வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-68
140
அத்தியாயம் 68
மாமா..யார் வீட்ல நாங்க தங்கணும்? துகிரா கேட்டாள்.
இருங்க பேசிட்டு வந்துடுறேன் என்று வெற்றி அறைக்கு சென்று பேசி விட்டு விசாலாட்சி பாட்டி வீட்ல தங்கணும்.
யார் அவங்க? துகிரா கேட்க, உங்களுக்கு அர்ஜூன் தெரியுமா?
ம்..தெரியும்.
அவன் பாட்டி தான்.
அக்கா அவங்ககிட்ட அதிகமா பேசாதீங்க?
ஏன்?
உங்களவே லாக் பண்ணுவாங்க. அவங்களுக்கு சுத்தமா இருக்கணும். காலையில வேகமா எழுந்திருக்கணும். அறையை விட்டு வெளியே வரும் போது குளித்து தயாராகி தான் வரணும்.
மாமா..வேண்டாம். நான் அங்க போக மாட்டேன். என்னால காலையில வேகமா எழுந்திருக்க முடியாது.
அங்க போகலைன்னா..இங்க தான் இருக்கணும் என்றார் வெற்றி.
இல்ல போகிறேன் என்றாள் துகிரா அலுத்துக் கொண்டு.
தீனா பிரதீப்பிற்கு போன் செய்து..சீக்கிரம் வீட்டுக்கு வா. அவங்க வீட்ட விட்டு போறாங்களாம்?
போறாங்களா? என்று பிரதீப் அவன் அம்மா, அப்பாவை நினைத்து, நீ போக விட்றாத நான் வாரேன் என்று போனை அணைத்து விட்டு வேலுவை அழைத்தான்.
எங்கடா இருக்க? ஹாஸ்பிட்டல யாரையும் தனியா விடக்கூடாது என்று துளசியை பார்த்தான்.
அவள் ஊர் ஆட்களுடன் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்கு அழுது கொண்டே வந்திருப்பாள். தூரத்திலிருந்தே துளசி, கவின் அம்மாவை பார்த்து கண்ணை துடைத்து அழுகையை கட்டுப்படுத்தி வந்தாள்.
பிரதீப்பிடம், அண்ணா..அவனுக்கு ஒன்றுமில்லையே?
துளசி,.நீ தனியாவா வந்த?
இல்லப்பா. நாங்கள் தான் அழைத்து வந்தோம். புள்ளைங்க ரெண்டும் அந்த பயல பார்க்கணும்ன்னு சொல்லுச்சுக. அந்த புள்ளையால நடக்க முடியாதுல்ல. அய்யா விட முடியாதுன்னு சொல்லிட்டார். அதான் அவர் புள்ளைய அழைச்சிட்டு வந்தோம் என்று சில பெரியவர்கள் வந்தனர்.
ரொம்ப நன்றிய்யா..என்றான் பிரதீப். தீனாவும் மூச்சிறைக்க பிரதீப்பிடம் வந்தான்.
டேய்..வண்டி எடுத்துட்டு வரலையா?
தலையில் கை வைத்த தீனா, மறந்துட்டேன்டா. டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?
கவின் அங்கு வந்து, அண்ணா…கத்தி என்று அதை வைத்திருந்த உறையை கொடுத்தான். அவனும் துருவனை பற்றி விசாரித்தார்.
இல்லடா. பதில் சொல்லல. சிகிச்சை நடந்துகிட்டு இருக்குடா.
நால்வரும் “ஐ சி யூ” வில் அவனை பார்க்க கஷ்டமா இருந்தது. துளசி அழுதாள். தீனா அவள் கையை பிடித்து, அவளுடன் அமர்ந்தான். கவின் ரதியிடம் சென்று பேசினான்.
தீனா, துளசி அம்மா தான் இறந்திருக்காங்க. வீட்ல இல்லாம இதுக என்ன செய்துகன்னு? ரதி கண்ணீருடன் பார்த்தார்.
கவின் அம்மா..ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க? உங்க அம்மா காரியம் முடிஞ்சே கொஞ்ச நேரம் தான் ஆகிறது.
ஆன்ட்டி,..துருவனை பார்க்க வந்தேன் துளசி கூற, நானும் அவனை பார்க்க தான் வந்தேன்.
டேய்..உங்க அம்மா? அவர் கேட்க,
தீனா அலுப்புடன், என்ன அம்மாவோ? என்றான்.
