அத்தியாயம் 41

பவதாரணி..உன்னுடைய இசைக்கான தீவிர ரசிகை.

இல்ல..அவள நான் காதலிக்கல என்று குரல் அடைக்க பேசினான் அகில்.

இல்லைன்னு சொல்லிட்டு, இப்படி தடுமாறுறியே?

சரி..பார்க்கலாம். நீ காதலிக்கிறியா? இல்லையான்னு? இப்ப தெரிஞ்சிடும். விளையாண்டு ரொம்ப நாளாச்சு. விளையாடலாமா? என்று அவன் நக்கலாக கேட்க,

அர்ஜூன் கோபமாக, அவள எங்க வைச்சிருக்க? கேட்டான். அகில் அர்ஜூனை பார்க்க, அர்ஜூன் அகில் கையை பிடித்தான்.

அர்ஜூன்..வா..வா..எங்கள விட காதல் குரு நீ தான்யா?

கேட்டதுக்கு பதில் சொல்லு.

அது எப்படி அர்ஜூன்? உன்னோட ஸ்ரீ, நிவாஸ் கையால நான் சாவேனா? எங்க அவங்ககிட்ட நான் யாருன்னு சொல்லு. அப்புறம் பாரு அவன் சொல்லிக் கொண்டிருக்க,

நிவாஸ் முன் வந்து, நீ யாரு? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?

நானா?..சொல்லவா அர்ஜூன்? அவன் கேட்டான்.

நிவி..நீ இடையில வராத..என்று சத்தமிட்டான் அர்ஜூன். அவன் சத்தத்தில் அனு அழ, உள்ள கூட்டிட்டு போங்க என்று கத்தினான்.

இன்பா அம்மா, அனுவை அழைத்து உள்ளே செல்ல, கமலியும் அர்ஜூன் அருகே வந்து நீ எதுக்கு இவனை மாமான்னு அழைத்தாய்? யார் இவன் ? என்று கேட்டார்.

இனி யாரும் வாயை திறக்கக்கூடாது என்று கர்ஜித்தான் அர்ஜூன். அவனை பார்த்து அரண்டு கமலியும் ஒதுங்கி நின்றார்.

பவிய எங்க?

அந்த பொண்ணு அவ வீட்ல தான இருப்பா? என்னிடம் கேட்கிறாய் அர்ஜூன்?

உன்னோட விளையாட்டை மூட்டை கட்டி வைத்து விடு. சொல்லப் போகிறாயா? இல்லையா?

அர்ஜூன் நீ இதுல வருவன்னு நான் நினைக்கவே இல்லை. நான் அகிலை தான் எதிர்பார்த்திருந்தேன். அப்புறம் நீ நிவிய கூட காப்பாற்றி விடலாம். ஆனால் உன்னோட..அது எப்படி? உன்னோட ஏஞ்சல காப்பாத்தவே முடியாது. வீடியோ பார்த்தியா அர்ஜூன். ரொம்ப அழகா இருந்தால உன்னோட ஏஞ்சல் என்று அவன் விகாரமாக பேச, அங்கிருந்தவர்கள் கண்ணில் கண்ணீர். யாசு புரியாமல் என்ன வீடியோ? என்று கேட்க, ஏற்கனவே அர்ஜூனிற்கு இரத்தம் கொதித்திருக்கும். இப்பொழுது இவள் வேறு? என்று நித்தி யாசு வாயை மூடி இரு கைகளையும் கூப்பி வேண்டாம் என்று அமர்ந்து அழுதாள்.

அட..அழகு செல்லம்மா? யாசும்மா நீ பயன்படுத்துற பியூட்டு பிராடெக்ட் மட்டமா இருக்கு. மாமா வாங்கித் தரவாடா? கேட்டான்.

அபி பேச வர, அர்ஜூன் அவனை பின் நகர்த்தி சொல்லு பவிய என்ன செஞ்ச?

அர்ஜூன், நீ ஸ்ரீயை பத்தி கேட்கணும்டா மொசக்குட்டி. அந்த பவி எதுக்கு? வீடியோ பார்த்தவுடன் உனக்கு என்ன தோணுச்சு?

