வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-61
202
அத்தியாயம் 61
துருவன் பிரதீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, சக்கரை அங்கே வந்து, “அண்ணா…அக்காவை விட்டுட்டீங்களா?” பிரதீப் அண்ணா வீட்ல அப்பத்தாவை அடிச்சு போட்டுருக்காங்க. பிரதீப் அண்ணா கட்டிக்கப்போற அக்காவையும் காணோம்.
“என்ன சொல்றான் டா?” என்னோட ஆட்களை பாதுகாப்பிற்கு விட்டு தான் வந்தேன். “துகிய எங்கடா?” பதறினான் பிரதீப்.
சரி துருவனிடம் போனை கொடு என்று அவனிடம், துருவா..எந்த பக்கம் போனாங்க கேட்க..அண்ணா ஹைவே கிழக்கு பக்கம் போனாங்க.
தீனா போனை பிடுங்கி,”இங்க பாரு பிரதீப் ஆளு ஒருவனை அப்பத்தாவுடனே இருக்க சொல்லிட்டு…அவன் பேச” அவன் போன் ஒலித்தது. எடுத்து பார்த்த தீனா, “துருவா…நான் கூறியதை சக்கரையிடம் சொல்லி அவங்களை அண்ணாவுக்கு போன் செய்ய சொல்லு”.
நீ லயன்லயே இரு வாரேன் என்று அவன் போனை எடுக்க, என்னடா தீனா..உன்னோட புவிய தவற விட்டுட்டியேடா. பாவம்டா அவ..ஒருவன் பேச.
“யாருடா நீ? அர்தீஸ் ஆளா?”
ஆஹாம்..கண்டுபிடிச்சுட்ட. ஆனா எங்க தல ஏதோ வேலையா இருக்காராம். வா..வா..உன்னோட புவி உயிரோட வேணும்னா வா..சீக்கிரம்.
எங்க வரணும்?
எதுக்கு அவசரப்படுற. அவருக்கு புவி பத்தாதாம். அதான் துளசியும், நம்ம அண்ணா கட்டிக்கப்போற பொண்ணும் இருக்காங்க. அண்ணாவையும் அழைச்சிட்டு வா..
அண்ணா கிட்ட..அண்ணி சூப்பரா இருக்கான்னு சொல்லு.
டேய்..வைக்க கூடாத இடத்துல கையை வச்சுருக்கீங்க. அர்தீஸ்..வாரேன்டா. என்னோட ஜானு மேலையே கைய வைச்சுட்டேல. நானே உன்னை கொல்ல தான் காத்துகிட்டு இருக்கேன். உன்னோட தலய தயாரா இருக்க சொல்லுடா பிரதீப் கத்தினான்.
பிரதீப் சத்தத்தில் அமைதியான அவன் லொக்கேஷன் உன்னோட போன்ல சேர் பண்ணி இருக்கேன் என்று போனை துண்டித்தான். இதை அனைவரும் கேட்டனர்.
பிரதீப்..”நீ என்ன சொன்ன? ஜானு..பாப்பா தான. என்ன ஆச்சு?” பதறி மீனாட்சி கேட்க, அம்மா சொல்றேன். இப்ப நீங்க வீட்டுக்கு போங்கப்பா. நாங்க பார்த்துக்கிறோம்.
நாங்க அர்தீஸை பிடிச்சுட்டு வாரோம் என்று இருவரும் கிளம்ப, வெற்றியும் உடன் வருவதாக கூறினார்.
நாங்க பார்த்துக்கிறோம்..என்று தீனா சொல்ல..
டேய்..என்னோட பொண்ணும்..மருமகள்களும் இருக்காங்க.
“மருமகளா?” என்று மீனாட்சி நானும் வருவேன் என்று பிடிவாதத்துடன் அவர்களுடன் சென்றார். தீனாவும் பிரதீப்பும் துருவனை வழி நடத்த, அவனும் அவர்களுக்கு சில ஐடியாக்கள் சொன்னான். கார்த்திக்கை அவர்கள் ஆட்களுடன் பிரதீப் வீட்டிற்கே அனுப்பினர்.