துளசி அவனை பார்த்து விட்டு, அவங்க எங்கள கண்டு கொண்டதேயில்லை. வேகமாக தீனாவிடமிருந்து கையை உருவி..நீயும் தான் என்ன அண்ணணோ? இப்ப ஏன்டா கையை பிடிக்கிற? ஒரு நாளாவது என்னோட பேசி இருப்பாயா? என்று அவனை வாய் ஓயாது திட்டி விட்டு, அவனை அடித்தாள்.
போடா..நீயும் போ என்றாள். பிரதீப் அவளை தடுக்க, போங்க..உங்களுக்கு ஜானு மட்டும் தான தங்கச்சி என்று அவனை திட்டி விட்டு, இந்த அப்பத்தாவும் சாப்பிடும் தூங்கும். அந்த பாக்க உடைச்சு உடைச்சே காலத்தை ஓட்டிடுச்சு என்று அழுதாள். அவளால் நேரடியாக துருவனை நினைத்து அழ முடியாமல், அவள் குடும்பத்தை பயனபடுத்திக் கொண்டாள். ஆனால் அதுவும் உண்மைதானே?
சாரிடா..தீனா துளசி கையை பிடிக்க, அவள் அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
அண்ணா..துருவனுக்கு ஒன்றுமிருக்காதுல துளசி அழுதாள். வேலு அங்கே வந்து ஊரார் கொலை செய்ய வந்தவனை பிடித்து வைத்திருப்பதை கூற, பிரதீப்பிடம் துளசியை காட்டி பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு தீனா அவனை ஸ்டேசனில் தள்ளி விட்டு தான் வேலுவுடன் வீட்டிற்கு வந்திருப்பான்.
வேலு பிரதீப்பிடம், அண்ணா நான் தீனா சார் வீட்ல தான் இருக்கேன்.
வேலுவின் நண்பர்கள் ஹாஸ்பிட்டல் வந்த பின் பிரதீப் வீட்டிற்கு சென்றான். துளசி தனியே அமர்ந்திருப்பதை பார்த்து கவின் அம்மா அவளை அழைத்துக் கொண்டு ரதியிடம் வந்தார். நித்தியும் சைலேஷும் அவர்களிடம் வந்தனர். கவின் தனியே அமர்ந்திருந்தான். சைலேஷ் அவனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.
ஆன்ட்டி என்று நித்தி அவர்களிடம் வந்தாள். அவள் ஏதோ கூற, அவளை நிறுத்திய ரதி..என்னிடம் சொல்லணும்னு யாருக்குமே தோணலைல என்று சத்தமிட்டார்.
நீ என்ன நினைக்கிறன்னு தெரியுது. ஆனால் நம்ம ஸ்ரீய அவள் என்ன செய்தாளோ? நினைச்சாலே பதறுது. அந்த கயல்விழி முதல்ல இருந்தே எங்க வாழ்க்கையில பிரச்சனையா தான் இருந்திருக்கா. கவின் அங்கு வந்தான்.
ஏன்டா..உங்க சஸ்பென்சன் ஸ்ரீக்காக தான? கேட்டார்.
ஆன்ட்டி. நீங்க அவங்கள நினைச்சு கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்லல என்றான். தாரிகாவும் அவள் அம்மாவும் அங்கு வந்தனர்.
எல்லாத்தையும் சமாளிக்கிற அளவு..அவ்வளவு பெரிய ஆளாயிட்டிங்களாடா? கவின் அம்மா திட்ட, அவன் அம்மாவை முறைத்தான்.
இருவரையும் பார்த்த ரதி,..உங்களுக்கு தெரியுமா? அந்த கயல் அகில் அப்பாவை காதலித்தாள். அவரும் நானும் காதலித்து என்னோட ஜாங்கிரியும் அண்ணனும் சேர்ந்து கல்யாணத்தை பற்றி எங்க வீட்ல பேசுனாங்க. அப்பொழுது கூட என்னோட அம்மா, அப்பாவிடம் அவரை பற்றி தவறாக பேசி..அவங்க மனச மாத்தி எல்லாத்தையும் தடுத்தா. ஆனால் நான் அவங்கள விட்டுட்டு வந்துட்டேன் கோபத்தில். நான் பேசுவதை அவர்கள் கெஞ்சித்தும் கவனிக்கவேயில்லை. அவங்கள தனியே வர சொல்லி மிரட்ட, அப்ப தான் அவள் சுயரூபத்தை பார்த்தனர். ஆனால் அவர்கள் அவளிடமிருந்து தப்பித்து வரும் போது விபத்தில் இறந்து போயிட்டாங்க. அப்புறமும் நிறைய பிரச்சனைகள் வந்து தான் திருமணமே நடந்தது. இப்ப அவங்களையும் கொன்றுக்கா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நம்ம ஊர்ல எல்லாருக்கும் ஆபத்துன்னு தோணுது.
