அத்தியாயம் 31
ஆதேஷ், துருவன் உள்ளே செல்லும் முன் உள்ளே எங்களிடம் பேசுவது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். அப்புறம் வெகு கவனம் அவசியம். ஒருவருக்கு ஒருவர் உதவியா இருங்க அர்ஜூன் பதட்டமாக பேசினான்.
அண்ணா..எங்களுக்காக ரொம்ப கவலைப்படுறீங்க போல? ஆதேஷ் ஒருவித மகிழ்ச்சியுடன் கேட்டான்.
அப்புறம் இருக்காதா? என்னை முதலாய் அண்ணான்னு கூப்பிட்டது நீ தானே! நீ என்னோட தம்பி தானே? அர்ஜூன் அண்ணா என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் துருவன் கூற,
எதுக்கு? உன்னோட அண்ணன் என்னோட சண்டைக்கு வரதுக்கா? நீ வேற..கவனமாக இருங்க.
துரு நீ மாப்பிள்ள பின்னே போ. நீங்க இப்ப நிக்கிறத கூட அவங்க பார்த்துகிட்டு தான் இருப்பாங்க. நம்முடைய இணைப்பு கூட துண்டிக்க வாய்ப்புள்ளது. பிரதீப் அண்ணா வந்துருவான்.
அர்ஜூன் நீ சொல்லு என்று தீனா கூற, மாமா சார் வீடியோ கால் பண்ணவா? எனக்கு அர்ஜூன் அண்ணாவை பார்க்கணும் போல இருக்கு என்றான் ஆதேஷ்.
ஓ.கே வீடியோவை ஆனில் வைத்திரு. உள்ளே சென்றதும் போனை கையில் எடுக்காதே. துப்பாக்கியும் அவசர நேரத்தில் தான் எடுக்கணும் தீனா கூறினான்.
சரிங்க மாமா சார் என்று வீடியோ காலில் ஆதேஷ் தீனா அர்ஜூன் இருவரையும் பார்த்தான். அகில் இதை பிடி என்று அர்ஜூன் போனை அகிலிடம் கொடுத்து விட்டு, அவன் அறைக்கு சென்று ஒரு துப்பாக்கியை எடுத்து வந்து, அவன் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்று செய்து காண்பிக்க பொண்ணுங்க எல்லாரும் அவனை மெய் மறந்து பார்த்தனர்.
அர்ஜூன்..எப்படிடா? இதை எப்ப கத்துகிட்ட? அகில் கேட்க, அதற்கு பதில் அர்ஜூனிடமிருந்து மௌனம் மட்டுமே. அவன் புரிந்து கொண்டு அமைதியானான்.
அண்ணா..நான் பார்த்துக்கிறேன் என்று இருவரும் உள்ளே நுழைந்தனர்.
மாப்பிள்ள..ஒரு விசயம் சந்தேகமாக உள்ளது என்று தீனா கூற, அவன் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
ஜானு, துளசியை உள்ளே தள்ளி அடைத்தவர்களுடன் வெளியே வர போராடினர் நம் கிராமத்து குட்டி மயில்கள். ஆதேஷ் பார்ப்பதை பார்த்து அவர்கள் வண்டியை எடுத்து இருவரையும் ஏமாற்றி சென்ற பின் ஜானு துளசிக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்திருப்பார்கள்.
மயக்கத்திலிருந்த விழித்த ஜானுவிற்கு உடலெங்கும் கனமாய் இருந்தது. அறையும் இருட்டாக இருந்தது. அவள் பயத்தில் கத்திக் கொண்டே கதவை வேகமாக தட்டினாள்.
கதவு திறக்கப்பட அவள் வெளியே வந்தாள். நிலவு ஆகாயத்திலிருந்து தவழ்ந்து ஜானுவாய் பிறப்பெடுத்திருந்தது. அவளை பார்த்து அவளே அதிர்ந்தாள். அவள் முன் ஒருவன் வந்தான். ஜானு திருமண கோலத்தில் இருந்தாள். அவள் முன் இறந்த அர்தீஸ் பட்டு வேஷ்டியில் நின்றான்.
கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்த ஜானு..நீ எப்படி உயிரோட வந்த?
நான் சாகலடி என் அழகுகன்னியே..
ச்சீ..என்ன பேசுற?
ச்சீயா? இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று அவளருகே வந்தான். அவள் மனதினுள் பயந்தாலும் அங்கேயே நில்லு..நீ பேயில்லையே? என்று கேட்க. மற்றொரு சிரிப்பொலி வந்து தாக்கியது.
நெடு உயரம், தடித்த உடல், கோரமான முகஅமைப்புடன் ஒருவன் வந்தான்.
நீ யார்? ஜானு கேட்க, அவன் என் அண்ணன் தான். கொலைவழக்கில் ஜெயில் சென்று வந்திருக்கிறான்.
துளசி..துளசி எங்கடா? முகம் வியர்க்க கேட்டாள் ஜானு.
நம் நால்வருக்கும் தான் திருமணம். அவளும் வந்து விடுவாள் என்று அர்தீஸ் கூறிக் கொண்டிருக்க, அவளை அழைத்து வந்தாள் அந்த புத்திரர்களின் விகாரத்தாய்.
அவள் கையை தட்டி விட்டு ஜானு என்று அவளிடம் ஓடி வந்தாள் துளசி.
பிற்காலம் முழுவதும் சேர்ந்து தானே இருக்கப்போறீங்க? அவள் அங்கலாய்க்க
நினைச்சுக்கிட்டு இரு. மூஞ்சியப்பாரு. என்னோட துளசி அழகுக்கு கொஞ்சமாவது ஒத்துப்போவியாடா அவனை உதாசினமாக பேசினாள் ஜானு.
அவன் சினத்துடன் ஜானுவிடம் வர, அர்தீஸ் அவன் முன் வந்து புவனாவை விட இவள் என்னை மயக்கிவிட்டாள். இவளை யாருக்கும் விட்டுத் தர முடியாதுடா அண்ணா. அவளை கூட அனுபவிக்க மட்டும் தான் நினைத்தேன். ஆனால் இவள் எனக்கு எப்பொழுதும் வேண்டும். அதற்கு தான் திருமணம்.
திருமணமா? உன்னுடனா? அதுக்கு நான் செத்துபோயிடுவேன் என்றாள்.
ப்ளீஸ் எங்கள விட்டுருங்க என்று அழுதாள் துளசி.
அழும் போது கூட இவ்வளவு அழகா இருக்கா பாரும்மா என்றான் அந்த நெடியவன்.
சரி வாங்க போகலாம்..என்று அழைக்க, ஜானு துளசி இருவரும் கையை பிடித்துக் கொண்டு வரமாட்டோம் என்று நின்றனர்.
டேய்..என்று அவள் அழைக்க, அம்மா..நாங்க தான் இருக்கோம்ல என்று ஜானு துளசியிடம் அவர்கள் நெருங்க, அங்கு போக இடமில்லாது இருவரும் தவித்து நின்றனர்.
ஜானுவை அர்தீஸும், துளசியை அந்த நெடியவனும் தூக்கிக் கொள்ள இருவரும் துள்ளிக்கொண்டு விடுங்கடா.. இல்லை கொன்னுடுவோம் என்று கத்தினார்கள். ஆனால் அவர்களோ விடாப்பிடியாய் தூக்கி சென்றனர்.
ஆதேஷும், துருவனும் விளக்கொளி மின்னிய கட்டிடத்தினுள் நுழைந்தனர். அவர்களை ஒரு குரல் வரவேற்றது. என்ன சின்ன பொடி பசங்களா வந்துருக்கீங்க? சரி வந்துட்டீங்கல்ல வாங்க..வாங்க..