எனக்கு தான..எனக்கு தான..என்று கத்திக் கொண்டே அங்கிருந்த பொருட்களை எடுத்து விசிறி உடைத்தான். இந்த பொருட்களை போல் உன்ன கொல்ல தோணுச்சு. வாடா.. வா.. உன்ன நேரில பார்க்க தான் காத்துக்கிட்டு இருக்கேன். நீ மட்டும் என் முன்னாடி வந்தால் அன்று தான் உனக்கு இறந்தநாள் மீண்டும் கர்ஜிக்க, அவ்விடமே அமைதியானது.

அட..நான் எதிர்பார்த்ததை விட நீ என் மீது கோபமாக இருக்க. ஆமாம் இது உன்னோட பத்து வயதில் பிறந்த காதலாயிற்றே..

பத்து வயது இல்லடா..எட்டு வயதில் ஆரம்பித்த காதல். அவள் காதலை எதிர்பார்த்து காத்திருக்கும் காதல். அதன் வலிமை உனக்கு எப்படி புரியும். ஒருத்தி இல்லையென்றால் இன்னொருத்தி என்று மரம் தாவும் காதல் அல்லடா.

என்ன சொன்ன? அகில் காதல் ஸ்ரீயில்லை என்று எனக்கு அந்த சிறுவயதிலே தெரியும். காதலிக்கும் ஆணுக்கு காதலிக்கிற பொண்ணு அழுதா அதிகம் வலிக்கும். அகிலுக்கு தோழியாக, உடன் பிறப்பாக வருத்தப்பட்டு அழுதானே தவிர, அவள் அழும் போது பக்கத்தில் இல்லை. அவனுக்கும் புரியலை. ஸ்ரீக்கும் புரியலை. ஆனால் என்னால் அனைத்தையும் உணர முடிந்தது.

ம்ம்..சூப்பரான காதல் பற்றிய விளக்கம். ஆனா தம்பி ஸ்ரீ கஷ்டப்பட்டப்ப எங்க போன?

நான் எங்கும் போகவில்லை. அருகில் தான் இருந்திருக்கிறேன். என்னால் அவளை கண்டறிய தான் முடியாமல் போனது. ஆனா விடலையே என்னோட காதலை.

ம்ம்..நீ விடல. ஆனால் அவள் தான் உன்னை காதலிக்கவில்லையே?

அகில் பேச வந்தவனை தடுத்து, அவள் என்னை காதலிக்கவில்லை. ஆனால் காதலிக்கும் நான் எப்பொழுதும் அவளுக்கு துணையாக இருப்பேன். ஸ்ரீயை விடு. அப்புறம் பார்த்துக்கலாம். பவி எங்க இருக்கா கூறு?

ஆமா நீ காதலிப்பது ஸ்ரீயை. ஆனால் பவியை காக்க ஏன் இப்படி துடிக்கிறாய்?

அர்ஜூன் துடிக்க தானே செய்வான். ஸ்ரீயின் சகோதரியாயிற்றே. அவளுக்கென இருக்கும் இரத்த பந்தம். அவளுக்கு தெரியாது என்றாலும் பவிக்கு தெரியும் தானே? அர்ஜூனால் இதை கூற முடியுமா? என்ன?

அகில் பவியை காதலிப்பது எனக்கு தெரியும் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் உளறாதே..அதெல்லாம் இல்லை என்றான் அகில்.

அர்ஜூன் இது உனக்கான நேரமல்ல. இது அகிலுக்கான நேரம். ஓ.கே நீ அந்த பொண்ணை காதலிக்கலை. ஒரு விசயம் சொல்லவா? அந்த பொண்ணு இப்ப என்ன பண்றா தெரியுமா?

என்ன? அகில் கேட்டான். அவன் சுருதி குறைந்தது. நீங்க கல்லூரியில் முதலாய் பாடிய பாடலை ரசித்து கேட்டு ஆடிக் கொண்டிருக்கிறாள்.

அடஅடஅட..சும்மா சொல்லக்கூடாது. பொண்ணும் சூப்பரா இருக்கா. அவள் ஆட்டமும் நல்லா இருக்கு.

ஏய்..என்று கத்திய அகில், நீ எங்க அவ வீட்லயா இருக்க?