அந்த கொலைகாரன்..அந்த கொலைகாரன்..என்று பதறினார்.
ஆன்ட்டி, உங்களுக்கு அந்த கொலைகாரனை தெரியுமா? சைலேஷ் கேட்டான்.
இல்லை. எனக்கு தெரியாது. ஆனால் நம்மள சுத்தி இருக்கிறவங்கள விட மாட்டிங்கிறான். எல்லாரும் கவனமா இருங்க என்று துளசியை பார்த்தார். அவள் பார்வை துருவனுக்கு சிகிச்சை நடக்கும் இடத்திலே இருந்தது. நித்தியும் துளசியை பார்த்தாள்.
துளசி..நீ இங்க என்ன பண்ற? கேட்டாள்.
அக்கா..துருவனை பார்க்க வந்தேன். புவனாவால் வர முடியல. அவ அழுதுகிட்டே இருந்தாள்.
நான் என்ன கேட்டால் இவள் என்ன சொல்கிறாள்? நித்தி நினைத்துக் கொண்டே ரதியை பார்க்க, அவரும் அவளை பார்த்தாள்.
துருவனை முந்தைய நாள் பார்க்கும் போது, எந்த அளவு சோர்வாக இருந்தாலும் அவன் முகத்தில் இருந்த புன்னகை நினைவில் வந்தது. அவளது கையில் துருவனது பிரேஸ்லெட்டை பார்த்து விட்டு அவளை பார்க்க, நித்தியும் அதை கவனித்தாள்.
துருவன் அர்தீஸ் கல்யாணத்திற்காக கடத்தியது நினைவில் வந்து, துளசி..என்று எமோஸ்னலா சத்தமாக நித்தி அழைக்க, அனைவரும் அவளை பார்த்தனர்.
அக்கா..என்று துளசி எழுந்தாள். அவளது கையை பிடித்து நித்தி இழுத்து சென்றாள். ரதிக்கு தெளிவாக புரிந்தது. துருவன் புவனாவை காதலித்தது நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமே? தாரிகா அம்மா கவின் அம்மா அருகே வந்து அமர்ந்தார்.
துளசி…இது யாருடையது? நித்தி கேட்க, கவின் அவர்களிடம் வந்தான். பின்னாலே தாரிகா, சைலேஷ் வந்தனர்.
அக்கா..என்று அவளை அணைத்து அழுது கொண்டே, நான்..அக்கா..என்று மென்று விழுங்க, அவளை நகர்த்தி..அவன் புவனாவை காதலித்தது உனக்கு தெரியும்ல?
ஆமாம் அக்கா. ஆனால் அம்மா, தீனா அண்ணாவையும் புவனாவையும் பிரிக்க துருவனிடம் கேட்டாங்க. நேரடியாக இல்லாமல் அண்ணா புவிக்கு சரியானவள் இல்லை என்று மனதை மாற்ற பார்த்தாங்க. ஆனால் துருவன் தெளிவாக கூறினான். புவிக்கு தீனா அண்ணாவை தான் பிடிச்சிருக்குன்னு ரெண்டு பேரும் காதலை பரிமாறிய உடன் கொஞ்சம் கொஞ்சமாக மனதை மாற்றி விட்டானாம். அதனால் இருவரும் பிரிந்தால் கூட அவளுடன் நண்பனாக தான் இருப்பேன் என்று கூறினான்.
நான்..அவனிடம் மனசுல இருக்கிறத சொல்லிட்டேன். ஆனால் அவன் எதுமே சொல்லல. அவன் என்னிடமிருந்து விலக தான் செய்தான் என்று அழுதாள்.
இது எப்படி?
நான் தான் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டேன். அப்பொழுது அவன் கோபப்பட்டாலும் ஏதும் சொல்லலை. அக்கா..என்னால் அவனை விட முடியல என்று அழுதாள்.
துளசி..நீ காதலை பத்தி மட்டும் யோசிக்கிற. ஆனால் அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கும் தெரியாது. ஆனால் அவனை விட்டு நீ தள்ளி இருப்பது தான் நல்லது.
