வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-37
139
அத்தியாயம் 37
ஆதேஷ் வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்தான். ஜானுவும் ஆதேஷ் அப்பாவும் செஸ் விளையாண்டு கொண்டிருந்தனர். அவன் விறுவிறுவென படியில் ஏற,
ஆது..நல்லு என்று லலிதா கத்தினார். அவன் காதில் வாங்கவேயில்லை.
நீ என்னிடம் சொல்லாம என்ன வேலை செஞ்சுக்கிட்டு இருக்க? வேலை செய்யணும்னு நினைச்சா நம்ம கம்பெனி தான் இருக்கே?
அவன் அங்கேயே நின்று, நான் செய்வது என்ன உங்க கௌரவ குறைச்சலா இருக்கா?
முதல்ல கீழ இறங்கி வா..பேசணும்.
ஆமா பேசணும். நானும் பேசணும் என்று சினத்துடன் இறங்கினான்.
என்னாச்சும்மா? என்று லலிதாவிடம் அவர் கணவர் வந்து நின்றார். ஜானு அம்மா மகன் இருவருக்கும் இடையிலே தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்.
நீ என்ன பேசுறது? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நீ ஒன்றுமில்லாத அவன் போல வேலை செய்கிறாயா?
அவனுக்கு கோபம் உச்சிட்டது. ஒன்றுமில்லாதவனா? என்னோட சீனியரை அப்படி பேசாதீங்க?
சீனியராம் சீனியர் என்று சொல்ல,மாம்..என்னை கோபப்படுத்துறீங்க?
நீ தான்டா என்னை கோபப்படுத்துற?
நீங்க என்ன செஞ்சீங்க? ஒரு சின்ன பொண்ணு அவ பெற்றோரை இழந்ததற்கு நீங்களும் காரணம் தானே? அந்த குட்டிப் பொண்ணு கண்ணீரை விட, உங்க எல்லாருக்கும் உங்க பிசினஸ் தான் பெரிசா இருந்ததா?
அபி மாமாவா? என்று ஜானு, மாமா..என்று ஆதேஷிடம் வந்தாள்.
அவன் கோபத்தில் பேசிக் கொண்டே போக, மாமா..அபி மாமாவுக்கு என்ன ஆச்சு?
அவளை பார்த்தவன், அன்றே உன்னோட அபி மாமாவை கொல்ல வந்தாங்க. ஏதோ நல்ல நேரம் கத்தி ஆழமாக படாமல் போனது.
அர்ஜூன் அண்ணாவுக்கு யாருன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். ஆனால் சொல்ல மாட்டிக்கிறாங்க. உங்களுக்கு தெரியுமா? யார் அந்த ஆள்?
எல்லாரோட பலவீனத்தை பயன்படுத்தி அடித்துக் கொண்டிருக்கிறான். மாம்..இப்ப இதுல நானும் ஜானுவும் இருக்கோம். சொல்லுங்க என்று கத்தினான்.
எனக்கு தெரியாது. யாருன்னு தெரியாது. ஆனால் அவரை மாஸ்டர்ன்னு சொல்வாங்க. அவர் தன்னுடைய பிசினசை மேம்படுத்த கொலை கூட செய்வார். அதனால் தான் அவரை யாரும் பகைத்துக் கொல்வதில்லை.
ஓ..அவன் கொன்றுவிடுவான்னு பயந்து தான் அன்று உயிரோட துடிப்பவரை வேடிக்கை பார்த்து நின்றீர்களா? ஒரு வேலை அவர் இடத்தில் நான் இருந்தால் அப்படி தான் வேடிக்கை பார்த்திருப்பீர்களா?
அவருக்கு அவன் கேட்பது சரி என்று தோன்றினாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனை கன்னத்தில் அறைந்தவர் நீ உயிரோட இருக்கணும்ன்னு தான் நான் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தேன்.