நம்ம பிரதீப், தீனாவுக்கு புதுசா மாப்பிள்ள வந்திருக்கானாமே? அது நீங்க தானா தம்பி. அட பாக்க படத்துல வர்ற ஹீரோ மாதிரி இருக்கீங்க. பக்கத்துல யாரு? அட..ரதி மவனா வந்துருக்க? என்னப்பா அம்மாவ தனியா விட்டுட்டு வந்துருக்க? அவன் மனது சுருக்கென்றது.
நீ வேலீஸ்வர் தான? அவன் நேரடியாக கேட்க,
என்ன தம்பி, ஊருக்குள்ள நம்ம மரியாதை தெரிஞ்சும் இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா?
யோவ்..உனக்கென்ன மரியாதை? என்று வாய்க்கு வாய் பேசினான் துருவன். ஆதேஷ் அவன் கையை பிடித்து அமைதியா இருக்க சொல்ல,
ஹீரோ தம்பி, நீங்க படத்துல இருக்குற ஹீரோ மாதிரி சண்டையெல்லாம் போட மாட்டீங்க போல..ஆனால் நீங்க திறமைசாலியாமே? அதையும் பார்த்துருவோமா?
ஜானு, துளசி ரெண்டு பேருமே இங்க தான் இருக்காங்க. நீ தேடி கண்டுபிடிச்சி முடிஞ்சா கூட்டிட்டி போங்க. உங்களுக்கான நேரம் பதினைந்து நிமிடம். இப்பொழுது ஏழு மணி பதினைந்து நிமிடம்..ஏழு முப்பதுக்குள் நீங்கள் கண்டறிந்து காப்பாற்றினாள் தான். இல்லை அவர்களை காப்பாற்ற முடியாது.
துருவா..நீ போ என்று அவனை தேட சொல்லி ஆதேஷ் வெளியே சென்றான். ஒவ்வொரு அடுக்கிலும் ஒன்பது அறைகள். கட்டிடமோ ஏழு மாடி. மாடி ஏறி தேடவே அரை மணிநேரமாகும். விளக்கு அனைத்து அறையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. துருவன் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, வெளியே வந்த ஆதேஷ் டிரோனை எடுத்து பறக்க விட்டு மேலிருந்து தேடினான் ஐந்தே நிமிடத்தில். அவர்கள் அக்கட்டிடத்திலேயே இல்லை.
யோசித்த ஆதேஷிற்கு ஒரு யோசனை அக்கட்டிட மொட்டை மாடி..பறக்க விட்டான் டிரோனை. ஆட்கள் சரியாக தெரியவில்லை என்றாலும் பெண்களின், ஆண்களின் உருவம் மட்டும் தெரிந்தது. மேலும் ஐந்து நிமிடமானது. துருவனை அழைத்து மொட்டமாடியை கை காட்டினான்.
ஐந்து நிமிடத்தில் போகணுமே? துரு போய்விடுவான். அவன் நான்காவது மாடியில் தான் இருக்கிறான். இனி ஒவ்வொரு அறையாக தேட தேவையில்லை. நேராக சென்றால் நேரமும் சரியாக இருக்கும். இனி ஆதேஷ் எப்படி போவான்?
அங்கிருந்த ஆலமரத்தின் உச்சி மொட்டைமாடியை எட்டி இருந்தது. முதலில் கஷ்டப்பட்டு மரம் ஏற ஆரம்பித்து விறுவிருவென ஏறி உச்சியை அடைந்தான். ஆனால் அவனால் எட்டி பிடிக்க..முயன்று தோற்றான். அவன் முன் தோன்றியது ஜானுவின் அடிபட்டி இரத்தம் வந்த வாயும், அவள் அந்த சன்னல் கண்ணாடியில் வைத்த கையும் எப்படியோ எகிறி குதித்து மொட்டை மாடியை அடைந்தான்.
அங்கே அவன் கண்டது புதுமணப்பெண்ணாக நின்ற அவன் ஜானுவை தான். அவர்களுடைய ஆட்கள் அவளது கையை பிடித்துக் கொண்டிருக்க, அர்தீஸ் தாலியுடன் அவள் அருகே சென்றான். அவள் திமிறிக் கொண்டிருந்தாள். பக்கத்திலே துளசியும் கத்திக் கொண்டிருந்தாள். அந்த நெடியவன் தாலியை வைத்துக் கொண்டு அவள் கழுத்தருகே சென்றதும் ஒரு கல் ஒன்று அவனை தாக்கியது. துருவன் கையிலிருந்த உண்டிகோல் செய்த வேலை.