இல்ல. அண்ணா பிரச்சனை பண்ண மாட்டான். அவன் முத மாதிரி இல்லக்கா.
கொஞ்ச நாள் துளசி. அங்க அகிலும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கான். இங்க துருவன் வேற. அகிலுக்கு நாங்க சொல்லவேயில்லை என்று கவினை பார்த்தாள்.
அக்கா..நான் வீட்டுக்கு போகணும். அவனை பார்க்கக்கூடாது. பேசக்கூடாதுன்னு சொல்றீங்களா?
நித்தி..தயங்கி நான் அப்படி சொல்லலை என்று பதில் கூற முடியாமல் யோசித்தாள்.
என்ன பண்றம்மா? சைலேஷ் கேட்டான். இருவரும் அவனை பார்க்க, நித்தி..அந்த பொண்ணு அவனை பார்க்கட்டும். அவன் அகில் தம்பியா?
ஆமாம்.
நீங்க யாரும் எதுவும் பேசாதீங்க? அவங்க அம்மாவும் அந்த பையனும் என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம். நீ அவனை பார்க்க தானம்மா வந்த..பார்த்துட்டு கிளம்பு. ஒரு வேலை நீ அவனருகே இருக்கணும்ன்னா. அதை அம்மாவும் மகனும் முடிவெடுப்பாங்க.
நான் அவங்கள பிரிக்க நினைக்கலை. ஆன்ட்டி ஏற்கனவே மனஉளைச்சல்ல ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. துருவனை இவள் காதலிப்பது தெரிந்தால் அவனும் அவங்க அருகே இருக்க மாட்டான்னு பயப்படலாம்.
அதனால் அவங்க உடல் நிலை பாதிக்ககூட வாய்ப்பு உள்ளது நித்தி கூறி விட்டு, உனக்கு அவங்கள தெரியும்ல துளசி. அவங்க பையனோடது உன்னோட கையில இருக்கிறத பார்த்தவாரே இருந்தாங்க. அதான் சொன்னேன். நீ பார்த்துக்கோ.
பார்த்தாங்களா? எதுவுமே கேட்கலை.
இப்ப அவங்க ஏதாவது பேசுவாங்கன்னு நினைக்கிறியா? அவங்க கண்டிப்பா யோசிப்பாங்க.
துளசி கண்ணீருடன் புரியுது. ஆனால் புவிய மட்டும் காதலித்தான்.
புவி அவனை காதலித்தால் அவங்க அம்மாவை பாத்துக்கிட்டது போல் துருவன் அம்மாவையும் பார்த்துப்பாள். தெளிவா பேசுவா. புரிஞ்சு நடந்துப்பா. ஆனால் நீ அவன் பக்கத்திலே இருக்கணும்னு நினைப்ப. அவங்க அம்மாவுக்காக அவன் எப்பொழுதும் போல் இருக்க முடியாது. அவனும் கஷ்டப்படுவான். நீயும் ஆன்ட்டியும் கூட கஷ்டப்படுவீங்க. உனக்கு புவனா போல் வேலையெல்லாம் செய்து பழக்கமில்லை. துளசி கோபப்படாம புரிஞ்சுக்கணும்டா.. நித்தி அன்பாக கூற, அவளை அணைத்து அழுத துளசி..நேராக ரதியிடம் சென்று, இது துருவனுடையது. அவனிடமிருந்து நான் தான் வாங்கினேன். அவனுக்கு தர விருப்பமில்லை என்று அவர் கையை பிடித்து வைத்து விட்டு அவள் நடக்க,
நில்லு..அவனை பார்க்க தான வந்த? பார்த்துட்டு போ..என்றார் ரதி.
அவள் தனியே சென்று அமர்ந்தாள். நித்தியும் அவளிடம் வந்து அவள் கையை பிடிக்க, கண்ணீரை உள்ளிழுத்த துளசி புன்னகைத்தாள். அனைவரும் அவளை பார்க்க, வேலு நண்பர்கள் இதை பார்த்து பிரதீப்பிற்கு போன் செய்தனர்.
வீட்டில் சென்ற பிரதீப் நேராக வெற்றி மீனாட்சியை பார்த்து, அம்மா, அப்பா நீங்க எங்கையும் போகக்கூடான்னு சொல்ல, வெற்றி கண்ணில் ஆனந்தகண்ணீர். சித்தப்பா என்று கூட அழைக்க யோசிக்கும் தன் மகன் அவரை அப்பா என்று அழைத்து விட்டானே என்று.
