அத்தியாயம் 62

மீனு..”நீ எதுக்கு வந்த?” வெற்றி கேட்க, “மீனுவா?” என்று காவேரி.. மீனாட்சியை மேலும் கீழுமாய் பார்த்தாள்.

உங்க அப்பனை மாதிரி தருதலையா தான் வளந்திருக்க? அர்தீஸை பார்த்து மீனாட்சி கேட்டார்.

என்னடி பேசுற? என்று மீனாட்சியை அறைந்தார் வேலீஸ்வர். பரவாயில்லை. எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சுதான இருக்கு. இவளையும் கட்டிப் போடுங்கடா என்றார்.

துருவன் அவன் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தான். அதில் மணி பன்னிரண்டை காட்டியது.  இன்னும் நேரமிருக்கிறதே என்று மனதினுள் புலம்பினான்.

அர்தீஸ் புவனா அருகே சென்று,” உன்னோட கால் இன்னும் சரியாகலையா?” என்று அவள் காலை வருட, அவளுக்கு தீனா காதலுடன் வருடியது தான் நினைவுக்கு வந்தது. அவளது கண்ணீர் அர்தீஸ் மீது விழ..

புவி, “நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. அதற்குள் அழுற?” என்று எழுந்து அவள் கையை அவிழ்த்து விட்டு அவளை எழ சொன்னான். அவள் கண்ணீருடன் முடியல என்றாள்.

வான்னு சொல்றேன்ல..என்று அர்தீஸ் புவியை தரதரவென இழுக்க, பொறுமை இழந்த தீனா, அவன் கழுத்தில் இருந்த கத்தியை அசால்ட்டாக கீழே தள்ளி விட்டு புவனாவிடம் செல்ல,

அர்தீஸ் புவனாவின் ஆடையில் கை வைத்து, நீ இன்னும் ஓர் அடி வச்ச..அவள் எல்லார் முன்னாடியும் ஆடையில்லாமல் தான் நிற்பாள் என்று மிரட்ட, புவனா வலியால் அழுதாள். தீனா நிற்க முடியாமல் நகர அவள் கைப்பகுதி ஆடையை கிழித்தான்.

வாரீயா? வா..என்று அவளது மேலாடையில் கை வைக்க, இல்ல..நான் வரலை என்று நின்றான்.

பிரதீப் அவன் போனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி. என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேள் அர்தீஸ் சொல்ல, வேண்டாம் என்று புவனா தலையசைத்தாள். ஆனால் தீனா மண்டியிட புவனா அர்தீஸை பிடித்து தள்ளி விட்டு, தீனாவிடம் வர எத்தனித்தாள். ஆனால் அர்தீஸ் அவளது ஆடையை கிழித்து விட கூனிக்குருகி காலில் வலியுடனும், தன் உடல் வெளியே தெரிந்து விடுமோ என்று அஞ்சி அப்படியே அமர்ந்தாள். தீனா அவளருகே வருவதற்குள் புவனாவை தூக்கிக் கொண்டு அர்தீஸ் அறைக்குள் நுழைந்தான்.

என்னை விடுடா..விடுடா..என்று புவனா அவனை அடிக்க, அவள் ஆடையை தூக்கி எறிந்தான். அவள் உள்ளாடையுடன் உடலை மறைத்து அமர்ந்திருக்க, தீனா சினத்துடன் அறை அருகே சென்றான். அவர்களுடைய ஆட்கள் அவனை பிடிக்க, அவர்களுடன் சண்டையிட்டான். சக்கரை அவனை பிடித்திருந்தவனை ஏமாற்றி விட்டு பிரதீப் கட்டையும், துருவனின் கட்டையும் அவிழ்த்து விட்டான். எல்லாருக்கும் சண்டை நடக்க, மீனாட்சி சக்கரையை பார்த்தார். அவர் கட்டையும் வெற்றி மற்றவர்களின் கட்டையும் அவிழ்த்து விட்டான்.

மீனாட்சியும் வெற்றியும் அந்த அறைக்கதவை அங்குள்ள பொருட்களால் அடிக்க,..காவேரி அவர்கள் முன் வந்து தடுத்தார்.

வெற்றி சினத்துடன்..நீயெல்லாம் பொம்பளையாடி? ச்சீ..உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. நீயெல்லாம் இருக்கிறதுக்கு சாவது தான் சரி. உன்னை மாதிரி பொம்பளைக்கு காதல் ஒன்று தான் கேடு என்று கடுமையாக பேச அவர் உறைந்து நின்றார்.