மாமா..இப்ப மாமா நல்லா இருக்காங்களா? நாம பார்க்க போவோமா? ஜானு இடையே பேச, நாங்க என்ன பேசிக்கிட்டு இருக்கோம். நீ என்ன கேக்குற ஜானு? என்று கடிந்தவன்..அபி அண்ணாவுக்கு ஒன்றுமேயில்லை. இப்ப நல்லா தான் இருக்காங்க. அவள் அமைதியாக அமர்ந்தாள்.
எனக்காகவா?
ஆமாம். என்னோட பலவீனம் நீ தானே?
அப்படியா? சரி நான் கேட்பதற்கு பதில் கூறுங்கள்.
உங்களுக்கு நான் தேவையா? உங்க கம்பெனி தேவையா?
நீ தான்.
அப்புறம் எதுக்கு அந்த கம்பெனியை கட்டிக்கிட்டு அழுறீங்க?
நீங்க கமலி மேம் மாதிரி கிடையாது. எனக்காக கொஞ்சம் நான் பிடித்ததை செய்யக்கூடாதா?
செய்..தாராளமா செய். ஆனால் நான் வளர்த்து வைத்ததும் உனக்காக தானே?
மாம்..ப்ளீஸ் என்னை விட்டுருங்க. நான் அப்படியே விட்டு விட மாட்டேன். நானே உருவாக்கணும். பின் தான் நம் கம்பெனியை பார்ப்பேன்.
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி அந்த இடத்துல நடந்த பின் ஒரு முறையாவது அந்த அக்காவை சொந்த விருப்புக்காக பார்க்க சென்றீர்களா? இல்லை தானே.
அப்புறம் எதுக்கு என்னை வைத்து நியாயமாக்க பார்க்கிறீர்கள்? அவன் கோபமாக அவனறைக்கு சென்றான்.
ஏம்மா..அவன் தான் சொந்தகாலில் நின்று வெற்றி பெற்று நம் கம்பெனியையும் பார்த்துக் கொள்கிறேன்னு சொல்றான்ல. அவன் விருப்பத்துக்கு ஏற்றவாறு விடும்மா. அவன் இப்பொழுது தான் கல்லூரி சேர்ந்திருக்கிறான். அவன் இப்பொழுதே சாதிப்பது நமக்கும் பெருமை தானே?
ஆன்ட்டி, மாமா வேலை செய்றாங்களா? ஜானு கேட்க,
ஆமாம் ஜானு என்று அலுப்புடன் அவளருகே வந்து அமர்ந்து, அர்ஜூனுக்கு கீழ் வேலை செய்கிறானாம். அவன் இத்தனை நாளாக வீடியோ கேம்னு சுத்திக்கிட்டு இருக்கான்னு நினைச்சேன். ஆனால் எல்லாருக்கும் பிசினஸ் பற்றிய அறிவுரை வழங்கும் அளவு வளர்ந்திருப்பான்னு நினைச்சு கூட பார்க்கல.
நீங்க சொன்னது போல நமக்கு பெருமையா இருக்கும். அவங்க இத்தனை நாள் மறைஞ்சிருந்து செய்தாங்க. மாஸ்டருடன் பிரச்சனை வேற செஞ்சிருக்காங்க. அவங்களோட கம்பெனிய அவன் அழிக்காம விட மாட்டான். அர்ஜூன் பேசியது தெரிந்தால் நீங்க இப்படி பேசமாட்டீங்க.
அவன் அனைவர் முன்னும் அந்த குட்டிப் பொண்ணை விட மாட்டேன்னு சொல்றான். அதுமட்டுமல்ல பசங்க எல்லார் உயிருக்கும் ஆபத்து இருக்கு. ஆது அவங்களோட சேருவது எனக்கு சரியா படல. அவனுக்கு ஏதோ ஆகிடும்ன்னு பயமா இருக்குங்க என்று லலிதா அழுதார்.