துளசியை கடத்திய வேனில் தான் துகிராவும் புவியும் இருந்தனர். மூவரும் மயக்கத்தில் இருக்க, மெதுவாக விழித்தாள் துளசி. அப்பொழுது தான் அவளை கடந்து சென்ற துருவனை பார்த்து கையை அந்த வேன் கண்ணாடியில் வைத்தாள். அதை தான் சக்கரை பார்த்து காட்ட, துருவன் வேன் பின் வருவதை பார்த்து துளசி,
துருவா..என்று கத்த, அவளது வாயை பொத்தி அவளது மூக்கில் கைக்குட்டையை வைத்து அழுத்த அவள் மீண்டும் மயங்கினாள். வேன் வேகமாக செல்ல..துருவன் வேன் வேகத்திற்கு செல்லாமல் விட்டான்.
இப்பொழுது துருவன் அவர்கள் கூறிய இடத்தில் செல்ல, வேண்டாம்டா துருவா..ரிஸ்க் எடுக்காத என்று பிரதீப் கூற, அவன் கேட்கவில்லை.
சும்மா இரு அண்ணா. அவனால் முடியும். அன்று துளசியை காப்பாற்றினானே? அதை பார்த்தேன்.
உன்னால முடியும் துருவா..சீக்கிரம் உள்ளே போ என்றான் தீனா.
தீனா, எனக்கு சரியா படல. அவனை அவனுக ஏதும் செய்து விடாமல்..பிரதீப் கண்டிக்க, அண்ணா..என்னை யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. நீங்க எதுக்கும் கவனமாகவே வாங்க என்று வந்துட்டேன். உள்ள போறேன் என்று எஸ்டேட்டுக்குள் சென்றான். அங்கிருந்த பழைய பங்களாவிற்குள் நுழைந்தான் அங்கிருந்த கேமிராக்களை நோட்டமிட்டபடி..வெளியே இரண்டு இருக்க உள்ளே செல்ல,
வெல்கம் துரு…போன முறை போல் இல்லாமல் தனியா வந்துருக்க. ஆமா..”நீ எதுக்காக வந்துருக்க? உன்னை நாங்க எதுவுமே செய்ய மாட்டோம்னு தைரியமா?” அசட்டு தைரியம் நல்லதல்ல தம்பி என்று குரல் மட்டும் போன முறை போல் கேட்டது.
“யார் சொன்னா?” நீங்க என்னை எதுவும் செய்யமாட்டீங்கன்னு. போன முறை அர்தீஸ் பிடிபட்டதுக்கு நானும் ஒரு காரணம் தான். என்னை நீங்க கொல்ல கூட செய்யலாம்னு தெரிஞ்சு தான் வந்தேன் என்று சுற்றி பார்த்தான்.
நாங்க யாருமே பிடிபடலை. எங்க ஆள் தான் எங்கள் வேடத்தில் உள்ளே இருக்கிறார்கள்.
“என்ன..உங்களை போலா?” இதை கேட்டுக் கொண்டிருந்த தீனா, பிரதீப் மற்றவர்கள் திகைத்தனர்.
அண்ணா..”வேலீஸ்வர் வெளிய தான் இருக்கானா?”
பொறுமையா இரு தீனா. கவனிப்போம் என்று சித்தப்பா சீக்கிரம் செல்லுங்கள் என்றான் பிரதீப்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?” பிடிச்ச எல்லாரையும் விடுங்க.
விடணுமா? உன்னோட புது அண்ணன் என் மகனை சுட்டு விட்டானே? “நான் எப்படி சும்மா இருப்பேன்?”
என் பையனுக்கு சேவை செய்ய யாராவது இருந்தால் நல்லா இருக்குமென்று நினைத்தேன். அவனும் ரொம்ப நாளா புவனா மேல கண்ணா இருக்கான். என்ன அவளை தொட தான் முடியல..இனி அவனுக்கு எல்லாமே கிடைக்கும். சேவைக்கு துளசியை மட்டும் தான் அழைத்து வரச் சொன்னேன். அவள காப்பாத்துறேன்னு பிரதீப்பை கட்டிக்கப் போகும் பொண்ணு தானா வந்துட்டா. பசங்க சும்மா விடுவானுகளா? எல்லாரையும் கொத்தா தூக்கிட்டு வந்துட்டாங்க.
“இதுக்கே முறைச்சா எப்படி?”
இனி தான் கச்சேரியே ஆரம்பிக்க போகுது.
சரி..அவங்கள விடுங்க.