தீனா அவனிடம், டேய்..அவங்க எங்கையும் போகல?
இருவரையும் பிரதீப் பார்க்க, இருவரும் அவனை ஏக்கத்தோடு பார்த்தனர். அதை பார்த்து, நீங்க போகலையா? என்று பிரதீப் இருவரையும் அணைத்தான்.
அப்புறம் எதுக்குடா வர வைச்ச? அங்க துருவன் எப்படி இருக்கான்னு தெரியல. துளசிய வேற விட்டுட்டு வந்துருக்கேன்.
தீனா பார்வை துகிரா புவனா பக்கம் திரும்ப, துகிரா புவனா வீல் சேரை பிடித்தப்படி பிரதீப்பை பார்த்துக் கொண்டிருந்தாள்.
செல்லக்குட்டிம்மா..இங்க ஏன் நிக்குறீங்க? துகிராவிடம் வந்தான்.
என்ன? செல்லக்குட்டிம்மாவா? என்று தீனா கேட்க, பிரதீப் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
பிரதீப் இருவரும் பார்த்து, உள்ள வாங்க..என்று துகிரா கையை பிடித்தான். அவள் கையை எடுத்து விட்டு கண்ணீருடன் அவனை அணைத்தாள்.
என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? பிரதீப் கேட்க, நாங்க இப்பொழுதைக்கு வெளிய தங்குறது தான் சரியா இருக்கும்.
எதுக்கு? யாரும் ஏதும் சொன்னாங்களா? என்று அனைவரையும் பார்த்தான். அனைவர் அமைதியும் அவனுக்கு சிந்திக்க வைக்க, அவன் இரண்டாவது அத்தை இல்லாததை பார்த்து,
தீனா..எங்க அவங்கள?
நீ இதுல கையெழுத்து போடு என்று சொத்து பத்திரத்தை எடுத்து மேசையில் எறிந்தான் தீனா.
என்ன? என்று கேட்டுக் கொண்டே துகிரா புவியை பார்த்துக் கொண்டே அதை எடுத்து படித்தான்.
அவங்க அத்தைக்கு சொத்து பிரித்து வெற்றி, தீனா கையெழுத்திட்டதை பார்த்தவன், என்ன பேசுனாங்க? கேட்டான்.
எல்லாரும் அமைதியாக இருக்க பிரதீப் வேலு முன் வந்து, உனக்கு தெரியுமா? என்று கேட்டான்.
அண்ணா..என்று அவன் தயங்கிக் கொண்டே வெற்றியை பார்த்தான். அவர் கண்ணை காட்ட, அவன் அனைத்தையும் கூறினான்.
பிரதீப் கோபமாக..ஏன்பா..நல்லா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா? இவ்வளவு தூரம் பேச விட்டுருக்கீங்க?
அவ..மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைத்தேன்ப்பா. ஆனால் அவள் எல்லாரையும்…நம்ம குடும்பத்தையையே அவ புருசன் இருக்கான்னு கூட பார்க்காம கேவலமாக பேசுவான்னு நினைக்கல என்று கண்கலங்கினார் வெற்றி.
அப்பா..அவங்க தான் நம்ம குடும்பத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்திட்டு போனாங்க என்றவன்..அந்த பத்திரத்தை எடுத்து விட்டு..வாடா என்று தீனா கையை பிடித்து அவங்க மூஞ்சியிலே விட்டெறிஞ்சிட்டு வந்திருவோம்.
அண்ணா..ஜானு, துளசி எல்லார் கையெழுத்தும் வேண்டுமே?
அதெல்லாம் தேவையில்லை. உறவை தொடர்ந்தால் தானே எல்லாரும் கையெழுத்திடணும். இதுவே போதும். வேலு..நீ இங்கேயே இரு. இன்னும் ஊருக்குள்ள எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல. நாங்க வர்ற வரை யாரும் வெளிய போகக்கூடாது என்று துகிரா புவனாவை பார்த்து விட்டு, தீனா கையை பிடித்து இழுத்து சென்றான் பிரதீப். தீனா அவனையே பார்த்துக் கொண்டே அவனுடன் செல்ல. மீனாட்சி வெற்றிக்கோ..பிரதீப் அவர்களை ஏற்றுக் கொண்டது. தீனா மீதுள்ள நம்பிக்கை பாசம் அனைத்தும் சந்தோசமாக இருக்க, இருவரும் கண்கலங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பொண்ணுங்க அங்கேயே அமர, வந்தார் அர்ஜூன் பாட்டி விசாலாட்சி.
