அத்தியாயம் 64

ஜானு தன்னுடைய ஆடைகளை எடுத்து வெளியே வர, ஆதேஷ் அவள் முன் வந்து ஜானு..மாமா வர வேண்டாம்ன்னு சொன்னாரு.

மாமா..சித்தி இறந்துடாங்க. நான் போகணும் என்று அவள் தன்னுடைய ஆடை வைத்திருந்த லக்கேஜை இழுத்துக் கொண்டு வந்தாள்.

ஜானு..இங்க பிரச்சனை இருக்கு. வெளிய தனியா போனால் கொன்னுடுவாங்க.

மாமா..நான் போகணும் என்று அவள் நகர, அபி அண்ணாவும் போகலை. மாமாக்கள் பேச்சை கேட்டு அவர் இருப்பது போல் உன்னால் இருக்க முடியாதா? சினத்துடன் ஆதேஷ் கேட்டான்.

மாமா.. நான் இப்ப போகலைன்னா சித்தியை எப்பொழுதுமே பார்க்க முடியாது என்று அழுதாள்.

ஜானு, நீ உன்னோட சித்திய மிஸ் பண்றது புரியுது. ஆனால் அவங்கள பார்க்க நீ உயிரோட இருக்கணுமே?

மாமா..ப்ளீஸ் மாமா.

நானும் வாரேன். வா..போகலாம் என்று அவன் ஜானு கையை பிடித்தான். மருமகளே இருங்க…நானும் வாரேன் என்று ஆதேஷ் அப்பாவும் வந்தார்.

லலிதா மூவரையும் பார்த்து, எங்க போறீங்க எல்லாரும்? யாராலையும் வெளிய போக முடியாது. மாப்பிள்ள சொல்லிட்டார். யாரும் வீட்டை விட்டு வெளியே தலையை கூட நீட்டக் கூடாதாம்.

ஜானு, உன்னோட அறைக்கு போ லலிதா கூற, ஆன்ட்டி..நான் போகணும் என்றாள். முடிஞ்சா போ என்று ஆதேஷிடம் கண்ணை காட்டி விட்டு அவர் கணவரை இழுத்து உள்ளே சென்றார்.

ஜானு ஆதேஷை பார்த்தாள். சாரி ஜானு..என்று அவளை துக்க, மாமா என்னை விடுங்க. நான் போகணும் என்று அவனை அடிக்க, அவளை அறையில் விட்டு ஜன்னலை மூடி விட்டு கதவை அடைத்து விட்டு கீழே சென்றான்.

மாமா..மாமா..என்று அவள் கத்தி விட்டு அழுதாள். கீழே மூவரும் அவள் இருக்கும் அறையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மா..சின்னம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போகவா? வசந்தி கேட்க,

அக்கா, அவளை சமாதானப்படுத்த முடிஞ்சா பண்ணுங்க ஆதேஷ் கூற, வசந்தியிடமிருந்து உணவை வாங்கிய ஆதேஷ் அப்பா அவன் கையில் திணித்து, நீ சமாதானப்படுத்து போ..என்றார்.

நான் செய்த வேலைக்கு அவளிடம் அடி தானப்பா வாங்குவேன்?

வாங்கு..வாங்கிட்டு சமாதானப்படுத்து..

என்ன அப்பா நீங்க? கேட்டான் அவன்.

போடா..என்று அவனை அனுப்பி வைக்க, ஜானு அறைக்கு நுழைந்த ஆதேஷ் உணவை வைத்து அவன் முகத்தை மறைத்தவாறு உள்ளே சென்றான். அவள் மெத்தையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.

அதை பார்த்து உணவை வைத்து விட்டு, அவளருகே வந்தான். அவள் தோளில் கை வைத்தான். அவனை பிடித்து தள்ளி விட்டு கதவருகே அவள் செல்ல, அவளை பிடித்து இழுத்து ஆதேஷ் அவளை அணைத்தான்.

மாமா..விடுங்க என்று சினத்துடன் அவள் தள்ளினாள். அவளை மேலும் இறுக்கினான் ஆதேஷ்.