ஏய்..”நான் சொன்னது கேட்கலையா?” என்று கோபத்தில் எழுந்தார். சத்தம் கேட்டு வேலீஸ்வர் இருக்கும் அறை தெரிந்தது துருவனுக்கு. அவன் நிற்கும் இடத்திற்கு பின் தான் அவன் இருக்கிறான். வேகமாக அவன் இருக்கும் இடத்திற்கு சென்று அவனை பிடித்தான். இருவரும் சண்டையிட.. வேலீஸ்வரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அவர் சாய்ந்து அமர,
“எங்க இருக்காங்க சொல்லு..சொல்லு.. சொல்லுடா?” என்று கத்தினான். அதற்கு பதிலாக அவன் சிரிக்க, துருவன் கோபமாக அவனை தரதரவென இழுத்து வந்து மேசையின் மீது முட்ட வைத்தான். அதில் வேலீஸ்வர் மயங்கினான்.
நடந்த அனைத்தும் மயக்கதிலிருந்து விழித்த துகிராவுக்கும் புவனாவிற்கும் கேட்டது. இப்பொழுது துகிராவை தனி அறையிலும், புவியை ஓர் அறையின் சன்னலில் கயிற்றை வைத்து கட்டி வைத்திருந்தனர். துளசியும் அதே இடத்தில் தான் இருந்தாள்.
ஆட்கள் துருவனிடம் வந்தனர். சரியாக அங்கே பிரதீப் ஆட்களும் நுழைந்தனர். சக்கரையும் வந்திருந்தான்.
சக்கர நீ எதுக்கு வந்த..போடா என்று துருவன் கூற, இல்ல நான் புவனா அக்காவை தேடுகிறேன் என்று மாடி ஏறி ஒவ்வொரு கதவாக தட்டிக் கொண்டிருந்தான்.
வேலீஸ்வர் ஆட்கள் பலமாக இருக்க பிரதீப் ஆட்கள் துருவனால் சமாளிக்க முடியவில்லை. ஆட்களும் நிறைய பேர் இருக்க, இவர்கள் அடித்தும் அடியும் வாங்கினார்கள். துருவனுக்கு அடிபட்டு வாயிலிருந்து இரத்தம் கொட்டியது.
அர்தீஸ் அவன் முன் வர, டேய்..என்று கத்திக் கொண்டே அர்தீஸை தாக்க வந்த துருவனை வேலீஸ்வர் ஆட்கள் பிடித்தனர்.
“உன்ன மாதிரி சின்ன பசங்களுக்கு இங்க என்ன வேலை?” எனக்கு தான் நிறைய வேலை இருக்கு.
நான் ஒழுங்கா புவிய மட்டும் எடுத்துருப்பேன். இப்ப பாரு மாமாவுக்கு மூணு பொண்ணுங்க.
என்னை விடு. ஆமா..நீ புவிய மறந்துட்டியா? அந்த தீனா தான் அவளை தட்டி பறிச்சுட்டானே? வா..நாம் சேர்ந்து அவனை பழி வாங்குவோம்.
“பழி வாங்கணுமா? அவரையா? ஏன்டா..என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” எவ்வளவு திமிரு இருந்தா என் ப்ரெண்ட் ஜானு மேலையே கை வச்சுட்டு என்னை உன்னோட கூட்டு சேர்ப்ப?
வாடா..”நீயா? நானான்னு?” பார்க்கலாம்.
ஸ்கூல் படிக்கிற நீயெல்லாம் எனக்கு போட்டியா?
துருவனுக்கு சினம் ஏற, பக்கமிருந்த சுழல் போலிருந்த ஆயுதத்தை தூக்கி எறிந்தான். அர்தீஸ் விலகினாலும் அது அவன் கையை பதம் பார்த்தது. அர்தீஸ் கத்தினான்.
அண்ணா…இப்ப என்ன சொல்ற? அந்த பரதேசிய எப்படி கத்த வைச்சுட்டான் பாரு தீனா துருவனை பற்றி பெருமை பேச, பிரதீப் அவனை முறைத்து இனி தான் டா இருக்கு அவனுக்கு. சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டான்.
அதே நேரம் வலியால் அலறிய அர்தீஸ், அவனை புவனா இருக்கும் அறைக்கு அழைத்து செல்லுங்கள். அவளுக்கு வலிப்பதை இவனும் அவளுடைய ஆளும் நேரிலே பார்க்கட்டும் என்றான்.
ஆட்கள் துருவனை புவனா, துளசி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றனர். புவனாவும் கேட்டுக் கொண்டிருப்பதால் துருவனை அழைத்து வருவார்கள் என கதவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருட்டில் புவனா மட்டும் இருக்க, மற்றவர்களை துருவன் கண்களால் அலச, அவளுக்கு கொஞ்சம் தள்ளி துளசி மயங்கி கீழே கிடந்தாள்.