துருவா..என்று இரு பெண்களும் அவனை பார்க்க, ஆதேஷ் களைந்த தலையை தன் கைகளால் சரி செய்த படி வந்தான்.
மாமா..என்று இருவரும் அழைக்க, மாமனா? என்று அந்த பொம்பளை ஆதேஷை பார்த்தாள்.
நீ தான் என் மவன் கண்ணுல மண்ணை தூவியதா? டேய்..அவிங்கள பிடிச்சு கட்டுங்கடா. அவர்களது ஆட்கள் இருவரிடமும் வந்தனர்.
அண்ணா..ரெடி ஜூட்டு விடு என்று துருவன் கூற, ஜானுவை ஆதேஷும், துளசியை துருவனும் கை பிடித்து ஆட்டம் காட்டி இழுத்துக் கொண்டு ஓட, அங்கே வந்தான் தீனாவின் ஆள் என்று சொல்லப்பட்ட அர்தீஸை கொன்ற நபர். அவன் ஆதேஷ் துருவை அசால்ட்டாக பிடித்து கட்டி போட்டனர்.
ஆதேஷ் அந்த போலீஸை முறைத்து பார்க்க,
என்னடா முறைக்கிற? அவன் ஆதேஷ் அருகே வந்தான். ஆதேஷ் அப்பொழுதும் அவனது முறைப்பை நிறுத்தாமல் துரோகி என்றான்.
ஆமாம் நான் துரோகி தான். நான் எதுக்காக இப்படி செய்தேன்னு தெரியுமா? என்று துளசியை பார்த்தான். அவள் அவனை பார்த்து ஜானு பின் மறைந்து நின்றாள்.
துளசி..அவளுக்காக தான். நான் உன்னோட மாமாவிடம், அவள பிடிச்சிருக்குன்னு சொன்னேன். அவன் ஏளனமாக பார்த்து விட்டு, உன்னை போல் ஒருவனுக்கு என் தங்கை கேட்குதா?
என்னை போல் ஒருவனுக்கு என்றதுமே இப்படி என்றால் இவனுக்கு என்று அவனை காட்ட, ஆதேஷ் கோபமாக..நீ எதுக்கு துளசியை பிடிச்சிருக்குன்னு சொன்ன? அது காதலா இல்லை வேறேதுமா?
ம்ம்..என்று அவளை பார்த்துக் கொண்டு ரெண்டும் தான்.
கேட்டது நான் என்னை பார்த்து பேசு? கட்டளையுடன் ஆதேஷ் கூற,
நீ என்ன என் வீட்டு மாப்பிள்ளையா? எனக்கே கட்டளையா? அதுவும் இந்த கை கட்டப்பட்ட நிலையில்.
சிறுபுன்னகையுடன் ஆதேஷ், உனக்கு கட்டளையிட மாப்பிள்ளையா தான் இருக்கணுமா? உனக்கு மேலானவனாக கூட இருக்கலாமே?
ஏய்..நீ ரொம்ப பேசுற?
மாமா..என்று அவனை பார்த்து ஒற்றை கண்அடித்த ஆதேஷ், நல்லா உங்க வேலைய பாக்குறீங்க?
ஏய்? என்ற மிரட்டலுடன் ஆதேஷ் சட்டையை பிடித்த அவன் கையை தட்டி விட்டான் துருவன்.
உங்க கை கட்டி தானே இருந்தது அவன் கேட்க, இருந்தது.
அது அப்போ..என்று ஆதேஷும் கையை விரித்து காட்டி வெறுப்பேற்ற, டேய்..என்று கத்தினான்.