நான் அவள் வீட்டுக்கு எதிரே தான் இருக்கிறேன். ஆனால் பாவம் பொண்ணு சாகப் போவது கூட தெரியாமல் அழகாக சந்தோசமாக ஆடிக் கொண்டு இருக்கிறாள்.

அவள் ஏதும் செய்து விடாதே கத்தினான் அகில்.

காது வலிக்குது. அவ வச்சிருக்கிற சத்தத்தை விட உன் சத்தம் தான் காதில் இரத்தம் வர வைத்து விடுமோ? நான் அவளை ஏதும் செய்யவில்லை. ஆனால் என்னுடைய ஆட்கள் அவள் வீட்டினுள் சென்று விட்டனர். நீ அந்த பொண்ணு ஆடுவதை, பாடுவதை பார்க்கிறாயா? கேட்கிறாயா?

கேட்டு விட்டு போ..வீடியோ அனுப்ப, அதை பார்த்த அகில் இந்த நேரத்துல எப்படி ஆடுறா? பாரு என்று பதட்டமுடன் அகில் திட்ட அனைவரும் அவனை முறைத்தனர்.

அவளுக்கு எப்படிடா தெரியும்? அவளை சுத்தி ஆள் இருப்பது என்று அபி திட்டினான்.

அகில் பாரேன். அவள் அப்படியே நாம் ஆடுவது போலவே ஆடுகிறாள் யாசு கூற, ஆமாம் யாசு என்று நித்தியும் பவியை ரசிக்க,

என்ன நடக்குது? என்ன பேசுறீங்க? இன்பா கத்தினாள்.

“எனை பூவுலகில் மிதக்க வைத்த தேவதையே?

 என் மெழுகு சிலையானவளே?

 இருவிழிகள் படபடக்க சிறகாய் எனை பறக்க வைத்தவளே?

 ஓயாது பேசும் இதழுடையாளே?”

இன்பாவை வர்ணித்து மேம்..என் கவிதை உங்களுக்கு பிடிச்சிருக்கா? நீங்க ஓ.கே சொன்னா? நாளையே திருமணம் செய்து கொள்ளலாம் மாஸ்டர் கூற,

யோவ் யாருய்யா நீ? ரெண்டையே உஷார் பண்ண முடியல. உனக்கு இன்னொன்று கேட்குதா? அபி கேட்க,

ஓ..மை பாய்.. கோபத்தை பாரு. உன்னோட அப்பன மாதிரியே இருக்கு. உன்னோட மேம் தான் உனக்கு பதிலே சொல்லலையே அப்புறம் என்ன பாய்? நான் முயற்சித்து தான் பார்க்கிறேன்.

அவங்க எனக்கு ஓ.கே சொல்லலைன்னா. என்ன வேண்டுமானாலும் பேசுவியா? நீ மட்டும் முன்னாடி வாய்யா. அப்புறம் வச்சுக்கிறேன்.

தம்பி.நீ என்ன வைச்சு என்ன செய்யப் போற? முடிஞ்சா உன்னோட மேம்மையும் அவ தங்கச்சியையும் காப்பாத்திக்கோ?

டேய்..நீ எங்க எல்லார்கிட்டையும் மொத்தமாக வாங்க போற? தருண் சொல்ல,

அட, கிளவர் பாய் நீயா? உனக்கு உன் காதல் முக்கியமா? உன் அருமை தங்கையின் வாழ்க்கை முக்கியமா? கேட்க, ஏய்..என்ன பண்ணப் போற?

பயப்படாத..உன் முன்னாடி தான் எல்லாமே நடக்கும். ஆனால் நீ பாவம் காதலியையும் காப்பாற்ற முடியாது. தங்கையையும் காப்பாற்ற முடியாது.

ஏய்..என்று தருண் கத்த, முதல்ல எல்லாரும் அமைதியா இருக்கீங்களா? என்று அகில் கத்தினான்.

சொல்லு..பவி எங்கே?

அவ வீட்ல தான் இருக்கா. ஆட்கள் உள்ளே சென்று விட்டனர். முடிந்தால் காப்பாற்றிக் கொள் உன் வருங்கால குடும்பத்தை. அப்புறம் பசங்களா? எல்லாரும் தயாராக இருங்க? அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்கள் இனி யார் கையிலும் இல்லை. அபி..நீ ஜானுவை மறந்திடாத என்று போனை வைத்தான்.

