வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-33
125
அத்தியாயம் 33
அனைவரும் காரில் ஏற, தீனா.. ஜானு துளசி அருகே அமர வந்தான். அவனை நிறுத்திய துருவன் ஆதேஷ் அண்ணா நீங்க வாங்க என்று மீண்டும் தீனாவை பார்த்து தலையசைத்து, இல்ல..சார் நீங்க பிரதீப் அண்ணாவுடன் ஏறிக் கொள்ளுங்கள்.
ஏய்..நீ ரொம்ப ஓவரா போற?
நானா சார் ஓவரா போறேன்? என்று துருவன் ஆதேஷிடம், அண்ணா போனை கொடுங்கள்.
போதும்டா..நான் என் அண்ணாவுடனே ஏறிக் கொள்கிறேன் என்று தீனா பிரதீப் அருகே அமர்ந்து கொண்டான். துளசி அவனிடம் என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?
ஆதேஷ் ஜானு பிரதீப்பை பார்க்க, அவன் ஆதேஷ் அப்பா அருகில் இருந்து ஜானுவை பார்த்தான். ஜானுவும் தன் அண்ணாவையும் பார்ப்பதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருக்க, ஆதேஷ் மெதுவாக அவள் கையை பிடித்தான். அவள் அவனை பார்த்து விட்டு தன் அண்ணனை பார்த்தாள். பிரதீப்பு ஏதும் பேசாமல் அவர்களை பார்த்தான்.
கவினுக்கு அகில் போன் செய்ய, நான் வீட்டிற்கு சென்ற பின் பேசுகிறேன் என்றான். உன்னிடம் யாருடா பேச அழைத்தது? துருவனிடம் போனை கொடு என்றான்.
இதுக்கு எதுக்கு எனக்கு போன் செய்தாய்?
நீ செஞ்ச காரியத்துக்கு நான் போன் செய்ததே பெரியது என்றான் அகில்.
அவ நல்லா இருக்காலாடா? கவின் கேட்க, நிவாஸ் அவன் குரலை மாற்றி தாரி டியர் நாம இன்று சினிமாவுக்கு போகலாம். நைட் சோ என்றான்.
ஓ.கே மாமா என்றாள் அவள்.
கவின் முகம் மாறியது. ஆதேஷிற்கும் அதிர்ச்சி தான். உண்மையிலே ஆன்ட்டி முடிவெடுத்துட்டாங்களோ? என்று எண்ணியபடி கவினை பார்த்தான். அவன் கண்கலங்க போனை துருவனிடம் கொடுத்தான்.
டேய் அண்ணா..அங்க என்ன நடக்குது?
அது உனக்கு எதுக்கு? அம்மா கேட்டா எதையாவது சொல்லி சமாளி. இங்க நடந்ததை சொல்லி பயமுறுத்தாதே?
எனக்கு அம்மாவை சமாளிக்க தெரியும். நீ உன்னோட வேலைய பாரு என்றான் துருவன்.
அகிலிடமிருந்து போனை வாங்கிய அர்ஜூன், துருவா..உனக்கு பலமான அடி ஏதும் இல்லையே? ஆதேஷ் எப்படி இருக்கான்?
அண்ணா..நான் ஓ.கே தான். அண்ணாவிற்கு தான் அடி கொஞ்சம் அதிகம்.
போறதுக்கு முன்னாடியே யாரிடமாவது உதவி கேட்டு செல்ல வேண்டியது தான? ஏன் தனியா போனீங்க? என்று திட்டினான்.
அண்ணா..ஜானுவும் இப்படி தான் திட்டினாள்.
அவ நல்லா இருக்கால்ல அர்ஜூன் கேட்டான்.அவள்..தயங்கிய துருவன்.,ம்ம் சூப்பர் அண்ணா. காரிலிருந்த அனைவரும் துருவனை பார்க்க,
அவன் பேச்சை மாற்றுகிறேன் என்று கவின் அண்ணாவோட ஆளு நிஜமாகவே கல்யாணம் பண்ணிக்க போறாங்களா?
அண்ணா..சும்மா தெரிஞ்சுக்க தான். அவனிடமிருந்து போனை புடுங்கிய கவின், அர்ஜூன் அங்க என்ன நடக்குதுடா? கேட்டான். அர்ஜூன் போனை துண்டித்து விட்டான்.