ஏன்டா, காது கிழியுது வாயை மூடு அந்த நெடியவன் கூறி விட்டு, இவனுகல்லாம் சின்ன பயலுக. ஊதியே தள்ளிடலாம் என்று அவர்கள் அருகே வந்து அவர்களை தாக்க, அவன் தான் காண்டாமிருகம் போல உள்ளானே! இவர்களால் எப்படி சமாளிக்க முடியும்?
இருவரும் அவனை அடிக்கவும் அடி வாங்குவதுமாக இருந்தனர். இதற்கிடையில் அந்த போலீஸ்காரன் துளசி அருகே வந்து அவளது கையை பிடிக்க, துளசி அவனது கையை தட்டி விட்டு, என் அண்ணாவுடனே இருந்து துரோகம் செய்ய கேவலமாக இல்லை திட்டினாள்.
அன்றே, அவன் என்னை ஏற்று இருந்தால் இது போல் நடந்திருக்காதே. ஆனால் உன்னை விட எனக்கு மனமே வர மாட்டிங்குது என்று அவளது தோளில் கை வைக்க, துளசி அவனை அடித்து விட்டாள்.
சண்டையை விட்டு அனைவரும் அவளை பார்த்தனர். என்னையே அடித்து விட்டாயா? என்று அவன் அவளது முடியை கொத்தாக பிடித்து அவளை அந்த மொட்டை மாடியிலிருந்த அறைக்கு இழுத்து செல்ல, ஜானு அவனை தடுக்க முன் வந்தாள். அர்தீஸ் அவளை தடுக்க வருவதற்குள் ஜானுவை வேகமாக அந்த போலீஸ்காரன் தள்ள, அவள் அங்கிருந்த கம்பியில் முட்டி கீழே விழுந்தாள். அவள் தலையில் இரத்தத்தை பார்த்த இருவரும் கொதித்தனர்.
ஆதேஷ் அவளிடம் ஓடி வந்தான். அதை பார்த்த துருவன் அந்த போலீஸ்காரனை பின்னிருந்து தள்ளினான். அவன் துருவன் பக்கம் திரும்பினான்.
துளசி பயந்து, எங்கள விட்டுருங்களேன் என்று அவன் காலை பிடிக்க, அவளை எட்டி உதைத்தான். துருவன் சினத்துடன் அவனை அடிக்க வந்தான். அவனை சாதாரணமாக உதறிய போலீஸ்காரன் கீழே விழுந்த துளசியை கையை பிடித்து தரதரவென இழுத்தான்.
அங்கிருந்த தடிமனான மரக்கட்டை ஒன்றை கையில் எடுத்த துருவன், அவனது பின் தலையில் தாக்க, அவன் கீழே விழுந்தான். துளசி அழுது கொண்டே துருவனை பார்க்க,
அறிவிருக்கா..அவன் கால்ல போய் விழுற? அவளை திட்டினான். அவள் மீண்டும் அழுது கொண்டிருக்க, அவளை தூக்கி விட்டான் துருவன். பின் அவர்கள் ஜானுவை பார்க்க, ஆதேஷ் அழுது கொண்டிருந்தான். ஜானுவை அர்தீஸ் பிடித்திருக்க ஆதேஷை அவர்களின் ஆட்கள் பிடித்து அடித்துக் கொண்டிருந்தனர். துருவன் அவனுக்கு உதவ சென்று அவனுக்கும் அடிபட்டது.
அந்த நெடியவன் தாலியை எடுத்து துளசியிடம் வர, அவள் ஓட அவன் அவளை விரட்டிக் கொண்டு சென்றான் .துளசி அந்த மொட்டை மாடியின் உச்சியில் நின்றாள்.
என் பக்கத்துல வராத..குதிச்சிருவேன் அவள் கூற,
சரி..குதி என்றான் அவன்.
அவர்களின் ஆட்களை அடித்து விட்டு சமாளித்து எழுந்தால் ஒரு பக்கம் துளசி உச்சியில் நின்று கொண்டிருந்தாள். மறு பக்கம் ஜானுவை காணோம்.