ஆன்ட்டி..நீங்க சொல்றது சரிதான். எனக்கும் தெரியும். இதில் என்னோட அண்ணாக்களும் இருக்காங்க.
உனக்கு என்ன தெரியும் ஜானு? லலிதா கேட்டார்.
விசயம் சீனியஸ்ன்னு தெரியும். ஸ்ரீ அக்காவை கொல்லப்பாக்குறாங்க. அதனால் தான் அர்ஜூன் அண்ணா அவர் வீட்டிலே தங்க வைத்தார். ஆனால் அபி மாமா, தருண் அண்ணா எல்லாரையும் கொல்லப்பாக்குறாங்கன்னா. ஆது மாமா மீதும் கண்டிப்பா அவங்க கண்ணும் இருக்கு. ஏன் அந்த லிஸ்டுல நான் கூட இருக்கலாம்.
ஆனால் யாருக்கும் ஏதும் ஆகாது. எனக்கு ஸ்ரீ அக்கா பற்றியும் அர்ஜூன் அண்ணா பற்றியும் நல்லா தெரியும். அக்கா சும்மாவே மத்தவங்களுக்கு பிரச்சனைன்னா சும்மா இருக்க மாட்டாங்க. இப்ப அவன் அக்கா முன்னே அர்ஜூன் அண்ணாவிடம் பேசியது தெரிந்தும் அமைதியா இருக்காங்கன்னா. அவங்க கண்டிப்பா ஒரு திட்டத்தோட தான் இருப்பாங்க. நீங்க எங்க யாரை பத்தியும் கவலைப்பட தேவையில்லை.
ஆது மாமாவுக்கு எதுவும் ஆக என்னோட அண்ணாக்கள் விட மாட்டாங்க. வீட்டுக்கு வெளிய எட்டி பாருங்க என்றாள் ஜானு. அவர்கள் வீட்டிற்கு வெளியே போலீஸ் இருவர் இருந்தனர்.
ஆன்ட்டி, உங்க ஆட்களும் இருக்காங்க. எந்த பிரச்சனையும் வராது. துகி அண்ணியை பத்தியும் கவலைப்படாதீங்க. அவங்க பக்கத்துலயே அண்ணா இருக்காங்க. பார்த்துப்பாங்க. அவங்க உளவு பார்க்க வச்சிருந்த ஆளையும் தீனா அண்ணா பிடிச்சு ஜெயில்ல போட்டாரு. வேற யாரும் எங்க ஊருக்குள் நுழைய முடியாது.
பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு கூட சண்டை போடத் தெரியும். எங்க கிராமத்து ஆட்களிடம் இப்ப முழுசா இல்லைன்னாலும் வெளியாட்களை உள்ளே விடக் கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க. அதனால் அவங்களும் பாதுகாப்பா இருப்பாங்க.
நீங்க முதல்ல ஓய்வெடுங்க ஆன்ட்டி என்று ஜானு எழுந்தாள்.
எங்க போற ஜானு?
ஆன்ட்டி..காத்திருந்து பாருங்க என்று லலிதாவிடம் வந்து, மாமா பற்றி கவலைப்படுவதை விட்டு, போய் குளிங்க என்று அவள் கூற,
அச்சச்சோ..இறந்த வீட்டுக்கு போயிட்டு வந்து குளிக்காம உட்கார்ந்துட்டேனே என்று வேலைக்கார வசந்தியை அழைத்து வீட்டை துடைக்க ஆணையிட்டு சென்றார்.
சூப்பர் மருமகளே, நல்ல வேலை நீயே அவளை சமாளிச்சுட்ட. இல்ல அவ்வளவு தான்.
ஆமாம்மா. அம்மா யார் பேச்சையும் கேட்கவே மாட்டாங்க. தம்பியும் அம்மா பேச்சை தட்டாம இருந்தவர். இன்று அவர் இப்படி பேசவும் பிரச்சனை பெரியதாகிவிடுவோன்னு நினைச்சேன். நல்ல வேலைம்மா.. நீங்க யாரும்மா?