ஏன்டா, புள்ளங்கள எதுக்குடா தனியா அனுப்புற? என்று திட்டிக் கொண்டே வந்தார் அவர். பிரதீப் அனைவர் முன்னிலையிலும் துகிராவை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டான். தீனா கூறவில்லை என்றாலும் அவனும் புவனா மீது வைத்துள்ள காதல் அனைவரையும் அறிய வைத்தது.
அம்மா..நான் எதுவும் செய்யல? எல்லாம் அவங்க முடிவு வெற்றி கூற. அபி அம்மா அவரிடம்,
நான் அவளோட எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்டேன்ம்மா என்று வருத்தமுடன் கூற, அதை ஏன்டா இப்படி சொல்ற?
அவ உள்ள வந்தா..உங்க குடும்பத்த வளர விட மாட்டான்னு தெரியும். ஆனால் சொத்தை கேட்டு பிரச்சனை செய்வான்னு தான் நினைச்சேன். ஆனா..இப்படி பேசுவான்னு நினைக்கல. நீ செஞ்சது சரி தான். இனியும் அவளை உள்ளே விட்டால் புள்ளங்க வாழ்க்கையைவே கெடுத்திடுவா என்று அனைவரையும் பார்த்தார்.
என்னடா புது மாப்பிள்ள..இங்க வந்து நிக்குற? உங்க தாத்தா திட்டப் போறார். நீ இங்க வர வேண்டாம். ஒரு மாசத்துக்கு. கல்யாணத்தை வைச்சுட்டு..இங்க வந்து நிக்குற?
இப்ப தான் அந்த பொண்ணு மனசு மாறுன மாதிரி தெரியுது. மறுபடியும் அவள விட்றாத..என்றார் அர்ஜூன் பாட்டி வேலுவிடம்.
பாட்டி..அண்ணா வரட்டும். அவரிடம் சொல்லி விட்டு கிளம்புகிறேன் என்று வேலு வெட்க புன்னகைக்க, புவனா புரியாமல் பார்த்தாள்.
அண்ணா..கல்யாணமா? சொல்லல? என்று புவனா வேலுவிடம் கேட்க,
உனக்கு எப்படிம்மா அவன் காதலித்தது தெரியும்? வெற்றி கேட்க,
மாமா..நல்லா தெரியும். அண்ணா..அக்காவ பாக்குறத வச்சே தெரிஞ்சது.
என்னோட அம்மா சொன்னது சரி தானோ? அவர் புவனாவிடம் கேட்க, அவள் மெலிதாக புன்னகைத்தாள்.
அண்ணா..அகல்யா அக்கா காதல்? கேட்டாள்.
அக்கா..அந்த ஆள விடு. அவரே கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டார். அக்காவும் கோபமாக அவரை கட்டிக்க மாட்டேன்னு பள்ளத்துல விழுற அளவு போயிட்டாங்க.
பிள்ளைக்கு ஒன்றுமில்லையே? அப்பத்தா கேட்க, அதான் வேலு அண்ணா இருக்கும் போது குதிக்க விடுருவாங்களா?
ஏன்டா, நீ மட்டும் எப்படிடா இப்படி பேசுற? உனக்கு கத்தியால் குத்த வந்தவனை பார்த்தால் பயமா இல்லையா? வேலு சக்கரையிடம் கேட்டான்.
அண்ணா…எனக்கு துரு அண்ணா தான் சொன்னாங்க. பிரச்சனை நம்ம முன்னாடி இருந்தா நிதானமா மூளைய பயன்படுத்தணும். நம்ம பயந்தா தான் பிரச்சனை அதிகமாகும்ன்னு என்று துருவன் துளசி கையில் அவனுடைய பிரேஸ்லெட்டை பார்த்ததும்…நொடி கூட யோசிக்காது ஓடியதை கூறி விட்டு,
ஆது மாம்ஸ்..கொடுத்தாங்கன்னு. அது என்னமோ சொன்னாங்களே? நாம கேமிராவில் தெரியாமல் இருக்க ஏதோ பயன்படுத்துவாங்களாம்.
ஜாமரா? துகிரா கேட்க, ஆமாக்கா. அதை எடுத்துட்டு போனாங்க. எப்ப தெரியுமா? புவி அக்கா உன்னையும், உங்களையும் என்று துகிராவை காட்டி, துளசி அக்கா எல்லாரையும் கடத்துனது தெரிந்து, கையில் எதையும் எடுக்காமல் அந்த..யோசித்தான்.