அகில் சீக்கிரம் கிளம்பு வா..போகலாம் என்று அர்ஜூன் அவனை அழைக்க, அர்ஜூன் நீ இங்கேயே இரு. நான் அகிலுடன் செல்கிறேன். அவன் பேசுவதை பார்த்தால் இங்கேயேயும் ஆட்கள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது அபி கூறினான்.

சரியா சொன்ன அபி..நான் இங்கேயே இருக்கிறேன் என்ற அர்ஜூன் தருண் நீயும் அகிலுடன் கிளம்பு என்றான். பார்த்துடா..அவர்களை அனுப்பி வைத்து விட்டு, அர்ஜூன் அனைவரையும் ஸ்ரீ இருக்கும் அறையினுள் இருக்க வைத்து, வினிதா அம்மா, அப்பா, இன்பா, அவள் அம்மாவையும் அனுவையும் அழைத்து, ஸ்ரீ அறையின் உள்ளிருக்கும் ஓர் அறைக்குள் அடைத்து இதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது என்று இன்பாவை அந்த அறையின் உட்புற வாசலில் பாதுகாப்பிற்காக நிற்க வைத்தான்.

அனு எதுக்கும் பயப்படக் கூடாது கத்தக் கூடாது என்று அனுவுக்கு முத்தம் கொடுத்து, அனைவரையும் எச்சரிக்கை செய்து விட்டு கைரவ், நிவாஸ், நித்தியை வெளிவாசற்படி பக்கம் நிற்க வைத்து போனை எடுத்து மாதவை அழைத்து,

சார்..நான் உங்க கமிஷ்னரிடம் பேசணும் இப்பொழுதே இந்நொடியே என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் அவரை சந்திக்க முதலிலே பேசினால் தான் முடியும். அதுவும் இப்ப அந்த மாஸ்டரை தேடிக்கிட்டு இருக்காங்க.

அதை பற்றி தான் நானும் பேசப் போகிறேன்.அவசர நேரத்தில் என்ன செய்வீர்கள்?

அவரின் உதவியாளரை தொடர்பு கொண்டு அவர் மூலம் விசயத்தை சொல்லுவோம்.

சரி..வினிதா அக்கா வீட்டருகே தான் அந்த மாஸ்டர் இருக்கிறான் என்று சொல்லி நான் கமிஷ்னரை வீடியோ கால் செய்ய சொல்லுங்கள். சீக்கிரம் உங்களுக்கு இரண்டு நிமிடம் தான் நேரம்.

அர்ஜூன்..என்ன சொல்ற?

ப்ளீஸ்..எல்லாவற்றையும் பேச நேரமில்லை. அனைவரும் அமைதியாக இருக்க, அனு இன்பாவின் தோளில் சாய்ந்து இருந்தாள் அர்ஜூன் பேசுவதை கேட்டுக் கொண்டே.

என்ன அர்ஜூன்? அவன் அந்த பொண்ணு வீட்ல தான இருக்கான்.

இல்ல கைரவ். அவன் வெளியே தான் இருக்கிறான்.

என்ன சொல்ற? நித்தி பதற, நீங்க அமைதியா இருங்க என்று வாயில் கை வைத்தான்.

நான் அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று நிவாஸ் கொதிக்க, அவன் கையை பிடித்து கண்களை மூடி திறந்து பொறுமையா இரு என்று காட்டிக் கொண்டே நம்பரை வாய்க்குள் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முடிக்கவும் அவன் போன் அதிர்ந்தது.

அவன் போனில் கமிஷ்னர் வந்தார். சார் நீங்க எனக்கு துப்பாக்கி பயன்படுத்த ஆர்டர் தரணும் என்றான் அர்ஜூன். அனைவரும் அவனை பார்த்து அதிர, அவரும் அதிர்ந்து நான் ஆட்களை அனுப்புகிறேன் அர்ஜூன். ஆனால் நீ கேட்டதை செய்ய முடியாது என்றார் அவர்.

சார்..இங்க பாருங்க என்று அனைவரையும் காண்பித்து, அவன் ஆட்கள் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். அவனும் வெளியே தான் இருக்கிறான் என்று அவன் இருக்கும் இடத்தை கூற,

கண்டிப்பா அவன் அங்கே தான் இருக்கானா அர்ஜூன்?