போடி..அங்கிட்டு போ..என்று அவர் தள்ள..காவேரி கீழே விழுந்தார். துகிரா, துளசி, சக்கரை அங்கே வந்தனர். அனைவரும் சேர்ந்து அறைக்கதவை திறந்தனர்.

புவனா கதறி அழுது கொண்டே..படுக்கையிலிருந்து சன்னலை திறந்து மேலே ஏறினாள்.

புவனாக்கா..வேணாம் சக்கரை கத்தினான். அர்தீஸ் அடுத்த சன்னலின் விளிம்பை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான்.

அர்தீஸ் புவனாவை பார்த்து, நீயும் குதிச்சிரு..என்றான்.

அவள் வலியில் நிற்க முடியாது தடுமாற..அனைவரும் பயந்து உள்ளே வந்தனர்.

புவி இந்த பக்கம் குதி…துளசி கூறிக் கொண்டே அவளருகே வர, வராத துளசி..குதிச்சிருவேன். என்னால முடியல துளசி. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு அவள் கூற,

இங்க பாரு புவி…ஒன்றுமில்லை என்று துகிரா போட்டிருந்த மேல் டாப்பை கழற்ற, வெற்றியும் சக்கரையும் வெளியே தள்ளினார் மீனாட்சி.

இங்க பசங்க யாருமில்லை என்று வா..என்னோட கைய பிடிச்சுக்கோ என்று துகிரா கையை கொடுக்க..அவள் அர்தீஸை பார்த்தாள். அவன் பார்வை துகிரா மீது படிய..கோபமடைந்த துளசி அங்கிருந்த பெயிண்டிங்கை எடுத்து அவன் சன்னலை பிடித்திருந்த கையிலே அடித்தாள். அவன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான்.

வா..புவி..என்று துளசி அழ, விடு துளசி..அவள் குதிக்கட்டும். அப்புறம் என்ன? தீனாவும் குதிச்சுடுவான்.

நீ குதிம்மா. முதல்ல குதிச்சிட்டு போ. அவனும் பின்னாடியே வருவான். அன்று குதிச்சானே அதன் ஆழத்தை கூட பார்க்காமல் குதிச்சானே..என்று துகிரா மேலும் ஏற்ற, புவனா மயங்கினாள். அவளை பிடித்து உள்ளே இழுத்தார் மீனாட்சி.

அவளை கட்டிலில் படுக்க வைத்திருக்க, வெளியே சண்டை நடந்து கொண்டிருந்தது. காவேரி ஓரமாக அமர்ந்திருக்க, துருவனோ..சார் ஓ.கே என்று கையசைக்க பிரதீப்பும் கையை உயர்த்தினான்.

பிரதீப், தீனா கீழே குப்புற படுத்துக் கொள்ள வெளியே வந்த சக்கரை, வெற்றி தலையை கீழமர்த்தி அவர்களை படுக்க வைத்து அவனும் படுத்துக் கொண்டான் துருவன்.

துப்பாக்கி சத்தம் அவ்வறையில் காதை கிழிக்க தோட்டாக்கள் பாய்ந்தது. என்னவென்று பார்க்க எழுந்த காவேரி மீதும் பாய்ந்தது தோட்டாக்கள். வேலீஸ்வரும் அவ்விடத்திலே மடிந்தார். காவேரி உயிர் பிரியும் போதும் வெற்றியை பார்த்தவாறே இறந்தார்.

புவி..என்று தீனா எழுந்து அறைக்கதவை திறக்க, துகிரா..அவனை தடுத்து..டேய்..உன்னோட சர்ட்டை கொடு என்று கேட்டாள்.

அவளுக்கு ஒன்றுமில்லையே? அர்தீஸ் எங்கே?

அவன் செத்துட்டான். நீ முதல்ல குடு. அவ மயக்கத்துல இருக்கா.

சட்டையை கழற்றி கொடுத்து விட்டு, அவன் அம்மாவிடம் சென்றான். கதறி அழுதான். ஆனால் வெற்றி கண்ணிலோ சிறு நீர்த்துளிகள் மட்டுமே.. பிரதீப்பும் துருவனும் அவர்களை கண்கலங்க பார்த்தனர்.

புவனாவை விழிக்க வைத்து ஆடை மாற்றிய பின் கதவை திறக்க,..தீனா வேகமாக உள்ளே வந்தான். மற்றவர்களும் அவன் பின் வந்தனர்.

புவனா அருகே வந்து கண்கலங்க அவளது கையை தீனா பிடிக்க, “அவள் தட்டி விட்டு நீங்க என்ன செஞ்சீங்க?” என்று முறைத்தாள்.

இல்லம்மா..அந்த நிலையில் சரின்னு பட்டதை தானே செய்தேன்.