ஜானு..ஜானு..என்று ஆதேஷ் அழைக்க, துருவன் மொட்டை மாடி அறையை காட்டினான். அந்த பொம்பளையும் அங்கு இல்லை.
அண்ணா..நீங்க ஜானுவை பாருங்க. நான் வாரேன் என்று துருவன் துளசியிடம் சென்றான். அவன் கீழே போட்ட மரக்கட்டையை எடுத்து அந்த நெடியவனை அடிக்க வந்தான். அவன் துருவனை கீழே தள்ளி விட்டு அடிக்க, துளசி துருவனிடம் ஓடி வந்தாள்.
அவனை இழுத்து அந்த நெடியவன் மேலும் மேலும் அடிக்க, துருவன் முகமெங்கும் அடிபட்டது. வேண்டாம் அவனை விட்டுருங்க. நான் உங்களையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றவுடன் துருவனை அடிக்க வந்த கையை நிறுத்தி விட்டு துளசியை பார்த்தான் அவன்.
நோ..துளசி, அண்ணாவை கொஞ்சம் நினைச்சு பாரு.
துரு..அண்ணா நல்லா இருக்கானா? அவனுக்கு ஒன்றுமில்லையே?
துளசி..அண்ணா என்று அவன் தயங்க..என்னாச்சுடா அண்ணாவுக்கு? என்று அவன் சட்டையை பிடித்து அவனை உலுக்கி எடுத்தாள்.
அண்ணாவுக்கு தெரியல. அதற்கு முன்னே வந்துட்டோம்.
நீங்க ஏன்டா தனியா வந்தீங்க? மாமாவை கூட்டிட்டி வந்துருக்க. அவர்..அவர்..பெற்றோர்கள் பாவம்டா. நீயும் அம்மாவை விட்டுட்டு வந்துருக்க. அண்ணா எங்கடா? பிரதீப் அண்ணாவுக்கு ஒன்றுமில்லையே? என்று அவள் பாட்டுக்கு கேட்டுக் கொண்டே போக,
உங்க அண்ணன் அப்பொழுதே செத்துருப்பான். அவன் மார்பிற்கு மேல் தான் குண்டு பட்டது. கண்டிப்பாக பிழைக்க வாய்ப்பில்லை. நீ தான் கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு சொன்னேல. வா..என்று அவளது கையை பிடிக்க வர துருவன் மீண்டும் இடையே வந்தான்.
உனக்கு என்னடா பிரச்சனை? அவளே சொல்லிட்டா. பின் என்னடா?..அந்த நெடியவன் அலுத்துக் கொள்ள
அவ ஒத்துக்கிட்டா. ஆனால் என்னால் ஒத்துக்க முடியாது என்று துருவன் துளசிக்கு முத்தம் கொடுத்தான்.
என்னடா பண்ற? அகில் சத்தம் போனில் கேட்க, நான் சரியாக தான் செய்றேன் அண்ணா என்று மீண்டும் தொடர்ந்தான். இதுவரை நடந்த அனைத்தையும் போனில் விடாது பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
துருவா..என்று சீற்றத்துடன் தீனா கத்த, சாரி சார் என்றான்.
போன்ல பேசிக்கிட்டு இருக்காயா? என்று அந்த நெடியவன் துளசி துருவனிடம் அடிக்க நெருங்கி வந்தான். துருவன் துளசியையும் சேர்த்துக் கொண்டு மேலிருந்து விழ, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
துளசி கண்ணை திற..சீக்கிரம் ஏறு இல்ல ரெண்டு பேருமே விழுந்துருவோம் என்றாள். அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள் துளசி.
என்னால முடியல துளசி. சீக்கிரம்..
ம்ம்..என்று சுற்றி பார்க்க, இரண்டு தளம் தள்ளி அந்த சுவற்றுப்பிடிப்பை பிடித்திருந்தான். அவன் கைகள் நழுவும் நிலையில் இருக்க,
துரு, எப்படி ஏறுவது என்று புரியாமல் கேட்டாள். அவன் தயங்கிக் கொண்டே, என்னை பிடித்து மேலே ஏறு. அவன் அவளது இடையிலிருந்த கையை எடுத்தான். அவள் அவனை கட்டிக் கொண்டாள்.