எஸ் சார். அவன் கூறியது அவன் வீட்டில் இருக்கும் மரம். அதில் ஒரு பறவை மட்டும் அவன் எங்களுடன் உரையாடிய நேரத்தில் கத்தும் பசியால். அதே சத்தம்..

இதை வைத்தா கூறுகிறாய்?

ஆமாம் சார். எப்பொழுதும் அந்த பறவைக்கு உணவு நான் தான் கொடுப்பேன். ஆனால் கடந்த இரு வாரமாக எனக்கிருந்த வேலையில் மறந்து விட்டேன். அது பசிக்காக கத்துவதை நேற்று கூட பார்த்து கொடுத்தேன்.

நேற்றா? அந்த பொண்ணு இறந்த போதா?

இல்ல சார்.அதுக்கு முன்னமே கொடுத்தேன். சார் அதை விடுங்க. எனக்கு ஆர்டர் வேண்டும். நான் அனுப்பும் ஒப்பந்தத்தில் எனக்கு கையெழுத்திட்டு அனுப்புங்க என்றான் அர்ஜூன்.

அவர் அதிகமாக யோசிக்க, ஓ.கே சார். நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க? இவங்கள காப்பாற்ற எனக்கு தெரியும்? நான் நடப்பதை மக்களுக்கு லைவ் போடுகிறேன் அர்ஜூன் கூற,

தம்பி..ஏன் இப்படி பண்றீங்க? உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க..அவர் கூற, சார் இங்க பாருங்க என்று அவன் அம்மாவையும் காட்டினார்.

மேம்..நீங்களுமா இங்க மாட்டிக்கிட்டு இருக்கீங்க? சார்..நீங்க கொடுங்க. பிரச்சனை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் கமலி கூற, உடனே அர்ஜூனிடம் தம்பி அனுப்புங்க கையெழுத்திடுகிறேன் என்றார்.

அர்ஜூன் அவன் அம்மாவை பார்த்து விட்டு ஓ.கே சார் என்று நான் கூறும் இடத்திற்கு உங்களுக்கு நம்பிக்கையான திறமையான ஆட்களை அனுப்புங்கள். அவன் ஆட்கள் அங்கேயேயும் கண்டிப்பாக இருப்பார்கள். பின் என் நண்பர்கள் தனியே ஒரு வீட்டிற்கு அங்கிருப்பவர்களுக்கு உதவ சென்றிருக்கிறார்கள். அங்கேயும் கொலை செய்ய ஆட்கள் உள்ளனர். உதவுவீர்கள் தானே?

கண்டிப்பா தம்பி என்று அவர் ஆட்களை அனுப்ப, ஆதேஷ் வீட்டில் ஏற்கனவே ஆட்கள் இருந்திருப்பார்கள். இருந்தும் மீண்டும் இருவர் அங்கே வந்தனர். பின் நந்து வீட்டிற்கு இருவரும் மேகா வீட்டிற்கு இருவரும் சென்றனர். சைலேஷ் வீட்டிற்கு மூவர் சென்றிருந்தனர். வினிதா வீட்டிற்குள் போலீஸ் வருவதற்குள் அர்ஜூனுக்கு கமிஷ்னர் கையொப்பம் வந்தது. அவன் தன் முதுகு பக்கமிருந்து துப்பாக்கியை எடுத்தான்.

அர்ஜூன்..இவ்வளவு நேரம் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தான் பேசினாயா? கைரவ் கேட்டான்.

ஸ்ரீயை பற்றிய முழுவிவரம் தெரிந்ததோ அப்பொழுதிலிருந்து துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் கையூ.

அவன் பேச,..ஷ்..என்று அவனது வாயில் கை வைத்தான். அவர்கள் கதவிற்கு வெளிப்புறம் யாரோ இருப்பது போல் தெரிய, நீங்களும் கையில்  அடிக்க ஏதுவான பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். நிவி நீ ஸ்ரீயை விட்டு நகரக் கூடாது என்று அவன் கையில் கத்தியை கொடுத்தான்.