ஜாமர்..துகிரா எடுத்துக் கொடுக்க, பிரதீப் அண்ணாவும், தீனா சாரும் அந்த கேமிராவில் தெரியாமல் உள்ளே வர, அந்த ஜாமரை தனியே எடுத்து பொதுவாக கேமிரா இருக்கும் இடத்தில் போட்டு விட்டு உள்ளே சென்றார். அங்க போனா கொல்ல கூட தயங்க மாட்டாங்கன்னு தெரிஞ்சே போனாங்க. பாவம் அண்ணாவுக்கு அடிபட்டது கூட சரியாகல. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க என்று சக்கர அழுதான். புவி அழ, துகிரா கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.
மீனாட்சிக்கு பசங்க யாரையும் சரியா தெரியல. அவங்க தான் பிரதீப் சிறு வயதிலிருந்தே ஊரில் இல்லை. அவர் கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தார். ஆமா..எங்களுக்கு தெரியும் என்றார் வெற்றி.
ஏற்கனவே ரதி ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. இந்த நேரத்துல அவ புள்ளைக்கு இப்படியா ஆகணும் என்று வருத்தப்பட்ட அர்ஜூன் பாட்டி..பசங்க நிறைய நம்மகிட்ட மறச்சுட்டாங்கடா வெற்றி.
ஆமாம்மா. நானும் செய்தி அனைத்தையும் பார்த்தேன். உங்க பெயரனை நினைச்சு பயமா இருக்கா? என்று கேட்டார்.
இருக்குடா. ஆனால் அவன் யாருக்காக செய்கிறான்? நம்ம புள்ளைக்காக தான? பார்க்கட்டும்.
ஆனால் அம்மா..
இல்லடா. எனக்கு தெரியாது. யார் அந்த கொலைகாரன்னு தெரியாது?
அம்மா..உங்க பையனா? அவர் கேட்க, தெரியல என்று பேச்சை முடிக்க எழுந்தவர். புள்ளைங்களா? நீங்க என்னோட வீட்டுக்கு வரலாம். ஆனால் இப்ப இல்லை. உங்க அத்தைக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க.
நம்ம பசங்க எல்லாரும் இங்க வந்து தங்க போறாங்கலாம். அப்ப என்னோட வீட்டுக்கு வாங்க. அர்ஜூன் தனியா விருந்தாளிங்க அறையில இருந்துப்பான்.
பாட்டி…அண்ணா உங்களுடன் இருக்கட்டும். நாங்க அந்த அறையில தங்கிக்கிறோம் புவனா கூற,
ஏய்..இப்ப போக முடியாதா? துகிரா கேட்க, அவங்க சொல்றது சரி தானே அக்கா?
இரு நாள் தான்..என்று புவனா கூற, துகிரா யோசித்தாள்.
என்னடா? தீனா கேட்க, ஒன்றுமில்லைடா என்று போனை வைத்து விட்டு உள்ளே வந்தனர்.
கொடுத்துட்டீங்களா? அர்ஜூன் பாட்டி கேட்க,
அண்ணா..சும்மாவா? விட்டு விலாசிட்டான் தீனா பிரதீப்பை புகழ்ந்து கொண்டே செல்ல, வேலு..இப்ப ஒருவன் வருவான். அவனுடன் நீ வீட்டுக்கு கிளம்பு. உனக்கு வேலை இருக்கும். ஒரு மாதத்திற்கு நீ வேலைக்கு வர வேண்டாம். உன்னோட குடும்பத்தை பார். எப்பொழுது போல் சம்பளம் வந்து சேரும்.
அண்ணா..நான் அந்த ரிசார்ட்ட மட்டும் பார்த்துக்கிறேனே?
இல்லடா..அங்க கொஞ்சம் வேலை இருக்கு. அங்க இருந்த எல்லாரும் கிளம்பிட்டாங்க. அவங்களே நிறைய போஸ்ட் போட்டுருக்காங்க. நாமும் அதை பார்த்தால் தான் ஆட்கள் வர ஆரம்பிப்பாங்க.
முதல்ல எல்லாரும் சென்னையிலிருந்து பாதுக்காப்பா வரட்டும். அங்க நான் சொன்னது போல் பெயிண்டிங், டெக்கரேசனை மாத்துங்க. அதை மட்டும் கவனிச்சுக்கோ..மூணு நாள்ல முடியணும். நீ தான் பொறுப்பு.