எது சரி? கோபப்பட்டாள்.

அவனை அர்தீஸ் அறைந்த போது அமைதியாக இருந்தது. புவனாவிற்காக மண்டியிட்டதனால் தான் கோபமானாள். அதை புரிந்து கொண்ட துருவன்..புவி அவரை திட்டாதே..

என்னடா அவருக்காக வக்காளத்து வாங்குற? சினத்துடன் துருவனை பார்த்தாள். இனி அவர் உன்னை தவிர யார் முன்னும் மண்டியிட மாட்டார் என்று அவன் கூற, புவனா தீனாவை பார்த்தாள். அவன் முகத்தை பார்த்து அங்கிருந்தவர்களை பார்த்தார்.

சக்கர..”காவேரி அத்தை எங்கே?” புவனா கேட்க, அவன் தலையை தொங்க விட்டான்.

துருவன் துளசியை பார்த்துக் கொண்டே, அவங்க இறந்துட்டாங்க என்றான்.

என்ன? என்று பொண்ணுங்க அதிர, புவனா காலை கீழே வைக்க செல்ல, தீனா அவளது காலை கட்டிலில் துக்கி வைத்து, வேண்டாம் என்று தலையசைத்தான்.

துளசி, துகிரா வெளியே ஓடினர். மீனாட்சியும் அவர்கள் பின் செல்ல..என்னை விடுங்க,..நான் அவங்கள பார்க்கணும் கண்கலங்க கேட்டாள் புவனா.

தீனா அவளை கட்டிக் கொண்டு அழுதான். புவனா அழுது கொண்டு வெற்றியை பார்த்தாள். அவர் தீனாவை பார்த்தவாறே வருத்தமுடன் நின்றிருந்தார். வெளியே சென்ற துளசியும் துகிராவும் அழ, மீனாட்சி கண்ணீருடன் காவேரியை திட்டியவாறே அமர்ந்திருந்தார்.

சக்கரையும் துருவனும் வெளியே வந்தனர். இருவரும் வேடிக்கை பார்க்க, பின் வேலீஸ்வரை அவர்கள் ஊராரிடம் ஒப்படைத்து விட்டு காவேரியை தீனா வீட்டிற்கு தூக்கி சென்றனர்.

வீட்டில் அப்பத்தா ஆட்களுடன் நிற்க, இவர்கள் காவேரியை தூக்கி வந்தனர். அவர் இறந்ததை தாங்க முடியாத அப்பத்தா..மார்பில் அடித்துக் கொண்டு அழுதார். ஊர் ஆட்கள் வர ஆரம்பிக்க, தீனாவிடம் பிரதீப்,..அபியையும் ஜானுவையும் வர வைக்கவா? கேட்டான்.

வேண்டாம்..அவங்களுக்கு விசயத்தை மட்டும் சொல்லலாம். ஆனால் இப்ப வேண்டாம். காலையில சொல்லலாம்.

ஏன்டா?

அவங்களையும் இழக்க முடியாது. அவர்கள் பக்கம் தான் ஆபத்து உள்ளது. அவங்க பாதுகாப்பா அங்கேயே இருக்கட்டும்.

அபியும், ஜானுவும் கோபப்படப் போறாங்க.

பார்த்துக்கலாம். இப்பொழுதைக்கு எல்லாருடைய பாதுகாப்பு தான் முக்கியம். அபிக்கு பதிலா அவங்க பெற்றோர் இருக்காங்க. ஜானுவுக்கு பதிலா தான் நீ இருக்கேல.

நானா? என்று பிரதீப் தீனாவை பார்க்க, விசயம் வெளிய தெரியாம இருக்குறது தான் நல்லது. எப்பொழுது போலே இருப்போம்.

அப்ப..அம்மா?

அவங்க முடிவெடுக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.

காலையில் ஸ்ரீ எழுந்து அர்ஜனை தேடினாள். குளியலறையில் சத்தம் கேட்டு உள்ளே இருக்கிறான் என்று அவனது சட்டையை மாட்டிக் கொண்டு, லாங்க் ஸ்கர்ட்டை போட்டாள். பின் கண்ணாடி முன் நின்று களைந்த கூந்தலை சரி செய்து கொண்டிருந்தாள்.

அர்ஜூன் ஆடையை போட்டு விட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்தான். ஸ்ரீயை பார்த்து விட்டு கண்ணாடி அருகே அவன் வர, அவனை பார்த்து ஸ்ரீ விலகினாள். அவன் கண்ணாடி முன் நின்று தயாரானான். பின் அனுவை பார்த்து, அவளருகே அமர்ந்து அவள் கையை பிடித்துக் கொண்டு அவள் தூங்கும் அழகை புன்னகையுடன் ரசித்தான்.