துளசியை மயக்கத்தில் பார்த்ததும், அவனை அழைத்து வந்த ஆட்களை தள்ளி விட்டு துளசியிடம் ஓடினான். புவனா அவனை பார்த்து மனதினுள்.. “நான் இருப்பதே தெரியலையாடா?” என்று நினைத்தவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் துளசியை கன்னத்தில் தட்டி எழுப்ப, அவனை பிடித்து இழுத்து நிற்க வைத்தனர். துளசி எழுந்து,
“யாருடா நீங்க?” என்று அவளருகே இருந்தவனுகள பார்த்து கேட்டுக் கொண்டே தலையில் கை வைத்தாள். பின் புவனாவை பார்த்து,
“நீ என்ன பண்ற? என்னோட அண்ணா எங்க?” கேட்க,
வருவான் என்று பதில் வந்தது காவேரியிடம்.
காவேரியை பார்த்து, அம்மா..உங்களையுமா பிடிச்சுட்டு வந்துருக்கானுக? செம்மையா தல வலிக்குது என்று அவளுக்கு எதிரே வாயில் இரத்தம் வடிய துருவனை பார்த்து,
துரு..”என்னாச்சுடா? இரத்தம் வருதே?” அவன் பக்கம் செல்ல இருந்தவள் முடியை பிடித்து இழுத்து அங்கிருந்த ஆட்களிடம் தள்ளினார் காவேரி.
அம்மா..என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தாள் துளசி.
அவனை பார்த்து, நீ காட்டிய போட்டோ இருக்கே அது பொய்யுன்னு எனக்கு நல்லா தெரியும். அது தீனா அப்பா வேலை.
இந்த சிறுக்கிய காப்பாத்துறாராம். கட்டிய பொண்டாட்டிய பார்க்க வக்குல்ல. மருமகள காப்பாத்துறானாம்.
அத்தை..புவனா அழைக்க, இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து புவனா வாயில் வைத்து,பேசுன குண்டு அடுத்தடுத்து உள்ள இறக்கிடுவேன் காவேரி சத்தமிட, எல்லாரும் அதிர்ந்தனர்.
அம்மா..”என்ன பண்ற? அன்னைக்கு அவளுக்கு மருந்தெல்லாம் போட்டு விட்ட? உனக்கு என்ன ஆச்சு?”
அம்மா..நீ இப்படி பேச மாட்டியே? காய்ச்சல் அடிக்குதா? என்று துளசி காவேரியிடம் வந்தாள்.
நான் இப்படி தான்…இப்படி தான்..என்று கத்தினாள் காவேரி.
அம்மா..என்று கண்கலங்க அதிர்ந்து பார்த்தார் துளசி.
ஆமாம். நான் இப்படி தான். உன் அப்பா என்னுடன் இருக்கணும் என்றதால் தான் அமைதியானவள் போல் நடித்தேன்.
இவ என்னை அத்தைன்னு கூப்பிடுறா பாரேன்..அது நல்லாவே இல்லை. சோ..அந்த உறவை முறித்து விட்டால் என்று துருவனை பார்த்தார்.
“நீ என்ன சொன்ன?” அவள் என் மகனை காதலிப்பதால் அவள் மீதுள்ள காதலை துக்கி எறிந்ததாக சொன்னாயே?
அதெல்லாம் இனி தேவையே இருக்காது என்று குரூரமாக சிரிக்க, ச்சீ..”நீ என்ன இப்படி பேசுற?” என்று துளசி அவள் அம்மாவை திட்டினாள்.
நான் தான் சொன்னேன்ல. நான் இப்படி தான். எனக்கு உன் அப்பா போதும். வேற யாருமே வேண்டாம்.
“என்ன சொன்ன? வேற யாரும்னா? நாங்க?” துளசி கேட்க,
எனக்கு பிள்ளைங்க பெத்துக்குறதுல விருப்பமேயில்லை. ஆனால் உங்க கூட இருந்தா தான் அவர் என்னுடன் இருப்பார். இல்ல உங்கள கூட்டிட்டி ஊர விட்டு போயிட்டா என்ன பண்றது? எனக்கு அவர் வேண்டுமே?