ஒரு நிமிஷம் இரு என்று போனை எடுத்து வேலுவிற்கு பணம் அனுப்பினான். இனி வேண்டுமானாலும் வாங்கிக்கோ..பிரதீப் கூறி விட்டு, பார்த்துக்கோ.. கவனமா இரு என்று அக்கறையோடு கூறி அவனை அனுப்பி விட்டு, பிரதீப் அனைவரையும் பார்த்தான். துகிராவை அவன் பார்க்க..அர்ஜூன் பாட்டி சொல்ல..
நான் வீடு வரை போயிட்டு வாரேன் என்று பிரதீப் எழுந்தான்.
தீனாவும் துகிராவும்..வெளிய போக வேண்டாம் என்று ஒருவாறு கூறிவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்
துகிரா அவனிடம் வர, பிரதீப் அவள் கையை உதறி விட்டு உள்ளே சென்றான்.
கோபிச்சுக்கிட்டீங்களா? நானும் வாரேன் என்று அவன் பின்னே ஓடினாள். தீனா புவனாவை பார்த்து முறைக்க, பாட்டி சென்று விட்டார். வேலு சக்கரைய அழைத்து சென்றிருப்பான்.
அனைவரும் உள்ளே செல்ல..நில்லுங்க என்று தீனா அருகே வீல்லை தள்ளிக் கொண்டு வந்தாள் புவனா.
கொஞ்சநாள். அப்புறம் படிக்க நானும் அண்ணாவுடன் சென்னை செல்ல போகிறேன். படிப்பு முடிஞ்சு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.
கல்யாணம் என்றவுடன், அவளை பார்த்து..எத்தனை வருசம் பிரிஞ்சு இருக்கப்போறோம். இப்பவாது உடன் இருக்கலாமே?
நம்ம குடும்பத்த பத்தி எல்லாரும் தப்பா பேசணும்ன்னு நினைக்கிறீங்களா? நாங்க எங்க வீட்ல இருக்கப் போறதா தான் முடிவெடுத்தோம். மாமா தான் அர்ஜூன் அண்ணா வீட்ல..
இங்க இருக்க மாட்டீங்க. ஆனா அங்க இருப்பீங்களோ?
நீங்க சின்னப்புள்ளை மாதிரி நடந்துக்காதீங்க புவனா கூற.
நானா அப்படி நடந்துக்கிறேன். நீ அவளோட பேசி தான் மாறிட்ட புவனாவை திட்டினான் தீனா.
அக்காவ..எதுக்கு இழுக்குறீங்க?
பார்த்தியா? என்னை விட அந்த துகிரா உனக்கு முக்கியமாகி விட்டாளா?
இல்லன்னு அவன் கையை பிடித்து..கண்ணாலே அவனை அழைத்தாள்.
அவனும் அவள் பக்கத்தில் செல்ல..உங்களுக்கு அக்கா மேல பொறாமையா இருக்கா?
நீ என்னை முத்தமிட்டு சமாதானப்படுத்துவன்னு நினைச்சா..நீ என்ன கேட்குற?
சரி, நான் அப்ப இப்பவே என் அம்மா வீட்டுக்கு போறேன் என்றாள்.
அது எப்படி தனியா உன்னை விடுவேன்? என்று அவளை சேரிலிருந்து தூக்கினான்.
அச்சோ, யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? தப்பா பேசப் போறாங்க..
எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்திருப்ப. நீ ஓய்வெடு என்றான் தீனா.
நீங்க ஓ.கே தான? அம்மா..அவள் கேட்க, நீ ஓய்வெடு என்று அவளை படுக்க வைத்து விட்டு அவள் காலை பார்த்து ரொம்ப வலிக்குதா? கேட்டான்.
அதான் நீங்க பக்கத்துல இருக்கீங்களே? எனக்கு வலிக்கவேயில்லை என்றாள்.
அவன் வெளியே வர, அப்பத்தா மறைந்து நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பத்தா..என்ன பண்ற?
எலி ஓடி வந்துச்சா..அதை பார்க்க வந்தேன் என்று பிரதீப் அறை பக்கம் திரும்ப,
அப்பத்தா..ஹால் போற வழி இந்த பக்கம் என்று அவரை இழுத்து சென்றான் தீனா. வெளியே வெற்றியும், மீனாட்சியும் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்திருந்தனர்.