அனு கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, ஸ்ரீ வைத்திருந்த “பைல்”லை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

அர்ஜூன்..அர்ஜூன்..என்று ஸ்ரீ அவன் பின் ஓடி வந்தாள். இருவரும் ஒரே அறையில் இருந்து வருவதை பார்த்த தருண்..அர்ஜூன் என்று அழைக்க, அவன் தருணையும் ஸ்ரீயையும் பார்த்தான்.

அர்ஜூன் சட்டையை அவள் போட்டிருப்பதை பார்த்து, “ரெண்டு பேரும் ஒரே அறையிலா இருந்தீங்க?” இதயா கேட்க, அர்ஜூன் அவளை முறைத்து பார்த்தான்.

ஸ்ரீ அவர்களை கண்டுகொள்ளாமல்,..அதை கொடுத்துடு என்றாள். அவள் பக்கம் அர்ஜூன் திரும்பினான்.

அங்கிள பார்க்கப் போகிறாயா? நான்..என் மீது தான் தவறு. நான் அகில் சீனியருக்கு உதவ நினைத்து தான் அங்கிளிடம் உதவி கேட்டேன். ஆனால் அவர் பேசியதை நான் எதிர்பார்க்கலை. அதை கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு நிறைய வேலை இருக்கும். நீ அதை கவனி.

ம்ம்..எப்படி? நீ எவனையோ கல்யாணம் பண்றத வேடிக்கை பார்க்க சொல்றீயா? பல்லை கடித்தான்.

அர்ஜூன்..நான் தான் சொன்னேன்ல. எனக்கு விருப்பமில்லை சும்மா அவர் கேட்க தானே செய்தார்.

என்ன ஸ்ரீ? கல்யாணமா? தருண் அவர்கள் அருகே வர, அர்ஜூன் கோபமாக..ஆமாம்டா மேடம் ஆளை பார்த்தது கூட இல்லை. ஆனால் என்று ..அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க,

என்ன யாருன்னு தெரியாமலா? இதயா கேட்க,

வாயை மூடுறீங்களா? ஸ்ரீ கத்தி விட்டு அர்ஜூனிடம் கோபமாக.. குடுக்கப்போறீயா? இல்லையா? சத்தமிட்டாள். அனைவரும் அங்கே வர, அர்ஜூனும் சினத்துடன் அவளது கழுத்தை பிடித்தான்.

அர்ஜூன் என்ன பண்ற? என்று பதறி அர்ஜூனை அபியும் தருணும் பிடிக்க, ஸ்ரீ கழுத்தை பிடித்துக் கொண்டு இறுமினான்.

இதயா அம்மா அர்ஜூனிடம், என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அதட்டினார்.

ஹாஅ….அதை அவளிடம் கேளுங்க என்று “பைல்”லை தூக்கி எறிந்தான். ஸ்ரீ அதை எடுக்கச் செல்ல, அதை தொட்ட உன்னை என்ன செய்வேன்னே தெரியாது என்று கத்தினான்.

டேய்..அர்ஜூன், “ஏன்டா இவ்வளவு கோபம்?” கவின் கேட்க,

அவனை அணைத்த அர்ஜூன் கண்ணீருடன், அதை எடுத்துப் பாருங்க. நமக்கு தெரியாம இன்னும் என்னவெல்லாம் செய்ய இருக்கிறாளே? அவளுக்கு ஏதும் ஆகி விடக்கூடாதுன்னு எவ்வளவு கஷ்டப்படுறோம். எல்லாத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிறா? எனக்கு அந்த கொலைகாரனை பார்த்தா கூட பயமா இல்லை. இவள் செய்வதை பார்த்தால் தான் பயமா இருக்குடா என்று அழுதான். ஸ்ரீக்கு அவன் அழுகை வலிக்க, அறை பக்கம் திரும்ப அனு இவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அனு..என்று ஸ்ரீ அழைக்க, அவள் ஸ்ரீயை விடுத்து அர்ஜூனிடம் ஓடினான். அர்ஜூன் அவளை தூக்க, அவனது கண்ணீரை துடைத்து விட்டாள் அனு. அவன் கோபம் குறைந்தது.

ஸ்ரீ..என்ன பண்ண? இதயா கேட்க, இன்பா அந்த “பைல்”லை எடுத்துப் பார்க்க, அபியும் தருணும் இன்பாவிடம் வந்து சேர்ந்து பார்த்தனர்.