அர்ஜூன்..அர்ஜூன்..என்று கவின் அழைத்துக் கொண்டே கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அண்ணா..வருத்தப்படாதீங்க. எல்லாமே சரியாகிடும் என்றான் துருவன். எல்லாரும் அவனை பார்த்தனர்.
அர்ஜூனும் பேசவேயில்லை. போனை எடுக்கலை. அவளும் எடுக்க மாட்டிங்கிறா?
எப்படி எடுப்பா? ஆதேஷ் அப்பா கேட்டார்.
டாட் அமைதியாக காரை ஓட்டுங்க என்றான் ஆதேஷ். அவனை பார்த்த கவின், உன்னால அவளை சமாதானப்படுத்த முடியுமா? ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு ஆதேஷ் என்று கவின் முதன் முறையாக நன்றாக பேசினான்.
வேற பிரச்சனைன்னா முயற்சி செய்யலாம். ஆனால் இதுல நான் வந்தால் நல்லா இருக்காது சீனியர். நீங்க தான் அவளை சமாதானப்படுத்தணும். நீங்க விடாம அவள் மீதுள்ள காதல்ல உறுதியா இருங்க. அவளை எந்நேரத்திலும் நீங்க நம்புங்க. அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காள். கொஞ்சம் நேரம் கொடுத்து பாருங்கள். முடிந்த அளவு அவளை தினமும் ஒரு முறையாவது அவளை பார்த்து விடுங்கள்.
அவள் உங்களை எந்த அளவு காதலிக்கிறால் என்று நான் சொல்லத் தேவையில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவன் ஒரு பக்கமாக சாய்ந்தான்.
மாமா..ரொம்ப வலிக்குதா?
இல்ல ஜானு என்று அவளது கையை மட்டும் பிடித்துக் கொண்டான்.
எல்லாரும் எதற்கும் கவனமா இருங்க. வேலீஸ்வர் தப்பித்து விட்டார் தீனா கூற, அவரை சீக்கிரம் பிடித்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் பாதுகாப்பு மாப்பிள்ள என்று தீனாவிடம் ஆதேஷ் அப்பா கூறினார்.
சார்.. நேராக ஹாஸ்பிட்டலுக்கு போங்க. ஆதேஷிற்கு சிகிச்சை செய்து விடலாம் என்று கவின் கூறினான்.
ம்ம்..என்று வண்டியை விரைந்து ஓட்டினார்.
அர்ஜூன் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர் இன்பா, அவள் அம்மா, ஸ்ரீ. அர்ஜூன் போன் அழைக்க, சாப்பிடும் போது எழாதே அர்ஜூன் என்று ஸ்ரீ அவனது போனை எடுத்துக் கொடுத்தாள். அவன் எடுத்ததும் பயங்கர சிரிப்பொலி. அவன் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு, யாரு? என்று கேட்டான்.
என்ன அர்ஜூன் உங்க ஊர்ல பிரச்சனை முடிஞ்சது போல?
யாருடா நீ? என்று சீற்றமுடன் எழுந்தான். அனைவரும் அவனை பார்த்தனர்.
உங்க ஊர் பிரச்சனையில உன்னோட குடும்பத்தை தவற விட்டுட்ட? அவன் அனைவரையும் பார்த்தான். எல்லாரும் இங்க தான இருக்காங்க? சிந்தித்தான்.
என்னோட அம்மாவா? கேட்டான்.
உன்னோட அம்மாவா? அவளே உனக்கு எதிரா தான் இருக்கா. அப்படி பார்த்தால் அவள் எனக்கு தேவைப்படுவாள். நான் கூறியது உன்னுடைய எதிர்கால குடும்பம்.
என்னுடைய எதிர்கால குடும்பமா? என்று ஸ்ரீ நிவாஸை பார்த்தான்.
அர்ஜூன்..அக்கா என்றாள் ஸ்ரீ.
அட, சரியா பிடிச்சிட்டா உன்னோட ஏஞ்சல்.
ஏய்..அக்காவை எங்க?
என்னப்பா அர்ஜூன்? உன்னோட அக்கா தான் சீக்கிரமே செத்து போயிருவாளே? நான் கூறியது உன்னோட எதிர்காலம்.
என்ன சொல்ற?
