலாம். பெரிய ஆளுங்க வரலைனாலும் ஊர்ல எல்லாருக்கும் சொல்லுவோம். கோவில்ல வச்சு நிச்சயத்தை வச்சுக்கலாம்ன்னு சொன்னார்.
அவன் யோசனையோடு அகல்யாவை பார்த்தான். தாத்தா அகல்யாவிடம்.. உனக்கு சம்மதம் தானம்மா? கேட்டார்.
அவள் வெட்கப்புன்னகையுடன்..எனக்கு சம்மதம் என்றாள்.
அதுக்கு ஏன் இப்படி வெட்கப்படுற? இப்ப கூட இருவரும் அறையில் என்று கவின் வாயை அவனே மூடினான்.
போடா..என்று அகல்யா அறைக்குள் சென்றாள்.
தாத்தா, அவளுக்கு நேரம் தரலாமே?
இல்ல. இது தான் சரியான நேரம். நீ பக்கமிருந்தால் அந்த பயல நம்ம புள்ள மறந்திடுவா தாத்தா கூற, கவின் அவரிடம்..
தாத்தா..அதெல்லாம் மறந்து ஒரு மணி நேரமாகுது என்றான் வேலுவை பார்த்தவாறு. அவனும் அவள் பேசியதை நினைத்தவாறு ஒத்துக் கொண்டான்.
கதிரவன் தன் விளக்கொளியை சுருட்டிக் கொள்ள துருவன் விழித்தான். அவன் அம்மா அவனருகே அமர்ந்திருந்தார். ரதியை பார்த்து, அம்மா..என்று கையை நீட்டினான். கையை அசைக்காதேடா..என்று பதறி எழுந்து அவனிடம் வந்தார்.
துருவனுக்கு பிரதீப் அவனை தூக்கி வந்தது நினைவிற்கு வந்தது. அம்மா..பிரதீப் அண்ணா..எங்கே? கேட்டான்.
வெளிய தான் இருக்கான். அவன் இருக்கட்டும் .நான் டாக்டரை அழைக்கிறேன் என்று வெளியே வந்து செவிலியரை அழைத்து கூறினார். பிரதீப்பும் அபி அம்மாவும் எழுந்தனர். ரதி ஏதும் பேசாமல் செல்ல..அபி அம்மா பிரதீப்பிடம், எதுவும் நினைச்சுக்காதய்யா அவள் பசங்க இருவரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற வருத்தம் தான் என்றார்.
புரியுது அத்தை என்று பிரதீப் அமர்ந்தான். உள்ளே துருவன்.. வேற யாரெல்லாம் வந்தாங்கம்மா? என்று கேட்டான்.
ரதி அனைவரையும் தீனாவை கூட சொன்னான். ஆனால் துளசி வந்ததை காட்டிக் கொள்ளவில்லை. துருவன் பார்வை கதவு பக்கம் இருந்தது.
டாக்டர் வந்து அவனை பார்த்து விட்டு சென்றார் . ரதியும் வெளியே வந்து விட கேசவன் அவர்களிடம் வந்து, தம்பி உடம்புள விசமில்லை. எல்லாமே நல்லா தான் இருக்கு. கத்தி ஆழமா பட்டதால..வலி அதிகமா இருக்கும். பக்கத்தில இருந்தே பார்த்துக்கோங்க. இந்த மருந்த வாங்கிட்டு வாங்க என்று அவர் வேறொரு நோயாளியை கவனிக்க சென்றுவிட்டார்.
குடுங்க நான் வாங்கிட்டு வாரேன்னு பிரதீப் ரதியிடம் கேட்டான்.
இல்லப்பா. நான் பார்த்துக்கிறேன் என்றார்.
குடுங்க ஆன்ட்டி என்று ரதி கையிலிருந்து வாங்கிச் சென்றான் பிரதீப். அபி அம்மா..அவரை பார்த்து விட்டு, என்னடி பிரச்சனை? என்று கேட்டார்.
இல்ல..என்று தயங்கினார்.
இங்க பாரு..உனக்கு பிடிக்கலைன்னா. நேரடியா சொல்லிடு. பிரதீப் எனக்கு அபி மாதிரி தான். அவனுக்கு பதில் உன் மகனுக்கு அடிபட்டிருக்கலாம். ஆனால் இதை யாரும் எதிர்பார்க்கலை. எல்லாரும் பிரதீப்புக்கு ஏதும் ஆகக் கூடாதுன்னு நினைத்து தான் தடுத்தாங்க. துருவன் கூட இடையில வரல. அவனோட போதாத நேரமோ? என்னமோ? அவன் மேல பட்டுருச்சு.
ஏன்டி, அவன் தான உன்னோட புள்ளைய தூக்கிட்டு வந்தான். அப்படி பார்த்தா நல்லது தான பண்ணியிருக்கான். ஒரு வேலை துளசி வந்தது பிடிக்கலையோ? என்று அபி அம்மா கேட்டார்.
பிரதீப் மருந்தை வாங்கி உள்ளே வந்து, நான் சாரை பார்த்துட்டு வாரேன் என்று கேசவனை பார்க்க சென்றான்.