ஸ்ரீ..இதை தனியே உன்னால் கவனிக்க முடியுமா? என்ற இன்பா அந்த “பைல்”லை ஸ்ரீ கையில் திணித்து,..போ..முடிச்சிட்டு வா என்று கோபமாக கூறினாள்.

போதை மருந்து பற்றிய சிறு விசயத்தை கூட போலீஸ் உதவி இல்லாமல் செய்தால் அது உன் பக்கம் திரும்பும். இதில் அந்த கொலைகாரனுடைய ஆட்கள் கூட நடத்த முயற்சி செய்யலாம் தருண் கூற,

ஸ்ரீ, “மூளையை உபயோகிக்கவே மாட்டாயா?” அகில் அப்பா பற்றியது தானே? அவனோட ப்ரெண்ட்ஸ் நாங்க பார்த்துக்கிறோம். உனக்கு இதை பற்றி தெரியும் என்று தெரிந்தால் அந்த கயல் சும்மா விடுவாளா?

கயலா? தருண் கேட்க, கண்டிப்பா அவளுக்கும் இதில் சம்பந்தம் இருக்கும் அபி கூறினான்.

“எப்படி சொல்ற?” இன்பா கேட்க, போதை மருந்து ஏற்கனவே தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்புறாங்க. அது கூட ஆதாரமா வைச்சிருக்காங்க. உங்க ப்ரெண்டு சந்துரூ அண்ணாகிட்ட தான் எல்லாமே இருக்கு அபி கூற,

அர்ஜூன் யோசனையோடு..அனுவை இதயாவிடம் கொடுத்து விட்டு,..ஸ்ரீயிடம் வந்து இத சிதம்பரம் அங்கிள் தான் தயாரிச்சார்ன்னா.. அவர் கயலுக்கு கொடுக்க முடியாதுன்னு தான் சாம்பிள் ஒன்றை மட்டும் எடுத்து வைத்திருக்கிறார். அவர் இப்பொழுது..கயல் வீட்ல தான இருக்காரு..

ஸ்ரீ, “நீ சொன்ன அங்கிள்..அகில் அப்பா தானா?” அவருக்காக தான் அந்த வீட்டிலிருந்து வெளிய நீ வரலையா?

அர்ஜூன்..”அங்கிள் அகில் அப்பாவான்னு எனக்கு தெரியாதே!”

ஏய்..அந்த கயல் உன் மீது பயன்படுத்திய திரவம்..அவளது விளக்கம். அதை தயாரித்தது அவராக தான் இருக்க முடியும். அவர் தான் புதிதாக மருந்தை தயாரித்து, கயல் கம்பெனிக்கும் மற்ற கம்பெனிகளுக்கு விற்பனை செய்வார். ஆனால் ..அவர் காணல.

அபி, கவின் உங்களுக்கு அவர் எப்பொழுது தொலைந்தார் என்று நினைவிருக்கிறதா?

ம்ம்..என்ற அபி..ஸ்ரீ அப்பாவை பார்க்க சொல்லி தான் வந்திருக்கிறார். ஸ்ரீ அப்பா இறந்த இரண்டு நாளுக்கு முன் தான் கிளம்பினார்.

கண்டிப்பா அவர் தான் என்ற அர்ஜூன் ஸ்ரீ கையை பிடித்து, வா..உன்னோட ஆன்ட்டி வீட்டிற்கு.

அர்ஜூன்..என்று தயங்கினாள்.

என்ன?

ஆன்ட்டி..

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இப்ப வேண்டாம் அர்ஜூன். நம்ம கண்டு கொண்டது தெரியாமலே இருப்பது தான் நல்லது.

ஸ்ரீ அதிராமல் இருப்பதை பார்த்த இன்பா, “அவளிடம் வந்து அகில் அப்பா தான் அவர் என்று உனக்கு ஏற்கனவே தெரியுமா?” கேட்டாள்.

ஸ்ரீ தலை கவிழ்ந்து கொண்டு கண்களை மேலேற்றி அர்ஜூனை பார்த்தாள்.

அப்ப..உனக்கு அவர் தான்னு தெரிஞ்சிருக்கு. ஆனால் இப்ப கூட சொல்ல தோணலை என்று அவன் அவளை அடிக்க வந்தான்.

அர்ஜூன்..என்று அனு அவனது காலருகே வர, இதயாவை பார்த்தான்.

ஏன் ஸ்ரீ? “உனக்கு எங்ககிட்ட சொல்லத் தோணலையா?” கவின் கேட்க,

சீனியர், அவங்க அவரை ரொம்ப கஷ்டப்படுத்துறாங்கன்னு ஒரு முறை அவர் இருக்கும் இடத்தில் உள்ளவர்கள் அசந்த நேரம் காப்பாற்ற முயன்றேன். ஆனால் அவங்க..என்று அழுதாள்.