அர்ஜூன்..அனு என்று ஸ்ரீ பதறினாள்.
அனுவா?
பாரு. உன்ன விட அவ தான் புத்திசாலியா இருக்கா. உன்னோட எதிர்காலம் அந்த குட்டிப் பொண்ணு தானே?
அந்த பொண்ணு செத்துட்டா. உனக்கு எதிர்காலமே இல்லாம போயிடும்.
ஏய், அவள தொட்டீங்க செத்தீங்கடா? சீறினான் அர்ஜூன். ஸ்ரீ கண்கள் கலங்கியது. தாரிகாவும் எழுந்து அர்ஜூனிடம் வந்து நின்றாள்.
அவங்கள விட்டுருங்க. உனக்கு என்ன வேண்டும்? கேட்டான்.
எனக்கு அவளோட மொத்த சொத்தும் வேண்டும்.
அவ்வளவு தானே? எங்க இருக்காங்க சொல்லு. அவங்கள நீ ஏதும் செய்யக்கூடாது.
ஏய்..எதுக்கு அடிக்கிறீங்க? எங்க வரணும்? சொல்லு? என்று பதறி கேட்டான்.
அக்கா அமைதியா இருங்க. நான் வந்துடுறேன். அர்ஜூன் அனுவை காப்பாத்து என்று அக்கா கதறி அழுதாள். அவனுக்கு பயம் தொற்றியது.
அனுவை இப்பொழுதே காட்டுங்க என்றான்.
நீயே வந்து பார்த்துக்கோ என்று இடத்தை கூற, அர்ஜூன் போனை கையில் வைத்துக் கொண்டு ஓடினான். அர்ஜூன் நானும் வாரேன் என்று ஸ்ரீ அழுதாள்.
நீ இங்கேயே இரு. யாரும் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரமாக கூறி விட்டு வேகமாக வெளியேறினான்.
ஸ்ரீயும் வெளியே வர, தாரிகா அவளை தடுத்தாள். அர்ஜூன் தனியே போகிறான். எனக்கு பயமா இருக்கு என்று ஸ்ரீ அழுதாள். பைக்கை கிளப்பினான் அகில். அபி அவனுடன் சென்றான். தருணை வீட்டில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்றனர். அவன் எப்படி இருப்பான்? இதயா தடுத்தும் கேளாமல் அவனும் கிளம்பினான்.
அனுவையும் அக்காவையும் எண்ணி கஷ்டப்பட்ட ஸ்ரீயும் வீட்டிலிருந்தவர்களை ஏமாற்றி வெளியேறினாள். தாரிகாவும் அவளுடன் செல்ல,..நில்லுங்க என்று இன்பா வெளியே வர, உன்னாலயும் அந்த பசங்களுக்கு பிரச்சனை வரணும்ன்னு நினைக்கிறியா? என்று அவள் அம்மா திட்ட, வேறு வழியில்லாது அவளும் இதயாவும் வீட்டில் இருந்தனர்.
ஆனால் இன்பா தருணிற்கு விசயத்தை சொல்ல, அவன் த சரியாக இருவரையும் பார்த்து திட்டிக் கொண்டிருந்தான். அங்கே வந்த மாதவ் மூவரையும் ஏற்றிக் கொண்டான்.
அர்ஜூன் மாதவிடம் கூறி இருப்பான். மாதவும் அவனுடைய உதவியாளர்களும் வந்திருந்தனர். ஸ்ரீ அழுது கொண்டே இருக்க, அழாதம்மா..யோசிக்க கூட முடியல என்றான் மாதவ்.
சாரி சார். அவள் ரொம்ப பயப்படுகிறாள். அவங்க இவளுடன் கொஞ்ச நெருக்கம். அதனால் தான் என்று தாரிகா சமாளித்தாள்.
அர்ஜூன் அவ்விடம் வந்து நிற்காமல் உள்ளே ஓடினான். நிறைய எந்திரங்கள் உள்ள பழைய தொழிற்சாலை. அர்ஜூன் அவசரப்படாதே என்று அகிலும் அபியும் அவன் பின் வந்தனர்.
அம்மா..அம்மா..என்று குழந்தையின் அழுகுரலை கேட்ட அர்ஜூன் அனு..அனு..என்று கத்தினான். பாப்பாவிற்கு அர்ஜூன் குரல் கேட்டு,
அர்ஜூன்..அர்ஜூன்..வா..வா..பாப்பாக்கு பயமா இருக்கு என்று அழுதாள் அனு. அனு குரல் கேட்டது வினிதாவின் சத்தமேயில்லை.