நான் என்னோட அபி மாமா மீது பாசமா தான் இருந்தேன். காதல் இல்லை என்றாலும் எனக்கு ஆது மாமாவை பிடிக்கும். அவர் எனக்காக எப்படி அடி வாங்கினார் தெரியுமா அங்கிள்? எனக்கு ரொம்ப கஷ்டமாச்சு. அந்த அர்தீஸ் புவி பின்னாடி சுத்தும் போது தவறான எண்ணத்துடன் அவளருகே வரும் போது நானே அவனை அடித்து விரட்டி இருக்கிறேன். ஆனால் நேற்று அவன் அருகே வரும் போது என்னால் ஒன்றும் செய்ய முடியல. மாமா மட்டும் இல்லைன்னா. நான்..நான்..என்று அழுதாள்.
வசந்தி ஜானுவிடம் வந்து, அம்மா..வருத்தப்படாதீங்க. கடந்த காலத்தை பற்றி நினைத்து வருந்துவதை விட இப்பொழுதுள்ள வாழ்க்கையை நல்ல படியாக வாழணும்மா.
கண்ணை துடைத்து விட்டு ஜானு அவரிடம், எனக்கு ஒரு உதவி செய்றீங்களா? எனக்கு சமைக்க கற்று தாரீங்களா? நானே எல்லாருக்கும் டீ போட்டு தரவா?
மருமகளே அதெல்லாம் வேண்டாம்.
இல்ல அங்கிள். காவேரி சித்தி தான் சொன்னாங்க. அண்ணாவை இன்னும் எதிர்பார்த்தால் நல்லா இருக்காது அங்கிள்.
மருமகளே..உங்களுக்கு அண்ணா ஊட்டி தான சாப்பிடுவீங்க? இனி நான் செய்றேன் என்றார்.
அவரை பார்த்து புன்னகைத்து, அங்கிள் தினமும் வேண்டாம். நான் கேட்கும் போது மட்டும் ஊட்டி விடுவீங்களா?
அங்கிள்..சும்மா இருங்க என்று புன்னகையுடன், அக்கா வாங்க என்று ஜானு இழுக்க,
இருங்கம்மா..வீடு துடைத்து விட்டு வருகிறேன்.
இல்ல..இப்பவே டீ போட்டு நான் எல்லாருக்கும் தரணும் என்றாள் ஜானு பிடிவாதமாக.
சரிம்மா என்று வசந்தி, ரத்தனம் இங்க வந்து வீட்டை துடைங்க. நான் சின்னம்மாவ பார்த்துக்கிறேன்.
சின்னம்மாவா? அக்கா என்னை ஜானுன்னு கூப்பிடுங்க.
இல்லம்மா. நீங்க சின்னம்மா தான் என்று அவர் சிரித்துக் கூற, ஜானுவிற்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.
அவள் புன்னகையை பார்த்து, என்னம்மா கூப்பிடலாம்ல?
போங்கக்கா..என்று வெட்கமுடன் சமையலறைக்குள் சென்றாள். பின் அவர் சொல்ல சொல்ல டீ செய்து முதலில் ஆதேஷ் அப்பாவுக்கு கொடுத்து, அங்கிள் எப்படி இருக்கு? ஆர்வமாக கேட்டாள்.
ம்ம்..சூப்பர் மருமகளே என்றார். லலிதா அறைக்குள் அவள் செல்ல, அவர் குளித்து விட்டு அமர்ந்திருந்தாள்.
ஆன்ட்டி, நானே டீ போட்டேன். எப்படி இருக்குண்ணு சொல்லுங்க?
நீயா போட்ட? வசந்தி எங்க? அவர் கத்த,
ஏன் ஆன்ட்டி, நான் போடக் கூடாதா? பாவமாக ஜானு கேட்டாள்.