என்ன? என்று அர்ஜூன் கேட்க, அவர்கள் என்னை கேமிராவில் பார்த்து அவரது கையை கத்தியால் கிழித்தனர். அவர் கத்திய சத்தம் இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கு என்று அழுதாள்.

பின் அவளாகவே சொன்னாள். என்னை உள்ளே விடவே இல்லை. ஒரு மாதமாக அவரை பார்க்கவே விடவில்லை. அப்பொழுது எனக்கு அவர் தான் அகில் அப்பா என்று தெரியாது. எனக்கு உங்க யாரையும் தெரியாது. அவரும் அவரை பற்றி கேட்டால் சொல்லவே இல்லை. எனக்கு அவரை அந்நிலையில் பார்க்க, என்னோட அப்பாவை பார்ப்பது போல் இருந்தது. அதனால் தான் அவர் அங்கேயே இருந்தாலும் பத்திரமா இருக்கணும்ன்னு நினைச்சி ஆன்ட்டியிடம் மன்னிப்பு கேட்டு வாரம் ஒரு முறை மட்டும் பார்க்க செல்வேன்.

அன்று நடந்த கொலையை பார்த்த பின் நான் அவரை பார்க்கவேயில்லை. அந்த கொலை நடந்த அன்று தான் அங்கிள் பெயர் தெரிந்தது. அகில் சீனியரோட ஐ.டி யை வைத்து அவர் தானோ என்று சந்தேகம் வந்தது. பின் நீங்கள் அனைவரும் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர்கள் என்பதை வைத்து நானே யூகித்தேன். அதே போல் ராஜவேல் அங்கிளிடம் சும்மா கேட்க தான் செய்தேன். அப்புறம் தான் அகில் சீனியர் அப்பா தான் அந்த அங்கிள் என்று எனக்கே உறுதியானது என்றாள் ஸ்ரீ.

அப்பவே எங்களிடம் சொல்லி இருக்கலாம்ல? அபி கேட்க,

அப்பாவை மாதிரி அவரையும் ஏதாவது செஞ்சுட்டாங்கன்னா. அதுவும் நாம சந்தித்த பின் என்னையும் நிவியையும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் அவர்களது ஆட்கள். “நான் எப்படி சொல்றது?”

“இப்பவாது சொல்லி இருக்கலாம்ல?” அர்ஜூன் கேட்க,

“இப்ப சொல்லவா?” எல்லாமே மாறிடிச்சுன்னு நினைப்பா உனக்கு. ஒரு வேலை கயலையும் சேர்த்து நீங்க பிடிச்சிருந்தீங்கன்னா. அடுத்த நிமிஷமே உன்னிடம் சொல்லி இருப்பேன். இன்னும் அவர் அவங்க பாதுகாப்புல தான்  இருக்கார். அதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு. அவங்க பாஸையே பிடிச்சிருக்கீங்க. அதான் லேட் பண்ண வேண்டாம்னு அன்றே அவரிடம் அதை பற்றி கேட்டேன்.

அவர் பையனை கல்யாணம் பண்ண சொல்லி கேட்பார்ன்னு எனக்கு தெரியாது. நானும் அப்பொழுதே என்னால முடியாதுன்னு சொல்லீட்டேன். “உனக்கு எல்லாமே தெரிந்தும் என்னால கல்யாணம் பற்றி யோசிக்க முடியும்னு நினைக்கிறியா?” இருக்கிற பிரச்சனைல இதான் கேடு என்று அர்ஜூனை பார்த்து முறைத்தாள்.

அப்ப எப்படி தான் அவரை வெளிய கொண்டு வர்றது? அபி கேட்க, முதல்ல நாம ஊருக்கும் போகணும். உங்க நிகழ்ச்சியும் இன்பா மேம்..பிரச்சனையை ஓழிச்சு கட்டுங்க. அப்புறம் தான் அவரை பாதுகாப்பா வெளிய கொண்டு வர முடியும் ஸ்ரீ கூறினாள்.

என்ன?

ஆமாம்..நான் அங்க போனா அந்த கொலைகாரன் கண்டிப்பா வருவான். எனக்கு என்னமோ அவனுக்கும் நம்ம ஊருக்கும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுது..அவள் கூற

அர்ஜூன் போன் ஒலித்தது. அர்ஜூனிடம் பிரதீப் வேலீஸ்வர், அர்தீஸ், காவேரி இறந்தது; இருவரும் அண்ணன் தங்கை என்றும்; முகத்திரை பற்றி கார்த்திக் சொன்னது; அவன் அம்மாவை அவர்கள் உயிரோடு வைத்திருந்ததை கூற அர்ஜூன் பதட்டமுடன்,

அண்ணா..”என்ன சொல்றீங்க?” அப்ப இங்க ஸ்டேசன்ல இருப்பது?