அக்கா.அக்கா..அக்கா..ஏதாவது பேசுங்க? அர்ஜூன் கத்த, அங்கே இருந்தனர் பன்னிரண்டு, பதின்மூன்று அடி ஆட்கள்.
என்னோட அக்கா எங்க? பாப்பா எங்க? அவன் கேட்க, உயரத்தில் வினிதாவை கட்டி வைத்திருந்தனர். எதிரேயுள்ள மரம் வெட்டும் இயந்திரம் அவரை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. அவர் மயங்கி இருந்தார். அவர்கள் அடித்தே வினிதாவை மயக்கமாக்கி இருப்பார்கள்.
அவங்கள விட்டுருங்க. அவங்களிடம் பேசி நான் கையெழுத்து வாங்கித் தாரேன். அவளை விழிக்க வைத்து அர்ஜூன் அவரிடம் பேச, வினிதா ஒத்துக்கவே இல்லை. அவள் ஏதோ கூற நினைக்கிறாள் என்று அர்ஜூனுக்கு புரிந்தது.
அக்கா எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்ப நீங்களும் அனுவும் தான் முக்கியம் என்றான்.
இல்ல அர்ஜூன் என்று அவர் மீண்டும் தயங்க, அக்கா என் மீது சத்தியம் எழுதி கொடுத்திருங்க. நாம் உயிரோட இருந்தால் போதும்.
அவரும் அனுவிற்காக அவர்கள் கொடுத்த அனைத்திலும் கையெழுத்திட்டு கொடுத்தார். பாப்பாவை காட்டுங்க என்றான் அர்ஜூன்.
அனு கண்கள் கட்டிய நிலையில் அழைத்து வந்தனர். அர்ஜூன்..அம்மா.. என்று இருவரையும் பயத்தில் மாறி மாறி அழைத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஒரு குரல். வெல்டன் அர்ஜூன்..ஆனால் அர்ஜூன் நீங்கள் இங்கே வந்ததற்கு எனக்கு ஓர் உயிர் வேண்டுமே?
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அகில், அதான் உனக்கு தேவையானதை செய்து கொடுத்துட்டாங்களா? அப்புறம் என்ன உயிர் வேண்டும் என்று சினத்துடன் கத்தினான்.
அகில் பொறுமையா இரு என்று அர்ஜூன் அவனருகே வந்தான். அபியும் அகிலிற்கு அறிவுரை கூறினான்.
உங்களில் யார் என்று முடிவெடுங்கள்? அந்த குரல் சொல்ல, நான் வாரேன் என்றான் அர்ஜூன். இல்ல நான் வாரேன் என்று அகில் கூற, நோ..நான் வாரேன் என்று அபி கூறி நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
என்ன விளையாடுறீங்களா? சொல்லப்போறீங்களா? இல்லை என்று குரலுக்கு சொந்தக்காரன் கர்ஜிக்க, அகில் முன் வந்தான்.
வினிதா ஒரு பக்கத்திலிருந்து வர, அனு கண்ணை அவிழ்த்து விட்டனர். அவள் ஒரு பக்கம் வந்தாள். அகில் மெதுவாக செல்ல, ஒருவன் அகிலை இழுத்து சென்றான்.
அர்ஜூனிடம் இருவரும் பத்திரமாக செல்லட்டும். பின் இவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இருவரும் செல்லும் நேரத்தில் துப்பாக்கி குண்டு அனுவை நோக்கி வந்தது. கவனித்த அர்ஜூன் அனுவிடம் பாய்ந்து சென்றான். ஆனால் அதற்குள் குண்டு துளைத்திருந்தது வினிதாவை.
அக்கா..என்று அனுவை அள்ளிக் கொண்டு அவரிடம் விரைந்தான் அர்ஜூன். அனுவை அர்ஜூன் காக்க வருவதற்குள் தன் பொண்ணை காக்க வினிதா வந்து குண்டை தனக்குள் வாங்கிக் கொண்டார்.