புவனாவை விடுவித்த காவேரி..உனக்கு எப்படி துருவனை பிடிக்குமோ? அதை விட அதிகமா உன்னோட அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா..அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். பாவம் உன் அப்பத்தா என்னால் அவர் மகனை அவரே காயப்படுத்திட்டார் என்று வெற்றி கூறிய அவர்கள் கதையை கூற…துளசி மடிந்து அமர்ந்து அழுதாள். இது தெரியாமல் நானும் அவரை காயப்படுத்திட்டேனே? ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் என்று சீற்றத்துடன் காவேரியிடம் வந்து,..எல்லாரும் சேர்ந்து அவர் வாழ்க்கையை பாழாக்கி விட்டீர்களே? என்று அவள் அம்மாவை அடிக்க கையை ஓங்கினார்.
இரு. நான் இன்னும் முடிக்கலை. உனக்கு அண்ணன் ஒருவன் அல்ல..ரெண்டு பேர் என்றாள் காவேரி.
என்ன? பிரதீப் அண்ணாவை தான சொல்ற? முறைத்துக் கொண்டே கேட்டார்.
ஆமாம். அவன் தான். ஆனால் அவன் அப்பா..அவனுக்கு அப்பா இல்லை. மீனாட்சிக்கும் உன்னோட அப்பாவுக்கும் பிறந்தவன் தான் பிரதீப்.
“என்ன சொன்னீங்க?” திரும்ப சொல்லுங்க என்று பிரதீப் உள்ளே வந்தான்.
உன்னோட அம்மா மீனாட்சி, அப்பா வெற்றி சக்கரவர்த்தி என்று காவேரி கூற தீனா வெற்றியை பார்த்து,
அம்மா..”என்ன சொல்றாங்க?” என்று கேட்டான்.
உனக்கும் தனியாலாம் சொல்ல முடியாது. டேய்.. எல்லாரையும் பிடிச்சு கட்டுங்கடா காவேரி கூற, பிடித்து கட்டினார்கள்.
பிரதீப் வெற்றியிடம், “நீங்க என்ன சொன்னீங்க? இது என்ன?” கேட்டான்.
அவள் திருமணத்தின் போது என் பிள்ளையான உன்னை கருவில் சுமந்து இருந்தாள் என்று கண்ணீர் வடித்தார்.
அப்ப ஜானு? வெற்றி அமைதியாக இருந்தார்.
ஜானு எனக்கு நெருக்கம் இல்லையா? வருந்தினான்.
அனைவரும் அவனையே பார்க்க, “அக்காவை எங்கடா?” துருவன் கேட்டான்.
அப்பொழுது தான் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என பிரதீப் பார்த்தான். அங்கே துகிரா கையை பிடித்து இழுத்துக் கொண்டும் சக்கரையை தூக்கிக் கொண்டும் வந்தனர். மீனாட்சியை இவர்கள் கண்ணில் காட்டக் கூடாது என காரிலே மறைத்து விட்டு வந்தனர் மூவரும்.
“ஏன்டா, நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா?” துகிரா கேட்க, எந்த நிலைமையில என்னம்மா பேசுற? வெற்றி கேட்க,
அவள் பதில் கூறாமல்..விடுங்கடா. இவனுக வேற..என்று கையை உதறி விட்டு பிரதீப் முன் வந்து அவனை முறைத்தாள். அவள் பின்னே ஆட்கள் அவளை பிடிக்க வந்தனர். அவர்கள் அவளை பிடிக்க, ராத்திரில..எங்கள தனியா விட்டுட்டு எங்க போனீங்க? என்று கேட்டாள்.
ஹாம்..பக்கத்து ஊர்ல மசால் தோசை சுவை அள்ளுதாம். உன்னை விட்டு சாப்பிட போனோம் தீனா கூற,..புவனாவும் மற்றவர்களும் அவனை முறைத்தனர்.
“சாப்பிட என்னை விட்டு போனீங்களா?”
தீனா தலையில் அடித்துக் கொண்டான்.
“என்ன வெட்டி பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு?” கேட்டபடி அர்தீஸ் வர, ஆன்ட்டி..இவனுக உங்களையும் விடலையா? துகிரா காவேரி அருகே செல்ல,
அங்கேயே நில்லு என்று பிரதீப் சத்தமிட்டான். காலை எடுத்து வைத்த துகிரா அவனை பார்க்க..அர்தீஸ் அவளருகே வந்தான்.
ஏய்ய்ய்..பிரதீப் கத்த, துருவன் கையிலிருந்த பேனாவை அர்தீஸ் மீது தூக்கி எறிந்தான்.