அவனது அடியாட்கள்.

அவன் சோபாவில் அமர்த்து தலையில் கை வைத்து சிந்தித்தான். “அர்ஜூன் என்னாச்சு?” கவின் கேட்க, அர்ஜூன் போனை..அபியிடம் கொடு என்று பிரதீப் கூற,

அண்ணா..அதுக்கு முன் நானும் உங்களிடம் ஒன்று சொல்லணும். வேலீஸ்வரின் தங்கை ஒருவர் இங்கே எங்களுடன் இருக்கிறார் என்று கூற,

“ஓடிப்போன தங்கையா?” பிரதீப் கேட்க,

ஆமாம் அண்ணா. அது உங்களுக்கும் தெரியுமா?

ஜஸ்ட் சொன்னாங்க. யாரு? எப்படி இருப்பாங்கன்னு தெரியாது என்றவுடன் அபியிடம் போனை நீட்டினான் அர்ஜூன். அபியிடமும் பிரதீப் சொல்ல..

மாமா..நான் ஊருக்கு வரேன். ஜானுவை அழைத்து வரவா?

இல்ல. தீனா யாருமே வரவேண்டாம்ன்னு சொல்றான். எனக்கும் அது தான் சரின்னு படுது.

ஜானுவுக்கு தெரியுமா மாமா?

இல்ல. இனி தான் சொல்லணும்.

“நாங்க வராமா எப்படி மாமா?” என்று அபி கண்கலங்கிக் கொண்டு, ஜானுவுக்கு தெரிஞ்சா நல்லா திட்டப் போறா? நேற்றே சொல்லி இருக்கலாம்ல?

எப்படா இரவு ரெண்டு மணிக்கா?

மாமா..அவளுக்கு தெரிஞ்சா இங்க இருப்பான்னு நினைக்கிறீங்களா? பிரச்சனையே பண்ணிடுவா?

அர்ஜூன் அவன் பேசுவதை கேட்டு, அவங்க சொல்றது சரி தான். யாரும் இப்ப தனியா போக வேண்டாம் என்று கவினை பார்த்து விட்டு, ஜானுவை நாம சமாளிச்சுக்கலாம் என்றான்.

அபியிடம் போனை வாங்கிய அர்ஜூன்..”அண்ணா வேறேதுவும் இருக்கா?” “உங்க குரலில் தயக்கம் தடுமாற்றம் தெரியுதே?”

அர்ஜூன் நீ ஊருக்கு வா.. பேசிக்கலாம்.

ஏதும் பெரிய பிரச்சனையா?

வா..பார்த்துக்கலாம் என்றான். போனை பிரதீப்பிடமிருந்து பிடுங்கிய தீனா. அர்ஜூன் கவனமா இருங்க. அந்த கொலைகாரன் உங்கள கவனிச்சுக்கிட்டு இருப்பது போல் தோணுது. யாருக்கும் ஏதும் ஆகக்கூடாது. ஆதேஷ் அப்பாவிடமும் சொல்லி வைக்கிறேன். பெரிய பிரச்சனை என்றால் அவரையும் மாதவையும் அழைத்துக் கொள். நீயே செய்யணும்னு நினைக்காத. நம்ம நினைக்காதவங்களெல்லாம் சரியில்லை.

அண்ணா..நீங்க ஓ.கேவா? அம்மா..என்றான் அர்ஜூன்.

அதான் நடந்துருச்சே விடு அர்ஜூன் என்று போனை வைத்தான்.

அபி அறைக்குள் செல்ல, அர்ஜூன் அமைதியாக இருந்தான்.

என்னாச்சுடா? அபி எதுக்கு உள்ள போறான்? ஏதும் பிரச்சனையா? கவின் கேட்க,

தீனா அண்ணனோட அம்மா காவேரியும், வேலீஸ்வரும் இறந்துட்டாங்க என்று பவி அம்மாவை பார்த்தான் அர்ஜூன்.

அர்ஜூன்..நீ என்ன சொல்ற? காவேரியுமா? என்று பவி அம்மா அழ, யாருக்கும் புரியவில்லை.

ஆமாம். உங்க அக்காவும் இறந்துட்டாங்க என்றவுடன் கதறி அழுதார் பவி அம்மா. அவரை அணைத்து சமாதானப்படுத்தினார் அவர் கணவர்.