மாமா எலும்பை உடைச்சுறாதீங்க?

நான் எதுக்கு உடைக்க போறேன். நீ போனால் உயிரோட வரவே முடியாது. நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க ஜானு? அவங்கள பார்க்க நீ இப்ப போனாலும் பார்க்க முடியாது. ப்ளீஸ் ஜானு..நீ போகாத. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால தாங்க முடியாது என்று ஆதேஷ் கண்ணீர் வடித்தான்.

அமைதியாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஜானு. அவனை விட்டு விலகி..இரு கைகளை துக்கி அவனை தூக்க சொன்னாள்.

ஆதேஷ் ஜானுவை தூக்க, அவன் கன்னத்தில் முத்தமிட்டு நான் போகல மாமா.

மாமா…என்னால இதுக்கு மேல வளரவே முடியாது. நீங்க இப்படி வளர்ந்துருக்கீங்க. பாருங்க என்னால உங்களுக்கு கிஸ் கொடுக்ககூட முடியலை.

உனக்கு கிஸ் பண்ணனும்னா உன்னோட உதட்டை தொட்டு காட்டுகிறாயா?

மாமா..என்று அவனது மார்பில் குத்த, அவளை மேலும் துக்கிய ஆதேஷ்..ஜானு நீ எனக்கு கிஸ் கொடுத்தேல. நான் உனக்கு கொடுக்கிறேன் என்று அவன் கூற, அவள் கன்னத்தை காட்டினாள். அவளை கீழே இறக்கி விட்டு குனித்து அவள் இதழ்களை முற்றுகையிட்டான். மாமா..என்று சத்தமிட்ட ஜானு சத்தம் அடங்க, நிறுத்தி அவளை பார்த்து விட்டு சாப்பிடலாமா? கேட்டான்.

ஹாஅ..என்று பெருமூச்சுடன், மாமா இப்படியா கிஸ் பண்ணுவீங்க.

ஓ..தப்பா பண்ணிட்டேனா? ஆதேஷ் ஜானுவிடம் வர, மாமா..நான் அப்படி சொல்லல.

சாப்பிடலாமே? எனக்கு பசிக்குது? என்றவுடன் உணவை எடுத்து கொடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தான். ஜானு ஆதேஷிற்கு ஊட்டி விட, அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான்.

மாமா..நாம கீழ போவோமா?

வெளிய ஓடிடமாட்டேல்ல?

இல்ல மாமா. கண்டிப்பா நான் போகலை என்று வருத்தமுடன் இருந்தாள். ஆதேஷ் அவளை தோளோடு அணைத்து அவளுடன் இருந்தான்.

கைரவ் குளித்து தயாராகிக் கொண்டிந்தான். தற்செயலாக வெளியே பார்க்க, அங்கே ஒருவன் அவர்களது வீட்டை பார்த்தவாறு நின்றிருந்தான். மேலும் கைரவ் உற்றுபார்க்க, அங்கிருப்பவன் பார்வையோ ஓரிடத்தை நிலைத்து நின்றது. அவன் பால்கனிக்கு வந்து எட்டி பார்க்க, அவன் பார்ப்பது அனிகாவின் அறையை.

கைரவ் வேகமாக அவனறையிலிருந்து வெளியே வந்து, அவள் அறைக்கதவை தட்டினான். அவள் ஓரமாக வியர்த்து அமர்ந்து இருந்தாள். அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து முகத்தை துடைத்து விட்டு, பதட்டமுடன்  துவாலையை கையில் வைத்தவாறு கதவை திறந்தாள்.

குளித்து ஆடை மாற்றி தயாராக தான் இருந்தாள். அவளை அளந்தவன் கையில் சம்பந்தமில்லாமல் துவாலையை பார்த்து விட்டு மீண்டும் அவளை பார்த்தான். அவள் கழுத்தும் ஈரமாக இருக்க, அவளை நகர்த்தி உள்ளே வந்தான்.