சொல்லு..துளசி வந்தாலாமே?
ம்ம்..வந்தா.
சின்னப்பசங்க தான். நீ தேவையில்லாம யோசிக்காத. அவ வசதியா வளர்ந்த புள்ள. ஆனால் யாருடைய அரவணைப்பும் இல்லாம வளர்ந்ததுல சில தப்பு செய்ய தான் செய்வா. அதுக்கு அவள குறை சொல்லாத. உனக்கென்ன அவ உன் புள்ள பக்கத்துல வரக் கூடாது. அவ்வளவு தான..நான் பேசுறேன் என்று அபி அம்மா கூற,
அத்தை அதெல்லாம் பேச தேவையில்ல. என்னோட தங்கச்சிய எப்படி சமாளிக்கணும்ன்னு எனக்கு தெரியும். இனி அவ துருவனருகே வர மாட்டா என்று பிரதீப் கூறினான்.
அத்தை.. துருவனை பார்க்க துளசி மட்டுமல்ல புவனாவும் கிளம்பினா. ஆனா அப்பா தான் தடுத்துட்டார். அவ தீனாவோட வந்து பார்ப்பா. நான் துருவனை பார்த்துட்டு வந்திடுறேன் என்று ரதியிடம் கூறி விட்டு அவரை பார்த்தான். அவர் அமைதியாக இருந்தார்.
பிரதீப் உள்ளே சென்று துருவனை பார்த்தான். அண்ணா..என்று எழுந்தான் அவன்.
துருவன் கையில் துளசி மாட்டி இருப்பதை பார்த்து விட்டு, உடம்பை நல்லா பார்த்துக்கோ. கை ரொம்ப வலி இருக்கா?
இல்லண்ணா. அதிகமா இல்லை.
அம்மாவை பார்த்துக்கோ. நீ எதிலும் தலையிடாதே. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க. அங்க அண்ணாவும் ஹாஸ்பிட்டல்ல இருக்கான். இங்க நீயும் இப்படி இருக்க. முதல்ல வீட்டை கவனிங்க. அப்புறம் மத்தவங்கள பார்த்துக்கலாம் என்று பிரதீப் கூறி விட்டு, துருவன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்தான். இதை கவனித்த துருவனும் அப்பொழுது தான் அவன் கையிலிருந்ததை பார்த்தான்.
சரி..நான் வாரேன் என்று பிரதீப் கிளம்பினான். கேசவன் உள்ளே வந்து பேச்சு கொடுத்துக் கொண்டே துருவனுக்கு செவிலியரிடம் கொடுத்து மருந்தை போட சொன்னார்.
அங்கிள்..துளசி வந்தாளா? துருவன் கேட்டான்.
நான் கவனிக்கலைப்பா..என்று அவர் கூறினார். அவர் சென்றவுடன் அபி அம்மா அவனை பார்க்க வந்தார். அவரிடமும் துளசியை பற்றி கேட்டான்.
அவ எப்படிப்பா வருவா? அவளே அவங்க அம்மா இறந்த வருத்தத்துல இருக்கா என்றவுடன் அவன் யோசனையோடு அவரை பார்த்தான். பின் தாரிகா உள்ளே வந்து, அகில் சீனியர் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். வீடியோ கால் பண்ணவா?
பண்ணலாம். துளசி இங்க வந்தாலா? கேட்டான். தாரிகா எதுவும் சொல்லாமல்..இதோ கால் பண்ணிட்டேன் என்று அவன் முன் அகிலை காட்டினாள்.
அண்ணனை பார்த்து கோபம் தான் வந்தது துருவனுக்கு. எதையும் காட்டிக் கொள்ளாமல் பேசினான். ஆனால் அகில் அதை கண்டு கொண்டு வினவினான். ஆனால் துருவன் எதுவும் கூறாமல் நான் ஓய்வெடுக்கணும் என்று கட் செய்து விட்டான். தாரிகாவை துருவன் முறைத்து பார்த்தான்.
ஹலோ..என்னை எதுக்கு முறைக்கிற? சில கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்று போனுடன் வெளியே சென்றாள். அகில் தாரிகாவிடம் கேட்க, தாரிகா துளசி வந்தது; நித்தி ஏதோ பேசியது; துளசி அழுததை போல் கிளம்பி சென்றது என்று கூறினாள்.
துளசியா? அகில் சிந்தித்தான். துருவனுக்கு அனைவரது பதிலும் பொய் என்று தெரிந்தது. துளசி வந்திருக்கிறாள். என்னை பார்க்க வந்திருக்கிறாள். அவள் வந்ததால் தான் இது என் கையில் உள்ளது. ஆனால் எதுக்கு இதை போட்டு விடணும்? அவள் ஆசைப்பட்டு தானே எடுத்துக் கொண்டாள். அம்மா…அவளை ஏதும் சொல்லி இருப்பாங்களோ? என்று எண்ணினான். அன்று அவளுடன் நடந்து வந்த போது அவள் பேசியது நினைவை கொடுக்க..அன்று கோபப்பட்ட துருவன் முகத்தில் இன்று புன்னகை.