அர்ஜூன்..என்று நித்தி பயப்பட, அவங்க கையில துப்பாக்கி, கத்தி, மற்ற பொருட்களும் இருக்கும். அதனால் கவனமா இருங்க என்று அர்ஜூன் இன்பாவிடம் வந்து, மேம்..நீங்க இந்த அறையை விட்டு வெளியே வரக் கூடாது. அனுவை கவனமா பார்த்துக்கோங்க. அவன் அம்மா, இன்பா அம்மா, இதயாவிடம் நீங்களும் கையில் உங்க பாதுகாப்பிற்காக ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று இன்பாவிடம் வந்து அனுவிற்கு முத்தம் கொடுத்து ஸ்ரீயை ஒரு முறை பார்த்து விட்டு அவன் நகர,

அர்ஜூன் கவனமா இரு என்று கமலி கூறினார். தலையசைத்து கதவை பூட்டி விட்டு அர்ஜூன் மட்டும் தனியே வெளியே வந்தான்.

வெளியே யாருமில்லாது இருக்க அர்ஜூன் மறைந்து நின்று சுற்றி கவனித்தான். அங்கு அமைதி நிலவ, படியில் ஏறினான். அவன் முன் வந்த ஒருவன் கழுத்தை பிடித்து நெறித்து சுவற்றில் தள்ளி கழுத்தை திருப்பினான். அவன் கீழே விழுந்தான். அர்ஜூன் பின்னிருந்து ஒருவன் அர்ஜூனை பிடிக்க, அவன் முன் இருவர் வந்தனர். அவர்களை தன் கால்களால் உதைத்து அவன் பின்னிருந்தவனை தாவி அவன் பின் வந்து அவன் கழுத்தை பிடித்தான். அவன் கத்த, ஐவர் அர்ஜூனை நோக்கி வந்தனர்.

கையிலிருந்தவனை பிடித்து கீழே தள்ளிய அர்ஜூன் துப்பாக்கியை எடுத்தான். சுட்டு கொல்ல மனமில்லாது அவர்களது கை, கால்கள் என்று சுட்டு தள்ளினான். ஆனால் அவர்கள் அவனை தாக்க வந்தனர் கத்தியுடன்.

அவர்கள் அனைவருக்கும் அடிபட்ட இடத்திலே தாக்கி அவர்களை ஓர் அறையில் தள்ளி அவனும் உள்ளே சென்று சண்டையிட்டு அவர்களை கட்டி வைத்தான். ஸ்ரீ அறையில் கண் விழித்தாள். அவள் அனைவரிடமும் என்ன நடக்குது? எல்லாரும் என்ன பண்றீங்க?

ஸ்ரீ நீ அதற்குள் விழித்து விட்டாயா? கைரவ் கேட்க, நீ எப்பொழுது என்று தலையை பிடித்தாள். அவள் உடல் சோர்வாக இருந்தது. ஸ்ரீ உனக்கு ஒன்றுமில்லைல.. என்று நிவாஸ் ஸ்ரீயை அணைக்க,

ஷ்..ஷ்.. அமைதியா இரு நிவாஸ் என்று நித்தி சைகையில் கதவின் கீழ் காண்பிக்க, அங்கே நான்கைந்து உருவம் தெரிவது போல் இருந்தது.

திடீரென கதவு உடைக்கும் சத்தம் கேட்க, கைரவ் அனைவரையும் நகர்த்தி விட்டு, அவன் கதவை திறந்தான். வெளியே நின்றவர்களை பார்த்து அதிர்ந்தான். தடிமனான உடலுடன் நால்வர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின் ஐந்தாறு அடியாட்கள் இருந்தனர்.

கைரவ் யோசிக்காது உள்ளே வருபவர்களை அவன் பலம் கொண்டு வெளியே தள்ளினான். அவன் கண்ணை காட்ட நித்தி முதலில் இருந்தவன் தலையில் அடிக்க, அவன் நித்தியின் கையை அழுத்தி பிடிக்க, அவள் வலி தாங்க முடியாமல் கத்தினாள்.

அர்ஜூனும் சத்தம் கேட்டு, இவ்வளவு நேரமும் சுட யோசித்தவன் அவன் எதிரே வருபவர்களை கொஞ்சமும் சிந்திக்காது சுட்டான். அனைவரும் சரிய, வேகமாக கீழே ஓடி வந்தான்.