கை..கை..கைரவ்..என்ன பண்ற? திக்கி பேச,

ஏன்..திக்குகிறாய்? உன்னை பார்த்தால் பயப்படுவது போல் தெரியுதே?

இல்லையே..என்று அவள் கூற, யார் அவன்? என்று கேட்டான்.

யாருமில்லையே?

அவளது அறை பால்கனிக்கு அவளை இழுத்து வந்து, அவன யாருன்னு கேட்டேன்?

அவன்..அவன்..உதடு துடிக்க பயந்தவாறு அவனையும் கைரவையும் பார்த்தாள். அவன் இன்னும் மாறாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் கேட்கிறேன்ல..சொல்லு?

கைரவ், சார் விழித்து விட்டாரா? நான் அவரிடம் பேசலாமா?

ஏன்? அவனிடம் தான் சொல்வாயா? என்னிடம் சொன்னால் தான் என்ன?

கைரவ்..வேண்டாம். அவன் விசயத்துல நீ தலையிட வேண்டாம்.

ஓ..நீ கட்டிக்கப் போறவனா? அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.

உனக்கு எப்படி அவன பத்தி தெரியும்?

எனக்கு அவன பத்தி ஏதும் தெரியாது. ஜஸ்ட் உன்னை பத்தி தான்..

சரி.நீயே சொல்லு. அவனை கட்டிக்கப்போறேல? அவனை பத்தி சொல்லு.

நான் உன்னிடம் சொன்னேனா? அவனை கட்டிக்கப் போறேன்னு? நடுக்கம் குறைந்து சண்டைக்கு வந்தாள்.

எல்லாரும் பேசுறத சொன்னேன்?

நீயும் தானே தாரிகாவை கட்டிக்கப்போற? என்னிடம் எதுக்கு கேக்குற? நீ போ..நான் பார்த்துக்கிறேன் அவள் கூற,

ஏய்..அரை மெண்டல். நான் என்ன செய்தால் உனக்கென்ன?

ஆமாம். எனக்கென்ன? வெளிய போ.

என்ன வெளிய பத்துறதுலையே இருக்க. உன் ஆளோட ரொமான்ஸ் பண்ணப் போறியா? என்று அவளது கையை பற்றினான் கைரவ்.

நான் என்ன செய்தால் உனக்கென்ன? போடா..

அது எப்படி போகமுடியும்? சொல்லு..நீ அவனை பற்றி சொல்லு என்று அனிகாவை சினத்துடன் நெருங்கினான்.

நிறுத்துறியா? அவன் ஒரு கொலைகாரன் என்று கத்தினாள். பின் சைலேஷிடம் கூறியதை சொன்னாள்.

சரி வா. அவனை பார்ப்போம் என்று அவள் கையை பிடித்து கீழே இறங்கினான்.

என்னை விடு. நான் வரமாட்டேன். நீயும் போகாதே..என்று அவள் அவனை நிறுத்த, அவன் இழுத்துக் கொண்டே வந்தான். அவளோ வர மாட்டேன் என்று கத்த  தாரிகா, அவள் அம்மா பார்த்தனர். நித்தி அவனை பார்த்து விட்டு,

டேய்..அவள என்ன பண்ற? நித்தி கத்த, அவளிடம் திரும்பிய கைரவ் அண்ணாவை உடனே வெளியே வரச் சொல்லு என்று வெளியே செல்ல, தாரிகாவும் அவள் அம்மாவும் பின்னே சென்றனர். வேலைசெய்பவர்கள் வேடிக்கை பர்த்துக் கொண்டிருந்தனர்.

அனிகாவை அவன் முன் வந்து நிறுத்தினான் கைரவ்.

நீ ஏன் அனியோட அறையவே பார்த்துக்கிட்டு நிக்கிற? கைரவ் கேட்டான். அவன் கைரவை கண்டு கொள்ளவேயில்லை.

நேராக அனிகாவிடம் வந்து, என்ன அணில்குட்டி..இங்க வந்துட்ட? உன்னோட அப்பா உன்னை தேடிகிட்டு இருக்கார் என்று அவள் கையை பிடித்தான்.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அவகிட்ட உனக்கென்ன பேச்சு? கைரவ் கோபமாக கேட்டுக் கொண்டே அவன் கையை தட்டி விட, அவன் பல்லை கடித்தான்.