அவனிடம் திரும்பிய அர்தீஸ், உனக்கு என்னடா பிரச்சனை? எல்லா நேரத்திலும் எனக்கு இடைஞ்சல் குடுத்துக்கிட்டே இருக்க. அவனருகே வந்து அவனது வயிற்றில் ஓங்கி குத்தினான். துருவன் வாயிலிருந்து இரத்தம் வர,
வேணாம்..என்று கத்திக் கொண்டே கண்ணை மூடி அமர்ந்தாள் துளசி. அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய, எல்லாரும் அவளை பார்த்தனர்.
அய்யோ..துளசி அவன் இன்னும் சாகலையே? அதுக்குள்ள எதுக்கு இந்த அழுகை? அர்தீஸ் கேட்டு விட்டு, லவ்வா உனக்கு இவன் மேல..இவனுக்கு புவி மேலையா? என்று புவியை பார்த்தான். அவளும் கண்ணை மூடி இருக்க..
பாருடா..உனக்காக ரெண்டு பொண்ணுங்க துடிக்குறாங்க என்று அர்தீஸ் துருவனை பார்க்க, அவனோ அர்தீஸ் வந்ததிலிருந்து அவனை முறைத்துக் கொண்டே இருந்தான்.
என்னடா முறைக்கிற? பேசு. ஏதாவது பேசு. ஆக்சுவலா உன்னை எப்பையோ போட்டிருப்பேன். புவி பக்கத்துல கூட நீ என்னை வரவிடல.. ஆனால் இப்ப பாரு எல்லார் முன்னாடியும் என்று அவன் புவியை பார்க்க, துருவன் அவனை பார்த்து நகைத்தான்.
“என்ன? உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?”
அப்ப இல்லைடா..இனி எப்பையுமே புவிய மட்டுமில்லை. யாரையும் உன்னால ஏதும் செய்ய முடியாது.
அவ்வளவு நம்பிக்கையாடா? ஓ…இவனுக இருக்கிற நம்பிக்கையா? என்று பிரதீப் தீனாவை பார்க்க, தீனாவின் பார்வை புவி மீது இருக்க..
ம்ம்..பார்த்துக்கோங்க போலீஸ்கார். அப்புறம் அவளை பார்க்க முடியாதுல. ஆனா பாருங்களேன். “துருவனை அடிச்சா அவளுக்கு வலிக்குதாமே? “கண்ணை மூடுகிறாள்.
ஏன் துருவா? “நீ புவியை லவ் பண்றியா? துளசிய லவ் பண்றியா?” அவன் சிறுபுன்னகையுடன் தீனாவை பார்த்தான்.
ஆமாம் அத்தை. இதோ வாரேன் என்று தீனாவிடம் வந்த அர்தீஸ் ஓங்கி அறைந்தான். அவர விட்டுரு என்றாள் புவனா. அவளை பார்த்த அர்தீஸ், என்னை எங்க ஊர் ஆளுங்க முன்னாடி அரெஸ்ட் பண்ணி.. அசிங்கப்படுத்துனேல. இப்ப என்று ஒருவனை பார்க்க, அவன் கையில் கத்தியுடன் வந்தான்.
என் பிள்ளைய எதுவும் செஞ்சுறாதப்பா..என்று வெற்றி கெஞ்ச, அவன் அம்மாவை பார்த்தான். காவேரி, ஏதோ தீனாவுக்கும் அவங்களுக்கு சம்பந்தமில்லாதது போல் நின்றார் காவேரி.
அம்மா..என்று துளசி கத்த, துளசி அவங்க உன்னோட அம்மா இல்லை. எனக்கு அத்தை. நீ எனக்கு முறைப்பொண்ணு என்று துளசி அருகே வந்து அவள் தோளில் கை போட்டான். அவள் கையை தட்டி விட்டு,
டேய்..நாயே..அந்த பொம்பள எனக்கு அம்மாவா இருந்தா தானடா. நான் உனக்கு முறைப்பொண்ணு.
அப்படியா செல்லம்..என்று கத்தியை தீனா கழுத்தில் வைக்க, “உனக்கு என்ன தான் வேண்டும்?” என்று அழுது கொண்டே கேட்டாள் புவனா.
முதல்லன்னா..எனக்கு நீ போதும்னு சொல்லி இருப்பேன். ஆனால் இப்ப என்று துளசியை பார்த்தான்.
கத்தி கழுத்தில் இருந்தாலும் தீனாவோ..நம்ம பிரச்சனைய நாம தீர்த்துக்கலாம்.