கைரவிற்கும் நித்தியும் தலையில் இரத்ததுடன் இருக்க, யாசு நித்தி மடியில் சரிந்து இருந்தாள். அவளது வயிற்றின் இடது புறத்தில் கத்தியால் கிழித்து இருந்தனர். நிவாஸ் கையில் இரத்தம் நிறைந்த கத்தியுடன் இருந்தான்.

அர்ஜூன்..அர்ஜூன்..நித்தி அழ, யாசு என்று கண்கலங்கிய அர்ஜூன், ஒரு நிமிஷம் வாரேன் என்று உள்ளேயும் அழும் சத்தம் கேட்க, பயந்து கொண்டே அர்ஜூன் அறைக்குள் சென்றான்.

இன்பா கையில் பெரிய கீறலுடன் இருந்தாள். ஸ்ரீயும் தலையில் அடிபட்டு இரத்தத்துடன் உள்ளிருந்த அறை வாசலில் மயங்கி இருந்தாள்.

இன்பாவிடம் மேம்..அனு என்று கேட்க, அர்ஜூன்..அனுவையும் பெரியவங்களையும் அவங்க பிடிச்சு வைச்சிருக்காங்க. உள்ள தான் இருக்காங்க. திறக்க மாட்டிக்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இதயாவும் உள்ள தான் இருக்கா.

துப்பாக்கியை எடுத்த அர்ஜூன் தாழ்ப்பாள் இருக்கும் இடத்தை சுட்டான். கதவு திறக்க, இதயா கையில் தான் அனு இருந்தாள். ஆனால் அவளை அடியாட்கள் பிடித்திருந்தனர். நிவாஸ் அந்த தடியங்களை தான் குத்தி இருப்பான். ஆனாலும் அவர்களுக்கு ஏதும் ஆகாமல் இருப்பார்கள்.

அவங்கள விட்டுருங்க அர்ஜூன் கேட்டுக் கொண்டிருந்த சமயம் துப்பாக்கி சத்தம் கேட்டது. அந்த ஆட்கள் ஒவ்வொருவராக கீழே விழுந்தனர்.

உள்ளே வந்த மாதவ் ஆட்கள் அனைவரையும்  படிக்க வந்தனர். அர்ஜூன் முன்னே மாதவிடம் நிலவரத்தை லைவில் காட்ட, யாசுவின் நிலையை பார்த்தவன் அவளிடம் கூட செல்லாது நேராக அர்ஜூன் பேசும் இடத்திற்கு வந்து துப்பாக்கியை எடுத்து, டப்பு டப்பென்று தோட்டாக்கள் நொடிக்குள் அனைவரையும் துளைக்க, அடியாட்கள் அனைவரும் இறந்தனர்.

நிவாஸ் கையிலிருந்து கத்தியை வாங்கிய அர்ஜூன் இரத்தத்தை துடைத்து கீழே போட்டு கத்தியை அவன் வைத்துக் கொண்டான்.

அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வியர்த்து விறுவிறுத்து வந்தனர். அனு அர்ஜூனை பார்த்து அவனிடம் தாவிக் கொண்டாள்.

அர்ஜூன் அனுவை வைத்துக் கொண்டே, அங்கே வந்த போலீஸிடம் ஆம்புலன்சுக்கு போன் போடுங்க சார்.

அய்யோ..தம்பி, சார் என்ன பண்ணிட்டார்?

அவர்களை பிடிக்க தான் வந்தோம். ஆனால் அவர் கொன்று விட்டாரே? என்று பதறினார்.

பெரிய பிரச்சனையாகுமா சார்? அர்ஜூன் கேட்டான்.

அவர் வேலையே போக வாய்ப்புள்ளது.

எங்க பாதுகாப்புக்காக தான தம்பி பண்ணாங்க? இதயா அம்மா கேட்க. அதை பெரிய அதிகாரிங்க ஏத்துக்க மாட்டாங்கம்மா..என்றார் ஒருவர்.

நடக்கும் அனைத்தையும் உங்க கமிஷ்னர் நேரடியாகவே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் அர்ஜூன் கூறினான்.

தம்பி..

ஆமாம் சார்.

போச்சு..அவர் புலம்பினார். மற்றவர் ஆம்புலன்சுக்கு போன் போட, சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது.