என்னடா நீ என்ன பெரிய இவனாமே?

இங்க பாரு நமக்குள்ள ஏதுமில்லை. நான் கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கேன். இடையே வராத. உன்னை அன்றைக்கே போட்டிருப்பேன். என்னோட அணில்குட்டிக்காக உன்னை விட்டு வச்சுருக்கேன்.

அவன் கூறிய மற்றது கைரவிற்கு கேட்கவில்லை. உன்னோட அணில்குட்டியா? கைரவ் கேட்க,

ஏன்டா, நான் சொன்னது உனக்கு கேட்கவில்லையா? அவளை கட்டிக்கப் போறவன் நான். அவளை என்னுடைய அணில்குட்டின்னு சொல்லாம உன்னுடைய அணில்குட்டின்னா சொல்வேன்.

இப்ப எதுக்கு வந்திருக்க?

என்னோட அணில்குட்டியை கூட்டிட்டு போக வந்துருக்கேன் என்று அவள் கையை வேலன் பிடிக்க, கைரவ் மீண்டும் தட்டி விட்டான். அவள் இருவரையும் விழித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்க பாரு. எனக்கும், அணில் குட்டிக்கும் உன்னோட விளையாட்டு பிடிக்கும். அதனால தான் உன்னை விட்டு வச்சிருக்கேன். என்னை கொல்ல வச்சிறாத என்றவுடன் அனிகா பயந்து கைரவ் கையை பிடித்து தள்ளினாள்.

எதுக்கு என்ன தள்ளுற? கைரவ் சினமாக, ப்ளீஸ் எதுவும் பேசாத. இதுக்கு தான் உன்னிடம் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

பேசுறது அவன்? என்னை பேசக்கூடாதுன்னு சொல்ற? என்று கைரவ் கேட்க, ப்ளீஸ் கைரவ். நீ எதுவும் பேசாத என்று அனிகா கைரவ் கையை பிடித்தாள்.

இதை பார்த்த வேலன் யோசிக்காது கைரவ் கையில் கத்தியால் ஒரு கீறல் போட்டான்.

கைரவ்..கைரவ்..என்று பதறி, நான் தான் சொன்னேன்ல.. அனிகா அழ,

யாருடா நீ? என்று கவின் அங்கே வந்து வேலனை பார்த்து கேட்டுக் கொண்டே கைரவிடம் வந்து அவன் கையை பார்த்தான். வேலன் திமிறாக நின்றான். கவினை பார்த்து தாரிகா மறைந்து நின்றாள். தாரிகா அம்மா அவர்களிடம் வந்தார்.

அழாம..நான் சொல்றத எடுத்து வா..என்று கவின் அவளை அனுப்பினான். அவன் சொன்னதை கவனித்த தாரிகா அனிகாவிற்கு எடுத்துக் கொடுக்க, சைலேஷ் நித்தி அங்கே வந்தனர். அனிகா எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

கவின் அதை வாங்கி முடித்து விட்டு, உனக்கு என்னடா பிரச்சனை? கேட்க,

அவனை மாதிரி ஆரம்பிக்காதே? என்றான் வேலன்.

சைலேஷ் கைரவை எழுப்பி விட்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அனைவரும் அதிர்ந்து சைலேஷை பார்க்க, கவின் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அவனிடம் பேச, அவன் கை மீண்டும் கத்தியை தீண்ட, கவினை இழுத்து சைலேஷ் அறைந்தான். அவன் கன்னத்தில் வைத்தபடி சைலேஷை பார்த்தான்.