சீக்கிரம் இப்படியே ஏறு..என்று அவன் கண்களை மூடினான். அவர்கள் உடல்கள் உரசிக் கொண்டிருக்க, அவள் அவனது உடலை பிடித்தவாறு மேலே செல்ல, அவள் உடல் உராய்வு துருவனை இம்சித்தது. கண்களை திறக்காமல் உணர்வுகளை கட்டுப்படுத்தினான். அவள் உள்ளே சென்று குதித்து விட்டு துருவனுக்கு கையை கொடுத்தாள். அதற்குள் அங்கே வந்த நெடியவன் துளசியை பிடித்து இழுத்தான். ஒரு கை துருவனிடமும் மறு கை நெடியவனிடமும் மாட்டிக் கொண்டது.
துருவா..துருவா..என்று அவள் கத்த, தான் செய்த தவற்றை உணர்ந்த துருவன் வேகமாக துளசியை இழுக்க மீண்டும் அவள் வெளியே விழுந்தாள். அவளை பிடித்து சுற்றி அவன் கீழும் அவள் மேலுமாய் இருக்க, துளசி அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.
அதே போல் சுவற்று பிடிப்பை பிடித்து, அவளையும் பிடிக்க வைத்தான். இருவரும் இரண்டாம் தளத்தில் இருந்தனர். துருவா..அவன் வாரான்.
கொஞ்சம் பொறு என்று அவன் கீழே குதிக்க, துருவா..என்று கத்தினாள். அவன் கையிலிருந்த டிரக்கிங் கயிற்றால் கீழே இறங்கி..நீ குதிச்சிரு என்று அவன் கத்த அவள் பயந்து கொண்டே விழுந்தாள். துருவன் அவளை பிடித்தாலும் அவனும் கீழே விழுந்து அவனுக்கு தலையின் பின்னே அடிபட்டது.
அவன் மீது விழுந்த துளசி கண்களை திறந்து அவனை பார்த்தாள். அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்தது. இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
துருவா..போதும். நீ துளசியை முழுவதுமாக காப்பாற்றவில்லை. இருவரும் எழுகிறீர்களா? அகில் கேட்டான்.
டேய்..என் தங்கையை காப்பாத்தி கூட்டிட்டு வருவன்னு பார்த்தா. என்னடா பண்ற அவளை?
சார், நான் ஒன்றும் பண்ணலை என்று அவளை விலக்கி விட்டு, வா..என்று அவளது கையை பிடித்து ஓர் மரத்தின் பின் மறைந்து கொண்டனர்.
நெடியவன் கீழே வந்து தேடினால் இவர்களை காணவில்லை. அவன் கோபமாக கத்தி விட்டு, இவ போனா என்ன? இன்னொருத்தி தான் இருக்காலே என்று உள்ளே சென்றான்.
துளசி ஆடை களைந்திருக்க அவன் பார்வை அங்கே செல்ல, அவள் அதை
சரி செய்து கொண்டாள். நீ மரம் ஏறுவாயா? கேட்டான்.
அவள் விழிக்க, அவனே அவளை மேலே ஏற்றி விட்டு அமைதியா இரு. நான் அண்ணாவுக்கும் ஜானுவுக்கு உதவ செல்கிறேன். கீழே இறங்காதே
நீயும் இங்கேயே இரு. பயமா இருக்குடா.
அவங்களுக்கு உதவி தேவைப்படலாம். நீ இறங்காமலிரு. இந்த இடத்திலே இரு.
துருவா என்று அழைத்தவளை அவன் பார்த்து என்ன? அவனது சட்டையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தாள். அவளை ஓங்கி அறைந்தான் துருவன்.
அவள் அழ, வாயில கைய வை..என்று திட்டி விட்டு அமைதியா இரு என்று கீழே குதித்தான். அவள் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.