அக்காவா? என்று கவின் கேட்க, ஆமாம்டா இவங்க வேலீஸ்வரின் இரண்டாவது தங்கை. முதல் தங்கை காவேரி.

அர்ஜூன்…ஆனால் காவேரிக்கு அம்மாவுக்கு பெற்றோர் என்று வேறொருவர் தான வந்தாங்க. தப்பா இருக்குல்ல கவின் கேட்க,

எனக்கும் தோண தான் செய்தது? நீ எப்படி தனியா வந்த? உன்னை யாராவது பின் தொடர்ந்தது போல் இருந்ததா? அர்ஜூன் கேட்க, எனக்கு ஏதும் தோணலைடா என்றான் அவன்.

அந்த கொலைகாரன் ஜெயிலில் இல்லை. முகத்திரையை வைத்து நம்மை ஏமாத்தி இருக்கானுக. இப்ப அவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கான். ஆனால் ஏதும் செய்யவில்லை. காரணம் புரியலையே அர்ஜூன் அனைவரிடமும் கூற,

ஒரு வேலை போதை மருந்து பிஸினஸ் பற்றி சந்துரூவிடம் இருப்பதாக சொன்னீங்களே? அதனால் காத்திருக்கிறானோ?

அந்த காரணமென்றால் அவரை தானே தாக்குவாங்க தருண் சொல்ல, மேம் நீங்க கால் பண்ணி அவர் நல்லா இருக்காரான்னு பேசுங்க. இன்பா பேசி விட்டு..கவனமா இரு. இன்னும் அவனை பிடிக்கவில்லை என்று வைத்து விட்டாள்.

அர்ஜூன்..”நான் ஊருக்கு கிளம்பவா?” பவி அம்மா கேட்க,

யாருமே இப்ப போகக்கூடாது. நீங்களும் எங்களுடன் சம்பந்தப்பட்டு விட்டீர்கள். அதனால் உங்களுக்கும் ஆபத்து. ரெண்டு நாள்ல..போகலாம்.

தம்பி..”என்னோட கம்பெனி?” பவி அப்பா கேட்க,

சார்..உங்களுக்கு உதவியாளர் இருப்பாரே அவரிடம் கனெக்ட்லயே இருங்க. அவரிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். “உயிரே இல்லைன்னா.. கம்பெனி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?” அர்ஜூன் சாதாரணமாக கூற,

அர்ஜூன், “என்ன இப்படி பேசுற?” இன்பா அம்மா கேட்க, நான் என்னத்த சொல்றது? அவனை பிடிக்க, நாம யாரைவாது பழி கொடுக்கணும் போல..

டேய்..”என்ன பேச்சு பேசுற?” ஸ்ரீ அவனை திட்ட,

ஸ்ரீ…”நீ நான் சொல்வதை கேட்கவே மாட்டாய்ல?” நீ பேசாத..என்றான்.

அர்ஜூன்..”என்னை வச்சு அவனை பிடிங்க?” எனக்கும் அவனை பார்க்கணும் போல உள்ளது ஸ்ரீ கூற,

இல்ல..அர்ஜூன் என்னை வச்சு? நிவாஸ் ஆரம்பிக்க ஸ்ரீ, “அவன் கன்னத்தில் அறைந்து விட்டு, ஆருத்ராவை யோசிச்சியா?” கேட்க,

அவனும் அவளை அறைந்து விட்டு, “நீ அனுவை பத்தி யோசிச்சியா?”

இருவரும் நிறுத்துங்க. “நானே அவனை சந்திக்கிறேன்” அர்ஜூன் கூற, இருவருமே நோ..என்று கத்தி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அர்ஜூன் விசயத்துல மட்டும் அக்காவும் தம்பியும் ஒத்துமையா இருக்காங்க” பாரு இன்பா கூறினாள்.

சரி..இந்த பேச்சு வேண்டாம். கவின் வா.. போகலாம்.. தேவையான பொருட்களை வாங்கலாம்

அபிடா? கவின் கேட்க, அவனை தனியா விடு. நல்லா பழகின அத்தை. சோ வருத்தத்துல இருப்பான்.

அபி போனை காதில் வைத்தவாறு வெளியே வந்தான். கதவருகே செல்ல போனவனை தடுத்த அர்ஜூன், “எங்க போற அபி?”

அம்மா..கிட்ட பேசணும். துளசிய பார்த்துக்கணும்ல. கேட்டை தாண்டி வெளியே போகாதே? அர்ஜூன் கூறினான். அபி தலையசைத்து வெளியே சென்றான்.