சைலேஷ் வேலனிடம் பேசும் முன்..அனிகா அழுது கொண்டே அவன் முன் வந்து அவன் மார்பில் இரு கையை வைத்து அவனை தள்ளினாள் சீற்றமுடன். உனக்கு ஏன் சொன்னா புரியமாட்டிங்குது? ஓர் உயிரோட மதிப்பு என்னன்னு தெரியுமா? உங்களுக்கு கொலை பண்றது இவ்வளவு சாதாரணமா இருக்கு. உன்னை மாதிரி ஒருத்தனால தான் என்னோட அம்மாவை இழந்துட்டு நிக்குறேன். என்னை விட்டுரு ப்ளீஸ். நான் தான் எதுவும் வேண்டாம்னு வந்துட்டேன்ல. என்னை விட்டுறேன்.

நீ எதுக்கு இங்க இருக்க அணில்குட்டி? வா…நாம போகலாம்.

நான் எங்க இருந்தா உனக்கு என்ன? என் அம்மாவிற்காக தான் நீ செய்றத தாங்கிகிட்டேன். என் கண்ணு முன்னே எத்தனை பேர கொன்றுக்க? நினைச்சாலே..என்று பேச முடியாமல் திணறினாள். தாரிகா அம்மா அவளிடம் வந்து முதுகை தடவி விட, அவரை பார்த்து விட்டு..வேலனை பார்த்து,

என்னால் உன்னை கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது. நீ பக்கத்துல வந்தாலே பயமா இருக்கு. உன் பக்கத்திலே இருந்தா ஒரு நாள் கூட தாங்க மாட்டேன். என்னோட வாழ்க்கை அமைதியா, சந்தோசமா இருக்கணும். எனக்கென குடும்பம் வேணும். அதை விட நான் கல்யாணம் செஞ்சுக்கிறவன் எந்த தப்பான விசயமும் செய்யவே கூடாது.

ஆனா..இதுல ஒண்ணுல கூட நீ சரியா இருக்க மாட்ட. உன்னோட ஒரு நாள் கூட இருக்க முடியாது. மறுநாள் நான் பிணமாக தான் வாழணும் என்றாள்.

அணில்குட்டி..நீ என்ன சொன்ன? உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். இதுவரை உன் கையை தவிர உன்னை தொட்டது கூட இல்லை.

ஆமாம். நீ என் விசயத்தில் நல்லவன் தான். என் அம்மாவை விட நல்லா பார்த்துப்ப. ஆனால் என்னை சுற்றி உன்னை தவிர யாரும் இருக்கமாட்டாங்க. இருக்க விட மாட்ட. அதுபோல் இல்லாமல் ஒருவேலை நீ எந்த தவறான வேலையும் செய்யாது இருந்து நல்லவனாக இருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்.

அப்ப..நான் எல்லாத்தையும் விட்டு வந்தால் நீ என்னை கல்யாணம் செய்து கொள்வாயா? கேட்டவுடன் கைரவ் பயத்துடன் அனிகாவை பார்த்தான்.

அவன் தயங்கி விட்டு, ம்..என்று சொல்ல ஆரம்பிப்பதற்குள் சைலேஷ் இடைபுகுந்து, அது எப்படி இனி உன்னால் முடியும்? நீ அந்த பொண்ணை கல்யாணம் செய்து சாதாரண வாழ்க்கைய வாழவே முடியாது. இதுவரை நீ கொன்னவங்களோட ஆட்கள் உன்னை வாழ விட்டிருவாங்கன்னு நினைக்கிறியா? உன்னோட சேர்த்து அவளையும் கொன்னுடுவாங்க. அந்த பொண்ணு மேல இவ்வளவு காதல வச்சுகிட்டு அவ சொல்றத உன்னால புரிஞ்சுக்க முடியலையா? அவளுக்கு உன் மீது எந்த விருப்பமும் இல்லை. அவள விட்டுரு சைலேஷ் கூற,

சைலேஷ் கழுத்தை அவன் பிடிக்க, அனைவரும் பதறிப் போனார்கள். அவர்கள் தாத்தா வெளியே வந்தார்.

டேய்..சாரை விட்டுரு கவின் சத்தமிட, கைரவ் வேகமாக அவர்கள் அருகே வந்தான். பக்கத்துல வந்த கத்திய சொருகிடுவேன். அவள எவ்வளவு ஈசியா விட சொல்லிட்ட..என்று கழுத்தை மேலும் இறுக்க, நித்தி அழுது கொண்டே அவனிடம் வந்தாள்.

அவனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பார்த்த, அனிகா அதை எடுத்து எல்லாரையும் விட்டு விலகி நின்று, அவரை விடு..என்று கதறியவாறு அவள் கழுத்திலே கத்தியை வைத்துக் கொண்டு கத்தினாள். அவளை பார்த்த அனைவரும் பதறினர்.

வேலன் அனிகா கழுத்தில் கத்தியை பார்த்ததும் சைலேஷை விட்டு, அணில்குட்டி..அதை கொடுத்துடு.

நீ போ..இங்கிருந்து போ. இனி என்னை தேடி வாராதே? என்னை வாழவே விடக்கூடாதுன்னு நினைக்கிறியா? நான் அம்மாவிற்காக தான் வாழ்ந்தேன். என் அம்மா எனக்காக உயிரை கொடுத்த பின் தான் அவங்களுக்கும்  சேர்த்து வாழ நினைத்தேன். ஆனால் நீ என்னை விட மாட்டாய் போல?

இல்ல..எதுவும் செஞ்சுறாத? நீ என் பக்கத்திலே மட்டுமாவது இரு ப்ளீஸ். அதை கீழே போடு என்று வேலன் அழுதான்.

அவனையும் திகைத்து பார்த்தனர். இல்ல..நீ போ..என்றாள் அனிகா.

கைரவ் அவளருகே வர, வராத கையூ..வந்த அறுத்துப்பேன். வேலன் கைரவை பார்த்தான். கைரவ் மேலும் அவளருகே செல்ல, நில்லு..என்று கத்தினாள்.

அவன் கேட்காமல் வர, கத்தியை அழுத்த அவள் கழுத்தில் லேசாக இரத்தம் எட்டிப் பார்க்க, வேலன் கத்தினான். அவ தான் நிக்க சொல்றால? நில்லுடா என்று கத்தினான் வேலன்.

சரி..நான் வரல. ஆனால் நான் சொல்றத கேளு. நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் விட்டுடுறேன்.

அவள் அதையெல்லாம் கேட்கவே இல்லை. நீ போ..போ.. என்று கத்தினாள்.

சரி போகிறேன் என்று..அவன் அவளை பார்த்து விட்டு கண்ணீருடன்.. திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். அவள் கத்தியை கீழே போட்டு விட, வேலன் அனிகாவை பார்த்து ஓடி வந்து அவளை அணைத்தான்.

கைரவும் சைலேஷும் சினத்துடன் அவனிடம் வர, என்னை மன்னிச்சிரு. நீ ஆசைப்பட்டது போல் இருக்க முயற்சி செய்கிறேன். பின் உன்னை தேடி வருவேன் என்று அவனாகவே விலகி சென்றான். அனிகா மயங்கி விழுந்தாள்.

சைலேஷ் அவளை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, கவின் மருந்திட்டு ஹாஸ்பிட்டல்ல காண்பிக்கிறது நல்லது என்றான்.

அண்ணா..நான் அழைச்சிட்டு போறேன் என்று தாரிகா மறைந்திருப்பதை கண்ணால் காட்டினான் கைரவ் சைலேஷிற்கு.

இரு..தனியே போக வேண்டாம் என்று சைலேஷ் சிந்திக்க, நான் உடன் செல்கிறேன் கவின் கூற,

நீ என்னிடம் பேச தான வந்த?

ஹாய்..காய்ஸ்..”வாட் டு யூ டு?” கேட்டவாறு கேரி வந்தான்.

கேரி..கையூவுடன் ஹாஸ்பிட்டல் போயிட்டு வா. பார்த்து கவனமா இருங்க.

ஆமாம். கொலைகாரன் வெளிய தான் இருக்கான் கவின் கூற,

என்ன அவனை தான் பிடிச்சுட்டாங்களே? கவின் சுருக்கமாக கூறினான்.