அக்கா..அக்கா..என்று கண்ணீருடன் மடிந்து அர்ஜூன் அழுது கொண்டிருக்க, அகிலை தாக்கினர் ஆட்கள். அவர்களுடன் சண்டை போட்டனர் அகிலும் அபியும். அம்மா..அம்மா.. இரத்தம்..அர்ஜூன் அம்மாவுக்கு இரத்தம் என்று அனு அழ, மற்றுமொரு துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் பயந்தனர்.
மாதவ் ஆட்கள்…ரௌடிகளை சரமாரியாக அனைவரையும் சுட்டு தள்ளினர். ஸ்ரீ தாரிகா தருண் அவர்களிடம் வந்தனர்.
அக்கா..அக்கா..என்று ஸ்ரீ அழ, தாரிகாவும் அக்கா ஒன்றுமில்லை. அர்ஜூன் வா..அக்காவை தூக்கு ஹாஸ்பிட்டல் செல்லலாம் அவள் அழைக்க, வினிதா தலையசைத்து அர்ஜூன் அவன் தான். நம் எல்லார் பிரச்சனையும் அவனால் தான். ஒரே ஆள் தான் அர்ஜூன். அவனை விடாத அர்ஜூன் என்று கண்ணீருடன் அனுவை தன் கைகளால் கன்னத்தை தொட்டு, அர்ஜூன் தான் இனி உனக்கு எல்லாம்..அனும்மா..
அர்ஜூன் எல்லாத்தையும் பாப்பா பேர்ல மாத்திட்டேன். உன்னையும் ஸ்ரீயையும் தான் கார்டியனா போட்டுருக்கேன். ஏற்கனவே எல்லாத்தையும் முடிச்சுட்டேன். அர்ஜூன் அவனை மட்டும் விட்டுறாதே என்று அவன் காதில் ஏதோ சொன்னாங்க.
அக்கா..என்று அர்ஜூன் அதிர்ந்தான். ஆனால் அக்கா, நீங்க கையெழுத்திட்டு கொடுத்துட்டீங்க?
இல்ல அர்ஜூன். அதில் நான் கையெழுத்திவே இல்லை.
அக்கா…ப்ளீஸ்..
அர்ஜூன் சொல்வதை மட்டும் கேள்.
அனுவையும் ஸ்ரீயையும் பார்த்துக்கோ. ஸ்ரீ அர்ஜூன் கையை பிடித்து அனு கையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்து விட்டாள் வினிதா. அம்மா..அம்மா..அம்மா..என்று அனு அழைக்க அர்ஜூன் தாங்க முடியாமல் பெருங்குரலெடுத்து கத்தி அழுதான்.
அக்கா..அக்கா..என்று ஸ்ரீ வினிதா கன்னத்தில் தட்டி அழுதாள். தாரிகா ஸ்ரீயை அணைத்துக் கொண்டு இருந்தாள். அபியும், அகிலும் குழந்தையை பார்த்து அழுதவாறு நின்றிருந்தனர்.
அகில் வினிதா முன் வந்து, நாங்க எல்லாருமே அனுவுக்காக இருப்போம். அவனை அழிக்காமல் விட மாட்டோம் என்று அழுதவாறு அவளது கையை பிடித்தான்.
ஆமாக்கா. அவனை சும்மா விட மாட்டோம் என்று அபியும் அகில் கை மீது வைக்க மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.
மாதவ் அவர்களிடம் வந்து, நாம் இவ்வளவு தூரம் வந்தும் அவனை பிடிக்க முடியாமல் இவங்களை தவற விட்டு விட்டோம் என்று வருத்தப்பட்டான்.
வினிதாவை அவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அனு ஸ்ரீ தாரிகாவிடம் தான் இருந்தாள். பிரதீப் தீனாவிற்கு விசயம் தெரிந்தது. லலிதாவிற்கு விசயம் தெரிய ஆதேஷுடன் கிளம்பினார். ஜானு அவர்களிடம் வந்து தானும் வருவதாக கூற, பிரதீப்பை பார்த்தனர். அவன் அமைதியாக இருந்தான்.
காவேரிக்கும் அப்பத்தாவிற்கும் ஜானுவை அனுப்ப பிடிக்கவில்லை என்றாலும், அவள் நிலையை நினைத்து இடமாற்றம் மனதை மாற்றும் என்று எண்ணி அனுப்பினர். துளசியும் துகிராவும் ஜானுவையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவளிடமும் கூறி விட்டு தான் ஜானு கிளம்பினாள். இது வெளியே யாருக்கும் தெரியாது.