அர்ஜூன் அனுவை கையில் வைத்துக் கொண்டே ஸ்ரீ அருகில் வந்தான். நிவாஸ் பாப்பாவை தூக்கிக் கொள்ள, அப்பொழுது தான் அவன் முதுகில் இருந்த வெட்டு காயத்தை பார்த்தான் அர்ஜூன்.

நிவி..என்று அர்ஜூன் பதற, நீ அவள பாரு அர்ஜூன் என்றான் அவன்.

கமலி ஸ்ரீ மீது தண்ணீர் தெளிக்க, அர்ஜூனும், நிவாஸூம்அவரை கவனித்தனர். ஸ்ரீ எழுந்து கமலியை பார்த்து, கண்ணை கசக்கி மீண்டும் பார்த்தாள்.

மேம்..நீங்க இங்க என்ன செய்றீங்க? உங்களுக்கு ஒன்றுமில்லையே? அனு..அனு எங்க? என்று சுற்றி பார்த்தாள். ஸ்ரீயை பார்த்து ஏஞ்சல் நான் இங்க தான் இருக்கேன் என்று அர்ஜூனிடமிருந்து ஸ்ரீயிடம் தாவினாள்.

அனு உனக்கு ஒன்றுமில்லைல..என்று ஸ்ரீ எழ நிவாஸ் அவளுக்கு கை கொடுத்தான். ஸ்ரீ அவனது முதுகை பார்த்து,

என்னடா இது? ஜடம் மாதிரி நிக்கிற? வா..ஹாஸ்பிட்டல் போகலாம் என்று எழுந்தாள்.

உனக்கும் பட்டுருக்காக்கா?

அவள் தலையை தொட்டு பார்த்து விட்டு, அர்ஜூனை பார்த்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்தது. அவனுக்கு ஏதுமில்லை என்றவுடன் அனு அர்ஜூனுடன் இரு என்று அவனிடம் அனுவை கொடுக்க, அவன் வருத்தமாக அனுவை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

இன்பாவையும் பார்த்து, மேம் உங்களுக்குமா? கேட்க, அவளை சுற்றி அவளுடைய அம்மாவும் தங்கையும் இருந்தனர்.

வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம் என்று ஸ்ரீ அழைக்க வெளியே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.

மாதவ் அவர்களை சுட்டுட்டு வெளியே வர, யாசு அந்த வலியுடன் எழுந்து நித்தி கைரவ் உதவியுடன் மாதவை நோக்கி வந்தாள்.

யாசு என்று கண்ணீருடன் அவளிடம் வந்தான். அவனை பார்த்தவுடன் நித்தி கைரவை விலக்கி விட்டு முன் செல்ல முடியாமல் அவள் கீழே விழ வந்தாள். அவளை கைரவும் மாதவும் ஒருவாறு பிடித்தனர்.

கைரவ் அவளை விட, மாதவ் அவளை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். அவன் கண்ணீரை துடைத்து விட்டு, எனக்கு அதிகமான காயமில்லை என்று அவனை சமாதானப்படுத்தினாலும் அவள் கைகள் நடுங்க, அவளது கையை பிடித்து, உனக்கு ஒன்றுமாகாது பப்ளி..தைரியமா இரு என்று அவளை தூக்கினான். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு வெளியே வந்து ஸ்ரீ யாசுவை பார்த்து,

சீனியர்,..என்னாச்சு? என்று பதறினாள். அவளது கையை பிடித்த அர்ஜூன், நீங்களும் வாங்க என்று நித்தி இன்பா கைரவை அழைத்துக் கொண்டு அவனது மறுகை நிவாஸை பிடித்திருக்க, அர்ஜூன்..அனு என்று ஸ்ரீ கேட்டாள்.

அவன் அம்மா தான் அனுவை வைத்திருந்தார்கள். அவள் கமலியை பயத்துடன் பார்க்க, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உன்னை சரி செய்து விட்டு வா என்று கூறினார்.

அவள் மேலும் விழிவிரித்து பார்த்துக் கொண்டே, நான் காண்பது கனவா? நினைவா? என்று நின்றிருந்தாள். நிவாஸ் அவள் நினைப்பதை புரிந்து கொண்டு, ஸ்ரீ..வா போகலாம் என்று அழைக்க, அவள் அர்ஜூனை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.