யாரும் போக வேண்டாம். அந்த பொண்ணுக்கு வீட்ல வைச்சு பார்க்கலாம் என்று தாத்தா கூற, அப்பொழுது தான் எல்லாரும் அவரை பார்த்தனர்.

தாத்தா..சைலேஷ் கூறும் முன்பே..நானும் அனைத்தையும் பார்த்தேன் என்று கைரவை பார்த்தார்.

அவ மயங்கி இருக்காலே. ஒன்றுமில்லையே? கைரவ் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என்று பேசிக் கொண்டே தாரிகாவை தேடினான். அஞ்சனா கவினை முறைத்துக் கொண்டிருந்தார்.

டேய்..என்ன பார்த்துகிட்டே இருக்க? அந்த பொண்ண அவளோட அறைக்கு கொண்டு போ தாத்தா கைரவிடம் கூற, அவன் சைலேஷை பார்த்தான்.

நீ என்ன அண்ணாஸ் பாயாடா? என்று அனைவரும் நினைக்கும் வண்ணம் நடந்து கொண்டான் கைரவ்.

சைலேஷ் கண்ணசைக்க, கைரவ் அனிகாவை தூக்கிக் கொண்டு செல்ல, கவின் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்க பார்த்தது போதும். ஏதோ பேசணும்ன்னு சொன்ன? சைலேஷ் கவினை முறைத்துக் கொண்டே கேட்க, அதை விட பயங்கர முறைப்புடன் நித்தி கவினை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் கவின் கூலாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து,..ரொம்ப கிரேட் சார் என்றான்.

புரியாமல் அனைவரும் அவனை பார்த்தனர்.

ஏய், ஜில்லு..கொஞ்சம் வெளிய வர்றீயா? கவின் தாரிகாவை அழைத்தான்.

நித்தி சினமுடன் எழுந்து கவினிடம் வந்து, என்ன உரிமையா கூப்பிடுறான் பாருங்க என்று சைலேஷை பார்த்து விட்டு அவன் தலையில் கொட்டினாள்.

அய்யோ..வலிக்குதே. நீ என்னை இப்படி அடிக்கலாமா நித்தி? பாரு இரத்தம் வருது என்று கத்தினான்.

தாரிகா இரத்தம் என்றவுடம் பதறி வெளியே வந்தாள். அவளை பார்த்து எல்லார் முன்னும் கண்ணடித்தான்.

ஓய்..என்ன பண்ற? எல்லாரும் உன் மேல கொலைவெறில இருக்கோம் நித்தி சத்தமிட்டாள்.

அப்படியா? ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. அபியும் அர்ஜூனும் என்னை பார்த்ததும் நலம் விசாரிக்கிறானுக. அகில் எப்பொழுது போல் கத்துகிறான். நீ பேசவில்லை என்றாலும் என்னை பார்த்து அதிர்ந்தாய் தானே? நித்தியை பார்த்து விட்டு, சார் என்னை ஏத்துக்கலைன்னா இப்படி வீட்டிற்குள் விட்டிருக்க மாட்டாங்க. அதுவும் நான் வந்ததை பார்த்து மறைந்து நின்றாலே..என் ஜில்லு என்று அவளை பார்த்தான். அவள் கோபமாக அவனை முறைத்தாள்.

அத விட கையூ வேற லெவல். அவன் கோபம் சரிதான். நான் கூட அவன் பேசியவுடன் உண்மை என்று நம்பகூட செய்தேன். ஆனா அந்த பொண்ணை பார்த்ததும் அவன் முகத்தை பார்த்தே தெரிந்து விட்டது. கைரவிற்கு அடிபட்ட பொண்ண பிடிசிருக்குன்னு. அத இப்ப நேரிலே எல்லாரும் பார்த்திருப்பீங்க.

ஆனா தாரிம்மா, நீ அண்ணனை எல்லாமா கல்யாணம் செய்வ? என்று கேட்க, தாரிகா அவனை முறைத்தாள்.

கண்டுபிடிச்சுட்டியா? தாரிகா அம்மா கேட்க, ஆமாம் ஆன்ட்டி. இனி பிரச்சனை வராதுல.