பிரதீப் ஆட்களும் தீனா ஆட்களும் அவர்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்க, ஆதேஷ் குடும்பம், ஜானு, பிரதீப், தீனா, கவின் கிளம்பினார்கள்.
அர்ஜூன் வீட்டில் தனியே இருக்கும் இன்பா குடும்பத்தை அபி வினிதா வீட்டிற்கு அழைத்து வந்தான். சைலேஷ், நித்தி, யாசு, கைரவ் வந்தனர். நித்தியும் யாசுவும் வினிதாவை பார்த்து, அதற்குள் எல்லாரையும் விட்டுட்டு போயிட்டீங்களே அக்கா என்று அழுதனர். இவர்கள் வந்த சற்று நேரத்தில் பிரதீப்புடன் அனைவரும் வந்தனர்.
ஜானுவும், ஆதேஷ் அப்பாவும் மட்டும் வீட்டிற்கு சென்றனர். அர்ஜூன் மனம் உடைந்து அமர்ந்திருந்தான். எல்லாரும் அவனிடம் வந்தனர்.
ஆதேஷ் புரியாமல் அண்ணா எதுக்கு மாம் இவங்க முன்னாடி இப்படி இருக்காங்க? எல்லார்க்குமே இவங்கள தெரியுமா? அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜூன் லலிதாவை ஒருவித கோபமுடன் பார்த்தான். பின் அவங்க பிசினஸ் ஆட்கள் வந்தனர்.
அர்ஜூன் பார்வையை கண்டு கொண்ட ஆதேஷ் புரியாமல் அவன் அம்மாவை பார்த்தான். கமலியும் அங்கு வந்தார். தன் மகன் அனைவர் முன்னும் அழுது சோர்ந்து அமர்ந்திருப்பதை கண்டவருக்கு கோபம் வந்தது. அந்த குட்டிப் பொண்ணு ஸ்ரீயின் மார்பில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவருக்கு ஸ்ரீ பேசியது நினைவுக்கு வந்தது. ஸ்ரீ மீது கொஞ்ச கொஞ்சமாக கோபம் குறைந்திருந்தது அவருக்கு. இன்னொரு ஸ்ரீ என்று அவள் கூறியது, ஆருத்ரா ஸ்ரீ, நிவாஸ் பெற்றோர்களை கயல் கொன்றது என்று கூறியது, ஸ்ரீ அனு அர்ஜூனுடன் தான் இருக்கப் போகிறாள் என்று கூறியது அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தார்.
அவரை பார்த்த அர்ஜூன் கோபமாக, அன்றே நீங்கள் என்னை தடுக்கலைன்னா? இப்ப இதெல்லாம் நடந்திருக்காது என்று கத்தினான்.
சைலேஷ் அவனிடம், அர்ஜூன் செய்தியாளர்களெல்லாம் வந்துருக்காங்க. அமைதியா இரு என்றான்.
நோ..சார். யார் இருந்தாலும் பரவாயில்லை. ஏம்மா..உங்களுக்கு அந்த குட்டிப் பொண்ணை பார்த்து கூட கஷ்டமா இல்லையா?
அன்றே அக்காவோட கணவரை காப்பாற்றி இருந்தால் இன்று அக்காவிற்கும் இந்த நிலைமை வந்திருக்காது. பாப்பாவும் இன்னொரு அர்ஜூனாக இருந்திருக்க மாட்டாள்.
ஸ்ரீ நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு கமலியை பார்த்தாள். அன்று கமலியிடம் ஸ்ரீயும் இவ்வாறு தான் கூறி இருப்பாள். ஆனால் அனுவை நான் அவ்வாறு விட மாட்டேன். அவளை நான் தான் வளர்க்கப்போகிறேன். அவர்களுடைய சொத்துக்களுக்கும் நான் தான் பாதுகாவலன்.
அர்ஜூன்..என்ன பேசுற? கமலி கோபப்பட, நான் சொன்னது சொன்னதுதான்.