அதுக்கு இல்ல ஜானும்மா. அவங்க வேலை செய்றதுக்கு தானே பணம் கொடுக்கிறோம்.
எனக்கு அவங்க சொல்லி கொடுத்து தான் ஆன்ட்டி போட்டேன். ப்ளீஸ் ஆன்ட்டி நான் பண்றேனே? நான் சமையல் கத்துக்கணும்?
ஜானு..நீ கத்துக்க வேண்டியதில்லை. நம்ம வீட்ல தான் இருக்க போற?
ஆன்ட்டி..நான் கத்துக்கிறேனே? ப்ளீஸ்..
சரி..கத்துக்கலாம். ஆனால் ரொம்ப நேரம் சமையற்கட்டுக்குள் இருக்கக்கூடாது.
ஆன்ட்டி..நான் ரொம்ப நாள் இங்கே இருந்தால் உங்களுக்கு பிரச்சனை இல்லையா?
என்னம்மா, இப்படி கேக்குற? நீ இங்க இல்லாம எங்க போக போற? லலிதா கேட்க,
எனக்கு புரியல ஆன்ட்டி என்று தெரியாதது போல் நடித்தாள் ஜானு.
நீ ஆதுவை கல்யாணம் பண்ணிக்கிறாயா?
ஆன்ட்டி, நான் இன்னும் பள்ளி கூட முடிக்கல?
இப்ப இல்லம்மா. உன்னை விட ஒரு வயது தான் மூத்தவன் அவன். நீங்க நினைச்ச மாதிரி படிச்சு முடிங்க. அப்புறம் என்றவர், ஜானு உனக்கு ஆதுவை பிடிக்குமா?
ஆன்ட்டி மாமா இன்னும் தாரிகா அக்காவை மறக்கலை. அவன் சரியாகிடுவான்டா. அதுவும் உனக்காக அவன் உயிரை கூட பொருட்படுத்தாது காப்பாற்றி இருக்கான். உன்னை பிடிக்காமலா செய்திருப்பான். அவனுக்கு உன் மீது கண்டிப்பா காதல் வரும்.
எனக்கு மாமாவை பிடிக்கும் ஆன்ட்டி என்று ஜானு கூற, லலிதா அவளை அணைத்து இது போதும்டா என்றார்.
ஆன்ட்டி..டீ?
குடித்து விட்டு ஜானுவை பாராட்டினார் லலிதா.
ஆதேஷ் அவனறையில் படுத்திருக்க, ஜானு டீயுடன் உள்ளே சென்றாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு அக்கா..நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். தொந்தரவு செய்யாதீங்க என்று போர்வையை விலக்காமல் கூறினான்.
போர்வையை சட்டென உருவிய ஜானு, மாமா..எழுந்திருங்க..
அவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். மாமா..இந்தாங்க? என்று டீயை நீட்டினாள்.
ஜானு..நீ இங்க என்ன பண்ற? போ..வெளிய.
மாமா..நானே டீ போட்டேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க?
நீ போட்டியா? என்று வாங்கி குடித்து விட்டு, ச்சீ இது என்ன டீயா? வாந்தி வந்துரும் போல இருக்கு.
அவள் குடித்து விட்டு நல்லா தானே இருக்கு மாமா என்று அவனை முறைத்தாள்.
நல்லா இருக்கா? குடு பார்ப்போம் என்று வாங்கி குடித்து விட்டு, ஆமா..நல்லா தான் இருக்கு என்றான். அவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளை டீஸ் பண்ணுவது கூட தெரியாமல் இருக்கா ஜானு.
ஓ..அவங்களுக்கு கொடுத்துட்டு தான் என்னிடமே வந்தாயா?
ஆமா..நான் கூட ஆன்ட்டி, அங்கிள் தான் நல்லா இல்லைன்னு சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க சொல்லிட்டீங்க. போங்க மாமா.
போகவா? எங்கம்மா போறது? என்று எழுந்தான். கையில்லா வெள்ளை நிற பனியனும், சார்ட்ஸூம் அணிந்திருந்தான்.