யார் சொன்னா? தாரிகா பிடித்து முடித்த பின் வேறொருவனுக்கு மணமுடித்து வைப்பேன் தாரிகா அம்மா கூறினார்.

ஆன்ட்டி, முதல்ல இருந்தா?

இல்லப்பா என்று தாரிகாவை பார்த்தார். என்னை நம்பாத ஒருவருடன் வாழ்வதை விட நம்பி என்னை மதிச்சு பேசுறவனை கட்டிக்கிறேன்ம்மா. ஆனால் நான் படிக்கணும்மா. இப்ப கூட பாருங்க. ஆனால் மேரேஜ் படித்து முடித்த பின் தான். என்னால யாரையும் நம்ப முடியாது. நீங்க யாருன்னு பாருங்கம்மா. நான் தயாராகுகிறேன்.

விளையாடாதே? கவின் கூற, அவனை ஓங்கி அறைந்தாள்.

எல்லார் முன்னும் என்ன பேசுன? இதுக்கு மேல உன்னை எப்படி நம்புறது? இதையே அப்புறமும் பேசினால் நான் என்ன செய்வது? நான் அழுது கொண்டே இருக்கணுமா?

உங்களுக்கு தான் நிறைய கெர்ல் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே? இதுக்கு மேல நீ எதையாவது பேசி நான் தவறான முடிவெடுத்து விட்டால் என்னோட அம்மா தான் கஷ்டப்படுவாங்க என்று அழுதாள்.

கவின் எழுந்து, இல்ல தாரி..இனி அப்படி பேச மாட்டேன். இப்படியெல்லாம் பேசி என்னை காயப்படுத்தாதே? என்றான்.

யார் காயப்படுத்தியது? நானா? நானா? என்று கத்தியவள். சார்..நான் உள்ள போறேன் என்று அழுது கொண்டே உள்ளே சென்றாள். அவனும் பின் செல்ல..சைலேஷ் அவனை நிறுத்தி, நீ அவளோட நம்பிக்கைய வாங்கு. அவளே வந்து பேசுவா? இப்ப நீ கிளம்பு. எனக்கு வேலை இருக்கு என்றான்.

ஆன்ட்டி..என்று தாரிகா அம்மாவை பார்த்தான். அவரும் எழுந்து சென்றார். கவின் கவலையுடன் செல்ல, ஒரு நிமிஷம் இரு. அர்ஜூன் வாரான். அவனுடன் செல் என்று அனைவரும் கிளம்பினார்கள். கவின் தலையை பிடித்து அமர்ந்தான்.

தாத்தாவும் கவினும் மட்டும் இருக்க, அவர் அவனிடம் ஏதோ சொன்னார். கவின் தாரிகா அம்மாவை தேடி அவர் அறைக்கு சென்றான்

தாரிகா அம்மா அறை பூட்டி இருக்க, ஜன்னல் ஏறி குதித்து உள்ளே வந்தான். அவனை பார்த்து பயந்து, நீ எப்படி உள்ள வந்த? சினமுடன் கேட்டார் தாரிகா அம்மா.

அவன் பதிலேதும் கூறாமல் காலில் விழுந்து விட்டான். பவி அப்பா கூறியது போல் தான் தாத்தாவும் கூறி இருப்பார்.

ஏய்..என்ன பண்ற? என்று விலகினார்.

ஆன்ட்டி..நான் கோபத்துல இருந்தேன். முதல் முறை தான் ரொம்ப தப்பா நடந்துட்டேன். தாரி ஆதேஷுடம் பேசி விளையாடுவதை பார்த்து, அவள் என்னிடம் பேசவில்லை என்ற கோபம் வந்தது. ஏற்கனவே அக்கா திருமணத்துல வேற பிரச்சனை. இதுல என் பின்னாடியே அந்த பொண்ணு சுத்தி எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. அந்த நேரத்தில் இவள் வேற..என்று அமைதியானான்.

திருமணத்துல பிரச்சனையா? தாரிகா அம்மா கேட்க, அதே நேரம் அகிலுக்கு போன் செய்தாள் அகல்யா.