அது எப்படிப்பா உன்னால முடியும்? நீ இன்னும் கல்லூரி கூட முடிக்கலை என்று ஒருவர் கூற,
படிப்பு அறிவை வளர்க்க மட்டும் தான் சார் என்று அர்ஜூன் கூற, அனைவரும் அபியை பார்த்தனர். அவனும் அடிக்கடி அதை தான் கூறுவான்.
அவளுக்கு நாங்க இருக்கோம் என்று வினிதா கணவரின் சொந்தங்கள் முன் வந்து நின்றனர்.
ஓ..நீங்க எவ்வளவு நேரமா இங்க இருக்கீங்க? ஒருவராவது அனு அம்மா.. அம்மா..என்று அழைக்கும் போது அவளுடன் வந்து நின்று அவளை சமாதானப்படுத்துனீங்களா? அவன் உரக்க கத்தினான். அனைவரும் அமைதியானார்கள்.
ஒருத்தியை சொந்தம் என்று ஒருவரிடம் விட்டு படுவது போதும் என்று ஸ்ரீயை பார்த்து விட்டு, அனு எங்களுடன் தான் இருப்பாள். அவளுக்கு அவளுடைய பெற்றோர்கள் சேர்த்து வைத்த அனைத்தும் அவளுக்குரியது மட்டுமே. அவளுக்கு பதினெட்டு வயது வந்த பின் அனைத்தும் அவளுக்கு சேர்க்கப்படும். அதுவரை அதற்கு பாதுகாவலர் நானும் ஸ்ரீயும் என்று கையை காட்டினான்.
அர்ஜூன்..அவன் அம்மா கத்தினார்.
எப்படி சொத்தை அடிக்கிறானுக? அவர்கள் சொந்தத்தில் ஒருவர் கூற, அர்ஜூன் சினத்துடன்,..
எனக்கு யார் சொத்தும் தேவையில்லை. என்னுடைய அம்மா “தி கிரேட் பிசினஸ் வுமன்” அவங்க சொத்தும் தேவையில்லை. எனக்கு தனியே வேலையும் உள்ளது. பணமும் உள்ளது. என் வீடு, படிப்புக்கு மட்டும் தான் என் அம்மா பணம். மற்றபடி அவர்களிடம் ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை.
ஏன் அர்ஜூன்..ஐந்து கோடியை மறந்து விட்டாயா? கமலி வினவ,
உங்களிடம் வாங்கிய கடன். அதை சீக்கிரம் அடைத்து விடுவேன். அவன் ரெசார்ட் வாங்கியது. அதில் யாரெல்லாம் இருக்காங்க என்று அனைவர் முன்னிலையிலும் கூறி விட்டு,
சார்..நீங்க ஏதோ கேட்டீங்களே? நான் கல்லூரி முடிக்கவில்லை தான். இப்பொழுது கூட கல்லூரி விட்டு வெளியேறி தொலை தூரக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போகிறேன்.
நல்லா தெரியுமே? ஆன்லைனில் உள்ள பிரபலமான கம்பெனி. எந்த பிசினஸ் பிரச்சனைக்கும் உடனடி தீர்வை அளிப்பார்கள். ஆட்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் குரல் புத்துணர்ச்சியான இளைஞர்கள் போல் இருந்தது.
ஆமா..அதை எதுக்கு நீ கேட்கிறாய்? நீ அதில் உள்ளாயா? கேட்டதிலே அனைவரும் அதிர, அதுக்கு ஹெட்டே நான் தான் என்றான்.
என்ன? என்ன? பல குரல்கள் பேச, ஆதேஷ் அண்ணா என்றும் தருண் டேய்..மச்சான் நீ தானா? என்று அவனிடம் ஓடி வந்தனர்.
ஆதேஷும் தருணும் அவனது புனைப்பெயரை கூறி, உன்னுடன் தான் வேலை செய்கிறேன் அவனை கட்டிக் கொள்ள, அவன் அவர்களை பார்க்க, மீடியா அர்ஜூன் பக்கம் திரும்பியது.
ஸ்ரீக்கு நடப்பது கனவா என்று இருந்தது. அனைவரும் அர்ஜூனை திகைப்புடன் பார்த்தனர். அவனோ..அவன் முகத்தை மறைத்து, நான் இதை வெளியிட்டதன் காரணம் அனு மட்டுமே. அனுவிற்கான அனைத்தையும் நான் பார்த்துக் கொள்வேன். அனுவும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் என் மகளாக இருப்பாள்.