அவனை பார்த்து ஒருவித பயத்துடன், மாமா..கப்பை கொடுங்க. நான் கிளம்புகிறேன் என்று திரும்பிக் கொண்டாள்.
ஜானு, நீ இன்னும் குளிக்கலையா?
மாமா..என்று திரும்பினாள்.
அதான் உன்னோட பூ காய்ந்திருக்கு. நீ அதை கூட எடுக்கலையா? டீ குடித்துக் கொண்டே அவளது தலையை காட்டினான்.
உடனே அவள் அதை எடுத்தாள். அவன் அதை வாங்கி விட்டு, அதை நான் கீழே போட்டுக்கிறேன். நீ போ..குளி.
மாமா..இருக்கட்டும் நான் போட்டுக் கொள்கிறேன்.
நான் சொல்றேன்ல. நான் போட்டுக்குறேன் என்று அவளை வெளியே தள்ள,
ஏன் மாமா என்னை விரட்டுறீங்க?
நீ இங்கே இருக்க போகிறாயா? என்று இருபதலியாக அவன் கேட்க, அதை உணராத ஜானு, ஆமாம் மாமா இங்க தான் இருக்க போகிறேன். நீங்க குடிச்சுட்டு கொடுங்க. நான் கிளம்புறேன்.
ஓ.கே இரு என்று அவன் கப்பை வைத்து விட்டு குளியலறைக்குள் சென்றான்.
மாமா..குடிச்சுட்டு போங்க.
ஜானு எனக்கு ஒரு ஆடை எடுத்து வச்சிட்டு கப்பை எடுத்திட்டு போ என்றான்.
அவள் கப்பை எட்டி பார்க்க, அவன் முழுவதுமாக குடித்திருந்தான்.
மாமா உங்க ஆடையை நீங்களே எடுத்துக்கோங்க “பை பை”
ஜானு நீ ஓர் அடி எடுத்து வைத்தாலும் அப்படியே வெளியே வந்து விடுவேன்.
அய்யோ..மாமா, என்ன பேசுறீங்க? சரி. சரி..வந்து தொலைஞ்சுறாதீங்க. நானே எடுத்து வைச்சுட்டு போறேன் என்று அவன் ஆடைகள் இருக்கும் வாட்ரோப் பக்கம் சென்று, அவளாகவே பேசினாள்.
ம்ம்..இது நல்லா இருக்கும்.ஆனா ரொம்ப பளிச்சின்னு இருக்கு. இது ரொம்ப லைட்டா இருக்கும். இது மாமாவுக்கு சூட் ஆகும். ஆனால்.. ஊகூம். இத விட நல்லதா பார்ப்போம் என்று சுற்றி சுற்றி வந்தாள்.
ஓரிடத்தில் அவள் கால்கள் நிற்க, கண்கள் கலங்கியது. தாரிகாவும் ஆதேஷும் இருப்பது போன்ற புகைப்படம். அதை பார்த்ததும் கண்கள் குளம் கட்டி கண்ணீர் ஆறாகியது.
என்ன சத்தத்தையே காணோம் என்று ஆதேஷ் மேலிருந்து எட்டிப் பார்த்தான். இரு அறையும் பக்கம் தான் இருந்திருக்கும். ஜானு அங்கு இல்லை. கைக்கு கிடைத்ததை எடுத்து வைத்து விட்டு அவள் அழுது கொண்டு கப்பை எடுக்க வந்தாள். அங்கே இருந்தது அவர்களது பள்ளி வயது, இப்பொழுதுள்ள புகைப்படங்கள். மீண்டும் அவள் அழுது கொண்டே வெளியே வந்தாள். ஆதேஷ் ஜானுவை காதலிக்க ஆரம்பித்தது தெரியாமல் அவள் தவறாக புரிந்து கொண்டு அவளறைக்கு சென்றாள்.